சத்தியத்தில் இருப்பவர்கள் சொற்பமானவர்களே!

in 2019 ஜனவரி

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2018 டிசம்பர் தொடர்ச்சி…

ஸ அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோடு பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் சொற்பமானவர் களே!

பத்ரில் 100 குதிரைகள் கணக்கிலடங் காத ஓட்டகங்கள் 600 கவச ஆடைகள் பலம் கொண்ட யுத்தப் பயிற்சி பெற்ற 1300 படை வீரர்கள் கொண்ட பெரும் படை யணிக்கு முன்னால் இரண்டு குதிரைகள் எழுவது ஒட்டகங்கள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 313 பேர் மாத்திரமே கொண்ட (புகாரி : 4418, 3951, 8:7,41-44) சொற்பமானவர்களைக் குறித்து பராஉபின் ஆஸிப்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள் அரசர் தாலூத்துடன் ஆற்றைக் கடந்து சென்ற அவருடைய சொற்பமான தோழர்களின் எண்ணிக்கை யைப் போன்றே பத்ருப் போரில் கலந்து கொண்ட முஹம்மத்(ஸல) அவர்களின் சொற்பமான தோழர்களும் என்று நாங்கள் பேசிக் கொள்வோம். (புகாரி : 3757)

ஸ இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய ஆரம்ப கால அழைப்புப் பணியில் இணைந் தவர்கள் சொற்பமானவர்களே!

முஹாஜிர்களிலும், அன்ஸாரிகளிலும் முதலாவதாக முந்திக் கொண்டவர்களும், அவர்களை நற்கருமங்களில் பின் தொடர்ந் தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான் அவர்களும் அவனிடம் திருப்தி அடைகிறார்கள் அன்றியும் அவர்களுக்காக சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப் பார்கள் இதுவே மகத்தான வெற்றியாகும். (9:100)

அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன், முந்தியவர்கள், முதலாமவர்கள் என்பதாக இறைவன் புகழ்ந்து சொல்லும் ஆரம்ப கால அழைப்புப் பணியில் நபி(ஸல்) அவர்களோடு முதலாவது நாளில் முதலாவதாக இணைந்தவர்களில் (அர்ரஹீக் அல்மக்தூம் பக்கம் 95)

முதலாவதாக நபி(ஸல்) அவர்களின் துணைவியரான அன்னை கதீஜா(ரழி) நபி (ஸல்) அவர்களின் அடிமை ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பிலிருந்த சிறுவர் அலி(ரழி) உற்ற தோழரான அபூ பக்கர்(ரழி) ஆகிய சொற்பமானவர்களே.

(இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் பிலால்(ரழி) ஸைத் பின் ஹாரிஸா(ரழி) ஆமிர்பின் புஹைரா (ரழி) அபூ ஃபகைஹா(ரழி) உபைத் பின் ஸைத் (ரழி) ஆகிய ஐந்து அடிமைகளும் கதீஜா(ரழி) உமு அய்மன்(ரழி) அல்லது சுமைய்யா(ரழி) ஆகிய இரண்டு பெண் களும் அபூபக்கர்(ரழி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன் என்று அம்மார் பின் யாசிர்(ரழி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன் என்று ஹம்மாம் பின் அல்ஹர்ஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். புகாரி 3660, 3857)

ஸ அறப் போராட்டத்திற்கு உதவி செய் வோர் சொற்பமானவர்களே!

(எனினும் பிற்காலத்தில் இஸ்லாத்தில் இணையும்) மக்கள் (எண்ணிக்கையில்) அதிகமானவர் களாவார்கள் (ஆனால் அல்லாஹ்வின் ஆணை மேலோங்கப்படவேண்டும் என்ப தற்கான அறப்போராட்டத்திற்கு) உதவி புரிபவர்கள் குறைந்து போய் விடுவார்கள் “உணவில் உப்பு இருக்கும்,சொற்பமான அளவுக்குத்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புகாரி : 3628, 927) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட சொற்பமான மக்களிடையேதான் தோன்றியது அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச் செல்லும் அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்குச் சுப நற்செய்தி உண்டாகட்டும் என்றார்கள். (அபூஹுரைரா (ரழி) இப்னு உமர்(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) இப்னு மஸ்ஊத்(ரழி) அனஸ்(ரழி) ஸல்மான்(ரழி) முஸ்லிம் 232, திர்மிதி, இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத், தப்ராணி, தாரமி)

ஸ அறப்போரில் கலந்து கொள்பவர்கள் சொற்பமானவர்களே!

(நபியே!) மூஸாவுக்குப் பின்னர் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தமது நபியிடம் நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடு வதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள் என்று கூறியபொழுது அவர் போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால் நீங்கள் போரிடாமல் இருந்து விடுவீர்களா? என்று கேட்டார் அதற்கவர்கள் எங்கள் மக்களையும் எங்கள் வீடுகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்ட பின் அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது? எனக் கூறினார்கள் எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சில சொற்பமானவர்களைத் தவிர மற்றெல்லோரும் புறமுதுகு காட்டித் திரும்பி விட்டனர். (2:246) உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும் தமது சகோதரர்களை நோக்கி (அவர்களை விட்டுவிட்டு) நம்மிடம் வந்து விடுங்கள் என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்தே இருக்கின்றான் அன்றியும் அவர்கள் சொற்ப மானவர்களே(அறப்) போர் புரிய வருகிறார் கள். (33:18,20)

ஸ போர்களில் வென்றவர்கள் சொற்ப மானவர்களே!

எத்தனையோ (யுத்த களங்களில்) சொற்பமானவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். (2:249)

* எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் சொற்பமானவர்களே! நீங்கள் (மக்காவெனும்) பூமியில் பலவீனமான மிகச் சொற்பமானவர்களாக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) இறாஞ்சிக் கொண்டு சென்றுவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடமளித்துத் தனது உதவியைக் கொண்டும் உங்களைப் பலப்படுத்தி பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (8:26:30)

* காலத்தின் மீது சத்தியமாக சத்தியத்திலிருப்பவர்கள் சொற்பமானவர்களே! காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் (ஈமான் எனும்) இறை நம்பிக்கை கொண்டு (ஸாலிஹான) நல் அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கின்றார்களோ அ(த்தகைய சொற்பமான)வர்களைத் தவிர (103:1-3)

ஸ ஈமான் எனும் இறை நம்பிக்கை கொண்டவர்கள் சொற்பமானவர்களே!

(ஈமான் எனும்) இறை நம்பிக்கை கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களான சொற்பமானவர்க(ளைத் தவிர இத்தகையவர்(கள்) சொற்பமான வர்களே என்று (தாவூத்) கூறினார். (38:24)

அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும் அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும் அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும் எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியதாலும் (அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான்) அவர்ளுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான், ஆகவே அவர்களில் சொற்பமானவர்களைத் தவிர (ஈமான் எனும்) இறை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4:155)

இன்னும் அவர்கள் எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று கூறுகின்றார்கள். ஆனால் அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். ஆகவே அவர்கள் சொற்பமாகவே (ஈமான் எனும்) இறை நம்பிக்கை கொள்வார்கள். (2:88)

இறுதியில் நமது ஆணை பிறந்தது பூமியின் மேற்பரப்பில் (தண்ணீர்) பொங்கியது அப்போது நாம் ஒவ்வொன்றிலிருந்தும் (ஆண், பெண் இரு இனங்களில்) ஒரு ஜோடியையும் உம்முடைய குடும்பத்தாரில் யாருக்கெதிராக (நமது) வாக்கு முந்திவிட்டதோ அவர்களைத் தவிர மற்றவர்களையும் (ஈமான் எனும்) இறை நம்பிக்கை கொண்டோரையும் அதில் ஏற்றிக்கொள்வீராக என்று கூறினோம். ஆனால் வெகு சொற்பமானவர்களைத் தவிர (மற்றவர்கள் யாரும்) அவருடன் (ஈமான் எனும்) இறை நம்பிக்கை கொள்ளவில்லை. (11:40)

அவர்களது இறை மறுப்பின் காரணமாக அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். எனவே அவர்களில் சொற்பமானவர்களைத் தவிர மற்றவர்கள் (ஈமான் எனும்) இறை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (4:46)

* அல்லாஹ்வை நினைவு கூறுபவர்கள் சொற்பமானவர்களே!

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்து விடுவான். தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையவர்களாகவே நிற்கிறார்கள். மனிதர்களுக்கு (தங்களையும் தொழுகையாளிகளாக்கிக்) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்) இன்னும் மிகச் சொற்பமாகவே அல்லாஹ்வை நினைவு கூறுகிறார்கள். (4:142)

* (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்கள் சொற்பமானவர்களே!

(ஸாலிஹான) நல் லமல்கள் செய்பவர்கள் சொற்பமானவர் களே என்று தாவூது கூறினார். (38:24)

* தீய சக்திகளான தாக்கூத்திகளை நிராகரித்து இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆனையும், ஹதீஃதையும் மாத்திரம் பின்பற்றுபவர்கள் சொற்பமானவர்களே!

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள் அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்களை பின்பற்றாதீர்கள் நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள் (7:3, 2:256,257, 4:51,60,76, 5:60,16:36, 39:17, 51:53, 52:32, 42:21, 49:16)

*     இறை வேதமாகிய குர்ஆனிலிருந்து நல் லறிவு பெறுபவர்கள் சொற்பமானவர்களே!

குர்ஆனாகிய இது ஒரு குறிகாரனின் சொல்லுமன்று. (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (குர்ஆனாகிய இதிலிருந்து) நல்லறிவு பெறுகிறீர்கள். (69:42)

*     இறை வேதமாகிய குர்ஆனை நம்புபவர் கள் சொற்பமானவர்களே!

இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே (இதனை) நம்புகிறீர்கள். (69:41)

*     இறை வேதமாகிய குர்ஆனிலிருந்து நல் லுணர்வு பெறுபவர்கள் சொற்பமானவர் களே!

குருடரும் பார்வையுடையோரும் சமமாகமாட்டார் அவ்வாறே (ஈமான் எனும்) இறை நம்பிக்கை கொண்டு (ஸாலிஹான) நல்அமல்கள் செய்வோரும் தீயோரும் சம மாகமாட்டார்கள். உங்களில் சொற்பமானவர்களே (இதனைக் கொண்டு) நல்லுணர்வு பெறுகிறீர்கள். (40:58)

*     அறிந்துணர்பவர்கள் சொற்பமானவர் களே!

(யுத்த வெற்றிக்குப் பிறகு) போர்க்களப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் சென்றீர்களாயின் பின்தங்கி விட்டவர்கள் நாங்களும் உங்களைப் பின்பற்றிவர அனுமதி கொடுங்கள் என்று கூறுவார்கள் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மாற்றிவிட நாடுகிறார்கள் நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவே வேண்டாம். இவ்வாறே அல்லாஹ் முன்னர் கூறியிருக்கின்றான் என்று (நபியே! அவர்களிடம்) நீர்சொல்லி விடுவீராக. ஆனால் அவர்கள் “அல்ல! நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டுள்ளீர்கள் எனக் கூறுவார்கள் அப்படியல்ல! அவர்கள் மிக சொற்பமாகவே அறிந்துணர் பவர்களாவர். (48:15)

*     சிந்தனை செய்து பார்ப்பவர்கள் சொற்பமானவர்களே!

கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து அவனது துன்பத்தை நீக்குபவனும் உங்களை இப்பூமியில் பின்தோன்றல் களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வு டன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவைகளையயல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் சொற்பமாகவே. (27:62)

*     நன்றி செலுத்துபவர்கள் சொற்பமானவர்களே!

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம் அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம் எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமாகவேயாகும். (7:10)

இன்னும் அவனே உங்களுக்குச் செவிப் புலனையும் பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன் (எனினும்) மிகச் சொற்பமாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள். (23:78)

பிறகு அவன் அதைச் சரி செய்து அதனுள்ளே தனது ரூஹிலிருந்தும் ஊதினான் இன்னும் உங்களுக்கு அவன் செவிப் புலனையும் பார்வைப் புலனையும் இருதயங்களையும் அமைத்தான் (இருப்பி னும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவம் சொற்பமாகவேயாகும். (32:9)

(நபியே!) நீர்கூறுவீராக! அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப் புலனையும், பார்வைகளையும் இதயங் களையும் அமைத்தான்(எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றிசெலுத்து கிறீர்கள். (67:23, 14:34)

அவை ஸுலைமான் விரும்பிய மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும் (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செலுத்துங்கள் மேலும் எனது அடியார்களிலிருந்தும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே. (34:13)

*     நேரிய வழியில் இருப்பவர்கள் சொற்பமானவர்களே!

இன்னும் அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும் இன்னும் தமது இறைவனி டத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும் நிலைநாட்டியிருந்தால் அவர்களுக்கு மேலே இருந்தும் அவர்தம் பாதங்களுக்கு அடியிலிருந்தும் புசித்திருப்பார்கள் (எனினும்) அவர்களில் சொற்பமானவர்கள் தாம் நேர்வழியில் இருக்கின்றனர். (5:66)

*     கல்வி ஞானம் கொடுக்கப்படுவது சொற் பமானவர்களுக்கே!

தாவுதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான் முஃமின்களான தனது நல்லடியார்களில் சொற்பமானவர்களையே கல்வி ஞானத்தின் மூலம் மேன்மையாக்கினான் என்று கூறினார்கள். (27:13)

*     நேரிய அறிவுடையவர்கள் சொற்பமான வர்களே!

உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங் களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய (நேரிய) அறிவுடையவர்கள் சொற்பமானவர்களே இருந்தார்கள். (11:116)

*     இப்லீஸிசின் தீய சதியிலிருந்து தப்பிப் பிழைப்பவர்கள் சொற்பமானவர்களே!

எனக்கு மேலாக கண்ணியப்படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் கொடுத்தால் நான் இவருடைய சந்ததிகளில் சொற்பமானவர்களைத் தவிர (மற்ற அனைவரையும்) நிச்சய மாக வழிகெடுத்து விடுவேன் என்று (இப்லீஸ்) கூறினான். (17:62)

அன்றியும் (தனது வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயமாக அவன் உண்மையாக்கினான். ஆகவே முஃமின்களி லுள்ள சொற்பமான கூட்டத்தாரைத் தவிர (மற்றைய அனைவரும்) அவனையே பின் பற்றினார்கள். (34:20)

மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால் உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள் அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால் அவர்களிலிருந்து அ(ச் செய்தியின் உண்மைத் தன்மை எது என்ப)தை நன்கு விசாரித்தறிந்து (அதற்கான தக்க ஏற்பாடுகளைச் செய்து)கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் சொற்பமானவர்களைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள். (4:83)

*     குழப்பங்களைத் தடுக்கக் கூடியவர்கள் சொற்பமானவர்களே!

உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமி யில் குழப்பங்களைத் தடுக்கக்கூடிய அறிவுடையவர்கள் சொற்பமானவர்களே இருந்தார்கள். (11:116)

*     மோசடி செய்யாதிருப்பவர்கள் சொற்ப மானவர்களே!

அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம் அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம் (இறை வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள். ஆகவே அவர்களில் சொற்பமானவர் களைத் தவிர பெரும்பாலானோரிடமிருந்து மோசடிகளைக் கண்டு கொண்டே இருப்பீர். (5:13)

*     வாக்குறுதியை நிறைவேற்றுபவர்கள் சொற்பமானவர்களே!

இன்னும் நாம் இஸ்ராயீல் மக்களிடத் தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக் கூடாது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள். மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள். ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள் என்று உறுதி மொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சொற்பமானவர்களைத் தவிர (மற்ற யாவரும் உறுதிமொழியை நிறைவேற்றாமல் அதிலிருந்து) புரண்டு விட்டார்கள். 2:83

அப்பால் அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம் அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம் (இறை) வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின்(பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள் அவர்களில் சொற்பமானவர் களைத் தவிர (5:13)

* சுவர்க்கத்திற்குள் செல்வோர் சொற்பமானவர்களே!

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (விண் ணுலகப் பயணத்தின் போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைதூதருடன் (சொற்ப மான எண்ணிக்கையிலிருந்த) ஒரு கூட்டம் கடந்து சென்றது மற்றோர் இறைத் தூதருடன் (சொற்பமான) சில பேர் கடந்து சென்றனர் மற்றோர் இறைத் தூதருடன் பத்துப் பேரும் இன்னுமோர் இறைத் தூதருடன் ஐந்து பேரும் மற்றுமோர் இறைத் தூதருடன் இரண்டு பேரும் இன்னுமோர் இறைத் தூதருடன் ஒரேயயாரு மனிதரும் தம்முடன் ஒருவருமே இல்லாத இறைத் தூதரும் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள் (இப்னு அப்பாஸ்(ரழி),புகாரி 3410, 5705, 5752, 6472, 6541, 6542, 6543, 3247)

அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் மறுமை நாளில் ஆதம்(அலை) அவர்களை நோக்கி ஒவ்வொரு ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளா யிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரைப் பிரித்தெடுத்து நரகத்திற்கென்றும் அந்த ஒவ்வொரு ஆயிரம் பேரிலிருந்தும் எஞ்சிய ஒவ்வொருத்தரை மாத்திரம் சுவர்க்கத்திற்கென்று பிரித்தெடுக்கும்படியும் கட்டளையிடுவான். (அபூசயீத் அல்குத்ரி (ரழி), புகாரி 3348, 4741, 6530, 7483)

அத்தகைய ஈடேற்றம் பெற்ற ஆயிரத்தில் ஒருவராக எம்மையும் ஏக இறைவன் ஆக்கியருள்வானாக! பிறை விசயத்திலும் உலகம் ரமழானை அடைந்த முதலாவது நாளிலேயே உரிய சரியான நேரத்திற்கு நோன்பை ஆரம்பித்து ரமழானின் கடைசிப் பத்து நாட்களிலுள்ள சரியான ஆரம்ப நாளில் இஃதிகாப்பை ஆரம்பித்து அதன் ஒற்றைப்படை நாட்களில் புனித லைலதுல் கத்ரைத் தேடி இறைவனால் கணக்கிடப்பட்ட குறிப்பிட்ட நாட்கள் முழுவதும் நோன்பு நோற்று மிகச் சரியான நாளில் பெருநாளைக் கொண்டாடி ஷவ்வாலின் சரியான ஆரம்ப நாளில் சுன்னத்தான நோன்பை ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் வரும் “அய்யாமுல் ஃபீழ்” எனும் சரியான நாட்களில் சுன்னத்தான மூன்று நோன்புகளை நோற்று துல்ஹஜ் பிறை எட்டில் மினாவிலிருந்து ஹஜ் கடமையை ஆரம்பித்து அதன் அனைத்து கிரிகைகளையும் மிகச் சரியான நாளில் செய்து முடித்து சரியான நாளில் அரஃபா நோன்பை நோற்று உரிய நாளில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடி ஹிஜ்ரி புது வருடத்தைச் சரியான நாளிலிருந்து ஆரம்பித்து முஹர்ரம் மாத இரு சுன்னத்தான நோன்புகளையும் மிகச் சரியான நாட்களில் நிறைவு செய்து இறை நிராகரிப்பை ஏற்படுத்தும் பெரும் பாவமாகிய புனித மாதங்களை முன்னும் பின்னுமாக மாற்றும் கொடிய பாவத்திலிருந்து விடுபட்டு வணக்க வழிபாடுகள் செய்பவர்கள் சொற்பமானவர்களே, சொற்பமானவர்களே! சொற்பமானவர்களே!

Previous post:

Next post: