பேரிடர் சூழல்

in 2018 செப்டம்பர்,தலையங்கம்

செப்டம்பர் 2018

துல்ஹஜ் 1439 – முஹரம் 1440

பேரிடர் சூழல்

முன்பெல்லாம் மழையோ, வெயிலோ, காற்றோ, குளிரோ குறிப்பிட்ட மாதங்களில் சீதோஷ்ண நிலை சொல்லி வைத்தாற் போல் அந்தந்த மாதங்களில் வந்து போய்க் கொண்டிருந்தது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நிகழ் காலத்தில் ஏற்படுகின்ற பாதிப்புக்களைக் கணக்கில் கொண்டால், முந்தைய காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை எனக் கூறி விடலாம். சமீப காலமாக பருவகாலம் மாறிக் கொண்டிருப்பது அச்ச உணர்வைத் தந்து கொண்டிருக்கிறது. கலி காலம்! உலக அழிவு நாள் நெருங்கிக் கொண்டு வருவதாக சொல்லி வருகின்றனர் முதிர்ந்த ஆன்மீக வாதிகள்.

ஆனால் சீதோஷ்ண நிலை மாற்றம் நடைமுறையில் பேரழிவைத் தந்து கொண்டிருப்பதை அனுபவித்து வருகின்றோம். மக்களை துயரத்தில் ஆழ்த்தும் இப்போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் பிரச்சனைகளை எதிர் கொள்வது அந்தந்த மாநில அரசுக்கு குறிப்பிட்ட காலங்களிலும் மத்திய அரசுக்கோ எல்லாக் காலங்களிலும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

கேரள மாநிலத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விட இந்த ஆண்டு பன் மடங்கு கூடுதலாக கன மழை பெய்ததால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து, இடுக்கி அணை மதகு திறந்து விடப்பட்டது.

1992ல் முதன் முறையாக திறக்கப்பட்ட இந்த அணை, தற்போது இரண்டாம் முறையாக 26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் இருக்கின்ற மேலும் 22 அணைகளும் நிரம்பி விட்டதால் அனைத்து அணைகளும் திறந்து விடப்பட்டுள்ளன. அனைத்து நதிகளும் நிரம்பி விட்ட நிலையில் திருவனந்த புரத்தில் முல்லைப் பெரியாறு உட்பட 35 அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டு விட்டன.

கேரளாவின் பல மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் சுமார் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக் குறைய 8டி லட்சத்தை எட்டும் எனக் கூறப்படுவது கவலையாக இருக்கிறது. முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு வீடுகள், வியாபாரஸ் தலங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. சில இடங்கள் கடும் நிலச் சரிவை சந்தித்துள்ளது. ஏராளமானவீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. முற்றிலும் விளை நிலங்கள் அழிந்து விட்டன. மின்சாரம் இல்லை.

தரைவழித் தொடர்பு பல பகுதிகளில் அறவே அற்றுப் போய்விட்டது. போக்கு வரத்து வாகனங்கள் எல்லாம் எங்கே எனத் தேட வேண்டி இருக்கிறது. கணக்கில் அடங் காத மோட்டார் வாகனங்கள் நாசம் ஆகிவிட்டது. இதன் மதிப்பை கணக்கீடு செய்வது இயலாத காரியமாகி விட்டது.

மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. விமான சேவை ஒத்தி வைக்கப்படுகின்றன. ரயில் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. கேரளாவில் எல்லா மாவட்டங்களி லும், 24 மணி நேரமும் ஓய்வின்றி தகவல் தொடர்பு மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அரசின் முதல் கட்ட தகவலின்படி ரூ.8,316 கோடி மதிப்புக்குச் சேதம் ஏற்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கேரள முதல்வர், பிரதமரிடம் 2600 கோடி கேட்டுள்ளார். கேரளா முதல்வரும், பிரதமர் மோடியும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அக்கறையுடன் பிரதமர் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார். நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரூ.600 கோடி நிதியுதவியை முதல் கட்டமாக அறிவித்திருக்கிறார். பெரிய தொகையாக இருந்தாலும் இன்னும் இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய சூழலில் கேரளம் இருக்கின்றது. நிவாரண நிதி பத்திரிக்கைகள் வாயிலாகவும் பெறப்பட்டு வருகின்றது.

மத்திய அரசு முப்படைகளையும் களத்தில் இறக்கி உள்ளது. நீர்வழித் தடப் பகுதியில் முப்படைகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர். யஹலிகாப்டருடன் தயார் நிலை யில் உள்ளனர். ஆங்காங்கே சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிக்கான வான்வழி மீட்புக் குழு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மிதவைகள் படகுகள் வான்வழி மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இறைவன் நாடியதை எவராலும் தடுக்க முடியாது என்பதற்கேற்ப, கேரளா மக்களின் பாதுகாப்பிற்கு பிரார்த்திப்பதாக பிரதமர் கூறியுள்ளார். கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிவாரண உதவிகள் பெற்று 16.5 கோடி ரூபாயை கொடுத்து உதவியிருக்கிறார்கள்.

அரேபிய நாடுகளில் வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் “லுலு’ சூப்பர் மார்க்கெட்டின் CMDயான கேரளாவைச் சார்ந்த யூசுப் அலி என்பவர் பெரும் தொகையை மாநில அரசிடமும், இரண்டாம் கட்டமாக பெரும் தொகை ஒன்றை பத்திரிகை வாயிலாகவும் கொடுத்து இருப்பதாக வந்துள்ள சமூக வலைதள செய்திகள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தனிமனிதனின் மனிதாபிமானம் நெகிழ்வில் ஆழ்த்துகிறது. றீம்Pணூ இஸ்லாமிய அமைப்பு ஒன்று சில இடங்களில் பழுதடைந்த சாலைகளை சீரமைப்பு செய்து வருவதாக சமூக வலைத்தளம் ஒன்று அறிவித்துள்ளது. பில்கேட்ஸ் ரூபாய் 4 கோடி கொடுத்து உதவியுள்ளார்.

இது வரலாறு காணாத சோகம், பேரிடர் என்பதை எவரும் மறுத்து விட முடியாது! ஆளும் கட்சி, எதிர் கட்சி வித்தியாசமின்றி ஒன்றுபட்டு செயல்படுவதும், ஒட்டுமொத்த காவல் துறை, வனத்துறை, பல நிவாரணக் குழுக்கள், தீயணைப்புத் துறை, அனைவரும் பாகுபாடின்றி ஓய்வின்றி ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டு இருப்பது பாதிப்பின் உச்சகட்ட வீரியத்தை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. வெள்ளம் நின்றபின் மெல்ல இயல்பு நிலை ஏற்பட்டாலும் மக்களை அடுத்த துயர் கவ்விக் கொண்டுள்ளது. எங்கும் சேறும் சகதியும், பாம்புகளும் காணப்படுகின்றன. நிவாரண முகாமிலிருந்து வீடு திரும்புவோருக்கு கேரள முதல்வர் தலா ரூ.10,000 உதவித் தொகை கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இவர்களுக்கு உதவ “உதவி கட்டுப்பாட்டு அறைகள்” அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் நாடு IAS அதிகாரிகள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளனர்.

கேரளா மக்களுக்கு உதவுவோம். அவர்களுக்காக இறைவனிடம் துயர் நீங்க பிரார்த்திப்போம்.

Previous post:

Next post: