அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்,
- அல்லாஹ் காற்றை எதற்காக அனுப்புவதாக கூறுகிறான்?
கப்பல்கள் கடலில் செல்வதற்காகவும், மனிதர்கள் அருளை தேடிக்கொள்ளவும், நன்றி செலுத்தவும் என அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் :30:46 - ஈமான் கொண்டவர்கள் வேறு வீடுகளில் பிரவேசிக்கும் முன் எப்படி நடந்து கொள்ள அல்லாஹ் கூறுகிறான்?
அவர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை பிரவேசிக்க வேண்டாம் என்று கூறுகிறான். அல்குர்ஆன் : 24:27 - குற்றவாளிகள் மறுமை நாளில் எவ்வாறு சத்தியம் செய்வார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
சிறிது நேரமேயன்றி தாம் தங்கியிருக்கவில்லை என சத்தியம் செய்வார்கள். அல்குர்ஆன் : 30:55 - யாரை வாரிசாக கொள்வதாக அல்லாஹ் கூறுகிறான்?
பூமியையும், அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாக கொள்வதாக அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் 19:40 - ஃபஸாது(விதமம்) செய்கிறவர்களை அல்லாஹ் எவ்வாறு எச்சரிக்கிறான்?
அத்தகையோருக்கு சாபம்தான். அல்குர்ஆன்: 13:25 - ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பை என்ன செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?
அவனுடைய கழுத்தில் மாட்டி இருக்கிறோம் என்று கூறுகிறான். அல்குர்ஆன்: 17:13 - மலைகளை அல்லாஹ் எதற்கு படைத்ததாக கூறுகிறான்?
பூமி உங்களை சரித்து விடாதிருக்க என கூறுகிறான். அல்குர்ஆன் : 31:10 - நிராகரிப்பாளரின் உயிரை கைப்பற்றும் மலக்குகள் எந்த முறையில் நடந்து கொள்வார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
முகங்களிலும், முதுகுகளிலும் அடித்து எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள் என்று மலக்குகள் கூறுவார்கள். அல்குர்ஆன்: 8:50 - சப்தங்களில் மிக வெறுக்கத்தக்க சப்தம் எது என அல்லாஹ் கூறுகிறான்.
கழுதையின் சப்தம். அல்குர்ஆன் : 31:19 - எவர்களை(சுவர்கப்) பூங்காவில் மகிழ்விக் கப்படுவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
ஈமான் கொண்டு நல்ல (ஸாலிஹான) அமல்களை செய்தவர்களை. அல்குர்ஆன்: 30:15 - பயணத் தொழுகை எத்தனை ரக்அத் கடமையாக்கப்பட்டது?
இரண்டு ரக்அத் ஆக கடமையாக்கப்பட்டது என ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் : 1220 - இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு என்ன செய்யவேண்டும் என முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை நினைவூட்ட கூறினார்கள். முஸ்லிம் : 1672 (அபூசயீத் அல்குத்ரி(ரழி) - இரண்டு நாட்கள் பயணிக்கும் பெண்மணி எவ்வாறு நடந்துகொள்ள முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கணவனோ, மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினரோ இல்லாமல் பயணிக்க வேண்டாம் என கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரி(ரழி), புகாரி:1197 - இஹ்ராம் அணிந்தவர் எவைகளைக் கொன்றால் பாவமில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்?
காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய். புகாரி: 1828 - “அல்முஹைமின்” என்றால் என்ன?
பாதுகாக்கக்கூடியது. அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி : 4977 - இறுதி நாளின் முதல் அடையாளம் எது?
நெருப்பு – கிழக்கிலிருந்து மக்களை மேற்கு திசை நோக்கி விரட்டும். அனஸ்(ரழி), புகாரி: 3329 - முற்காலத்தில் மனிதன் தற்பெருமையுடன் தனது கீழங்கியை இழுத்துச் சென்றபோது என்ன நடந்தது?
பூமியில் புதைந்து போகும்படி செய்யப்பட்டது. புகாரி : 5790