ஆதிகால வேதங்களும்! இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!!

in 2018 செப்டம்பர்

 MTM. முஜீபுதீன், இலங்கை

அந்நஜாத் வாசகர்களின் கவனத்திற்கு எதிர்பாராத விதமாக ஜூலை 2017லிருந்து இத்தொடர் வெளிவரவில்லை. இன்ஷா அல்லாஹ் இனிமேல் தொடர்ந்து வெளிவரும்.

 ஜூலை 2017 தொடர்ச்சி……

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யாரேனும் ஒரு தொழுகையை மறந்து விட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை.” “என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக” 20:14 என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். (புகாரி : 597)

இறைவனை ஒருமைப்படுத்தும் தொழுகை அழைப்பான் பாங்கு . தொழுகையின் நேரத்தை அறிவிப்பு விடு வதையே அல் அதான் என்று அழைப்பர். தமிழில் பாங்கு என்று அழைப்பர். ஹிஜ்ரி, முதலாம் வருடம் மதீனாவில் தொழுகை அறிவிப்பு முறை நபி(ஸல்) அவர்களினால் பிலால்(ரழி) அவர்களுக்கு கட்டளையிட்ட தன் மூலம் நடைமுறைக்கு வந்தது. இந்த அதான் அறிவிப்பு அல்லாஹ்வை தனித்துவமாக வணங்குவதற்கு வழிகாட்டப்பட்டதாகும். அதன் வசனங்களை கவனியுங்கள். அபூமஹ்தூரா(ரழி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்.

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்) (பின்னர் மெதுவாக) அஷ்ஹது அல்லாயி லாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயி லாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதிமொழிகிறேன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதி மொழிகின்றேன்) அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல் லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்(முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன் முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகின்றேன்) பின்னர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இருமுறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று ஒரு முறையும் கூறினார்கள். இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், இஸ் ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (ஹய்ய அலல் ஃபலாஹ் என்ப தற்குப் பிறகு) அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி(ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக் கொடுத்தார்கள் என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது. (முஸ்லிம் : 623) இன்று வணக்கம் என்ற பெயரில் மலர்களை பூசைக்கு வைப்பதும், பழம், பால், உணவுப் பொருட்களை மதகுருமார்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதும் வழக்கமாகியுள்ளது. அத்துடன் மரங்களுக்கு புடவைகளைப் போர்த்துவதும், சிலைகளை காட்சிப் பொருளாக மாற்றியும் உள்ளனர். இதனால் இறைவனை மறுப்பவர்கள் மதத்தின் பெயரால் சோம்பேறிகள் மக்களை சுரண்டுகிறார்கள் என குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். ஒரே இறைவனை வணங்குவதற்காக தொழுகைக்கு அழைக்கப்பட்டால் சில அறிவில்லாத மக்கள் அதைப் பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை அல்லாஹ் பின்வருமாறு விவரிக் கின்றான்.

முஃமின்களே! உங்களுக்கு முன் நெறிநூல் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தை பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார் கள் இதற்குக் காரணம் அவர்கள் அறிவில் லாத மக்களாக இருப்பதேயாகும். அல்குர்ஆன் : 5:57,58 தொழுகையின் துவக்கம் தக்பீர் ஆகும். அதாவது “அல்லாஹு அக்பர்” அல்லாஹ் மிகப் பெரியவன் என கூறி தொழுவார்கள். இரண்டு ரஅக்காத்துகள் கொண்ட தொழுகையில் சாதாரணமாக 11 இட நிலைகளில் அல்லாஹ் மிகப்பெரியவன் என தொழுகையின் போது சொல்லப்படுகின்றது. இது ஒரே இறைவனையே மிக உயர்ந்தவனாக துதிப்பதாகும். இணைவைக்கும் மக்களே! ஏன் நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வார்த்தைகளை மொழிகிறீர்கள். முஸ்லிம்களின் தொழுகையில் மொழியப்படும் வார்த்தைகளை கவனியுங்கள்.

நபி(ஸல்) முதல் தக்பீருக்கும் அல்ஹம்துக்கும் இடையில்கேட்கும் பிரார்த்தனையை கவனியுங்கள் :

அபூஹுரைரா(ரழி) கூறியதாவது : நபி(ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத் துக்கும் இடையே சற்று நேரம் மெளனமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மெளனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று நான் கேட்டேன்.

“இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என் தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக! என்று நான் கூறுவேன்” என்றார்கள். (புகாரி : 744)

இதுபோல் பல பிரார்த்தனைகளை தொழும் போது வேண்டுவதற்கு அல்லாஹ்வின் தூதர் கற்றுக் கொடுத்திருப்பதை ஹதீஃத்கள் மூலம் அறியமுடிகின்றது. தொழகையில் தக்பீருக்கும், பிரார்த்தனைக்கும் பின் ஒவ்வொருவரும் அல்பாத்திஹா அத்தியாயத்தினை ஓதுவது அவசியமாகும். இல்லாது விடின் தொழுகை குறைவுள்ளதாகும். அதை அறிந்தும் ஓதாதவருக்கு தொழுகை இல்லை என ஹதீஃத்கள் கூறு கின்றன. (முஸ்லிம் : 651, 655) அத்துடன் இமாமுக்குப் பின் தொழும்போது அல்பாத்திஹா அத்தியாயத்தை இமாம் சப்தமில்லாமல் ஓதும் ரக்அத்களில் மனதால் ஓதிக் கொள்ளவேண்டும். அதன்பின் இன்னும் ஓர் அத்தியாயத்தை ஓதுதல் வேண்டும். பின்வரும் ஹதீஃத் உம்முல் கிதாப் எனப்படும் அல் பாத்திஹா அத்தியாயத்தினைப் பற்றி பின்வருமாறு விளக்குகின்றது. கவனியுங்கள்.

அப்துர்ரஹ்மான்பின்யஅகூப்(ரஹ்) அவர்கள் கூறியதாவது : அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் “குர்ஆனின் அன்னை(எனப்படும் அல் ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும் என நபி(ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள். அபூஹுரைரா (ரழி) அவர்களிடம் “நாங்கள் இமாமுக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் அப்போதுமா ஓத வேண்டும்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரழி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித் தார்கள். அதை உங்களுடைய மனதில் ஓதிக் கொள்ளுங்கள். அடுத்து தொழுகையில் ஓதப்படும் அல் ஃபாத்திஹா அத்தியாயம்) எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல், பிரார்த் தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள் ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும்.

அடியான் “அல்ஹம்துலில் லாஹி ரப்பில் ஆலமீன்” (அனைத்துல கின்அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ். “என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான்” என்று கூறுவான். அடியான் “அர்ரஹ்மானிர் ரஹீம்” (அவன் அளவிலா அருளாளன்நிகரில்லா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்” என்று கூறுவான். அடியான் “மாலிக் கியவ்மித்தீன்” (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், “என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்” என்று கூறுவான். (நபி(ஸல்) அவர் கள் சில வேளைகளில் “என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்து விட்டான்” என்றும் கூறியுள்ளார்கள்)

மேலும், அடியான் “இய்யாக்க நஃபுது வ இய்யாக்கநஸ்தஈன்” (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்) என்று சொன் னால், அல்லாஹ், “இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்” என்று கூறுவான். அடியான் “இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம், ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், கைரில் மஃக்ஃபி அலைஹிம் வலள் ளால்லீன்” (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்துக்குள்ளானவர் கள் வழியல்ல. வழி தவறியோரின் வழியல்ல) என்று சொன்னால், அல்லாஹ் “இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஃதை அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்)அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.அன்னார் தமது இல்லத்தில் நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றிருந்தேன். அப்போது நான் இந்த ஹதீஃத் குறித்து அன்னாரிடம் கேட்டேன். (முஸ்லிம்: 655) (முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம் பகுதி 1, எண். 281) மேலும் அபூஹுரைரா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு “அதை உங்களுடைய மனதில் ஓதிக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் கூறியது அவரது கருத்தாகும்.

நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறவில்லை. எனவே இமாம் அல்ஹம்து சூரா ஓதும்போது பின்பற்றி தொழுவார்கள். “குர்ஆன் ஓதப்பட்டால் செவி சாய்த்து வாய்மூடி மவுன மாக கேளுங்கள். அதனை நீங்கள் அல்லாஹ்வின் கிருபைக்குள்ளாக்கப்படுவீர்கள்” என்னும் இறைக்கட்டளைக்கு அடிபணிந்து மவுனமாக அல்ஹம்து(சூராவை ஓதாமல் செவிசாய்த்து கேட்கவேண்டும். அதை ஓதாதவருக்கு தொழுகை இல்லை” என்று இறைத் தூதரின் கட்டளைக்கும் இது உட்பட்டதே. இமாம் ஓதுவதைக் கேட்பது நாம் உள்வாங்கிக் கொள்ளத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் தொழும்போது பொருள் விளங்காது எந்த வார்த்தைகளையும் வசனங்களையும் ஓதமாட்டார்கள். எல்லா வார்த்தைகளும் ஓரே இறைவனை மேன்மைப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன. அவை பிரார்த்தனைகளாக அமைந் திருப்பதைக் காணலாம்.

Previous post:

Next post: