அந்நஜாத் –   ஜனவரி 2020

in 2020 ஜனவரி

அந்நஜாத் –   ஜனவரி 2020

ஜ.அவ்வல் – ஜ.ஆகிர் 1441

 1. தலையங்கம்!
 2. இருப்பில் விரலசைத்தல்!
 3. “முஸ்லிம்களிடையே பிரிவினை வேண்டாம்”
 4. அமல்களின் சிறப்புகள்…
 5. இஸ்லாமிய மார்க்கத்தில் பிரிவுகள் உண்டா? பிரிவுகளாக செயல்படுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா?
 6. விண்ணுக்குச் செல்லும் வீரர்களின் இதயம் சுருங்கும்! குர்ஆன் கூறும் உண்மை!
 7. அல்லாஹ் அளவே இல்லாத கருணையாளன்!
 8. ஆதிகால வேதங்களும்! இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!!
 9. அறிந்து கொள்வோம்…   

***********************

தலையங்கம்!

குடியுரிமை சட்ட திருத்த மசோதா-2019

1955ல் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில், பாஜக அரசு இப்போது திருத்தம் செய்து மசோதாவை மக்களவையிலும் (லோக்சபா), மாநிலங்கள் அவையிலும் (ராஜ்ய சபா) தாக்கல் செய்து நிறைவேற்றியது. குடியரசு தலைவர் இதற்கு ஒப்புதலும் அளித்து விட்டார். இந்த மசோதா ஏற்கனவே 2018 ஜனவரியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்படாதது குறிப்பிடத்தக்கது ஆகும். இப்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு அதிமுக அரசு தான் ஒரு முக்கிய காரணம் ஆகும். அதிமுக இன்று தமிழகத்தை ஆட்சி செய்கிறது என்றால், முக்கிய காரணம் முஸ்லிம்களும் ஆவர். முஸ்லிம்களின் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டே முஸ்லிம்களின் முதுகில் அதிமுக குத்திவிட்டது. குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுக “தமிழனத் துக்கு கேடு தர வந்த கோடாரிக் காம்பு என் றும், சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்து விட்டது” என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்.

இப்போது குடியுரிமை மசோதாவின் சாராம்சத்தைப் பார்ப்போம். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளவுத்தர்கள், பார்சிகள், கிறித்தவர்கள் போன்ற சமயப் பிரிவினருக்கும், ஆவணங்கள் எதுவும் இல்லாமலே குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலும், மற்றும் அதற்கு முன் குடியேறியவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும் இந்த மசோதா கூறுகிறது.

முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுக்கப்படுவதன் காரணம் என்ன? முஸ்லிம்கள் அனைவரும் இந்திய நாட்டிற்கு துரோகம் செய்தார்களா?

மசோதாவை ஆராயும் முன், இஸ்லாமியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இங்கு நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் உட்பட இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் அனைவருமே தம் தாய் நாடு இந்தியாவை உளமார நேசித்தவர்கள். சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தியவர்கள் பலர் உண்டு; பெரும்பான்மை மக்களை விட அதிகம் தம் பொருளாதாரத்தையும் உயிரையும் கொடுத் தவர்கள். ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்து துரோகம் செய்யாமல் எதிர்த்துப் போராடிய வீரர்களும் இவர்களில் உண்டு; நாட்டின் தலைவர்களை சுட்டுக் கொன்றவர்கள் முஸ்லிம்களில் இல்லை. தங்களுக்கு சொத்து சுகங்கள் எதுவும் வேண்டாம் என்று நேரில் கூறி, கேட்கப்படாமலேயே, நிரப்பப்படாத காசோலை (BLANK CHEQUE)களை காந்திஜியிடம் நாட்டின் சுதந்திரத்திற்காக வழங்கியவர்களும் உண்டு. விடுதலைக்காக சுபாஸ் சந்திரபோஸின் படையில் சேர்ந்து போராடியவர்களும் உண்டு.-

இந்தியாவை தாய்நாடாக எண்ணி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள், தாய்நாட்டிற்கு எதிராக எதுவும் செய்வதற்கு நினைத்துக் கூடப் பார்க்காதவர்கள். அண்டை வீட்டார் எந்த மதத்தினராக சாதியினராக இருந்தாலும், அவர்கள் பசித்திருக்க தாம் மட்டும் உண்ண மாட்டார்கள். அண்டை வீட்டாரின் மனைவியை சோரம் செய்பவனும், எவனது நாவைக் கொண்டும், செயல்களைக் கொண்டும் அண்டை வீட்டார் பயப்படுவார்களோ, அவன் மனிதர்களில் மிகவும் கெட்டவன் என்று இஸ்லாம் கூறுகிறது. முஸ்லிம்களின் வாழ்வியலில் கண்டிப்பாக நேர்மை குடி கொண்டிருக்கும்; குடி கொண்டிருக்க வேண்டும் என்பது முஸ்லிம்களின் மீது கடமை ஆகும்.

ஒட்டுமொத்த முஸ்லிம்களும் நாட்டின் தீவிரவாதிகள், நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள், நேர்மையற்றவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் தேவை. இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை மதசார்பற்ற நாடு என்கிறது. எனவே, இந்த சட்ட திருத்தம் குறித்து, அகில இந்திய முஸ்லிம்லீக் நீதிமன் றத்தில் வழக்கு தொடுத்திருப்பது சரியான அணுகுமுறை.

சட்டதிருத்தம் குறித்து பலரின் கருத்துக்களை இப்போது கவனிப்போம்.

மசோதா திருத்தத்தை ஆதரிப்பவர்களாக, அதனை அறிமுகம் செய்ய முயற்சித்த பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் பேச்சை இப்போது செவி மடுப்போம்.
பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் நாட்டின் பிரதமர் மோடி “இந்திய குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுத வேண்டும்’ என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர், “இந்திய முஸ்லிம்கள் நம் நாட்டின் குடிமக்கள்; அவர்கள் மீது அடக்குமுறை ஏதும் கொண்டு வரப்படாது; அவர்கள் கவலைப்பட தேவை இல்லை. அசாம் மக்களின் உரிமைகளை பாஜக அரசு காக்கும்; இந்த மசோதா முஸ்லிம் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானது அல்ல’ என்கிறார். எங்களது “நியூரெம்பர்க்’ சட்டத்தால் யூத மக்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று ஹிட்லர் கூறியது இப்போது நினைவிற்கு வருகிறது.

அமைச்சரின் வாக்குறுதி காக்கப்படுமா? முஸ்லிம்களுக்கு இப்படி வாக்குறுதி அளிக்கும் அமைச்சர், “மாலத்தீவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம்களும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முஸ்லிம்களும், கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும் இந்திய குடியுரிமை பெற விரும்பினால் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று சபையில் அமைச்சரிடம் நேருக்கு நேர் தயாநிதி மாறன் அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு அமைச்சர் பதில் கூறவில்லை.

பாகுபாட்டைப் பாருங்கள்; ரோஹிங் கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு வந்ததால் அது ஊடுருவலாம். இதை உள்துறை அமைச்சர் கூறுகிறார். முஸ்லிம் அல்லாதவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்கள் குடியேறியவர்களாம். இதை சட்டதிருத்த மசோதா கூறுகிறது.

“இந்தியாவை ஆளக்கூடிய அதிகாரத்தை 4டிஆண்டுகளுக்கு மக்கள் எங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள்’ என்கிறார் உள் துறை அமைச்சர். “உண்மைதான், நாட்டை ஆளுகிற அதிகாரத்தைத்தான் கொடுத்து இருக்கிறார்கள். நாட்டை பிளக்கிற அதிகாரத்தை கொடுக்கவில்லை’ என்றும், மேலும், “இந்த சட்டம் அண்டை நாடுகளில் இருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் வெளிப்படையாக அழைப்பு கொடுக்கிறது’ என்கிறார் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. எஸ். வெங்கடேசன் அவர்கள்.

இவைகள் அனைத்தையும், ஏற்கனவே முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கள், வன்முறைகள், கொலைகள், கற்பழிப்புகள் ஆகிய அனைத்திலும் பாஜக அரசு மெத் தன போக்கை கடைபிடித்தது. இப்போது கூட இந்த குடியுரிமை சட்டதிருத்தத்திலும் முஸ்லிம்கள் இரண்டாம் பட்சமாக கருதப்படுவது ஆகிய அனைத்திலும் முஸ்லிம்களுக்காக நீதி செலுத்தப்படவில்லை என்பது உண்மையாதலால் உள்துறை அமைச்சரின் வாக்குறுதி முஸ்லிம்களுக்கு மகிழ்வைத் தராது என்பது யதார்த்தம்.

இந்த சட்ட திருத்தம் பற்றி எதிராக குரல் எழுப்பியவர்களின் கவலையை இன் னும் கவனிப்போம். அதில் உண்மை இருக்கிறது. அவர்களுக்கு முஸ்லிம்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறார்கள்.

“குடியுரிமை திருத்த மசோதாவை எங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டோம்’ என்று கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதுகெலும்புள்ள மூன்று முதல்வர்களும் கூறியுள்ளனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள், “மத ரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது’ எனக் கூறி எதிர்க்கின்றனர்.

அஸ்ஸாம் ஒப்பந்தத்துக்கு முரணாக இது இருப்பதாகக் கூறி, இந்த புதிய மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு. பாஜக அரசு துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக சென்று கொண்டு இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ஆள்கின்ற அரசு வெளிப்படையாக முஸ்லிம்களை ஒதுக்கி வைப்பது அநாகரீகம். மேலும், பெரும்பான்மை எனும் பெயரில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராக இருப்பது ஜன நாயகம் அல்ல. பாசிச போக்காகும். இதற் குச் சான்று இந்த மசோதாதான். ஒரு சமூ கத்தை விலக்கி வைத்து அவர்களுக்கு இங்கே இடமில்லை என்பது பாசிசத்தின் உச்சம். அடைக்கலம் தேடி வருபவர்களை அரவணைப்பது தான் நாகரீகம் என்கிறார்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “வாக்கு வங்கி அரசியல் செய்வது சரி யானது அல்ல; இந்து முஸ்லிம் பிரிவி னையை மீண்டும் உருவாக்கக் கூடாது; இலங்கை தமிழ் இந்து அகதிகளுக்கு சாதகமாக எதுவும் இல்லை’ என்கிறார்.

தயாநிதிமாறன், எம்பி, திமுக, “இந்த மசோதா அரசமைப்பு சட்ட முகுப்பு ரைக்கே எதிரானது. சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை தவற விட்டு விட்டீர்கள். நீங்கள் பாகிஸ்தானையும் வங்க தேசத்தையும் பற்றி தான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈழ தமிழர்கள் அகதிகள் முகாமில் வாழ்ந்து வருகிறார்கள்.

கண்ணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்றார். இதை பிரதமர் மோடி ஐநாவில் பேசுகிறார். ஆனால் உள்துறை அமைச்சர் மோடியின் சொற்படி நடக்கவில்லை. 20 கோடிக்கும் மேலான முஸ்லிம்கள் இந்தியாவில், 2014லிருந்து பயத்திலேயே வாழ்கிறார்கள். பசுவின் பெயரால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த அரசு முஸ்லிம்களுக்கு எதிரானது என்று எல்லா தரப்பிலும் நம்பப்படுகிறது. இதையும் விட மோசமாக இந்த மசோதா இருக்கிறது. சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதைப்போல சிறுபான்மையினரை ஆதரிப்பதில் உங்களைத் தடுப்பது எது? இந்தியாவின் பொருளாதார கொள்கை மிக மோசமாக இருக்கிறது. 20 கோடி முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவது உங்களுக்கு அழகல்ல; இந்தியாவை மத ரீதியாக நீங்கள் துண்டாடுகிறீர்கள்; சிறுபான்மையினருக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துகிறீர்கள். அதற்கு பதிலாக ஆதாரவாக செயல்படுங்கள்.

வெங்கடேசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை,

இது ஒரு கொடிய சட்டம். மத அடிப்படையில் மதசார்பற்ற ஒரு நாடு குடியுரிமை வழங்க கூடாது. இந்த சட்ட திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது இந்த சட்டம் இன்று நிறைவேறினால், அது மனிதாபிமானத்தை கைவிடுகிற ஓர் கொடிய நாளாகும். மியான்மரைப் பற்றி இலங்கையைப் பற்றி பேச மறுக்கிறீர்கள். முப்பது வருடமாக 50,716 நபர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றி பேச மவுனம் சாதிக்கிறீர்கள். எந்த மதத்தையும் பின்பற்றாத கடவுள் நம் பிக்கை இல்லாத நாத்திகரைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இந்த சட்டம் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரானது. அதே சமயம் உள் நாட்டில் இருக்கும் முஸ்லிம்களுக்கு நேரடியாக பயமுறுத்தலையும், அவமானத்தையும் கொடுக்கிறது. நாட்டில் உள்ள எத்தனையோ பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக புதிய பிரச்சனைகளை உருவாக்கத்தான் இந்த சட்டம் இருக்கிறது. “இந்தியா என்றால் மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கும் யாராக இருந்தாலும் யூதர், எமனி, பார்சி, ஆப்கானி, திபெத்தியர், வங்கதேசத்தினர் அனைவரும் இதனை உங் கள் இல்லமாக கருதலாம்’ என்று நாடாளுமன்றத்தின் முகப்பில் சமஸ்கிருதத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. குடியுரிமை சட்டதிருத்தம் நிறைவேறினால், இந்தி யாவை இல்லமாக அவர்கள் ஒருபோதும் கருதமுடியாது. நான்கரை ஆண்டுகள் நாட்டை ஆள்கிற அதிகாரத்தைத் தான் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவை பிளக்கிற அதிகாரத்தை மக்கள் கொடுக்க வில்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது, நாட்டின் இறையாண்மைக்கு எதி ரானது’ என்றார்.

மேலும், இந்த திருத்தம் குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளி உறவு விவகாரக் குழு இதை “குடியுரிமைக்கு மத ரீதியான பரீட்சையா?’ என கவலை கொள்கின்றன. மேலும், “மதங்களின் பன்மைத்துவம் இந்தியாவிலும், அமெரிக்கா விலும் அடிப்படையில் மையமானது. குடி யுரிமைக்காக மத ரீதியான பரீட்சை வைப் பது ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு குழி தோண்டுவதாகும்’ என்றும் ட்வீட் செய்திருந்தது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினரும், இன்டியானா ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான ஆந்ரேகார்சன், “இதை அடுத்து, எதிர்காலத்தில் கேடுகளை விளைவிக்கும் நகர்வை இந்திய பிரதமர் செய்துள்ளார்’ என்பதை நாம் பார்க்கிறோம். மோடியின் பாஜக மற்றும் அதன் மதச் சார்பு என்ற பின்னணியை பார்க்கும்போது இது எதிர் பாராதது அல்ல; இது இந்திய முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த முயற்சிக்கும் போக்காகும். வேறு சந்தர்ப்பங்களிலும் மோடி இந்தியாவின் சிறுபான்மை சமூகத்தை குறி வைக்கிறார். இந்தியா ஒரு பன்முக கலாச்சார சமுதாயம் என்ற இருதயத்திற்கு இந்தச் சட்டம் ஒரு அடியாக விழுந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

சர்வதேச செய்தி நிறுவனங்கள் பெரிய அளவில் விமர்சனம்:

தி போஸ்ட்: இந்தியாவிற்கு என்ன ஆனது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இதன் மூலம் 20 மில்லியன் இஸ்லாமியர்கள் நாட்டை இழப்பார்கள். நியூயார்க் டைம்ஸ்: இந்தியாவில் முதல் முறையாக இப்படி நடக்கிறது. இந்தியா இஸ்லாமியர்கள் வாழ்வதற்கு கடினமான நாடுகளில் ஒன்றாக மாறி வருகிறது. இதன் மூலம் மக்கள் மத ரீதியாக பிளவுபடுத்தப்படுவார்கள். இஸ்லாம் மதத்தைத் தவிர தெற்காசியாவில் இருக்கும் அனைத்து பெரிய மதங்களையும் இந்த மசோதா ஆதரிக்கிறது. இதனால் இந்த மசோதா மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருகிறது.

ஏறக்குறைய இதே கருத்துக்களை வா´ங்டன் போஸ்ட், அல்ஜசீரா, தி இன்டிபென்டன்ட் ஆகிய பத்திரிக்கைகளும் தெரிவித்திருக்கின்றன.

கூகுளின் சிஇஓ (CEO) சுந்தர் பிச்சை :

“முஸ்லிம்கள், மற்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். மாறுபட்ட குரல்கள் அதிக விளைவுகளை (OUT COMES) கம்பெனிகளுக்கும், தேசத்துக்கும் தரும்’ என்று வாஷிங்டன் பத்திரிகை ஒன்றில் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கபில் சிபில்:

இஸ்லாமியர்கள் உங்களைப் பார்த்து பயப்படுவது இல்லை; நீங்கள்தான் அவர்களைப் பற்றி பயந்து, அவர்களுக்கு எதிரான சட்டங்களை தொடர்ந்து இயற்றிக் கொண்டிருக்கிறீர்கள்; இதற்கெல்லாம் முஸ்லிம்கள் பயந்து போய் விடமாட்டார்கள்’ என்று அறிவுறுத்தினார். முஸ்லிம்களின் யதார்த்தமான உண்மை நிலையை அப்ப டியே படம் பிடித்துக் காட்டிவிட்டார்.

இறுதியாக நாம் கூறுகிறோம். முஸ்லிம்கள் ஏன் யாரைப் பார்த்தும் பயப்படுவது கிடையாது என்றால், “அல்லாஹ்வே! நீ காட்டிய வழியில் நாங்கள் பயணிக்கிறோம்; பிரச்சனை வந்தால், அதை நீ கவனித்துக் கொள்’ என்று இறைவனிடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.

“(அக்கிரமங்கள், எதிர்ப்புகள், நம்பிக்கைக் கொண்ட) அவர்களின் இறை நம்பிக் கையை வலுவடையச் செய்தது; அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன் (ஹஸ்புயனல்லாஹு); மேலும் அவனே எங்களுக்கு சிறந்த பாதுகாவலன் (வ, நிஃமல் வக்கீல்) என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன்: 3:173), அக்கிரமக்காரர்களால் கொல்லப்பட்டாலும் உண்மை முஸ்லிம் பயப்படமாட்டான். மாறாக, மறுமையில் சுவர்க்கத்தில் கிடைக்க இருக்கும் நற்பாக்கியங்களுக்காக மகிழ்வான்.

***********************

இருப்பில் விரலசைத்தல்

மறு பதிப்பு :

அபூ அப்தில்லாஹ

கருத்து வேறுபாடுகள் சமுதாயத்தில் பல பிரிவுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. எனவே கருத்து வேறுபாடுகளைக் களைவதே ஒற்றுமைக்குரிய ஒரே வழி என்பதை உணர்ந்து, அந்த ஒற்றுமைக்கு வல்ல அல்லாஹ் வழிகாட்டாமல் விட்டிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அல்குர்ஆனை ஆயும்போது நமக்குக் கிடைத்தவை:

 1. உங்களில் ஏதாவது ஒரு வி­யத்தில் பிணக்கு ஏற்படுமானால் அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். (குர்ஆன்: 4:59)
 2. எதைப் பற்றி உமக்கு(த்தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம். (அல்குர்ஆன்:17:36)
 3. உனக்கு சந்தேகம் தருபவற்றை நீ விட்டு விடு. சந்தேகமற்ற (உறுதியான) விஷயங்களின்பால் நீ சென்றுவிடு. (புகாரி: 401, திர்மிதி)

தெள்ளத் தெளிவான இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் கருத்து வேறுபாடுகளைக் களைய, அவற்றில் எத்தரப்பாரின் கருத்து குர்ஆன், ஹதீஃதுக்கு நெருக்கமாக இருக்கிறது. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து தெளிவுபடுத்தி வருகிறது அந்நஜாத்.

இந்த வரிசையில் இருப்பில் விரலசைத் தல் சம்பந்தமாக, “யுஹர்ரிக்குஹா யதுவூ பிஹா’ என்று வரும் ஹதீஃதின் அடிப் படையில் விரலை அசைக்கவும் செய்யலாம். “இஷாரா”-சமிக்கை என்ற வரும் ஹதீஃதின் அடிப்படையில் விரலை நீட்டியும் வைக்கலாம் என்று தெளிவுபடுத்தி இருந்தோம். இரண்டு ஹதீஃத்களையும் இணைத்துப் பார்த்து நீட்டுவது சரியல்ல, அசைத்தல்தான் சரி என்ற ஒரு சிலரின் வாதம் ஏற்கத்தக்கதல்ல; காரணம் கிப்லாவை நோக்கி சமிக்கை செய்தல் என்று ஒரு ஹதீஃதில் (நஸயீ) வந்துள்ளது. இங்கு அசைத்தல் என்று பொருள் கொள்ள முடி யாது என்றும் தெளிவுபடுத்தி இருந்தோம்.

அப்போது விரலசைத்தல் பற்றிய ஹதீஃதின் தரத்தில் எந்த மத்ஹபினருக்கும், எந்த இயக்கத்தினருக்கும் கருத்து வேறுபாடிருக் கவில்லை. அனைவரும் ஹதீஃதை ஏற்று அதற்குப் பொருள் கொள்வதிலேயே மாறுபட்டனர். அது மட்டுமல்ல எல்லா மத்ஹபினரும், எல்லா இயக்கத்தினரும் ஏதாவ தொரு வகையில் இந்த ஹதீஃதை செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். அதாவது ஹனஃபி மத்ஹபினர் விரலை நீட்டி, “இல்லல்லாஹ்’ என்று சொல்லும் போது மடக்கியிருந்த விரலை நீட்டி அசைப்பவர்களாகவும், மற்ற இரு மத்ஹபினரும் ஏனைய இயக்கத்தினரும் விரலை தொடர்ந்து பலவிதமாக அசைப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். ஒருமுறை அசைப்பதா? தொடர்ந்து அசைப்பதா? எவ்வாறு அசைப்பது என்பதில்தான் அவர்களிடையே கருத்து வேறுபாடு.

விரலசைப்பதானது தொழுகையில் விளையாடுவது போல் இருக்கிறது: …ஆட்டுவது போல் இருக்கிறது என்றெல்லாம் பலர் அசிங்கமாக விமர்சிப்பவர்களாக இருந்தார்களே அல்லாமல் ஹதீஃதின் தரத்தில் குறை கூறவில்லை. அல்குர்ஆன் 33:36 இறைவாக்கின்படி இப்படிப் பேசுவது வரம்பு மீறிய செயல், பகிரங்கமான வழிகேடு என்பதால் அவர்களின் இப்படிப்பட்ட பேச்சுக்களை பொருட்படுத்தாமல் தொழுகையில் விரலசைத்தல் நபி வழியே; அதனை வேறு மனித அபிப்பிராயம் கொண்டு மறுப்பது முறையல்ல என்றே தெளிவுபடுத்தி வந்தோம். இரண்டு ஹதீஃஸ்களும் ஆதாரமுள்ளவை யாக இருக்கும்போது அவற்றில் எதையும் புறக்கணிக்க நமக்கு உரிமையில்லை என்றே சொல்லி வந்தோம்.

ஆனால் இன்று அவர்கள் விரலசைத்தல் பற்றிய ஹதீஃதின் தரம் பற்றியே சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். விரலசைத்தல் பற்றி வரும் ஹதீஃத் எந்த கிதாபில் காணப்பட்டாலும், அவை அனைத்திலும் ஆஸிம் பின் குலைப் இடம் பெறுகிறார். அவரைப் பற்றி இப்னுல் முதைனீ மறுப்புத் தெரிவித்துள்ளார். அவர் தனித்து அறிவிக்கும் அறி விப்பை மட்டும் வைத்து முடிவு எடுக்க முடியாது என்று கூறியுள்ளார் என்ற ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அது மட்டுமல்ல, பல நபித்தோழர்கள் அறிவிக்கும் “ரஃபஅல் யதைன்’-தொழுகையில் கைகளை உயர்த்துவது பற்றிய பல ஹதீஃதுகளுக்கு முரணாக “கைகளை உயர்த்துவது இல்லை” என்று காணப்படும் ஹதீஃதிலும் இதே ஆஸிம் பின் குலைப் இடம் பெறுகிறார். இந்த ஹதீஃதை நிராகரித்து கைகளை உயர்த்துபவர்கள் அதே ஆஸிம் பின் குலைப் இடம் பெறும் விரலசைத்தல் ஹதீஃதை எப் படி செயல்படுத்தலாம்? என்பது அடுத்த கேள்வி.

ஹதீஃத் என்று கிதாபுகளில் காணப்படும் அனைத்தையும் எவ்வித பரிசீலனையும் இல்லாமல் எடுத்துச் செயல்படுத்துகிறவர்களே மத்ஹபினர். எனவே அவர்களிடம் இதே கேள்வியை நாம் கேட்கமுடியாது. ஆயினும் ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மட்டுமே எடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்ற சரியான கொள்கையுடையவர்கள், மத்ஹபினரின் இந்தக் கேள்வியைப் புறக்கணிக்க முடியாது. பரிசீலனை செய்வது கடமை. ஒரே விஷயத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கூறும் இரு வேறு ஹதீஃத்களும் தரத்திலும் மிக உறுதியாக இருந்தால் மட்டுமே இரண்டையும் செயல்படுத்த முடியும்.

இரண்டில் ஒன்றின் தரம் தாழ்ந்துபோய் விடுமாயின். சந்தேகத்திற் குரியதாகிவிடுமாயின் “சந்தேகமானதை விட்டு சந்தேகமற்றதின்பால் சென்று விடு” (புகாரி : 401) என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்றுச் சந்தேகத்திற்குரியதை விட்டு விடுவதே சாலச் சிறந்ததாகும். பல நியாயமான வாதங்களைக் கூறி நமது தரப்பை நியாயப்படுத்தலாம். ஆயினும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து சமுதாய ஒற்றுமைக்கு அது வழிவகுக்காது. சந்தேகமான ஒரு ஹதீஃதை நாம் விட்டுக் கொடுக்க முன் வராதபோது, சந்தேகமற்ற ஆதாரபூர்வமான ஒரு ஹதீஃதை மாற்றுத் தரப்பினர் விட்டுக் கொடுப்பதை எதிர்பார்க்க முடியுமா? அவ்வாறு எதிர்பார்ப்பது முறையுமல்ல, தவறாகும்.

பலர் ஒருவரைப் பற்றி நற்சான்றுகள் வழங்கி இருக்கும் போது, ஒருவரது மறுப்பை எற்க முடியுமா? என்ற வாதமும் சரியானதல்ல. பலர் ஒருவரைப் பற்றி நல்லவர் என்று கூறி, ஒரே ஒருவர் கெட்டவர் என்று கூறினால், அந்த ஒருவரின் கூற்றையே ஏற்க வேண்டும். காரணம் பலருக்கு அவரின் தவறு கண்ணில் படாமல் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே ஒருவர் தானே சொல்லுகிறார் என்று கூறி அந்த ஒருவரின் கூற்றை நிராகரிக்க முடியாது என்பதை 1986, 1987களிலேயே அந்நஜாத்தில் விளக்கி இருக்கிறோம்.

அடுத்து காரணம் கூறாமல் ஒருவரைப் பற்றிக் குறை சொல்லப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது என்ற வாதமும் முறை யானதல்ல. இட்டுக்கட்டப்பட்ட பலவீன மான ஹதீஃத்களை அடையாளம் காட்ட, காரணம் கூறப்பட வேண்டும் என்பது நியாயமான வாதமே. அப்படிப்பட்டவர்களின் எந்த ஹதீஃதையும் எடுக்க முடியாது. ஆனால் ஒரு ஹதீஃதைப் பற்றிய சந்தேகம் எழுவதற்கு, சம்பந்தப்பட்டவர் பற்றி காரணம் கூறி விமர்சிக்கப்பட வேண்டும் என்ற வாதம் எடுபடாது. இன்றும் ஒருவரைப் பற்றி சாதாரணமாக எச்சரிக்கும்போது காரணம் கூறாமல், அவரைப் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள் என்று எச்சரிப்பது நடை முறையில் இருக்கிறது.

ஆனால் அவர் மிக வும் கெட்டவர் என்ற நிலை வரும்போது தான் காரணம் கூறி எச்சரிக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. இன்று மட்டுமல்ல, அன்றும் இதே நிலை தான். மேற்படி ஹதீஃத் பல வீனமானது, அல்லது இட்டுக்கட்டப்பட்டது என்று நிலை நாட்டத்தான் காரணம் கூறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மேற் படி ஹதீஃதில் சந்தேகம் தான் கிளப்பப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் கூறத்தேவையில்லை.

காரணம் கூறாமல் சந்தேகம் என்று ஹதீஃத்களை நிராகரிப்பதாக இருந்தால் 100க்கு 95 ஹதீஃத்களை நிராகரிக்க வேண்டி வரும் என்ற வாதமும் ஏற்கத்தக்க தல்ல. காரணம் புள்ளி விபரங்களுடன் சொல்லப்படாமல் பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படும் மனித யூகமே இதுவாகும். “சந்தேகம் தருபவற்றை விட்டுவிட்டு, சந்தேகமற்றதின்பால் சென்றுவிடு” என்பது ஆதாரபூர்வமான ஹதீஃத், நபி(ஸல்) அவர்களின் தெள்ளத்தெளிவான 17:36 இறை வாக்கின்படி அமைந்த கட்டளை, சந்தேகமானதை விடுவதாக இருந்தால் 100க்கு 95 ஹதீஃத்களை விட வேண்டி வரும் என்பது மனித அபிப்பிராயம். இதில் எதை எடுத்து நடப்பது?

அதிலும் சந்தேகமானதை விட்டு சந்தேகமற்றதின்பால் சென்றுவிடும்படி நபி (ஸல்) அவர்களின் நேரடி கட்டளை இருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு சந்தேக மானதை தூக்கி நிறுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை, தவறாகும். காரணம் விரலசைப்பது பற்றிய ஹதீஃதை விட சமிக்கை செய்வது பற்றிய ஹதீஃத் சந்தேக மற்றதாக இருக்கிறது. அதைவிட சந்தேகமற்றதை விட்டு சந்தேகமற்றதின் பால் சென்று விடு’ என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளை யிலேயே, அதைவிட சந்தேகமற்ற ஒன்று இல்லை. அதே சமயம் அதனை செயல்படுத்தியும் ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது இருப்பதில் சந்தேகம் குறைவானதை எடுத்து நடக்க இடம் இருக்கிறது என்பதைப் புரிய முடிகிறது. ஒரு பொருள் நமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. சந்தையில் தரமான பொருளைத் தேடி திரிகிறோம். எங்குமே கிடைக்கவில்லை என்ற நிலை வரும்போது தேவையின் அவசியத்தை முன்னிட்டு தரம் குறைந்த பொருளையும் வாங்கத்தான் செய்கிறோம்.

ஹதீஃத்களைப் பொருத்தமட்டிலும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து சமுதா யம் ஒன்றுபட வேண்டும் என்ற அவசியத்தின் நிமித்தமே 4:59, 17:36 மேற்படி ஹதீஃத் ஆதாரங்களின்படி கருத்து வேறுபாடுகளைப் போக்க முயன்று வருகிறோம். 1)இரண்டும் தரமானதாக இருந்தால், இரண்டையும் ஏற்றுக் கொள்வது, 2)ஒன்றின் தரம் குறைந்தால் அதை விட்டு தரமானதை ஏற்றுக் கொள்வது, 3)இரண்டுமே தரமானதில்லை. அதே சமயம் அவற்றில் ஒன்று மற்றதை விட தரமானது.

மேலும் எடுத்து நடக்க வேண்டிய அவசியமும் உள்ளது. எனும்போது இருப்பதில் தரமானதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்தச் சமுதாயத்தில் ஒன்றுபட்ட நிலை வந்துவிட்டால் சமுதாயம் ஒன்றுபட வழி பிறக்கும். இந்த தராதரங்களைப் பார்க்காமல் அவரவர்கள் தாங்கள் சொல்லுவதுதான் சரி என்று வாதம் செய்யும் நிலை நீடித்தால், சமுதாய ஒற்று மைக்கு வழி பிறக்காது. கலகத்திற்குத்தான் வழி பிறக்கும். அது மட்டுமல்ல இந்த கருத்து வேறுபாடுகளைக் காட்டி ஹதீஃத்களை மறுத்து குர்ஆன் மட்டும் போதும், ஹதீஃத்கள் தேவையில்லை என்று கூறும் “அஹ்லுல் குர்ஆன்’ கூட்டம் தலைதூக்கவே வழிவகை செய்ததாகி விடும்.

எனவே இருப்பில் விரலசைப்பது பற்றிய ஹதீஃத் சந்தேகத்திற்குரியதாகவும் (பல ஹீனமானதல்ல) சமிக்கை செய்வது பற்றிய ஹதீஃத் சந்தேகமற்றதாகவும் இருப்பதால், சந்தேகமற்ற சமிக்கை செய்யும் ஹதீஃதை எடுத்துச் செயல்படுவதே முறையாகும். இப்போது சமிக்கையிலும் நீட்டுவது, அசைப்பது இரண்டு பொருளும் இருக்கின்றனவே, ஏன் அசைக்கக் கூடாது என்ற சந்தேகம் எழலாம்.

எல்லா ஹதீஃத்களிலும் சமிக்கை என்று மட்டும் வந்திருந்தால் இது நியாயமான சந்தேகமே. அதே சமயம் ஒரு ஹதீஃதில் “கிப்லாவை நோக்கி சமிக்கை செய்தல்’ என்று வருவதால் இங்கு அசைப்பதற்கு ஆதாரமில்லை. நீட்டல், சுட்டிக்காட்டல் என்பதற்கே ஆதாரமிருக்கிறது. கிப்லா நம்மை நோக்கி வரும் அசையும் பொருள் அல்ல.

எனவே இங்கு அசைத்தல் என்று பொருள் கொள்ள இடமேயில்லை. ஆயினும் ஒருவர் நஸயீயில் காணப்படும் இந்த ஹதீஃத் அல்லாமல் முஸ்லிமில் இஷாரா காணப்படும் ஹதீஃத்களில் “சமிக்கை’ இஷாரா என்று மட்டுமே காணப்படுகிறது. அதற்கு அசைத்தல் என்று பொருள் கொள்ளவும் இடம் இருக்கிறது. எனவே தொழுகை இருப்பில் விரல் அசைக்கலாம் என்று வாதிட்டால் அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆயினும் இதில் அவர் தெளிவாக பக்க சார்பில்லாமல் நடுநிலையோடு இருக்க வேண்டும்.

இது நாள்வரை விரலசைப்பதை நியாப்படுத்தி விரலசைத்து வருகிறோம். இப்போது அதற்கு மாற்றமாக நீட்டுவதா? ஜனங்கள் என்ன கூறுவார்கள்? இவர்கள் எல்லாம் இப்படித்தான். இன்று ஒன்று சொல்லுவார்கள், நாளை ஒன்று சொல்லுவார்கள், குழப்பவாதிகள் என்று அவர்கள் நையாண்டி செய்யமாட்டார்களா? என நினைத்து அவர்களின் நையாண்டிக்குப் பயந்து விரலசைப்பதை நியாயப்படுத்தி செயல்படுத்தினால் அவர்களின் தொழு கையே பாழாகிவிடும். காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்காகத் தொழவில்லை. ஜனங்களுக்காகவே தொழுகிறார்கள். அவர்களது தொழுகை அவர்களின் முகத்தில் தூக்கி எறியப்படும்.

107:4,5,6 இறைவாக்குகளின் படி குற்ற வாளியாகிறார். மனிதன் தவறு செய்பவனே என்பதை மறந்து தவறே செய்யாத நிலைக்கு உயர்ந்து விடலாம் என்று அவர்கள் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். எந்த இமாம்களின் பெயரால் இவர்கள் மத்ஹபுகளை அமைத்துள்ளார்களோ அந்த மரியாதைக்குரிய இமாம்களே, “எங்களை தக்லீது” செய்யாதீர்கள், இன்று ஒன்றை நாங்கள் சொல்வோம், நாளை அதை மாற்றிவிடுவோம், குர்ஆன், ஹதீஃதையே பின்பற்றுங்கள்’ என்று தெளிவாகவே எச்சரித்துள்ளார்களே.

இமாம் ஷாஃபியி(ரஹ்) அவர்கள் பிற்காலத்தில் தமது தீர்ப்புகளில் பலவற்றைத் திருத்தியுள்ளார்கள். “கவ்லு கதீம்” “கவ்லு ஜதீத்” என்று ஒன்றுக்கொன்று மாறுபட்ட தீர்ப்புகள் பதிவாகி இன்றும் பார்வைக்கு உள்ளன. எனவே சொல்வதைச் சரியாகவே சொல்லவேண்டும். தவறே நிகழ்ந்து விடக் கூடாது என்ற தப்பான எண்ணத்தை ஷைத்தானே இவர்கள் உள்ளத்தில் போட்டு, அத னாலேயே “தக்லீது’ என்ற வழிகேட்டில் செல்ல, வழிவகுக்கிறான். 7:3 இறைவாக்கின்படி இமாம்களின் சரியான தீர்ப்பையே ஆராயாமல் கண்மூடி பின்பற்றுவது கொண்டு அதாவது தக்லீது செய்வது கொண்டு நரகில் போய்த்தான் விழ நேரிடும்.

67:2 இறைவாக்கின்படி இவ்வுலக வாழ்க்கை பரீட்சை, வாழ்க்கை பரீட்சையில் காப்பி அடிப்பவன் 100க்கு 100 சரியாக எழுதும் மாணவனிடம் காப்பி அடித்தாலும் வெளியில் தூக்கி எறியப்படுவான். காப்பி அடிக்காமல் அவன் சுயமாக விளங்கி எழுதினால் அவன் எழுதிய அளவிற்கு 35 அல்லது 40 மார்க்காவது கிடைக்க வழியுண்டு. இங்கு பரீட்சையில் அதிகாரிகளை ஏமாற்றுவது போல் வாழ்க்கை பரீட்சையில் அல்லாஹ்வை ஏமாற்றவும் முடியாது. யார் யார் காப்பி அடிக்கிறார்கள் என்பதை அல்லாஹ் மிகத் தெளிவாக அறிந்தவனாக இருக்கிறான்.

எனவே யாரையும் காப்பி அடிக்காமல் அதாவது கண்மூடிப் பின்பற்றாமல் தக்லீது செய்யாமல் அவர்களின் கூற்றுக்களைக் குர்ஆன், ஹதீஃத் வெளிச்சத்தில் ஆராய்ந்து அவற்றிற்கு ஒத்திருப்பவற்றை எடுத்து நடப்பதே அல்லாஹ்வுக்கு விருப்பமானதாகும். அவ்வாறு செய்யும் நமது சுய முயற்சியில் தவறுகள் நிகழுமானாலும், நமது முயற்சிக்கு அல்லாஹ் கூலி தருவான். பிறரை காப்பி அடிப்பதை அதாவது தக்லீது செய்வதையே அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான்.

நம்மை தக்லீதின் வலையில் வீழ்த்தவே ஷைத்தான் நமது முயற்சியில் ஏற்படும் தவறுகளை அவனது ஆதரவாளர்களைக் கொண்டு நையாண்டி செய்ய வைக்கிறான். எனவே இதில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் செய்வது தவறு என்று நிரூபணமானால் அடுத்த வினாடியே அத்தவறை விட்டு நீங்கி தெளபா செய்து மீண்டுவிட வேண்டும். இதையே அல்லாஹ் விரும்புகிறான்.

***********************

“முஸ்லிம்களிடையே பிரிவினை வேண்டாம்”

Dr A. முகமது அலி, Ph.D.,

அல்லாஹுவின் அருள் மார்க்கம் இஸ்லாத்தில் பிரிவினை இல்லை; கருத்து வேறுபாடுகள் இல்லை; அது ஒரே மார்க்கம்; நேரான வழி; சரியான உண்மையான வழியாகும். உண்மை என்றென்றும் ஒன்றா கவே இருக்கும். அதுவே நேரான உண்மையான இஸ்லாமிய மார்க்கம். இதில் கோணல்களைக் காண முடியாது. ஏனெனில் இது எல்லாம் வல்ல நாயனால் நல்கப்பட்டது. இலகுவான மார்க்கமாகும். ஆனால்…….

இதனை ஏற்று நடக்கும் முஸ்லிம்களிடையே அதனால் கருத்து வேறுபாடுகள் பிரிவினைகள், உருவாக முடியும். இதனால் ஒன்றுபட்டு வாழ வேண்டிய முஸ்லிம்கள் பற்பல பிரிவுகளாகப் பிரிந்து போவார்கள். நமது பரம எதிரியான ஷைத்தானுக்கு நாம் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ்வது மிகவும் பிடிக்காத விஷயமாகும். எனவே அவன் தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்து நம்மிடையே விரோதத்தையும், குரோதத்தையும் உருவாக்கி பிணக்குகளையும், கருத்து வேறுபாடுகளையும் உருவாக்குவான். ஷைத்தானின் இந்த இழிச் செயலை அல்லாஹ் நமக்கு நினைவூட்டுவதைப் பாரீர்.

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல் லாம் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டுபண்ணுவதுதான்.  அல்குர்ஆன்: 5:91

இதற்கென ஷைத்தான் பற்பல ஆயுதங் களைத் தனது சூட்சுமக் கயிறாக உபயோ கிப்பான். இனம், குலம், கோத்திரம், மொழி, நாடு, கொள்கை, நடைமுறை வழக்கங்கள் என எல்லாவற்றிலும் ஒவ் வொருவருக்கும் வெறியை உண்டுபண்ணி தத்தமது இனம், குலம், கோத்திரம், மொழி, நாடு கலாச்சாரம், கொள்கை, நடைமுறை வழக்கங்களே சிறப்பானவை, உயர்வானவை மற்றவை தாழ்வானவை என்ற வேறுபாடுகளை உருவாக்கித் தனித்தனியாகப் பிரிப்பான். மனித இனம் முழுமையாக ஒற்றுமையாக இருப்பது அவனுக்குப் பிடிக்காத பொது விஷயமானாலும் குறிப்பாக இறையடியார்களான முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் இருப்பது அவனுக்கு எட்டிக் காயாகும்.

எனவே முஸ்லிம்களிடையே எள்ளாக இருக்கும் கருத்து வேறுபாடுகளை அவரவரின் தன்மான உணர்வுகளைத் தூண்டிவிட்டு எரிமலையாக்கி விடுவான். இதனை நாம் சரித்திர வாயிலாகவும், இன்றைய நடைமுறை வழிகளிலும் தத்ரூபமாக அறியலாம். இதற்கென ஷைத்தான் உபயோகிக்கும் சூட்சுமக் கயிறு மிக அற்பமானதாக இருப்பினும் அதைத் தங்களது பகுத்தறிவு, மொழி ஞானத்தைக் கொண்டு நிலைநிறுத்தச் செய்வான்.

எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் ஷைத்தானின் பிரிவினை குழப்பத்திலிருந்து விடுபட நமக்குக் கொடுக்கும் அறிவுரைகளைப் பாருங்கள்

 1. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்.
  அல்குர்ஆன்: 2:208
 2. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.  அல்குர்ஆன் : 3:103
 3. நீங்கள் அனைவரும் சன்மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள்; நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள். அல்குர்ஆன்: 42:13
 4. நிச்சயமாக இதுவே (இஸ்லாமே) என்னுடைய நேரான வழி; ஆகவே இதனையே பின்பற்றுங்கள்; இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம்; அவை உங்களை அவனுடைய வழியை (இஸ்லாத்தை) விட்டுப் பிரித்துவிடும். அல்குர்ஆன்: 6:153

இத்திருமறை வசனங்களிலிருந்து நாம் கீழ்காணும் விஷயங்களை அறியலாம். அதாவது:

 1. நாமனைவரும் அல்லாஹ்வின் அருள் மார்க்கமான தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைதல் வேண்டும். அதுவே முழுமையான தீர்க்கமான வாழ்வு நெறியாகும்.
 2. அம்மார்க்கத்தில் மூல நூலான அல்லாஹ்வின் அறுபடாத கயிறான திருகுர்ஆனை அனைவரும் ஒற்றுமையாக வலுவாக பற்றிப் பிடிக்க வேண்டும்.
 3. அதுவே நம் சன்மார்க்கமான இஸ்லாத்தை நிலைநிறுத்த உதவும் வழியாகும். அதுவே நேரான வழியாகும்.
 4. மற்ற அனைத்து வழிகளும் ஷைத்தானின் வழிகேடுகளாகும். அவற்றினை பின்பற்றினால் நாம் பிரிந்து சின்னாபின்னமாகி விடுவோம் என்ற எச்சரிக்கை.

நமது தமிழகத்தில் சென்ற 10,11 வருடங்களாக மக்களை திருகுர்ஆன், நபிவழி (ஹதீஃத்) பக்கம் அழைக்கும் பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருவதை நாம் அனைவரும் நன்கறிவோம். இம்முயற்சி ஆரம்பித்தபோது இருந்த ஒற்றுமையும், இணக்கமும் இன்று அக்கருத்துக்களைக் கூறுபவர்களிடையே இல்லாமல் பிளவு பட்டு வருவதைக் காணுகிறோம். இது ஒரு வகையில் ஷைத்தானின் சூழ்ச்சியாக இருந்தாலும் அச்சூழ்ச்சி நீடித்து நிலைக்காது என்பது அல்லாஹ்வின் வாக்காகும். உண்மை உறங்குவது போல தெரியலாம் ஆனால் இறந்து விடாது. உண்மை விழித்தெழும்போது பொய்மை இறந்து மறைந்து போய் விடும் என்பதே திருகுர்ஆன் கூறும் கூற்றாகும்.

முஸ்லிம்களிடையே பிரிவினைகளை, பிணக்குகளை ஏற்படுத்த ஷைத்தானுக்குப் பெரும் முயற்சிகள் தேவையில்லை. சாதாரணப் பெயர்களைக் கொண்டே பிரிவினை களை உருவாக்கி விடுவான். ஒரே நாட்ட வர்களாக, மொழியினராக, கலாச்சாரத்தினராக, இனத்தவராக இருக்கலாம். தனிப் பெயரைக் கொண்டு பிரிவினையை ஷைத் தானால் உருவாக்கி விரோதத்தையும், குரோதத்தையும், பகைமையையும், வெறுப்பையும் உண்டாக்க முடியும். உதாரணமாக: முழு இந்தியாவாக, இருந்ததை ஒரே நாட்டினரை மத அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா என பிரிவினை ஏற்படுத்தினான். ஒரே மதத்தினராக இருந்த பாகிஸ்தான் மொழி அடிப்படையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் என பிரிவினை உருவானது.

ஒரே மதத்தவர்களாகவும், இனத்தவர்களாகவும், மொழியினராகவும் இருக்கும் மலாய்க்காரர்கள் புரூணை, மலேசியா, இந்தோனேசியா என பிரிந்து பிளவுபட்டு வாழ்கிறார்கள். இதேபோல அரபு நாடுகளிலுமிருப்பதைக் காணலாம். இது மிகவும் அதிசயமான ஒரு நிலையாகும். மொழியால் ஒன்றுபட்டவர்கள், மதத்தால் ஒன்றுபட்டவர்கள், இனத்தால் ஒன்றுபட்டவர்கள், கலாச்சாரத்தால் ஒன்றுபட்டவர்கள், உணவு, உடை, பழக்கவழக்கங்களில் ஒன்றுபட்ட மலாய் மக்களும், அரபிகளும் இன்று பிளவுபட்டிருப்பது எதன் அடிப்படையில் என்பதை சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

இவர்களை ஆண்ட முந்திய காலனித்துவ பிரிட்டிஷ் அரசு இவர்களது ஒற்றுமையைக் குலைக்க வேண்டுமென்றே ஒரு பார்டர் முறைகளை வகுத்து தனித்தனி நாடகப் பெயரிட்டனர். அங்கங்குள்ள அரசியல் தலைவர்களும் அதனை ஏற்றனர். ஏன்? அனைத்தும் ஒன்றாக இருந்தால் தனக்குத் தலைமையத்துவம் கிடைக்காமல் போகலாம். இது தனி நாடாக இருந்தால் தலைமைத்துவம் நிலைக்கும் என்ற சுயநல எண்ணமேயாகும். முழுச் சமுதாயத்தைப் பார்க்காமல் தங்களது சுயநலநோக்குடன் பிரிவினையை ஏற்றதே இன்று இவர்கள் பிளவுபட்டிருக்கக் காரணமெனில் மிகையாகாது. இது இன்றைய முஸ்லிம் நாடுகளின் நிலைமையயனில், அதுவே முழு இஸ்லாத்தைப் பரப்ப நாடும் இன்றைய அழைப்பா ளர் (தாயி)களின் நிலையாகிவிட்டது.

எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக இருந்தால் ஒரு தலைமைதானிருக்கும். அத் தலைமைக்கு நாம் கட்டுப்பட வேண்டும். அவர் ஒரு நீக்ரோவானாலும் சரியே! கட்டுப்பட்டே தீரவேண்டும். இதுவே நமது நபி மொழி காட்டும் வழிமுறையாகும். இதனை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக இன்றைய பகுத்தறிவுவாத, விஞ்ஞான யுகத்தில் ஒவ்வொருவரும் தலைவராகவே முயற்சிக்கிறார்கள். சினிமாவில் நடிப்பவர்கள் கூட தலைமையை நாடி, அதனை நிறைவேற்றிக் கொள்ளும்போது அது நம்மால் முடியாதா? என்ற உணர்வு ஒவ்வொரு வருக்கும் வரவே செய்யும். அதன் முடிவு ஒற்றுமை குலைந்தது. இன்று குர்ஆன், ஹதீஃத் சொல்பவர்களே பற்பலப் பெயர் களால் பிளவுபட்டுச் செயல்படுவதைக் காண்கிறோம்.

அல்லாஹ் இட்டப் பெயரான இஸ்லாம், முஸ்லிம் என்ற பெயர்களிருக்கையில் வேறு பெயர்களல் பிளவுபடாதீர்கள் என நாம் எச்சரிக்கும்போது இந்நண்பர்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் முஹாஜிர்கள், அன்சார்கள் என்ற பெயர்களில்லையா? அல்லாஹ் குர்ஆனில் யகூதி, நஸாராக்கள், சாபியீன்கள் என அவர்களது பெயர்களைக் கூறி அழைப்பதன் மூலம் அல்லாஹ் வெவ்வேறு பெயர்களில் செயல்படுவதை அனுமதிக்கவில்லையா? என பகுத்தறிவு வாதம் பேசுகிறார்கள். இவையனைத்திற்கும் நாம் பதிலளித்தும் அறிந்தும் அறியாதவர்களாக இருப்பது நமக்கு மிகவும் வியப்பைத் தருகிறது. இருப்பினும் நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களை அவ்வப்போது எடுத்துரைப்பதில் நாம் பின்னடையப் போவதில்லை.

“முஹாஜிர்கள்’ : மக்கத்து காஃபிர்களின் கொடுமைக்கு ஆளான மக்கத்து முஸ்லிம்கள் மக்காவை விட்டு மதினாவில் குடியேறியவர்கள். முஹாஜிர்கள் என்றால் நாடு விட்டு வேறு நாட்டில் குடியேறியவர்கள் என்பது பொருளாகும். இச்செயலைச் செய்த மக்கத்து முஸ்லிம்களை அல்லாஹ்வும், அவனது தூதர்(ஸல்) அவர்களும் “முஹாஜிர்கள்” என அழைக்கின்றனர்.

இப்படி நாடு துறந்து வந்த மக்கத்து முஸ்லிம்களுக்கு புகலிடமளித்து உதவி செய்தவர்கள் “அன்சார்கள்” என அழைக்கப்பட்டனர். உதவுதல் என்ற செயலால் அவர்களுக்கு “அன்சார்” என்ற பெயரளிக்கப்பட்டது. இவ்விருசாராரையும் அல்லாஹ் தனது திருமறையில் மிகவும் கண்ணியமளித்துப் புகழ்கிறான்.

நிச்சயமாக எவர் இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டு, தம் ஊரை விட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும், அல்லாஹுவின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவி செய்தார்களோ, அவர்களும்; ஒரு வருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள். அல்குர்ஆன்: 8:72

எவர் இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டு (தம்) ஊரைத் துறந்து, அல்லாஹு வின் பாதையில் போர் புரிகின்றாரோ, அவரும் எவர் அவர்களுக்குப் புகலிடம் அளித்து உதவி செய்கின்றார்(அன்சார்)களோ, அவர்களும்தான் உண்மையான இறை நம்பிக்கையாளர் (முஃமின்)கள் ஆவார்கள். அல்குர்ஆன்: 8:74\

இவ்விரு திருவசனங்களிலும் அல்லாஹ் முஹாஜிர், அன்சார் இரு சாராரையும் புகழ்ந்துரைக்கின்றான்.

எவர்கள் நம் வீடுகளையும், நம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப்பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ, அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங் குண்டு); அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாம் உண்மையாளர்கள், இன்னும் சிலர் முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டனர். அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர் (முஹாஜிர்)களை நேசிக்கின்றனர். அன்றியும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள். மேலும், தங்களைவிட அவர்களையே (உதவிப் பெற தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டவர்கள். இத்தகையவர்கள் தான் வெற்றியாளர்கள்.  அல்குர்ஆன்: 59:8,9

இந்த வசனங்களில் அல்லாஹ் அன்சார்களை குறிப்பிட்டு அவர்களது அன்பு, பாசத்தை அழகாக எடுத்துரைத்து வெற்றி யாளர்கள் இவர்கள் என வாக்களிக்கின்றான். மேலும், முஹாஜிர்களிலும், அன்சாரிகளும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களும், அவர்களை நற்செயல்களில் பின் தொடர்ந்தவர்களும் இருக்கி றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகின்றான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள். மேலும் அவர்களுக்காக சுவனபதிகளைச் சித்தப்படுத்தியி ருக்கின்றான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுவே மகத் தான வெற்றியாகும். அல்குர்ஆன்:9:100

இத்திருமறை வசனங்கள் மூலம் முஹாஜிர்களும், அன்சாரிகளும் எந்த அளவு அல்லாஹுவினால் அவர்களது செயல், பெயர் குறிப்பிடப்பட்டு புகழப்படுகின்றனர் என் பதை அறியலாம். இவர்கள் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள்; உண்மை முஸ்லிம்கள் வெற்றியாளர்கள்; அல்லாஹுவின் அருள் திருப்திப் பெற்றவர்கள்; சுவனபதிகளைச் சித்தப்படுத்திக் கொண்ட சிறப்பானவர்கள் என்ற பெருமை எவருக்கும் கிடைக்காத சிறப்பம்சங்களாகும்.

இவ்வளவு சிறப்புமிக்க முஹாஜிர்களும், அன்சாரிகளும் தத்தமது சிறப்பு பெயர்க ளான முஹாஜிர்கள், அன்சாரிகள் என்ற பெயர் கொண்டு தங்களை “முஸ்லிம்’ என்ற அல்லாஹ் இட்ட பெயரிலிருந்து பிரித்துக் காட்ட முயற்சிக்கலாமா? என்றால் அதற்கு அனுமதியே இல்லை. அல்லாஹ்வினால் புகழப்பட்ட முஹாஜிர்கள், அன்சாரிகள் என்ற பெயர்களிலும் தங்களை இனம் பிரித்துக் காட்டுவதை நபி(ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளதை கீழ்க்காணும் நபிமொழி மூலம் நன்கறியலாம்.

ஒரு போர்க்களம் கண்டபின் நபித்தோழர்கள் அமர்ந்திருக்கையில் ஒரு முஹாஜிர் (மக்கத்து) நபித்தோழர் மற்றொரு அன்சார் (மதீனத்து) நபித்தோழரை உதைத்து விடுகிறார். (முஹாஜிர் வேண்டுமென உதைத்தாரா? விளையாட்டாக உதைத்தாரா? தெரியாமல் உதைத்தாரா? என்பது அல்லாஹுவிற்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும். இதனை நாம் விமர்சிக்க முடியாது. ஆனாலும்) உதை வாங்கிய மதீனத்து அன்சாரி நபித்தோழர் உதவிக்காக ஓ அன்சாரிகளே! என அழைத்தார். அவர் தனது அன்சாரி தோழர்களை அழைப்பதைக் கண்ட முஹாஜிர் நபித்தோழர் ஓ முஹாஜிர்களே! என தனக்காக தனது முஹாஜிர் தோழர்களை அழைத்தார்.

(அதாவது முஹாஜிர் நபித்தோழரும், அன்சாரி நபித்தோழரும் தத்தமக்கு உதவி செய்ய தம்மைச் சார்ந்தவர்களை அழைத்து கூட்டம் சேர்க்க முற்பட்டனர்) இவர்களின் கூப்பாடுகளை செவியுற்ற ரசூல்(ஸல்) அவர்கள் தனது கூடாரத்திலிருந்து வெளிப்பட்டு இது என்ன மடத்தனமான கூப்பாடு. இது அறியாமை காலத்து, ஜாஹிலிய்யா கூப்பாடல்லவா? இது அசிங்கமான அழைப்பல் லவா? எனக் கூறினார்கள்.

அச்சமயம் அங்கிருந்த அப்துல்லாஹ் பின் உபை என்ற நயவஞ்சக “முனாஃபிக்” அன்சாரி தோழருக்கு வக்காலத்து வாங்கி நீங்கள் (முஹாஜிர்கள்) மதீனா வாருங்கள். கண்ணியமிக்க மதீனத்து அன்சாரிகள் கீழ்தரமான உங்களை (முஹாஜிர்களை) வெளியேற்றுவார்கள் என சூளுரைத்தான். இதனை செவியுற்ற உமர்(ரழி) அவர்கள் யா ரசூலுல்லாஹ்! நீங்கள் எனக்கு அனுமதியளித்ததால் இந்நயவஞ்சகனின் தலையை கொய்து விடுகிறேன் என ஆவேசத்துடன் கேட்களானார்கள்.

அப்போது ரசூல்(ஸல்) அவர்கள் (இப்னு உபை ஒரு நயவஞ்சகன், முஸ்லிம்களிடையே “முஹாஜிர், அன்சாரி’ என்ற பெயர் அடிப்படையில் பிரிவினையை உருவாக்கும் ஷைத்தானாக செயலாற்றுகிறான் என்பதை உணர்ந்த நிலையிலும்) வேண்டாம் விட்டுவிடு! முஹம்மது தனது தோழர்களை, (அஸ்ஹாபஹு) கொன்றார் என்ற பழிச்சொல் வர வைத்து விடாதே எனத் தடுத்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல் லாஹ், (ரழி), ஆதாரங்கள்: புகாரி, மனாகிப் 4, வால்யூம்: 720ய, தஃப்ஸீர் : 6, வால்யூம்: 428, முஸ்லிம்: பிர்ரு 4, வால்யூம்: 6254-56, திர்மிதி: தப்ஸீர்: 63.

(அடைப்புக் குறிக்குள் உள்ளவை தெளிவுக்காக, நம்மால் எழுதப்பட்டவை, அதனை விட்டு விட்டு படித்தாலும் சரியே-ஆர்.)

முஸ்லிம் சகோதர சகோதரிகளே!

மீண்டும் ஓரிரு முறை மேற்படி நபி மொழியைப் படியுங்கள். அல்லாஹ்வினாலும், அவனது தூதராலும் புகழப்பட்ட முஹாஜிர்களும், அன்சாரிகளும் தங்களுக்கிடையே அப்பெயர்களால் பிளவுபடுவதை அனுமதிக்கவில்லை என்பதை நன்கறியலாம். அவர்களுக்கு அச்சிறப்பு பெயர் கொடுக்கப்பட்டது அவர்களது ஒரு செயலை காரணமாக கொண்டுதானே தவிர முஸ்லிம் என்ற கூட்டமைப்பிலிருந்து தனித்துக் காட்ட அல்ல என்பதை உணர வேண்டும்.

அவர்களிடையே எவ்வித பிணக்குகள், சண்டை சச்சரவுகள் வந்தாலும், முஸ்லிம் என்ற ஒரே ஜமாஅத்தாக முடிவு காண வேண்டுமேயன்றி தங்களது சிறப்புப் பெயர் களைக் கொண்டு அது அல்லாஹ் அவனது ரசூல்(ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், பிளவுபடக்கூடாது என்பதை தத்ரூபமாக அறியலாம். அப்துல்லாஹ் பின் உபை போன்ற நயவஞ்சக முனாஃபிக்கைக் கூட ரசூல்(ஸல்) அவர்களின் உம்மத்திலிருந்து வெளியேற்றலாகாது என்பதையும் விளங்கலாம். ஆனால்…..

இன்று நடப்பதென்ன?

எல்லோரும் முஸ்லிம்கள் என்றால் “குர்ஆன், ஹதீஃத்” வழி நடக்கும் உண்மை முஸ்லிம்களை எப்படி அறிவது? எல்லோரும் தரீக்காவென்றோ, தர்காவாதியயன்றோ, மத்ஹபுவாதியயன்றோ பிளவுபட்டிருக்கையில் அவர்களிலிருந்து எங்களைப் பிரித்துக் காட்ட நாங்கள் ஒரு தனிப் பெயரை வைத்துள்ளோம் என வாதிடுகின்றனர். அப்படி பிரித்துக் காட்ட வேண்டிய அவசியமென்ன? என்பதே நமது கேள்வியாகும். நாங்கள் தான் உண்மை முஸ்லிம்கள் என பீற்றிக் கொள்ள நாடுகின்றனவரா? இந்த பீற்றலை அல்லாஹ் அனுமதிக்கின்றானா? எனக் கேட்கிறோம்.

அப்படியல்ல! என பதிலளிப்பார்களேயானால், நயவஞ்சக முனாபிக்கைக் கூட தனது சமுதாயத்திலிருந்து பிரிக்காமல் தனது தோழரெனக் கூறிய நபி வழியைப் பின்பற்றும் இவர்கள் மற்ற முஸ்லிம்களை ஏன் பிரித்து வைக்க நாடுகின்றனர், அவர்களுக்குப் பின் தொழுவதை தடுக்கவும், தங்களது ஜமாஅத்துக்கென தனித்தனிப் பள்ளிகளை உருவாக்கி, சின்னா பின்னமாகியுள்ள முஸ்லிம்களை மேலும் ஏன் பிரிவினைக்குள்ளாக்கி பிரித்தாளுகின்றனர்? என கேட்கிறோம்.

இதற்கு இவர்கள் பதிலளிக்கவில்லை எனிலும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்து ஒன்றுபட்ட இஸ்லாமிய நெறிப்படி அல்லாஹ் இட்ட பெயரான முஸ்லிம்களாக வாழவும், வாழ்ந்து காட்டவும் முயற்சிக்கக் கேட்டுக்கொள்கிறோம். அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

***********************

அமல்களின் சிறப்புகள்….

தொடர் : 53

 1. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ­ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

அல்ஹம்துலில்லாஹ்! சென்ற டிசம்பர், 2019 இதழில் அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் பக்கம்: 392ன் நான்காவது பத்தியில் ஆரம்பித்து 393ன் முதல் பத்தியில் ஹதீஃத் என்ற பெயரில் மொத்தம் மூன்று பாராக்களில் “நபி(ஸல்) அவர்கள் தங்களது இரு பாதங்களும் வீங்கும் அளவுக்கு நின்று தொழுது வந்த ஹதீஃதைப்பற்றி எழுதியுள் ளதை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டோம்.

அது சம்பந்தமாக பல ஹதீஃது நூல்களில் உள்ள பல ஹதீஃதுகளை எழுதி இருந்தோம். பொதுவாகவே, எல்லா ஹதீஃதுகளிலும் அசி புத்தகம் மேற்படி பக்கங்களில் எழுதியுள்ள பல விஷயங்கள் இல்லாமல் இருந்த தைப் பார்த்து இருப்பீர்கள். ஹதீஃதுகளில் இல்லாமல் இருந்த அந்த விஷயங்கள் தான் இடைசெருகல் செய்யப்பட்டுள்ள விஷயங்கள் ஆகும்.

ஸஹீஹான ஹதீஃதின் உள்ளே புகுந்து அசி புத்தகம் மூன்று பத்திகளில் செய்த அந்த இடைச்செருகல் என்னென்ன என்பதையும் ஹதீஃதில் எப்படி எல்லாம் மோசடி (ய்நுயூறூசியூக்ஷு) செய்யப்பட்டுள்ளது என்பதையும், இன்ஷா அல்லாஹ், இப்போது ஒன்றன் பின் ஒன்றாக ஆய்வு செய்வோம்.

எமது ஆய்வு :

“அசி” முதல் பத்தியில் உள்ளவை :

ஒரு மனிதர் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம், ரசூல்(ஸல்) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த ஏதாவது ஆச்சரியமான ஒரு விஷயத்தை அறிவியுங்கள் என்று கேட்டார். அப்பொழுது ஆயிஷா(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் எதுதான் ஆச்சரியமாக இல்லாமல் இருந்தது? என்று கூறிய பின் ஒரு நிகழ்ச்சியை கூறினார்கள். இதுதான் முதல் பத்தியில் கூறப்பட்டுள்ள விஷயம்.

இந்த விஷயம் சென்ற இதழில் நாம் காண்பித்த பல ஸஹீஹான ஹதீஃதுகளில் எங்காவது ஒரு இடத்திலாவது இடம் பெற்றிருக்கிறதா என்றால் இல்லை, இல்லவே இல்லை என்று கூறி விடுவீர்கள். ஆகையால், அசி ஆசிரியர் அவரது சொந்த கருத்தை ஹதீஃதில் நுழைத்து மோசடி செய்துள்ளார் என்பதையும் புரிந்து இருப்பீர்கள்.

அசி ஆசிரியர் மீது நல்லெண்ணம் கொண்டு, ஒருக்கால், நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த, ஆச்சரியமான விஷயங்களைக் கொண்ட ஹதீஃத்களிலாவது அசி ஆசிரியர் கூறியது இடம் பெற்றிருக்கலாம் என்று சிலர் நினைக்கலாம். எனவே, ஆச்சரியம் தரும் ஹதீஃதுகளை பார்வையிட்டோம். அவைகளிலும் அசி புத்தகத்தில் எழுதப்பட்ட மேற்கூறிய விஷயங்களைக் காணோம். மாதிரிக்காக சில ஹதீஃதுகளை முன் வைக்கின்றோம்.

மர்ஸத் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

நான் உக்பா இப்னு ஆமிர்(ரழி) அவர் களிடம் சென்று அபூ தமீம் மஃரிபுக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களே. உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்து வந்தோம் என்று விடையளித்தார்கள். இப்போது ஏன் விட்டுவிட்டீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் “அலுவல்களே காரணம்” என்றார்கள். புகாரி: 1184, அத்தியாயம்: 19, தஹஜ்ஜித்

மேற்கண்ட ஹதீஃதில் அசி ஆசிரியர் கூறிய கற்பனைக் கதை இடம் பெறவில்லை என்பதைத் தெரிந்து கொள்வோமாக.

ஜாபிர்(ரழி) அவர்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் அறிவித்தார்கள்.

நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துல்ஹஜ்ஜின் நான்காவது (நாளின்) காலையில் ஹஜ்ஜுக்காக மட்டும் அவர்களு(டைய ஹஜ்ஜுடைய நிய்யத்து)டன் (உம்ரா) எதுவும் கலந்து விடாமல் இஹ்ராம் அணிந்தவர்களாக வந்தார்கள். நாங்கள் வந்து சேர்ந்தபோது நாங்கள் இஹ்ராம் அணிந்ததை உம்ராவாக ஆக்கிக் கொள்ளும்படியும் எங்கள் மனைவிமார்களிடம் நாங்கள் உறவு கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். மக்களிடையே இந்த விஷயம் பரவிவிட்டது. அதைப் பற்றி அவர்கள் வியப்புடன் பேசிக் கொள்ளலாயினர்.

அறிவிப்பாளர் அதா இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) கூறினார்.

பிறகு ஜாபிர்(ரழி), எங்கள் இன உறுப்பில் விந்து கட்டிக் கொண்டிருக்க, (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) நாங்கள் மினாவுக்குச் செல்வதா? என்று (வியப்புடன்) கேட்டார்கள். அப்போது ஜாபிர்(ரழி) தம் தம் கையால் சைகை செய்து இவ்வாறு கேட்டார்கள்.

இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில், மக்கள் சிலர் இப்படி இப்படியயல்லாம் பேசுகிறார்கள் என்று எனக்குச் செய்தி எட்டியது. இறைவன் மீதாணையாக! நான் அவர்களை விட அதிக நற்செயல் புரிபவனும் அதிகமாக அல்லாஹ்வுக்கு அஞ்சுபவனும் ஆவேன். என் விவகாரத்தில் (ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்ததில்) நான் பிற்பாடு (இறையறிவிப்பின் வாயிலாக) அறிந்த (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என்கிற) சட்டத்தை முன்கூட்டியே நான் அறிந்திருப்பேனாயின். என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருக்க மாட்டேன். என்னு டன் பலிப் பிராணி இல்லாமல் இருந்திருந் தால் நானும் (உம்ரா மட்டும் செய்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) விட்டிருப்பேன் என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட சுரக்கா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷிம் (ரழி) எழுந்து, இறைத் தூதர் அவர்களே! இந்தச் சலுகை எங்க ளுக்கு மட்டும்தானா? இல்லை, என்றைக்கு மாகவா? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், (உங்களுக்கு மட்டும்) இல்லை, மாறாக, என்றைக்குமாகத்தான் என்று கூறினார்கள்.

அப்போது அலீ இப்னு அபீ தாலிப்(ரழி) (யமன் நாட்டிலிருந்து திரும்பி) வந்தார்கள். அறிவிப்பாளர் அதாஉ(ரஹ்) கூறினார்கள். ஜாபிர்(ரழி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரழி) ஆகிய இருவரில் ஒருவர் (அதாவது ஜாபிர் (ரழி), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதற் காக இஹ்ராம் அணிந்துள்ளார்களோ அதே ஹஜ்ஜுக்காகத் தான் நானும் இஹ்ராம் அணிகிறேன் என்று அலீ(ரழி) சொன்னதாகக் கூறுகிறார். மற்றொருவர், (இப்னு அப்பாஸ்(ரழி) அல்லாஹ்வின் தூதருடைய ஹஜ்ஜைப் போன்றதற்கே (ஹஜ்ஜு உம்ரா வுக்கே), நானும் இஹ்ராம் அணிகிறேன் என்று அலீ(ரழி) சொன்னதாகக் கூறுகிறார்.

நபி(ஸல்) அவர்கள், அலீ(ரழி) அவர்களை, அவர்களின் இஹ்ராமிலேயே நீடித் திருக்கும்படி கட்டளையிட்டார்கள். தம் தியாக பிராணியில் அவர்களையும் கூட் டாளியாக்கினார்கள். புகாரி: 2505, 2506, அத்தியாயம்: 47, கூட்டுச் சேருதல்.

மேற்கண்ட ஹதீஃதிலும் அசி ஆசிரியர் கூறிய கற்பனைக் கதை இடம் பெறவில்லை என்பதைத் தெரிந்துகொள்வோமாக.

“ஆச்சரியம்’ மற்றும் “வியப்பு’ போன்ற வார்த்தைகள் ஹதீஃதுகளில் இடம் பெறாவிட்டாலும், நம்மைப் போன்றோருக்கு ஆச்சரியமாகத் தெரியும் விஷயங்கள் உள்ள ஹதீஃதுகளில், அசி ஆசிரியர் கூறியவை இடம் பெற்றிருக்குமோ என்று எமக்குத் தோன்றிய எண்ணத்தில் அடிப்படையில் அப்படிப்பட்ட ஹதீஃதுகள் சிலவற்றை மாதிரிக்காக இப்போது ஆராய்வோம்.

அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் அறிவித்தார்:

மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரழி) ஜும்ஆ பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் “ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று சொல்ல ஆரம்பித்தபோது “உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை (ஆச்சரியமாக) பார்த்தனர்.

“இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள் என இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார். புகாரி: 616, அத்தியாயம்: 10, பாங்கு.

மேற்கண்ட ஹதீஃதிலும் அசி ஆசிரியர் கூறிய கற்பனைக் கதை இடம் பெறவில்லை என்பதைத் தெரிந்து கொள்வோமாக.

அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார்: இறைத் தூதர்(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, (பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, “நாங்கள் இதற்காக (மனிதர்களா கிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத்தான்’ என்று கூறியது எனக் கூறினார்கள்.

மக்கள் “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) பசுமாடு பேசுமா?’ என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம்’ என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரழி) அவர்களும் உமர்(ரழி) அவர்களும் இருக்கவில்லை.

தொடர்ந்து, நபி(ஸல்) அவர்கள், “ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கி)க் கவ்விக் கொண்டு சென்றது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றிவிட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, “இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றி விட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும். (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது எனக் கூறினார்கள். இதைக் கேட்ட மக்கள், “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம்’ என்று கூறினார் கள். அபூ பக்ர்(ரழி) அவர்களும் உமர்(ரழி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை.

இந்த ஹதீஃத் மற்றோர் அறிவிப்புத் தொடரிலும் அபூ ஹுரைரா(ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. புகாரி: 3471, அத்தியாயம்: 60, நபிமார்களின் செய்திகள் (கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்துமே அந்த யுக முடிவு நாள் என்பது, “காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது’ என்ற 81:5 இறை வசனத்தில் உள்ள கட்டளைப்படியானது என்பதை அறிக.

மேற்கண்ட ஹதீஃதில், ஆச்சரியம், வியப்பு என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை என்றாலும், பசு மாடு பேசிய நிகழ்வும், ஓநாய் பேசிய சம்பவமும் எவருக்கும் ஆச்சரியம் தரக்கூடிய விஷயங்கள்,

இப்படிப்பட்ட ஹதீஃதிலும் அசி ஆசிரியர் கூறிய கற்பனை இடம் பெறவில்லை என்பதை அறிவோமாக.

அடுத்த ஹதீஃதை பாருங்கள்.

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரழி) அறிவித்தார்:

(என் தந்தை) மக்ரமா(ரழி) அவர்கள் என்னிடம், “என் அன்பு மகனே! நபி(ஸல்) அவர்களிடம் மேலங்கிகள் சில வந்திருப்பதாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக் கொண்டிருப்பதாகவும் எனக்குச் செய்தி எட்டியுள்ளது. எனவே, எம்மை அவர்களிடம் அழைத்துச் செல்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் சென்று நபி(ஸல்) அவர்களை, அவர்களின் வீட்டில் கண்டோம்.

அப்போது என் தந்தை மக்ரமா(ரழி) அவர்கள் என்னிடம், “என் அருமை மகனே! எனக்காக நபி(ஸல்) அவர்களைக் கூப்பிடு’ என்றார்கள். அதை மரியாதைக் குறைவாகக் கருதிய நான், “உங்களுக்காக நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கூப்பிடுவதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் அன்பு மகனே! நபி(ஸல்) அவர்கள் சர்வாதிகாரி அல்லர்’ என்று சொல்ல, நான் நபி(ஸல்) அவர்களைக் கூப்பிட்டேன். அப்போது அவர்கள் தங்கப் பித்தான் பொருத்தப்பட்ட அலங்காரப்பட்டு மேலங்கியயான்றை எடுத்துக்கொண்டு வந்து, “மக்ரமாவே! இதை உங்களுக்காக நான் எடுத்து வைத்தேன்’ என்று சொல்லி மக்ரமாவிடம் அதைக் கொடுத்தார்கள். புகாரி: 5862, அத்தியாயம்: 77, ஆடை அணிகலன்கள்.

ஆண்களுக்கு தங்கமும், பட்டும் தடை செய்யப்பட்டிருப்பதால், நபி(ஸல்) அவர்கள் தங்கப் பித்தான் பொருத்தப்பட்ட அலங்காரப்பட்டு மேலங்கியை மக்ரமா (ரழி) அவர்களுக்குக் கொடுத்ததனால், இச்சம்பவம் தடைக்கு முன் நிகழ்ந்ததாகக் கருத இடம் இருக்கிறது அல்லது வீட்டில் உள்ள பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ள தரப்பட்டிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.

இந்த ஹதீஃதில் மக்ரமா(ரழி) அவர்கள், தம் மகனிடம், “நபி(ஸல்) அவர்களைக் கூப்பிடு’ என்று கூறியதைப் படித்தவுடன், நம் மைப் போன்றோரின் செயல்கள் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி பாருங்கள். அல்லாஹ்வின் தூதரிடம் நேரில் போய் இந்த ஸஹாபி பேசாமல், அல்லாஹ்வின் தூதரையே தம்மிடம் வரச் சொல்கிறாரோ என்று மக்ரமா(ரழி) அவர்களின் மகன் எண் ணியதைப் போல, இது மரியாதைக் குறைவு என்று நம்மில் ஒவ்வொருவரும் நினைத்து இருப்போம்.

அது மட்டும் அல்லாமல், அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை, மக்ரமா (ரழி) அவர்கள் மிகச் சரியாக புரிந்து வைத்திருந்ததனால் தான், மக்ரமா(ரழி) அவர்களால், “நபி(ஸல்) அவர்கள் சர்வாதிகாரி அல்லர்’ என்று கூற முடிந்தது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்போம்.

அது மட்டும் அல்லாமல், அவர் சரியாகப் புரிந்து கொண்டதை நிரூபிக்கும் வண்ண மாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சர்வாதிகாரியைப் போல இல்லாமல், பந்தா மற்றும் கோபம் எதுவுமில்லாமல் மக்ரமா (ரழ) அவர்களைப் பார்ப்பதற்கு, தாமே முன் வந்து அக்கறையுடன் உரையாடுகிறார் கள். இதிலிருந்து நபி(ஸல்) அவர்களின் எளிமை (றீணூனிPஸிணூளீணூவீக்ஷு) புலப்படுகிறது அல்லவா?

அது மட்டுமில்லாமல், மக்ரமா(ரழி) அவர்கள் தேவையுடையவர் என்று எண்ணி, நபி(ஸல்) அவர்கள் அவருக்காக ஒரு ஆடையை ஏற்கனவே எடுத்து வைத்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த செயல், அவர்கள் ஒரு கொடையாளி என் பதை காட்டுகிறது அல்லவா?

அது மட்டுமில்லாமல், நபி(ஸல்) அவர்கள் அந்த ஆடையை கொண்டு வந்து தேவையுடைய மக்ரமா(ரழி) அவர்களிடம் கொடுத்ததிலிருந்து, நபி(ஸல்) அவர்கள் மிகச் சரியாக ஒவ்வொருவரையும் புரிந்து வைத்திருந்தார்கள் என்றும், அவர்களின் புரிதல் மிகச் சரியாக இருக்கிறது என்றும் அவர்கள் மீது இன்னும் அதிகமாக நல்லெண்ணம் கொள்ள முடிகிறது அல்லவா?

அது மட்டுமில்லாமல், மேற்கண்ட ஒரே ஒரு சம்பவத்திலிருந்து நபி(ஸல்) அவர்க ளின் செயல்பாட்டிலுள்ள உண்மை, அணுகு முறையில் அடக்கம், எளிமை, நேர்மை போன்ற பல தன்மைகள் வெளிப்பட்டு அவற்றின் மூலமாக நபி(ஸல்) அவர்கள் தான், கண்ணியமிக்க ஏக இறைவனான அல்லாஹு சுப்ஹானஹுவத ஆலா அனுப்பி அருள் புரிந்த இறுதித் தூதர், இறுதி நபி என்பதில் இன்னும் அதிகமாக ஈமானில் உறுதி ஏற்பட்டிருக்கும் அல்லவா?

இப்படியான ஈமானைப் பெற்றிருந்ததால் தான் ஸஹாபாக்களின் காலத்தை தமக்குப் பின்னுள்ள சிறந்த முதல் சமுதாயம் என நபி(ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறி னார்கள் அல்லவா?

அல்லாஹ்வின் அச்சத்தை இதயத்தில் நிறைந்திருந்த அந்த சஹாபாக்கள் கூறியதை வாசகர்களின் நினைவுத் திரைக்கு கொண்டு வர இங்கு கடமைப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஹதீஃதுகளில் ஒன்றிரண்டை இப்போது கவனிப்போம்.

“என்மீது, வேண்டுமென்றே இட்டுக் கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால்தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்” என அனஸ்(ரழி) அறிவித்தார். புகாரி: 108, அத்தியாயம்:3, கல்வியின் சிறப்பு.

அடுத்த ஹதீஃதையும் கவனியுங்கள்:

“(தந்தையே! உங்களைப் போன்று நபி (ஸல்) அவர்களுடன் நட்பு கொண்ட) இன் னின்னாரெல்லாம் நபி(ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல, தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் கேள்விப்பட்டதேயில்லையே! ஏன்?” என்று என்னுடைய தந்தை ஸுபைர்(ரழி) அவர் களிடம் நான் கேட்டதற்கு, இதோ பார்! நான் (பெரும்பாலும்) நபி(ஸல்) அவர்களைப் பிரிந்திருந்ததே இல்லை. ஆயினும் என் மீது இட்டுக் கட்டிச் சொல்பவர் தன்னு டைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் (எனவேதான் நான் அதிகமாக அறிவிக்கவில்லை) என்றார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரழி) கூறினார். புகாரி: 107, அத்தியாயம்: 3, கல்வி யின் சிறப்பு.

நிலைமை இவ்வாறு இருக்க, ஒரேயயாரு நொடி சிந்தித்துப் பார்ப்போம். நபி(ஸல்) அவர்களிடமிருந்து நேருக்கு நேர் கேட்டதையே அறிவிக்கத் தயங்கிய சஹாபாக்களின் நிலையை அசி ஆசிரியரின் நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது நபி(ஸல்) அவர்கள் கூறியதற்கு மாறாக தவறுதலாக எதையாவது மாற்றி சொல்லிவிடுவோமோ அதனால் நரகிற்கு போக வேண்டி வந்து விடுமோ என்று பயந்தார்கள். இப்படியான சஹாபாக்கள் தான் அனைத்திலும், அல் லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான் என்று அல்லாஹ்வே சிலாகித்துக் கூறுகிறான்.

ஆனால், அமல்களின் சிறப்புகள் ஆசிரியர் அல்லாஹ்வின் அச்சம் கொஞ்சம் கூட இல் லாமல் ஹதீஃதுகள் என்ற பெயரில் தாம் நினைத்ததையயல்லாம் எழுதி கடை பரப்பி வைத்திருக்கிறார். மார்க்கத்தில் “ஷைகுல் ஹதீஃத்’ என்ற பட்டத்தை அவருக்கு யார் கொடுத்தார்கள்? அல்லாஹ்வா? அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்களா?
ஹதீஃதுகளை உருவாக்கியவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மட்டும் தான்.

ஷைகுல் ஹதீஃத்! ஹதீஃத்களின் ஷைக்! ஷேக் என்பது மருவி ஷைக் ஆகி இருக்கிறது. பெரியவர், சிறப்பிற்குரியவர், தலைவர், முதல்வர் என்றெல்லாம் இதற்கு பொருள் உண்டு.

இங்கே நம் தமிழ் நாட்டில் சொல்வார் கள் அல்லவா? சமூகத்தில் எல்லா மனிதர் களும் சமம் என்ற உயரிய கொள்கைக்காக சாதி ஒழிப்பு, தீண்டாமை இவைகளை ஒழிக்க பாடுபட்டதினால், மதிப்பிற்குரிய ஈ.வே.ரா. அவர்களை பெரியார் ஈ.வெ.ரா. தந்தை ஈ.வே.ரா. என்று போற்றிப் புகழ்கின்றனர். மேலும், உலகளவில் பல அறிஞர் களை பொருளாதாரத்தின் தந்தை, நவீன கண்டுபிடிப்பின் தந்தை என்று போற்றிப் புகழ்கின்றனர்.

“ஷைகுல் ஹதீஃத்’ என்று அசி புத்தகத் தின் ஆசிரியர் ஜக்கரிய்யா சாஹிப் அவர்களை போற்றிப் புகழ்வது ஏன்? ஹதீஃதுகளை உருவாக்கிய இறைத் தூதரா இவர்? அல்லது ஹதீஃதுகளை அறிவித்த சஹாபியா இவர்? அல்லது ஹதீஃதுகளை சேகரித்து, தொகுத்து, தரம் பிரித்துத் தந்த முஹத்திஸீனா (ஹதீஃத் கலா வல்லுனரா) இவர்?

ஹதீஃதுகளை உருவாக்கிய அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தங்களை “ஷைகுல் ஹதீஃத்’ என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஹதீஃதுகளை உலகத்தாருக்கு அறிவித்துத் தந்த எண்ணற்ற ஸஹா பாக்கள் தம்மை “ஷைகுல் ஹதீஃத்’ என்று சொல்லிக் கொள்ளவில்லை. மார்க்க போதனைகளை அப்படியே மக்களுக்கு எந்த பிரதி பலன் பாராமல் எடுத்துக் கூறிய தாபி ஈன்கள் தம்மை “ஷைகுல் ஹதீஃத்’ என்று சொல்லிக் கொள்ளவில்லை, ஹதீஃதுகள் கிடைக்கப் பெற்ற மக்களை சந்தித்து எல்லா ஹதீஃதுகளையும் அவர்களிடமிருந்து சேக ரித்து, தரம் பிரித்து, தொகுத்துத் தந்த, தாபி ஈன்கள் காலத்திலும், அதற்கடுத்த தபஉதாபி ஈன்கள் காலத்திலும் வாழ்ந்த பல “முஹத்த ஸீன்கள்’ அதாவது “ஹதீஃத் கலா வல்லுனர் கள்’ தங்களை “ஷைகுல் ஹதீஃத்’ என்று சொல்லிக் கொள்ளவில்லை.

மேலே கூறப்பட்டுள்ள மார்க்க ஈடுபாட்டாளர்களைத் தவிர ஆக கடைசியாக, இந்த அற்ப உலக வாழ்க்கையில், கல்லூரிகளில், கல்லூரி என்றவுடன் அரபிக் காலேஜ் என்று நினைத்து விடாதீர்கள். அரபு நாட்டின் ஆரம்பப் பள்ளிக் கூடங்களுடன் கூட ஒப்பீடு செய்ய தகுதி இல்லாதவைகள் தாம் நமது அரபி காலேஜ்கள் ஒன்றிரண்டைத் தவிர,

இங்கே நாம் கூறுவது கலைக் கல்லூரிகளை (புயூவீ ளீநுஸிஸிசிறூசிறீ) அரபி மொழியில் முதுகலை பட்டம் பெற்று, பிறகு Pஜு.ம் (ம்நுளீவீநுயூ நுய் Pக்ஷிணூஸிநுறீநுPக்ஷிக்ஷு) பட்டம் பெற்ற அரபி எழுத, படிக்க, பேசத் தெரிந்தவர்கள் கூட தங்களை “ஷைகுல் ஹதீஃத்’ என்று சொல்லிக் கொண்டதில்லை.

ஆனால், நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருக்காத, பின்பற்றத் தேவையில்லாத பல வீனமான ஹதீஃதுகளையும், இட்டுக் கட்டப்பட்ட ஹதீஃதுகளையும், அதையும் தவிர, இவரது சொந்த கப்சாக்களை ஸஹீஹான ஹதீஃதுகளில் சொருகி, அவைகளை மார்க்கம் என்று மக்களுக்குக் காண்பித்து அதன் மூலம் தானும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுத்து மார்க்கத்தில் பித்தலாட்டம் செய்யும் இந்த நபர் ஷைகுல் ஹதீஃ தாம். நம் நாட்டில் இந்த மார்க்கம் கேள்வி கேட்பாடு இல்லாத மார்க்கமாகி விட்டதால், யார் வேண்டுமானாலும் என்ன பட்டம் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடிகிறது.

அரபிக் கல்லூரிகள்(?) தான். மார்க்க அதாரிட்டி என்று நினைப்பவர்களிடம் கூறுகிறேன். ஷைகுல் ஹதீஃத் என்ற பட்டத்தை ஏன் இவர்கள் தடை செய்யவில்லை? ஏன் தெரியுமா? அசி புத்தகம் கூறுவதையயல்லாம் ஹதீஃத்கள் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தடை செய்வதற்கு இவர்களுக்கு ஹதீஃதுகள் தெரிந்திருக்க வேண்டும். அவைகளின் தரம் தெரிந்திருக்க வேண்டும். இதெல்லாம் தெரியாத போது, ஹதீஃது என்று எதை எதையோ சொல்லி பள்ளிவாசல்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் தப்லீக் ஜமாஅத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால், நாமும் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாமே என்ற ரீதியில்தான் அரபிக் கல்லூரிகள்(?) செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அவற்றுள் சில தப்லீக் மதரஸாக்களாகவே செயல்பட்டு வருகின்றன.

இந்த லட்சணத்தில் இரண்டாம் மூன்றாம் பத்திகளில் உள்ள செய்திகளை ஆய்வு செய்தால், அவற்றிலிருந்து என்ன கிளம்புமோ தெரியாது. இருப்பினும் இனி வரும் இதழ்களில் அவற்றையும் ஆய்வு செய்வோம். இன்ஷா அல்லாஹ் தொடரும்…..

***********************

இஸ்லாமிய மார்க்கத்தில் பிரிவுகள் உண்டா?

பிரிவுகளாக செயல்படுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா?

 அபூ ஹனிபா,  புளியங்குடி

அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி :

முஸ்லிம்கள் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.   அல்குர்ஆன்: 33:21

இன்றைக்கு முஸ்லிம்கள் பல பிரிவுகளாக பிரிந்து செயல்படுகிறார்கள். அவ்வாறு செயல்படுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் முன்மாதிரி இருக்கிறதா? அல்லாஹ் அனுமதி தந்திருக்கின்றானா? என்பதை பார்க்க வேண்டும். அப்படி பார்த்துத்தான் எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும். அனுமதி இல்லாமல் முன்மாதிரி இல்லாமல் தாமாக தனது மனோ இச்சையின் அடிப்படையில் முடிவு எடுத்து செயல்பட்டால் அவர்களை அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனை விட மிக வழிகெட்டவன் எவன் இருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்டமாட்டான்.  அல்குர்ஆன்: 28:50

அல்குர்ஆன் 28:50 வசனத்தில் இருந்து நேர்வழிகாட்டியான குர்ஆன், ஸஹீஹான ஹதீஃத்கள் இன்றி தனது மனோ இச்சையின் அடிப்படையில் செயல்படுபவர்கள் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். மேலும் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டேன் என்று சொல்கிறான். மேலும் அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக அவர்கள் தங்களை ஆக்கிக் கொண்டார்கள் என்றும் சொல்கிறான்.

மனோ இச்சையை பின்பற்றுபவர்கள் அல்லாஹ்விற்கு இணையாளர்கள்:

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும், தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. அல்குர்ஆன் : 42:21

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அனுமதிக்காத ஒன்றை ஒருவர் அனுமதிக்கி றார் என்றால் அவர் அல்லாஹ்வுக்கு இணையாக ஆகிவிட்டார் என்பது அல்குர்ஆன் 42:21 வசனத்தின் பொருள். அதனால் முஸ்லிம்கள் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அதற்கு அனுமதி தந்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு தாமாக தனது மனோ இச்சையின் அடிப்படையில் செயல்பட்டால் மார்க்க முடிவு எடுத்தால் ஒன்று தனது மனோ இச்சையை ரப்பாக எடுத்துக் கொண்டதற்குச் சமம் அல்லது தன்னையே ரப்பாக ஆக்கிக் கொண்டதற்கு சமம். இப்போது பிரிவினை விசயத்திற்கு வருவோம். இஸ்லாத்தில் பிரிந்து செயல்படுவதற்கு அனுமதி இருக்கிறதா? என்று பார்ப்போம்.

உம்மத்தன் வாஹிதா :

நிச்சயமாக உங்கள் “உம்மத்து”-சமுதாயம்-ஒரே சமுதாயம் தான். மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள். அல்குர்ஆன்:21:92

“இன்னும், நிச்சயமாக உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயம் தான். மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன். எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்.” அல்குர்ஆன்: 23:52

மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்குர்ஆன்: 2:213

இந்த மூன்று வசனங்களும் மனிதர்கள் ஒரே சமுதாயமாக, ஒரே உம்மத்தாக வாழ்ந்தார்கள் என்று சொல்கிறது. ஆக மனிதர்கள் அனைவரும் எந்த பிரிவுகளும் இன்றி ஒற்றுமையாக ஒரே சமுதாயமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இந்த வசனங்கள் மூலமாக நாம் அறியலாம்.

மனிதர்கள் எதற்காக பிரிந்தார்கள்?

மனிதர்கள், ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நற்செய்தி கூறுவோ ராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோ ராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான். எனினும் அவ்வேதம் கொடுக்கப்பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான். இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.

அவர்கள், தங்களிடம் ஞானம் வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறா மையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை. ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்கா விடில், அவர்களிடையே நிச்சயமாக தீர்ப்ப ளிக்கப்பட்டிருக்கும். அன்றியும், அவர்க ளுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.  அல்குர்ஆன் : 42:14

மனிதர்கள் எதற்காக பிரிந்து சென்றார்கள் என்று அல்லாஹ் இந்த இரண்டு வசனங் களின் மூலமாக தெளிவாக விளக்கி உள்ளான். சத்தியம் இன்னது என்று தெளிவாக தெரிந்த பின்னரும் தங்களுடைய பொறா மையின் காரணமாக பிரிந்தார்கள் என்று சொல்கிறான். ஆக பிரிவினைக்கு அடிப்படை காரணம் பொறாமை என்பது தெளி வாக விளங்குகிறது.

இன்றைக்கு நாங்கள்தான் தவ்ஹீத் வாதிகள் என்று சொல்லக்கூடிய முஸ்லிம் இயக்கவாதிகள் எதற்காக பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள். ஒரே கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் ஏன் நாற்பது பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்? காரணம் பொறாமை.

பிரிவுகள் கூடாது :

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், “நீங்கள் சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள். நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்.”
அல்குர்ஆன் : 42:13

அல்குர்ஆன்: 42:13 வசனத்தில் அல்லாஹ் நபிமார்களுக்கு கட்டளையிடுகிறான் நீங்கள் சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள். அதில் பிரிந்துவிடாதீர்கள் என்று, இன்றைக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பதற்கு காரணமும் இஸ்லாமிய மார்க்கம் தான் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றினால் பிரிவு வரும்? கொஞ்சம் சிந்திப்போமா?

மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடாவா? அல்குர்ஆன்: 2:170

2:170 வசனத்தில் அல்லாஹ் சொல்வது போல் அல்லாஹ் இறக்கி வைத்ததை பின்பற்றினால் எந்த பிரிவுகளும் வராது மாறாக எங்கள் முன்னோர்கள் எந்த வழியில் கண்டோமோ அதைத்தான் பின்பற்றுவோம் என்று சொன்னால் பிரிவுகள் வரத்தான் செய்யும். இன்றைக்கு மத்ஹப்வாதிகள், தவ்ஹீத்வாதிகள் என்ற பிரிவுகள் எப்படி வந்தது? எங்கள் முன்னோர்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகளைக் கூட மார்க்கமாக பின்பற்றுவோம் என்று மத்ஹப் மவ்லவிகள் சொன்னதினால்தான் அதை வைத்து தங்களின் வயிற்றை வளர்க்க தவ்ஹீத் மவ்லவிகள் தவ்ஹீத் இயக்கங்களை உருவாக்கினார்கள். அதுபோல நாம் தவ்ஹீத்வாதிகளிடம் சொல்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு அல்முஸ்லிமீன் என்று பெயர் வைத்திருக் கிறேன் என்று சொல்கிறான்.

நாம் எல்லோரும் ஜமாஅத்துல் முஸ்லிமீனாக செயல்படுவோம் என்று சொன்னால், அவர்கள் சொல்கிறார்கள் அன்சாரிகள், முஹாஜிர்கள் என்று அல்லாஹ் அடைமொழி பெயர்களில் அழைக்கிறான். அதனால் எந்த பெயரில் வேண்டுமானாலும் செயல்படலாம் என்று தங்களின் மனோ இச்சையின் அடிப்படையில் சுய விளக்கம் கொடுத்து பல பிரிவுகளாக பிரிந்து செயல்படுகிறார்கள்.

இறைத் தூதர்களின் காலத்தில் பிரிவுகள் உண்டா?

இறைத்தூதர்கள் வாழும் காலங்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடம் பிரிவுகள் இல்லை. அவர்கள் மரணத்திற்கு பின்பு தான் பிரிவுகள் ஏற்படுகின்றன. ஆதம் நபி காலம் முதல் முகம்மத் நபி(ஸல்) அவர்கள் காலம் வரை நபிமார்கள் வாழும் காலத்தில் பிரிவுகள் இல்லை. ஆதாரம் அல்குர்ஆன் : 21:92, 23:52, 2:213. அதற்கு பின்பு தான் தங்களிடையே உள்ள பொறாமையின் காரணமாக பிரிந்து செல்கிறார்கள்.   அல்குர்ஆன்: 2:213

பிரிவுப் பெயர்கள் எப்போது உருவாகியது?

இஸ்லாமிய மார்க்கத்தை உறுதியாக பற்றிக்கொண்டு சமுதாயத்தில் எந்த பிரிவுகளையும் உருவாக்காது. உறுதியோடு நிலைத்து நின்ற முந்தய நபிமார்களின் சந்த தியினர் தங்களை அல்முஸ்லிமீன் என்றே சொல்லிக் கொண்டார்கள். ஆதாரம் : அல்குர்ஆன்: 2:132,133, 3:52,64, 84,102, 5:111, 6:163, 7:126, 10:72 அதற்கு காரணம் அல்லாஹ்வை ஈமான் கொண்டவர்களுக்கு அல்லாஹ் அல்முஸ்லிமீன் என்று பெயரிட்டுள்ளான். அல்குர்ஆன் : 22:78

இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக், யாகூப், மூஸா, ஈஸா, முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் வரைக்கும் தங்களை அல்முஸ்லிமீன் என்றே சொன்னார்கள். நபிமார்களும் அவர்களை பின்பற்றும் மக்களும் ஒன்று பட்டு ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள்.

அல்லாஹ்விற்கு மாறு செய்தவர்கள் தான் தங்களுக்கு என்று தனிப் பெயர்களை வைத்துக் கொண்டார்கள். உதாரணமாக சொல்வதாக இருந்தால் யூதர் மதம், கிறிஸ்தவ மதம், இணை வைத்து வணங்கக் கூடிய மக்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல பெயர்களை தங்களுக்கு சூட்டிக் கொண்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டிருந்தால் தங்களை அல்முஸ்லிமீன் என்றே சொல்லியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை. காரணம் அவர்கள் சத்தியம் இன்னது என்று தெளிவாக தெரிந்த பின்னரும் தங்களிடையே உள்ள பொறாமையின் காரணமாக மாறு செய்தார்கள்.

முஸ்லிம்களிடையே பிரிவு பெயர்கள்:

மனித குலத்தையே நரகத்திற்கு அழைத்து செல்ல கடும் பாடுபடும் ஷைத் தானை ரப்பாக கொண்ட யூத, கிறிஸ்தவ முஸ்ரிக்குகளின் அடிச்சுவடுகளை தெரிந்தும், தெரியாமலும் பின்பற்றும் சில முஸ்லிம்கள் அல்லாஹ் வைத்த அல்முஸ்லிமீன் என்ற பெயரை புறந்தள்ளி விட்டு தங்களுக்குள் மார்க்க வழிபாடுகளில் பிரிவுகளை உருவாக்கி அதற்கு பெயர்களையும் வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.

குறிப்பிட்டு சொல்வதாக இருந்தால் ஷாஃபி, ஹனஃபி, ஹன்பலி, மாலிகி என்ற நான்கு மத்ஹப் பிரிவுகள் மார்க்க வழிபாடுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் எற்பட்ட பிரிவுகள் ஆகும். அதுபோல ததஜ, இதஜ, தமுமுக, பாப்புலர் பிரண்ட், லீக் eமிஉ., போன்ற இயக்கங்கள் தங்களிடையே உள்ள பொறாமையின் காரணமாக பிரிந்து செயல்படுகிறார்கள். இப்படி பல பிரிவுகளாக பிரிந்து செயல்படுபவர்களை பார்த்து அல்லாஹ் சொல்கிறான்.

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். அல்குர்ஆன்: 6:159

இந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஷாஃபி, ஹனஃபி, மாலிக், ததஜ, இதஜ, தமுமுக, eமிஉ., என்று பிரித்து பல பிரிவுகளாக பிரிந்து செயல்படுகிறார்களோ அவர்களுக்கும், தூதருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அல்லாஹ் அறிவிக்கிறான். அப்படி என்றால் பிரிவினை இயக்கவாதிகளின் நிலை என்ன என்று சிந்தித்துப் பாருங்கள்.

அல்முஸ்லிமீன் :

எவர் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, ஸாலிஹான அமல்கள் செய்து “”நிச்சயமாக நான் முஸ்லிம்களில் (அல்முஸ்லிமீன்) நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்? அல்குர்ஆன் : 41:33

இன்றைக்கு முஸ்லிம்களில் எத்தனை இயக்கவாதிகள், மத்ஹப்வாதிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து நல்ல அமல்கள் செய்து தங்களை முஸ்லிம்களில் நின்றும் (அல்முஸ்லிமீன்) உள்ளவன் என்று சொல்கிறார்கள். தமுமுக, பாப்புலர், ததஜ, இதஜ, லீக் என்று தங்களுடைய இயக்க பெயர்களை அல்லவா சொல்கிறார்கள். இப்படி இயக்கப் பிரிவு பெயர்களை சொல்பவர்கள் சொல்லால் எப்படி அழகியவராக ஆவார். அல்லாஹ்வின் சொல்லுக்கு மாறு செய்யும்

இவர்கள் எப்படி அழகியவர்கள் ஆவார்கள்? சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதரும், ஸஹாபாக்களும்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் கொண்டு செல்லும்போது தன்னை குறை´ குலத்தார் என்று அறிமுகம் செய்யவில்லை. மாறாக, தன்னை அல்லாஹ்விற்கு முற்றிலும் அடிபணியும் அல்முஸ்லிமீன் என்றே அறிமுகம் செய்தார்கள். முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டும் அல்ல. முந்தைய நபிமார்கள் அனைவருமே தங்களை அல்முஸ்லிமீன் என்றே அறிமுகம் செய்தார்கள்.   ஆதாரம்: 6:163, 10:72,90, 39:12, 46:15

அதுபோல அன்சாரிகள், முஹாஜிர் கள் போன்றோர் தங்களின் குலப் பெயரை சொல்லி தங்களை அறிமுகம் செய்ய வில்லை. அவர்கள் தங்களை அல்முஸ்லிமீன் என்றே அறிமுகம் செய்தார்கள். யூத, கிறிஸ்தவ, முஷ்ரிக்குகள் கூட இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை முஸ்லிம்கள் என்றே சொன்னார்கள். முஸ்லிம்களின் படை வருகிறது. முஸ்லிம்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றே சொன்னார்கள். ஆனால் இன்றோ முஸ்லிம் இயக்கவாதிகள் தங்களை அல்முஸ்லிமீன் என்று சொல்ல தயங்குகிறார்கள். காரணம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்து வருவதுதான்.

ஸஹாபாக்களின் ஒற்றுமை:

அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் ஏற்றுக்கொண்ட சத்திய ஸஹாபாக்கள் ஒற்றுமையாக செயல்பட்டார்கள். தங் களுக்குள்ளே கருத்து வேறுபாடு கொள்ளா மல் அல்லாஹ்வின் தூதரை தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்பட்டார்கள். தங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வின் கட்டளைகளையும், தூதரின் கட்டளைகளையும் ஏற்று கருத்து வேறுபாடுகளை களைந்தார்கள். கருத்து வேறு பாடு கொள்ளாமல் ஒற்றுமையாக செயல்பட்டதின் காரணத்தினால் 300 நபர்களை கொண்ட முஸ்லிம் சமுதாயம் மூவாயிரம் படைவீரர்களை எதிர் கொண்டு வெற்றி அடைந்தது. அந்த 300 முஸ்லிம்களின் ஒற்றுமைதான் இன்று உலகம் முழுவதும் இஸ்லாம் பரவியிருக்க காரணமாக இருக்கிறது.

அன்சாரிகள், முஹாஜிர்கள், குறைஷிகள் போன்றோர் தங்கள் குலப் பெயர்களில் ஒரு தலைவரை உருவாக்கிக் கொண்டு தனித்தனியாக செயல்பட்டு கொண்டிருந் திருந்தால் இன்று இஸ்லாம் என்ற ஒன்றே இருந்திருக்காது. அப்படி அவர்கள் செய்ய வில்லை. அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டார்கள்.
அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்:

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு வி­யத்தில் பிணக்கு ஏற்படுமானால், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின், அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

அல்குர்ஆன் 4:59 வசனத்திற்கு ஸஹாபாக்கள் கட்டுப்பட்டதினால் தான் நபி(ஸல்) அவர்களின் மறைவிற்கு பின்னால் நான்கு கலிபாக்கள் ஆட்சி நடந்தது. அந்த வசனத்திற்கு ஸஹாபாக்கள் கட்டுப்படவில்லை என்றால் கலிபாக்களின் ஆட்சி நடந்திருக்குமா? இன்றைக்கு முஸ்லிம்கள் அல்குர்ஆன் 4:59 வசனத்திற்கு கட்டுப்பட்டு நடந்தால் பிரிவுகள் வருமா?

ஜமாஅத்துல் முஸ்லிமீன் :

இன்றைக்கு முஸ்லிம்கள் இயக்க பிரிவுகள், மத்ஹப் பிரிவுகள் போன்றவற்றை எல் லாத்தையும் கலைத்துவிட்டு, அல்லாஹ் வைத்த பெயரான அல்முஸ்லிமீன் என்ற பெயரில் ஓர் அணியில் ஒரே ஜமாஅத்தாக ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒரே ஜமா அத்தாக ஒன்றிணைந்தால் அதற்கு பெயர் ஜமாஅத்துல் முஸ்லிமீன். ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பது ஒரு இயக்கம் தானே என்று சொன்னால் முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து செயல்படுவதால், இயங்குவதால் அதுவும் ஒரு இயக்கம் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த இயக்கத்தை துவங்கி வைத்தவர்கள் யார்? என்பதை பார்த்தால் அந்த இயக்கத்தில் செயல்பட லாமா? வேண்டாமா? என்பது தெளிவாகி விடும்.

ஆதம் நபி(ஸல்) துவக்கிய ஜமாஅத்துல் முஸ்லிமீன் :

ஆதம் நபி முதல் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் அனைத்து நபிமார்களும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தில்தான். அமைப்பில்தான், சமுதாயத்தில்தான் இருந்திருக்கிறார்கள். அதனை மறுத்து பொறாமையின் காரணமாக வெளியேறியவர்கள் தான் பல பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு இருக்கிறார்கள். ஆதாரம் அல்குர்ஆன் : 21:92, 23:52, 2:213, 22:78. மேலும் நபி(ஸல்) அவர்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் அதன் அமீரையும் பற்றிப் பிடியுங்கள் என்று நேரடியாகவே சொல்லியிருக்கும் போது முஸ்லிம்கள் அனைவரும் ஒரே ஜமாஅத்தாக ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் அதன் அமீரையும் பற்றிப் பிடிக்க வேண்டுமே அல்லாமல் பிரிவுகளாக செயல்படக் கூடாது. ஒரு வேளை ஜமாஅத்துல் முஸ்லிமீனோ அதன் அமீரோ இல்லை என்றால் பிரிவுகள் மட்டுமே இருந்தால் எந்த பிரிவு களிலும் சேரக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். ஆதாரம்: புகாரி: 3606, 7084.

ஆக முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமானால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு அல்லாஹ் வைத்த பெயரான அல்முஸ்லிமீன் என்ற பெயரில் ஜமாஅத்தாக ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்தால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஜமாஅத்துல் முஸ்லிமீனும் அதன் அமீரும் ஏற்படு வார்கள். இல்லை என்றால் முந்தைய நபிமார்களின் சமுதாயத்தினர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதரின் கட்டளைகளுக்கும் மாறு செய்து வந்ததினால் பல சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் உள்ளானார்கள். அதே நிலையை இன்றைய முஸ்லிம்கள் அடைவார்கள், அடைகிறார்கள் என்பது உறுதி. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. ஒரே உம்மத்தாக நம்மை ஆக்கி வைத்து அருள் புரியுமாறு துஆ செய்வோமாக.

***********************

விண்ணுக்குச் செல்லும் வீரர்களின் இதயம் சுருங்கும்!

குர்ஆன் கூறும் உண்மை!!

எஸ். ஹலரத் அலி, திருச்சி

அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகின்றான். யாரை வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவனின் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை ஏற்படுத்துகிறான். குர்ஆன்:6:125

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மனிதர்களின் உள்ளமானது எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக, வானில் ஏறும் மனிதர்களின் உள்ளம் போன்று சுருங்கி இருக்கும் என்ற ஓர் அறிவியல் உண்மையை அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனம் இறங்கிய 1400 ஆண்டு கால கட்டத்தில் மனிதன் வானில் ஏறுவதை கற்பனையிலும் கூட நினைத்திருக்க முடியாது. அதிகபட்சமாக உயரமான ஒரு மலையில் ஏறும் ஒரு மனிதனின் இதயம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சு விட சிரமப்பட்டு இதயம் சுருங்குவதையே இவ்வசனம் குறிப்பதாகவே கருதப்பட்டது.

ஆயினும் இன்றைய நவீன அறிவியல் உலகம், ஏராளமான மனிதர்களைப் பூமிக்கு வெளியில் விண்வெளிக்கும், நிலவுக்கும் அனுப்பி சாதனை செய்து வருகிறது. இப்படி விண்ணைத் தாண்டி வானில் ஏறிய விண்வெளியாளர்களின் இதயமானது, வெற்றிடம் மற்றும் ஈர்ப்பு விசை அழுத்தமின்மை காரணமாக, நீள்வட்ட அமைப்பிலிருந்து சுருங்கி வட்ட வடிவமாகிறது. (Heart Shrink like a spherical shape) என்ற உண்மை முன்பே வெளி வந்துவிட்டது.

பூமியில் இருக்கும்போது இதயம் நீள் வட்டத்திலும் (பச்சை), விண்வெளியில் இருக்கும் போது சுருங்கி உருண்டை வடிவத்திலும் (சிவப்பு) மாறுகிறது.

இது குறித்து விரிவான ஆய்வு முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. வானில் ஏறி விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களின் இதயம் மட்டும் சுருங்குவதில்லை. மாறாக, இதயத்தின் தசை செல்களிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை சமீபத்திய (JOURNAL STEM CELL REPORTS) 7, நவம்பர், 2019, “ஜர்னல் ஸ்டெம்செல் ரிப்போர்ட்” ஆய்வு இதழ் விளக்கியுள்ளது.

அமெரிக்கா ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக ஆய்வாளர்கள், எந்த ஒரு இதய நோயும் இல்லாத ஆரோக்கியமான, மூன்று நபர்களின் இதய ஸ்டெம் செல் ரத்த மாதிரி களை ஆய்வுக்கு எடுத்தனர்.

அந்த ரத்த மாதிரியின் ஒரு பகுதியை பூமியில் வைத்தும், மறு பாதியை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் சென்று, பூமிக்கு மேலே மிதந்து வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் (ISS-International Space Station) வைத்து சோதித்தனர். புவிஈர்ப்பு விசை இல்லா வெற்றிட சூழலில் (Microgravity) ஐந்தரை வாரங்கள் வைத்து ஆய்வு செய்தனர்.

இந்தச் சோதனையில் புவிஈர்ப்பு விசை இல்லா வெற்றிடச் சூழலில் இதய தசை செல்கள் செயல்பாட்டில் பெரிதும் மாறுதல் நிகழ்ந்தன. குறிப்பாக இதய செல்லில் 2635 ஜீன்களின் அமைப்பு மாற்றமடைந்தது.

இந்த ஐந்து வார சோதனை முடிவில் மீண்டும் பூமிக்கு திரும்பக் கொண்டுவரப்பட்ட இதய தசை செல்களின் மாறிய அமைப்பானது. பூமிக்கு வந்த பத்து நாட்களில் மீண்டும் அதன் பழைய அமைப்புக்கு சென்றுவிட்டது. வானில் செல்லும் விண்வெளி வீரர்களின் இதயமானது சுருங்குகிறது. இதயத்தின் அமைப்பு சுருங்குவதன் காரணம், அதன் தசை செல்களில் ஏற்படும் மாற்றம் என்பதை இன்றைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இருபதாம் நூற்றாண்டு அறிவியல் உண்மைகளை ஏழாம் நூற்றாண்டில் எந்த மனிதராலும் சொல்ல முடியாது. அது படைத்த இறைவனுக்கு மட்டுமே அன்று தெரிந்த ரகசியம்.

அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவனின் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான். அல்குர்ஆன் : 6:125

வானில் ஏறி விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் இதயத்தின் அமைப்பு சுருங்கியும், அதன் உள் செயல்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்படுமென்ற உண்மையை அல்லாஹ் அன்றே அல்குர்ஆன் வசனம் மூலம் முன்னறிவித்து விட்டான். சிந்திக்கக் கூடிய மனிதர்களுக்கு இந்த ஒரு வசனமே போதுமானது, சத்தியத்தை ஏற்றுக் கொள்வதற்கு.

இந்த ஆய்வானது அறிவியல் உலகில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை வானில் ஏறிச் சென்ற மனிதன் சந்திரன் வரையே சென்றுள்ளான். அடுத்து அவனது பயணத் திட்டம் பல லட்சம் மைல்களை கடந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்வதாக உள்ளது. விண்ணை கடந்து செல்ல மனிதனுக்கு அறிவாற்றல் கொடுக்கப்பட்டாலும், அவனது உடலானது அத்தகைய கடின சூழலுக்கு ஒத்துழைக்க வேண்டியது அதிமுக்கியமான ஒன்று.

மனித, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின் (அவ்வாறே) செல்லுங்கள். ஆனால் (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. அல்குர்ஆன்:55:33

வானில் ஏறிச்செல்லும் ஆற்றல் அன்று குர்ஆன் இறக்கப்பட்டபோது மனிதனுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் இன்று அந்த அறிவியல் ஆற்றலை மனிதன் பெற்று விட்டான். அப்படி ஆற்றலைப் பெற்ற மனிதன், வானில் உயரச் செல்லும்போது, அவனது உடலிலுறுப்புகளுள் இதயம் மாறுதல் அடையும் என்ற உண்மையையும் அல்லாஹ் அன்றே சொல்லிவிட்டான். பூமியிலிருந்து 350கி.மீ. உயரத்தில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து ஆய்வு செய்யும் நிலையில் இதய அமைப்பு மாறிவிடுகிறது.

இதையும் தாண்டி சந்திரனில் கால் வைத்த மனிதன், இனி 550 லட்சம் கி.மீ. பயணம் செய்து செவ்வாய் கிரகத்தில் இறங்க (2030ஆம் ஆண்டு) ஆயத்தமாகிவிட்டான். இந்த வெகுதூர ஆறு மாதப் பயண காலத்தில், அவனது இதயம் எந்த நிலையில் இருக்கும் என்று எவருக்கும் தெரியாது. மனிதன் வானில் உயரச் செல்லச் செல்ல அவனது இதயம் மாறுதல் அடையும். அந்த மாற்றத்திற்கு தகுந்தாற்ப் போல் கூடுதல் தயாரிப்பு இன்றி வானத்தைக் கடக்க முடியாது என்பதை குர்ஆனும், ஹதீஃதும் கூறுகிறது.

நபி(ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் இரவில் அல்லாஹ்வின் அழைப்பின்படி ஏழு வானத்தைக் கடந்து சென்றார்கள். இஸ்ரா என்னும் இப்பயணத்தில், நம் கற்பனைக்கும் எட்டாத கோடான கோடி மடங்கு மைல்களை கடந்து சென்றார்கள். இந்தப் பயணம் வெறும் கற்பனையிலோ அல்லது கனவிலோ நடந்ததல்ல. தனது ஸ்தூல, நிஜ உடம்போடுதான் அங்கு சென்றார்கள். ஆயினும் இப்பாரிய தூரத்தை கடப்பதற்கு மனித இதயம் சக்தி பெறமாட்டாது என்பதற்காகவே நபி(ஸல்) அவர்களின் இதயம் மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப் பயணத்திற்காக விசஷமாக தயார் செய்யப்பட்டது.

நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டுவரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறை எலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஜம்ஜம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு. (என் இதயம்) நுண்ணறிவாலும், இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது.

மேலும் கோவேறு கழுதையை விட சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த நீளமான புராக் (மின்னல் வேக) வாகனம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். (பிறகு படிப்படியாக) நாங்கள் ஏழாவது வானத்திற்கு சென்றோம். பிறகு(வான எல்லையிலுள்ள) இலந்தை மரமான “ஸித்ரத்துல் முன்தஹா” எனக்குக் காட்டப்பட்டது. (ஹதீஃத் சுருக்கம்). புகாரி: 3207, முஸ்லிம் : 260

அல்லாஹ்வின் மார்க்கம் சொல்லும் அத்துணை செய்திகளும் அப்பட்டமான உண்மைகள், அதில் நம் அறிவுக்கு எட்டும் செய்திகளுமிருக்கும். நம் அறிவுக்கு எட்டாத செய்திகளுமிருக்கும் இவை அனைத்தும் அல்லாஹ் ஒருவனிடமிருந்து வந்ததே என்று நம்புவதே ஈமான் என்னும் இறை விசுவாசம், “ஸித்ரதுல் முன்தஹா” என்னும் இலந்தை மரம் இருக்கும் ஏழாம் வானத்தில் நபி(ஸல்) அவர்கள் தம் கண்ணால் கண்டதை அல்லாஹ் உண்மைப்படுத்து கின்றான்.

அந்த மரத்தை மூடியிருந்தவை அதனை முற்றிலும் மூடிக் கொண்டன. அதிலிருந்து அவர் பார்வை விலகவும் இல்லை, கடக்கவும் இல்லை. அவர் தன் இறைவனின் மிகப் பெரும் அத்தாட்சிகளை எல்லாம் மெய்யாகவே கண்டார். அல்குர்ஆன்: 53:16,17,18

இரத்தம், தசை, எலும்புகளால் ஆன மனித உடல் அந்த உடலுக்கு உயிரூட்டும் இதயமானது, மாபெரும் தொலைதூர பயணத்தில் சுருங்கி மாற்றமடைய நேரிடும். ஆகவே அந்த பயணத்தை தாங்கக் கூடிய சக்தியை இதயத்திற்கு கொடுப்பதற் காகத்தான் நபி(ஸல்) அவர்களின் இதயம் பிளக்கப்பட்டு அதில் நுண்ணறிவாலும் (High Intelligence Technology) இறை நம்பிக்கையாலும் (Divine Inspiration) நிரப்பப்பட்டு தயார் செய்யப்பட்டது என்பதை மேற்கண்ட ஹதீஃதின் மூலம் அறியமுடிகிறது. விண்வெளியில், இதயத்தில் ஏற்படும் மாற்றத்தை இன்றைய நவீன அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமும் அறிவியலின் அடிப்படையில்தான் நடந்தது. இதுவே அல்லாஹ்வின் சுன்னத்! என்றும் மாறாத ஒன்று! அல்ஹம்துலில்லாஹ்.

உங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் ஆழ்ந்து கவனித்து பார்க்க வேண்டாமா?  அல்குர்ஆன்: 51:21

எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர்பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நுமான் இப்னு பஷீர்(ரழி), நூல்: புகாரி:52

***********************

அல்லாஹ் அளவே இல்லாத கருணையாளன்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்க

2019 டிசம்பர் தொடர்ச்சி…

“என் இறைவா! நீ என்னை அந்த நரக நெருப்பிலிருந்து வெளியேற்றியபோது மறுபடியும் அங்கு என்னைத் திருப்பி அனுப்புவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லையே!” அல்லாஹ் என்ற கூறுவான். உடனே வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ் “என் அடியானை விட்டுவிடுங்கள்” என்று கூறிவிடுவான் என்றார்கள். (அனஸ் பின் மாலிக் (ரழி) முஸ்னத் அஹ்மத், முஸ்னது அபீய அலா, மஜ்ம உஸ்ஸவாயித், தஃப்சீர் இப்னு கஸீர்: 6:514,515)

அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதா வது : மக்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “பெளர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்கு சிரமம் உண்டா?” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள்(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறுதான் (மறுமையில்) இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களை ஒன்றுகூட்டி, “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக் கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று கூறுவான். ஆகவே, சூரியனை வழிபட்டுக் கொண்டி ருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான் (களான தீய சக்தி)களை வழிபட்டுக் கொண்டிருந்தவர் கள் அவற்றைப் பின்தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள் அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள்.

அப்போது இறைவன் அவர்களிடம், அவர்கள் அறிந்திராத ஒரு தோற்றத்தில் வந்து, “நான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள், “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம்.

எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம்” என்பர். அப்போது அவர்கள் அறிந்து கொள்ளும் தோற்றத்தில் அவர்களிடம் இறைவன் வந்து, “நான் உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள், “நீயே எங்கள் இறைவன்” என்று கூறியவாறு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும். நானும் என் சமுதாயத்தாருமே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்போம்.

அன்று இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள். அந்தச் சூழ்நிலையில் இறைத் தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும் “அல்லாஹ்வே! காப்பாற்று! காப்பாற்று!” என்பதாகவே இருக்கும். நரகத்(தின் மேலே உள்ள அப்பாலத்)தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேலமரத்தின் (சஅதான்) முற்களைப் போன்றிருக்கும். பிறகு “கருவேலமரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல் அவர்கள் கேட்டார்கள். மக்கள் “ஆம் (பார்த்திருக்கிறோம்) அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கொக்கிகள் கருவேலமரத்தின் முள்ளைப் போன்று தான் இருக்கும். ஆயினும், அதன் பருமன் என்னவென்று அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் தமது (பாவச்) செயலால் (அங்கு) தங்கிவிட்ட இறை நம்பிக்கையாளரும் இருப்பார். இன்னும் அவர்களில் தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்படுபவரும் இருப்பார். இறுதியாக இறைவன், அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான்.

அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்காமல் இருந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதி கூறியவர்களில், தான் கருணை காட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். வானவர்கள் நரகத்திலிருக்கும் அவர்களை சஜ்தாவின் அடையாளங்ளை வைத்து இனம் கண்டுகொள்வார்கள். மனிதனி(ன் உடலி)ல் உள்ள சஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப் பகுதிகளை நரகம் தீண்டுகிறது. சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆகவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்து விட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளி யேற்றப்படுவார்கள்.

அப்போது அவர்கள் மீது “மஉல் ஹயாத்” எனப்படும் (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவு டன்) நிறம் மாறிவிடுவார்கள்.

பிறகு இறைவன் (தன்) அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடிப்பான். அப் போது நரகத்தை முன்னோக்கியபடி ஒரு மனிதர் மட்டும் எஞ்சியிருப்பார். அந்த மனிதர் தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார். அவர் “என் இறைவா!” நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்ச டைக்கிறது அதன் ஜுவாலை என்னைக் கரிக்கிறது. ஆகவே, நரகத்தை விட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிடுவாயாக!” என்று கூறி, அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனைகளைச் சொல்லி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்.

பிறகு அல்லாஹ், “இ(ப்போது நீ கோரிய)தை உனக்கு நான் செய்து கொடுத்)தால் வேறொரு கோரிக்கையையும் நீ முன் வைக்கலாம் அல்லவா?” என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், (இல்லை), வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்று சொல்லி விட்டு, அல்லாஹ் நாடிய வாக்கு றுதிகளையும், உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தை விட்டு (வேறே பக்கம்) திருப்பிவிடுவான். இதையடுத்து அவர் சொர்க்கத்தை முன் னோக்கி, அ(திலுள்ள)தைக் காணும் போது அல்லாஹ் நாடிய நேரம் வரை அமைதியாக இருப்பார்.

பிறகு, “என் இறைவா! சொர்க்கத்தில் வாசல் வரை என்னைக் கொண்டு செல்வா யாக!” என்பார். அதற்கு இறைவன் அவரிடம், “இப்போது உனக்கு நான் வழங்கிய தைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டேன் என நீ வாக்குறுதியும், உறுதிமொழியும் வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?” என்பான். ஆனால் அவர் தொடர்ந்து “என் இறைவா!” என்று கூறி அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பார். அவரிடம் இறைவன், (உனது இந்தக் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன் வைக்கலாம் அல்லவா?” என்று கேட்பான்.

அதற்கு அவர், “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்)” என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறு திகளையும் உறுதிமொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, அல் லாஹ் அவரைச் சொர்க்கத்தின் வாசல் வரை கொண்டு செல்வான். அவர் சொர்க்கத்தின் வாசலில் நிற்கும்போது அவருக்காகச் சொர்க்கம் திறந்துகொள்ளும். உடனே அவர் அதிலுள்ள உல்லாசமான சுகங்களைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை மெளனமாக இருப்பார். பிறகு, “என் இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!” என்று கூறுவார்.

அப்போது அவரிடம் இறைவன், “இப்போது உனக்கு வழங்கப் பெற்றதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டாய் என்று கூறி என்னிடம் வாக்குறுதிகளையும், உறுதி மொழிகளையும் நீ வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலைதான் என்ன?” என்று கேட்பான். அதற்கு, அவர், “என் இறைவா! நான் உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆகிவிடக் கூடாது” என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவரைக் கண்டு இறைவன் சிரித்து விடுவான். அவரைக் கண்டு இறைவன் சிரித்ததும் “சொர்க்கத்திற்குள் நுழைந்து கொள்!’ என்று கூறிவிடுவான்.

சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின் “நீ(விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று அவரிடம் இறைவன் கூறுவான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டுத் தம் இறைவனிடம் கோருவார். அப்போது இறைவன் இன்னின்னதை ஆசைப்படு என்று அவருக்கு நினைவுபடுத்துவான். இறுதியில் அவருடைய ஆசைகள் அனைத்தும் அடங்கி விடும்போது, “இதுவும் உனக்குக் கிடைக்கும்; இன்னும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று இறைவன் கூறுவான். இந்த மனிதர் தாம் சொர்க்கத்தில் நுழையும் கடைசி மனிதராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 299)

ஆகவே “நிச்சயமாக உங்கள் இரட்சகன் மிக்க இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன் ஆவான் (16:47) என்று கூறுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மிகுந்த மன வேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் உடனே தண்டித்து விடாமல் மிகவும் பொறுமை காப்பவன் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் சிலர் அவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறிருந்தும் அவர்களுக்கு உணவு வளத்தையும், உடல் நலத்தையும் வேறுபல கொடைகளையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கின் றான் என்று (அபூ மூசா(ரழி), புகாரி:6099, 7378, முஸ்லிம் : 5401,5402)

அளவற்ற அருளாளன் (தனக்கு) ஒரு குழந்தையை ஏற்படுத்திக் கொண்டான் அன்று அவர்கள் நாவு கூசாமல் கூறுகின்றனர். (இதன் மூலம்) அவர்கள் மிகப் பெரிய அபாண்டமான ஒன்றைச் சொல்லிவிட்டார்கள். இதனால் பூமி பிளந்து விடப் பார்க்கின்றது. வானங்கள் வெடித்துவிடப் பார்க்கின்றன. மலைகள் இடித்து சரிந்து விடப் பார்க்கின்றன. (19:88-90)

ஏக இறைவன் மீது தகாத வார்த்தைகள் சொல்லி இணை கற்பிக்கப்படுவதைக் கேட்டு வானங்கள் பதறுகின்றன. அல்லாஹ்வின் மகத்துவத்தை எண்ணிப் பயந்து வெடித்துச் சிதறி அவை தமது இடங்களிலிருந்து நகர்ந்து விடவும் முனைகின்றன. (இப்னு அப்பாஸ்(ரழி), தஃப்சீஃ தபரீ, இப்னு கஸீர் :5:659-662) எனினும், தனது அனுமதி இன்றி பூமியின் மீது வானம் (இடிந்து) விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டும் இருக்கின்றான். (22:65)

மேலும், மனிதர்கள் செய்யும் அக்கிர மங்களின் காரணத்தால் அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடித்துத் தண்டிப்பதாக இருந்தால் பூமிக்கு மேல் உயிர்ப் பிராணிகளில் ஒன்றையுமே அவன் விட்டு வைத்திருக்கமாட்டான். (16:61)

***********************

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

M.T.M. முஜீபுதீன், இலங்கை.

2019 டிசம்பர் மாத தொடர்ச்சி…..

ஆட்சித் தலைவருக்கு மக்கள் விசுவாசப் பிரமாணம்(பைஅத்)  செய்தல் :

இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்கு மக்கள் விசுவாசப் பிரமாணம்(பைஅத்) செய்தல்.

இஸ்லாமிய ஆட்சித் தலைவரை தெரிவு செய்வதற்காக ஒரு நாட்டிலுள்ள பருவம் அடைந்த ஆண்கள், பெண்கள் விசுவாசப் பிரமாணம் செய்தல் வேண்டும். அவர் ஆட்சித் தலைவர் அல்லது ஜனாதிபதி, அல்லது மன்னன் என அழைக்கப்படலாம். ஆனால் மன்னாதி மன்னன் போன்ற அல்லாஹ்வின் பண்புகளைக் குறிக்கும் பெயர்களை பயன்படுத்தக் கூடாது. அத்துடன் சிறுவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்யவேண்டிய அவசியமில்லை.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அப்துல்லாஹ் பின் ஹிஷாம்(ரழி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் ஸைனப் பின்த் ஹுமைத் (ரழி) அவர்கள் நான் சிறுவனாயிருந்த போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் என்னைக் கொண்டு சென்றார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! இவரிடம் உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்” என்று கூற, நபி(ஸல்) அவர்கள், “இவன் சிறுவனாயிற்றே” என்று சொல்லிவிட்டு, அன்போடு என் தலையை வருடிக் கொடுத்து எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். (புகாரி: 7210)

இன்று பல நாடுகளில் தமது தலைவர்களை தெரிவு செய்வதற்காக வாக்களிக்கும் முறை நடைமுறையில் உண்டு. ஒரு தலைவர் தெரிவு செய்யப்பட்டுவிட்டால் வாக்களிக்காதவர்களும் அவருக்குக் கட்டுப்படுவது அவசியமாகிறது. சட்டத்தை மீறுவது குற்றமாகும். ஒரு தலைவரைத் தெரிவு செய்யும்போது விசுவாசப் பிரமாணம் எடுப்பது நபி வழியில் உள்ளதாகும். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காகவும், தலைவரைத் தெரிவு செய்வதற்காகவும் விசுவாசப் பிரமாணம் செய்ய முடியும்.

இஸ்லாமிய மார்க்க வழிமுறையின்படி விசுவாசப் பிரமாணம் எடுப்பதன் மூலம் ஒருவர் அல்லாஹ்வின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகவும், அல்லாஹ்வின் மார்க்கச் சட்டங்களுக்கு மாறு செய்யாத அடிப்படையில் இயன்ற அளவு அரசின் சட்டதிட்டங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வதாக விசுவாசப் பிரமாணம் எடுப்பதைக் குறிக்கும். பின்வரும் ஹதீஃத்களை கவனியுங்கள்.

உபாதா பின் அஸ்ஸாமித்(ரழி) அவர்கள் கூறியதாவது :

இன்பத்திலும், துன்பத்திலும் (கட்டளையைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம். (புகாரி : 7199) (தொடர்ந்து) நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் சண்டையிடமாட்டோம். என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் வின் விசயத்தில் பழிப்பவர்களின் பழிப்புரைக்கு அஞ்சாமல் “உண்மையையே கடைப்பிடிப்போம்”. அல்லது “உண்மையே பேசுவோம்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். புகாரி: 7200)

இன்னுமோர் சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) பெண்களிடம் வாய்மொழி மூலம் சத்தியப் பிரமாணம் எடுத்தார்கள். அதில் 60-12வது இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்கினார்கள்.

நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணை வைப்பதில்லையயன்றும் திருடுவதில்லை என்றும் விபசாரம் செய்வதில்லை என்றும் தங்கள் பிள்ளைகளைக் கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில், எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக் கட்டிக் கொண்டு வருவதில்லை எனவும், மேலும், நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லை என்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து-வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக! மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க கிருபையுடையவன். (குர்ஆன்:60:12)

உலகாதாயத்திற்காக ஒருவர் விசுவாசப் பிரமாணம் செய்தல் கூடாது:

ஒருவர் நாட்டு மக்களின் நன்மை கருதி, சத்திய கொள்கையை நிலைநாட்டுவதற் காக விசுவாசப் பிரமாணம் செய்வார். ஆனால் வேறு சிலர் தமது சுய இலாபங்களை மட்டும் கருத்தில் கொண்டு ஆட்சித் தலைவரிடம் சத்தியப் பிரமாணம் செய்வர். இது தவறான சத்திய பிரமாணமாகும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.

ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை வைத்திருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன் ஆவான்.

இன்னொருவன் (ஆட்சித்) தலைவரிடம் தமது உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்துகொண்டவன். தான் விரும்பியதை அவர் கொடுத்தால் அவருக்கு விசுவாசமாக நடப்பான். இல்லையயன்றால் அவருக்கு விசுவாசமாக நடக்கமாட்டார்.

மற்றொருவன் அஸர் நேரத்திற்குப் பிறகு தமது வியாபாரப் பொருளை மற்றொருவரிடம் விற்பதற்காக, “இந்தப் பொருள் இன்ன அதிக விலை கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டது” என்று அவ்வாறு கொடுக்கப்படாமலேயே (பொய்ச்) சத்தியம் செய்து, அதை உண்மையயன நம்பவைத்து (தன் வாடிக்கையாளர்) அதை எடுத்துக்கொள்ளச் செய்தவன் ஆவான். (புகாரி: 7212)

இன்று ஜனநாயக நாடுகள் என பெருமையாக சொல்லும் நாடுகளில் தேர்தல்கள் மூலமாக ஆட்சியாளர்களைத் தெரிவு செய்கின்றனர். அப்போது சிலர் நாட்டின் பொது நலன்கள், சமநீதி நிலைக்கச் செய்வதை விடுத்து, தங்கள் சுய நன்மைகளுக்காக வாக்களிப்பதைக் காண்கிறோம். அத்துடன் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஒருவருக்கொருவர் அவதூறுகளை அள்ளி வீசுவதைக் காண்கின்றோம். இவை யாவும் நபிவழிக்கு மாற்றமானவையாகும். வாக்களித்த கட்சியினருக்கு அரசு விசஷே சலுகைகளைக் கொடுக்காமல் போனால் தூற்றித் திரிவதைக் காண்கின்றோம். இவை யாவும் பாவமான விசயங்களாகும்.

அத்துடன் ஆட்சித் தலைவன் என்பவன் மனிதன் சில நேரங்களில் அவன் எடுக்கும் தீர்மானங்கள் தவறானவைகளாக அமைந்து விட முடியும். அவ்வேளையில் அத்தலைவனை சார்ந்தவர்கள் அவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாது சில சலுகைகளுக்காக தலையாட்டும் பொம்மைகளாக இருந்து விடுவர். இன்று போலியான ஜனநாயகம் நிலவும் நாடுகளில் அரச கட்சியைச் சேர்ந்தவர்களும், தலைவரின் சலுகைகளுக்காக வாழும் ஆலோசகர்களும், சலுகைகளுக்காக தலையாட்டும் மதகுருமார்களும் தலைவரின் சட்டமுரணான செயற்பாடுகளை கண்டுகொள்வதில்லை.

உரிய நேரத்தில் ஆலோசனைகள் வழங்கித் திருத்துவதில்லை. அவர்கள் தலைவரின் பிழையான தீர்மானங்களை அவர் முன்னிலையில் சரிகண்டு புகழ் பாடவும் செய்கிறார்கள். தலைவனுக்குத் தவறும்போது, பின்னால் தூற்றவும் செய்கிறார்கள். இவர்கள் தலைவனுக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்யும் நயவஞ்சகர்கள் ஆவர். அவர்கள் எதிர்க் கட்சியினரை விட தலைவனுக்கு எதிரிகள் ஆவர். அவர்களைப் பற்றிய ஹதீஃத் பின்வருமாறு கூறுகின்றது.

முஹம்மத் பின் ஸைத் பின் அப்தில்லாஹ் பின் உமர்(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்கள் சிலர் (எங்கள் பாட்டனார்) அப்தில்லாஹ் பின் உமர்(ரழி) அவர்களிடம், “நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கின்றோம். அவர்களிடமிருந்து வெளியேறியதும் (அவர்களைப் பற்றி) நாங்கள் என்ன பேசிக்கொள்வோமோ அதற்கு நேர்மாறானதையே அவர்களுக்கு (முன்னிலையில்) நாங்கள் கூறுவோம்” என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்கள், “இப்படி (முன்னால் ஒன்று பின்னால் ஒன்று) பேசுவதை (நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) நாங்கள் நயவஞ்சகமாகக் கருதிவந்தோம்” என்று பதிலளித்தார்கள். (புகாரி: 7178)

ஒரு நாட்டின் தலைவனினால் எடுக்கும் தீர்மானங்கள் தப்பிவிடுவதுமுண்டு. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதனை நாட்டுக்கு பாதகம் ஏற்படாத விதமாக சுட்டிக்காட்டு வதில் பிழையில்லை. இதனை எதிர்த் தரப்பினராலும் மேற்கொள்ளப்படலாம். அவ்வாறான விமர்சனங்களை தலைவன் கருத்தில் எடுத்து திருத்துவதால் நாட்டுக்கும், ஆட்சியாளருக்கும் நன்மையே கிட்டும். கவனியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ஓர் இறைத்தூதரை அனுப்பினாலும் சரி, ஒருவரை ஆட்சிக்குப் பிரதி நிதியாக ஆக்கினாலும் சரி அவர்களுக்கு இரு நெருக்கமான ஆலோசகர்கள் அவசியம் இருப்பார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார்கள். மற்றோர் ஆலோசகர், அவரைத் தீமை புரியும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார். அல்லாஹ் குற்றங்களிலிருந்து யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.  (புகாரி: 7198)

எல்லா ஆட்சித் தலைவர்களும் இறைத் தூதர்கள் அல்ல. ஆகவே, அவர்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்பவராக இருத்தல் வேண்டும். ஆட்சித் தலைவன் தவறு செய்யும்போது அதனை சுட்டிக்காட்டுவது மக்களின் பொறுப்பாகும். அதனை ஏற்பதும், தவிர்ப்பதும் ஆட்சியாளனைப் பொறுத்திருக்கும். அப்போது மக்களின் கடமை முடிந்து விடும்.

தாரிக் பின் ´ஹாப்(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முதன் முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின்ஹகம் ஆவார். (அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்) அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று, “சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும்” என்று கூறினார்.

அதற்கு மர்வான் “முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டுவிட்டது. (இப்போது அது நடைமுறையில் இல்லை)” என்று கூறினார். (அப்போது அங்கிருந்த) அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள். “இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றிவிட்டார்” அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்.

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால்(அதை வெறுக்கட்டும்) இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையாகும். (முஸ்லிம் : 78)

இந்த ஹதீஃதின்படி அரச ஆளுனராக இருப்பினும் அவரிடம் நபிவழிக்கு மாற்றமான ஒரு தீமையை ஒரு முஸ்லிம் கண்டால் அதனை அவருக்கு சுட்டிக்காட்டித் திருத்துவது ஈமானில் சார்ந்ததாகும். ஆனால் சிலர் உண்மையை அறியாது அரசுக்கு வீணான குறைகளைக் கூறுவர். இவை தவிர்க்கப்படுதல் வேண்டும். பின்வரும் நபிமொழியின்படி தகராறு செய்வதையே வழக்கமாகக் கொண்டு செயற்படுவது பாவமாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சச்சரவு செய்பவனே ஆவான். (புகாரி: 7188)

                                                                (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

***********************

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்,

 1. கியாமத் நாள் வரும்போது வானம் என்னவாக மாறும் என அல்லாஹ் கூறுகிறான்?
  எண்ணெய் போன்ற ரோஜா நிறமாகி விடும்.  அல்குர்ஆன் : 55:37
 2. யாருக்கு இரு சுவனச் சோலைகள் உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்?
  தனது இரட்சகன் முன் நிற்பதை அஞ்சுபவருக்கு.  அல்குர்ஆன்: 55:=6
 3. இரட்சகனான என் பிடி எவ்வாறு இருக்கும் என அல்லாஹ் கூறுகிறான்?
  மிகக் கடுமையானதாக இருக்கும்.   அல்குர்ஆன் : 85:12
 4. முஸ்லிம் யாருக்கு வாரிசாக மாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  “இறை மறுப்பாளருக்கு”.  முஸ்லிம்:3296
 5. மறுமைக்கு பதிலாக உலக வாழ்வை விலைக்கு வாங்கியவர்கள் நிலை பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
  வேதனை இலகுவாகாது. உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.     அல்குர்ஆன் : 2:86
 6. தேனிக்கு எவ்வகையான உள்ளுணர்வை அல்லாஹ் எவ்வாறு ஏற்படுத்தினான்?
  மலைகளிலும், மரங்களிலும், உயரமான கட்டிடங்களிலும் கூடு அமைக்கும் உள்ளுணர்வு.   அல்குர்ஆன்: 16:68
 7. இத்ரீஸ்(அலை) அவர்களை என்னவாக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான்
  உயர்ந்த அந்தஸ்துக்கு உயர்த்தியதாக.  அல்குர்ஆன் : 19:57
 8. இப்றாஹீம்(அலை) அவர்கள் தனது தந்தைக்கு எவ்வாறு அறிவுரை கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்?
  ஷைத்தானை வணங்காதீர், ஷைத்தான் அர்ரஹ்மானுக்கு மாறு செய்பவன் என கூறினார்.  அல்குர்ஆன் : 19:44
 9. யூசுப்(அலை) அவர்களை பயணக் கூட்டம் என்ன செய்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
  அற்ப மதிப்புள்ள வெள்ளி நாணயங்களுக்கு விற்றனர். அல்குர்ஆன்: 12:20
 10. ஃபிர்அவ்ன் தனது கூட்டத்தை என்ன செய்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
  வழிகெடுத்துவிட்டான். குர்ஆன்: 20:79
 11. அல்குர்ஆனை எப்படி அமைத்துள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்?
  நல்லுபதேசம் பெறுவதற்கு எளிதாக்கியுள்ளதாக கூறுகிறான். அல்குர்ஆன்: 54:32
 12. லூத்(அலை) அவர்களின் குடும்பத்தினர் தவிர மற்றவர்களை என்ன செய்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
  கல்மாரியில் அழித்ததாக கூறுகிறான்.  குர்ஆன் : 54:34
 13. மரங்களின் இலை உதிர்வதில்லை என்று எந்த மரத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  பேரீச்சை மரம். புஹாரி கல்வியின் சிறப்பு. புத்தக எண்.3, வரிசை எண். 61
 14. உளூச் செய்யும்போது குதிங்கால்களை சரியாக கழுவாதவர்களுக்கு தண்டனை என்ன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  சரியாக கழுவாதவர்களுக்கு நரகம். புத்தக எண். 3, புகாரி: 60
 15. கிரகணத் தொழுகைக்காக எவ்வாறு அழைப்பு கொடுக்கப்பட்டது?
  அஸ்ஸலாத்து ஜாமிஆ (கூட்டுத் தொழுகை நடைபெறுகிறது) என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. புகாரி: பாடம் 3-1045
 16. இறப்பின் நெருக்கத்தில் இருப்போரிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  “லா இலாஹா இல்லல்லாஹ்” என்ற கலிமாவை நினைவுபடுத்துங்கள். ஆதாரம்: இறுதிக் கடன்கள். முஸ்லிம்: பாடம் 1-1672
 17. நீங்கள் நோயாளியை சந்திக்க செல்லும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  நல்லதை சொல்லவேண்டும். ஏனெனில் வானவர்கள் ஆமீன் கூறுகின்றனர். முஸ்லிம் : 1677
 18. ஜகாத் பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள்?
  தானியங்களில் ஐந்து வஸ்க்குகளை விடக் குறைவானவற்றிற்கு ஜகாத் இல்லை. கால்நடைகளில் ஐந்து ஒட்டகங்களுக்கு குறைவானவற்றிற்கு ஜகாத் இல்லை.
  முஸ்லிம் : ஜகாத்: 1780
 19. நபி(ஸல்) அவர்கள் எந்த முறை வியாபாரங்களை தடை செய்தார்கள்?
  (“முலாமசா’) தொடுமுறை, (முனாபதா) எறிமுறை வியாபாரம். பாடம்1, வியாபாரம்: முஸ்லிம்: 3030.

***********************

Previous post:

Next post: