குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

in 2019 பிப்ரவரி,குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

ஆய்வுத் தொடர் – 11

அபூ அப்தில்லாஹ்

2019 ஜனவரி தொடர்ச்சி…..

அவர்கள் கூறுகிறார்கள்:

“இபாததுல் வலீ” என்ற அரபி பதத்திற்கு இறை நேசரை வணங்குதல், இறைநேச வணங்குதல் என்று இரு பொருள் எடுக் கலாம். தமிழ் மொழியில் வேற்றுமை உருபு (ஜகாரம்) பளிச்சென்று வெளியில் தெரிவ தால் எந்தக் குழப்பமும் இல்லை. நேசர், நேசர்+ஐ=நேசரை என்று தமிழ் மொழி வித்தியாசங்களை வெளிப்படுத்துகிறது. அரபி மொழியில் இந்த தெளிவு இல்லை’ என்று அவர்கள் எழுதி இருப்பதும் இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது. பொதுமக்கள் சுய சிந்தனையில்லாத மிருகங்களைப் போன்ற வர்கள் என்பது மவ்லவிகளின் கூற்றல்லவா? அந்தப் பொதுமக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் அவர்களது கூற்றை விளக்கு வதாக இருந்தால் “அல்லாஹ் மொழி இலக் கணம் நிறைவாக உள்ள வேறு மொழிகள் இருக்கும் நிலையில் மொழி இலக்கணம் நிறைவில்லாத அரபி மொழியில் தனது இறுதி நெறிநூலான அல்குர்ஆனை இறக்கி விட்டான்; அதனால் குர்ஆனை பொது மக்களால் விளங்கிக் கொள்ள முடியாது. அரபி மொழி கற்ற மவ்லவிகளால் மட்டுமே சரியாக விளங்கிக் கொள்ள முடியும்” என்பதேயாகும். தமிழ், ஆங்கில மொழி இலக்கணம் முறையாகக் கற்றிருந்தால் அல்லவா அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் குறைபாடு அரபி மொழியில் மட்டுமல்ல, தமிழ் மொழியிலும் உண்டு. இதர எல்லா மொழிகளிலும் உண்டு எந்த மொழியும் இதற்கு விதிவிலக்கானதல்ல என்பதைப் புரிந்திருப்பார்கள்.

தமிழ்மொழி இலக்கணத்தில் “சிலேடை அணிகள்” என்ற தனிப்பிரிவே உண்டு என் பதை இவர்கள் அறிந்திருந்தால் இவ்வாறு எழுதி இருப்பார்களா? 1967ல் திமுக ஆட்சி அமைத்த சமயம் காங்கிரஸ் பெண் னிஸிபு-க்கும், அன்றைய முதன் மந்திரிக்கும் நடந்த வாக்குவாதத்தில் இடம் பெற்ற சிலேடை அணி தமிழ்நாட்டில் பிரசித்தமானது. அது போன்ற பல ஆதாரங்களைத் தரமுடியும். உதாரணமாக “புத்தியில்லாதவன்” இதற்கு மடையன் என்ற பொருளும் பெறலாம்; அதற்கு நேர்முரணான “புத்தியில் ஆதவன்” -புத்தியில் சூரியனைப் போல் பிரகாசமானவன்-மிகவும் புத்திசாலி என்ற பொருளும் பெறலாம்.

இன்னொரு உதாரணம் காசாலேசா இதில் “காசா, லேசா’ என்ற பொருளும் காசாலே -சா’ என்ற பொருளும் பெற முடியும். இப்படி பல உதாரணங்களைக் காட்ட முடியும். இவை இடம்பெறும் வசனத்தைக் கவனித்துப் பார்க்கும் ஒருவன் அவற்றை விளங்கிக் கொள்ளமுடியும். அதாவது ஒரு வசனத்தை முன்பின் தொடர்களுடன் முறையாகப் பார்க்கும் “புத்தியில்லாதவன்” சரியாக விளங்கிக் கொள்ள முடியும். குறுகிய நோக்குடன் பார்க்கும் “புத்தியில்லாதவன்” மட்டுமே தடுமாறுவான். இங்கு “புத்தியில்லாதவன்” என்ற பதத்திற்கு முதல் இடத்தில் புத்தியில் சூரியனைப் போல பிரகாசமானவன் என்றும், இரண்டாவது இடத்தில் மடையன் என்றும் நடுநிலை யாளர் விளங்கிக்கொள்ள முடியும். இந்த நிலையில் தமிழ்மொழியில் இப்படிப்பட்ட குறைபாடுகள் இல்லை. அரபி மொழியில் தான் உண்டு என்று கூறுகிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்களுக்கு தமிழ் மொழி இலக்கணம் தெரியவில்லை என்பது தானே; அதாவது தாய்மொழிதமிழ், அதன் மொழி இலக்கணம் தெரியாதவர்கள், இடையில் கற்றுக் கொண்ட அரபி மொழி இலக்கணத்தில் பண்டிதர்கள் என்று அகந்தை பேசுவது விந்தையாக இல்லை? ஏன்தான் இந்த மவ்லவி வர்க்கம் இப்படி அகந்தை கொள்கி றார்களோ தெரியவில்லை.

அல்ஜன்னத் டிச. 89 இதழ் பக்கம் 85ல், 3:30 வசனத்திற்கு அவர்கள் கொடுத்துள்ள பொருள் வருமாறு:

அந்நாளில் ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நல்லவற்றையம், தான் செய்த தீய வற்றையும் கண் முன்னால் காணும். தனக்கும், தான் செய்த செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டு மென அவை விரும்பும். (3:30)

இப்போது அவர்களே சரிபார்த்துத் திருத் திக் கொடுத்த குர்ஆன் மொழி பெயர்ப்பில் உள்ள பொருளை அப்படியே தருகிறோம் பாருங்கள். “ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளும், இன்னும் தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகுதூரம் இருக்க வேண்டும் என்று விரும்பும்”. (3:30)

இதுவே அவர்களும் சரிகண்டுள்ள மிகச் சரியான மொழிபெயர்ப்பாகும். இப்போது தாங்களே சரிகண்டு ஒப்புக் கொண்ட மொழிபெயர்ப்புக்கு மாற்றமாக புதிய தொரு மொழி பெயர்ப்பையும் விளக்கத் தையும்கொடுத்து, தங்கள் வாதத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா? நன்மையும், தீமையும் கண்முன்னால் கண்ட ஒவ்வொரு ஆத்மாவாகிய அது விரும்பும் என்பதே சரி யான மொழிபெயர்ப்பாகும். அவை விரும் பும் என்று மொழி பெயர்த்திருப்பது தவறாகும். அது என்ற இடத்தில் அவை என்று போட்டுக் கொண்டும், நன்மை, தீமையைக் காணும் ஒவ்வொரு ஆத்மாவும் என்பதற்கு நல்ல ஆத்மா, கெட்ட ஆத்மா என்று விளக்கம் கொடுத்தும் தங்கள் வாதத்தை நிலை நாட்ட முற்பட்டுள்ளனர். இவர்களின் வாதப்படி நல்ல ஆத்மாக்கள் தீமையே செய் திருக்காது, கெட்ட ஆத்மாக்கள் நன்மையே செய்திருக்காது. என்னே அறிவீனம்?

“அல்லாஹ்ஹும்ம பாயித் பய்னீ வ பய்ன கதாயாய… யா அல்லாஹ்! எனக்கும் எனது தவறுகளுக்குமிடையில் கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ அமைத்திருப்பது போன்ற தூரத்தை அமைத்திடுவாயாக” (அபூஹுரைரா(ரழி), புகாரி: முஸ்லிம்)

இது நபி(ஸல்) அவர்கள் கடமையான தொழுகையை ஆரம்பித்தவுடன் ஓதிய துஆவாகும். இவ்வாறு அவர்கள் பிரார்த்தனை செய்து இருப்பதால் இவர்களின் வாதத்தின்படி நபி(ஸல்) அவர்களைக் கெட்ட ஆத்மாக்களில் சேர்க்கும் துணிச்சல் இவர்களுக்கு ஏற்பட்டு விட்டதா? அல்லது நபி(ஸல்) அவர்களை விட உயர்ந்த நிலையில் தவறே செய்யாத ஆத்மாக்கள் இருக்கின்றன என்று நம்புகின்றனரா?

இவர்கள் செய்துள்ள மொழி பெயர்ப்பில் அரபி மொழியில் மட்டும் இலக்கணப் பிழை செய்யவில்லை. தமிழ் மொழியிலும் இலக்கணப் பிழை செய்துள்ளனர். தனக்கும் தான் செய்த செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டுமென்று அது விரும்பும் என்று வருமே அல்லாது அவை என்று வர முடியாது.

தங்கள் வாதத்தை நிலைநாட்ட எத்தனைத் தவறுகளைச் செய்திருக்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

3:30 வசனமோ மிகத் தெளிவாக இருக்கிறது. ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அது செய்த நல்லமல்களையும், கெட்டமல்களையும் காட்டப்படுவது பற்றிய வசனமே அது. எந்த ஒரு ஆத்மாவும் தான் செய்த கெட்ட அமல் தன்னிடம் காட்டப்படும்போது அது வருந்தவே செய்யும். 100க்கு 35 மார்க்கு வாங்கினால் பாசாகி விடுவார்கள். அதே சமயம் 100க்கு 95 மார்க்கு வாங்கும் மாணவனும் 5 மார்க்கை தான் இழந்ததைக் குறித்து வருந்தவே செய்வான். ஆதத்தின் சந்ததிகளில் தீமையே செய்யாத எந்த ஒரு ஆத்மாவும் இருக்க முடியாது.

“ஆதமின் மக்களில் ஒவ்வொருவரும் தவறு செய்யக் கூடியவரே. தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் தங்களின் தவறுக்காக வருந்தி பாவமன்னிப்புத் தேடுபவர்கள்.” என்பது நபிமொழியாகும். (அனஸ்(ரழி), திர்மிதீ)

இவர்களோ நல்ல ஆத்மாக்கள் வருந்தாது என்ற தவறான விளக்கத்தைத் தந்து அந்த வசனத்தில் வரும் “அது’ என்ற பதத்தை “அவை’யாகத் திரித்து, அவர்களால் திரிக்கப்பட்ட அவை என்ற பதம் நல்ல ஆத்மாக்களைக் கட்டுப்படுத்தாது என்று புது விளக்கம் தருகிறார்கள். தங்களின் வாதத்தை நிலைநாட்ட இப்படியா தரம் தாழ்ந்து செல்வது?

குர்ஆனின் குரல் 5:105 குர்ஆன் வசனத்தில் தவறான விளக்கம் கொடுத்ததற்காக “குர்ஆனுடன் விளையாடும் குர்ஆனின் குரல்(?)” என்று 1986 ஜூலையில் நையாண்டி செய்தவர் இன்று 3:30 குர்ஆன் வசனத்தில் அதைவிட பெருந்தவறான நோக்கத்துடன் விளக்கம் கொடுக்க முற்பட்டிருக்கிறாரே! இது நியாயந்தானா? செப்டம்பர் “86ல் குர்ஆன் விளக்கத்தில் நிகழ்ந்து விட்ட ஒரு தவறுக்காக “மாபெரும் தவறு! மன்னித்துக் கொள்க!” என்று கொட்டை எழுத்தில் தலையங்கமே தீட்டி யவரிடம் இன்று அந்த உயர்ந்த மனோ நிலையைக் காணோமே? “தவறுகளை எவர் சுட்டிக் காட்டினாலும் அடக்கத்துடன் ஏற்போம், வரட்டு கெளரவம் பார்ப்பவர் களையும், முரட்டுப் பிடிவாதம் பிடிப்பவர் களையும் அலட்சியம் செய்வோம்! என்று அவர்கள் ஏற்றுள்ள சபதத்தையாவது மதித்து நடக்கவேண்டாமா?

இவ்வளவு பெரிய முயற்சிகள் செய்து அவர்கள் சாதிக்க விரும்புவது என்ன தெரியுமா? 3:7 வசனத்தில் “அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களும் முத்தஷாபிஹாத் வசனங்களின் இறுதிப் பொருளை அறிவார்கள்” என்று மொழி பெயர்த்தாலும் அடுத்து வரும் “பகூலூன” என்ற அரபிப்பதம் கல்வியில் உறுதிப்பாடு டையவர்களை மட்டுமே கட்டுப்படுத்தும். அல்லாஹ்வைக் கட்டுப்படுத்தாது என்று நிலைநாட்டவே, சம்பந்தமே இல்லாத ஒரு வசனத்தை எடுத்து எழுதித் தங்கள் அரபு மொழித் திறமையைக் காட்டியுள்ளனர்.

முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்க முடியாது என்று, என்றுமே நாம் சொன்னதில்லை. இறுதி முடிவுக்கு வரமுடியாது என்றே நாம் கூறி இருக்கிறோம். 3:7 வசனத் தில் “வமா யஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹ்” என்று வரும் இடத்திலுள்ள தஃவீல் என்ற பதத்திற்கு “விளக்கம்” என்ற பொருள் அல்ல. அந்த இடத்தில் “இறுதி முடிவு” என்ற பொருளே பெற முடியும் என்று தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கிறோம். அப்படி இருந்தும் முத்தஷாபிஹாத் வசனங்களை முன்பு விளங்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்துவிட்டு பின்னர் விளங்க முடியும் என்று இறங்கி வந்துள்ளதாக அவதூறு பரப்பினர். அதற்கு அந்நஜாத் ஆகஸ்ட் 89 இதழ் பக்கம் 53ஸ் தெளிவாக விளக்கம் கொடுத்திருந்தோம். மக்களின் மறதி, தக்லீது மனப்பான்மை, சுயசிந்தனை யற்ற போக்கு இவற்றைத் தங்களுக்குச் சாத கமாகப் பயன்படுத்துகின்றனர் என்று தக்க ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி இருந்தோம்.

வி­யம் இவ்வளவு தெளிவாக இருக்கும் நிலையில் அல்ஜன்னத் ஜனவரி “90 பக்கம் 17ல் இடம் பெற்றுள்ள குறுக்கு விசாரணைக்குரிய பதிலைப் பாருங்கள்.

முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்க முயற்சிப்பது தவறில்லை. அதற்கு ஒரு நிலையான அர்த்தம் கொடுப்பதுதான் தவறு என முதல் சாரார் கூறுகிறார்களே. இதன் விளக்கம் என்ன? பரங்கிப்பேட்டை கு. நிஜாமுத்தீன், K.S.A.

அல்லாஹ்வைத் தவிர யாரும் அதை விளங்கிக் கொள்ள முடியாது என்று அல்லாஹ் கூறுவதாக அர்த்தம் செய்து விட்டு, விளங்கவே முடியாது என்று அல்லாஹ் சொன்னதை (அதாவது அவர் களின் அர்த்தப்படி) விளங்கிக் கொள்ள முயற்சிப்பது தவறில்லை என்று கூறுவது முரண்பாடாக உங்களுக்குத் தோன்ற வில்லையா? முடியாது என்பது தான் அந்த வசனத்தின் அர்த்தம் என்று அவர்கள் நம்பினால் “விளங்கிக் கொள்ள முயற்சிப்பது தவறில்லை” என்று கூறுவது சரியாகப்படுகிறதா என நீங்களே சிந்தியுங்கள்! என அல்ஜன்னத்தில் பதில் அளித்துள்ளனர்.

இவ்வாறு மனந்துணிந்து உண்மைக்குப் புறம்பாக எழுதலாமா? நாம் சுட்டிக் காட்டு வது போல் நமது இதழின் வருடம் மாதம் பக்கத்தைச் சுட்டிக்காட்டி “முத்தஷாபிஹாத்” வசனங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் விளங்க முடியாது” என்று எழுதி இருப்பதை காட்டட்டும் பார்க்கலாம். எழுத்தில் தெளி வாக வெளிவந்துள்ள வி­யங்களிலேயே இவ்வளவு மனந்துணிந்து பொய்யாக எழுது கிறவர்கள், மற்ற வி­யங்களில் எந்த அளவு பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி இருப்பார்கள் என்பதை அறிவுள்ளவர்கள் மட்டுமே விளங்க முடியும்.

முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீட்டாளர்கள் தங்களின் குர்ஆன் தமிழ் உரை நான்காம் பதிப்பில் 3:7 வசனத்தில் “அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களும் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட் டார்கள்” என்று அச்சிட்டு வெளியிட்டிருந்ததை ஐந்தாம் பதிப்பில் “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள்” என்று சரி யாகத் திருத்தி வெளியிட்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். 4ம் பதிப்பை வாங்கியவர்கள் 3:7 வசனத்திலுள்ள தவறைத் திருத்திக் கொள்ளவும்.

அல்குர்ஆன் 3:7 வசனம் அல்குர்ஆனிலுள்ள இரண்டு வகையான வசனங்கள் பற்றி தெள்ளத் தெளிவாகச் சொல்லும் முஹ்க்கமான வசனம். இதில் ஒருவகை, திட்டமான உறுதியான இறுதியான பொருள் கொள்ள முடியாமல் பல பொருள் களில் விளங்க முடிந்த முத்தஷாபிஹாத் வசனங்கள். அப்படிப்பட்ட இரண்டாம் வகையைச் சேர்ந்த வசனங்களின் உண்மைப் பொருளை இறுதி முடிவை அல்லாஹ் அல்லாத யாராலும் அறிய முடி யாது. 3:7 வசனத்திலுள்ள தஃவீல் என்ற அரபி பதத்திற்கு விளக்கம் என்று பொருள் கொள்வது கூடாது அங்கு இறுதி முடிவு என்று பொருள் கொள்வதே சரி. இரண்டாம் வகையான முத்தஷாபிஹ் வசனங்கள் பற்றி காலத்திற்கேற்றவாறு விஞ்ஞான வளர்ச்சிக்கேற்றவாரெல்லாம் பொருள் கொள்ள முடியும். இந்த வசனங்களை விளங்கிக் கொள்ள அரபி இலக்கண, இலக்கிய ஞானமும் அவசியம் என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கிறோம்.

இவ்வளவு தெளிவான விளக்கத்திற்குப் பிறகும் முத்தஷாபிஹ் வசனங்களை விளங்க முடியாது என்று நாம் சொல்வதாக, விளங்கிக் கொள்வதற்கும் அதைப் பற்றிய இறுதி முடிவுக்கு வருவதற்குமுள்ள வித்தி யாசம் தெரியாமல் தவ்ஹீத் மவ்லவிகளே தடுமாறுகின்றனர். அல்முபீன் மார்ச் 90 பக்கம் 31லும் இந்த தடுமாற்ற நிலையைப் பார்க்க முடிகின்றது.

3:7 வசனம் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளக்கிய பின்னும் அது பற்றி விளங்காதவர்கள் ஒன்று அறிவு சூன்யங் களாக இருக்க வேண்டும் அல்லது தங்கள் மவ்லவி வர்க்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள விதண்டாவாதம் புரிபவர்களாக இருக்க வேண்டும். மூன்றாம் நிலை இருக்க முடியாது. எனவே தவ்ஹீத் மவ்லவிகளின் நிலை பெற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தங்கள் தவறான வாதத்தை நிலைவாட்ட அல்ஜன்னத் பிப் “90 பக்கம் 38ல் அல்குர்ஆன் வசனம் 2:221ஐ எவ்வாறு திரித்துள்ளனர் என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

அதற்கு முன்பு ஒன்றை தெளிவாக்கிட விரும்புகிறோம். 3:7 வசனத்தின் உண்மை நிலையைத் தெள்ளத் தெளிவாக்கிட நாமோ குர்ஆனிலிருந்தும், ஹதீஃத்களிலிருந்தும் நேரடியான விளக்கங்களை எடுத்து எழுதி வருகிறோம். அவர்களோ குர்ஆன் வசனங்களைத் திரித்து எழுதி வருகிறார்கள். அதற்கு அண்மைக் காலத்திய மவ்லவி ஸனாவுல் லாஹ்வை சான்றாக்குகிறார்கள். உண்மை யைக் கொண்டு நீதி வழங்கும் பொறுப்பிலிருந்த முன்னாள் தமிழக தலைமை நீதிபதி எம்.எம்.இஸ்மாயீல் அவர்கள் சொல்லாத வாதத்தை நிலைநாட்ட முற்படுகின்றனர். “இபாததுல் வலீ” என்ற அரபி பதத்தை வைத்து அகந்தை பேசிய தவறான வாதத்தை நிலைநாட்ட முற்பட்டிருந்ததை யும் தெளிவுபடுத்தி இருந்தோம்.

இப்போது அவர்கள் திரித்து எழுதியுள்ள 2:221 வசனத்தை சிறு வாக்கியங்களாகப் பார்ப்போம்.

  1. இணை வைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும்வரை-நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
  2. இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும்.
  3. அவளைவிட விசுவாசியான ஒரு அடி மைப் பெண நிச்சயமாக மேலானவள் ஆவாள்.
  4. அவ்வாறே இணை வைக்கும் ஆண் களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (விசுவாசியுள்ள பெண்களை) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர் கள்.
  5. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்தபோதி லும்.
  6. ஒரு விசுவாசியானஅடிமை அவனை விட மேலானவன்.
  7. இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.
  8. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபை யால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப் பின்பக்கமும் அழைக்கிறான்.
  9. மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (2:221)

இங்கு ஒவ்வொரு வாக்கியத்திற்கும் தனித்மதனி எழுவாய் பயனிலை இருப்பதைக் கவனிக்கவும். அதாவது விசுவாசி களுக்குத் தனி பயனிலையும், இணை வைப் பவர்களுக்குத் தனி பயனிலையும் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. எனவே 7வது வாக்கியத்திலுள்ள இவர்கள் என்ற எழுவாய் இணைவைப்பவர்களையும், 9வது வாக்கியத்திலுள்ள அவன் அல்லாஹ்வையுமே குறிக்கிறது என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியும். இப்படிப் பொருள் கொள்வது குர்ஆனிலுள்ள வழக்கப்படியே அமைந்துள்ளது.

 (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: