வல்லாண்மைக் (FASCISM)   கட்சியின் வெறி உருவம்.

in 1990 டிசம்பர்

வல்லாண்மைக் (FASCISM)   கட்சியின் வெறி உருவம்.

 அபாயம் அண்மித்து விட்டது:

விசுவ ஹிந்து பரிஷத்தின் திட்டங்கள் தடை செய்யப்படாமல் நடந்தேற விட்டு விடப்பட்டாலோ, அன்றி ஜனநாயக அறசியல் கட்சிகளுக்காக விசுவ ஹிந்து பரிஷத் விரித்துள்ள வலையில் அவை ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தாலோ நம் பாரத நாடும் வருங்காலத்தில் (மேற்கூரிய) அவ்வழியிலேயே நடைப்போட நேரிடும் என்பதை எளிதாக உணரமுடியும். இந்த ஆபத்து உடனடியாக அல்லவெனினும் வெகு அண்மையில் நிகழவுள்ள சாத்தியமும் கவலைக்குரிய விளைவுகளை அண்மையில் நிகழவுள்ள சாத்தியமும் கவலைக்குரிய விளைவுகளைக் கொண்டதுமாகும். எனவெ அதன் மீது அசிரத்தையாக இருப்பது நம்மனைவருக்கும் கேடு விளைவிக்கும்.

விசுவ ஹிந்து பரிஷத் போஷிக்கப்படுவது எவைகளினால்? நான்கு ஆண்டுகளுக்கு முன் ஷா பானு வழக்கில் உச்ச உயர் நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பை நாடாளுமன்றம் ரத்து செய்ததன் மூலம் வெளிப்படட, இஸ்லாமிய உலகின் அடிப்படைக் கோட்பாடு வாதத்திற்கு எதிராக ஹிந்துக்கள் எழுப்பும் கோஷம் மாத்திரம் தானா? அல்லது இதை விட தீர்க்கமானது வேறேதேனும் உள்ளதா? இந்த கேள்விகளுக்குரிய விடை, நாட்டின் பிற்காலத்தைப் பொருத்த வரையில் பெருஞ்சோதனையாகவே அமையும். அடிப்படைக் கோட்பாடு வாத வெறி உணர்ச்சிகள் பெரும்பாலும் அற்ப ஆயுளுடையவையே. அதிலும் ஹிந்துக்களைப் பொருத்த வரையில் இது இன்னும் உறுதியான உண்மை. நற்கூறுகளைத் தேர்ந்தெடுக்க அவர்கள் மேற்க்கொள்ளும் வழி வகை, வேத நூல் இல்லாமை, இறைத் தூதரின் போதனையும் இல்லாமை, போன்ற காரணங்களால் ஹிந்துக்களின் அடிப்படைக் கோட்பாடு வாத விளக்கங்கள் நிலை ஊன்றுவது வெகு கடினம்.

விவாதத்திற்காக மேற்க்கொள்ளப்படும் இத்தகையக் கோட்பாடுகள் ஆறுதலளித்தாலும் சரியான(உண்மையான)வை அல்ல. திரு V.P.சிங்கும் இடதுசாரிகளும் தவிர, குடிஅரசுத் தலைவர் திரு, வெங்கட் ராமனையும் மற்றும் பெரும்பாலான அரசியல் தலைவர்களையும் போல் காலப்போக்கில் யாவும் சீராகி விடும் என்ற நம்பிக்கையோடு மாத்திரமே செயல்படுவது, தன்னை எதிர் நோக்கி வரும் ஆபத்தை நீக்க தீக்கோழி தன் தலையை தரையில் புதைத்துக் கொள்ளுவதற்க்கொப்பாகும். விசுவஹிந்து பரிஷத்துடையவும், அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் தேசிய சோஷலிஸவாதிகளுடையவும், பலா பலன்களுக்கிடையே காணப்பெறும் ஒப்புமை, வெறும் ஒருங்கொத்த நிகழ்வே என்றெண்ணி ஒதுக்கிவிடக் கூடிய வகையில் சாமானியமானதல்ல. ஒரு நவீன வல்லாண்மை இயக்கத்திற்கான மூலக் காரணங்களையே நாம் இன்று கண்டுக் கொண்டிருக்கின்றோம். நாட்டின் ஆட்சியை கைப்பற்றி, குடியாட்சியை அகற்றி விட்டு வல்லாண்மை ஆட்சிக்குட்பட்ட நாடாக(AUTHORITARIAN STATE) பாரத்தை மாற்றியமைப்பதே இவ்வியக்கத்தின் இலட்சியம்.

அஸ்வமேத குதிரை:-

வடமேற்கு ஐரோப்பியாவில் ஸ்காண்டிநேவியாப் பகுதியில் பரவியுள்ள நெட்டையான நெடிய மண்டையோட்டினை உடைய வெள்ளை நிறத்தவர் இனத்தைச் சார்ந்த வீரக் காவியங்களின்  சின்னங்களையும், சுவஸ்திக சின்னத்தையும் பயன்படுத்தியும், ஜெர்மானியர்களின் ஆரிய பாரம்பரியத்தைப் பற்றி புராணங்களைப் புணைந்து உரைத்தும், பழங்கதைகளுக்கு உயிரூட்டியும் மக்களின் ஆதரவைத் திரட்டினர், நாஜிகள் விசுவ ஹிந்து பரிஷத்தும், அதை அடுத்து வெகு அண்மையில் பாரதீய ஜனதா கட்சியும் ஹிந்துத் துவத்தை ஏற்றெடுத்துப் புகழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆதரிக்கும் இதிகாஷம் இராமாயணம்: தம் நோக்கம் நிறை வேறக் கையாளும் சின்னங்களும் இப்பெருங்காவியத்திலிருந்து எடுக்கப்பட்டவையே.

இவ்வாறு திரு அத்வானியின் இராம ரதம் அஸ்வமேதயக்ஞத்தின் ராஜரீகமான குதிரையின் பிம்பத்தை நம் மணக்கண் கொண்டு வந்து நிறுத்துகிறது. அக்குதிரையைத் தடுத்து நிறுத்த முனைவோர் யாராயினும் அரசனோடு போரிட தயாராக  இருக்க வேண்டும். இராவணனை எதிர்த்துப் போரிட்ட இராமனின் வானரப்படையைத் தான் பஜ்ரங்தள் குறிப்பதாகவுளள்து. அயோத்தியாவில் உயிரிழந்த கரசேவகர்களின் அஸ்தி அடங்கிய கலசங்கள் உயிர் தியாகிகளின் உருவங்களை மட்டும் நினைவூட்டுவதோடு நின்று விடுவதில்லை; சக்திமிக்க தேசிய உணர்ச்சியையும் தட்டி எழுப்பும் கிராமத்திலிருந்து கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கைவிட்டு கைமாறும் சப்பாத்தி உணவு, 1857ம் ஆண்டு பிரிட்டீஸாருக்கு எதிராக எழுந்த எழுச்சியின் நினைவுகளைக் கிளறி விடும்.

முதல் உலகப்போரில் ஜெர்மானியர்கள் தழுவிய தோல்வியையும், 1923-ம் ஆண்டில் ஏற்ப்பட்ட மட்டு மீறிய பணவீக்கத்தால் அவர்கள் அடைந்த பொருளாதார வீழ்ச்சியையும் அவர்களுக்கு ஓயாது நினைவூட்டி அவர்களின் துக்க உணர்ச்சியைக் கிளறிக் கொண்டே இருந்தனர். நாஜிகள் போரில் ஏற்ப்பட்ட ஈடு செய்யும் செயல் திட்டங்கள் மூலம் அவர்களை வறுமைக்குள்ளாக்கியதும், பின்னர் ஜெர்மனி அதன் பொருளாதார நிலையை சீரமைக்கும் முயற்சியில் இரண்டாவது முறையாகவும் தோல்வியுற ஏதுவாக 1929-ம் ஆண்டில் ஒரு வீழ்ச்சியையும் முடுக்கி விட்டதும் யாவுமே உலகளாவிய வங்கியாளர்களாகிய யூதர்களின் சதித்திட்டமே என்பதை செயற்திறமிக்கப் பிரசாரங்களால் உணர்த்தினர்.

அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கு இழைத்து வந்த அவமானங்களை நினைவூட்டுவதற்காகவே, இந்துக்களின் அடையாளங்களை ஒழிக்க கோவில்கள் நிர்மூலமாக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டுகிறது விசுவ ஹிந்து பரிஷத்- பாபரி மஸ்ஜிதை, அல்லது இன்னும் கூற வேண்டுமாயின், மதுராவிலும் காசியிலும் உள்ள மஸ்ஜிதுகளையும் கூட, இடமாற்றி அமைக்கக் கோருவதெல்லாம் இந்த அவமானத்தைப் போக்க தீட்டப்பட்ட திட்டமாகவே, யூதர்களுக்கு எதிரான உணர்ச்சிகளைப் பயன்படுத்தி, யூதர்கள் மீது ஜெர்மனியர்களுக்கு நாஜிகள் வெறுப்பூட்டியதுப் போலவே, விசுவ ஹிந்து பரிஷத், பிரிட்டீஷ் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் முஸ்லிம்களிடையே நிலவும் உள்ளார்ந்த அவநம்பிக்கையைப் பிரிவினைக்கக் காரணமாகக் காட்டி சுயநலத்திற்காகவே முஸ்லிம்களை மீண்டும் வெறுத்தொதுக்க முனைந்துள்ளது.

அன்று நாஜிகள் வசம் இருந்த திடீர் தாக்குப்படை (STORM TROOPER) களைப் போல் விசுவ ஹிந்து பரிஷத்தின் பஜ்ரங்தள் ஊழியர்கள், அக்டோபர் 30ந் தேதி கரசேவகர்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதும், பாபரி மஸ்ஜிதின் மீது ஏவப்பட்டனர், பத்து லட்சம் தொண்டர்கள் பஜ்ரதங்தளத்தில் புதிதாக சேர்க்கப்படுவார்கள் என்பது சிசுவ ஹிந்து பரிஷத் அதன் செயல் வளர்ச்சி அம்சமாக விடுத்துள்ள பிரகடனம் (வரவிருக்கும் பேராபத்தை முன்னரே எச்சரிக்கும் ) கவலைக்குரிய முன்னறிகுறியாகும்.

விசுவ ஹிந்து பரிஷத்தின் இலட்சியமல்ல அயோத்தியா; இறுதி இலட்சியத்தை அடைய ஒரு வழியேயாகும். வீம்பு மனப்பான்மையும் பழிவாங்கும் மரபும் அமைந்த இந்துக்களின் கொடியின் கீழ், நேசமற்ற தன் திட்டத்தை நியாயப்படுத்தவும் மக்களை ஒன்றுத் திரட்டவும் அது ஒருமையாக வாய்த்தது. விசுவ ஹிந்து பரிஷத்தின் செயல்பாடுகள் ஹிந்து மதத்தைப் பாதுகாப்பதற்காக அல்ல – ஆனால் இந்து மதச் சின்னங்களை நெறி தவறிய முறையில் பயன்படுத்தி வல்லாண்மை ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற அதன் அரசியல் இலட்சியத்தை அடைவதற்கே.

இராஜஸ்தான் மாநிலத்தின் இன்றைய நிலவரம், இது செயல்படுத்தப்படும் வழிவகையை சிறந்த முறையில் தெளிவுறுத்தும். அங்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரை இனக்கலவரமே எழுந்ததில்லை என்பதும் முதன் முதலாக  கலவரம் தோன்றியது மாநில தலைநகரிலிருந்து வெகு தொலைவிலுள்ள கோட்டா என்னும் நகரில் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்னர், ராஷ்டிரிய சுயம் சேவக சங்கம் (R.S.S) அதன் அமைப்பாளர் திரு ஹெட்கேவரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. இவ்விழாவை ஒட்டிப் பலத் தொண்டர்கள் ராஜஸ்தான் வந்திறங்கி கொள்கை மாற்ற பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ராமஜன்மஸ்தான் சம்பந்தமாக எதிர்ப்பு வளர்ந்து வரும் வேளையில் இதுவும் நிகழ்ந்தமையால், முஸ்லிம்களில் தீவிர உணர்ச்சியாளர்களும் ஏராளமாக இம்மாநிலத்தில் வந்து இறங்கினர்; மஸ்ஜிதுகளிலும் ஈத்காக்களிலும் இஸ்லாம் அபாயக்கட்டத்தில் உள்ளது என்றும், பாபரி மஸ்ஜிது விஷயத்தில் விட்டுக் கொடுப்பதால் நாட்டிலுள்ள ஒவ்வொரு மஸ்ஜிதும் ஆபத்துக்குள்ளாகும் என்றும் தீப்பொறி கக்கப்பேசலாயினர், பதற்ற நிலை நொடியில் தலை தூக்கியது. ஆனாலும் கோட்டா நகரில் ஏற்ப்பட்டதுப் போல் மாநிலத்தில் வேறெங்கும் கலவரம் தோன்றவில்லை. கோட்டா, இரயில் பாதையில் ஓர் முக்கியமான சந்திப்பாகையால், அது ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு மிக்க வெறிக் கொண்டு கொதித்தெழும் கேந்திரமாக மாறிவிட்டது.

இந்த மூன்றாண்டுகளாக வளர்த்து விடப்பட்ட பதற்றமும் ஆவேசமுமே ஒரு சமுதாயத்தை மற்ற சமுதாயத்திற்கு எதிராகக் கிளப்பும் தூண்டு சக்திகளாகி விட்டன. சாதாரணமாக செய்திப் பத்திரிக்கைகளில் மறைக்கப்பட்டு, மத்திய அரசின் வேவுத்துறை அறிக்கைகள் மூலம் சேகரிக்கப்பட்ட விவரம் அறிவிப்பது இத்தகைய வன்முறைச் சம்பவங்களில் அதிகமாக இல்லாவிட்டாலும் ஐந்தில் நான்கு சம்பவங்களை தூண்டிவிட்டவை விசுவஹிந்து பரிஸத், பஜ்ரங்தளம் இவ்விரு அமைப்புகளின் செயல்பாடுகளே, எனும் வருத்தத்திற்குரிய செய்தியே, வேண்டுமென்றே புறத்தூண்டுதல்களுக்கு எளிதாக இலக்காகக் கூடிய பிராந்தியங்கள் வழியாக ஊர்வலம் செல்லுவது, மஸ்ஜிதுகளையும், ஈத்காக்களையும் தாக்குவதும் அழிப்பதும், கடைகளை எரிப்பது முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக தனிப்பட்டவர்களைக் குத்தி காயப்படுத்துவது போன்ற பல்வேறு சம்பவங்களே மேற்குறிப்பிடப்பட்டவை.

குறிப்பாக கடந்த பன்னிரண்டு மாதங்களில் அயோத்தியாவிலுள்ள சிலன்யாஸ் (அக்டோபர் – நவம்பர் 89) ராம ஜோதி மஷல்கள் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டது (செப்டம்பர் 90) மற்றும் அக்டோபரில் நடைபெற்ற கரசேவை யாவும் இனவெறி கொளுந்துவிட்டெரிய தூண்டுகோள்களாக விளங்கிய பிரதான வழி வகைகளே. இவை ஒவ்வொன்றுமே அதன் விளைவாக பல செத்த சடலங்களையே சுவடுகளாக பதித்துவிட்டு ஓய்ந்தது.

தொழில் மயமாயதன் விளைவு :-

இனக் கலவரத்தை தணிப்பதற்காகவே மகாத்மா காந்தி தன் இரத்தத்தைச் சிந்தினார். ஆனால் அதற்கு 42 ஆண்டுகளுக்கு பின்னர் அதே இனவெறி கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விட்டதற்குக் காரணம் என்ன? இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடு வாதம் தலை தூக்கியதோ அன்றி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடன் ஆளுங்கட்சியினர் மேற்க்கொள்ளும் இயல்பு மீறிய செயல்பாடுகளோ காரணம் அல்ல. தொழில் மயமாக்கும் நடவடிக்கைகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட சில சக்திகள் தான் காரணம்; முன்னேறுவர் யார் என்றும் வீழ்ச்சியுறுபவர் யார் என்றும் நிர்ணயிக்கும் விற்பனைச் சந்தையால் தளைத்த முதலாளித்துவ தொழில் மயமே, குறிப்பாக காரணமாகும்.

தொழில் நுட்ப ரீதியாக நிர்வகிக்கப்பட்ட கனரக தொழிற்சாலைகளும், மொத்த மற்றும் சில்லரை வாணிபமும் பேரங்காடிகளும் வர்த்தகத் துறையில் பெருகியும், சில வணிகர்களும் தனியாக இயங்கும் பயிற்சி பெற்ற  தொழில் நிபுணர்களும், கடை வியாபாரிகளும் பொருளாதார ரீதியாக சீர் குலைந்து வர்த்தகத் துறையிலிருந்து மறைத்து விடவில்லை. இத்தகைய ஒரு இடைக் காலத்தில் தான் மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் வல்லாண்மை கட்சி தலை தூக்கியது. தொழில் மயமாக்கப்பட்டதால் தலையெடுத்தத் தொழில் உரிமையாள வர்த்தகத்தினர் (சிலர் முன் காலத்திலிருந்தே தம் மிக தனி திறமையால் முன்னேறி தரிப்பட்டவர்)களின் பிழைப்பு பிறரிடம் பாசம் காட்டாத முதாலித்துவ தொழில் மயக்கத்தின் நிலையான வளர்ச்சியால் நலிந்து விடும் என்ற பயம் வளரலாயிற்று.

இவ்வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தொழிலில் ஏற்ப்பட்டுள்ள நிலையற்றத் தன்மையும், தவிர்க்க முடியாத பிற்கால சரிவும் முதலாளித்துவ வளர்ச்சியால் நிர்ப்பந்தமாக ஆதாயம் குறைந்த வாணிபத்தையே செய்ய வேண்டிய நிலை இவர்களிடம் ஒரு சித்த பிரமையை உருவாக்கிற்று. தம் இருண்ட  எதிர்க் காரணமானவர்கள் என்று கூறி பழித் தீர்க்க யாரையேனும் தேடலாயினர். இத்தகைய ஓர் எதிர் விளைவை முதன் முதலாக அடையாளம் கண்டுக் கூறியது கார்ல் மார்க்ஸ் தான். சமுதாயத்தில் தன் நிலையைப் பாதுகாக்கப் போராடுவார்கள் என்றும் முன்னரே உணர்ந்துமிருந்தார், அதே சமயம் அந்த முயற்சியில் அவர்கள் தோல்வியுறுவார்கள் என்றும் முன்னறிவிப்பும் செய்திருந்தார். சரித்திரச் சுழற்சக்கரத்தைப் பிடித்து நிறுத்த எண்ணுவது போன்றது தான் இவர்கள் முயற்சியும்.

நவீனமயமாக்க எழுந்த சக்திகளை முறியடிக்க மேற்க்கொண்ட முயற்சியின் விளைவாகவே பெரும்பாலும் ஐரோப்பாவில் வல்லாண்மைக் கட்சி தோன்றியது. இத்தாலி, ஸ்பெயின் ஜெர்மனி போன்ற நாடுகளில் வல்லாண்மைக் கட்சி வெற்றியடைந்தது. குடியாட்சி(அல்லது முடியாட்சி) சில மறைத்து விட்டது. உண்மைதான். பிரான்ஸில் யுத்தங்களுக்கு இடைப்பட்டக் காலங்களில் வல்லாண்மைக் கட்சிகள் வலுப்பெற்று பெளஜாடிஸ்ட் என்ற அமைப்பு 1950களில் தலைதூக்கியது. இந்தியாவிலும் அத்தகைய அரசியல் எழுச்சி தலையெடுப்பதாகத் தோன்றியது. ஏனெனில் இங்கு தொழில் மயமாகும் ரீதி ஸ்பெயினிலும், இத்தாலியிலும் பிரான்ஸிலும் 1920களில் நிலவி இருந்த விதத்திலேயே காணப்படுகிறது; அச்சமயத்தில் ஜெர்மனியின் நிலையை விட சற்று பின்தங்கியதாகவே காணப்படுவது உண்மை தான்.

பாரதீய ஜனதா கட்சி, விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களும் தொண்டர்களும் பொதுவாக, ஐரோப்பிய வல்லாண்மைக் கட்சியாளர்களையும் பிரெஞ்சு பைஜாடிஸ்டுகளையும் போல் (தம் பிற்கால வாழ்க்கைத் தொழில் பற்றி) பீதியுற்ற சிறு வணிக வர்க்கத்தைச் சார்ந்தவர்களே, என்பது ஏதேச்சையாக ஏற்படும் ஒத்த நிகழ்ச்சிகள் அல்ல. இன்றைய நிலையில் பாரத ஜனதாகட்சியின் பொருளாதார பலம் வணிகச் சந்தையை நாடி வாழும் வர்க்கத்தினரின் பலமே. நம் சமுதாயத்தில் இத்தகைய இடைநிலையாளர்களைப் பாதுகாக்கத் திட்டமிட்ட ஒரு அமைப்பினர் இவர்கள்.

நெறி முறையின்றி பயன்படுத்தப்படும் சின்னங்கள்:-

ஹிந்து மதம் அதன் சொந்த தாய்நாட்டிலேயே ஆபத்துக்குள்ளாகியுள்ளது என்ற கூற்றை உண்மை என்று நம்பும் சித்தப்பிரமை யதார்த்தத்தில் (தம் பிற்கால வாழ்க்கைத் தொழிலாப்பற்றி) பீதி அடைந்துள்ள வர்க்கத்தினரின் சித்தப் பிரமையே. முஸ்லிம்கள் மீதுக் கொண்டுள்ள கோபமும் வெறுப்பையே திசைத் திருப்பி விட்ட மக்களின் ஆவேசமாக பரிணாமிக்கிறது. தவிர்க்க முடியாத சீர்க்குலைவை தாம் அடைய சதித்திட்டம் வகுக்கும் பொருளாதார சக்திகளை எதிர்த்துப் போராட முடியாமல் தம் கோபத்தையும் வெறுப்பையும் வேறு மக்கள் மீது சாட்டுகின்றனர். ஆட்சியைக் கைப்பற்றவும், சமுதாயத்தில் தம் அந்தஸ்தை நிலைநாட்டவும் ஹிந்து மத உணர்வை கிளறி மக்களைத் திரட்டுவதை ஓர் உண்மையாகவே இவர்கள் கருதுகின்றனர். அயோத்தியா, இராமர், ஹனுமான் மற்றுமுள்ள ஒவ்வொரு ஹிந்து மதச் சின்னங்களையும் பற்றிப் பிடித்துக் நெறி தவறி பிரயோகித்து தங்களின் இழிவான இலட்சியத்தை அடைய முயற்ச்சிக்கின்றனர்.

கடந்த பதிமூன்று மாதங்களாக நிலவி வரும் ஹிந்துக்களின் கண் மூடித்தனமான ஆர்வ எழுச்சி, மிக்க கவலைக்குரியது, ஏனெனில் அதன் அடிப்படையில் தான் பீதியடைந்துள்ள பொருளாதார வர்க்கத்தினர் பெரும்பாலானோரின் பிற்கால வாழ்க்கைப் போராட்டமே அமைய வேண்டும். இப்போராட்டம் மறைந்து விடக் கூடியது அல்ல. நீண்டு கொண்டே போகும். இந்திய பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தமானது; ஆனால் திட்டங்கள் யாவும் அதிகமாக சிறிய பாதுகாப்பற்ற தொழிற்துறை உரிமையாளர்களை உருவாக்கும் வகையில் திண்ணமாக ஒரு சார்புடையனவாகயுள்ளவை. எனவே இந்த வர்க்கத்தினரின் எண்ணிக்கையும் விசித்திரமும் பெருகிக் கொண்டேயிருக்கும்.

ஆகவே குடியாட்சிக்கும், பல மதத்தவர் ஒற்றுமையுடன் வாழ்வதற்கும் பங்கம் அதிகரிக்குமேயல்லாது, கவலை குறைவதற்கு வழியில்லை. இதை முறியடிக்க ஒரே வழி, வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து, மத்திய அரசின் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதிலும் பல வகுப்பினரும் ஒன்றி வாழ வேண்டும் என்பதிலும் அக்கறையுள்ள ஜனநாயக மற்றும் மதசார்பின்மை சக்திகளும் ஒன்றிணைந்து பாரதீய ஜனதா கட்சியை தேர்தலில் முறியடிக்க வேண்டும். ஜனதா தள அதிருப்தியாளர்களும் தீராத மனக்குறைவுடைய அதன் ஆதரவாளர்களும் காங்கிரஸார் அற்ப பிரச்சனைகளில் தீர்வு காண நடந்துக் கொள்வதுப் போல், அவர்களுக்கிடையில் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில்  தேர்தலை ஒத்திப்போடுவதும் ஆபத்தையே விளைவிக்கும். இது ஜனநாயக சக்திகளுக்கு அவப்பெயரைத் தேடித் தருவதோடு, விசுவ ஹிந்து பரிஷத்துக்கு மக்களை அதன் பக்கம் திரட்ட போதிய அவகாசம் வழங்கியதாகவும் ஆகிவிடும்.

Previous post:

Next post: