நாளின் ஆரம்பம்…
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
பிப்ரவரி 2019 தொடர்ச்சி….
v சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக முற்பகல் மீது சத்தியமாக பகலின் மீதும் சத்தியமாக இரவின் மீதும் சத்தியமாக. (91:1,3,4, 93:1)
v ஹுதைஃபா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது ஒருமுறை நாங்கள் கலீஃபா உமர் (ரழி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது கடலலை போன்று அடுக்கடுக்காக ஏற்படும் அரசியல் குழப்பங்கள் பற்றிய நபி(ஸல்) அவர்களது முன் அறிவிப்பு பற்றி அறிந்தவர் உங்களில் யார்? என்று கேட்டார்கள் மூஃமின்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை எங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கும் இடையே மூடப்பட்ட கதவு ஒன்றுள்ளது என்று நான் கூறினேன். அந்தக் கதவு திறக்கப்படுமா? அல்லது அது உடைக்கப்படுமா? என்று உமர் (ரழி) அவர்கள் கேட்டார்கள் அது உடைக்கப்படும் என்று நான் கூறினேன். ஷஹீக் (ரஹ்) என்பவரிடம் கூறியதாவது, அந்தக் கதவு எதுவென உமர்(ரழி) அவர்கள் அறிவார்களா? என்று மக்கள் ஹுதைஃபா (ரழி) அவர்களிடம் கேட்டபோது,
“ஆம் பகலுக்குப் பின்னர் இரவு என்பதைத் தெளிவாக அறிவது போன்று அதை உமர்(ரழி) அவர்கள் அறிவார்கள் என்று ஹுதைஃபா(ரழி) அவர்கள் கூறினார்கள். மேலும் “அந்தக் கதவு என்பது உமர்(ரழி) அவர்கள்தான்” என்று மஸ்ரூக் (ரஹ்) என்பவரிடம் ஹுதைஃபா(ரழி) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 525)
v எனவே, அன்றைய சூரியனைப் பின்தொடர்ந்து உதித்துப் பின்தொடர்ந்து வந்து (91, 1,2) பனிரெண்டு மணி நேரங்களைக் கடந்து மஃரிப் நேரம் பார்க்கப்படும் மறையப்போகும். அந்த பிறையானது அன்றைய பொழுது புலர்ந்து 12 மணி நேரங்களைக் கடந்துவிட்ட அன்றைக்குரிய பிறைதான். அது பொழுது புலரப்போகும் மறுநாளைக்குரிய பிறை அல்ல என்பதையே நபித் தோழர்களும் தெளிவாக விளங்கியிருந்தார்கள்.
v ஒருமுறை நாங்கள் உம்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது “நஹ்லா” என்ற இடத்தில் வைத்து பிறையைப் பார்த்து விட்டோம் பிறையின் அளவு சற்று பெரியதாகத் தோன்றியதால் அது இரண்டாம் பிறையாக இருக்கலாம் என்று சிலரும் மூன்றாம் பிறையாக இருக்கலாம் என்று வேறு சிலரும் பேசிக் கொண்டனர். அப்போது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைச் சந்தித்தோம். என்று நீங்கள் பிறை பார்த்தீர்களோ அது அன்றைக்குரிய பிறை” என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
(அபுல் பக்தரீ (ரஹ்) முஸ்லிம்:1885, தஃப்ஸீர், அல்ஜாமிஉல் அஹ்காமில் குர்ஆன், குர்துபி, பாகம்: 2, பக்கம் : 344)
v காலைப் பொழுதை அடைந்துவிட்ட ஒருவர் தமது அன்றைய நாளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்வது பற்றி பாடம்.
(புகாரி: பாகம் 1, பக்கம் 751, பாடம்:4)
v அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரவுகளின் உங்களது கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள். (இப்னு உமர்(ரழி) புகாரி: 998,999, 472,473, முஸ்லிம்: 1635, 36-38, 1242,44-46, திர்மிதி:401, நஸயீ:1664, அபூதாவூத் :1416,1433, அஹ்மத்: 4480, 4730, 5233, 5499, 5736, 3903, 6086, 6085, 6130)
v அன்றைய நாள் இரவின் கடைசித் தொழுகை “வித்ர்” என்பது சுப்ஹுத் தொழுகைக்கு முன்னராகும் மாறாக நாளின் இறுதி என்பது மஃரிபு நேரமல்ல.
v இரவுத் தொழுகைகளை இரண்டிரண்டாகத் தொழுங்கள் அதிகாலை சுப்ஹுத் தொழுகை நேரம் வந்து (அடுத்த நாள் ஆரம்பித்து விடுவோமென நீங்கள் அஞ்சினால் ஒரு ரகாஅத் தொழலாம் நீங்கள் (அவ்வாறு) தொழுது வித்ராக அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர் (ரழி), புகாரி: 473,990,993,999, முஸ்லிம்: 1632-1634,1644, 1647, திர்மிதி:423, நஸயீ:1649,1656,1676,1674, இப்னு மாஜா:1164,1165, முஅத்தா மாலிக்:247,251, அஹ்மது: 4263, 4331, 4628, 4790, 4841, 4967, 5142, 5197, 5213, 5667, 5893, 5900, 5974, 6070)
v ஹஜ்ஜுப் பெருநாளுடைய அன்றைய தினத்தில் முதன் முதலாவதாகச் செய்ய வேண்டியது ஒரு ஈட்டி அளவு உயரத்திற்கு சூரியன் உயர்ந்தவுடன் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதாகும் என்ற அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய ஆதாரப்பூர்வமான முன்மாதிரியில் இருந்து எவ்வித சந்தேகமும் இன்றி நாம் புரிந்து கொள்வது அன்றைய நாளின் ஆரம்பம் அதிகாலை நேரம் என்பதாகத்தான்.
v அதுபோன்றே அன்றைய நாள் இரவின் இறுதிப் பகுதி என்பது ஸுப்ஹுத் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டு அடுத்த நாள் ஆரம்பித்து விடுமோ என அஞ்சி ஒற்றைப்படையான இரவுத் தொழுகையை நிறைவேற்றுவது தான் என்று இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் சொன்னதிலிருந்து எவ்வித சந்தேகமும் இன்றி நாம் புரிந்து கொள்வது அன்றைய நாள் இரவின் இறுதி என்பது சுப்ஹுத் தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதற்கு முன்னர் வரைக்கும் உள்ள நேரம் என்பதாகத் தான்.
v ஆக வேறு எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் இது ஒன்று மாத்திரமே போதுமானது நாளின் ஆரம்பம் என்பது சுப்ஹில் இருந்து அடுத்த சுப்ஹு வரும் வரையுள்ள நேரம் என்பதாகத்தான்.
v அன்றைய நாள் இரவின் இறுதிப் பகுதி என்பது இஷாத் தொழுகைக்குப் பின்னர் இருந்து சுப்ஹுத் தொழுகை வரையுமாகும்.
v உங்களில் ஒருவர் திட்டமிட்டுத் தனது மனைவியை அடிமையை அடிப்பது போன்று அடிக்கிறார் பின்னர் அவரே அந்நாளின் இறுதியில் இரவில் அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்ஷாஹ் பின் ஸம்ஆ (ரழி), புகாரி : 4942, 5204, 6042, தராமி: 2123, அஹ்மத்: 16269, 16266)
v நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்வதாகக் கனவில் கண்டதாகக் கூறினார்கள். பின்னர் தாம் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றதும் வானத்தில் மேகம் தோன்றி மழை பொழிந்தது நபி(ஸல்) அவர்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மேல் ஆணையாக! அன்றைய தினம் (இரவு) “”கடைசி” நேரத்தில் வானத்தில் மேகம் திரண்டது(அன்றைய பள்ளிவாயிலில் பேரீச்சை ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. சுப்ஹுத் தொழுகையின் பின்னர் நபி (ஸல்) அவர்களின் மூக்கிலும் மூக்கின் ஓரங்களிலும் ஈரமான களிமண்ணின் அடையாளத்தை நான் கண்டேன் என்று அபூஸயீத்(ரழி) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 2040, 2036)
v நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் சென்றோம். (அன்றைய) இரவின் கடைசி நேரம் வந்தபோது எங்களுக்குத் தூக்கம் மேலிட்டது அந்தத் தூக்கத்திலிருந்து எங்களை(க் காலை) சூரிய வெப்பம்தான் எழுப்பியது. (இம்ரான் (ரழி), புகாரி: 344)
v அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள் நான் இன்றிரவு என்னுடைய எழுபது துணைவியாரிடமும் மற்றோர் அறிவிப்பில் நூறு துணைவியாரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன் அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் வீரர்களான ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி : 2819, 3424, 5242, 6639, 6720, 7469, முஸ்லிம் : 3401, 3404)
v நபி(ஸல்) அவர்கள் போர் செய்வதற்குத் தடை செய்யப்பட்ட புனிதமான ரஜப் மாதத்தின் கடைசிப் பகுதியில் முஹாஜிர்கள் எட்டுப் பேர் கொண்ட ஒரு உளவுப் படைப் பிரிவுக்கு அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ்(ரழி) அவர்களைத் தலைவராக நியமித்து மக்காவுக்கு அருகிலுள்ள நக்லா எனும் இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது மக்கா குறை´யரின் வணிகக் குழுவொன்று அவர்களைக் கடந்து சென்றது அன்று புனித ரஜப் மாதத்தின் இறுதி இரவின் நாளாகும். அப்போது அந்த வணிகக் குழுவினர் மீது தாக்குதல் தொடுப்பது பற்றித் தங்களுக்கிடையே ஆலோசனை செய்த நபித் தோழர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றிரவு இந்த வணிகக் குழுவினரைத் தாக்காது விட்டுவிட்டால் அவர்கள் நாளை அபயமளிக்கப்பட்ட (2:125, 3:96,97, 5:97, 14:35, 28:57, 29:67, 105:1-5, 106:3-6) புனித ஹரம் பகுதிக்குள் நுழைந்து விடுவார்கள் அங்கும் அவர்களைத் தாக்க முடியாது போர் செய்யத் தடை செய்யப்பட்ட (9:37, புகாரி :4662, 3197,4406,4747,5550, முஸ்லிம் : 3467) புனித ரஜப் மாதத்தின் இறுதியாகிய இன்று இரவு இவர்களைத் தாக்கினால் புனித மாதத்தில் போர் புரிந்த குற்றம் ஏற்படுமே என்று கூறித் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். (9:37, புகாரி: 4662, 3197, 4406, 5550, 4747, முஸ்லிம்: 3467, பைககீ, தப்ராணீ சீரத் இப்னு ஹிஷாம் தஃப்சீர் இப்னு கஸீர்: 1 : 678-686)
v இன்றைய இரவில் இருப்பவர்களுக்குப் பொழுது புலர்ந்துவிட்டால் அது மறுநாள், அடுத்த நாள், கடந்த நாள் என்று ஆகிவிடுகிறது அவர்கள் இருந்த இரவு கடந்த இரவு, நேற்றைய இரவு, மறுநாள் இரவு, சென்ற இரவு என்று ஆகிவிடுகிறது. ஆகவே கடந்த நேற்றைய இரவுக்கும் பொழுது புலர்ந்த இன்றைய பகலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை அது மறுநாள், அடுத்த நாள் என்று ஆகிவிடுகிறது.
v முதல் நாள் மூஸா(அலை) அவர்களது இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிர்அவ்னின் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக மூஸா(அலை) அவர்களிடம் உதவி கோரினார். மூஸா(அலை) அவர்கள் ஓங்கிய ஒரு குத்தில் அவனது கதையை முடித்துவிட்டார்கள். மறுநாள் காலை வேளையில் தனக்கு என்ன நடக்குமோ என்று அச்சத்தோடு மூஸா(அலை) அவர்கள் நின்று கொண்டிருக்கையில் (28:14-19, இப்னு அப்பாஸ்(ரழி) முஜாஹித்(ரஹ்) சயீத் பின் ஜுபைர்(ரஹ்) இக்ரிமா(ரஹ்) சுயூத்தீ(ரஹ்) கத்தாதா(ரஹ்) தஃப்சீர் இப்னு கஸீர்: 6:752, 756)
v ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை மாலையில் உடல்நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை 70 ஆயிரம் வானவர்கள் அவருக்காக அருள் வேண்டி துஆச் செய்கிறார்கள், அவருக்காக சொர்க்கத்தில் பறிக்கப்பட்ட கனி வகைகள் உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அலி(ரழி), திர்மிதி : 969, அபூதாவூத், நஸயீ : ரியாளுஸ் ஸாலிஹீன் : 899)
v சஹ்ல் பின் சஅத்(ரழி) அவர்கள் கூறியதாவது கைபர் போரின் போது “நாளை” கொடியை ஒரு மனிதரிடம் கொடுப்பேன் அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வான் அவரும் அல்லாஹ்வை பொருந்திக் கொள்வார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அது நமக்கு கிடைக்குமா” அல்லது இன்னாரிடம், இன்னாரிடம் அது கொடுக்கப்படுமா? என்று மக்கள் தமக்குள் பேசிக் கொண்டவாறு அன்றைய இரவைக் கழித்தார்கள்.
v மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் அலிபின் அபீதாலிப் எங்கே? என்று கேட்டார்கள் அவர்களுக்குக் கண் வலி என்று சொல்லப்பட்டது அவர்களை (உடனே) அழைத்து வரச்சொல்லி உத்தரவிட்டார்கள். (புகாரி: 4210,3701, 3702,2942,3009,4209,2975, முஸ்லிம் : 4780)
v அபூதர்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன் அப்போது, ஒரு மனிதர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார் என்பதாகக் கேள்விப்பட்டு இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் இரகசியமாகச் சென்றடைந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூதர்ரே! நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விஷயத்தை மறைத்து வை, உனது ஊருக்குத் திரும்பிச்செல் நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உமக்கு எட்டும்போது எங்களை நோக்கி வா” என்று கூறினார்கள். அதற்கு நான் உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் இதை அவர்களுக்கிடையே உரத்துச் சொல்வேன் என்று கூறிவிட்டு கஃபாவின் வளாகத்திற்குள் பிரவேசித்து அங்கே இருந்த குறைஷிகள் மத்தியில் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும் நான் உறுதி கூறுகின்றேன் என்று கூறியவுடனேயே சூழ இருந்த குறைஷியர்கள் என்னை கடுமையாகத் தாக்கினார்கள் அங்கிருந்த அப்பாஸ்(ரழி) அவர்கள் மூலம் விடுவிக்கப்பட்ட நான் மறுநாள் காலை வந்தவுடன் மறுபடியும் அங்கே திரும்பிச் சென்று. (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி: பாகம்:4, பக்கம்:195, பாடம் 10,11,3522 உம்தத்துல் காரி)
v அனஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: வெற்றி கொள்ளப்பட்ட கைபர் போரின் போது போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட “குறைளா” மற்றும் “நளீர்” என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணை நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். கைபரிலிருந்து திரும்பி வரும் வழியில் “ஸஃபிய்யா” அவர்களை உம்மு ஸுலைம்(ரழி) அவர்கள் அலங்கரித்து மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் அன்றைய இரவில் ஒப்படைத்தார்கள் மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது படையினரிடமிருந்து சேகரிக்கப்பட்ட பேரீச்சம்பழம் நெய் மாவு போன்றவற்றை ஒன்றாகப் பிசைந்து நபி(ஸல்) அவர்களது வலீமா விருந்தாகக் கொடுக்கப்பட்டது. (புகாரி : 371)
v அபூஷிரைஹ்(ரழி) அவர்கள் கூறியதாவது மக்கா வெற்றி கொள்ளப்பட்டதற்கு மறுநாள் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு ஆற்றிய உரையை எனது இரு காதுகளும் கேட்டிருக்கின்றன என் உள்ளம் இன்றும் அதை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்கள்.
(புகாரி:104,1832, முஸ்லிம் 2633)\
v ஜாபிர்(ரழி) அவர்கள் கூறியதாவது: உஹதுப் போரை நடக்கவிருந்ததற்கு முதல் நாள் இரவு எனது தந்தை என்னை அழைத்து நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் நான்தான் முதலில் கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன் என்று கூறினார்கள். மறுநாள் போரில் அவர்தான் முதலில் ஷஹீதாக்கப்பட்டார். (புகாரி:1351)