அந்நஜாத் நவம்பர் 2016

in 2016 நவம்பர்

நவம்பர் 2016

முஹர்ரம்-ஸஃபர் 1438

யூனிஃபோம் சிவில் கோட், பொது சிவில் சட்டம்…

நாட்டைச் சுடுகாடாக ஆக்கும் பெரும் சதித் திட்டங்களுடன் துவங்கப்பட்டுக் கடந்த ஒரு நூற்றாண்டாகச் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் எடுபிடியாகச் செயல்பட்டு வரும் பா.ஜ.க. அரசின் பிரதமர் நரபலி நரேந்திர மோடி இப்போது பொது சிவில் சட்டம் கொண்டு வரப்போவதாகப் பிதற்ற ஆரம்பித்திருக்கிறார். அது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. போகாத ஊருக்கு வழி சொல்வார்கள் என்பார்களே, அதுபோல் தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கைப்பாவையான பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

பொது சிவில் சட்டம் கொண்டு வருவது இருக்கட்டும். முதலில் இவர்களால் பொது கிரிமினல் சட்டங்களை நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடிகிறதா? தீண்டாமைச் சட்டம், ஹெல்மட் சட்டம் இன்னும் இவை போல் பல சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படுகின்றனவா? துஷ்பிரயோகம் பண்ணுவதற்கும் லஞ்சம் லாவண்யம் பெருகுவதற்கும் துணை போகின்றன என்பதை மறுக்க முடியுமா?

மத்திய அரசு நடுநிலையான, நியாயமான அரசாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஹிந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நம் நாட்டில், முதலில் அவர்களிடையே 292 சட்டங்களில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர முற்படவேண்டும். ஹிந்துக்களிடையே எண்ணற்ற ஜாதிப் பிரிவுகள். ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி சிவில் சட்டம். இவை அனைத்தையும் ஒழித்துக்கட்டி ஹிந்துக்கள் அனைவருக்கும் ஒரே பொது சிவில் சட்டம் எனக் கொண்டு வந்து, அதை நிலைநாட்டி விட்டு, பின்னர் நாலே நாலு சட்டங்களில் சிறுபான்மையினராகிய முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தில் கைவைக்க முன்வந்தாலாவது அதில் சிறிதாவது நியாயம் இருக்கும்.

நியாயமான அதைச் செய்யாமல் முஸ்லிம்களின் ­ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைக்கும் நோக்கம் என்ன? மணமுடித்த மனைவியை முறைப்படி வாழ வைக்க, உரிமைகளைக் கொடுக்க, குறிப்பாக தாம்பத்ய உறவைக் கொடுக்க வக்கில்லாத நரபலி நரேந்திரமோடி, மனைவியாகக் கொண்டு வாழவும் விடாமல், விவாகரத்துச் செய்து சுதந்திரமாக விடவும் செய்யாமல், நீண்டகாலம் கொடுமைப்படுத்தி வரும் நரபலி நரேந்திர மோடி, முஸ்லிம் பெண்களுக்கு தலாக் சட்டத்தை ரத்துச் செய்து வாழ உரிமை பெற்றுத் தருவேன் என்று பிதற்றினால் அதன் பொருள் என்ன?

பட்டப் பகலில் வெள்ளைப் பசுமாட்டைப் பார்க்க வக்கற்றக் குருடன் அமாவாசைக் கடும் இருட்டில் கருமையான எருமை மாட்டைப் பார்க்கப் போகிறான் என்றால் அதை நம்புபவர்கள் எத்தனைப் பெரிய மூடர்களாக இருப்பார்கள். குஜராத்தின் முதல் மந்திரியாக இருந்தபோது பல் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்து, பல்லாயிரம் கோடி முஸ்லிம் சொத்துக்களை நாசப்படுத்திய நரபலி நரேந்திர மோடிக்கு அதே குஜராத் ஃபார்முலாவை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த பரிசாகக் கிடைத்ததுதான் பிரதம மந்திரிப் பதவி. தனது நரபலி சேவையைக் கனக்கட்சிதமாக செய்து வருகிறார் நரபலி நரேந்திர மோடி.

ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் உட்பிரிவுகளும் ஏற்படுத்தி இருக்கும் விரோத குரோதப் போக்கை மேலும் அதிகப்படுத்தி நாட்டைச் சுடுகாடாக்கும் அதர்மத்தை வளர்க்கவே சதிகள் செய்து குறுக்கு வழியில் தங்களின் புரோகித ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்வதில் கை தேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள்.

மண்ணின் மைந்தர்களை இந்த வந்தேறி நாடோடிகள் தங்கள் அடிமைகளாக்கித் தங்களுக்குக் கொத்தடிமைகளாக ஆக்கியது போல், பெருங்கொண்ட பெயர் தாங்கி முஸ்லிம்களையும் “கர்வாபசி” என்ற பெயரால் அவர்களை மீண்டும் அவர்களின் பழைய தாழ்த்தப்பட்ட நிலைக்கு, இன இழிவிற்கு ஆளாக்கித் தங்கள் கொத்தடிமைகள் ஆக்குவதே அவர்களின் அசல் நோக்கம். முஸ்லிம்களும் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் தந்திர வலையிலும், முஸ்லிம் மதகுருமார்களின் சூன்ய பேச்சிலும் மயங்கிச் சீரழிகிறார்கள். 1940களில் முஸ்லிம்கள் பாகிஸ்தான் தனிநாடு என ஓயாது ஓலமிட்டு 1947ல் தனி நாடு பெற்றார்கள். விளைவு முஸ்லிம்களுக்குப் பாகிஸ்தானிலும் நிம்மதி இல்லை. இந்தியாவிலும் நிம்மதி இல்லை.

காஷ்மீர் முஸ்லிம்கள் இவ்வுலகிலேயே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை தான் அவர்களின் அதீத முயற்சியின் பலன்! 1986களில் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் தந்திர வலையில் சிக்கி பாபரி மஸ்ஜித், பாபரி மஸ்ஜித் என ஓலமிட்டு பா.ஜ.க.வினர் ஆட்சியில் அமரவும், பாபரி மஸ்ஜித் இடித்துத் தரைமட்டமாக்கப்படவும் வழிவகுத்துக் கொடுத்தார்கள். முஸ்லிம்கள் பல்லாயிரம் கோடி சொத்துக்களையும், பல்லாயிரம் உயிர்களையும் இழக்க வழிவகுத்தார்கள். முஸ்லிம்களின் தவறான போக்கை தெளிவுபடுத்திய எம்மை ஆர்.எஸ்.எஸ்.ஸின் கைக்கூலி என அவதூறு பரப்பினார்கள்.

இப்போதும் பாருங்கள்! இன்று இங்கு நடைமுறையில் இருக்கும் “முஹம்மடன்ஸ் லா” குர்ஆன், ஹதீஃத்படி உள்ளதா? இல்லவே இல்லை! தங்களின் வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு இவர்களின் புரோகித முன்னோர்களால் குர்ஆனுக்கும், ஹதீஃத்களுக்கும் முரணாக கற்பனை செய்யப்பட்ட பிக்ஹு சட்டங்களே “முஹம்மடன்ஸ் லா” என்ற பெயரில் இந்திய நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதில் ஹனஃபி மத்ஹபினருக்கு ஒரு சட்டம். ஷாஃபி மத்ஹபினறுக்கு ஒரு சட்டம், அஹ்ல ஹதீஃத் மத்ஹபினருக்கு ஒரு சட்டம் என்று மூன்று வித சட்டங்கள் இருக்கின்றன. ஹிந்துக்களிடம் பல வகை சிவில் சட்டங்கள் இருப்பது போல் இம்மூடமுல்லாக்கள் கற்பனை செய்து அரசுக்குக் கொடுத்த “முஹம்மடன்ஸ்லா”விலும் மூவகை சிவில் சட்டங்கள் இருக்கின்றன.

அவற்றில் மிகக் கொடுமையானது கணவன் போதையிலோ, ஆத்திரத்திலோ நேரடியாகவோ, தொலைபேசி யிலோ கடித மூலமோ தலாக், தலாக், தலாக் என்று ஒரே தடவையில் மூன்று முறை சொல்லிவிட்டால் அல்லது எழுதி விட்டால் கணவன் மனைவி உறவு முறிந்து விடும் என்பதோடு அவர்கள் மீண்டும் கணவன் மனைவியாக வாழ விரும்பினால் அவள் பிறிதொரு கணவனை மணமுடித்து அவனுடன் வாழ்ந்து அவன் தலாக் சொன்னால் மட்டுமே மீண்டும் அவளது முதல் கணவன் அவளை மணமுடிக்க முடியும் என்று சட்டம் வகுத்து வைத்திருப்பதாகும். அதனால் தான் எவன் பொண்டாட்டி எவனுடன் போனால் என்ன? லப்பைக்கு ஐந்து பணம் என்று அன்றே கூறி வைத்துள்ளனர். ஆனால் அதற்கு மாறாக குர்ஆன், ஹதீஃத் என்ன சொல்கிறது?

ஒரே நேரத்தில் 3 அல்ல, 300 அல்ல, 3000 தலாக் சொன்னாலும் அது ஒரே தலாக்தான். கணவன் மனைவி உறவு முறியாது. மூன்று மாத தவணைக்குள் அவர்கள் கூடிவிட்டால் அவர்கள் கணவன் மனைவியாக வாழலாம். மூன்று மாத தவணை முடிந்துவிட்டால் மட்டுமே கணவன் மனைவி உறவு முறிந்துவிடும். ஆயினும் மீண்டும் அவர்கள் புதிதாக மணமுடித்து கணவன் மனைவியாக வாழ முடியும். இந்த உண்மை நிலையை நீங்களே அல்குர்ஆன் அல்பகரா 2:226 முதல் 237 வரையும் 33:49, மற்றும் 12 வசனங்களைக் கொண்ட 65ம் அத்தியாயம் அத்தலாக்-விவகாரத்து என்ற பெயரிலேயே உள்ள முழு அத்தியாயத்தையும் படித்து உணர்ந்தால் தலாக்கைப் பற்றி அல்லாஹ் என்ன கூறியுள்ளான் என்பதை அறிய முடியும்.

தலாக், தலாக், தலாக் என்று ஒரே நேரத்தில், ஒரே சமயத் தில் கூறி மனைவியைப் பிரிப்பது பெரும் பாவம். பெருங் குற்றம் என்பதை எளிதாக விளங்க முடியும். மூன்று தவணைகளில் மாதவிடாய் காலம் பொறுத்திருந்து, காத்திருந்து மூன்று தலாக் சொன்னால் மட்டுமே கணவன் அம்மனைவியை மீண்டும் மனைவியாகக் கொள்ள முடியாது. அதற்குரிய நிபந்தனையை இறைவன் 2:230 இறைவாக்கில் தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளான்.

ஆக தலாக்கைப் பற்றி குர்ஆனில் இறைவன் இவ்வளவு தெளிவாக, நேரடியாக, ஆணித்தரமாகக் கூறி இருந்தும் இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு, தலாக், தலாக், தலாக் என ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொல்லி விட்டால் கணவன் மனைவி உறவு முறிந்துவிடும் என்று எந்த அடிப்படையில் சட்டம் இயற்றி வைத்திருக்கிறார்கள்? அதனால் தானே பா.ஜ.க. அரசு முத்தலாக்கைக் கிண்டல் செய்து, அது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனக் கூறி இஸ்லாமிய அசல் ஷரீஅத் சட்டத்தையே மாற்றிப் பொது சிவில் சட்டம் கொண்டுவர முனைப்புக் காட்டுகிறது.

குர்ஆன் அனுமதிக்கும் பலதார மணம் அறிவுபூர்வமானது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்துத் தருவது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்திய ஹிந்துச் சட்டம் நிலைநாட்டப்படுகிறதா? இல்லையே! மனைவி, துணைவி, வைப்பாட்டி என ஒன்றுக்கு மேல் மனைவிகளை வைத்திருப்போருக்கு நம் இந்திய நாட்டில் பஞ்சமா? மேலும் அவர்களிடம் விபச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

இங்கு சடங்குகள் செய்து திருமணம் முடிப்பது மட்டுமே அரசு அங்கீகாரம் பெற்றது. இதர துணைவி, வைப்பாட்டி போன்றோருக்கு அரசு அங்கீகாரம் இல்லவே இல்லை. அவர்களோ அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளோ அவருக்கு வாரிசாக மாட்டார்கள். இது என்ன நியாயம்? அவர்களின் பரிதாப நிலையைச் சிந்தியுங்கள். அதே சமயம் இறைவனின் வழிகாட்டல்படி ஒருவன் நாலு மனைவிகளைக் கட்டி இருந்தாலும் அந்த நால்வரும் அவர்கள் பெறும் குழந்தைகளும் சட்டப்படியே அவரது வாரிசுகளே! எது அறிவுபூர்வமானது? சிந்தியுங்கள்.

மேலும் இங்கு விபச்சாரத்திற்கு பெரும்பாலும் வழியே இல்லை. இறைவன் கொடுத்துள்ள சட்டங்களில் குறை காண்பவர்கள் ஆறறிவு படைத்த மனிதர்களாக இருக்க முடியாது. அவர்கள் மிருக ஜாதி. முஸ்லிம்களே, உலமாக்களே, நீங்கள் மார்க்கப் பணி செய்ய மத்ஹபுகளாக, தரீக்காக்களாக, இயக்கங்களாக, அமைப்புகளாக, கமிட்டிகளாகப் பல பிரிவுகளாகப் பிரியாமல் 3:102,103 இறைக் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு 22:78 அல்லாஹ் பெயரிட்டுள்ளபடி, 41:33-ல் அல்லாஹ் வழிகாட்டியுள்ளபடி நீங்கள் முஸ்லிம்களிலுள்ளவர்கள் என்று கூறிக்கொண்டு ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தாகச் செயல்பட முன்வாருங்கள். (3:103,105, 6:153,159, 21:92,93, 23:52-56, 30:32, 42:13,14) மவ்லவிகளே உங்களின் வீண் பெருமையை விட்டு, (பார்க்க:7:146)

முன்னோர்களின் கட்டுக் கதைகளான பிக்ஹு சட்டங்களை விட்டு விடுபட்டு, குர்ஆன், ஹதீஃதை மட்டும் பின்பற்றி அதன்படி நடக்கவும் அவற்றையே மக்களுக்குப் போதிக்கவும் முன்வாருங்கள். தவறினால் நீங்கள் உங்களின் அற்ப உலக ஆதாயத்திற்காகவும், உங்களின் வயிறுகளை கொடிய ஹராமான வழியில் வளர்க்கவும் முற்பட்டு 95% முஸ்லிம்களை அடிப்படை கலிமாவே தெரியாமல், குர்ஆனை நெருங்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறீர்களே அவர்கள் கர்வாப்பசி என்ற என்ற அடிப்படையில் மீண்டும் அவர்களது வலையில் சிக்க வைத்து விடுவார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என எச்சரிக்கிறோம். நீங்களும் காவியினரே என்றாகிவிடும்.

(மேலும் பார்க்க : 2:186, 7:3, 8:29,46, 18:102-106-108, 33:36,66-68, 59:7, 7:35-41, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45)

குர்ஆனின் நற்போதனைகள் :

நபிமார்களுக்குக் கிடைத்த சொல்லடிகள்…

ஏ. முஹம்மது அலி

மறு பதிப்பு 1989 நவம்பர் :

1. (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும்போதெல் லாம், அவர்கள் அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை. (51:52)

2. அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கிக் கொண்டு (மற்றவர்களால்) இவர் கற்றுக் கொடுக்கப்பட்டவர், பைத்தியக்காரர் என்று கூறினர். (44:14)

3. மூஸா(அலை), அவர்களிடம் நமது தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட சூனியமேயன்றி வேறில்லை. இன்னும் நம்முடைய மூதாதையர்களிடமும் இதைக் கேள்விப்பட்டதில்லை என்று கூறினர். (28:36)

4. ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், (மூஸாவை நோக்கி) இவர் நிச்சயமாகத் திறமை மிக்க சூனியக்காரரே என்று கூறினார்கள். (7:109, 26:34)

5. ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் அனைவரும் (மூஸாவை) இவர் பொய்யுரைப்பவர், சூனியக்காரர் என்று கூறினார்கள். (40:24)

6. (ஃபிர்அவ்ன் தன்) வல்லமையின் காரணமாக (மூஸா வைப்) புறக்கணித்து இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறினான். (51:39)

7. ஃபிர்அவ்ன் நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக்காரரே ஆவார் என்று கூறினான். (26:27)

8. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர். ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) பைத்தியக்காரர் என்று கூறினர். அவர் விரட்டவும் பட்டார். (54:9)

9. (தமூது கூட்டத்தார், ஸாலிஹ்(அலை) அவர்களை நோக்கி) நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்பட வேண்டும் அல்ல, அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் என்று கூறினர். (54:25)

10. (நூஹ்(அலை) கூட்டத்தினர்) இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை என்று கூறினர். (23:25)

11. எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை(குர்ஆனை)க் கேட்கும்போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்தி விட நெருங்குகிறார்கள். நிச்சயமாக அவர் பைத்தியக்காரர் என்றும் கூறுகின்றனர். (68:51)

12. (மக்கத்துக்) காஃபிர்களோ (நபி(ஸல்) அவர்கள்) நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே என்று கூறுகின்றனர். (10:2)

13. தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர். இவர் ஒரு சூனியக்கார பொய்யர் என்றும் காஃபிர்கள் கூறினர். (38:4)

14. ஒரு பைத்தியம் பிடித்த புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா? என்றும் கேட்டனர். (37:36)

15. அவர்கள் (உம்மை பற்றி, அவர் ஒரு) கவிஞர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழிப்பார்த்து இருக்கின்றோம் என்று கூறுகிறார்களா? (52:30)

16. அநியாயக்காரர்கள் (மூமின்களை நோக்கி) சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்றும் கூறுகிறார்கள். (25:8)

17. (நினைவூட்டும்) நெறிநூல் அருளப்பட்ட (தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர் தாம் என்று கூறினார்கள். (15:6)

18. நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்கள், இவர் (ஒரு சாதாரண) மனிதரேயன்றி வேறில்லை; உங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார் என்று கூறுகிறார்கள். இன்னும் அவர்கள், இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை என்றும் கூறுகின்றனர். மேலும் அல்ஹக்கு (சத்தியம் : அல்குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (34:43)

19. இது (அல்குர்ஆன்) பொய்யேயன்றி வேறில்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிப் புரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்போர் கூறுகின்றனர். (25:4)

20. இன்னும், அவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே, அவற்றை இவரே எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் கூறினர். (25:5)

21. இதனை (குர்ஆனை) இவர் இட்டுக்கட்டிச் சொல்கிறார் என்று கூறுகிறார்களா? (11:13)

22. (நபியே) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) நிச்சயமாக நீர் இட்டுக்கட்டப்பட்டவராக இருக்கின்றீர் என்று அவர்கள் கூறுகிறார்கள். (16:101)

23. (அல்குர்ஆன்) இவை கலப்படமான கனவுகள் இல்லை, அதனை இவரே கற்பனை செய்து கொண்டார், இல்லை, இவர் ஒரு கவிஞர்தாம் (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பியுள் ளனர்) (21:5)

24. (நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் (கூறும்படி) உம்மைத் திருப்பி விடவே அவர்கள் முனைந்தார்கள், (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மைத் தம் உற்ற நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். (17:73)

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : நாம் தொலைப் பேசியில் பேசும்போது எதிர் முனையில் கேட்பவர் ஸ்டீரியோவில் கேட்டு அதை உடனிருப்பவரும் கேட்கிறார். அவ்வாறே நாம் பேசுவதை நம் அனுமதியில்லாமல் பதிவு செய்து அதைப் பிறரிடம் போட்டுக் காட்டுகின்றனர். இவையயல்லாம் மார்க்கப்படி சரிதானா? நான் அறிந்தவரையில் இவை ஒட்டுக் கேட்பதற்கான தண்டனைக்குரிய குற்றங்களாகத் தெரிகின்றன. மறு முனையில் இன்னொருவரும் கேட்கிறார் என்பதைப் பேசுபவருக்கு தெரிவித்து விடலாம். அவ்வாறே பேசுபவரின் அனுமதியுடன் பேச்சை பதிவு செய்யலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு இவ்வழிகளைக் கையாலலாம். ஆனால் தனி நபர்கள் இப்படி செய்யலாமா? N.அப்துர்ரஹ்மான், ஹாங்காங்.

தெளிவு :   தொலைபேசியில் பேசும்போது எதிர் முனையில் இருப்பவர், மற்றவர்களும் கேட்கிறார்கள். மேலும் பேச்சு பதிவு செய்யப்படுகிறது என்று சொல்லி அனுமதி பெற்றுச் செய்யலாம். பேசுபவரிடமிருந்து மறைத்து அப்படிச் செய்வது அமானித மோசடியாகும். பெரும் பாவமாகும்.

ஐயம் : நல்லடியார்களான ஆண்களுக்கு மறுமையில் ஹூருல் ஈன்கள் கொடுக்கப்படுவார்கள் என்பது உண்மையா? உண்மையயன்றால் நல்லடியார்களான பெண்களுக்கு ஆண் ஹூருல் ஈன்கள் உண்டா? கணவனும், மனைவியும் சுவர்க்கவாசியாக இருக்கும்போது கணவன் மட்டும் ஹூருல் ஈன்களிடம் உல்லாசமாக இருந்தால் மனைவி என்ன நினைக்கக் கூடும்? இம்மையில் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்களை மறுமையிலும் அல்லாஹ் சேர்த்து வைப்பானா? S.N.பஷீர் அஹமது, திண்டிவனம், M.தவ்லத் முஹம்மது, திருப்பூண்டி, K.P.ரஷீது,U.A.E.

தெளிவு : ஹூருல் ஈன்கள் பிரச்சனை திருகுர்ஆனைக் கொண்டு நிரூபணமான ஒன்று. திருகுர்ஆனின் 44:45, 52:20, 55:72, 56:22 வசனங்கள் இதைத் தெளிவாக்குகின்றன. பெண்கள் நல்லவர்களாக இருந்து அவர்களின் கணவர்களும் நல்லவர்களாகவே இருந்தால் அவ்விருவரும் கணவன் மனைவியாகவே நீடிப்பார்கள். இவ்வுலகிலும், மறுமையிலும் இவர்கள் தான் மனைவி என்று அன்னை ஆயிஷா(ரழி)யைப் பற்றி ஜிப்ரில் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நூல் : திர்மிதி. மனைவி நல்லவளாகவும், கணவன் நரகவாசியாகவும் இருந்தால், அவளுக்கு நல்ல கணவனை அல்லாஹ் ஏற்படுத்தித் தரலாம். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் “இவரது இப்போதைய குடும்பத்தை விட நல்ல குடும்பத்தை இவருக்கு கொடுப்பாயாக! இப்போதைய துணையை விட நல்ல துணையைக் கொடுப்பாயாக! என்று இறந்தவருக்குப் பிரார்த்தனை செய்துள்ளனர். நூல் : முஸ்லிம், நஸயீ. பெண்கள் இயல்பிலேயே பல கணவர்களை பெற விரும்ப மாட்டார்கள். அதனால் ஆண் ஹூருல் ஈன்கள் அடைய அவர்கள் விரும்பமாட்டார்கள். தனக்கு கிடைக்க வேண்டிய சொத்துரிமை, வசதி வாய்ப்பை சக்களத்தி பகிர்ந்து கொள்ளக் கூடும் என்ற அச்சத்திலேயே பெண்கள் தம் கணவர் மறுமணம் செய்வதை விரும்புவதில்லை. அந்த காரணங்கள் சுவர்க்கத்தில் இராது. அதனால் பொறாமையும் கிடையாது.

ஐயம் : என் தந்தையின் உடன் பிறந்த அண்ணன் அல்லது தம்பி மகளையோ அல்லது என் தாயின் சகோதரியின் மகளையோ நான் நிக்காஹ் செய்து கொள்ளலாமா? அப்துல்லாஹ், நாகூர்.

தெளிவு : தாராளமாகச் செய்யலாம், குர்ஆன் (அன்னிஸா அத்தியாயத்தில்) 4:23ல்யார் யாரை மணமுடிக்கக் கூடாது என்று அல்லாஹ் வரையறுத்து விட்டான்.அந்த உறவுகளில் நீங்கள் குறிப்பிட்டது இல்லை. ஹதீஃதுகளிலும் தடையில்லை. இதுபோன்ற திருமணங்கள் சர்வ சாதாரணமாக நபி தோழர்கள் வாழ்வில் நடந்துள்ளன.

ஐயம் : யூத கிறிஸ்தவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், அப்படிச் செய்பவர்கள் அவர்களில் ஒருவராக ஆகிவிடுகிறார் என்று அல்குர்ஆன் 5:51வது வசனம் குறிப்பிடுகின்றது? மதச்சார்பற்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் எவ்வாறு இதைக் கடிப்பிடிப்பது? K.H.முஹம்மது முபாரக், ஜித்தா.

தெளிவு : இந்த குர்ஆன் வசனத்திற்கு விளக்கமாக இன்னும் சில வசனங்கள் இருக்கின்றன. இதைக் கவனிக்காததால் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்கள் தவறாக எண்ணுகின்றனர். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போருக்கு வராத உங்கள் ஊர்களிலிருந்து உங்களை (விரட்டி) அப்புறப்படுத்தாதவர்களுக்கு நல்லுதவி செய்வதையும், அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்கு தடுக்கவில்லை. (அல்குர்ஆன்: 60:89,90) இந்த இறை வசனம் மிகத் தெளிவாக இஸ்லாத்தில் நிலையை விளக்குகின்றது. நம்முடன் வலிய மார்க்க விஷயத்தில் போர் புரிபவர்களையும் நமது சொந்த இல்லங்களிலிருந்து விரட்டி அடிப்பவர்களையும் தான் பகைவர்களாகக் கருதுகிறது. உனது பெற்றோர் இருவரும், எனக்கு இணை வைக்கும்படி வலியுறுத்தினால், அந்த விஷயத்தில் அவர்களுக்கு நீ கட்டுப்படாதே! இந்த உலகில் அவ்விருவருடனும் நல்ல தோழமையுடனும் நடந்துகொள்! (அல்குர்ஆன் 31:15) என்ற வசனமும் நீங்கள் சுட்டிக்காட்டிய வசனத்திற்கு சரியான விளக்கமாகும். அவர்களுடன் நாம் கொள்கின்ற நட்பு நமது கொள்கையை விட்டுக் கொடுப்பதாக அமையக் கூடாது.

ஐயம் :   திருமணம் ஆகி (கணவருடன் உள்ள) பெண் தலையில் பூ வைத்துக் கொண்டு தொழலாமா? M. ஹைதர் அலிகான், நம்புதாளை.

தெளிவு : பள்ளிவாசலுக்கோ, வெளியிடங்களுக்கோ புறப்பட்டுச் செல்லும்போது தான் இதற்குத் தடை உள்ளது. வீட்டில் நறுமணப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள தடை எதுவுமில்லை. உங்களில் எவரேனும் பள்ளிக்குச் சென்றால் நறுமணத்தின் பக்கம் நெருங்க வேண்டாம்! என்பது நபிமொழி. அறிவிப்பவர் : ஜைனப்(ரழி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, இப்னு மாஜா,திர்மிதீ.

ஐயம்:   சாப்பிடும்போது சோறு வீணடிக்கப்பட்டால் அன்ன முஹம்மதை வீணாக்காதே என்கிறார்களே! அன்ன முஹம்மது என்பதற்கும் சாப்பாட்டிற்கும் என்ன பொருத்தம்? M. ஹாலுதீன் சார்ஜா, U.A.E.

தெளிவு : ஆமாம்! அப்படித்தான் பல பகுதிகளில் சொல்கிறார்கள், சாப்பாட்டையோ, மற்ற பொருட்களையோ வீணாக்க கூடாது என்பது உண்மை. சாப்பாட்டுக்கு அன்ன முஹம்மது என்பதுதான் ஏனென்று புரியவில்லை. அன்ன முஹம்மது அரபிச் சொல்லாக இருந்தால், நிச்சயமாக முஹம்மது என்று பொருள். அன்னம் முஹம்மது என்பது தமிழ் என்றால் சோறு, முஹம்மது என்பது பொருள். ஒன்றும் பொருத்தமாகப்படவில்லை. பேசாமல் சோற்றை வீணாக்க வேண்டாம் என்று கூறி விடலாம்.

ஐயம் : கோபத்தில் அல்லாஹ், ரசூல் மேல் ஆணையாக இன்னாருக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டேன். இதன் பரிகாரம் என்ன? A.M.அப்துல் காதிர், K.K.நகர், மதுரை.

தெளிவு : நீங்கள் இரண்டு தவறுகள் செய்து விட்டீர்கள், அல்லாஹ்வின் மீது மட்டும் சத்தியம் செய்ய வேண்டும். ரசூலின் மீதோ மற்ற எவர் மீதோ சத்தியம் செய்யக் கூடாது. எவன் அல்லாஹ் அல்லாத மற்றவரைக் கொண்டு சத்தியம் செய்கிறானோ அவன் இணை வைத்து விட்டான் என்பது நபிமொழி. நூல்:திர்மிதீ. முதலில் இந்தத் தவறுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடிக்கொள்ளுங்கள். உங்களில் (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவி செய்ய) இயல்புடையோரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். அதனை மன்னித்து பொருட்படுத்தாது விட்டுவிடவும்) அல்குர்ஆன்:24:22 நீங்கள் நற்கருமங்கள் செய்வதற்கோ, இறையச்சம் உடையவர்களாக ஆவதற்கோ மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கோ, உங்களின் சத்தியங்களில் அல்லாஹ்வை தடையாக ஆக்காதீர்கள். அல்குர்ஆன் : 2:224.

அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக ஒருவருக்கு உதவி செய்வதற்கு தடையாக அல்லாஹ்வை ஆக்கி விட்டீர்கள். அல்லாஹ் அப்படிச் செய்யக் கூடாது என்று நமக்கு போதனை செய்கிறான். இந்த நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வின் திருத்தூதர் அதனை தெளிவாக விளக்குகின்றார்கள். அப்துர் ரஹ்மானே! நீ ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, அதை விட வேறொரு காரியத்தை சிறந்ததாகக்கருதினால், அந்தச் சிறந்ததையே செய்! (உன் சத்தியத்தை செயல்படுத்தாதே! எனினும் சத்தியத்தை முறித்து விட்டதற்காக பரிகாரம் செய்து விடு என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம். இந்த நபிமொழியின் அடிப்படையில் நீங்கள் உங்கள் சத்தியத்தை செயல்படுத்தக் கூடாது. மாறாக எவருக்கு உதவி செய்வதில்லை என்று சத்தியம் செய்தீர்களோ அவருக்கு ஏதேனும் ஒரு உதவி செய்து விடுங்கள். உங்கள் சத்தியத்தை இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் முறித்து விட வேண்டும்.

அவ்வாறு முறித்ததற்கான பரிகாரத்தையும் நீங்கள் செய்ய வேண்டும். அதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். சத்தியத்தின் பரிகாரமாவது நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து வரும் ஆகாரத்தில் நடுத்தரமானதை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும்! அல்லது ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இதற்கான வசதியை) ஒருவன் பெற்றிருக்காவிட்டால் மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும். இதுதான் நீங்கள் சத்தியம் செய்து (அதை முறிக்கும் போது) சத்தியத்தின் பரிகாரமாகும். அல்குர்ஆன்: 5:89 இந்திறைக் கட்டளைப்படி உங்கள் சத்தியத்தை முறிக்கும்போது பரிகாரம் காண வேண்டும். இதுவரை கூறியதன்

விளக்கம் :

1. அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.

2. நல்ல காரியங்கள் செய்வதாக சத்தியம் செய்தால் அதை நிறைவேற்ற வேண்டும்.

3. நல்ல காரியங்கள் செய்வதில்லை என்று சத்தியம் செய்தால் அந்த சத்தியத்தை செயல்படுத்தக் கூடாது. முறிக்க வேண்டும். அதற்குரிய பரிகாரத்தையும் செலுத்த வேண்டும்.

4. பத்து ஏழைகளுக்கு நடுத்தரமான உணவு அளிக்க வேண்டும் அல்லது பத்து ஏழைகளுக்கு நடுத்தரமான உடையளிக்க வேண்டும். (அடிமை முறை இப்போது இல்லை) இவ்விரண்டுக்கும் வசதியற்றவர்கள் மூன்று நோன்பு நோற்க வேண்டும்.

ஐயம் : எனது எண்ணம் நிறைவேறினால் 30 நோன்பு வைப்பதாக நேர்ச்சை செய்தேன். எண்ணம் நிறைவேறியது. இதுபற்றி ஆலிம் ஒருவரிடம் கேட்டேன். நோன்பு வைப்பதாக நேர்ச்சை செய்தால் 3 நோன்பு தான் வைக்க வேண்டும். அதற்கு மேல் வைக்க அனுமதி இல்லை என்று அவர் கூறிவிட்டார். அவர் கூற்றுப்படி 27 நோன்புகளை நான் நோற்கவில்லை. நான் குற்றவாளியா? நதீம் அஹமது, ஆம்பூர்.

தெளிவு : யாரேனும் அல்லாஹ்வுக்கு வழிபடுகின்ற விஷயங்களில் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றட்டும் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : புகாரி, அபூதாவூது, திர்மிதி, இப்னு மாஜா, தஸயீ, அஹ்மத். அல்லாஹ்வுக்கு விருப்பமான நோன்பை நோற்பதற்காக நேர்ச்சை செய்துள்ளீர்கள். அதைக் கட்டா யம் நிறைவேற்ற வேண்டும். 30 நோன்பையும் நீங்கள் நிறைவேற்றியே ஆகவேண்டும். நேர்ச்சையை நிறைவேற்ற இயலாமல் போனால் அதாவது 30 நோன்பு நோற்க உங்களுக்கு சக்தி இல்லாது போனால் அந்த நேர்ச்சைக்கு வேறு பரிகாரம் காண வேண்டும். நேர்ச்சை(யை நிறைவேற்ற இயலாதபோது) அதன் பரிகாரம், சத்தியத்தை முறிக்கும்போது உள்ள பரிகாரமாகும் என்பது நபிமொழி (நூல் : முஸ்லிம்) உங்களால் உண்மையிலே 30 நோன்பை நோற்க முடியாதபோது நடுத்தரமான உணவில் 10 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது 10 ஏழைகளுக்கு ஆடை அளிக்க வேண்டும். இவ்விரண்டிற்கும் இயலாவிட்டால் மூன்று நோன்பு நோற்க வேண்டும். உங்களுக்குச் சக்தி இருக்குமானால் நீங்கள் நேர்ச்சை செய்து கொண்டபடி 30 நோன்பையும் நோற்க வேண்டும். இயலாவிட்டால் பத்து ஏழைகளுக்கு உணவோ, உடையோ அளிக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் தான் கடைசி பட்சமாக 3 நோன்பை நோற்க வேண்டும். பாவமான காரியங்கள் செய்வதாகவோ, அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்கோ நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றக் கூடாது. அதற்கு பரிகாரமும் செய்ய வேண்டியது இல்லை.

ஐயம் : தனது உடன் பிறந்த சகோதரி மகளை மணம் செய்த ஒரு மாற்று மத தம்பதியினர் முஸ்லிமாக மாறினால் அவர்களின் திருமணம் உறவு தொடருமா? முறியுமா? S.M. நாசர், தேங்காபட்டினம்.

தெளிவு :   திருமணம் செய்து கொள்ளத் தகாத உறவுகளை அல்லாஹ் திருமறையில் 4:23 வசனத்தில் கூறும்போது சகோதரியின் மகள்களும் ஹராமாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறான். எக்காரணத்தினாலும் சகோதரியின் மகளை ஒருவன் மணம் புரியக் கூடாது. இஸ்லாத்தை அவர்கள் தழுவினாலும் அந்த உறவு தொடரக் கூடாது, உடனடியாக அவர்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும். குர்ஆனில் அல்லாஹ் இடுகின்ற கட்டளையை ஏற்கிறேன் என்பதையும் உள்ளடக்கித்தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவுகிறான். குர்ஆனுடைய இந்தக் கட்டளைகளையும் ஏற்றே ஆக வேண்டும். மூமின்களே! நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள் (அல்குர்ஆன் 2:28) என்று அல்லாஹ் ஆணையிடுகிறான். யூதர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தைத் தழுவும்போது சனிக்கிழமையைத் தாங்கள் புனித நாளாகக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அதை நிராகரிக்கும் விதமாகவே இந்த வசனம் இறங்கியது (இப்னு கஸீர்) இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டு அதில் இணைபவர்கள் தான் இஸ்லாத்திற்கு வேண்டும். அவர்கள் கடந்த காலங்களில் கணவன், மனைவியாக வாழ்ந்த தவறான உறவை அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் அந்தத் தவறு தொடர்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

ஐயம் : நல்லடியார்கள், கியாம நாளில் தம் உறவினர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுமா?

தெளிவு : நல்லடியார்கள், தம் உறவினர்களைப் பார்க்க விரும்பினால் அனுமதிக்கப்படுவார்கள். சுவனத்தில் அவர்களின் உள்ளங்கள் விரும்பக் கூடியவை உண்டு. (அல்குர்ஆன்: 41:71) உங்கள் உள்ளங்கள் விரும்பக் கூடியதெல்லாம் அதில் உங்களுக்கு உண்டு. (அல்குர்ஆன்: 41:31) இந்த இரண்டு வசனங்களும், சுவனவாசிகளின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று உத்திரவாதம் தருகின்றன. மற்ற நரகவாசிகளை சுவனத்தில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினால் அது நிச்சயம் ஏற்கப்படும் என்று உத்திரவாதம் இல்லை; தங்கள் விஷயத்தில் விரும்பக்கூடிய அனைத்தும் சுவனவாசிகளுக்குக் கிடைக்கும்.

ஐயம் : தொழில் செய்ய யாரும் கடன் தர மறுக்கின்ற நிர்பந்தமான நிலையில் பேங்கில் வட்டி வாங்கலாமா? A.ஸையத் இப்றாஹீம், உத்தபாளையம்.

தெளிவு : கூடாது, தொழில் செய்ய யாரும் கடன் தர மறுத்தால் தொழில் செய்யாதீர்கள், வேறு வழியில் லையா? ஏதேனும் ஸ்தாபனத்திலோ கடையிலோ பணிபுரியலாம். தொழில் செய்ய வாய்ப்பு இல்லை என்பது நிர்பந்தம் ஆகாது. ஹலாலான முறையில் வாழ்வதற்கு வேறு வழியே இல்லை. வட்டி வாங்கினால் தான் உயிர் வாழலாம் என்ற நிலை ஏற்படுமானால் அதை நிர்பந்தம் எனலாம். யாரும் உங்களுக்கு கடன் தர மறுப்பதால் நீங்கள் முதலாளியாக முடியாது. அவ்வளவுதான், வாழ முடியாது என்பதில்லை.

ஐயம் : வெள்ளிக்கிழமை பெருநாள் வந்து, பள்ளியில் இரண்டு குத்பா நிகழ்ந்தால், தலைவர்கள் மரண மடைவார்கள் என்று கூறுகிறார்களே! அது உண்மையா?
A.அஷ்ரப் அலி, நிரவி.

தெளிவு : உண்மையில்லை, நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே வெள்ளிக்கிழமை பெருநாள் தொழுகை வந்துள்ளது. இரண்டு குத்பாவும் நடத்தியுள்ளனர். இன்று உங்களுக்கு இரு பெருநாட்கள் வந்துள்லன. (அதாவது ஜுமுஆவும், பெருநாளும் ஒரே தினத்தில் வந்துள்ளது) யாரேனும் ஜுமுஆ தொழாமல் இருக்க விரும்பினால், ஜுமுஆவுக்கும் சேர்த்து இந்தப் பெருநாள் தொழுகை போதுமானது. நான் ஜுமுஆவையும் தொழ இருக்கிறேன் என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : அபூதாவூத்.

ஐயம் : குழந்தையில்லாத முஸ்லிம் தம்பதியினர், அனாதை இல்லங்களிலிருந்து குழந்தையை எடுத்து வளர்க்கலாமா? தத்து எடுக்கும் குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது என்று தெரியாதபோது, வளர்க்கும் தம்பதியின் நிலை என்ன? R.ஹபீப் முஹம்மது, KP.O.854, துபை.

தெளிவு : நானும் அனாதைகளுக்குப் பொறுப்பேற்பவனும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று சொல்லி நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் (V வடிவத்தில்) உயர்த்திக் காட்டினார்கள். நூல் : புகாரி, அபூதாவுது, திர்மிதி. இந்த நபிமொழியிலிருந்து அனாதைகளை வளர்க்கலாம் என்றும், அது அண்ணலாரின் அருகாமையைப் பெற்றுத் தரக்கூடிய மிகச் சிறந்த செயல் என்றும் தெரிகின்றது.

ஆனால் எடுத்து வளர்த்த காரணத்தால் அவன் மகனாகிவிட முடியாது. அதாவது பெற்ற மகனுக்குக் கிடைக்க கூடிய சொத்துரிமை வளர்ப்புத் தந்தையின் சொத்தி லிருந்து இவனுக்குக் கிடைக்காது. பெற்ற மகனாக இருந்தால், பெற்றோர் வழி உறவு முறையில் யாரையயல்லாம் மணமுடிப்பது தடுக்கப்பட்டுள்ளதோ அந்தத் தடை வளர்ப்பு மகனுக்கு இல்லை. இதைப் பின்வரும் திருகுர்ஆன் வசனங்கள் தெளிவாக்குகின்றன.

உங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளை உங்களின் புதல்வர்களாக (அல்லாஹ்) ஆக்கவில்லை. இவை யாவும் உங்கள் வாய்களால் சொல்லும் வார்த்தைகளேயாகும். (அல்குர்ஆன் : 33:4) விசுவாசிகளால் வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவகாரத்துச் செய்துவிட்டால் அவர்(களை வளர்த்தவர்)கள், அப்பெண்களை மணந்து கொள்ள யாதொரு குற்றமும் இல்லை என்பதற்காக ஸைத் (என்ற உமது வளர்ப்பு மகன்) அவளிடமிருந்து தன் தேவையை முடித்துக் கொண்டபோது (அதாவது விவகாரத்துச் செய்த போது) அவளை நாம் உமக்கு மணமுடித்து வைத்தோம். (அல்குர்ஆன் : 33:37)

இந்த வசனத்தில் நபி(ஸல்) அவர்களால் வளர்க்கப்பட்ட ஸைத் (ரழி) என்பவர் அவரது மனைவியை விவாகரத்துச் செய்த பின்னர், அந்தப்பெண்ணை நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வே மனைவி ஆக்குகிறான். இதிலிருந்து பெற்ற மகன் மூலம் ஏற்படும் திருமணத் தடைகள் வளர்ப்பு மகன்களுக்கு இல்லை என்று கூறலாம். மேலும், உண்மையில் அவனைப் பெற்ற தந்தை, யாரோ அவரது மகன் என்றே குறிப்பிடவும் வேண்டும். வளர்ப்புத் தந்தையின் மகன் என்று குறிப்பிடவும் கூடாது.

இதைப் பின்வரும் ஹதீஃத் விளக்குகின்றது. அவர்கள் (வளர்ப்புப் பிள்ளைகள்) அவர்களின் (பெற்ற) தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள் என்ற குர்ஆன் வசனம் (33:5) இறங்கும் வரை முஹம்மதின் மகன் ஸைது என்றே நாங்கள் குறிப்பிட்டு வந்தோம். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) நூல் : புகாரீ. அடுத்து எல்லா மக்களையும் இஸ்லாத்தின்பால் அழைக்கும் கடமை நமக்கு உண்டு. அந்த அடிப்படையில் நாம் எடுத்து வளர்க்கும் குழந்தையை இஸ்லாத்தின் அடிப்படையிலேயே வளர்க்க வேண்டும்.

ஐயம் : ஹஜருல் அஸ்வத் கருப்புக் கல் ஆதம்(அலை) கொண்டு வந்ததா? A.M.அப்துல் காதிர், மதுரை.

தெளிவு : ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து உலகுக்குக் கொண்டு வரப்பட்ட பொருள் என்று மட்டுமே அறிய முடிகின்றது. யார் கொண்டு வந்தார்கள் என்று இல்லை.

ஐயம் :   சிலர் எரிந்து சாம்பலாகி விடுகின்றனர். இது போன்றவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி இருக்கும்? A.G.M. ரபீக், மதுக்கூர்.

தெளிவு : அல்லாஹ்வின் ஆற்றலை அவனது வல்லமையை அறிந்து கொண்டவர்கள், இதிலெல்லாம் ஆச்சரியப்படமாட்டார்கள். உங்கள் கேள்விக்குப் பின்வரும் ஒரு குர்ஆன் வசனமே போதுமானது. எலும்புகள் மக்கிப் போய்விட்டபின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்? என்று (மனிதன்) கேட்கிறான். முதல் முறையில் அவற்றை உண்டு பண்ணியவனே, (மீண்டும்) அவற்றிற்கு உயிர் கொடுப்பான்; எல்லா வகை படைப்புகளையும் அவன் நன்கு அறிந்தவன் என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன்ச 36:78,79)

இன்றைய அரபி மதரஸாக்கள்…

ஓர் ஆய்வு!

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு : செப்.- அக்.1990

அரபு மதரஸாக்கள் என்றவுடன் மக்களின் உள்ளங்களில் நபி(ஸல்) அவர்களது காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தைப் பேணிப் பாதுகாத்து வரும் உன்னத அமைப்புகள், சமுதாயத்தின் ஜீவ நாடி. இந்த மதரஸாக்களிலிருந்து பெறப்படும் மார்க்கத் தீர்ப்புகள் தான் (ஃபத்வா) இறுதி முடிவு. அவற்றிற்கு அப்பீலே இல்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது. அப்படி ஒரு மாயத்தோற்றத்தை இந்த மவ்லவிகள் உண்டாக்கி வைத்துள்ளனர்.

மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் :

ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்தியாவில் காணப்படும் பெரும்பாலான மதரஸாக்கள் கடந்த 80 வருடத்திற்குள் உருவாக்கப்பட்டவையே. இந்தியாவில் ஆரம்ப மதரஸா என்று சொல்லப்படும் தேவ்பந்த் மதரஸாவே 1866-ல் உருவானதுதான். அதற்குப் போட்டியாக ´ர்க்கையும், பித்அத்துகளையும் கொள்கையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது பரேல்வியிலுள்ள மதரஸாவாகும். தமிழகத்தின் தாய் மதரஸா என்று அழைக்கப்படும் வேலூர் பாக்கியாத் துஸ்ஸாலிஹாத் ஆரம்பிக்கப்பட்டது. 1885-ல் ஆகும். இப்படி விரல் விட்டு எண்ணப்படும் சில மதரஸாக்களைத் தவிர எஞ்சிய அனைத்து மதரஸாக்களும் உருவானது கடந்த 80 ஆண்டுகளுக்குள்தான் என்று உறுதிபட சொல்ல முடியும்.

ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் :

அடுத்து இந்த மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை ஆராயும்போது ஒருசில மதரஸாக்கள் ஒருசிலரால் நல்லெண்ணத்துடனும் சமுதாய நலன் கருதியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், குர்ஆன், ஹதீஃதை நிலைநாட்டும் தூய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையல்ல. எப்படி மாற்று மதங்களிலுள்ள சமுதாய நலன் கருதுவோர் நல்லெண்ணத்துடனும், குருட்டு பக்தியுடனும் தங்கள் வழிகாட்டிகள், ஆசிரியர்கள் போதித்துத் தந்த இறைவனுக்கு இணை வைக்கும் அவதார நம்பிக்கை திரியேகத்துவ நம்பிக்கை இவற்றை அடிப்படையாகக் கொண்டு சேவையாற்றி வருகின்றனரோ, அதே போல இவர்களும் இவர்களது வழிகாட்டிகள் உஸ்தாதுகள் (ஆசிரியர்கள்) போதித்துத் தந்த தக்லீதையும் மனிதன் இறைவனுடன் இரண்டர கலக்க (அத்வைதம்) முடியும் என்ற ஷிர்க்கான கொள்கையையுடைய சூஃபிஸத்தையும் அடிப்படையாகக் கொண்டு சேவையாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு சமுதாய நலனில் அக்கறை இருந்தாலும், மக்களை நேரான வழியில் இட்டுச் செல்லும் ஆர்வமும நல்லெண்ணமும் இருந்தாலும், இவர்கள் தங்கள் முன்னோர்கள், வழிகாட்டிகள், ஆசிரியர்கள் முதலானோர்கள் மீது கொண்டுள்ள அபாரமான குருட்டு நம்பிக்கை இவர்களை குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான கொள்கைகளை ஏற்றுச் செயல்படச் செய்கிறது. இந்த வகையில் மாற்று மதங்களின் அறிஞர்களுக்கும், இவர்களுக்கும் வேற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. மாற்று மத அறிஞர்கள் அவதாரக் கொள்கையில் நம்பிக்கை உடையவர்களாகவும், திரியேகத்துவக் கொள்கையில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், இவர்களை அப்படிப்பட்ட நம்பிக்கை உடையவர்கள் என்று நாம் சொல்லவில்லை.

ஆயினும் இவர்கள் நம்பிக்கை வைத்துள்ள இமாம்கள், ஷெய்குகள், உஸ்தாதுகள் முதலானோர்களின் சில கூற்றுகள் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணாக இருப்பது மிகத் தெளிவாகத் தெரிந்தாலும் அந்த நாதாக்கள் எல்லாம் தவறு செய்திருக்க முடியுமா? என்ற குருட்டு நம்பிக்கையில் அவர்களின் அந்தத் தவறான செயல்களையும் மார்க்கமாக இவர்கள் நம்பிச் செயல்படுவதோடு மக்களுக்கும் முறையே அவற்றை மார்க்கமாக இந்த மதரஸாக்களில் போதிக்கின்றனர்.

தவறு செய்யாதத் தனித்தன்மை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அதனை நபிமார்களுக்கோ, நபிதோழர்களுக்கோ, இமாம்களுக்கோ வேறு எந்த மனிதருக்கோ சொந்தப்படுத்த முடியாது என்பதைப் புரியாமல் செயல்படுகிறார்கள். மனித வர்க்கம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வகையில் ஆரம்பத்திலிருந்து செய்துவரும் பெரும் தவறையே இவர்களும் செய்து வருகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக தங்கள் மதகுருமார்கள், துறவிகள் கூறிய கூற்றுக்களை மார்க்கமாக எடுத்துச் செயல்பட்டு அவர்களை தங்கள் இறைவனாக ஆக்கிக் கொண் டது போல இவர்கள் தங்கள் இமாம்களையும், ஷைகுகளையும் இறைவனாக ஆக்கி, குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்ட அவர்களின் கூற்றுக் களையும் மார்க்கமாக்கிச் செயல்படுகின்றனர் (பார்க்க:9:31) தக்லீதும், தஸவ்வுஃபும் இந்த அடிப்படையிலானவையே. ஆயினும் இந்த அறிஞர்கள் இவை இரண்டிலும் பிடிவாதமாகவே நடந்து வருகின்றனர்.

அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றனரா? (42:21)

அல்லாஹ்வுக்கல்லாது ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. (6:57,62, 12:40,57)

இந்த குர்ஆன் வசனங்களை அவர்கள் விளங்கிச் செயல்படுவதாகத் தெரியவில்லை. மாறாக மாற்று மத அறிஞர்களிடையே தங்கள் முன்னோர்கள் மீது காணப்படும் மூடப் பக்தியே இவர்களிடமும் காணப்படுகிறது என்றே சொல்லுகிறோம்.

தப்லீஃ பணியில் ஈடுபட்டு அதன் மூலம் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சமுதாய நலன் கருதியே மதரஸாக்களைத் தொடங்கியவர்களும் இந்த தவறான போக்கிலிருந்து விடுபட்டவர்களாக இல்லை.

எவர்கள் மெய்யாகவே விசுவாசங்கொண்டு தங்கள் விசுவாசத்துடன் (யாதோர்) அக்கிரமத்தையும் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு, அவர்கள் தான் நேரான வழியிலும் இருக்கின்றனர். (6:82)

அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு மாறாகத் தங்களை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு தங்கள் விசுவாசத்தில் அக்கிரமத்தைக் கலக்கின்றனர். தங்கள் முன்னோர்கள் மீதுள்ள குருட்டு பக்தியால் அல்லாஹ்வின் சொல்லைவிட தங்கள் முன்னோர்களின் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதே தவறையே கிறிஸ்தவர்கள் செய்கின்றனர். அதனையே தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் அல்லாஹ்வாக ஆக்கிவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க : 9:31)

ஆக மதரஸாக்களைத் தொடங்கியவர்களில் சிலரின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், கொள்கையில் கோளாறு இருக்கும் நிலையில், எஞ்சியவர்களின் நோக்கமும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. தமிழகத்தில் பல மதரஸாக்களின் தொடக்கத்தை உற்று நோக்கும்போது இது புலனாகின்றது. ஒரு மதரஸாவில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கும் நிர்வாகஸ்தர்களுக்குமோ அல்லது தலைமை ஆசிரியருக்குமோ கருத்து மோதல்கள் ஏற்பட்டு தகராறு முற்றி இறுதியில் வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டால் உடன் இவர்கள் ஏதாவதொரு ஊரில் 10 அல்லது 15 மாணவர்களை வைத்துக் கொண்டு புதியதொரு மதரஸாவை ஆரம்பித்து விடுவார்கள்.

ரசீது புத்தகங்களை அச்சடித்துக் கொண்டு ஊர் ஊராக வசூலுக்குக் கிளம்பி விடுவார்கள். முஸ்லிம் சமுதாய மக்களும் தாங்கள் மார்க்கத்திற்குப் பெரிதும் உதவுவதாகக் கருதிக் கொண்டு தாராளமாக இவர்களுக்குப் பொருள் உதவி செய்து வருகிறார்கள். அதாவது தங்கள் இவ்வுலக வாழ்க்கைத் தேவைகளுக்காக மதரஸாக்களைத் தொடங்குகின்றனர். இப்படி பல மதரஸாக்கள்.

மவ்லூது ஓதுவதற்கென்றே மதரஸாக்கள் :

மவ்லூது ஓதுவதை நபி(ஸல்) அவர்கள் மீது சொரியப்படும் புகழாகக் கருதிக் கொண்டு அதனை பக்தி சிரத்தையோடு ஓதுவதற்கு ஆட்கள் தேடி அலைய வேண்டியதில்லை என்ற நல்ல(?) நோக்கத்தோடு சில மாவட்டங்களில் பல மதரஸாக்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதாவது மவ்லூது ஓதுவதற்கென்றே மதரஸாக்கள். இதுபோல் மதரஸா ஒன்றை தொடங்கிய செல்வந்தர் ஒருவர் ராதிபு ஓதுவதற்கு மாணவர்கள் தேவை என்ற நோக்கத்திற்காகவே மதரஸா தொடங்கியதாகப் பெருமைப்பட ஒரு மவ்லவியிடமே கூறி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஆக இப்படித்தான் தமிழகத்தின் பெரும்பாலான மதரஸாக்கள் தொடங்கப்பட்டுள்ளன. நோக்கமே இப்படி இருக்கும்போது, அவற்றிலிருந்து பெறப்படும் பலன் எவ்வாறு இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மதரஸா செல்லும் மாணவர்களின் நிலை:

மதரஸாக்கள் தொடங்கப்பட்ட நோக்கம் இவ்வாறு இருக்க அவற்றில் ஓதப்போகும் மாணவர்களின் (சில வருடங்களுக்குப் பின் மவ்லவிகள்) நிலையைப் பற்றி அடுத்துப் பார்ப்போம். அவர்களில் பெரும்பாலோர் பள்ளிக்கூடங்களில் பலமுறை ஃபெயிலாகி, இனி இவனுக்குப் படிப்பு ஏறவே ஏறாது. வேறு போக்கே இல்லை என்ற நிலைய வரும்போது தான் இந்த அரபி மதரஸாக்களின் ஞாபகமே வரும். அப்படிப்பட்ட பிள்ளைகளையே இந்த மதரஸாக்களுக்கு அனுப்பி வைப்பர் பெற்றோர்கள்.

பொதுவாகக் கல்வி நிலையங்களில் காணப்படும் ஆற்றலுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பரீட்சை முறை எதுவும் இம்மதரஸாக்களில் இல்லை. காரணம் இம்மதரஸாக்கள் மக்கள் தரும் தர்மத்தைக் கொண்டு (மார்க்க முரணான சாராயம், வட்டி, லாட்டரி போன்ற தொழில்களைக் கொண்டு பொருளீட்டுபவர்களிடமும் எவ்வித கூச்சமும் இல்லாமல் வசூல் செய்வது தனி விஷயம்) நடத்தப்படுவதால், அந்த மக்களிடம் காட்டும் அளவுக்குத் தலைகள் இருந்தால் போதும், திறமை சாலிகளைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் அது சாத்தியமில்லை என்பது ஒரு பக்கம்.

மறுபக்கம் கல்லூரிகளில் போய் படிப்புக்குப் பணம் கட்டி, சாப்பாட்டுக்கும் தங்கவும் பணம் கட்டிப் படிக்கும் நிலை இல்லை. அப்படி ஒரு நிலை இருக்குமானால் யாரும் இந்த மதரஸாக்களை எட்டியும் பார்க்கமாட்டார்கள். அப்படிப்பட்ட தரமான(?) பாடத் திட்டத்தையே இம்மதரஸாக்கள் கொண்டுள்ளன. இதனை நாம் அக்டோபர் இதழில் “ஸில்ஸிலயே நியாமிய்யா’ என்ற தலைப்பில் விளக்கியுள்ளோம்.

எனவே இந்த மதரஸாக்களில் எப்படிப்பட்ட மாணவர்கள் ஓத வருகிறார்கள் தெரியுமா? சுருக்கமாகச் சொல்லுவதாக இருந்தால் ஓசிச் சாப்பாடும் உறைவிடமும் கிடைப்பதால் பயனில்லாத படிப்பைப் படிக்க வேறு போக்கில்லாத மாணவர்களே வருகிறார்கள். திறமையுள்ள மாணவர்கள் டாக்டர் என்ஜினியர் மற்றும் பட்டப்படிப்புகளுக்குச் சென்று விடுகின்றனர். கல்லூரிப் படிப்புப் படிக்கும் ஆற்றல் சிறிது இருந்தாலும் அவர்கள் ஏழையாக இருந்தாலும் நாலு பேரிடம் சொல்லி அவர்களின் உதவியுடன் படிக்கவே செல்லுகின்றனர்.

அப்படிப் படிக்க வசதி கிடைக்காவிட்டாலும், கடைகளிலோ, தொழிற்சாலைகளிலோ சிறிய வயதிலேயே போய்ச் சேர்ந்து முன்னுக்கு வரவே முயற்சி எடுக்கின்றனர். மதரஸா போய் ஓதுவதை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. மவ்லவிகளில் பலர் தங்கள் மக்களை மதரஸாக்களுக்கு அனுப்பாமல் கல்லூரிப் படிப்புக்கே அனுப்பி வைக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

இதிலிருந்து அந்த மவ்லவிகளும் தங்களின் மவ்லவி படிப்பின் தரத்தை அறிந்தே வைத்துள்ளனர் என்பது புலனாகும். மதரஸாக்களில் சில காலம் போக்கிவிட்டு மவ்லவி களாக வெளி வருபவர்களுக்கு கத்தம் ஃபாத்திஹா ஓதுவதையும், பள்ளிகளில் இமாமாகப் பணிபுரிவதையும் தவிர வேறு போக்கில்லை என்பதே உண்மையாகும்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் இந்த உதவாக்கரை மதரஸாக்களில் ஆசிரியராகப் பணி புரியும் வாய்ப்புக் கிடைக்கும். மற்றபடி அரபியில் பேசவோ, அரபி நூல்களைப் படித்துச் சொல்லவோ, அரபு நாடுகளிலிருந்து வரும் விஸாக்கள் பற்றிய விபரத்தைக் கூட படித்துச் சொல்லவோ இந்த மவ்லவிகளில் பெரும்பாலோருக்கு ஆற்றல் இல்லை என்பதே உண்மையாகும்.

ஆக அறிவுக்கும், அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள், எத்துறையில் ஈடுபட்டும் முன் னுக்கு வர முடியாதவர்கள், வீட்டுக்கும் ஊருக்கும் அடங்காத முரட்டுப் பேர்வழிகள் இத்தரம் வாய்ந்தவர்களே வேறு போக்கின்றி இன்றைய மதரஸாக்களில் போய் தஞ்சம் புகுகின்றனர். தப்லீக் பணியால் கவரப்பட்டுப் பக்திப் பரவசத்தால் தங்கள் பிள்ளைகளை அரபி மதரஸாக்களுக்கு அனுப்புபவர்களும் உண்டு.

இந்த மாணவர்கள் மதரஸாவின் நடைமுறைகளைச் சரிகாணாமல் இடையில் வெளியேறி விடுகின்றனர். “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதைத் தலைமேல் கொண்டு தந்தை எதைச் சொன்னாலும் (அவை மார்க்க முரணான, ஷிர்க்கான காரியங்களாக இருந்தாலும்) அதை அப்படியே ஏற்றுச் செயல்படுகிறவர்கள் மட்டுமே மதரஸாவில் இருந்து காலத்தை ஓட்டி விட்டு மவ்லவி பட்டத்துடன் வெளிவருகின்றனர். தந்தை சொல்லை அப்படியே சிந்திக்காது ஏற்றவர்கள் இப்போது தங்கள் ஆசிரியரின் (உஸ்தாது) சொல்லை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுச் செயல்பட்டு வருகின்றனர். இதே அடிப்படையில்தான் ஒரு மவ்லவி,

இந்நிகழ்ச்சியை என்னுடைய கண்ணியமிகு உஸ்தாது சொல்லக் கேட்டுள்ளேன். நான் நூறு கிதாபைப் பார்ப்பதை விட அது மிகப் பெரிய ஆதாரமாகும் என்று கூறிக்கொண்டு 1-ல் 1/2+1/3 போக எஞ்சியுள்ளது 1/9 என்று கண்மூடித்தன மாகச் சாதித்தது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கும். அதாவது 1/2+1/3+1/9=17/18 அல்ல. முழுமையாக 1 ஆகும் என்பதே அந்த மவ்லவியின் அறியாமை வாதமாகும். இது அவர் தனது உஸ்தாது மீது வைத்த குருட்டுப் பக்தியால் விளைந்த விளைவு! இந்த மவ்லவி தான் தமிழகத்திலுள்ள தலைசிறந்த விரல் விட்டு எண்ணப்படும் மவ்லவிகளில் ஒருவர் என்றால் மற்ற மவ்லவிகளின் தரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அறிவீனர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்றே விதிமுறைகள் :

எப்படிப்பட்ட தரத்தை உடையவர்களை இந்த அரபி மதரஸாக்களுக்கு ஓதப்போகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டீர்கள். இன்னும் கேளுங்கள் வேடிக்கையை; அரபி மதரஸாக்கள் அல்லாத மற்ற கல்வி ஸ்தாபனங்கள் திறமையிலும் திறமை மிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளைக் கையாள்வார்கள். ஆனால் இந்த அரபி மதரஸாக்களோ அறிவீனத்திலும் அறிவீனமான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவார்கள் போலும், ஏற்கனவே எல்லாத் துறைகளிலும் ஒதுக்கப்பட்டு எதற்கும் லாயககற்றவர்களே அரபி மதரஸாவைப் போய் அடைகின்றனர். அவர்களிலும் தப்பித் தவறி அறிவுடையவர்கள் இருந்து விடக்கூடாது. அவர்களையும் கழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மதரஸாவின் விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மதரஸாவில் நுழைந்தவுடன் முதல் நிபந்தனை மொட்டை அடித்துத் தொப்பி போட வேண்டும். ஜுப்பா போடவேண்டும். இந்த விதிகளை எங்கிருந்து பெற்றனர் என்பதை நாம் அறியோம். நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே ஹஜ்ஜில் வைத்துத்தான் மொட்டை அடித்ததாக ஆதாரங்கள் இருக்கின்றன. ஜுப்பா, தொப்பிப் போடுவது நபி(ஸல்) அவர்களின் ஆதத்தில் இருந்திருக்கி றதேயல்லாமல் ஏவப்பட்ட சுன்னத்து அல்ல. இந்த நிலையில் அவை கடமையாக்கப்பட்ட காரியங்கள் போல் ஏன் கடைபிடிக்கப்படுகின்றன?

வேறு வழியில்லாது மதரஸாக்களில் ஓத வருபவர்களில் சிலர் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஓடிப்போய் விடுவதும் உண்டு. வெளியேறினால் தங்கள் சாப்பாட்டிற்கு வேறு வழியில்லை என்ற நிலையிலுள்ள மாணவர்களே இறுதியில் எஞ்சுகின்றனர். அவர்கள் விடுமுறையில் வெளியில் செல்லும்போது ஜுப்பா அல்லாத சட்டைகளில் அவர்கள் காட்டும் ஆர்வம். தலைமுடி சிறிது வளர்ந்தவுடன் அவற்றைச் சீவி அழகு பார்க்கும் அவர்களின் ஏக்கம் இவை அவர்கள் எப்படிப்பட்ட நிர்பந்த நிலைகளில் மதரஸாக்களில் ஓதி வருகின்றனர் என்பதைப் புரிய வைக்கும். ஆக ஆரம்ப நிலையிலேயே அவர்களின் சுயசிந்தனை, சுயவிருப்பம் மழுக்கப்பட்டு உஸ்தாதுகள் சொல்வதை வேதவாக்காகக் கொண்டு செயல்படும் நிலை உருவாக்கப்படுகின்றது.

திறமையற்றவர்களாக ஆக்குவதற்கென்றே பாட போதனை :

திறமையற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதில் இது இரண்டாவது கட்டம். இந்த இரண்டு தேர்வுகளையும் மீறி சுயசிந்தனை உடையவர்கள் தப்பித் தவறி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம் என்ற ஐயம் இவர்களுக்கு இன்னும் எஞ்சி இருக்கும்போலும். எனவே அவர்களது சுய சிந்தனைகளையும் மழுங்கச் செய்யும் முறையில் விசேமான ஒரு பாடத் திட்டமாக மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்கென்றே ஒரு நூல் உண்டு. அதன் பெயர் தஃலீமுல் முதஅல்லிம்; அதன் பொருள் மாணவர்களுக்கான போதனை. இந்த நூலில் மாணவர்கள் தங்கள் உஸ்தாதுகளின் மீது அளவு கடந்து பக்தி செலுத்தும் வகையில் கற்பனையாகப் பல கதைகள் புனையப்பட்டுள்ளன. அதில் ஒன்று வருமாறு.

ஒரு உஸ்தாது தனது மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் உட்காருவதும், எழும்புவதுமாக டிரில் செய்து கொண்டிருக்கிறார். மாணவர்கள் ஆச்சரியப்பட்டு அதற்குரிய காரணத்தைக் கேட்டார்களாம். அதற்கு அந்த உஸ்தாது கொடுத்த விளக்கத்தைப் பாருங்கள். அதாவது எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த உஸ்தாதின் மகன் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் இந்தப் பக்கம் வரும்போது எனது பார்வையில் படுகிறார். எனது உஸ்தாது மீதுள்ள பக்தியால் அவரது மகனை பார்த்த உடன் மரியாதைக்காக எழும்புகிறேன்.

எனது உஸ்தாதின் மகன் என் கண்ணை விட்டும் மறைந்ததும் உட்கார்ந்து கொள்கிறேன். எனது உஸ்தாதின் மகனுக்கு மரியாதை செய்வது எனது உஸ்தாதுக்கு மரியாதை செய்வது போலாகும் என்று விளக்கம் தந்துள்ளாராம். சிரிப்பு வருகிறதா? நன்றாகச் சிரியுங்கள். இந்தக் கற்பனைக் கதையையும் கேட்டுவிட்டு அந்த மாணவர்கள் எந்த அளவு சுய சிந்தனை மழுக்கடிக்கப்படுகிறார்கள் என்ற முடிவுக்கு நீங்களே வாருங்கள். உஸ்தாதுகளுக்கெல்லாம் பெரிய உஸ்தாது நபி(ஸல்) அவர்களேயாகும். அவர் வரும்போது கூட நபிதோழர்கள் எழுந்து மரியாதை செய்தது இல்லை. காரணம் அப்படி எழுந்து மரி யாதை செய்வதை நபி(ஸல்) அவர்கள் விரும்பவில்லை, மாறாகத் தடுத்துள்ளார்கள்.

(சஹாபாக்களாகிய) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்களை விட அதிக விருப்பமுள்ள மனிதர் எவரும் இருந்ததில்லை. இந்நிலையில் சஹாபாக்கள் நபி(ஸல்)அவர்களைப்பார்த்து விட்டால் எழுந்து நிற்பவர்களாக இருந்து கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவ்வாறு அவர்கள் எழுந்து நிற்பதை நபி(ஸல்) அவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். (அனஸ்(ரழி), திர்மிதி)

இந்த நிலையில நபி(ஸல்) அவர்களின் போதனைக்கும், நடைமுறைக்கும் மாறாகக் குருட்டுத்தனமான குருபக்தியை வளர்க்கும் இவர்கள் குர்ஆன் ஹதீஃத்படி நடக்கிறார்களா? அல்லது மாற்று மத அறிஞர்களைப் போல் மனிதனை தெய்வமாக்கும், இணைவைக்கும் கொள்கையை வளர்க்கத் துணை போகிறார்களா? என்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

இப்படி முறை தவறிய குரு பக்தியை வளர்க்கும் பல கற்பனைக் கட்டுக் கதைகள் அந்த ஒழுக்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு போதிக்கப்படும் “தஃலீமுல் முதஅல்லிம்” என்ற நூலில் காணப்படுகின்றன. அவை பற்றிய மேலதிக விளக்கத்திற்கு பார்க்க அல்ஜன்னத் மார்ச் 90, பக்கம் 3. இந்த நூலி லுள்ள போதனைகளை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டதன் விளைவே, பிரபலமான மவ்லவி எனது உஸ்தாது சொல்லுவது நூறு கிதாபைப் பார்ப்பதை விட மிகப் பெரிய ஆதாரமாகும் என்று கூறி வருவதாகும்.

இன்னொரு சம்பவம்;

மதரஸாவின் ஒரு வகுப் பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கிறது. உஸ்தாது ஒரு கிதாபை வைத்துப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு மாணவர் ஒரு நூலின் சில பாராக்களுக்கிடையே காணப்படும் ஆண்டுகளின் எண்ணிக்கைப் பற்றிய தவறைச் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டிருக்கிறார். விளக்கம் கொடுக்க கடமைப்பட்ட உஸ்தாதுக்கு வந்ததே கோபம். அத்தப் பெரிய மேதை எழுதிய நூலாகும். அதில் நீ குறை காண்பதா? என்று ஆத்திரத்தோடு கத்திக் கொண்டு கையில் வைத்திருந்த கிதாபை அந்த மாணவரின் முகத்தை நோக்கி வீசினாரே பார்க்கலாம்.

வெள்ளை வெளேர் என்று தெள்ளத் தெளிவாக எண்ணிக்கையில் காணப்பட்ட தவறைச் சுட்டிக் காட்டி விளக்கம் கேட்ட மாணவருக்குக் கிடைத்த பரிசைப் பார்த்தீர்களா? 4+3=7 என்பதற்குப் பதிலாக அந்த நூலில் 8 என்று எழுதப்பட்டிருந்தாலும் அந்த நூலை எழுதிய மேதையின் மீது அப்படியே குருட்டு நம்பிக்கை வைத்து அதனை 8 என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழுதானே என சந்தேகமோ, மறுப்போ கிளப்பக் கூடாது.

இப்படிப்பட்டக் குருட்டு குரு பக்தியை ஏற்றுக் கொண்டவர்களே இந்த மதரஸாக்களில் தொடர்ந்து ஓதமுடியும். இல்லை என்றால் வெளியேறிச் சாப்பாட்டிற்குத் திண்டாட வேண்டியது தான். அல்லது மஸ்ஜிதுகளில் சென்று சுயமரியாதையை விட்டு பிச்சை எடுக்க வேண்டியதுதான். ஆக இந்த மூன்றாவது வடிகட்டலின் மூலம் முற்றி லும் சுய சிந்தனையற்றவர்களைத் தேர்ந்தெடுத்துக் காலத்தை மதரஸாவில் கழிக்கச் செய்து அவர்களுக்கு மவ்லவி ஆலிம்(?) பட்டம் கொடுத்து வெளியே அனுப்புகிறார்கள். அவர்களிடம் நீங்கள் எப்படி சுயசிந்தனையை எதிர்பார்க்க முடியும்? குதிரைக் கொம்புதான்.

இதுவரை அரபி மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தையும் அவற்றில் ஓத முன் வருபவர்களின் ஆற்றலையும் விளங்கிக் கொண்டீர்கள். இனி அங்கு போதிக்கப்படும் கல்வியின் நிலையைப் பார்ப்போம்.

மதரஸா கல்வித் திட்டம் :

அரபு மதரஸாக்களின் கல்வித் திட்டம் எந்த அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை அந்நஜாத் அக்டோபர் 2016 இதழில் “ஸில்ஸிலேயே நிஜாமிய்யா” என்ற தலைப்பில் விளக்கி இருந்தோம். மீண்டும் ஒருமுறை அதனை நிதானமாகப் படித்துப் பார்க்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

“ஸில்ஸிலேயே நிஜாமிய்யா” கல்வித் திட்டப்படி குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட வாதக் கலைக்கும், பிக்ஹின் பெயரால் முன்னோர்களின் கூற்றுக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வலியுறுத்தப்படுகிறது. ஹனஃபி பிக்ஹு நூல்களில் ஒரு விஷயத்தில் இமாமின் கூற்று குர்ஆனுக்கோ, ஹதீஃதுக்கோ முரணாகத் தெரிந்தாலும் இமாமின் கூற்றையே எடுத்து நடக்க வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது என்றால் அதன் பொருள் என்ன? உண்மையில் அந்த விஷயத்தை இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களும் கூறி இருக்கமாட்டார். முன்னூறு வருடங்களுக்கு முன் இருந்த ஹனஃபி மத்ஹபின் இமாம் ஒருவர் அவ்வாறு கூறி இருப்பார். அது இப்போது சுமார் 1300 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது.

இந்த மதரஸாக்களின் பாடத் திட்டத்தில் இன்னொரு வேடிக்கையையும் பார்க்கலாம். அதாவது எந்த விஷயங்களில் மனித அபிப்பிராயங்கள் செல்லாதோ, குர்ஆன், ஹதீஃதை மட்டும் வைத்து முடிவு செய்ய வேண்டுமோ 1450 வருடங்களுக்கு முன் இருந்த நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாது எடுத்து நடக்க வேண்டுமோ, அப்படிப்பட்ட மார்க்க விஷயங்களில் சுமார் 300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு இமாமின் கூற்றை இமாம் அபூ ஹனீஃபா(ரஹ்) அவர்களின் பெயரால் அரங்கேற்றம் செய்கிறார்கள். அதேசமயம் உலக விவகாரங்களில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகக் கண்டுபிடிக்கப்படும் எதார்த்த நிலைகளை இன்றுள்ள விஞ்ஞானிகள் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளாமல் சுமார் 600 அல்லது 700 வருடங்களுக்கு முன் சில இமாம்களின் யூகத்தால் எழுதி வைக்கப்பட்டுள்ள விஷயங்களில் முழு நம்பிக்கை வைத்து அதனையே இன்றும் போதிக்கிறார்கள்.

உதாரணமாக வானம், பூமி சம்பந்தப்பட்ட வி­யங்களை விளக்கும் ஒரு நூல் (தஷ்ரீஹுல் அஃப்லாக்) அரபி மதரஸாக்களில் போதிக்கப்படுகிறது. அதில் பூமி தட்டையானது, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது போன்ற அபத்தங்கள் (சுமார் 600 அல்லது 700 வருடங்களுக்கு முன் மக்களிடையே இருந்து தவறான நம்பிக்கை) எழுதப்பட்டுள்ளன. அதனையே இந்த மதரஸாக்களில் இன்றும் போதிக்கின்றனர்.

எனவே இன்றைய மவ்லவிகளில் பலரும் இன்றும் பூமி தட்டை என்றே சொல்லி வருகின்றனர். இப்படிச் சாதாரண உண்மைகளைக் கூட ஏற்றுக் கொள்ள அவர்கள் தங்கள் முன்னோர்கள் மீது கொண்டுள்ள குருட்டு நம்பிக்கை இடம் கொடுப்பதில்லை. முன் சென்ற நாதாக்கள் எல்லாம் சாமான்யப்பட்டவர்களா? அவர்களைப் போல் நாம் ஆக முடியுமா? அவர்கள் வானத்தை வில்லாக வளைத் தார்கள். மணலைக் கயிறாகத் திரித்தார்கள் என்றெல்லாம் சரடு விடுவார்கள். இந்தப் புளுகு மூட்டைகளை எல்லாம் அப்படியே நம்பிச் செயல்படுகிறவர்கள் மட்டுமே அரபி மதரஸாக்களில் காலத்தை ஓட்ட முடியும்; இது மட்டுமல்ல அரபு மதரஸாக்களில் ஓதுபவர்களின் ஒழுக்கத்தைக் கெடுப்பதற்கும் அவர்களுடைய பிக்ஹு நூல்களில் சட்டம் வகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த அசிங்கங்களை எல்லாம் 1986 நவம்பர் அந்நஜாத் இதழில் விளக்கியுள்ளோம்.

ஒருவன் தனது ஆண் குறியைத் தனது பின் துவாரத்தில் நுழைத்தால் குளிப்பு கடமையாகாது போன்ற உலகத்திலேயே நடக்க முடியாத காரியங்களுக்கெல்லாம் தீர்ப்புகளை (ஃபத்வா) இவர்களது பிக்ஹு நூல்களில் பார்க்கலாம்.

ஒருவன் விந்து வரும்போது தனது குறியை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு ஆசை அடங்கியதும் விந்தை வெளிப்படுத்தினால் அவன் மீது குளிப்பு கடமை இல்லை.

இதுவும் அரபி மதரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்படும் பிக்ஹு நூல்களில் உள்ளதுதான். இப்படிப் பட்ட விஷயங்களை 15 வயதிற்கும் 20 வயதிற்கும் உட்பட்ட வாலிபர்களிடையே போதிக்கும்போது என்ன விளைவு ஏற்படும் என்று சிந்தித்துப் பாருங் கள். அவர்கள் அவற்றைச் செயல்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். இரவில் செயல்படுத்தி விட்டு, குளிக்காமலேயே பஜ்ர் தொழுவதற்கு சட்டம் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் முகல்லிதுகள் தங்கள் பிக்ஹு நூல்களில், இது முற்றி ஓரினப் புணர்ச்சிக்கு இந்த வாலிபர்கள் ஆளாகிறார்கள். கல்லூரிகளில் காணப்படுவதை விட, அரபி மதரஸாக்களில் இந்த கூடா ஒழுக்கம் அதிகமாக இருக்கிறது.

நம்மில் ஏற்பட்ட பெரும் மாற்றத்திற்கு காரணம் :

நம்மைத் திடுக்கிட வைத்து இந்த அளவு சிந்திக்க வைத்து குர்ஆன், ஹதீஃதின் உண்மை நிலைகளை கண்டறிய வைத்ததே மதரஸாக்களில் காணப்படும் இந்த கூடா ஒழுக்கம்தான். 1963 முதல் 1969 வரை இந்த மவ்லவிகளுக்கு அபாரமான மரியாதை செலுத்தி வந்தோம். பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட இந்த மவ்லவிகளை மதித்து நடந்தோம். மவ்லவிகளின் கூற்றுக்கள் அனைத்தையும் வேதவாக்காக எடுத்து நடந்தோம். இவர்களது வாக்கை நம்பி சூஃபியிஸ வாழ்க்கையை மேற் கொண்டோம். 21 வயதில் காடா துணியில் கைலி, ஜுப்பா அணிந்தோம், மொட்டை அடித்தோம். முக்தி பெறுவதற்கு வீட்டைத் துறக்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையில் காலில் கட்டையை மாட்டிக் கொண்டு வீட்டைத் துறந்து வெளியேறினோம்.

அப்படிப்பட்ட நிலையில் 1969ல் மக்கள் வலியுல்லாக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த சில மவ்லவிகளிடமும் இந்த கூடா ஒழுக்கம் இருக்கிறது என்பது தெரிய வந்ததும் நம்மால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஆரம்பத்தில் இதனை நம்மால் நம்பவே முடியவில்லை. இச்செய்தியைக் கொண்டு வந்தவரை ஏசி விரட்டி விட்டோம். பின்னர் ஆதாரப்பூர்வமாக உரிய சாட்சிகளுடன் இன்னொரு மவ்லவி மூலமாகவே நம்மிடம் கொண்டு வரப்பட்டு உண்மைப்படுத்தப்பட்டவுடன் நம்மால் மறுக்க முடியவில்லை.

தனிப்பட்ட ஒருவரைப் பற்றிக் கிடைத்த செய்தியை வைத்து நாம் முடிவு செய்யவில்லை. பல செய்திகள் தெரிய வந்து பொதுவாக இன்றைய பெரும்பாலான மதரஸாக்களின் நிலையே இது தான் என்று தெரிய வந்தபின் தான் நமது மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது. இதற்குப் பரிகாரம் என்ன என்று ஆராய்ந்தோம். இது விஷயமாகப் பல மவ்லவிகளைக் கலந்தோம். இன்று நம்மைக் கடுமையாகச் சாடிக் கொண்டிருக்கும் மவ்லவிகளில் நாம் கலந்து பேசிய மவ்லவிகளும் மதரஸா நிர்வாகத்தில் இருக்கிறார்கள். (அவசியப்பட்டால் அவர்கள் பெயரை வெளியிடவும் அல்லாஹ் மீது ஆணையிட்டுக் கூறவும் தயாராக இருக்கிறோம்) அன்று அவர்களை அணுகிப் பேசும்போது அதனை ஒரு பாராதூரமான விஷயமாகவே அவர்கள் நினைக்கவில்லை. ஒரு ஈ மேனியில் அமர்ந்து பறந்து போய்விட்டது என்பது போல் அவர்களின் பேச்சு இருந்தது. அவர்களின் பேச்சு நமக்குக் கீழ் வரும் ஹதீஃதை நினைவு படுத்தியது.

“நிச்சயமாக ஒரு மூமினானவர், மலையின் கீழ் ஒருவர் அமர்ந்து கொண்டு அது தம்மீது விழுந்து விடும் என்பதை பயந்து கொண்டிருப்பவரைப் போன்று தமது பாவங்களைப் பற்றி கருதிக் கொண்டிருப்பார். ஆனால், ஒரு பாவியானவன் தனது பாவங்களைப் பற்றி அவன் மூக்கின் அருகில் பறந்து செல்லும் ஓர் ஈயைப் போன்றது என நினைத்து அதைத் தன்னை விட்டும் தனது கையால் ஓட்டி விடலாம் என்று கருதிக் கொண்டிருக்கிறான். (இப்னு மஸ்ஊத் (ரழி), புகாரீ)

இந்த மவ்லவிகளின் மீது நமக்கிருந்த நம்பிக்கை வீணான பின்பே நாம் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித் தோம். 12 வருடங்களுக்குப் பிறகே, நேரடியாக குர்ஆன், ஹதீஃதை புரட்ட ஆரம்பித்தோம். உண்மை நிலையைக் கண்டறிந்தோம். இந்த மதரஸாக்களில் இவர்கள் கடைபிடித்து வரும் பாடத் திடடமே இவர்களை இப்படித் தவறான வழியில் இட்டுச் செல்கிறது என்பதை அறிந்து அதனையும் தெளிவாக அவர்களிடம் எழுத்து மூலமாக எடுத்து வைத்தோம். நமது முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆனது. அதன் பின்னரே பொது மக்களை அணுகி உண்மை மார்க்கத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தோம்.

இதுவரை மெளனம் சாதித்த மவ்லவி வர்க்கம் ஆர்த்தெழுந்தது. பொது மக்களிடம் கலப்படமே இல்லாத பொய்களைக் கூறி மக்களை நமக்கெதிராகத் தூண்டும் முயற்சியில் இறங்கினர். நம்மைக் குழப்பவாதி என்றும் இமாம்களை அவமதிப்பதாகவும் பொய் கூறி பொதுமக்களின் கோபத்தை நமக்கு எதிராகக் கிளப்பி விட்டனர். சத்தியத்தை மறைக்க இந்த அளவு துணிந்த பின்னரும் இவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் நாம் எப்படி மெளனம் சாதிக்க முடியும்?

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா?

இந்த மவ்லவிகளால் மக்கள் முன் சத்தியத்தை எடுத்து வைக்க முடியவில்லை. நாங்கள் பொதுமக் களின் தயவில் வாழ்கிறோம். உண்மையைச் சொன்னால் எங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும். எங்கள் வீட்டு அடுப்பில் பூனை தூங்க ஆரம்பித்து விடும் என்று சொல்லுகிறார்கள். அந்த சத்தியத்தை நாங்கள் எடுத்து வைக்கும்போது எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டுமே? அதற்கு மாறாக எங்கள் மீது அவதூறுகளை அள்ளிச் சொரிந்து பொது மக்களை எங்களுக்கெதிராகத் தூண்டி சத்தியத்தை மறைக்க முனையும் போது, அந்த மவ்லவி வர்க்கத்தை அவர்களின் தரத்தை, அவர்களின் இழி நிலையை அடையாளம் காட்டாமல் சத்தியத்தை நிலைநாட்டக் கடமைப்பட்ட எங்களால் எப்படி இருக்க முடியும்? அதன் விளைவே இந்த ஆக்கம்.

இதன் பின்பாவது அவர்கள் உண்மையை உணர்வார்களாக, எங்களது கூற்றுக்கள் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணாக இருந்தால் ஆதாரத்துடன் எடுத்துத் தரட்டும். அதனை ஏற்றுக் கொள்வதில் முன்னணியில் நாங்கள் இருப்போம். அதில் சந்தேகமே இல்லை. வீண் அவதூறுகளையும், அபாண்டங்களையும் சொல்லுவதை விட்டும் அவர் கள் விலகிக் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்குப் பயந்து சத்தியத்தை உணர்ந்து செயல்பட முன்வரட் டும். அவர்கள் சத்தியத்தை மறைக்க பெரும் முயற்சிகள் செய்வதால் அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோமேயல்லாமல், தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது எங்களுக்குக் கோபமோ, குரோதமோ அணுவளவும் இல்லை.

ஆக இன்றைய மதரஸாக்களில் போதிக்கப்படும் பிக்ஹு நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள அசிங்கங்கள் அங்கு ஓதிவரும் வாலிபர்களைப் பிஞ்சிலேயே பழுக்க வைத்து வீணாக வழிவகுக்கின்றன. அதன் விளைவு மதரஸா காலத்தோடு இக்கூடா ஒழுக்கம் ஒழிவதில்லை. இவர்களின் வெளியுலக வாழ்விலும் இது தொடர்கிறது. அவர்கள் மஸ்ஜிதுகளில் இமாமாகப் பணிபுரியும் காலத்திலும் இக் கூடா ஒழுக்கத்தைச் செயல்படுத்தி மதரஸா பக்கமே செல்லாத சிறார்களையும் கெடுத்து வருகின்றனர். இக்கூடா ஒழுக்கம் எந்த அளவு இந்த மவ்லவிகளை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கொரு ஆதாரம்.

இந்த ஆக்கத்தைத் தயார் செய்து கொண்டிருக் கும் காலகட்டத்தில் திருச்சியிலுள்ள ஒரு மஸ்ஜிதில் இமாமாகப் பணி புரிந்த ஒரு மவ்லவி ஒரு சிறுவனிடம் தவறாக நடந்து கையும் களவுமாய் பிடிபட்டு உடனடியாக சீட்டுக் கிழிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மவ்லவி தன் தவறை எப்படி நியாயப்படுத்தினார் தெரியுமா? அவுலியாக்கள் செய்யாத காரியத்தையா நான் செய்துவிட்டேன் என்று கேட்டாரே பார்க்கலாம். கையும் களவுமாய் பிடிப்பட்டதால் வேறு வழியின்றி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இல்லை என்றால் மூடி மறைத்து விடுவர். மவ்லவிகள் மீதுள்ள குருட்டுப் பக்தியால் சமுதாயத் தலைவர்கள் பள்ளி முத்தவல்லிகள் இவர்களின் இத்தவறுகளையும் மூடி மறைக்கவே முற்படுகின்றனர்.

இதன் காரணமாக இந்த மவ்லவிகளின் தரங் கெட்ட நிலை வெளியுலகுக்குத் தெரியும் வாய்ப் பில்லாமல் போய் விடுகிறது. தனி நபர்களின் தவறு களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. சமுதாயத்தைச் சத்திய வழியில் கொண்டு செல்லுவது ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். அதற்கு மாறாக சமுதாயத்தை அசத்தியத்தில் மூழ்கடித்து அற்ப உலக ஆதாயம் அடைய இந்த மவ்லவிகள் முற்படுவதால், இவர்களை அடையாளம் காட்டிச் சமுதாயத்தை சிந்தித்து செயல்பட வைப்பது நமது கடமையாகும்.

படித்து தேற வேண்டிய அவசியம் இல்லை :

இத்தனை முறைகேடுகள் உள்ள அரபி மதரஸாக்களில் அவர்களே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் கல்வியாவது முறைப்படி கற்பிக்கப்படுகிறதா? என்றால் அதுவும் இல்லை. உஸ்தாதுகள் மீது குருட்டுப் பக்தியை மாணவர்களிடையே வளர்ப்பதற்கு அவர்களின் மூளையைச் சலவை செய்ய, செய்யப்படும் முயற்சியில் பத்தில் ஒரு பங்கு தானும் பாடங்களைப் படிப்பிப்பதில் காட்டப்படுவதில்லை. அரபி மதரஸாவில் சேரும் ஒரு மாணவன் பாடங்களை ஒழுங்காகப் படித்து பரீட்சைகளில் ஒழுங்காக எழுதி பாஸாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவன் படிக்கிறானோ படுத்துத் தூங்குகிறானோ? வருடங்கள் ஆகிவிட்டால் மவ்லவி ஆலிம் பட்டத்துடன்(?) வெளியே வருவான். இந்த மவ்லவிகளிடம் என்ன திறமையை எதிர் பார்க்க முடியும்?

மதரஸாக்களின் இந்த நிலையை அங்குள்ள உஸ்தாதுகளும், மாணவர்களும் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். மதரஸாக்களில் உஸ்தாதுகள் மாணவர்களைப் பார்த்து அடிக்கடி இவ்வாறு சொல்லுகிறார்கள்.

ஒரு மாட்டைக் கொண்டு வந்த மதரஸாவினுள் கட்டி 7 வருடங்கள் சாப்பாடு போட்டால் அதற்கும் மவ்லவி ஆலிம் பட்டம் கிடைத்துவிடும்.

என்று கிண்டலாகவே கூறுவார்கள். 4 அல்லது 5 வருடங்களிலேயே மவ்லவி ஆலிம் பட்டம் பெறும் மாணவர்களும் உண்டு. அவர்களின் திறமை காரணமாகஒரு மதரஸாவில் 2ம் ஜுமரா ஓதிவிட்டு அடுத்த வருடம் இன்னொரு மதரஸாவுக்குப் போய் நான் 3ம் ஜுமரா சென்ற வருடம் ஓதினேன் என்று பொய் கூறினால் போதும். 4ம் ஜுமராவில் சேர்த்துக் கொள்வார்கள்.

காரணம் ஒரு மதரஸாவிலிருந்து இன்னொரு மதரஸாவில் போய்ச் சேர உரிய சான்றிதழ்களோ, பரீட்சை முறையோ கிடையாது. இவற்றை ஏற்படுத்த முடியாது என்பதல்ல. அப்படி ஏற்படுத்தினால் மதரஸாவைக் கொண்டு பிழைப்பு நடத்தும் இவர்களின் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்பதை இவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். மக்களிடம் பணம் வசூல் செய்ய மாணவர்களின் தலைகளைக் காட்டவேண்டும். மாணவர்களைச் சேர்ப்பதில் இந்த நியதிகளை எல்லாம் கடைபிடித்தால் மாணவர்கள் எங்கே கிடைக்கப் போகிறார்கள். எனவே எண்ணிக்கைக்கு ஆட்கள் கிடைத்தால் போதும் என்பதே மதரஸாக்களில் இன்றைய நிலையாக இருக்கிறது.

இதனை 1978-ல் நாம் நன்கு உணர்ந்து கொண்டோம். மதரஸாக்களில் போதனா முறை ஒழுங்கில்லாமல் இருப்பதாலும் படிப்பில் கண்டிப்புக் காட்டுவதற்கு வகை இல்லாததாலும், மதரஸாக்களிலிருந்து தகுதி இல்லாதவர்களே மவ்லவிகளாக வெளி வருகின்றனர். தகுதி உள்ளவர்களை மவ்லவிகளாக வெளிவரச் செய்ய ஒரு காரியம் செய்யலாம். எங்கே யார் மதரஸா நடத்தினாலும், 1ம் ஜும்ராவிலிருந்து 6ம் ஜும்ரா வரை அந்தந்த மதரஸாக்களில் எப்படி பரீட்சை நடத்தினாலும் சரி, நடத்தாவிட்டாலும் சரி, மவ்லவி ஆலிம் பட்டம் கொடுக்க இறுதி 7ம் ஜும்ராவின் பரீட்சையைப் பொதுவாக ஆக்குங் கள். தமிழ்நாடு ஜ.உ. சபையினரே கேள்விகளைத் தயாரித்து பரீட்சை நடத்தி வெற்றி பெறுகிறவர்களுக்கு மட்டும் மவ்லவி பட்டம் கொடுக்கலாம் என்ற ஆலோசனையைக் கூறினோம். இந்த ஆலோச னையை சங்கரன் பந்தலில் நடைபெற்ற ஜ.உ.ச. கூட்டத்திலேயே வைத்தோம். சமூக நலனில் அக்கறை உடையவர்களாக இருந்தால் நிச்சயமாக இந்த நமது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்.

ஆனால் அவர்களிடமிருந்து வந்த பதில் என்ன தெரியுமா? நீங்கள் கூறும் ஆலோசனைப்படி பரீட்சை வைத்தால் எங்கள் மதரஸாக்களை எல்லாம் இழுத்து மூட வேண்டிவரும் என்று பலர் வாய் கூசாமல் கூறினார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? தகுதியற்றவர்களை எண்ணிக்கைக்காக மக்களிடம் காட்டி பணம் வசூலித்து காலத்தை ஓட்டி வருகிறோம். நீங்கள் ஆலோசனை கூறுவதுபோல் பொதுப்பரீட்சை வைத்தால் பெரும்பான்மையினர் தேரமாட்டார்கள். தங்கள் மதரஸாக்களின் கையாலாகாத நிலை வெட்ட வெளிச்சமாகிவிடும். பொதுமக்கலிடமிருந்து பணம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதை அவர்கள் உணர்ந்து வைத்திருப்பது தானே நமது இந்த ஆலோசனையை அன்று ஏற்க ஜ.உ. சபையினர் மறுத்து விட்டதற்குரிய காரணம், புரிகிறதா?

இந்த மவ்லவிகளைச் சத்தியத்தை உணரச் செய்ய நம்மால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்து அவற்றில் தோல்வியுற்ற பின்பே மவ்லவிகளைப் புறக்கணித்து சத்தியத்தைப் பொதுமக்கள் முன் எடுத்து வைக்க ஆரம்பித்தோம். இந்த மவ்லவி வர்க்கம் நமது இந்த சத்திய முயற்சிக்கு ஆதரவு தராவிட்டாலும், மெளனமாக ஒதுங்கி இருந்தாலும் நாம் அவர்களைக் கண்டு கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் அன்றைய ஜ.உ.சபையினராகிய தாருந் நத்வா வினர் செயல்பட்டது போல், சத்தியத்தை எடுத்துச் சொல்லும் நம்மீது வீண் அபாண்டங்களையும், பழிகளையும், அவதூறுகளையும் கூறி நம்மை, எதிர்ப்பது கொண்டும் மக்களிடம் எங்களைக் குழப்பவாதிகள், வழிகேடர்கள் என்று ஓயாது பிரச்சாரம் செய்வது கொண்டும் சத்தியம் பொது மக்களை சென்றடைய முடியாமல் தடுப்பதற்கு முனைந்து விட்டனர். இந்த நிலையில் அவர்களின் உண்மையான இழிநிலைகளை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் வேறு என்ன செய்ய முடியும்? சத்தியம் நிலை நாட்டப்படுவது இந்த முல்லாக்களின் வரட்டு கெளரவத்தை விட முக்கியமானதாகும்.

முல்லாக்களை நம்பினால் மறுமலர்ச்சி ஏற்படப் போவதில்லை. மக்கள் சத்தியத்தை உணர்ந்து கலப்படமில்லாத தூய இஸ்லாம் மார்க்கத்தை விளங்கி ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. காரணம் மக்கள் குர்ஆன், ஹதீஃதை கேட்பதையோ, பார்ப்ப தையோ இந்த முல்லாக்கள் சகிக்காமல் தடுத்து வருகின்றனர். எனவே இந்த மவ்லவிகளையும் அவர்களது பின்னணிகளையும் பச்சையாக எதையும் மறைக்காமல் மக்கள் முன் எடுத்து வைப்பது எங்க ளுக்குக் கடமையாகிவிட்டது. அதனையே செய்து வருகிறோம்.

இந்த மவ்லவி வர்க்கத்தினர் அறியாத நிலையில் இந்தத் தவறுகளைச் செய்து வருகிறார்கள் என்று சொல்ல முடியாது. நன்கு அறிந்த நிலையிலேயே சத்தியத்தை எதிர்த்து வருகின்றனர். தங்கள் மதரஸாக்களில் குர்ஆன் ஹதீஃதை நேரடியாகப் போதிக்க ஆரம்பித்து விட்டால் இதுவரை தங்களுக் கென்று ஒரு தனி அந்தஸ்தை-ஹஜ்ரத்-ஹழரத்-சந்நிதானம் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர் அல்லவா? அது என்னாவது? அதாவது பிராமணர்கள் தாங்கள் தான் பிரம்மாவின் முகத்திலிருந்து படைக்கப்பட்டவர்கள். தங்களுக்கு தெய்வாம்சம் உண்டு.

எனவே மக்கள் தங்களை ஸ்வாமி என்று அழைத்துக் கொண்டு தெய்வத்தன்மை பொருந்தியவர்களாகக் கருதி மரியாதை செய்து வரவேண்டும் என்ற தவறான மோசமான நிலையை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள் அல்லவா? அதேபோல் இந்த மவ்லவி வர்க்கமும் தாங்கள் அரபி கற்றிருப்பதால் உயர்ந்தவர்கள் தெய்வத் தன்மையுடையவர்கள். மக்கள் தங்களை ஹஜ்ரத் சந்நிதானம் என அழைத்துக் கொண்டு தங்களின் வாக்கை வேத வாக்காக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்ற தவறான ´ர்க்கான நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். தெரிந்தே இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர்.

மதரஸா மாணவர்கள் குர்ஆன், ஹதீஃதை நேரடியாகக் கற்றுத் தெளிவு பெற்றால், தாங்கள் நீண்ட நெடுங்காலமாகக் கட்டிக் காத்துவரும் தங்களின் தனி அந்தஸ்து தவிடு பொடியாகிவிடும் என்ற அச்சமே அவர்களைக் குர்ஆன், ஹதீஃதை போதிப்பதை விட்டும் தடுக்கிறது. மற்றபடி அவர்கள் மனம் வைத்தால் சத்தியத்தைப் போதிக்க முடியும். ஆற்றல் குறைந்தவர்களையே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குர்ஆனை முறைப்படி தஜ்வீது சட்டத்துடனும், இனிமையாகவும் ஓதக் கற்றுக் கொடுக்கத்தானே செய்கிறார்கள். குர்ஆனை மனப்பாடமிட்டு ஹாபிழ்களாக உருவாக்கத்தானே செய்கிறார்கள். இந்த இரு காரியங்களைத் தான் இன்றைய அரபி மதரஸாக்கள் உருப்படி யாகச் செய்து வருகின்றன.

ஆயினும் அற்ப உலக ஆதாயம் கருதியே இவை இரண்டையும் கற்றுத் தருகின்றனர். இமாமத் செய்யவும், ரமழானில் தராவீஹ் என்ற பெயரால் 8+3க்குப் பதிலாக 20+3 தொழ வைத்து ஆயிரக் கணக்கில் ஊதியம் பெறவுமாகும். மஸ்ஜிதுகளில் இமாமாகப் பணியாற்ற வேண்டும். மவ்லவிகள் நல்ல கிராஅத்தைக் கொண்டு மக்களைக் கவர வேண்டும் என்பதில் அக்கறையாகச் செயல்படத்தானே செய்கின்றனர். அப்படியானால் அந்த மவ்லவிகள் சத்தியத்தை உணர்ந்து செயல்படும் வகையில் குர்ஆன், ஹதீஃதை ஏன் போதிக்க முடிய வில்லை? சிந்திக்க வேண்டுகிறோம்.

தங்களின் தனி அந்தஸ்து தக்க வைக்கப்பட வேண்டும். உஸ்தாது என்ற போர்வையில் ஹஜரத் சந்நிதானம் என்ற இறைத்தன்மையை நிலைக்கச் செய்யவேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா? மவ்லவி என்று அரபியில் கூறினால் அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று பொருள் படுகிறது. இவர்கள் மட்டும்தான் அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள் என்று பொருள் படுகிறது. (பார்க்க 22:78) இவர்கள் மட்டும்தான் அல்லாஹ்வைச் சேர்ந்தவர்களா? மற்ற மக்கள் எல்லாம் அல்லாஹ் வைச் சேர்ந்தவர்கள் இல்லையா? மவ்லவி, ஹஜ்ரத் போன்ற பதங்களை அவர்கள் விரும்புவதிலிருந்தே அவர்கள் தங்களை இறைத் தன்மை-தெய்வாம்சம் பொருந்தியவர்களாகக் கருதுகிறார்கள் என்பது புரிகிறதல்லவா?

மவ்லவி வர்க்கத்தின் மீதுள்ள குருட்டுப் பக்தியை விட்டு நிதானமாகச் சிந்தித்தால் இந்த மவ்லவி வர்க்கம் இந்தச் சமுதாயத்திற்கு எத்தனைப் பெரிய கொடுமையை இழைத்து வருகிறது என்பது புரியவரும். நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே இந்த முல்லா வர்க்கம் மார்க்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்ற எண்ணம் மிகப் பெரிய தவறாகும். நபி(ஸல்) அவர்கள் குறை´களிடையே வேரூன்றிப் போயிருந்த முல்லாப் பரம்பரை யினரை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டினார்கள். தாருந் நத்வா இருந்த சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டது. அங்கு கழிப்பறைக் கட்டப்பட்டுள்ளன. இஸ்லாத்தில் புரோகிதர் களுக்கு இடமே இல்லை என்று தெள்ளத் தெளிவாக அறிவிக்கப்பட்டது. தனக்குப் பின்னால் புரோகிதக் கூட்டமான இந்த முல்லா வர்க்கம் மீண்டும் சமுதாயத்தில் நுழைந்து விடாதிருக்க அஜமியை (அரபி மொழி தெரியாதவன்) விட அரபி (அரபி மொழி தெரிந்தவன்) உயர்ந்தவன் அல்ல.

அதே போல் அரபியை விட அஜமி உயர்ந்தவன் அல்ல என தெள்ளத் தெளிவாக தனது ஹஜ்ஜின் இறுதி உரையில் அறிவித்து விட்டார்கள். அரபி மொழியைக் கொண்டு இந்த முல்லா வர்க்கம் பெருமை பேசிச் சமுதாயத்தைக் கூறு போடுவார்கள் என்று தெரிந்தே நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரித்தார்கள் போலும், காரணம் ஆரம்ப காலத்திலிருந்து இந்தப் புரோகிதர்கள் கூட்டமே (முல்லா வர்க்கமே) மனித சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வைப் போதித்து ஒருவருக் கொருவர் சண்டையிட்டு அழிந்துபடக் கரணமாக இருந்து வருகிறது. இந்தச் சாபக்கேடு தனது உம்மதைத்தைத் தொடராதிருக்க நபி(ஸல்) அவர்கள் பல முன்னெச்சரிக்கைகளைச் செய்திருந்தாலும், இந்த சமுதாயத்தை ஏமாற்றி மீண்டும் இந்த புரோகிதர்களான முல்லா வர்க்கத்தினர் இந்த சமுதாயத்தில் வந்து நுழைந்து ஆதிக்கம் செலுத்து கின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துச் சொன்ன காலம் பாரீர் :

நபி(ஸல்) அவர்களோடு இருந்த நபிதோழர் களில் அரபி எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், அரபி நாட்டைச் சாராத பார்ஸி, ஹபஸி தேசத்தைச் சார்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள், நபிதோழர்களில் குர்ஆன், ஹதீஃதை அதிகமாக அறிந்தவர்களும், அறியாதவர்களும் இருந்துதான் இருக்கிறார் கள். ஆனால் குர்ஆன், ஹதீஃதை அறிந்தவர்கள் தங்களை ஆலிம் அறிந்தவர் என்றும் மற்றவர்களை அவாம்-பாமரர் என்றும் பிரித்துச் செயல்பட்டதாகச் சரித்திரமே இல்லை. மார்க்க விஷயங்களில் பல வி­யங்களை நன்கு தெரிந்தவர் தனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை அந்த ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் அழகிய நடைமுறையைக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கவில்லை. அல்லது தனக்கு குர்ஆன், ஹதீஃதைக் கற்றுக் கொடுத்த உஸ்தாதுக்கு தெய்வாம்சம் கற்பித்து அவர்களை மனித நிலையிலிருந்து தவறே செய்யாத தெய்வ நிலைக்கு உயர்த்தவில்லை.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமல்ல அதற்குப் பின்னும் இந்த அழகிய நிலை நீடித்தே வந்திருக் கிறது. இதற்கு அந்த மரியாதைக்குரிய நான்கு இமாம்களுமே தக்க சான்றாகும். இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் உஸ்தாது. இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் இமாம் ஹன்பல்(ரஹ்) அவர்களின் உஸ்தாது. இமாம் அபூ ஹனிஃபா(ரஹ்) அவர்களின் உஸ்தாதாக ஹம்மாது (ரஹ்) அவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களில் யாரும் தங்களின் உஸ்தாதுகளின் சொல்லு நூறு கிதாபுகளைப் பார்க்கிலும் ஆதாரப்பூர்வமானது என குருட்டுத் தனமாகச் செயல்பட்டதாகத் தெரியவில்லை. குர்ஆன், ஹதீஃதைப் பார்த்தே செயல்பட்டது தெளிவாகத் தெரிகிறது. அதனைத் தெளிவாக அவர்கள் அறிவித்துள்ளதும் சரித்திர ஏடுகளில் பதிவு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் 1986 நவம்பர் அந்நஜாத் இதழில் வெளியிட்டி ருந்தோம்.

அன்றைய கால கட்டத்தை ஆராய்ந்து பார்க்கும் போது நபி(ஸல்) அவர்கள் போதித்தபடியே குர்ஆன் ஹதீஃதையே ஒருவருக்கொருவர் போதித்து வந்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களை அறிந்து போதித்து வந்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களை அறிந்து கொள்வதில் அந்த இமாம்கள் பெரிதும் முயற்சிகள் எடுத்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஃத்கள் கிடைத்தால் அதனை அவசியம் எனக்கு அறிவிக்கவும் என உஸ்தாகிய இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் தனது மாணவராகிய ஹன்பல்(ரஹ்) அவர்களிடம் கூறி இருக்கிறார்கள் என்றால் இதிலிருந்து என்ன தெரிகிறது? உஸ்தாதின் வாக்கை வேதவாக்காகக் குருட்டுத்தனமாக நம்பிச் செயல்படுபவராக இமாம் ஹன்பல்(ரஹ்) அவர்களும் இருந்ததில்லை.

ஆதாரப்பூர்வமான ஹதீஃத் தனது மாணவரிடமிருந்து கிடைத்தால் அதனை உதாசீனம் செய்யும் நிலையில் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களும் இருந்ததில்லை. ஆசிரியராக இருந்தாலும், மாணவராக இருந்தாலும் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களை அறிவதிலும், அவற்றின்படி செயல்படுவதிலுமே குறியாக இருந்திருக்கிறார்கள். அதல்லாமல் ஆசிரியரின் வாக்கை வேதவாக்காக எடுத்துச் செயல்படுபவர்களாகவோ, ஒருவரை ஒருவர் தக்லீது செய்பவர்களாகவோ இருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?

ஒரு முக்கியமான விளக்கம் :

இங்கு குர்ஆன், ஹதீஃதை வைத்துச் சுயமாகச் சிந்தித்து விளங்கிச் செயல்படுவதற்கும், உஸ்தாதையோ, முன்னோர்களையோ நம்பி தக்லீது செய்வதற்கும் உள்ள பெரிய வேறுபாட்டை விளக்குவது நமது கடமையாகும். அல்லாஹ் தனது இறைக் கட்டளையில்,

உங்கள் ரப்பிடமிருந்து இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். மற்றவர்களை உங்கள் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றாதீர்கள். (7:3) என்று தெளிவாகக் கட்டளையிட்டுள்ளான்.

ஒருவர் குர்ஆன், ஹதீஃதை வைத்து சத்தியத்தை விளங்கிக் கொள்ளும் தூய்மையான எண்ணத்துடன் முயற்சி செய்து அதில் அவர் சரியான முடிவுக்கு வந்தால் அவருக்கு இரண்டு நன்மை. ஒன்று முயற்சி செய்ததற்கு மற்றொன்று சரியான முடிவுக்கு வந்ததற்கு. ஆயினும் அவர் தவறான முடிவுக்கு வந்தால் முயற்சி செய்ததற்கு ஒரு நன்மை உண்டு. (அமர்பின் ஆஸ்(ரழி), அபூ ஸரமா(ரழி), புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ)

இப்போது இந்த குர்ஆன் வசனத்தையும், ஹதீஃதையும் வைத்துச் சிந்தித்துப் பாருங்கள்.

குர்ஆனையும், ஹதீஃதையும் வைத்துக் கொண்டு ஒருவர் சத்தியத்தை விளங்க முற்படுகிறார். அவர் எண்ணத்தில் தூய்மை இருக்கிறது. ஆயினும் அவரது இயலாத தன்மையின் காரணமாக சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் ஆஜராகும் போது யா அல்லாஹ் நான் உனது நெறிநூலையும், உனது தூதரின் நடைமுறைகளையும் வைத்து தூய எண்ணத்தோடு 7:3 வசனத்தின்படி உனது கட்டளைக்கு வழிபட்டு ஆராய்ந்து செயல்பட்டேன். எனது இயலாமையால் அதில் தவறான முடிவுக்கு வந்து விட்டேன் என்று முறையிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயம் அல்லாஹ் அவரை மன்னிப்பான் என்று நம்ப இடமிருக்கிறது. அதே சமயம் அல்குர்ஆன், ஹதீஃதை தன்னால் விளங்க முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையால் அவற்றில் முயற்சி செய்யாமல், ஒரு இமாமையோ, அல்லது உஸ்தாதையோ அவர்கள் தன்னை நரகத்திலிருந்து பாதுகாப்பார்கள் என நம்பி அவர்களை தனது பாதுகாவலர்களாக்கி அவர்களைத் தக்லீது செய்தார் என்று வைத்துக் கொள்வோம். நாளை அல்லாஹ்வின் தர்பாரில் என்ன சொல்வார்? குர்ஆன், ஹதீஃதை என்னால் விளங்க முடியாது என எண்ணி இந்த இமாமை நான் தக்லீது செய்தேன் என்றுதான் சொல்ல முடியும்.

இப்போது சிந்தியுங்கள், குர்ஆன், ஹதீஃத் எளிதானவை, தெளிவானவை, இரவும், பகலைப் போன்று வெள்ளைவெளேர் என்று தெளிவாக்கப்பட்டவை என்றுதான் குர்ஆனிலும், ஹதீஃதிலும் காணப்படுகிறது. குர்ஆன், ஹதீஃதை விளங்க முடியாது. அல்லது விளங்குவதற்குக் குறிப்பிட்ட சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் ஒரே ஒரு வரியும் இல்லை. அது மட்டுமல்ல. யாரையும் தங்கள் பாதுகாவலர்களாக ஆக்கி பின்பற்றுவதற்கும் ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக அவ்வாறு மற்றவர்களைப் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றக் கூடாது என 7:3 வசனத்தில் கட்டளையிட்டிருக் கிறான் அல்லாஹ்.

இந்த நிலையில் நாம் ஒருவரை நம்பி அவர் ஆய்வு செய்து ஃபத்வா என்று சொல்வதை வேதவாக்காக ஏற்றுச் செயல்படுவது, அவரைப் பின்பற்றி நடப்பது அதாவது தக்லீது செய்வது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ததாகத்தானே முடியும். நான் என இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களைப் பின்பற்றும்படி தெளிவாக கட்டளையிட்டுள்ளேன். மற்றபடி இமாம்களான அபூ ஹனீஃபாவையோ, மாலிக்கையோ, ஷாபிஈயையோ, ஹன்பலையோ(ரஹ்-ம்) கண்மூடி பின்பற்றும்படி அதாவது தக்லீது செய்யும்படி எங்கே கட்டளையிட்டுள்ளேன் என்று அல்லாஹ் மறுமையில் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? அல்லாஹ்வின் தெளிவான கட்டளைக்கு மாறு செய்த குற்றத்திற்கு ஆளாக வேண்டி வருமா, வராதா? என்பதை நிதானமாகச் சிந்தித்துச் செயல் பட முன்வாருங்கள்.

மனமுரண்டாகச் செய்யும் தவறுக்கு மன்னிப்புண்டா?

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுச் செயல்பட்டால் அதில் குறை ஏற்பட்டாலும் அல்லாஹ் மன்னிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் அல்லாஹ்வின் கட்டளைக்கு அதுவும் அதனை அறிந்த நிலையில் மாறு செய்கிறவனை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்? அறிந்த நிலையில் அல்லாஹ் வின் கட்டளைக்கு மாறு செய்த ஷைத்தானின் கதி தான் ஏற்படும். அல்லாஹ் காப்பானாக! எந்த நிலையிலும் தக்லீது செய்யும் முகல்லிதாக இருக்க குர்ஆன், ஹதீஃதில் அணுவளவும் ஆதாரம் இல்லாத நிலையில்தான் இந்த அரபி மதரஸாக்கள் தக்லீதை மிகக் கடுமையாக வலியுறுத்திப் போதித்து வருகின்றன.

உண்மையில் இந்த அரபி மதரஸாக்களுக்கு மக்களுக்கு மத்தியில் செல்வாக்கு எற்பட்டதே மிகச் சமீப காலத்தில்தான். ஆங்காங்கே தெரு திண்ணைகளில் உட்கார்ந்து கொண்டு தங்களின் குருட்டுத்தனமான குப்பைக் கொள்கைகளை போதித்துக் கொண்டிருந்த இந்த முகல்லிது முல்லக்களுக்கு மக்களிடையே இப்போதுதான் செல்வாக்கு ஏற்பட்டு வளர்ந்திருக்கிறார்கள். பல அரபி மதரஸாக்களை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. சூஃபியிஸ இஸ்லாத்தை இவர்கள் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் தோற்றுவித்துப் போதித்து வந்தாலும் 900 வருடங்களுக்கு மேலாகத் தங்களின் தவறான கொள்கையை தெருத் திண்ணைகளிலும் மறைவிடங்களிலும் வைத்தே போதிக்கும் நிலை இருந்து வந்தது.

கடந்த 100 வருடங்களுக்குள்தான் இப்படி அரபி மதரஸாக்களாக வளரும் வாய்ப்பு ஏற்பட்டது. நடிகர்களுக்கு நீண்ட நெடு நாட்களாக கூத்தாடிகள், திண்ணைத் தூங்கிகள் என்ற பெயரே நிலைத்திருந்தது.கடந்த 100 வருட கால கட்டத்தில் கூத்தாடிகள் மக்களி டையே செல்வாக்குப் பெற்றுத் தலைவர்களாகி மக்களை ஆட்சி செய்யும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டது போல்தான் இந்த முகல்லிது முல்லாக்களும் வளர்ந்துள்ளார்கள்.

அதேபோல் 1986 ஏப்ரலிலிருந்து 1987ஜூன் வரை இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கில்லை; ஆலிம்-அவாம் வேறுபாடு இல்லை; புரோகிதர்களை நாங்கள் சப்ளை செய்வதில்லை. ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் சுயமாக குர்ஆன், ஹதீஃதை நேரடியாக விளங்கிச் செயல்பட வேண்டும். கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி கூடாது என்றெல்லாம் குர்ஆன், ஹதீஃத் நேரடியாகக் கூறுவதை ஒப்புக்கொண்டு பேசிய எழுதிய தவ்ஹீத்(?) முல்லாக்கள் 1987 ஜூலையில் நம்மைவிட்டு வெளியேறி வசூல்ராஜாக்களாக மாறி, தங்களின் இயக்கங்களையும், புரோகித வர்க்கத்தையும் வளர்க்கவும், ஹராமான வழியில் வயிறு வளர்க்கவும் அவர்களுக் கென்று புரோகித மதரஸாக்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த மவ்லவிகளும் புரோகிதக் குட்டையில் ஊறிய மட்டைகளே என்பதை நிரூபித்து வருகின்றனர்.

சு.ஜ. மதரஸாக்களில் காணப்படும் கூடா ஒழுக்கம், இழிசெயல்கள் அனைத்தும் இவர்களின் த.ஜ. மதரஸாக்கலிலும் நிறைந்து காணப்படுகின்றன.

கடந்த 100 வருட மற்றும் 30 வருட காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை வைத்துக் கொண்டுதான் இந்த முல்லாக்கள் நாங்கள்தான் நபிமார்களின் வாரிசுகள், மக்களின் தலைவர்கள், எங்கள் சொல்படி தான் மார்க்க விஷயத்தில் மக்கள் நடக்க வேண்டும் என தம்பட்டம் அடிக்கின்றனர். இவை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த தாருந் நத்வா வினரின் கூற்றுகளை நினைவுபடுத்துகிறதா? இல்லையா? என்பதை இஸ்லாமிய சரித்திரம் நன்கு அறிந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும். இவர்களின் ஜ.உ.சபைகள் அமைக்கப்பட்டு 80 மற்றும் 30 ஆண்டுகள் கூட ஆகவில்லை என்பதே உண்மையாகும். இந்த நிலையில் தூய இஸ்லாத்தில் தனி உரிமை கொண்டாட அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

மடைமைக்கும் எல்லை உண்டோ?

இந்த முகல்லிது, தவ்ஹீது முல்லாக்களிடம் இன்னொரு பொருளற்ற வினோத நிலையையும் பார்க்க முடிகிறது. அதாவது, இவர்களின் இந்த அரபி மதரஸாக்களில் சில ஆண்டுகள் ஓசிச் சோறு சாப்பிட்டுக் கொண்டு தங்கியவர்கள் மட்டுமே ஆலிம்களாக இருக்க முடியும். அதல்லாமல் கல்லூரிகளில் படிப்புக்காகவும், சாப்பாடு மற்றும் தங்கும் வசதிகளுக்காகவும் பணம் கட்டிப் படித்து அரபி மொழியில் பட்டம் பெற்று பாண்டித்யம் பெறுகிறார்களே அப்படிப்பட்டவர்களை இந்த முகல்லிது தவ்ஹீது முல்லாக்கள் ஆலிம்களாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அரபு நாட்டிற்கே போய் அங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கிக் கற்று அரபி மொழியில் தெளிவாக எழுதப் பேசக் கற்று குர்ஆன், ஹதீஃதைத் தெளிவாகப் புரிகிறவர்கள் இவர்களிடத்தில் ஆலிம்களாக கருதப்படமாட்டார்கள்.

அதைவிட வேடிக்கை இவர்களின் இந்த மதரஸாக்களில் சில வருடங்கள் தங்கி ஓசிச் சோறு சாப்பிட்ட நிலையில் மவ்லவி ஸனது கொடுக்கப்பட்டு ஆலிம்களாக இவர்களால் கருதப்பட்டவர்கள், ஒப்புக் கொள்ளப்பட்டவர்கள் அதன்பின் அரபு நாடு சென்று அதற்கு மேல் 5 ஆண்டுகளோ 10 ஆண்டுகளோ செலவிட்டு அரபி மொழியில் திறமையாக எழுதவும், பேசவும், குர்ஆன், ஹதீஃதை அதிகமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டால் அவர்கள் இந்த முல்லாக்களிடத்தில் ஆலிம்களின் நிலையை இழந்து ஜாஹில்களாக ஆகிவிடுகிறார்கள். இதனை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? சிந்தித்துப் பாருங்கள்.

அறிவற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்றே விதிகள் அமைத்து அப்படித் தேர்ந்தெடுத்த பின்பும் அவர்களிடம் மிச்சம் மீதியுள்ள சுய சிந்தனையை யும் போக்கி அவர்களுக்கு மூளைச் சலவை செய்து அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் அத்வைதத்தை இறைவனும் அடியானும் இரண்டறக் கலக்கும் நிலையை ஒப்புக்கொள்ளச் செய்து, உஸ்தாதுகளை தெய்வாம்சம் பொருந்தியவர்களாக நம்பச்செய்து இவற்றிற்குச் சாதகமாக இவர்களால் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ள பிக்ஹு நூல்களை அவர்களின் மண்டைகளில் ஏற்றி மவ்லவிகளாக ஆலிம் களாக(?) வெளியே அனுப்புகிறார்கள். அந்த மவலவிகளுக்கு அரபியைத் தெளிவாகப் பேசவோ, எழுதவோ தெரியாது. குர்ஆன், ஹதீஃதை நேரடி யாக விளங்கும் ஆற்றலும் இல்லை.

அவர்கள் மதரஸாவில் காலம் கழிக்கும்போது திட்டமிட்டு போதிக்கப்பட்ட ஆசிரியர்களை தெய்வாம்சம் பொருந்தியவர்களாகக் கருதும் அறிவும், அறைகுறையாக அறிந்துகொண்ட பிக்ஹு சட்டங்களும் மட்டுமே தெரியும். அதனடிப்படையில் எனது கண்ணியத்திற்குரிய உஸ்தாது சொன்னது எனக்கு நூறு கிதாபுகளைப் பார்ப்பதை விட ஆதாரமானது என்று உஸ்தாதுகளைக் குருட்டுத்தன மாக நம்பிக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் இவர்களை ஆலிம்களாக இந்த மதரஸாக்கள் ஒப்புக் கொள்ளும்.

ஆனால் அதன்பின் அவர்கள் அரபு நாட்டிற்குச் சென்று அங்கு முறையாக அரபி மொழியையும், குர்ஆனையும், ஹதீஃதையும் கற்றுக் கொள்வதால் அவர்கள் இதுகாலம் வரை தாங்கள் இருந்துவந்த மடமை நிலை விளங்கி குப்பைக் கிதாபுகளில் இருந்த மோகம் நீங்கி சத்திய வழியா கிய குர்ஆனையும், ஹதீஃதையும் நேரடியாக விளங்கிச் செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர். இந்த நிலையில் இவர்களை ஆலிம்கள் என ஒப்புக்கொண்டால் இந்த முகல்லிது முல்லாக்களின் நிலை என்னாவது? அதனால்தான் இவர்களிடம் மவ்லவி ஆலிம் பட்டம் பெற்ற பின் அரபு நாடு சென்று மேல் கல்வி கற்றுக்கொண்டால் அவர்கள் ஜாஹில்களாக மாறி விடுகின்றார்கள் என புதிய பாடம் சொல்லித் தருகின்றனர். இதைவிட பேதமையை வேறு யாரிட மும் பார்க்க முடியுமா? என சிந்தித்துப் பாருங்கள்.

இன்னொரு சீர்கேடு :

இந்தச் சமுதாயத்தில் இந்த அரபு மதரஸாக்களைக் கொண்டு இன்னொரு சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது என்பதை நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. தகுதியற்றவர்களைத் தேர்ந் தெடுத்து பயனற்ற பாடம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதரஸாவுக்கு ஓதச் சென்றவர்களில் சிலர் நாம் முன்பு குறிப்பிட்டுள்ள சில காரணங்களால் வெளியே வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகில் வாழ வேறு வழி வகை தெரியாத நிலையில் இருக்கிறார்கள். எனவே கூசாமல் மக்களிடம் அதுவும் பெரும்பாலும் மஸ்ஜிதுகளிலேயே யாசகம் கேட்டு பிழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

இந்த மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்தேன். தொடர்ந்து ஓத முடியவில்லை. இன்னின வகையில் சிரமங்கள் இருக்கின்றன. எனவே தயவு செய்து பொது மக்களே எனக்கு உதவுங்கள் என்று மஸ்ஜிதுகளில் பிச்சை எடுப்பதையும் பார்க்கத்தான் செய்கிறோம். மாற்று மதங்களில் தெய்வப் பணி செய்கிறவர்கள் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் என்ற தொரு நியதி உண்டு. அதனை இவர்களும் கடைபிடித்து வருகிறார்கள்.

நபிமார்களால் போதிக்கப்பட்ட தூய இஸ்லாத்தை மதமாக்கிய புரோகிதர்கள் கடைபிடிக்கும் நடைமுறைகள் பெரும்பாலும் எல்லா மதங்களிலும் சின்னஞ்சிறு வித்தியாசங்களுடன் ஒத்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த முல்லாக்கள் யூத கிறிஸ்தவர்களை அப்படியே பின்பற்றுகின்றனர். அவர்கள் மேடைகளில் ஹதீஃத்கள் என்று முழங்கும் பெரும்பாலான கட்டுக்கதைகளும், கப்ஸாக்களும் தோராவிலும், பைபிள்களிலும் இருப்பதைக் காணலாம். திருடன் மற்றவர்களைத் திருடன், திருடன் என கத்திக் கொண்டு தப்பிச் செல்வது போல் இந்த முல்லாக்கள் குர்ஆன், ஹதீஃதை மட்டும் எடுத்துச் சொல்லும் நம்மை யூத கிறிஸ்தவர்களின் நடைமுறைகளை போதிக்கிறோம் என்றும் குழப்பவாதிகள் என்றும் மேடைகள் தோறும் பிரச்சாரம் செய்வது திருடனின் பாணியிலேயாகும்.

உண்மையில் முகல்லிது, தவ்ஹீது முல்லாக்களே குழப்ப வாதிகளாகவும், யூத கிறிஸ்தவ நடைமுறை களை இஸ்லாத்தின் பெயரால் செயல் படுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நடுநிலை மக்கள் நிதானமாகச் சிந்தித்தால் விளங்க முடியும். ஹிந்துக்களிடம் காணப்படும் குருகுலக் கல்வியும், வேதக்காரர்களிடம் காணப்படும் குருத்துவக் கல்வியும் இந்த முல்லாக்கள் இந்த மதரஸாக்களில் நடைமுறைப்படுத்தும் புரோகிதக் கல்வியும் ஆக இவை மூன்றும் ஒரே அடிப்படையிலானவையே. மக்கள் சத்தியத்தை உணர முடியாமல் மறைப்பதையும், வேறு யாரும் சத்தியத்தை உணர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்ல முன் வந்தாலும் அவர்கள் மீது அபாண்டமாக அவதூறுகள் கூறி மக்களை அந்தச் சத்தியவான்களிடமிருந்து பிரிப்பதையும் செம்மையாகச் செயல்படுத்தத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கல்வி முறையுமே, இப்புரோகிதக் கல்வி, மக்களை மதத்தின் பெயரால் ஏமாற்றி இந்தப் புரோகிதர்கள் மக்களிடையே தெய்வாம்சத்துடன் திகழவும், அற்ப உலக ஆதாயம் அடைந்து கொள்ளவும், வயிறு வளர்க்கவும் அமைத்துக் கொண்ட மிக இழிவான வழிமுறையேயாகும்.

முடிவுரை :

நீங்கள் இதுகாலம் வரை பெரிதாக எண்ணிக் கொண்டிருந்த இன்றைய அரபி மதரஸாக்களின் உண்மை நிலையை அறிந்து கொண்டீர்கள், அவற்றில் தங்கி சில ஆண்டுகளுக்குப்பின் மவ்லவி ஆலிம்(?) என்று ஸனது பெற்று வெளி வருபவர்களின் தரம் பற்றியும் அறிந்து கொண்டீர்கள். இப்படிப்பட்டவர்களை நம்பி இந்தச் சமுதாயத்தை அவர்களிடம் ஒப்படைத்ததால்தான் இஸ்லாமிய சமுதாயம் இந்த அளவு அடி பாதாளத்தில் தள்ளப் பட்டிருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் இழி நிலை மாறி அது இழந்துவிட்ட மிக உன்னத நிலையை மீண்டும் எட்டிப் பிடிக்க வேண்டுமென் றால் இரண்டில் ஒன்று அவசியம் செய்யப்பட்டே ஆக வேண்டும். ஒன்று இந்தப் புரோகித முல்லாக்கள் சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உருவாக்கி வைத்துள்ள பிக்ஹு என்ற பெயரால் இருக்கும் நூல்கள் அனைத்தையும் நெருப்பிலிட்டு பொசுக்கி விட்டு குர்ஆனையும், ஹதீஃதையும் மட்டும் இந்த மதரஸாக்களில் போதிக்க முன் வரவேண்டும்.

அதற்கு இந்தப் புரோகித முல்லாக்கள் சம்மதிக்காவிட்டால் பொது மக்கள் தாராளமாக வழங்கி வரும் நன்கொடைகள், ஜகாத், குர்பானித்தோல், மற்றும் தான தர்மங்கள் அனைத்தையும் நிறுத்துவது கொண்டு இந்த முல்லாக்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும். இதுவும் சாத்தியமில்லாவிட்டால் இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும். இந்த மதரஸாக்களை நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தாருந்நத்வா அழித்தொழிக்கப்பட்டது போல் அழித்தோழிக்கப்படுவதைத் தவிர வேறு மார்க்க மில்லை. இதனை முஸ்லிம் சமுதாயம் உணர்ந்து செயல்படும் காலம் வெகு தூரத்திலில்லை.

இன்னொரு தகவலைத் தந்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம். சுமார் 32 அல்லது 34 ஆண்டு களுக்கு முன்னால் வடநாட்டில் சில நல்லெண்ணம் கொண்டவர்களைக் கொண்டு ஒரு முயற்சி நடைபெற்றது. இந்த மதரஸாக்களில் கடைபிடிக்கப்படும் பாடத் திட்டங்களிலுள்ள குறைகளைப் போக்கிச் சமுதாயத்திற்குப் பலனளிக்கும் வகையில் பாடதிட்டத்தை மாற்றி அமைக்கும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத் தில் கலந்து கொண்ட முகல்லிது முல்லாக்கள் அதனை மிகக்கடுமையாக எதிர்த்து காரியம் நிறைவேறாமல்ஆக்கி விட்டனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் அதைவிட ஆத்திரத்தை உண்டு பண்ணுவதாக இருக்கிறது. நமது முன்னோர்களால் எழுதப்பட்ட இப்போதுள்ள கிதாபுகளை வைத்து பாடம் நடத்துவதால்தான் பரக்கத் இருக்கிறது.

அந்தக் கிதாபுகளை அகற்றி விட்டால் பரக்கத் போய்விடும் என குருட்டுவாதம் செய்துள்ளனர். இப்ராஹீம்(அலை) அவர்களால் போதிக்கப்பட்ட சத்திய இஸ்லாம் மார்க்கத்தில் குறைஷ்களால் இடைக் காலத்தில் புகுத்தப்பட்ட சடங்குகளை நபி (ஸல்) அவர்கள் களைந்து சத்திய இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்ட பாடுபட்டபோது குறைஷ் காஃபிர்கள் (குறிப்பாக அபூலஹப்) முன்னோர்கள் மீதுள்ள குருட்டு பக்தியால் என்ன வாதத்தை எடுத்து வைத்தனரோ அதே வாதத்தையே இந்த முகல்லிது முல்லாக்களும் எடுத்து வைக்கின்றனர்.

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : திருடன் மக்களின் சாமான்களை மட்டுமே திருடுவான். மவ்லவி புரோகிதர்களோ மக்களின் ஈமானையும் சாமான்களையும் சேர்த்தே திருடுகிறார்கள். மவ்லவிகள் அரபு மொழி ஆணவம் கொண்டவர்கள், புரோகிதர்கள், திருடர்கள் என்று கூறும் நீங்கள் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆன், ஹதீஃதைத் தானே ஆதாரம் காட்டுகிறீர்கள். மவ்லவிகளைத் திட்டிவிட்டு அவர்களின் மொழியாக்கத்தை ஆதாரம் காட்டுவது முரணாகத் தெரியவில்லையா? ஹி.ஹாஸிக் முகம்மது, சென்னை.

விளக்கம் : 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தான் வழிகேடுகள் அனைத்தையும் அழகாகக் காட்டி மனிதக் குலத்தினரை நரகில் தள்ள பெரும் முயற்சி எடுத்து வருகிறான். அந்த அடிப்படையில் நல்லவர்கள்-நேர்வழி நடப்பவர்கள்-நேர்வழியைக் காட்டுபவர்கள் என்று நம்பி, அப்படிப்பட்டவர்கள் கூறும், எழுதும் வழிகேடுகளையும் நேர்வழியாக ஏற் றுக் கொள்வதும், அதற்கு மாறாக கோணல் வழிநடப்பவர்கள், வழிகேடுகளை எழுதுபவர்கள், பேசுபவர்கள் சமயங்களில் அழகானதை-நேர்வழியை- சத்தியத்தைச் சொன்னாலும், எழுதினாலும் அவற்றை நேர்வழி அல்ல; வழிகேடு என்று நிராகரிப்பதும் மனிதனின் மனோ இச்சை அழகாகக் காட்டும் நிலை அதிகமான மனிதர்களிடம் காணப்படுகிறது. இதற்கு ஓர் எளிய உதாரணம் கூறுகிறோம் கேளுங்கள்!

ஒரு முஸ்லிமுக்கும் ஒரு நாத்திகனுக்கும் இறைவன் உண்டா? இல்லையா? என்று கடுமையான வாதம் நடைபெறுகிறது. முஸ்லிம் கடவுள் உண்டு என்பதற்கு அறிவுப்பூர்வமான விளக்கங்களை எடுத்து வைக்கிறார். நாத்திகனோ அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் அவை அனைத்திற்கும் உரிய விளக்கம் தர முடியாமல், ஏதேதோ பிதற்றி தப்பிச் செல்ல வழிபார்த்துக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் பள்ளியில் தொழுகைக்கு அழைப்பு விடுத்து பாங்கு சொல்லப்படுகிறது.

அந்த நாத்திகன் இதுதான் சாக்கு என்று “பாய் தொழுகைக்கு அழைப்பு வந்துவிட்டது. நீங்கள் போய் தொழுங்கள் என்று கூறுகிறான். அதற்கு இந்த முஸ்லிம் “நீங்கள் நாத்திகன், கடவுளை மறுக்கிறவர் தொழு கையைப் பற்றி நீங்கள் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது, நான் தொழப்போகமாட்டேன் என்று சொல்வாரானால், அந்த நாத்திகனை விட இவர்தான் படு நாத்திகராக ஆகிறார். நாத்திகன் கடவுள் மறுப்புக் கொள்கையுடையவராக இருந்தாலும், விவாதத்திலிருந்து விடுபட்டுத் தப்பிச் செல்லும் சுயநல நோக்கத்துடன் தொழுகைக்குப் போகச் சொன்னாலும், அது விதிக்கப்பட்டக் கண்டிப்பாக ஜமாஅத்துடன் தொழவேண்டிய கடமையாக இருப்பதால் அதை ஏற்றுத் தொழச் செல்வதே முஸ்லிமீன் கடமையாகும். நீ சொல்லி நான் தொழப்போவதா? போகமாட்டேன் என்று மறுப்பது குஃப்ராகும். இறை நிராகரிப்பாகும்.

இதோ குர்ஆன் கூறுகிறது :

எவர்கள் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களை (மவ்லவிகள்) வணங்குவதை விட்டும் விலகி, முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்குகிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம்-சுப சோபனம். ஆகவே(அந்த) என்னுடைய அடியார்களுக்கு நன்மாராயம்-சுபசோபனம் கூறுவீராக! (39:17)

அவர்கள் சொல்லைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத்தான். இவர்கள்தான் அறிவுள்ளவர்கள். (39:18)

இந்த 39:17,18 குர்ஆன் வசனங்களை மீண்டும் மீண்டும் படித்து அதன் சத்தையும் சாரத்தையும் உள் வாங்கிக்கொள்ளுங்கள். இவ்வசனங்கள் என்ன கூறுகின்றன. 39:17 வசனம் குறிப்பிடும் தாஃகூத் யார்? மற்றவர்களின் குறிப்பாக குர்ஆனையும், ஹதீஃதையும் மட்டுமே பேசுபவர்களின், எழுதுபவர்களின் பேச்சை கேட்க விடாமல், எழுத்துகளைப் படிக்க விடாமல் தடுப்பவர்களே தாஃகூத் என்ற மனித ஷைத்தான்கள். குறிப்பாக மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டவர்கள். ஏன் தடுக்கிறார்கள்?

மக்களுக்கு குர்ஆன், ஹதீஃத் அறிவு கிடைத்து விட்டால் இம்மதகுருமார்களின் தில்லுமுல்லுகள், பித்தலாட்டங்கள், ஏமாற்றுத் தந்திரங்கள், மக்களை மயக்கும் சூனியப் பேச்சு இவை அனைத்தையும் அறிந்து இம்மவ்லவிகளைப் புறக்கணித்து குர்ஆனை 3:103 இறைக் கட்டளைப்படி பற்றிப் பிடித்து அதன்படி நடக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் தடுக்கிறார்கள். அவர்கள் குர்ஆன், ஹதீஃத் போதனையைத் தடுப்பதை ஏற்று குர்ஆன், ஹதீஃதை அறிய முன் வராதவர்கள் அம்மவ்லவிகளை 9:31 இறைவாக்குச் சொல்வது போல் ரப்பாக ஏற்று அவர்களை வணங்குகிறார்கள். கொடிய ஷிர்க்கில் மூழ்குகிறார்கள்.

அதற்கு மாறாக இம்மவ்லவிகளின் கூற்றை வேத வாக்காகக் கொள்ளாமல், யார் பேசினாலும் கேட்டு, யார் எழுதினாலும் படித்து அவற்றில் அழகானதை குர்ஆன், ஹதீஃத் போதனைப்படி உள்ளதை எடுத்து நடக்கிறார்களோ அவர்கள் ஷிர்க் செய்யவில்லை. (இணை வைக்கவில்லை) அவர்கள்தான் அல்லாஹ் வின் நன்மாராயத்திற்குரியவர்கள், நேர்வழி நடப்பவர்கள் அறிவுள்ளவர்கள். இப்போது முஸ்லிம் சமுதாயம் எப்படிப்பட்ட பெரும் வழிகேட்டில் இருக்கிறது தெரியுமா? 3:103 இறைவாக்குக் கூறுவது போல், ஒட்டுமொத்த மனித குலமும் எண்ணற்றப் பிரிவுகளாகப் பிரிந்து நரக விளிம்பில் நிற்கிறது. காரணம் என்ன?

குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்காமல் ஒவ்வொரு பிரிவாரும் அவர்கள் மூடத்தனமாக நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்கள், தலைவர் கள் பின்னால் கண்மூடிச் செல்கின்றனர் (தக்லீது). அம்மதகுருமார்களும், தலைவர்களும் எப்படிப்பட்டவர்கள்? அவர்களது குருட்டுப் பக்தர்களால் ஆகா, ஓகோ என வானளாவப் புகழப்பட்டு அவர்களைப் பற்றிய ஓர் உயர்ந்த இமேஜைப் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்களின் குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்ட கருத்துக்களையும் வேதவாக்காகக் கொண்டு அப்படியே கண்மூடிப் பின்பற்றும் பக்தர்களைப் பெரும் கூட்டமாகக் கொண்டவர்கள். கூட்ட மயக் கத்தில் அப்படிப்பட்ட மதகுருமார்கள், தலைவர்கள் பின்னால்தான் பெருங்கூட்டம் சேரும்! (பார்க்க : 6:116, 5:100)

அதற்கு நேர்மாறாக நேர்வழியை-குர்ஆன், ஹதீஃதை மட்டுமே மக்கள் மன்றத்தில் வைப்பவர்களைப் பற்றி இம்மதகுருமார்களும், தலைவர்களும் அவர்களது முரட்டுப் பக்தர்களும் மக்களிடையே பரப்பும் பொய்ச் செய்திகளை, அவதூறு செய்திகளை அப்படியே வேதவாக்காகக் கொண்டு அவர் களின் நேரடி குர்ஆன், ஹதீஃத் செய்திகளையே நிராகரிக்கும் நிலையிலேயே இன்றைய பெரும் பான்மை முஸ்லிம்கள் இருக்கிறார்கள். (பார்க்க: 32:13, 11:118,119 இன்னும் எண்ணற்ற வசனங்கள்)

நேர்வழியை-குர்ஆன், ஹதீஃத் போதனைகளை ஏற்பவர்கள் மிகமிகக் குறைவாக இருப்பதால், பெருங் கூட்டத்தைக் கண்டு மயங்குகிறவர்கள் குர்ஆன், ஹதீஃத் போதனைப்படி நடப்பவர்கள் மிகவும் சிறிய கூட்டமாக இருப்பதால், உண்மை, நேர்வழி என்று தெரிந்தாலும், அதை ஏற்கத் தயங்கு கிறார்கள். ஆக நல்லவர்கள் எனப் போலியாகப் போற்றப்படுகிறவர்களின் குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்ட நரகிற்கு இட்டுச் செல்லும் கருத்துக்களும் வேத வாக்காகக் கொள்ளப்படுகின்றன. அதற்கு மாறாக கெட்டவர்கள் எனப் போலியாக அறிமுகப்படுத்தப்படுகிறவர்களின் குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்துக்களும் நிராகரிக்கப்படுகின்றன.

ஆனால் உண்மை நிலை என்ன? “யானைக்கும் அடி சறுக்கும்” என்பது போல், உண்மையான நல்லடியார்களிடமும் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நபிமார்களே தவறு செய்து வஹி மூலம் திருத்தப்பட்டப் பல குர்ஆன் வசனங்களைப் பார்க்கிறோம். இந்த நிலையில் மிகமிகக் கொடிய ஹராமில் வயிறு வளர்க்கும் இம்மதகுருமார்கள், இயக்கத் தலைவர்கள் கோணல் வழிகளை நேர்வழியாகக் காட்டும் நிலைக்குப் பஞ்சமா ஏற்படும்.

ஆயினும் அவர்களிலிருந்தும் ஒரு சில நேர்வழிக் கருத்துக்கள் வெளிப்படத்தான் செய்யும். அவற்றை ஏற்பதை குர்ஆன், ஹதீஃத் தடுக்கவில்லை. இதைத்தான் 39:18 இறைவாக்குக் கூறுகிறது. இந்த இறைக்கட்டளைக்கு அடிபணிந்தே ஒரு பள்ளியில் இமாமாக நியமிக்கப்பட்டு தொழவைப்பவர் எப்படிப்பட்டக் கொடிய ஷிர்க்கில் மூழ்கி இருந்தாலும், அவர் செய்யும் நற்செயலான தொழுகையில் அவரைப் பின்பற்றி அத்தொழுகையை தொழுது வருகிறோம்.

அதேபோல் அவர்கள் எப்படிப்பட்ட வழிகேட்டிலிருந்தாலும், ஆடு, மாடு, நாய், பன்றி,கழுதையை விட கேடுகெட்டவர்களாக இருந்தாலும் (7:179) அவர்கள் மொழி பெயர்த்துள்ள குர்ஆனிலுள்ள சரியான கருத்துக் களை எடுத்து எழுதுகிறோம். தவறான கருத்துக் களைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறோம். 1925 வரை இம்மவ்லவிகள் குர்ஆன் தமிழில் தரப்படுவதை மிகவும் கடுமையாகத் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கடந்த 91 வருடங்களுக்குள் தான் சுமார் 15 குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. ஒரேயயாரு மொழி பெயர்ப்புக் கூட நடுநிலையோடு மொழி பெயக்கப்பட்டதல்ல. ஒவ்வொன்றும் அவரவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹபு, தரீக்கா, இயக்கம், அமைப்புப் போன்ற பிரிவுகளை நியாயப்படுத்தும் அடிப்படையிலேயே மொழி பெயர்த்திருக்கிறார்கள். நடுநிலையோடு உள்ளது உள்ளபடி ஒரேயயாரு மொழிபெயர்ப்பும் இல்லை. எனவே அவற்றிலிருந்தே நேர்வழியை முயற்சி செய்து (29:69) தெரிவுசெய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

விமர்சனம் : குர்ஆனை தவிர்த்து அனைத்து மனித கரம் பட்ட நூல்களிலும் தவறுகள் ஏற்படத்தான் செய்யும். இந்நிலையில் புகாரீ, முஸ்லிம் போன்ற ஹதீஃத் நூல்களில் தவறே ஏற்படாது என்று கூறுவது எப்படி. ஹி.ஹாஸிக் முஹம்மது, சென்னை-50.

விளக்கம் : இறைவனால் இறக்கியருளப்பட்ட ஒரே நேர்வழி காட்டும் நூல் அல்குர்ஆனைத் தவிர மனித கரம் பட்ட அனைத்து நூல்களிலும் தவறுகள் ஏற்படத்தான் செய்யும். இதுவரை வெளிவந்த சுமார் பதினைந்து குர்ஆன் மொழிபெயர்ப்புகளிலும் அவை மத்ஹபு,தரீக்கா, ஸலஃபி, முஜாஹித், அஹ்லஹதீத், அஹ்ல குர்ஆன், காதியானி, ததஜ, ஜ.இ. போன்ற கழகங்கள், இயக்கங்கள், ஜமாஅத்துகள், கமிட்டிகள், அமைப்புகள் என எண்ணற்றப் பிரிவினரால் அவர்களின் கொள்கைக் கோட்பாடு களுக்கு அமைய மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால் அவற்றிலும் பல மனிதக் கருத்துக்கள் நுழைக்கப்பட்டே இருக்கின்றன. பல தவறுகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு சுமார் 200 வருடங்களுக்குப் பின்னர் கோர்வை செய்யப்பட்ட புகாரீ, முஸ்லிம் போன்ற ஹதீஃத் நூல்களில் தவறே இல்லாதிருக்க முடியுமா? அரபு மூலத்திலுள்ள குர்ஆன் மட்டுமே சஹீஹ். அதிலும் குறைபாடுகள் உண்டு என்று பிதற்றுகிறவர்கள் அல்லாஹ்வையே சந்தேகப்படும் வடிகட்டின மூடர்களாகவும், 15:9 இறைவாக்கை நிராகரித்து காஃபிராகவும் மட்டுமே இருக்கமுடியும். ஹதீஃத் நூல்களுக்கு ஸஹீஹைன், ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஸஹீஹைன், ஸிஹாஹ் ஸித்தா என்று அடைமொழியிட்டு பிரபல்யப்படுத்தி வருவது இப்புரோகித மவ்லவிகள் தங்கள் புரோகிதத் தொழிலை ஜாம் ஜாம் என்று வளமாக நடத்துவதற்கே! இப்புரோகிதர்களின் ஆபாக்களான முன்னோர்களால் சுமார் 10 லட்சத்திற்கும் மேல்பட்ட பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட சந்தேகத்திற்குரிய ஹதீஃத்கள் ஹதீஃத் நூல்களில் பரவிக்கிடக்கின்றன.

எப்படி ஹிந்து,யூத, கிறித்தவர்கள் மனிதக் கரம் பட்டு மாசுபட்டு அவர்களின் கைகளில் வேதங்கள், தோரா, பைபிள் எனக் காணப்படுபவற்றிலுள்ள சத்திய நேர்வழி கருத்துக்களை பெரும் முயற்சி செய்து (29:69) தெரிவு செய்து எடுத்து நடக்கக் கடமைப்பட்டிருந்தார்களோ, அதேபோல் முஸ்லிம்கள் இந்த ஹதீஃத் நூல்களில் காணப்படும் நேர்வழிக் கருத்துக்களை பெரும் முயற்சி செய்து தெரிவு செய்து அவற்றின்படி நடக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே நாளை அல்லாஹ் வின் பொருத்தத்துடன் சுவர்க்கம் போக முடியும்.

விமர்சனம் : அன்று குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் மொழியாக்கம் இல்லாததால் நம் முன்னோர்கள் அதனை விளங்கிக் கொள்ளவில்லை. இன்று மொழியாக்கம் விளக்க உரை என்ற பெயரில் சுயவிளக்கம். புது விளக்கம் கொடுப்பதால் அதன் உண்மை நிலையை விளங்கிக் கொள்ள முடியாத நிலை. இந்த நிலையில் ஒரு முஸ்லிம் குர்ஆனையும், ஹதீஃதையும் விளங்கிக் கொள்வது எப்படி? ஹி.ஹாஸிக் முஹம்மது, சென்னை-50.

விளக்கம் : அரபு மொழி கற்ற மவ்லவிகளுக்கு மட்டுமே குர்ஆன், ஹதீஃத் விளங்கும்; அரபு மொழி தெரியாத அவாம்கள் குர்ஆன், ஹதீஃதை விளங்க முடியாது என்று கடந்த 1000 வருடங்களாக இம் மவ்லவிகள் கோரஸ்பாடுவதால் அது முஸ்லிம்களின் உள்ளங்களில் புரையோடிப் போயிருக்கிறது. அவர்கள் தன்னம்பிக்கையற்றவர்களாக இருப்பதால் இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழுகின்றன. இவ்வுலக வாழ்க்கை மனித குலத்தினருக்கு பரீட்சை வாழ்க்கை யாகும். (பார்க்க : 67:2)

அல்லாஹ் குர்ஆனில் பெரும் பாலான இடங்களில் “ஓ மனிதர்களே என்று அழைத்து உபதேசம் செய்திருக்கிறான். ஒரேயயாரு இடத்தில் கூட ஓ மவ்லவிகளே என்றோ ஓ ஆலிம்களே என்றோ அழைத்து உபதேசம் செய்யவில்லை. அரபு மொழி கற்றவர்கள்தான் குர்ஆன், ஹதீஃதை விளங்க முடியும் என்பது உண்மையானால், இன்று அரபு நாடுகளில் வாழும் அரபு மொழி பேசும் அரபிகள் குர்ஆன், ஹதீஃதை சரியாக விளக்கி நேர்வழி நடக்க வேண்டும். அப்படி அவர்கள் நடப்பவர்களாக இருந்தால் இத்தனை குட்டி, குட்டி நாடுகளாகப் பிரிந்து சீரழிவார்களா? சிந்தியுங்கள்!

மேலும் அரபு மொழி கற்றவர்கள் மட்டுமே நேர்வழி நடக்க முடியும் என்பது உண்மையானால், அல்லாஹ் உலக மக்கள் அனைவரையும் அரபு மொழி மட்டுமே பேசும் மக்களாகப் படைத்திருக்க வேண்டும். அப்படியானால்தான் 67:2 குர்ஆன் வசனம் கூறும் பரீட்சை வாழ்க்கை நியாயமாக இருக்க முடியும். அப்படி அல்லாஹ் மனித வர்க்கத் திற்கு அநீதி இழைத்திருப்பானா? ஒருபோதும் இல்லை.

2:186 இறைக்கட்டளைக்கு அடிபணிந்து அல்லாஹ்வை மட்டுமே நம்பி, 29:69 இறைவாக்குக் கூறுவது போல் அரபு மொழியிலோ, வேறு எந்த மொழியிலோ கிடைக்கும் குர்ஆனைப் படித்து பெரும் முயற்சி செய்வார்களானால் நிச்சயம் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டப் போதுமானவன். அல்லாஹ் மீது முழு நம்பிக்கை வைத்து உழைப்பவர்களின் உழைப்பு ஒருபோதும் வீண் போகாது.

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

 MTM. முஜீபுதீன், இலங்கை

அக். 2016 தொடர்ச்சி……

என் இறைவன் ஹராம் எனத் தடுத்தவையயல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள் பாவங்கள், நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது, ஆதாரமில்லாதிருக்கும் போதே நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும் வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்து விட்டால் அவர்கள் ஒரு கணப்பொழுதேனும் பிந்தவுமாட்டார்கள் முந்தவுமாட்டார்கள்.

ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.

ஆனால் எவர் தம் வசனங்களைப் பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள். அதில் அவர்கள் (என்றென்ரும்) தங்கி விடுவார்கள்.

எவன் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கின்றானோ, அவனை விட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருட்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக் கொண்டே இருக்கும். நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களை கைப்பற்றும் போது (அவ்வாறான தூதர்கள்) அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர் களோ, அவர்கள் எங்கே? எனக் கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள் என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர் களாக இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.

(அல்லாஹ்) கூறுவான் : ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள். ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும் போதெல்லாம், (தங்களுக்கு முன் அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப் பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தை அடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப் பற்றி, எங்கள் இறைவனே! அவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள் ஆதலால் அவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு என்று சொல்வார்கள். அவன் கூறுவான்; உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு. ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்.

அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி, எங்களை விட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது. அதனால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இரு மடங்கு) வேதனையை அனுபவியுங்கள் என்று கூறுவார்கள்.

எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப்புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டாது, மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்தவர்களுக்குக் கூலி கொடுப்போம்.

அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்பு களும், போர்த்திக் கொள்வதற்கு அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு. இன் னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

ஆனால் அவர்கள் நம்பிக்கை கொண்டு நற் கருமங்கள் செய்கிறார்களோ, எந்த ஓர் அத்மாவையும் அதன் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள். அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

தவிர(இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம். அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்; இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம். நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை(மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்; (இதற்குப் பதிலாக, பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன் மையான) காரியங்களின் காரணமாகவே நீங் கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

சுவர்க்கவாசிகள், நரகவாசிகளை அழைத்து, எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம். உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா? என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், ஆம் (பெற்றுக் கொண்டோம்) என்பார்கள். அப்போது அவர்களிடையே அறிவிப்பாளர் ஒருவர், அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என்று அறிவிப்பார்.

(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின்(நேர்) வழியை விட்டு(மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர். மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர்.

(நரகவாசிகள், சுவர்க்கவாசிகளாகிய) இவர் களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும் அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்கவாசிகளை அழைத்து ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக) என்று கூறுவார்கள். அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை. அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கிறார்கள். அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கிவிடாதே என்று கூறுவார்கள்.

சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை, அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு, அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள். நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்த வையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!

அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவர்க்கவாசிகளைச் சுட்டிக் காண்பித்து), நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள் என்று கூறுவார்கள்.

நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள் எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான் என்று கூறுவார்கள்.

(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது. எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு இறை நெறி (நூலை)க் கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம். அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.

இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த)மறுமையையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டனை நாள் வந்த போது, இதற்கு முன் அதனை முற்றிலும் மறந்திருந்த அவர்கள், நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(இறைநெறி)த்தையே கொண்டு வந்தனர். எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றார்களா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காக பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத் திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின் நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம் என்று கூறுவார்கள். நிச்சயமாக அவர்கள் தமக்குத்தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டவர்கள், அவர்கள் கற்பனை செய்து வைத்தவை அவர்களைவிட்டு மறைந்து விடும். (அல்குர்ஆன்: 7:32-53)

அன்று அரேபியாவில் வாழ்ந்த மக்களுக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மறுமை பற்றி அல்குர்ஆனில் இருந்து ஓதிக்காட்டினார்கள். ஆனால் அவர்களில் பிரதானிகள் அவர் கூறுவதை நிராகரித்தே வந்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வஹீ (இறைச் செய்திகளை) மக்கள் மத்தியில் தொடர்ந்து ஓதிக்காட்டி, அவர்களுக்கு மறுமை நாளில் கிடைக்கவிருக்கும் சுவர்க்கத்தையும், பாவிகளுக்கு கிடைக்கவிருக்கும் நரகத்தினையும் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்தே வந்தனர்.

இவ்வாறு மக்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்க முற்பட்டதாலேயே தமது தாய் நகரான மக்காவை விட்டு மதினாவுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுபோல் முன்னைய இறைத் தூதர்களுக்கும் அதே நிலை தான், அல்லாஹ்வின் மார்க்கத்தினைப் போதனை செய்தபோது கிடைத்தது. அதற்காக அவர்கள் தமது போதனைகளை விட்டுவிடவில்லை. அதனைத் தொடர்ந்து செய்தே வந்தனர். அல்லாஹ்வின் அடியார்களே! அறிவுமிக்க மனித சமுதாயமே இம்மை வாழ்வின் விளை நிலம் மறுமையாகும் என்பதை மறந்து விடாதீர்கள். மனிதர்களே! அல்குர்ஆனிலும், இறுதி இறைத்தூதரின் ஹதீஃத்களிலும் மறுமை பற்றி தெளிவான விளக்கங்கள் உள்ளன; அவற்றை அவதானித்து அல்லாஹ்வின் தண்டனைகளுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் நேர்வழியின் பக்கம் முழுமையாக நுழைந்து இம்மையி லும், மறுமையிலும் வெற்றி அடைய முயற்சி யுங்கள்.

மறுமையின் அடையாளங்கள் பற்றிய இறுதி நபியின் முன்னறிவிப்புகள் :

மறுமை எப்போது வரும் என்பது பற்றிய உண்மையான அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். எனினும் மறுமையின் அடையாளங்களை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் பல ஹதீஃத்கள் மூலமாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் உரையாடும் ஹதீஃதின் தொடரில் இருந்து ஒரு பகுதி வருமாறு :

(ஜிப்ரீல்) அம்மனிதர், மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள் என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்) கேட்பவரை விட (அதாவது ஜிப்ரீல் ஆகிய உங்களை விட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்குத் தெரியாது உங்க ளுக்கும் தெரியாது) என்று கூறினார்கள்.

அம்மனிதர், மறுமை நாளில் அடையாளங் களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக் கொண்டு உயரமான கட்டிடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும் என்று கூறினார்கள்.( முஸ்லிம் : 1) மேலும் அவதானியுங்கள் பின்வரும் ஹதீஃத் :

நபிவழியை புறக்கணிக்கும் பேச்சாளர்கள்….

முஹம்மது யலீம், ஈரோடு.

மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான பிரபல்யமான பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை அதிகமாக கேட்டு அதை அப்படியே மக்கள் மத்தியில் ஒப்புவித்து நானும் ஒரு பேச்சாளன்தான் என்று கூறுபவர்கள் அதிக அளவில் உருவாகி வருகிறார்கள். இத்தகைய பேச்சாளர்கள் நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு உரை நிகழ்த்தினார்கள் என்பதை அறிந்து அந்த நடைமுறைகளை முன்மாதிரியாக கொள்ளாமல் தனக்குப் பிடித்தமான அறிஞர் எந்த பாணியில் உரை நிகழ்ழித்துகிறாரோ அதையே முன் மாதிரியாக கொண்டு தனது உரையை அதனடிப்படையிலேயே அமைத்துக் கொள்கிறார்கள், குறிப்பாகத் தனக்குப் பிடித்தமான அறிஞர் மணிக்கணக்கில் நீண்ட உரை நிகழ்த்துவதைப் பார்த்துவிட்டு தானும் இதைப் போன்றே நீண்டுரைகளை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையில் நபிவழியில் எப்படி உரை நிகழ்த்த வேண்டும் என்பதை அறியாமல் நீண்ட உரைகளை நிகழ்த்த ஆரம்பித்துவிடுகின்றனர். ஒரு பேச்சாளர் தனது உரையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அந்த வழிகாட்டுதல்களையயல்லாம் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

நபியிடம் அழகிய முன்மாதிரி :

அம்மார் பின் யாஸிர்(ரழி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சுருக்கமாக உரை நிகழ்த்துமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நூல் : அபூதாவூத் : 932

ஜாபிர் பின் ஸமுரா(ரழி) அவர்கள் கூறியதாவது :

ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நீண்ட உபதேசம் செய்யமாட்டார்கள். அவர்களின் உபதேசம் குறைந்த வார்த்தைகளைக் கொண்டதாகவே இருக்கும். நூல் : அபூதாவூத், 933 அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை சொற்பொழிவாற்றும் போது) வீணான பேச்சுக்களை (அறவேக்) குறைத்து, துதிசொற்களை மிகைப்படுத்துபவர்களாகவும், சொற்பொழிவை சுருக்கி தொழுகையை நீட்டுபவர்களாகவும் இருந்தார்கள். நூல் : நஸாயீ 1397

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வெட்கமும், குறைவானப் பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும் அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.
அறிவிப்பாளர்: அபூஉமாமா(ரழி), நூல்:திர்மிதி 1950

குறிப்பு : அதிகமான பேச்சு என்று மொழி பெயர்த்த இடத்தில் மூலத்தில் பயான் என்ற சொல்தான் உள்ளது என்பதை கவனிக்கவும்.

இப்நு மஸ்ஊது(ரழி) அவர்கள் கூறியதாவது :

எங்களுக்கு சலிப்பேற்பட்டு விடக்கூடும் என்று அஞ்சி (சுருக்கமாக) பல்வேறு நாட்களில் (விட்டுவிட்டு) எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள். நூல் : புகாரீ : 68

அபூ வாயில் ஷகீக் பின் ஸலமா(ரஹ்) அவர்கள் கூறியதாவது :

எங்களுக்கு அம்மார் பின் யாஸிர் (ரழி) அவர்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) சுருக்கமாகவும் செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது “அபுல்யக்ளானே! செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே?” என்று நாங்கள் கூறினோம். அதற்கு (அம்மார்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள். சில பயான்களில் சூன்யம் உள்ளது என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். நூல் : முஸ்லிம் 1577

சுருக்கமாக உரை நிகழ்த்துமாறு நபி(ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருப்பதோடு அவர்களும் சுருக்காக உரை நிகழ்த்தி தான் சொன்ன கருத்தை நடைமுறைப்படுத்தி காட்டியுள்ளார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஃத்கள் மிகத் தெளிவாக உணர்த்துகிறது. ஆனால் இன்றைய பேச்சாளர்களின் நிலை என்ன? ஜுமுஆ உரையை அரை மணி நேரத்திற்கும் அதிகமாக நீட்டி முழக்குகிறார்கள், சொல்ல வேண்டிய விஷயங்களை உடனே சொல்லாமல் அங்குமிங்கும் தாவி தாவிச் சென்று நேரத்தை வீணடிப்பார்கள். அதே வேளையில் இரண்டு ரக்அத் தொழுகையை ஏழு நிமிடங்களுக்குள் முடித்துவிடுவார்கள். தொழுகையைச் சுருக்கி பயானை நீட்டும் புதிய கலாச்சாரத்தை உருவாக்கி விட்டதோடு இவ்வாறு நீண்ட உரைகள் நிகழ்த்து பவர்கள்தான் மிகப் பெரிய அறிவாளி என்கிற எண்ணத்தையும் மக்கள் மனதில் விதைத்துள்ளார் கள். தொழுகையை சுருக்கி பயானை நீட்டி முழக்கி நபிவழிக்கு மதிப்பளிக்காத சமுதாயம் ஒருபோதும் உண்மையான எழுச்சியை அடையாது.

கடந்த சில வருடங்களுக்கு முன் வீஹிவீமூவில் பெருநாள் தொழுகையை தொழ வைத்த ஹாஃபிழ் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகை யில் காஃப் மற்றும் கமர் அத்தியாயங்களை ஓதியுள் ளதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அவரும் இதே அத்தியாயங்களை ஓதினார். தொழுகையை நிறைவு செய்வதற்கு சுமார் இருபது நிமிடங்கள் ஆனது. இதன் பிறகு உரை நிகழ்த்திய வீஹிவீமூபேச்சாளர் இவ்வளவு பெரிய அத்தியாயங்களை ஓதி தொழ வைக்கக் கூடாது என்று கூறினார். இந்தச் சம்பவம் நமக்கு எதைக் காட்டுகிறது? நபிவழியே நம்வழி என்று பேச்சாளர்கள் வெறும் வாயளவில்தான் கூறுகிறார்கள்; அதை நடைமுறைப்படுத்தத் தயாரில்லை என்ப தோடு இவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறையில் தொழுவதை விட நீண்ட உரைகள் தான் முக்கியம் என்பதை பளிச்சென்று காட்டுகிறது.

இன்னும் திருமணத்தின்போது உரை நிகழ்த்துமாறு பேச்சாளர்களை அழைத்து வந்தால் குர்ஆன் ஹதீஃத் அடிப்படையில் திருமணம் தொடர்பாக சுமார் இருபது நிமிடங்களுக்குள் தெளிவான முறையில் உரை நிகழ்த்த முடியும். ஆனால் இவர்கள் திருமணத்திற்கு வந்திருக்கும் கூட்டத்தினர்கள் சலிப்படைந்து, முக்ம சுளித்து உரையை முடிக்கமாட்டார்களா என்று நினைக்கும் அளவிற்கு மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்படியாக எந்த வொரு மேடையிலும் ஏறி மைக்கை பிடித்துவிட்டால் நீண்ட உரை நிகழ்த்துவதை இன்றைய பேச்சாளர்கள் வழமையாக்கி விட்டார்கள். இது நபிவழிக்கு முற்றிலும் முரணானது.

சுருக்கமான உரை பயன்தராதா?

சுருக்கமான முறையில் உரை நிகழ்த்தினால் நாம் சொல்ல நினைக்கும் கருத்தை முழுமையாக சொல்ல முடியாது. ஆகையால் மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வையோ, மிகப் பெரிய தாக்கத்தையோ ஏற்படுத்த முடியாது என்று சில பேச்சாளர்கள் நீண்ட உரைகளை நியாயப்படுத்தி காரணம் சொல்வார்கள். எல்லா விஷயங்களிலும் நமக்கு முன்மாதிரியாக இருக்கும் நபி(ஸல்) அவர்கள் மிக சுருக்கமான முறையில் உரை நிகழ்த்தி மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சம்பத்தை பாருங்கள். ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது : (ஒருநாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை’ அல்லது “நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துக்களில்) வாட்களைத் தொங்கவிட்ட வர்களாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் “முளர்’ குலத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை அவர் களில் அனைவருமே “முளர்’குலத்தை சேர்ந்தவர்கள் தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர்(ஸல்0 அவர்கள் (ஒருவித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் செனறுவிட்டு வெளியே வந்து பிலால்(ரழி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரழி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுது விட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்” எனும் (4:1ஆவது) வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும் “அல்ஹஷ்ர்’ அத்தியா யத்திலுள்ள “”நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயபக்தியுடன் நடங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதை அனுப்பியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளட்டும்; அல்லாஹ்வுக்கு பயபக்தியுடன் நடங்கள். எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார் கள். அப்போது பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்) உடனே (நபிதோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும், வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு “ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார்; அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துக் கொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல் கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். நூல்: முஸ்லிம் : 1848

வறுமையில் வாடிய அந்த தோழர்களுக்கு உதவி செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் நீண்ட உரை நிகழ்த்தவில்லை; மாறாக சில நிமிடங்களிலேயே சொல்லிக்காட்டிய இரண்டு வசனங்களை மட் டுமே கூறி உரை நிகழ்த்தினார்கள். இந்த உரை மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற் படுத்தவில்லையா? அல்லாஹ்வின் வசனங்களை மட்டுமே கூறி ஒருசில நிமிடங்கள் மட்டுமே உரை யாற்றினாலும் அது இறை நம்பிக்கையாளர்களின் உள்ளத்தை தொட்டு உணர்வை ஏற்படுத்தும். சுருக்கமான உரையின் மூலமாக சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டி யிருக்கும்போது இந்த நடைமுறையை பேச்சாளர்கள் முற்றிலுமாக புறக்கணிப்பது நியாயம்தானா?

சிற்றுரையா? பேருரையா?

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜின்போது அரஃபா மைதானத்தில் ஆற்றிய உரையை இறுதிப் பேரூரை என்று பேச்சாளர்கள் கூறுவார்கள். அப்படியா னால் நபி(ஸல்) அவர்கள் நிகழ்த்திய முதல் பேரூரை எது என்று அவர்களிடம் கேட்டால் முறையான பதிலை சொல்லமாட்டார்கள். நாம் தேடிப் பார்த்த வரையில் நபி(ஸல்) அவர்கள் ஆற்றிய முதல் உரை கூட சிறிய அளவில்தான் இருந்துள்ளது.

இப்னு அப்பாஸ்(ரழி), அவர்கள் அறிவிப்பதாவது :

“(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீர் எச்சரிப்பீராக” எனும் (26:214ஆவது) வசனம் அருளப்பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் “ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு “பனூஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குடும்பங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறை´யர் (அனைவரும்) வந்தனர். (அப்போது) நபி(ஸல்) அவர்கள் சொல்லுங்கள்.

இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப்படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால் நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்க மக்கள் ஆம்(நம்புவோம்) உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள் அப்படியயன்றால் நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன் என்று சொன்னார்கள்.

(மேலும்) குறைஷிக் கூட்டத்தாரே அல்லது இதுபோன்ற ஒரு வார்த்தையைக் கூறியழைத்து உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கி (காப்பாற்றி)க் கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் புதல்வரான அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை கேள் (தருகிறேன்). ஆனால் அல்லாஹ்விடமிருந்து உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது என்று சொன்னார்கள். நூல் : புகாரீ : 4770, 4771

மேற்கண்ட உரையை நிகழ்த்துவதற்கு பல மணி நேரமா தேவைப்பட்டிருக்கும்? சுமார் பத்து நிமிடங்களுக்குள் மேற்கண்ட உரையில் உள்ள செய்திகளை கூற முடியும். மிகச் சிறந்த பேச்சுத் திறன் கொண்ட நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தான் தனது உரைகளைச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் சொல்ல வேண்டிய கருத்துக்களை தெளிவாகவும் அமைத்துக் கொண்டார்கள் எனும்போது நபி(ஸல்) அவர்களே நமக்கு முன்மாதிரி என்று மேடை தோறும் முழங்கி வரும் பேச்சாளர்கள் உரை நிகழ்த்துவதில் நபியின் முன்மாதிரியை அலட்சியம் செய்து மணிக்கணக்கில் உரை நிகழ்த்துவது ஏன்?

மாற்றுக் கருத்து :

நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் சுமார் பத்தாண்டுகள் ஜுமுஆ உரை நிகழ்த்தியுள்ளார்கள்; இதைப் போன்றே ஏறத்தாழ பத்தாண்டுகள் பெரு நாள் தொழுகையிலும் உரை நிகழ்த்தியுள்ளார்கள். தனிப்பட்ட முறையிலும் ஏராளமான சந்தர்ப்பங் களிலும் உரை நிகழ்த்தியுள்ளார்கள். இந்த உரைகள் யாவும் சுருக்கமானவை, நடுத்தரமானவை என்று நபி மொழிகளை ஆதாரமாகக் கொண்டு நாம் கூறும் போது, நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில சந்தர்ப்பங்களில் நீண்ட உரை நிகழ்த்தியதை ஆதாரமாகக் கொண்டு நாம் எப்போது வேண்டுமானாலும் நீண்ட உரை நிகழ்த்தலாம் என்று மார்க்கத்தைத் தொழிலாக்கி, நாவை மூலதனமாக வைத்து சம்பாதிப்பதோடு தன்னை மறந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்யும் பேச்சாளர்கள் சொல்வார்கள். ஆகையால் இது தொடர்பான ஹதீஃத்களையும் பார்ப்போம்.

அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் தஜ்ஜாலைக் குறித்து நீண்ட ஹதீஃத் ஒன்றை அறிவித் தார்கள்…. முழு ஹதீஃதை அறிய புகாரீ 7132 முஸ்லிம் 5631 ஆகியவற்றை பார்க்கவும்.

உமர்(ரழி) அவர்கள் கூறியதாவது :

நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே ஓரிடத்தில் எழுந்து நின்று படைப்பின் ஆரம்பத் தைக் குறித்து எங்களுக்குத் தெரிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு வரை) சொர்க்கவாசிகள் (சொர்க்கத் தில்) தாம் தங்குமிடங்களில் நுழையும் வரையும், நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் நுழையும் வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினைவில் வைத்துக் கொண் டார். அதை மறந்தவர் மறந்துவிட்டார். நூல்:புகாரீ :3192

அபூஸைத் அம்ர் பின் அக்தப்(ரழி) அவர்கள் கூறியதாவது :

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஃபஜ்ர் தொழுகை தொழுவித்து விட்டு சொற்பொழிவு மேடை மீதேறி எங்களுக்கு உரையாற்றினார்கள். இறுதியில் “ளுஹ்ர்’ தொழுகை நேரம் வந்தபோது (மேடையிலிருந்து) இறங்கி தொழுதுவிட்டுப் பிறகு மீண்டும் மேடை மீதேறி “அஸர்’ தொழுகை வரை உரையாற்றினார்கள். பிறகு மேடையிலிருந்து இறங்கி (அஸ்ர் தொழுகை) தொழுதுவிட்டு பிறகு மறுபடியும் மேடைமீதேறி சூரியன் மறையும் வரை உரையாற்றினார்கள். நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்தையும் பற்றி (அன்று) எங்களுக்கு தெரிவித்தார்கள். எங்களில் நன்கறிந்தவர் (அவற்றை) நன்கு மனனமிட்டவர் ஆவார். நூல் : முஸ்லிம் 5544

இதைப் போன்றே ஹஜ்ஜத்துல் விதாவில் நபி (ஸல்) அவர்கள் ஓரளவு நீண்ட உரை நிகழ்த்தியதையும் ஆதாரமாக கொண்டு நாம் விரும்பும்போதெல்லாம் நீளமான உரைகளை நிகழ்த்தலாம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். முதலில் நாம் ஒரு வி­ யத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் மிகத் தெளிவானது. அவனது தூதரின் வழிகாட்டுதல்களும் தெளிவானது. குர்ஆனிலும், ஹதீஃத்களிலும் எந்த முரண்பாடும் இல்லை. மாறாக நாம் ஏற்கனவே முடிவு செய்து சரிகண்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் காரியங்களை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆதாரங்களைத் தேடினால் அதற்கேற்ப சில ஆதாரங்கள் கிடைக்கத்தான் செய்யும். இத்தகைய ஆதாரங்களை முறையான வகையில் விளங்காததால் தவறான புரிதல் ஏற்பட்டு பிரச்சனைகள் தோன்றுகின்றன.

இப்போது நீண்ட உரை நிகழ்த்தலாம் என்ற கருத்தில் உள்ள நபிமொழிகளை எப்படி புரிய வேண்டும்? சுருக்கமாக உரை நிகழ்த்துவதுதான் நபி(ஸல்) அவர்களின் வழமையான பழக்கம். இதைத்தான் நாம் கடைபிடிக்க வேண்டும். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் நீளமான உரை நிகழ்த்தியதைப் போன்று நாமும் எப்போதாவது ஒருசில நேரங்களில் மட்டுமே நீளமான உரைகளை அமைத்துக் கொள்ளலாம். இதை மேலும் புரிந்து கொள்வதற்காக ஹதீஃதின் அடிப்படையில் ஒரு உதாரணத்தைக் கூறுகிறோம். நபி(ஸல்) அவர்கள் எப்போதும் உட்கார்ந்துதான் சிறுநீர் கழித்துவந்தார்கள். (பார்க்க திர்மிதி 12) விரல் விட்டு எண்ணக்கூடிய சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டும் சிறுநீர் கழித்துள்ளார்கள். (பார்க்க முஸ்லிம் : 453)

இப்போது நாம் நபி(ஸல்) அவர்களின் வழமையான பழக்கமான உட்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டுமா? அல்லது ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணமாக எப்போதாவது செய்த நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டுமா? இப்போது நாம் எல்லோரும் ஒருமித்த கருத்தில் தினமும் நபி(ஸல்) அவர்கள் கடைபிடித்த வழிமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்றே கூறுவோம். இந்த விஷயத்திற்கு எடுத்த முடிவை போன்றே நீளமான உரை விஷயத்திற்கும் நாம் எடுக்க வேண்டும். இதுதான் நியாயமான முடிவாகும். இங்கு இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்ய விரும்புகின்றோம். அதாவது நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளின் இறுதி கட்டத்தில் தனக்கு மரணம் நெருங்கி விட்டதை அறிந்த நிலையில், மிக விரைவில் உலகை விட்டு விடை பெறுகின்ற ஒருவர் தான் மரணிப்பதற்குள் மிக முக்கியமான விஷயங்கள் அனைத்தையும் விரைவாக தரவேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே நபி(ஸல்) அவர்கள் தனது ஆயுளின் இறுதிக் கட்டத்தில் ஒருசில சந்தர்ப்பங்களில் நீண்ட உரைகளை நிகழ்த்தினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேச்சாளர்களுக்குப் பேராபத்து :

அறியாமையில் மூழ்கி கிடக்கும் மக்களை பயான்களின் வாயிலாக நேர்வழியின் பக்கம் அழைக்கலாம் என்று நினைத்து நீண்ட பயான்களை நிகழ்த்து பவர்களின் உரைகளை மக்கள் விரும்பி, ரசித்து கேட்பதோடு நீங்கள் மிக அருமையாக பேசினீர்கள், நன்றாகப் புரியும்படி சொன்னீர்கள் இந்த மாதிரி பயானை என் வாழ்நாளில் நான் கேட்டதே இல்லை என்கின்ற ரீதியில் மக்கள் பேச்சாளரை நோக்கி கூறும் போது மக்களின் இந்த பாராட்டு பேச்சாளருக்கு ஒருவித பெருமிதத்தை கொடுத்து கடைசியில் பேச்சாளரை இது பெருமையடிக்கும் பண்பிற்கு நிச்சயமாக அழைத்து செல்லும். இது தொடர்பாக நபிமொழி நூற்களில் காணப்படும் செய்தியைத் தருகிறோம்.

ஹாரிஸ் பின் முஆவியா அல்கிந்தீ(ரஹ்) அவர்கள் கூறியதாவது :

நான் உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்களிடம் மூன்று விஷயங்கள் பற்றிக் கேட்பதற்காக மதீனாவிற்குப் புறப்பட்டேன். மதீனாவுக்கு வந்ததும் என்னிடம் உமர்(ரழி) அவர்கள் உமது வருகைக்குக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நான் தங்களிடம் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்பதற்காக (வந்தேன்) என்று கூறினேன். அதற்கவர்கள் அவை யாவை? என்று கேட்டார்கள்…

மக்களுக்கு உரை நிகழ்த்துவதைக் குறித்து “மக்கள் என்னிடம் உரை நிகழ்த்தும்படி விரும்பிக் கேட்கின்றனர் (நிகழ்த்தலாமா)?” என்று கேட்டேன். அதற்கு உமர்(ரழி) அவர்கள் “உமது விருப்பம்” என்று பதில் சொன்னார்கள். அவர்களின் பதில் (என்னை வெளிப்படையாக) தடுக்க விரும்பாதது போன்று இருந்தது. நான் “தங்களின் சொல்லை முடிவாக எடுத்துக் கொள்ளவே விரும்பினேன்” என்றேன். அதற்கு உமர்(ரழி) அவர்கள் நீர் (மக்களிடையே) உரை நிகழ்த்தப் போய் உமது உள்ளத்தில் அந்த மக்களை விட உம்மை உயர்வாகக் கருதி (பெருமை) கொள்ளும் நிலை ஏற்படும். தொடர்ந்து அவர்களுக்கு நீர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தால் உம்மைக் குறித்து இன்னும் கூடுதலாக நீர் உயர்வாகக் கருதிவிடுவீர். இறுதியில் அவர்களை விட நீர் “ஸுரய்யா’ (எனும்) நட்சத்திர கூட்டத்தின் அளவிற்கு உயர்ந்தவர் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். இதனால் அல்லாஹ் உம்மை அந்தப் பெருமையின் அளவுக்கேற்ப மறுமை நாளில் அவர்களின் கால்களுக்கு கீழே (மிகத் தாழ்ந்த நிலைக்குத்) தள்ளி விடுவான் என்று கூறினார்கள். நூல் : அஹ்மத் 106

உமர்(ரழி) அவர்களின் மேற்கண்ட உபதேசத்தை உறுதிப்படுத்தும் விதமாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்தியை பாருங்கள், ஜாபிர்(ரழி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “உங்களில் நற்பண்புகள் உடையவர்கள்தான் எனக்கு மிகவும் விருப்பமானவர்களும் மறுமை நாளில் எனக்கு மிகவும் அருகில் இருப்பவர்களுமாவர் (அதே நேரத்தில்) உங்களில் தொணதொணவென்று பேசும் பழக்கமுடையோரும் (வாய்க்கு வந்தபடியயல்லாம்) உளறிக் கொட்டுவோரும், (செயற்கையாக) நீட்டி முழக்குவோரும்தான் எனக்கு மிகவும் வெறுப்பானவர்களும் மறுமை நாளில் என்னிடமிருந்து வெகு தொலைவில் தள்ளியிருப்போரும் ஆவர் என்று கூறினார்கள். அப்போது மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! தொண தொணவென்று பேசும் பழக்கமுடையோரையும் (வாய்க்கு வந்தபடியயல்லாம்) உளறிக் கொட்டுவோரையும் நாங்கள் அரிந்துள் ளோம். அது யார் நீட்டி முழக்குவோர்?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தற்பெருமை உள்ளோர்தான் (அவர்கள்) என விடையளித்தார்கள். நூல் : திர்மிதி : 1941

பயானை நீட்டி முழக்க வேண்டும் என்பதற்காக பேச்சாளர்கள் குர்ஆன், ஹதீஸிற்கு முரணான சுய விளக்கம் கொடுப்பதோடு தான் படிக்கும், கேட்கும் செய்திகளில் தனக்கு பிடித்தமானதையயல்லாம் அந்த செய்தியின் உண்மைத் தன்மையை முறையாக விசாரிக்காமல் மக்கள் மத்தியில் கூறி வருகிறார்கள். இவ்வாறு பேசும்போது இவர்களின் உரைகளில் பற்பல தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த தவறுகளை யாரேனும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரத்தோடு முறையாக சுட்டிக் காட்டினாலும் தனக்கு ஏற்பட்டுள்ள பெருமை எனும் இழி பண்பின் காரணமாக தனது தவறை ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ள மறுக்கிறார்கள். இன்னும் தனது தவறான பேச்சை நியாயப்படுத்தி மீண்டும் சுய விளக்கம் கொடுக்கிறார்கள். பேச்சாளர்களின் பெருமையடிக்கும் குணத்தினால் தானும் வழிகெட்டு தனது உரைகளை ரசித்துக் கேட்கும் மக்களையும் வழிகெடுத்து வருகிறார்கள்.

நபிவழியை உயிர்ப்பிப்போம் :

நபி(ஸல்) அவர்கள் தமது இருபத்து மூன்று வருட நபித்துவ வாழ்க்கையில் சொற்பொழிவுகள் மூலமாக மக்களுக்கு அறிவுரைகளை கூறியதை விட மக்களோடு மக்களாக கலந்து பேசி அதன் மூலமாக அறிவுரைகளை வழங்கியதே அதிகம். நபி(ஸல்) அவர்களின் இந்த அழகிய நடைமுறையை பேச்சா ளர்கள் சாகடித்ததோடு இன்னும் பல நடைமுறைகளையும் சாகடித்து வருகிறார்கள்.

1. உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது அந்த உரையை கேட்போருக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனே அந்த சந்தேகத்தை நீக்கி வைப்பது
(பார்க்க : முஸ்லிம் : 132, 1607)

2. உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது சபையில் உள்ளவர்கள் ஏதேனும் தவறிழைத்தால் உடனே அது தொடர்பாக அறிவுரை கூறுவது பார்க்க
(முஸ்லிம் : 1586, அபூதாவூத் : 943)

3. உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைக் குறித்து மற்றவர் உரையாளருடன் பேசுவது (பார்க்க : முஸ்லிம் 1633)

4. உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது சொற் பொழிவாளரிடம் ஒருவர் தனது தேவையை முறையிடும்போது உரையாளர் தனது உரையை நிறுத்தி விட்டு வந்தவருக்கு உதவிய பிறகு தனது உரையை தொடர்வது (பார்க்க முஸ்லிம் : 1590)

5. உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு கேள்வி கேட்பது. (பார்க்க : புகாரீ : 473, 4725)

6. உரையாடிக் கொண்டிருக்கும்போது அமர்ந்திருக்கும் மக்களிடம் தனக்கு தெரியாத விஷயங்களை உரையாளர் கேட்பது (பார்க்க : புகாரீ 6704)

7. உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மக்கள் பகுதியில் உள்ளத்தை பாதிக்கும் விஷயம் ஏதேனும் நடக்கக் கண்டால், உடனே உரையை நிறுத்தி விட்டு உள்ளம் நிம்மதியடைந்த பிறகு உரையை தொடர்வது (பார்க்க : நஸாயீ : 1396)

நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படித்திய இதுபோன்ற வழிமுறைகளை உயிர்ப்பித்து பேச்சாளர்கள் தங்களது உரைகளை அமைத்துக் கொண்டால் அதன் மூலமாக நல்லதொரு சமுதாயம் உருவாக வழிவகுக்கும். மாறாக நபி(ஸல்) அவர்களின் இந்த நடைமுறைகளையயல்லாம் நாங்கள் கடைபிடிக்க மாட்டோம்; எங்களது இஷ்டம்போல மணிக்கணக்கில் உரை நிகழ்த்தி எங்களது சாமர்த்தியத்தைப் காட்டுவோம் என்கிற ரீதியில் பேச்சாளர்கள் செயல்பட்டால் சொற்பொழிவு என்பது ஒரு வெற்றுச் சடங்காக மாறுவதோடு, பேசசாளர்களின் பேச்சுக்கு மக்கள் மதிமயங்கி எதைச் சொன்னாலும் தலையாட்டும் குருட்டுக் கூட்டம் உருவாகும். இதன் மூலமாக தனி நபர் வழிபாடு உருவாகி சமுதாயத்தில் மென்மேலும் குழப்பங்களும், பிரிவினைகளும் உருவாகும் என்பது உறுதி.

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி என்று வெறும் வாயளவில் மட்டும் கூறாமல் நபி வழியை நடைமுறைப்படுத்திக் காட்டும் நற்பண்புள்ள மக்களாக நாம் மாற அல்லாஹ் அருள் புரிவானாக.

குறிப்பு : நபி(ஸல்) அவர்களின் மரணத்தைப் பற்றிய முன்னறிவிப்பு மற்றும் நபி(ஸல்) அவர்கள் தனது இறுதி காலத்தில்தான் நீண்ட உரை நிகழ்த்தினார்கள் என்பதை பற்றிய விபரங்களை அறிய புகாரீ : 3654, 4437, 4463, 4402 இப்னுமாஜா 42, 43 ஆகிய நூற்களில் உள்ள ஹதீஃத்களைப் பார்க்கவும்.

Previous post:

Next post: