இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம்…

in 2019 ஜனவரி

இறைவன் மிகச் சிறந்த படைப்பாளன்; அவனே யாவற்றையும் படைத்தவன். (6:102)

படைப்பாளர்களில் மிகச் சிறந்தவ னான அல்லாஹ் பாக்கியமுடையவனா வான். (23:14)

அல்லாஹ் அல்லாத வேறொரு படைப்பாளன் இருக்கின்றானா? (35:3)

…உங்களது தாய்மார்களின் வயிறுகளில், மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை ஒரு படைப்பின் பின் மற்றொரு படைப்பாகப் படைத்தான். அவன்தான் உங்கள் இரட்சகனான அல்லாஹ்… (39:6)

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் அவர் கள் கேட்கின்றனர். அது ஒரு அசெளகரியமாகும். எனவே, மாதவிடாயின் போது பெண்களை (உறவு கொள்வதை) ஒதுங்கிக் கொள்ளுங்கள். (2:222)

நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி:294)

மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும். மாதவிலக்கு/மாதவிடாய் என்பது பருவமடைந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் சுழற்சி முறையில் வெளியே றும் இரத்தப் போக்காகும்.

மருத்துவ ஆய்வுப்படி :

ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பிற்கான தயார்படுத்தலுக்காக கருப்பையில் தேவையான உதிரம் நிரம்பியிருக்கும், பெண் கர்ப்பமடைந்தால் கருப்பையில் தங்கும் கருக்கட்டி முட்டைக்கு போதிய ஊட்டச்சத்து வழங்குவதற்காக, கருப்பை சுவற்றின் நரம்புகளில் உதிரம் தயார் நிலையில் இருக்கும்.

அந்த சுழற்சி மாதத்தில் கருத்தரிக்கவில்லை என்றால் கருப்பையின் சுவற்றில் நிரம்பி இருந்த உதிரம் கசிந்து, கழிவாக வெளியேற்றப்படும் இதையே மாதவிலக்கு மாதவிடாய் என்று கூறுகின்றோம். பாலூட்டிகளின் கருப்பைத்தன்மை ஏறத்தாழ இந்த அடிப்படையிலேயே அமைந்திருக்கும். இதுதான் கருத்தரிப்புக்கும், கருவளர்ச்சிக்கும், ஆரோக்கியமான குழந்தைப் பிறப்புக்கும் இறைவன் அமைத்த மிகச் சிறந்த பாதுகாப்பான கட்டமைப்பு. இதைத்தான் இயற்கை என்கின்றனர்.

இயற்கை செயற்கை மயமானது :

தற்கால சில/பல பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றும் மருந்து களைக் கொண்டு மாதவிலக்கு ஏற்படுவதையும் கருத்தரிப்பதையும் சுயகட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர். பருவமடைந்த கன்னிப் பெண்கள் இயற்கையாக சுழற்சி முறையில் குறிப்பிட்ட நாட்களில் மாத விலக்கு ஏற்படுவதை மருந்து களைக் கொண்டு செயற்கை முறையில் தள்ளிப்போடுவதால், கருப்பையில் மருந்து களின் நச்சுக் கலப்புகள் இணைந்து, சரியான நேரத்தில் உதிரக் கழிவு வெளியேறா மல் தடுத்து, கழிவை மேலும் கழிவடையச் செய்து ஆரோக்கியமான கருப்பையை நோயுறச் செய்து விடுகின்றது.

இதனால் ஒழுங்கற்ற மாதவிலக்கு, பாலுணர்வு போன்ற பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பின்னர், திருமணம் முடித்து கருத் தரித்தாலும் நோயுற்ற கருப்பையின் தாக்கம் கருவையும், கருவளர்ச்சியையும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறை என வம்சாவளி சங்கிலித் தொடராக நீண்டு கொண்டு செல்லும்.

கருத்தடை மருந்துகள் :

தற்காலம் தாமதமான திருமணம், மண முடித்ததும் உடனே குழந்தை வேண்டாம் எனக் கருத்தரிப்பைத் தள்ளிப் போடுவது, கருத்தரிக்காமல் இருக்க கருத்தடை மருந்து கள் உட்கொள்வது இவை அனைத்தும் பெண்மைக்குரிய கருப்பையைப் பாழ்படுத்தி சீரழித்து விடுகின்றன. நோயுற்ற பலவீனமான கருப்பையில் ஜனித்து வளரும் குழந்தையும், நோயுற்ற நிலையில் பலவீனமான குழந்தைகளாகவே பிறக்கின்றன.

என்னதான் மாதந்தோறும் நவீன மருத்துவ ரீதியாக கருவளர்ச்சியை சோதித்து ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கினாலும் பலனில்லாமல், மகப்பேறு இயற்கை வழியில் இல்லாமல் செயற்கை வழி அறுவை சிகிச்சை மூலமே குழந்தைகள் வெளியில் எடுக்கப்படுகின்றன.

ஆக, கலப்பின இரசாயன உணவுகள், பருகும் பானங்கள் மற்றும் நோய் தீர்க்கும் மருந்துகள் என அனைத்திலும் நச்சுத் தன்மையே மேலோங்கியுள்ளன. இன்னும், தொழிற்சாலைகளில் கழிவு வெளியேற்ற நச்சுக் கலப்பு மனித இனம், பிற உயிரினங்கள், பயிரினங்கள் அனைத்திற்கும் பெருமளவு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி ஓர் அபாயக் கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இப்போது மனிதன் சிந்திக்கின்றான். இறைவன் அமைத்த “இயற்கையோடு ஒன்றிணைந்து வாழாமல், பாதுகாப்பு வரம்பு களை மீறி செயற்கை முறை அழிவை சுயம் தேடிக் கொண்டோமே”

Previous post:

Next post: