ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2019 ஜுன்

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

 M.T.M. முஜீபுதீன், இலங்கை

2019 மே மாத தொடர்ச்சி…..

அதேபோல் பெற்றோர், அநாதைகளின் சொத்துகளை உரியவர்களிடம் ஒப்படைத்தல் பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கவனிக்கவும். அல்குர்ஆன்: 4:1 முதல் 14 வரை. மேலும் கவனியுங்கள்.

இன்னும், தாய் தந்யைரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்தி லிருந்து விகிதப்படி அதையடையும் வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம். அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்கு கொடுத்து விடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 4:33)

ஆகவே 1422 ஆண்டுகளுக்கு முன்பே, அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாம் சொத்துப் பங்கீட்டுச் சட்டம் மூலம் மக்கள் சொத்துகளை வைத்திருக்கும் உரிமைகள் பற்றி தெளிவுபடுத்தியுள்ளது.

வீண் விரயங்களைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மார்க்கம் இஸ்லாம் :

இன்று உலகில் அருமையான மூல வளங்கள் கூடியளவில் வீண் விரயமாக்கப்படுகின்றன. இதனால் ஏழைகள் மட்டுமின்றி நடுத்தரமான வருமானம் பெறுபவர்களும், சில வேளைகளில் செல்வந்தர்களும் பல பொருளாதாரப் பாதிப்புகளுக்கு உட்படுவதைக் காண்கின்றோம். இந்த வீண் செலவுகள் ஆட்சியாளர், செல்வந்தர்கள், ஏழைகள் என்ற பாகுபாடுகள் இன்றி நடைபெறுகின்றன. இதைத் தடுப்பதன் மூலமாக வீண் செலவுகளைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

உதாரணமாக ஆட்சியாளர்கள் தன் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் பல ஆடம்பரமான செலவுகளை மக்கள் பணத்தைப் பயன்படுத்திச் செய்வதைக் காண்கிறோம். இவைகளை இஸ்லாம் தடுத்துள்ளது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க் கையில் வீண் விரயங்களை குறைப்பதற்கான நேரிய வழி காட்டப்பட்டுள்ளது. தொழும் போது உளுச் செய்யும் நீரிலும் வீண் விரயம் செய்யக் கூடாது என வழிகாட்டப்பட் டுள்ளது.

இன்று மக்கள் சூது, போதைப் பொருட்கள், தீமைக்கும், குற்றங்களுக்கும் வழிகாட்டும் களியாட்ட நிகழ்ச்சிகள், ஏழைகளுக்கு எந்த நன்மைகளையும் பெற்றுத்தராத பிறந்த, இறந்த ஆடம்பர சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கையின் பேரால் பல வீண் விரயங்களை கோடிக்கணக்கில் செலவுகள் செய்து வருகின்றனர். இஸ்லாம் கஞ்சத்தனத்தை தவிர்த்து வாழ வழிகாட்டுகின்றது. அதுபோல் பெருமைக்காக மேற்கொள்ளும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும் வழிகாட்டுகிறது. அல்லாஹ் அல்குர்ஆனில் வீண் விரயம் செய்பவர்களைப் பற்றி கூறுவதை கவனியுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 6:141, 7:31)

இன்னும், உறவினருக்கு அவர்களுடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக. மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவர்களுக்குரியதைக் கொடுத்து விடு வீராக!) வீணாக பொருட்களை விரயஞ் செய்யாதீர். நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள் ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

(உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்பார்த்திருக்கும் சமயத் தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக!

(கஞ்சனைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப்பட்ட தாக்கிக் கொள்ளாதீர். அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர். அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப் பட்டவராகவும் அமைந்து விடுவீர்.
(அல்குர்ஆன்: 17:26-29)

ஆகவே வீண் விரயங்கள் செய்யாது, கஞ்சத்தனம் காட்டாது அல்லாஹ் மனிதர்களுக்கு கொடுத்துள்ள செல்வங்களை நல்லறங்களில் செலவு செய்தல் வேண்டும். அல்லாஹ் மனிதர் களுக்கு வழங்கிய செல்வங்களை மனிதர்களுக்கும், உலகிற்கும் நன்மை பயக்கும் விதமாக செலவு செய்தல் வேண்டும். இறைவன் கொடுத்த செல்வங்களை எவ்வாறு செலவளித் தீர்கள் என மறுமையில் இறைவன் விசாரிப்பான் என்பதை மறந்து விடாதீர்கள். கவனியுங்கள்.

அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களை யயல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள். ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி(வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்) (அல்குர்ஆன்: 46:20)

ஆகவே இறைவன் கொடுத்த செல்வங்களை வீண் விரயம் செய்யாது நல்ல வழிகளில் செலவு செய்து மறுமையில் வெற்றி அடைய இஸ்லாம் வழிகாட்டுகிறது. இதனால் பொரு ளாதாரம் சீர் அடைகின்றது. நல்லறங்களில் செலவு செய்தவர்களின் உவமையை அல்குர் ஆன் பின்வருமாறு கூறுகின்றது. கவனியுங்கள்.

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான் இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் யாவற்றையும் நன்கறிபவன்.

அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்கா மலும் அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. இன்னும், அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்.

கனிவான, இனிய சொற்களும், மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும் தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன் மிக்க பொறுமையாளன்.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருட்களைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்)பாழாக்கி விடாதீர்கள். அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையானது. ஒரு வழுக்குப் பாறையாகும் அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த, (தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 2:264)

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையானது. உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெருமழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பொய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது அல்லாஹ் நீங்கள் செய்வதையயல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான். உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா?

அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன (அப்போது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகின்றது. அவருக்கு (வலுவில்லாத) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன. இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் தன் அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான். (அல்குர்ஆன் : 2:26) முதல் 266 வசனம் வரை)

வறுமையைத் தவிர்க்க கடனுதவி செய்ய வழிகாட்டும் மார்க்கம் இஸ்லாம் :

இன்று உலகில் பல நாடுகளில் இருபது சதவீதமான மக்கள் எண்பது சதவீதமான செல்வங்களை திரட்டி வைத்திருக்கின்றனர். அவற்றில் புழக்கத்திலுள்ள பணம் மற்றும் நிதி சார்ந்த செல்வங்களும் பயனற்ற முறையில் பெரும் தொகைப் பணம், பொருளாதார நலன்களுக்குப் பயன்படுத்தப்படாது வீணாக தேங்கியிருக்கின்றன.

ஆனால் மறுபக்கத்தில் எளிய மக்களில் பலர் தமது வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாத வர்களாகவும், சிறு முதலீட்டாளர்கள் மூலதனப் பற்றாக்குறைகளினாலும் பல துன்பங்களுக்கு உட்பட்டவர்களாகவும் காணப்படுகின்றன. அதனைத் தவிர்க்க அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் தேவைப்படுபவர்களுக்கு உரிய நிபந்தனைகளுடன் அழகான கடன் வழங்கி உதவுவதன் மூலம் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளும்படி வழிகாட்டுகிறது, கவனியுங்கள்.

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும் எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக் கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்கவேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும் அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்.

மேலும் அ(வன் வாங்கிய)தில் எதனையும் குறைத்துவிடக் கூடாது. இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும் தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக்கூடிய) உங்களில் ஆண்களில் இருவரைச் சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவர் நினைவூட்டும் பொருட்டேயாகும் அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது தவிர (கொடுக் கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் காலவறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமாகவும், சாட்சியத்துக்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும். எனினும், உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டாலும் உங்கள் மீது குற்றமில்லை ஆனால் (அவ்வாறு) நீங்கள் வியாபாரம் செய்யும்போது சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள். அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ உங்களுக்கு (சாதகமாக இருப்தற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது நிச்சயமாக உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு(நேரிய இவ்விதி முறைகளைக்) கற்றுக் கொடுக்கிறான். தவிர, அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.  (அல்குர்ஆன் : 2:282)

Previous post:

Next post: