மர்யம்பீ, குண்டூர்,
- ஈமானின் அம்சங்கள் எத்தனை? அவை யாவை?
1. அல்லாஹ்வை நம்புவது
2. மலக்குமார்களை நம்புவது
3. வேதங்களை நம்புவது
4. நபிமார்களை நம்புவது
5. மறுமையை நம்புவது
6. விதியை நம்புவது. (முஸ்லிம்:1,5) - மன நிம்மதி அடைய எந்த மூன்றை நம்பவேண்டும்?
1. அல்லாஹ்வை நம்புவது,
2. மறுமையை நம்புவது,
3. விதியை நம்புவது. (முஸ்லிம்:7) - மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு என்ன தேடுகின்றனர்?
உலகில் உள்ளவர்களுக்காக தஸ்பீஹ் செய்து மன்னிப்பு தேடுகின்றனர். (42:5) - உம்முல்குரா என்றால் என்ன?
நகரங்களின் தாயாகிய மக்காவே உம்முல் குரா ஆகும். (42:7) - யாருக்கு பாதுகாவலர்களோ, உதவி புரிபவர்களோ இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?
அநியாயக்காரர்களுக்கு. (42:8) - வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் யாரிடம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
தன்னிடமே இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். (42:12) - அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுவதாக கூறுகிறான்?
தன்னை நாடியவர்களுக்கும், தன்னை முன்னோக்குபவனுக்கும் நேர்வழி காட்டு கிறான். (42:13) - அல்லாஹ் விரும்பினால் என்ன செய்வ தாக கூறுகிறான்?
காற்றை (வீசாமல்) நிறுத்திவிடுகிறான். (42:33) - பெண்களை விவாகரத்து செய்வதாக இருந்தால் எந்த காலத்தில் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
மாதவிடாய் இல்லாத காலத்தில் (இத் தாவை கணக்கிட ஏற்றவாறு) (65:1) - கர்ப்பிணிகளுக்கு இத்தா காலம் எது வரை?
குழந்தையை பிரசவிக்கும் வரை. (65:4) - வானங்களை எவ்வாறு படைத்துள்ளான்?
ஏழு வானங்களை அடுக்கடுக்காக படைத்துள்ளான். (71:15) - சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சிம்மாசனத்தை கொண்டு வருவதாக சொன்ன ஜின்னின் பெயர் என்ன?
இப்ரீத் என்ற ஜின். (27:39) - ஹுத்ஹுத் பறவை எந்த நாட்டில் பெண் ஆட்சி செய்வதாக சுலைமானிடம் (அலை) கூறியது?
ஸபஃ (27:22) - பயபக்தியாளர்கள் கோபம் வந்தால் என்ன செய்வார்கள்?
கோபத்தை குறைத்து அவர்களை மன்னிப்பார்கள். (3:134) - நபி(ஸல்) அவர்களை நோவினை செய்பவர்களை அல்லாஹ் எவ்வாறு எச்சரிக்கிறான்?
அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என அல்லாஹ் கூறுகிறான். (9:61) - நபி(ஸல்) அவர்களைப் பற்றி வசனம் 9:128ல் அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
நம்பிக்கையாளர்களின் மீது கருணையும், இரக்கமும் உடையவர் என கூறுகிறான். - நபி(ஸல்) அவர்களை எந்த நிலையில் அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்?
அகிலத்தாருக்கும் அருட்கொடையாக அனுப்பியதாக கூறுகிறான். (21:107) - நயவஞ்சகர்கள் எவ்வகை உதாரணத்தை உடையவர்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
ஷைத்தானின் உதாரணத்தைப் போன்றவர்கள் என அல்லாஹ் கூறுகிறான். (59:16) - பொறுமையாளர்களுக்கு கூலி எவ்வாறு வழங்கப்படும் என அல்லாஹ் கூறுகிறான்?
இரு தடவை வழங்கப்படும் என அல்லாஹ் கூறுகிறான். (28:54) - நபி(ஸல்) அவர்களின் பொறுப்பு பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
எடுத்துரைப்பதே இத்தூதர் மீதுள்ள பொறுப்பாகும். (5:99)