ஆங்கிலேயர் போட்ட தேதிகோடு (IDL) இஸ்லாமிய அடிப்படையா?

in 2018 செப்டம்பர்,பிறை

ஆங்கிலேயர் போட்ட தேதிகோடு (IDL) இஸ்லாமிய அடிப்படையா?

S.H. அப்துர் ரஹ்மான், திருச்சி

அன்பு சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சந்திரனை கணக்கிட்டு காலண்டர் போட்டு அதன் அடிப்படையில் அமல்கள் செய்து வருகின்றோம். கணக்கீடு நவீன அறிவியல் உலகில் மனிதர்களால் முடிந்த வரை துல்லியமான முறையில் கணக்கிட முடியும். (அல்லாஹ்வின் துல்லியம் என்பது இறுதியானது) அதன்படி கணக்கிட்டு வருகிறோம். இதற்காக உலக நடைமுறையில் உள்ள தேதிக்கோடு IDL உலக நேரம் UTC ஆகிய உலகம் நியமனம் செய்த அளவீடுகளை பயன்படுத்துகின்றோம். உலக தேதிக்கோடு IDL என்பது பூமியில் இரண்டு கிழமைகள் சந்திக்கும் கற்பனைகோடு ஆகும். இங்குதான் தேதி மாற்றம் நிகழும் இடமாக உள்ளது.

இவை இஸ்லாமிய அடிப்படையில் உள்ளதா என்று ஆய்வு செய்ய முயன்ற போது எனக்கு கிடைத்த உலக தேதி கோடு IDL பற்றிய பதில்களை மட்டும் உங்கள் பார்வைக்கு தருகிறேன். இன்ஷா அல்லாஹ் நீங்கள் பரிசீலித்து எனக்கு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

தேதி கோடு அமைக்கப்பட்டது பற்றி உலக விளக்கம் :

உலகில் எந்த எந்த நாடுகள் எந்த கிழமைகளில் இருந்ததோ அதன் அடிப்படையிலே இரண்டு கிழமைகள் சந்திக்கும் இடத்தில் IDL தேதி கோடு ஆங்கிலேயரால் போட பட்டதாக கூறப்படுகிறது. இதனையே அலி மனிக்பானும் உறுதி கூறினார்.

தேதிக்கோட்டின் உண்மை நிலை :

இதன் அடிப்படையில் பூமியில் இருந்த அமைப்பின்படி ணூம்ஸி அமைக்கப்பட்டதா? என்று ஆய்வு செய்து பார்க்கும் போது பல அதிர்ச்சியான செய்திகள் கிடைத்து உள் ளன. இதில் பல சதி வேலைகள் பார்க்கப்பட்டு ஒரு நாட்டின் தேதி குறைக்கப்பட்டு தேதி கோட்டின் இடம் மாற்றப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வடக்கு பனி பிரதேசமான அலாஸ்கா 1867க்கு முன் ரஷ்யாவின் பகுதியாக ரஷ்ய தேதி படி இருந்தது. 1967ல் அது அமெரிக்காவிடம் விற்கப்பட்டு ஒரு கிழமை குறைக்கப்பட்டு (வெள்ளிக்கிழமை வியாழக்கிழமையாக மாற்றப்பட்டு) அமெரிக்க தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன் பின்னனியை கவனித்தால் IDL பற்றிய சில உண்மைகள் வெளிவரும். 1852ல் ஆங்கிலேயர்களால் பூமியின் அறை கோள மைய பகுதியாக (பிரைம் மெரிடியன்) ஜீரோ டிகிரியாக லண்டனில் உள்ள கிரீன்விச்சை அறிவித்தனர். ஆனால், ஆன்டி மெரிடியனான தேதிக்கோடு அப்போது அறிவிக்கவில்லை.

காரணம் அலாஸ்காவின் தேதி இதற்கு தடையாக ரஷ்ய தேதிபடி இருந்தது. இதற்கு தீர்வு அலஸ்காவை அமெரிக்க தேதி படி மாற்றினால் தான் தேதி கோடு லண்டனுக்கு எதிராக வரும்.

கிரிமியன் போர் (CRIMEAN WAR ):

இதற்காக தான் கிரிமியன் போர் நடை பெற்றது. இது 1853 முதல் 1856 வரை ரஷ்யாவிற்கும், பிரிட்டனுக்கும் நடைபெற்றது. அதில் யாரும் வெற்றிபெறவில்லை. ரஷ்யாவின் நிதிநிலை அப்போது கவலைக்கிடமாகி இருந்தது. அதனால் அலாஸ்காவை அமெரிக்காவிற்கு விற்பனை செய்தது போரில் சாதிக்கமுடியாததை, இந்த விற்பனை மூலம் பிரிட்டீஷ் அரசு சாதித்து விட்டது. கிரிமியன்போர் என்பது IDL தொடர்பு உடையது. காரணம் 1852க்கு முன்னே யாருக்கு 0டிகிரி என்ற சண்டை துவங்கிவிட்டது. அதனை நிர்ணயிப்பது அலாஸ்கா பிரதேசம் என்பதால் அதை கைப்பற்றும் முயற்சியில் பிரிட்டீஷ் இறங்கியது.

அலாஸ்காவில் நாள் குறைப்பு :

1852ல் அறிவிக்கப்பட்ட கிரீன்விச் ஜீரோ டிகிரியை உறுதிப்படுத்தவே இந்த யுத்தம் 1853ல் துவங்கப்பட்டது என்பதற்கு வருடங்கள் சாட்சியாக உள்ளன. பிரிட்டீ´ன் 0டிகிரிக்கு எதிராக இருந்தது அலாஸ்காதான். அதனை போரில் கைப்பற்றி இருந்தாலும் பிரிட்டீஷ் அரசு அலாஸ்காவில் நாள் குறைப்பு செய்து தன் நாட்டின் 0டிகிரியை உறுதி செய்து இருக்கும். போரில் முடியாததை வியாபாரத்தின் மூலம் சாதித்தது. ஒரு இடத்தின் நாளை குறைப்பது என்பது மிகப் பெரிய மோசடியாகும். 1867ல் அலாஸ்காவை ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவிற்கு விற்பனை செய்யப்பட்டு ஒரு தேதி (கிழமை) குறைக்கப்பட்டு அமெரிக்க தேதிக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் பூமியின் தேதி கோடு லண்டனுக்கு எதிராக வரும்படி மாற்றி அமைக்கப்பட்டது. பிறகு மக்கள் மனதில் சந்தேகம் ஏற்படாத வண்ணம் 17 வருடம் கழித்து 1884ல் சர்வதேச தேதிக்கோடாக லண்டன் கிரீன்விச்சுக்கு நேர் எதிராக உள்ள 180 டிகிரி பகுதி அறிவிக்கப்படுகிறது.

இதன் உண்மை தன்மை அறிய சற்று சிந்திக்க வேண்டும். 1852ல் ஜீரோ டிகிரியாக கிரீன்விச் அறிவிக்கப்பட்டபோதே அதன் எதிரே உள்ள 180 டிகிரியும் தீர்மானிக்கப் பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால் அதற்கு எதிராக உள்ள அலாஸ்காவின் பிரச்சினையை தீர்த்து விட்டு அறிவிக்க 32 வருடங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு நாட்டின் தேதியை மாற்றிவிட்டு போடப்பட்ட IDL பூமியில் இருந்த அமைப்புபடி போடப்பட்டதாக கூறுவது மிக பெரிய மோசடி ஆகும். பூமியில் இருந்த தேதிப்படி எந்த மாற்றமும் செய்யப்படாமல் உலகத் தேதிக்கோடு IDL போடப்பட்டதாக நினைப்பது தவறு.

The International Date Line, established in 1884, passes through the mid-Pacific Ocean and roughly follows a 180 degrees longitude north-south line on the Earth. It is located halfway round the world from the prime meridian – the zero degrees longitude established in Greenwich, England,in 1852.

The United States purchased Alaska from the Russian Empire on March 30, 1867, for 7.2 million U.S. dollars at approximately two cents per acre ($4.74/km2).

In 1901, Alaska started to use time zones(2) Before time zones were introduced, every city different based on their longitude. On 18 October 1867 Alaska changed from belonging to Russia (Russian America), to belonging to the United States (the Alaska Purchase). Before this event, Alaska used the same date as Asia. The capital was Sitka (135.3345OW) which had local time + 14:59 before 1867 and 9:01 afterwards. This means that Alaska backed one day in the calendar.

பூமியின் உண்மை அமைப்பு :

பூமியில் உண்மையில் இருந்த அமைப்பு படி அலாஸ்காவை ரஷ்யாவுடன் ரஷ்ய தேதி படியே இருந்த அமைப்பின்படி வைத்து தேதிக்கோட்டை போட்டு பார்த்தோம் என்றால் அதிர்ச்சி அடைய முடிகிறது. இயற்கை அமைப்பின்படி போடப்பட்ட தேதிகோடு 180 டிகிரிக்கு நேர் எதிராக 0 டிகிரியில் மக்கா வருகிறது. இதனை தவிர்க்கவே இவ்வளவு முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள தேதிக்கோடு படமும் அலாஸ்காவை ரஷ்யா வுடன் இருந்தபடி மாற்றி தேதி கோடு போடப்பட்ட படமும் கீழே உள்ளது. பார்வை இடவும். உலகின் உண்மை மைய பகுதி 0 டிகிரியில் இருந்த மக்காவை மாற்றி அதை லண்டனுக்கு தருவதற்காகவே அலாஸ்கா வின் தேதி மாற்றப்பட்டு அமெரிக்காவிற்கு விற்கப்பட்டு உள்ளது என்று தெரிந்து கொள்ள முடிகிறது. இதை உலகிலுள்ள அறிவியலரும் வானவியலாரும் எப்படி ஏற்றுக் கொள்வர்? 0டிகிரியில் உண்மையில் மக்கா இருக்கும்போது, குறிப்பாக முஸ்லிம்கள் இம்மாற்றத்தை எப்படி ஏற்க முடியும்?

மேலும் இந்த IDLஐ பயன்படுத்தி காலண்டரை எப்படி அமைக்க முடியும்? அப்படி அமைத்தால் கண்டிப்பாக முரண்பாடுகள் ஏற்படும். கணக்கீட்டின் முடிவு தவறாக அமையும்.

தேதிக்கோடு பற்றி இஸ்லாம் :

உலகம் ஆரம்பித்த நாள் முதல் கிழமைகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்து உள்ளது. உருண்டை வடிவ பூமியானது கிழக்கு மேற்காக சுற்றுவதால், சூரியன் உதய மறைவு ஏற்பட்டு கிழமை மாற்றம் ஏதோ ஒரு இடத்தில் நடந்து உள்ளது. அது பூமி ஆரம்ப காலம் முதல் பயன்பாட்டில் உள்ளது. மக்கா கிப்லாவாக, உலக முஸ்லிம்க ளுக்கு தொழுகையில் நோக்கும் திசையாக உள்ளது. அது பற்றி கீழ்கண்ட ஹதீஃதில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்திருப்பதைப் பாருங்கள். “கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே உள்ளது கிப்லாவாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரழி) நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா,

மேலும் ஏக இறைவன் கூறுவதை நினைவு கூறுங்கள் :

“நாம் (கஅபத்துல்லாஹ் எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒரு மையமாகவும், அமைதி அளிக்கும் இடமாக வும் ஆக்கினோம். மேலும், “இப்ராஹீம் (வணக்கத்திற்காக நின்ற) இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றும் மக்களுக்கு நாம் கட்டளை யிட்டோம்.

மேலும், “தவாஃப், இஃதி காஃப், ருகூவு, ஸுஜூது ஆகியவற்றைச் செய்பவர்களுக்காக எனது இவ்வீட்டை நீங்கள் இருவரும் தூய்மையாக்கி வையுங்கள்” என்று இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளை பிறப்பித்தோம். (அல்குர்ஆன் : 2:125)

திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட் டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவி லுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது. (அல்குர்ஆன் : 3:96) இதன் அடிப்படையில் மக்கா உலகின் மையமாக இருப்பதாகவே விளங்க முடிகிறது. தேதிக்கோட்டின் இரு பக்கங்களுக்கு இடையே மக்கா வருவது தான் இஸ்லாமிய அமைப்பாக இருக்க முடியும். IDL பற்றி மறைந்த அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்களின் கருத்தும் மக்காவிற்கு எதிராகவே வரவேண்டும் என்பதே அதை இப்போது நம்மால் மாற்ற முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

இத்தகைய தவறான IDLஐ பயன்படுத்தி காலண்டர் அமைப்பதால் தேதி கோடு பகுதிகளில் மாத முதல் நாளின் உச்சி பொழுது வரை சங்கமம் நடைபெற காரணமாகிறது.

இதனை சரி செய்ய என்ன செய்வது?

உலகில் உள்ள எல்லோரையும் ஏமாற்றி ஒப்புக்கொள்ள வைக்கப்பட்ட உலக தேதி கோடு இன்று மாற்ற முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. எனவே மாற்ற முடியாது என்ற வாதத்தை சிலர் வைக்கின்றனர். காலண்டரை சரியாக கணக்கிட தேதிக்கோட்டை மாற்ற வேண்டிய எந்த அவசிய மும் இல்லை. மக்காவில் வரவேண்டிய 0 டிகிரியானது மக்காவில் இருந்து உலக நேரப்படி + 3 மணி நேர தொலைவில் உள்ள லண்டனுக்கு தரப்பட்டு உள்ளது. எனவே UTCல் 3 மணி நேரத்தை குறைத்துக் கணக்கிட்டால் இந்த தவறு சரி செய்யப்படும்.

UTC 21:00க்கு மேல் உள்ள சங்கமங்களை அடுத்த நாளில் நடந்ததாக கணக்கிட வேண்டும். எனவே ஹிஜ்ரி கமிட்டியினர்கள் இதனை பரிசீலனை செய்து தங்கள் நிலையை மாற்றி கொள்ள முன்வர வேண்டும். அதுவே காலண்டரை துல்லியப்படுத்தவும், தேதி கோட்டில் உள்ளவர்களுக்கு மாதம் துவங்கிய பின் நடைபெறும் சங்கமங்களை தவிர்க்கவும் முடியும். இன்ஷா அல்லாஹ் இது தொடர்பாக கருத்துகளையும் இதில் உள்ள கருத்துகளுக்கு மறுப்பையும் தெரிவிக்க மேலும் விளக்கம் பெற என்னுடைய மொபைல் எண்: 9345154415ல் தொடர்பு கொள்ளவும்.

இதற்கான பதிலை ஹிஜ்ரி கமிட்டியிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அடுத்தபடியாக காலண்டர் கணக்கீட்டில் நாம் பயன்படுத்தும் ஆங்கிலேயர் அமைத்த UTCஐயும் ஆய்வு செய்து அது உலக இயற்கை அமைப்புபடி உள்ளதா? ஆங்கிலேயர் கூறும் நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை என்ற அடிப்படையில் உள்ளதா? அது இஸ்லாத்தின் நாளின் துவக்கம் பஜர் முதல் பஜர் வரை என்ற அடிப்படைக்கு பொருந்துமா? அதில் உள்ள தவறு என்ன என்பது பற்றி ஆய்வு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: