அறிந்து கொள்வோம்!

in 2018 அக்டோபர்

மர்யம்பீ, குண்டூர்,

1. நபி(ஸல்) அவர்களுக்கு ஏன் எழுத படிக்க கற்றுத்தரவில்லை என அல்லாஹ் கூறுகிறான்? வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (29:48)

2. ரசூல்(ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக 70க்கும் மேற்பட்ட ஹதீஃத்களை கேட்டறிந்த நபித்தோழர் யார்? அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) (புகாரி : 66:5000)

3. ஷைத்தான் மனிதனை எதைக் கொண்டு பயமுறுத்துவான் என அல்குர்ஆன் கூறுகிறது? வறுமையைப் பற்றி உங்களை பயமுறுத்துகிறான், வெட்ககேடானதை உங்களுக்கு தூண்டுகிறான். (2:268)

4. மறுமையில் கல்லால் தலை நசுக்கப்படும் மனிதர் யார்? குர்ஆனை கற்று அதை புறக்கணித்து கடமையான தொழுகையை தொழாமல் உறங்கியவர். (புகாரி:1143)

5. எந்த நேரத்தில் செய்யப்படும் வியாபாரம் தடுக்கப்பட்டது? ஜும்மா அன்று (62:9)

6. உஹத் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் கழித்து ரசூல்(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்? 8 ஆண்டுகள் (புகாரி : 4042)

7. ரசூல்(ஸல்) தனது உம்மத்துக்களிடம் மறுமையில் நீங்கள் என்னை வந்து சந்திக்கும் இடம் என எதை குறிப்பிட்டார்கள்? கவ்ஸர் எனும் நீர்த்தடாகம். (புகாரி: 4042)

8. ரசூல்(ஸல்) அவர்கள் தனது உடல் எனும் பேழையில் உள்ள எந்த 7 உறுப்புகளுக்கு ஒளியை ஏற்படுத்தித் தர துவாச் செய்தார்கள்? நரம்பு, சதை, இரத்தம், ரோமம், சருமம், மணம், நாவு. (புகாரி : 80)

9. தோப்புவாசிகள் எந்த நபியின் சமூகம்? மத்யன்வாசிகள் சுஹைப்(அலை) (15:78)

10. இஸ்லாத்தை எடுத்துரைத்த நபி(ஸல்) அவர்களை கொலை செய்பவர்களுக்கு குறை´கள் அறிவித்த பரிசு என்ன? 100 ஒட்டகம் (புகாரி 3906)

11. எந்த இரு நபியின் மனைவிகளை அல்லாஹ் நரகத்தில் நுழைவோருக்கு உதாரணம் காட்டினான்? நூஹ்(அலை), லூத்(அலை) (66:10)

12. எந்த இரண்டை பேணிக் கொண்டால் அவர் சொர்க்கம் செல்ல நபி(ஸல்) அவர்கள் பொறுப்பேர்க்கிறார்கள்? நாக்கையும், மர்மஸ்தானத்தையும். (புகாரி : 6479)

13. ஜிப்ராயீல்(அலை) அவர்களின் பணி என்ன? நபிமார்களுக்கு வஹி கொண்டு வருவது. (2:97)

14. பல் துலக்குவது எதனை பெற்று தரும்? இறை திருப்தியை ஆயிஷா(ரழி) நஸாயீ :5

15. யாருடைய 40 நாள் தொழுகை ஏற்கப்பட மாட்டாது? ஜோசியம் பார்ப்பவருடைய (முஸ்லிம் : 4488)

16. அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது என்று யார் கூறினார்கள்? யூதர்கள் (5:64) 17. சூரா ஃபாத்திஹாவிற்கு உள்ள மற்றொரு பெயர் என்ன? “ஸப்வுல் மஸானி” திரும்ப திரும்ப ஓதும் வசனம். (15:87)

18. நபி(ஸல்) அவர்கள் எந்த 2 விஷயங்களில் முதியவரின் மணம் கூட இளமையாகவே இருக்கும் என கூறினார்கள்?

1. இம்மை வாழ்வின் மீதுள்ள பிரியம்

2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.

19. இஹ்ராம் கட்டியவர் எந்த 5 உயிரினங்களை கொன்றால் அவர் மீது குற்றமில்லை? காகம், பருந்து, தேள், வெறிநாய், எலி (புகாரி : 1828)

20. சொர்க்கத்தில் நுழையும் அனைவரும் யாருடைய உருவத்தில் இருப்பார்கள்? ஆதம்(அலை) (புகாரி : 3328)

Previous post:

Next post: