அந்நஜாத் – ஏப்ரல் 2020

in 2020 ஏப்ரல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்நஜாத்

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

 ஏப்ரல் 2020

ஷஃபான் – ரமழான் 1441

 1. தலையங்கம்!
 2. சேமித்து வைக்கும் செல்வங்களுக்கு ஜகாத் ஒரேஒரு முறையா? ஒவ்வொரு ஆண்டுமா?
 3. கொரோனோ வைரஸ்களும்! கொடூர மரணங்களும்!! காரணம் என்ன?
 4. அமல்களின் சிறப்புகள்…
 5. நோன்பு காட்டுமிராண்டித்தனமா? காரணங்கள் பொதிந்ததா?
 6. மனிதரில் சிறந்தவர் மனைவியரிடம் சிறந்தவரே!
 7. அல்லாஹ்வை முழுமையாக நம்புதல்!
 8. அறிந்து கொள்வோம்…
 9. ஸலவாத்…
 10. சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்!

தலையங்கம்!

குஜராத்திலும்! டெல்லியிலும்!

குஜராத்தில் அன்று அம்மாநிலத்தின் முதன் மந்திரியாக பதவியில் இருந்தார் மோடி அவர்கள். அப்போது கோத்ராவில் ரயில் எறிக்கப்பட்டது. முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து குழந்தைகளைக் கொன்றனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அதே மோடி அவர்கள் டெல்லியில் இன்று நாட்டின் பிரதம மந்திரியாக பதவியில் இருக்கிறார். அதிகாரம் பரந்து விரிந்துவிட்டது. எனவே, பல மாநிலங்களில் முஸ்லிம்கள் சர்வசாதாரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிலரின் பொருளாதாரம் சூறையாடப்பட்டது. பெண்கள் கற்பழிப்பு, காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் ரத்து, ஆஷிபா என்ற சிறுமி கோவிலின் கர்ப்பக் கிரகத்தில் சிலரால் கூட்டு பலாத்காரத்தில் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டாள், பெண்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்டனர், மூதாட்டிகளையும் கயவர்கள் விட்டுவைக்கவில்லை எனக் கூறி ஐ.நா.வின் மனித உரிமை கமிஷன் ஆணையர் ஷபையில் அழுது தீர்த்து விட்டார்.

பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். மற்றும் இவர்களின் பல பெயர்களிலுள்ள அமைப்புகளுக்கும் முழுமுதல் குறி முஸ்லிம்கள் தான் என்பது குஜராத்தில் நிரூபிக்கப்பட்டது. பிறகு இந்தியாவின் பல பாகங்களில் நிரூபிக்கப்பட்டது. இப்போது தலைநகரிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் மூன்று நாட்கள் நடைபெற்ற கலவரத்தைப் பற்றி பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஒரு வீடியோவில், ஏற்கனவே கற்கள் குவிக்கப் பட்டிருக்கும் ஒரு இடத்திலிருந்து காவல் துறை மேற்பார்வையில் சில ரவுடிகள் துணிகளில் கற்களை எடுத்து கொண்டு செல்கின்றனர். அகர்வால் ஸ்டேண்டர்ட் ஸ்வீட்ஸ் என்ற மூடப்பட்ட கடைக்கு அருகில் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் கையில் தடி, தலையில் யஹல்மெட்டுடன் கோசமிட்டுக் கொண்டு வெறித்தனமாக போவோர் வருவோர் மீது கற்களை வீசி தாக்குகின்றனர். மறு வீடியோவில் குடியிருப்பு பகுதிகளில் கற்களை வீசுகின்றனர். பல இடங்கள் தீ வைக்கப்பட்டு புகைமண்டலமாக பர பரப்புடன் காணப்படுகின்றது.

இன்னொரு வீடியோவில், இரு காதுகளிலும் வளையம் அணிந்த இளைஞர் ஒருவர் ஜெய் ஸ்ரீராம், ஹிந்துஸ்தான் ஹமாராஹை என்றும் மேலும் கெட்ட கெட்ட வார்த்தை களால் முஸ்லிம்களைத் திட்டிக்கொண்டு ஆவேசமாக கத்திக் கொண்டு செல்ல, அவரை சுற்றி நூற்றுக்கணக்கானோர் போவோர் வருவோர் மீது கற்களை வீசிக் கொண்டு யாருக்கும் பயப்படாதவர்களாய் சுதந்திரமாக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றனர். கண்ணில் பட்டோரை தடியால் அடிக்கின்றனர். தீவைக்கப்பட்ட இடங்களிலிருந்து எங்கும் புகை மண்டலம், ஆங்காங்கே சில முஸ்லிம்கள் துரத்தித் துரத்தி கொடூரமாக அடித்து துன் புறுத்துகின்றனர், மசூதிகளை பாழ் படுத்துகின்றனர், முஸ்லிம்களின் புனித நூல் குர்ஆனை எரிக்கின்றனர், போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறார், காவல்துறை அதிகாரி ஒருவர் காட்டு மிராண்டித்தனமாக கொல்லப்பட்டிருப்பது ஆகப் பெரிய பரிதாபம். காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் உயிர்கள் எல்லாம் ஒன்றுதான் என்றா லும், காவல்துறையை மிரட்டும் போக்கு ஜனநாயக நாட்டில் நடக்கக்கூடாத ஒன்றாகும். இந்த நிலை நீடிக்குமேயானால், இந்த நாடு மக்கள் வாழத் தகுதியற்ற நாடாகி விடும்.

அடுத்த வீடியோவில் அந்த இளைஞரைப் பிடித்து அழைத்து வந்த முஸ்லிம்கள் அந்த இளைஞரிடம் ஜெய் ஸ்ரீராம் என்று கூறிக்கொண்டே, நீங்கள் செய்ததை கடவுள் ஏற்றுக் கொள்வாரா? முஸ்லிம்களை அருவருப்பான வார்த்தைகளால் திட்டினீர்கள், எங்கள் பள்ளிவாசலை நீங்கள் கொளுத்தினீர்கள், குர்ஆனை கொளுத்தி னீர்கள், எங்களைத் தாக்கினீர்கள், நாம் எல்லோருமே சகோதரர்கள் இல்லையா? அவரை அடித்தாலும் தவறில்லை என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கும் போது, அவரை அரவணைத்து திருத்த நினைத்த முஸ்லிம்களின் பெருந்தன்மையை எண்ணி பலர் நெகிழ்ந்து போயினர்.

பிபிசி, நியூஸ் தமிழ் ஒளிபரப்பில் செய்தியாளர் தரும் வீடியோவில் முஸ்தபாபாத் என்ற முஸ்லிம் பகுதிக்குள் கைகளில் தடிகள், கற்கள், துப்பாக்கிகளுடன் பெரும் கூட்டமாக நுழைந்த இந்துத்துவா வெறியர்கள் அங்கே தென்பட்ட முஸ்லிம்களை ஆடுகள், கோழிகள் போல வெட்டி தள்ளியதாகவும் அதனால் குடியிருப்புகளை விட்டு வெளியேறுவதாகவும் வெளியேறும் கூட்டத்திலுள்ள ஒருவர் கூறியதை செய்தியாளர் வீடியோவுடன் தெரிவிக்கிறார். இந்து மக்கள் வாழும் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டதாக இந்து ஒருவர் தம்மிடம் கூறியதாக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஒரு பகுதியில் ஒரு பக்கம் முஸ்லிம் மக்களும், மற்றொரு பக்கம் இந்து மக்களும் வாழ்ந்து வருகின்றனர், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த பிரிவினை வேகமாக ஊன்றி திளைத்து வருகிறது என்று செய்தியாளர் மேலும் கூறுகிறார்.

நாட்டின் பல மாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் அப்பாவித்தனமாக, மன நோயாளியாக, கேட்க நாதியற்றவராக தனியாக இருக்கும் முஸ்லிமை உருட்டு கட் டைகளால் கொடூரமாக அடித்து நொறுக்கிய காவிகள் செய்த வன்முறைகள் பார்ப்பவர் மனதில் பீதியை ஏற்படுத்தினாலும் முஸ்லிம்கள் மட்டும் இவர்களிடமிருந்து பாடம் பெற்றனர்.

குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கும் காவிகளும், எதிர்க்கும் முஸ்லிம்களும் டெல்லியில் நடத்திய பேரணியில் எதிர் எதிரே இரு சாராரும் சந்தித்த சூழலில், காவிகள் அவர்களின் வழமையான தாக்குதலை நிகழ்த்த வில்லை, இதிலிருந்து முஸ்லிம்கள் மேலும் பாடம் பெற்றனர்.

அது என்ன பாடம்? தனியாக இருப்பவனை கூட்டமாக அடித்து நொறுக்குவார்கள், கூட்டத்தைப் பார்த்தால் தாங்கள் கூட்டமாக இருந்தாலும் நைசாக நழுவி விடுகி றார்கள். ஆகவே காவிகள் பயந்தாரிகள், இதுவே கற்ற பாடம்.

இந்த பாடத்தைக் கொண்டு குஜராத், டெல்லி இரண்டிலுமுள்ள கலவரத்திற்கு இடையே முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் உணர முடிகிறது. மோடியின் மாநில ஆட்சியில், குஜராத்தில் காவிகளின் வன்முறையை முதன் முதலில் சந்தித்த போது மனிதர்கள் இப்படி செய்வார்களா என்று முஸ்லிம்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர், எனவே, குஜராத்தில் முஸ்லிம்கள் திருப்பித் தரவில்லை.

ஆனால், மோடியின் மத்திய ஆட்சியில் காவிகளின் வன்முறை குஜராத்தையும் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களில் பரந்து விரிய ஆரம்பித்ததில் முஸ்லிம்கள் பாடம் பெற்றனர். திருப்பித் தர தயாராகி விட்டார்கள். இதை செய்தித்தாள் ஒன்று மெல்லியதாய் கோடிட்டுக் காட்டுகிறது. இந்த வித்தியாசம் காவிகளுக்கு உணர்த்திய பாடமாகவும் இருக்கிறது.

அதற்காக காவிகள் பயப்பட வேண்டியத் தேவை இல்லை, ஏனெனில் முஸ்லிம்கள் ஒருபோதும் தாமாக எவரையும் தாக்கிவிடமாட்டார்கள், தாம் தாக்கப்பட்டால், தாம் பெற்றதைத்தான் திருப்பித் தருவார் களே தவிர ஒருபோதும் அளவு கடந்து விடமாட்டார்கள், குர்ஆனை காவிகள் எரித்தார்களே, ஒரு முஸ்லிம் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள குர்ஆன் கற்றுத் தரும் தற்காப்பு பாடத்தை கவனியுங்கள்.   காண்க: அல்குர்ஆன்: 2:194

எவனாவது உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன்மேல் வரம்பு மீறுங்கள்; (அதில்) அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள்; (அதாவது அவன் செய்ததற்கு அதிகமாக செய்து அநீதி இழைத்து விடாதீர்கள்). நிச்சயமாக பயபக்தி உடையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் (அதாவது அல்லாஹ் உதவுவான்) என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இத்தனை வீடியோ ஆதாரங்கள், டிவி செய்திகள் அனைத்தையும் இந்தியாவையும் தாண்டி உலகில் பல மக்கள் பார்த்திருப்பார்கள். அதேபோல காஷ்மீரிலிருந்து வந்த முஸ்லிம் கணவன் மனைவி இருவர்தான் டெல்லி கலவரத்திற்கு காரணம் எனக் கூறி அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்கிருந்து அவர்கள் அழைத்து வரப்பட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அரசு தரப்பில் கூறப் பட்டதையும் அம்மக்கள் பார்த்துத்தானே இருப்பார்கள்?

டெல்லியில் மாநில அரசுக்கு உட்படாத காவல்துறை, மத்திய அரசின் வசம் இருக்கிறது. காட்டுமிராண்டித்தனமாக தலைநகரில் நடந்துவிட்ட சோகங்களுக்கு எல்லா தரப்பினரும் காவல்துறையை சுட்டிக் காட்டுகின்றனர். ஒரே நேரத்தில் அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு பேரணிக்கும், அரசை ஆதரித்து நடத்தப்பட்ட ஒரு பேரணிக்கும் காவல்துறை எப்படி அனுமதி அளித்தது என்ற விமர்சனத்தை முன் வைத்து, இது திட்டமிடப்பட்ட கலவரம் என்றும், எனவே முழு பொறுப்பையும் காவல்துறையை தம் கைவசம் வைத்திருக்கும் மத்திய அரசுதான் ஏற்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

நல்லாட்சியாளர் எனப் பெயரெடுத்த டெல்லியுள்ள மாநில அரசும் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசியதோடு சரி, பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னின்று ஆக்கப்பூர்வமாக எதையும் செய்ததாக செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. எனவே, நடந்து முடிந்த வி­யத்தில் டெல்லி மாநில அரசின் நிலைப்பாடு என்ன என்பது புரியாத புதிராக இருக்கிறது.

அதே நேரத்தில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய இருவரும் அமெரிக்க அதிபருடன் குஜராத் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டு இருந்தனர். அவர் திரும்பிப் போகும் வரை இருவரும் டெல்லி கலவரத்தில் உருப்படியாக எதையும் செய்யாமல் மவுனம் காத்தனர்.

முஸ்லிம் இன ஒழிப்பை இந்திய குடியுரிமை சட்டத்திலேயே திருத்தம் செய்து சட்டமாக்கி விட்டது. பி.ஜே.பி. அரசு. குடியுரிமை மசோதாவின் சாராம்சத்தை உற்று நோக்கினால், இந்த உண்மையைத் தெளிவாகக் காணலாம். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் தவிர இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறித்தவர்கள் போன்ற சமயப் பிரிவினர் ஆவணங்கள் எதுவும் இல்லாமலே குறைந் தது 5 ஆண்டுகள் இந்தியாவில் அவர்கள் வாழ்ந்திருந்தாலும் அல்லது அதற்கு முன் குடியேறி இருந்தாலும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று இந்த மசோதா கூறி யது. மசோதாவில் உள்ளதுதானே சட்டமானது?

முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்றுதானே இதன் அர்த்தம்? அதற்காகத்தானே இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பயப்படத் தேவை இல்லை என்பதை வெறும் வாய்ப்பேச்சாக மட்டும் தெரிவிக்கின்றார் உள்துறை அமைச்சர், இந்த வாய்ப் பேச்சு உண்மை என்றால், இந்த பேச்சை குடியுரிமை சட்டத்திருத்தத்தில் சேர்த்து சட்டத்தில் இடம்பெறச் செய் திருக்கலாமே? அப்படிச் செய்யாததால் இந்த வாய்ப் பேச்சு உண்மை இல்லை என்பதை உணர முடிகிறது, அது மட்டுமல்ல, தாங்கள் கூறுவது உண்மை இல்லை என்பதை மத்திய அரசே மக்களுக்கு வேறு விதத்தில் உணர்த்தி இருப்பதையும் கவனி யுங்கள், வாய்மூலம் உத்திரவாதம் தரும் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் முகாம்கள் கட்ட எழுத்து மூலமாக கட்டளை இட்டிருக்கும் அரசு ஆணையை சமூக வலைதளங்களில் கண்டறிந்தோம்.

அப்படியயன்றால் முஸ்லிம்கள் பயப்படத்தேவை இல்லை என்று கூறும் இந்த வாய்ப் பேச்சு உத்திரவாதம் ஒரு கபட நாடகம்தானா? முஸ்லிம்களை முகாமுக்கு அனுப்பத்தானே சட்டம் போட்டிருக்கிறீர்கள்? அப்படி இல்லை என்றால், உத்திர வாதத்தை அரசு வாய் வார்த்தையாகக் கூறக் கூடாதல்லவா? ஏனென்றால், நாளைக்கு பிரச்சனை வந்தால், நீதிமன்றம் சட்டத்தில் அடிப்படையில் தானே தீர்ப்பு சொல்லும்? வாய் வார்த்தையின் அடிப் படையில் தீர்ப்பு சொல்லாதல்லவா?

அதுமட்டுமின்றி, இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பிரச்சனை எதுவும் இல்லாமல் அமைதியாக நடைமுறையில் இருந்து வந்த சென்சஸ் (மக்கள் தொகை) கணக்கெடுப்புடன், நடைமுறையில் இல்லாத கால கட்டத்திலுள்ள பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கும்படியான உத்திரவுடன் என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. என்று புதிய கணக்கெடுப்புகளை சேர்ப்பது ஏன்? சமர்ப்பிக்க முடியாத ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்? எனவே, சந்தேகக் குடியேறிகள் என்று கணக்கெடுப்பில் அறிவிக்கப்படாது என்ற உள்துறை அமைச் சரின் வாய் வார்த்தை உத்திரவாதத்தையும் சட்டத்தில் சேர்த்துவிடுங்கள் என்று கேட்கிறோம்.

பெரிய கலவரம் உருவாகப் போகும் சூழ்நிலை ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்கள் முன்கூட்டியே எச்சரித்தும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வன் முறையாளரை ஒடுக்கவும் முயற்சிக்க வில்லை, மத்திய பி.ஜே.பி.யின் முக்கியஸ் தர்கள் தங்களது பேச்சுக்களில் வெறுப்பைக் கக்கினர். இந்த ஆவண பதிவுகளை நீதிபதி கள், நீதிமன்றத்தில் ஒளி பரப்பி காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வினா தொடுத்தனர்.

“”வாள் எடுத்தவன் வாளால்தான் வீழ்வான்” என்ற முதுமொழிக்கேற்ப, அதிகாரத்தைக் கையில் எடுக்க சமூக விரோதிகளை அனுமதித்தால், சமுதாயம் பாழ்படும், ஆட்சியும் சீரழியும், எனவே மத்திய அரசு குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி முறையான நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டிப்பாக தண் டிக்க வேண்டும். வெளிநாட்டினர் பிற மதத் தினராய் இருந்தால் ஆவணங்கள் இல்லா மல் குடியுரிமை தரப்படும் என்ற சட்டத்தில், மதசார்பற்ற இந்திய நாட்டில் முஸ்லிம் களுக்கும் அந்த வாய்ப்பைக் கொடுங்கள், அதை சட்டத்தில் இடம் பெறச் செய்யுங்கள், இருக்கும் முஸ்லிம்களை முகாம்களுக்கு அனுப்ப முயலாதீர்கள். எனவே முகாம்கள் கட்டச் சொன்ன அரசாணையை ரத்து செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இல்லையேல் நீங்கள் இந்த நாட்டில் தங்கி இருக்கமுடியாது என்ற குர்ஆனை வச னத்தை உங்களுக்கு முன்வைத்து, முஸ்லிம் கள் தியாகம் செய்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தாய்நாடு இந்தியாவை ஒன்றும் இல்லாமல் அழித்து விடாதீர்கள் என கேட் டுக் கொள்கிறோம்.

உம்மை பூமியிலிருந்து அடி பெயரச் செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள். ஆனால் அவர் களோ அதற்குப் பின்னர் சொற்ப நாட்களே யன்றி(அதில்) தங்கியிருக்க மாட்டார்கள்.
காண்க: அல்குர்ஆன்: 17:76
இதையயல்லாம் செய்துவிட்டு, எல்லா மதத்தினரும் இணைந்து இந்தியாவை முன்னேற்ற வழிவகைகளைக் காண்போமாக.

**********************************************************************************

 சேமித்து வைக்கும் செல்வங்களுக்கு ஜகாத் ஒரேஒரு முறையா? ஒவ்வொரு ஆண்டுமா?

– அபூ அப்தில்லாஹ்

அல்குர்ஆன் வழிகாட்டுகிறது :
நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிமார்களிலும், சந்நியாசிகளிலும் அநேகர், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் சாப்பிடு கிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார் கள்; இன்னும், எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதை யில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (9:34)
(நபியே!) அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் நரக நெருப்பில் அவை காய்ச்சப்பட்டு, அவற் றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளி லும், விலாப் புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும்; (இன்னும்) இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது; ஆகவே, நீங்கள் சேமித்து வைத்திருந்ததைச் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறப்படும்). (9:35)

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுத்துக் கொண்டு, அதைக் கொண்டு அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களைப் பரிசுத்தப் படுத்துவீராக! இன்னும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உம் முடைய பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். (9:103)

(வெற்றி கொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை அல்லாஹ்வுக் கும்; (அவன்) தூதருக்கும், உறவினர்களுக் கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் வழிப்போக்கருக்கும் உரியதாகும். உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு) பங்கிட்டுக் கொடுக்கக் கட் டளையிடப்பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்கினாரோ (அதை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங் கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (59:7)

மேலும் பார்க்க : 2:43,83,110,177,195, 261, 262, 277, 3:180, 4:77,162, 5:12,55, 7:156, 8:60, 9:5,11,18,60,71, 18:81, 19:13,31,55,59, 21:73, 22:41,78, 23:4, 24:3,7, 24:56, 27:3, 30:39, 31:4, 33:33, 41:7, 49:15, 51:19, 58:13, 61:11, 70:24, 73:20, 92:17,18, 98:5.

அல்ஹதீஃத் வழிகாட்டுகிறது :

யாருக்கேனும், அல்லாஹ் பொருளா தார வசதியை வழங்கி அதற்கு அவன் ஜகாத் கொடுக்காமல் இருந்தால், கியாமத் நாளில் கடுமையான வி­ம் நிறைந்த பாம்பு ஒன்றை அவன் கழுத்தில் சுற்றச் செய்யப்படும். “”நான்தான் நீ சேர்த்து வைத்த செல்வம், நான்தான் நீ புதைத்து வைத்தப் புதையல்” என்று கூறிக்கொண்டே அது அவனைத் தீண்டிக் கொண்டிருக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.  அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம்.

ஏழைகளுக்குச் சொந்தமான ஜகாத் பொருள், மற்ற பொருள்களுடன் கலந்திருந்தால் அவற்றை ஜகாத் பொருள் அழித்து விடும் என நபி(ஸல்) கூறினார்கள். ஆயிஷா (ரழி) புகாரீ இமாமின் வரலாற்று நூல்.

வியாபாரத்திற்காக வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும் அதற்குக் கட்டாயம் ஜகாத் வழங்கி வரவேண்டும். அது எந்தப் பொருளாக இருப்பினும் ஜகாத் கட்டாயம் வழங்கியே ஆகவேண்டும்.

நாங்கள் வியாபாரத்திற்காக வைத்திருக்கும் பொருட்களுக்காக ஜகாத் கொடுத்து வரவேண் டும் என்று நபி(ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சமூராஇப்னு ஜுன்துப் (ரழி) அபூதாவூது, பைஹகீ.

இன்று நிலங்கள், கட்டிடங்கள் வருமானத்தைப் பெருக்கும் வியாபாரப் பொருள்களாக இருப்பதால் அவற்றிற்கும் ஜகாத் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். நீர் பாய்ச்சி விளைந்த விளைச்சலில் 5% இயற்கையாக விளையும் விளைச்சலில் 10% உடனடியாக ஜகாத்தாகக் கொடுக்க வேண் டும். இப்னு உமர்(ரழி), புகாரீ.

20 தீனாருக்கு (87 கிராம் தங்கம்) குறை வானவற்றில் ஜகாத் கடமையில்லை. 20 தீனார் ஒரு ஆண்டு இருந்தால் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அலீ(ரழி) அஹ்மத், அபூதாவூத், பைஹகீ.

190 திர்ஹம் (687 கிராம் வெள்ளி) வரை ஜகாத் இல்லை. 200 திர்ஹம் இருக்கும் போது அதற்கு 5 திர்ஹம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அலீ(ரழி) அபூதாவூது, நஸாயீ, திர்மிதி, இப்னு மாஜா.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சய மாக நான் எவர் தொழுகைக்கும், ஜகாத்துக் கும் இடையில் பாகுபாடு செய்கின்றாரோ அவரோடு போர் தொடுப்பேன். ஏனெனில் நிச்சயமாக ஜகாத் பொருளின் மீதுள்ள பாத்தியதையாகும். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் ஒரு ஆட்டுக்குட்டியே னும் (இன்னொரு அறிவிப்பில் ஒட்டகத் தைக் கட்டும் ஒரு சிறிய கயிறாக இருப்பினும்) எனக்கு அளிக்க மறுப்பாராயின், நபி(ஸல்) அவர்களிடம் அவர் அதனை அளித்து வந்திருப்பின் நிச்சயமாக அவர்கள் அதனை மறுத்தால் நான் அவர்களோடு போர் தொடுப்பேன் என்று முதல் கலீஃபா அபூபக்கர்(ரழி) கூறினார்கள். அபூஹு ரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம், முஅத்தா, அபூ தாபூது, திர்மிதி, நஸாயீ.

இந்த ஹதீஃதை எவ்வித சுயநல உள் நோக்கமும் இல்லாமல் நடுநிலையுடன் படிப்பவர்கள் ஜகாத் கொடுத்த பொருள் களுக்கே மீண்டும் மீண்டும், வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பதை எளிதாக விளங்க முடியும்.

அறிந்து கொள்ளுங்கள். எவர் பணம் படைத்த அநாதைகளுக்குச் செயலாளராக இருக்கிறாரோ அவர், அவர்களின் பொருள் களில் வியாபாரம் செய்யவும். அன்றி ஜகாத் அவற்றைக் கரைத்து விடும் வரை(ஆண்டு தோறும்) ஜகாத் கொடுத்துச் சிறுகக் குறைய) விட்டு விடாதீர்கள் என்று நபி(ஸல்) கூறி னார்கள். அம்ருப்னு ஷிஐபுதம் தந்தை மூல மாகவும் அவர்தம் பாட்டனார் மூலம் அறிந்து. திர்மிதி

நிச்சயமாக, நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்தாள். அவருடன் அவரின் மக ளும் வந்திருந்தாள். அவளின் கைகளில் இரு பெரும் பொற்காப்புகள் இருந்தன. அப் பொழுது நபி(ஸல்) அப்பெண்ணிடம், இதற்கு நீர் ஜகாத் கொடுத்து வருகிறீரா? என்று கேட்டனர். இல்லை என்றாள் அப் பெண்;(அதற்கு) அவர்கள், அல்லாஹ் உமக்கு மறுமை நாளில் இதன் காரணமாக தீக்குழம்பிலான இரண்டு காப்புகளை அணிவிக்க உமக்கு விருப்பம்தானே? என்று வின வினர். உடனே அவர் அவ்விரண்டையும் கழற்றி நபி(ஸல்) அவர்களின் முன் போட்டு, இவ்விரண்டும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உரியவையாகும் என்று கூறினார்.  அம்ருப்னு ஷிஐபு அவர்கள் தம் தந்தை மூலமாகவும் அவர்தம் பாட்டனாரின் மூலமாகவும் அறிந்து ஸுனன்.

ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்றிருந்தால் அக் காப்புகளின் 40-ல் 1 கொடுத்தால் போதும் அல்லவா? தொடர்ந்து வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் விட்டதால் அல்லவா இரண்டு காப்புகளையும் கழற்றி ஒப்படைத்துள்ளார்.

மூன்று காரியங்களைச் செய்பவர்கள் இறை விசுவாசத்தின் ருசியைச் சுவைத்துக் கொள்வார்கள்.

 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனே இல்லை என்ற அடிப்படையில் இறை வனுக்கு மட்டுமே அடிபணிபவர்.
 2. தனது செல்வத்தின் ஜகாத்தை பரிசுத்த எண்ணத்துடனும், உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர்.
 3. பல் உடைந்த, மட்டமான, நோய்வாய்ப் பட்டவற்றை கொடுக்காமல் இருப்பவர். உமர்(ரழி), அபூதாவூத் : 1349

ஜகாத் கொடுத்து வரும்படி நபி(ஸல்) கட்டளையிட்ட ஹதீஃத்களில் துஅத்தீ-கொடுக்கிறீரா? என்றும், அதுஃத்தீ தருகி றாயா? என்று தொடர் நிலையில் கேட்டிருக் கிறார்களே அல்லாமல் அஃதய்த்த கொடுத்து வீட்டீரா என்றோ, இறந்தகால வினையில் கேட்கவில்லை. இதிலிருந்து ஒரு பொருளுக்கு வருடா வருடம் தொடர்ந்து ஜகாத் கொடுப்பது கடமை என்பது உறுதியாகிறது.

“ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை.” அலீ(ரழி) அபூதாவூது, பைஹகி

இதுவரை நாம் எடுத்து எழுதியுள்ளவை ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண் டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லும் குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்கள் ஆகும்.

100 கோடி செல்வம் உடைய ஒரு செல் வந்தன் இந்த வருடம் 2டி கோடி ஜகாத் கொடுக்கிறான் என்றால் அந்த 2டி கோடி தான் அவனது நிரந்தர வைப்பு நிதி. வருடா வருடம் அவன் தொடர்ந்து ஜகாத் கொடுத்து வந்தால் வருடா வருடம் அவ னது நிரந்தர வைப்பு நிதியில் அது சேர்ந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் அவனது அஜல் முடிந்து மரணத்தைத் தழுவுகிறான். அவன் இதுவரை எனது செல்வம், எனது செல்வம் எனப் பெருமைப்பட்டுக் கொண் டிருந்தானே அது இப்போது அவன் செல்வ மில்லை. அவனது வாரிசுகளினதும், பினாமி களினதும் செல்வமாகிவிட்டது. அவன் தனது செல்வம், தனது செல்வம் என்று பெருமை பேசிக்கொண்டிருந்தானே அந்தச் செல்வத்தை இழப்பதோடு மட்டுமல்ல, அவனது வாரிசுகளும், பினாமிகளும் அதை அனுபவித்து மகிழ்வது மட்டுமல்ல, நாளை மறுமையில் அவை நரக நெருப்பில் காய்ச்சப் பட்டு அவனது விலாப் புறங்களிலும், நெற்றி யிலும், முதுகிலும் சூடு போடப்படும். இது தான் நீ உனக்காகச் சேமித்து வைத்திருந்தது. நீ சேமித்து வைத்திருந்ததைச் சுவைத்துப் பார் என்று அச்செல்வந்தர்களுக்குக் கூறப் படும். (பார்க்க : 9:34,35)

நபி(ஸல்) அவர்களும் இப்படி எச்சரித் துள்ளார்கள். மனிதன் தனது செல்வம் தனது செல்வம் என பெருமையடிக்கிறான். அவன் உண்டு கழித்தது, உடுத்திக் கிழித்தது, மறுமை வைப்பு நிதியில் சேமித்தது மட் டுமே அவனது செல்வம்; எஞ்சியவை அவ னது வாரிசுகளுக்குரியதாகும். (ஹதீஃத் சுருக்கம்) செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு செல்வத்திற்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் சேமித்து வைத்திருக் கிறீர்களே அது உங்கள் செல்வம் அல்ல. நீங்கள் வருடா வருடம் ஜகாத், சதக்கா கொடுத்து மறுமை வைப்பு நிதியில் சேர்த்து வைப்பது மட்டுமே உங்கள் செல்வம். அதுவே நாளை மறுமையில் பலனளிக்கும். வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் நீங் கள் சேமித்து வைக்கும் செல்வம் நாளை மறுமையில் நெருப்பிலிட்டுக் காய்ச்சப்பட்டு உங்கள் நெற்றி, விலா, முதுகில் சூடு வைக்கப்படும் எச்சரிக்கை.  (பார்க்க : 9:34,35)

**********************************************************************************

கொரோனோ வைரஸ்களும்! கொடூர மரணங்களும்!! காரணம் என்ன?

எஸ். ஹலரத் அலி, திருச்சி.

இந்த உலகில் வாழும் அனைவரும் ஆரோக்கியத்துடன் ஆனந்தமுடனும் வாழ்வதற்கு, மனிதர்களைப் படைத்த இறைவன் ஓர் அழகிய வாழ்க்கைத் திட்டத்தை அளித் துள்ளான். அதன் பெயர்தான் இஸ்லாம். இந்த வாழ்க்கை நெறியை கைக்கொள்பவர்களுக்கு இம்மையிலும் வெற்றி! மறுமையிலும் வெற்றி! இந்த உண்மையை நிராகரிப்ப வர்களுக்கும் நடைமுறைப்படுத்த மறுப்பவர்களுக்கும், இரு உலகிலும் துன்பமே தொடர் கதையாகும் என்பதில் அறிவியல் ரீதியாக ஐயமே இல்லை.

படைத்த இறைவனுக்குத்தான் தெரியும், தன் படைப்பினங்களுக்கு எந்தெந்த உணவுகள் உண்ணவேண்டுமென்ற உண்மைகள். ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு புல், பூண்டு, பசுமைத் தாவரங்களை உண்ணத் தகுந்தவாறு உடலமைப்பை அமைத்தான். கொடிய காட்டு மிருகங்களுக்கு வேட்டையாடி மாமிசத்தை உண்பதற்கு தகுந்தவாறு அதன் உடலமைப்பைப் படைத்தான். இவைகளிலிருந்து மேம்பட்ட ஆறறிவு கொடுக்கப்பட்ட மனிதனுக்கு தாவரங்களையும், மாமி சத்தையும் ஒருங்கே உண்ணும் ஒப்பற்ற உடலமைப்பை அமைத்தான்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல தூய்மையான உணவுகளை உண்ணவே இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. மனித உட லுக்கு கேடு விளைவிக்காத ஹலாலான உணவுகள் ஏராளமாக உள்ளன. ஆயினும் மனிதனின் ஷைத்தானிய மனமானது, போதை உணவுகளையும், தடுத்த ஹராமா னதையுமே உண்ணத் தூண்டுகிறது. “”மனிதன் நிரப்பும் பாத்திரங்களிலேயே மிக மோசமான பாத்திரம் அவனது வயிறு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது கவனத் திற்குரியது.

மனிதன் நிரப்புவதிலேயே அவனது வயிற்றை விட மோசமான பாத்திரம் எதுவுமே இல்லை. ஆதமுடைய மகன் அவனது முதுகை நிமிர்த்துவதற்கு தேவையான உணவை உண்டால் போதும். அது முடிய வில்லை என்றால் மூன்றில் ஒரு பாகம் உணவும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் மூச்சு விடுவதற்கும் இருக்கட் டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் திர்மிதி : 2380

எல்லா வகை உணவுகளையும் தின்று செரித்து ஜீரணிக்கும் ஆற்றலை மனிதன் பெற்றிருந்த போதிலும் அதிலும் சில மாமிச உணவுகளை அல்லாஹ் மனிதனுக்கு தடை செய்து விட்டான். அதன் உண்மைக் காரணம், அவன் ஒருவனுக்குத்தான் தெரியும். அல்லாஹ் தடுத்த உணவுகளை, மனிதன் தடையை மீறி புசிக்கும்போதுதான் புதிய புதிய வியாதிகள் புற்றீசல்களாக புறப்படுகின்றன. அல்லாஹ் மனிதர்களுக்கு அணுவளவும் அநீதி இழைப்பதில்லை. ஆயினும் மனிதன் தனக்குத்தானே தன் கரங்களைக் கொண்டு தீங்கி   அல்குர்ஆன் : 3:162, 42:30

ஆரம்பத்தில் யூதர்களுக்கு மன்னு-ஸல்வா என்னும் பரிசுத்தமான நல்ல உணவை வானிலிருந்து இறக்கி வைத்து, இவைகளைப் புசியுங்கள் என்ற கட்ட ளையை மறுத்தவர்கள், தங்களுக்கு தீங்கி ழைக்கும் உணவையே வேண்டி, தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டார்கள் என்ற உண்மையை அல்குர்ஆன் 2:57 கூறுகிறது.

மன்னு-ஸல்வா என்னும் தூய உணவை அன்றே உண்ணுங்கள், நாளைக்கு என்று சேமித்து வைக்காதீர்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து மறு நாளுக்கும் சேமித்து வைத்து தங்களுக்கு தாங்களே தீங்கு செய்து கொண்டார்கள். அல்குர்ஆன் : 7:160

யூதர்கள் வழிமுறைகளைக் கடைப் பிடித்தே இன்றைய முஸ்லிம்களும், தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டு வருகிறார்கள். அல்லாஹ் ஹலாலாக்கிய ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சிகளை அன்றே அறுத்து, அன்றே புசிக்காமல், அவற்றை பிரீஸர் என்னும் குளிர்பதன சவப் பெட்டியில் வைத்து வைரஸ் வியாதிகளை வரவழைக்கிறார்கள். தற்போது புதிதாக உருவாகும் வைரஸ்கள் குறைந்த வெப்ப நிலையிலும் செழித்து வளரும் ஆற்றல் பெற் றவையாக உள்ளன. மின்தடை போன்ற வெப்பநிலை அளவினால் மைனஸ் டிகிரி 18ளீ) பிரிட்ஜ்ஜில் உள்ள இறைச்சியானது வைரஸ் தாக்கத்திற்குள்ளாகிறது. வியாதி களை உருவாக்கும் இன்குபேட்டர்களாக இன்றைய குளிர்சாதன பெட்டிகள் வீட் டிற்கு வீடு உள்ளன.

தானாக செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெரித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) வனவிலங்குகள் கடித்துச் செத்த தையும் உங்கள் மீது ஹராமாக்கப்பட்டிருக் கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர, (உண்ண லாம்) அல்குர்ஆன் : 5:3

மனிதர்கள் எந்த மாமிசங்களை உண் ணலாம், எதை உண்ணக்கூடாது. உண்ணக் கூடிய விலங்குகளையும் எந்த முறைப்படி அறுத்து உண்பது என்பதையும் அல்லாஹ் அழகிய முறையில் தெளிவுபடுத்திவிட்டான். இந்த வரம்புகளை மனிதன் மீறும் போதே அனைத்து வியாதிகளும், துன்பங் களும் தொடர் கதையாக அவனைத் தாக்கு கின்றன. தானாக செத்தவற்றையும் ரத்தங்களையும் உண்பது இஸ்லாத்தில் தடை செய்யப்படடது.

இதன் அறிவியல் காரணம் அனைவருமே அறிந்ததுதான். தானாக செத்த பிராணியின் இரத்தம் அதன் மாமிசத்திலேயே உறைந்து விடும். அனைத்து வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பயணம் செய்யும் கடத்தும் வழியாகவே இரத்த ஓட்டம் உள்ளது. எனவே இரத்தத்தை உண்பதும், தானாக செத்து, ரத்தம் உறைந்த இறைச் சியை உண்பது என்பதும் வியாதியை உண் பதற்குச் சமம். ஆகவே இதனை இஸ்லாம் தடை செய்கிறது.

அடுத்து பன்றியின் மாமிசம் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் இறைச்சியில் ஏராளமான தீய கிருமிகள் நிறைந்துள்ளன. வருடத்தில் சுமார் 200 மில்லியன் மக்கள் யஹப்பாட்டிஸ், இ(Hepatitis E.) என்னும் நோயில் இறப்பதற்கு பன்றியின் இறைச்சி காரணமாகிறது. அடுத்து Multiple Sclerosis (MS) எனும் மத்திய நரம்பு மண்டல நோய்க் கும் பன்றியின் இறைச்சியே பிரதான காரணமாக இருக்கிறது.

அடுத்து என்னும் Liver Cancer and Cirrhosis ஈரல் புற்றுநோய் வருவதற்கும் பன்றியின் இறைச்சி காரணமாக இருக்கிறது. சரியாக வேக வைக்கப்படாத பன்றி இறைச்சியில் Yersinia bacteria எற்சீனியா என்னும் பாக்டீரியாக்கள் உருவாகி ஏராளமான வியாதிகளை தருகின்றன. இவையயல்லாம் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவு கள். மேலும் பன்றியின் மேல் தோலானது வியர்வையை வெளியிடக்கூடிய சுரப்பி இன்மையின் காரணமாக, நச்சுக் கிருமிகள் உடலிலேயே தங்கிப் பெருகி ஒட்டுமொத்த இறைச்சியும் வியாதிகளின் விளைநிலமாக மாற்றப்படுகிறது.

இயற்கைக்கு மாறான உணவு பழக்கம

ஆடு, மாடு, கால்நடைகளுக்கு புற்பூண்டு எனும் பசுமை தாவரங்களை உண்டு செரிக்கும் விதத்தில் அதன் உணவுப் பழக்கத் தையும், உடலமைப்பையும் அல்லாஹ் அமைத்து வைத்துள்ளான். ஆனால் 1980ஆம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்து நாட்டில் நடந்ததென்ன? பேராசை கொண்ட மனிதர்கள் மாடுகளை கொழுக்க வைப்ப தற்காக, இறந்த மாடுகளின் உறுப்புக்களை யும், எலும்புகளையும் காயவைத்து பவுடராக்கி மாட்டிற்கு உணவாகக் கொடுத்தனர். (Cannibalistic Non-vegetarian feed of crushed meats and bones) இந்த இறைச்சி பவுடரை உண்ட மாடுகளின் மூளையில் விசித்திர வியாதி உருவானது. இதனால் அவற்றின் செயல்பாடுகளில், சிரமப்படும் நடை, எடை குறைவு, இறுதியில் நகர முடியாமல் ஆகும் நிலை போன்ற வியாதிகள் ஏற்பட்டன. அவ்விறைச்சியை உண்ட மனிதர்களையும் அந்நோய் தாக்கியது, அதுதான் “MAD COW DISEASE” இந்நோயால் ஏராளமான மக்கள் மடிந்தனர். அல்லாஹ்வின் இயற்கை அமைப்பை மனிதன் மாற்றினால் அதன் இறுதி முடிவு அவனது அழிவே.

புதிய நோய்களின் பிறப்பிடம் சீனா!

ஏராளமான புதிய நோய்களின் பிறப் பிடமாக இன்று சீனா மாறிவிட்டதன் அடிப் படைக் காரணம், அவர்களின் கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கமே. ஊர்வன, நடப் பன, பறப்பன என்ற வேறுபாடின்றி அனைத் தையும் உண்ணக் கூடியவர்களாக இருப் பதே வைரஸ் உருவாக காரணமாகலாம்.

வருடத்திற்கு சுமார் 20 பில்லியன் டாலர் அளவுக்கு காட்டு விலங்கு இறைச்சி வர்த்தகம் நடைபெறுகிறது. சுமார் 54 வகை விலங்குகளை உண்ணக்கூடியவர்களாக சீனர்கள் இருக்கிறார்கள். அவைகளில், சில, அணில், எலி, காட்டுப்பன்றி, முதலை, தவளை, பாம்பு, பல்லி, நரி, நாய், குரங்கு, கழுதை, காட்டெருமை, புலி, மான், பூனை, ஒட்டகம், மயில், அன்னப் பறவை, முள்ளம் பன்றி, ஓநாய் குட்டி, காட்டுக்கோழி, நெருப்புக்கோழி, நீர் நாய், கங்காரு, வாத்து, தேள், மரநாய், ஆமை, வவ்வால், எறும்பு தின்னி போன்றவைகளாகும்.

சீனர்களின் உணவுப் பழக்கம் புதிதாக வந்த ஒன்றல்ல, காலங்காலமாக இவற்றைச் சாப்பிட்டு வந்தாலும், தற்போதைய கால நிலை மாற்றமும், மக்களின் நவீன உணவுப் பழக்கமும் புதிய நோய்கள் உருவாக காரணமாக உள்ளது. 1956ஆம் ஆண்டு புதிதாக பர விய ஆசியன் ப்ளு எனும் காய்ச்சலினால் சுமார் ஒன்று முதல் நான்கு மில்லியன் மக்க ளுக்கு மேல் பலியானார்கள்.

கடந்த 2002ஆம் ஆண்டு குவாங்டாங் மாகாணத்தின் இறைச்சி விற்பனைக் கூடத் திலிருந்துதான் கொடிய “”சார்ஸ்” (றீபுயூறீ-றீeஸere புஉற்மிe யூeவிஸ்ரீஷ்rழிமிலிrதீ றீதீஐdrலிதுeவி) எனும் மூச்சு திணறல் நோய் புறப்பட்டது. அங்கு இறைச்சி விற்பனைக்கு வைத்திருந்த புனுகுப் பூனை (ளீஷ்ஸeமி ளீழிமிவி) மற்றும் அதன் இறைச் சியில் இருந்துதான் கொடிய சார்ஸ் நோய் புறப்பட்டது. இந்த கொடிய நோயானது 37 நாடுகளுக்குப் பரவி 8098 மக்களைத் தாக்கி சுமார் 774 மனிதர்களை பலி வாங்கியது.

2013ஆம் ஆண்டு சீனாவிலிருந்து புறப்பட்ட க்ஷி7ஹி9 என்னும் வைரஸ் பறவை காய்ச் சலால் சுமார் 1223 மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது புதிதாக பரவி வரும் கொரோனோ என்னும் கொடிய நோயால் உலகம் முழுவதும் 53 நாடுகளிலுள்ள சுமார் 83,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை உயிரிழப்பு 2867ஐ தாண்டிவிட்டது.

சீனாவின் யுஹான் மாநிலத்தில் உள்ள கடலுணவு இறைச்சிக் கூடத்திலிருந்தே கொரோனோ வைரஸ் புறப்பட்டது. அந்த பொது இறைச்சி மார்கெட்டில் எல்லா விதமான, நாய், நரி, பூனை, குரங்கு, பாம்பு, பல்லி, வெளவால் போன்ற மிருகங்களின் இறைச்சியும் உயிருடன் கிடைக்கும். இன்று வரை கொரோனோ வைரஸ் (ளீலிஸஷ்d-19) நோயானது உலகில் 107 நாடுகளுக்கு பரவி விட்டதாக உலக சுகாதாரக் கழகம் (நிக்ஷிநு) அறிவித்துள்ளது. உலக மக்களில் சுமார் 119,217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (சீனாவில் மட்டும் 89,778 பேர்) இதுவரை இறந்த வர்கள் எண்ணிக்கை 4,298 பேரை தாண்டி விட்டது.\

வன மிருகங்களின் இரத்தக் கலப்பு பொது சுகாதாரமின்மை, மக்கள் நெருக்கம் போன்ற காரணங்களால் புதிய வைரஸ்கள் புறப்படும் தளமாக இன்று சீனா மாறிவிட்டது. மலிவு விலையில் ஏராளமான பொருள்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்து வந்த சீனா, தற்போது புதுப்புது வியாதிகளையும் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறி வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உலகில் அதிக மக்கள் தொகை நிரம்பிய நாட்டில் உருவாகும் நோய்கள், விரைவில் உலகமெங்கும் பரவும் அபாயம் உள்ளது.

இன்று மக்களை அச்சுறுத்தும், சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், இன்புளுன்ஸா, கொரோனோ வைரஸ் போன்ற அனைத்தும் மிருகங்கள், அல்லது பறவைகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. மனிதர்களை தாக்கிய வைரஸானது அம்மனிதர்களின் மூச்சுக் காற்று, தும்மல், எச்சில், தொடுதல் மூலம் பிற மனிதர்களுக் குப் பரவுகிறது. இன்று கொரோனோ பாதிக் கப்பட்ட நாடுகளில் மக்கள் அனைவரும் வாய், மூக்கை மூடி மாஸ்க் அணிந்தே நடமாடுகின்றனர். தற்போது இந்த மாஸ்க ளுக்கு பெறும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு மனிதரிடமிருந்து பிற மனிதர்களுக்கு நோய் பரவுவதற்குக் காரணமே காற்றில் உள்ள வைரஸ் கிருமிகளே.

நபி (ஸல்) அவர்கள் தும்மினால், தம் கையைக் கொண்டு அல்லது தன் துணியை வாயில் வைத்துக் கொள்வார்கள். இதன்மூலம் தன் (தும்மல்) சப்தத்தை (மறைத்துக்) கொள் வார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) அபூதாவூத், திர்மிதீ.

உங்களில் ஒருவர் கொட்டாவி விட் டால், தன் கையால் வாயை மூடட்டும். நிச்சயமாக, ஷைத்தான் அதன் வழியாக நுழைந்து விடுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத், அல்குத்ரீ (ரழி), முஸ்லிம்

இஸ்லாம் தூய்மைக்கு முதலிடம் கொடுக்கிறது:

திண்ணமாக அல்லாஹ், தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும், தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான். அல்குர்ஆன்: 2:222

தூய்மை என்பது ஈமானில் பாதி என்று இஸ்லாம் கூறுகிறது. ஐவேளை தொழுகைக்கு தூய்மை கட்டாயம். காலையில் தூங்கி எழுந்தவுடன் முகம், வாய், மூக்கை சுத்தம் செய்ய மார்க்கம் கட்டளையிடுகிறது.

உங்களில் ஒருவர் உறங்கி எழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூக்கை மூன்று முறை சிந்தி சுத்தம் செய்யட்டும். ஏனெனில் ஷைத்தான் அவர் உள் மூக்கில் தங்குகின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் : 238

ஷைத்தான் மனிதர்களுக்கு எதிரியாக இருக்கின்றான். அவனது படை பலத்தின் மூலம் நம்மை சோதிப்பான். அவனது ஆயுதங்களில் வைரஸ், பாக்டீரியாக்கள் போன்றவைகளும் உண்டு.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகின்றான். புகாரி:3281

இன்றைய நவீன மருத்துவத்தில் இரத்த பரிசோதனையின் மூலமே எய்ட்ஸில் இருந்து கொரோனோ வரை எல்லா நோய் களும் கண்டறியப்படுகின்றன. அல்லாஹ் வின் வரம்புகளை மீறி, மனிதன் மாறு செய்யும் போது புதிய வியாதிகள் புறப்படுகின்றன. அமெரிக்கா நாட்டிற்கு சவாலாகவும், உலகின் புதிய பொருளாதார செல்வச் செழிப்பில் செருக்குடன் இருந்த சீனாவை இன்று புறப்பட்ட கொரோனோ வைரஸ் புரட்டிப் போட்டு விட்டது. இறைக் கட்டளைக்கு மாறு செய்பவர்கள், அதற்கான தண்டனையை இம்மையிலும், மறுமையிலும் நிச்சயம் அடைவார்கள்.

உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக் குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள். அல்குர்ஆன்: 10:44

அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள பொருள்களில் அனுமதிக்கப்பட்டதும், தூய்மையானதுமான பொருள்களை உண் ணுங்கள். மேலும், எந்த இறைவன் மீது நீங் கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறீர்களோ அவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி வாழுங்கள். அல்குர்ஆன்: 5:88

**********************************************************************************

அமல்களின் சிறப்புகள்…

தொடர் : 55

 1. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் :

பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ­வ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

அல்ஹம்துலில்லாஹ்! அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் பக்கம் 392ன் நான்காவது பத்தியில் ஆரம்பித்து 393ன் முதல் பத்தி முடிய ஆக மொத்தம் மூன்று பத்திக ளில் “”நபி(ஸல்) அவர்கள் தங்களது இரு பாதங்களும் வீங்கும் அளவுக்கு நின்று தொழுது வந்த’ ஹதீஃதில், பொய்களை இடைச் செருகல் செய்து ஹதீஃத் என்ற பெயரில் எழுதி இருந்ததை ஆய்வு செய்து வருகிறோம்.

இதுவரை ஆய்வு செய்து பொய்கள் என்று நிரூபித்தவைகள் :

 1. ஜனவரி 2020 அந்நஜாத் இதழில், அசி புத்தகத்தின் முதல் பத்தியில், “நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் எதுதான் ஆச்சரியமாக இல் லாமல் இருந்தது’ என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்டதாக எழுதப்பட்டி ருந்ததை பொய் என நிரூபித்து இருந்தோம்.
 2. “நபி(ஸல்) அவர்கள் இரவில் என்னுடைய படுக்கையில் சற்று படுத்திருந்த பின், “என்னுடைய ரப்பை, நான் வணங்குவதற்கு என்னை விடு! என்று கூறிவிட்டு எழுந்து சென்று உளூச் செய்து, தொழுவதற்காகத் தக்பீர் கட்டி அழ ஆரம்பித்து விட்டார்கள். கண்ணீர் அன்னாருடைய நெஞ்சின் மீது வழிந்தோடிக் கொண்டிருந்தது. பிறகு ருகூ விலும், சுஜூதிலும் இவ்வாறே அழுது கொண்டிருந்தார்கள. சுப்ஹு தொழு கைக்கு பிலால்(ரழி) அவர்கள் வரும்வரை இரவு முழுவதையும் இவ்வாறே கழித்தார் கள்’ என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாக எழுதியிருந்ததை பொய் என்று நிரூபித்து இருந்தோம்.
 3. அது மட்டுமின்றி, அசி புத்தகம் தெரி வித்ததற்கு நேர்மாற்றமாக “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முழு இரவும் தொழ மாட்டார்கள்’ என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறிய செய்தி அதே ஹதீஃதில் இடம் பெற்றிருந்ததை பிப்ரவரி 2020 அந்நஜாத் இதழில் கூடுதலாகத் தெரிவித்து இருந்தோம்.
 4. அடுத்து “பாதங்கள் வீங்கும் அள வுக்கு நஃபில் தொழுகைகளை நீளமாகத் தொழுது சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்களே?’ என்று நபித்தோழர்கள், நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட சஹீஹான ஹதீஃதில் உல்ட்டா செய்து “‘ஏன் இவ்வளவு அழ வேண்டும்?” என்று கேட்டதாகக் கூறி, பச்சைப் பொய்யை ஹதீஃதில் புகுத்தியிருப் பதை மார்ச் 2020 அந்நஜாத் இதழில் நிரூபித்து இருந்தோம்.
 5. ஏன் இவ்வளவு அழ வேண்டும் என்ற பொய்யின் தொடர்ச்சியைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் பொய்களை இந்த இதழில் இப்போது ஆய்வு செய்வோம்.
  அசி புத்தகம் தெரிவித்திருக்கும் விஸயம் :

“இன்ன ஃபீ கல்கிஸ் ஸமாவாத்தி என்ற ஆயத்துக்களை ஓதி, அவற்றின் கருத்துக்களை சிந்தனை செய்யாத மனிதனுக்கு நாசம்தான்’ என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள் என்று அதே ஹதீஃதை மேற்கோள் காட்டி அசி புத்தகம் அடுத்து தெரிவித்து இருக்கிறது.

எமது ஆய்வு :

“இன்ன ஃபீ கல்கிஸ் ஸமாவாத்தி” (நிச்ச யமாக வானங்களை படைத்திருப்பதிலிருந்து) என்ற ஆயத்து! இந்த ஆயத்து குர்ஆனில் எந்த சூராவில் எந்த ஆயத்தில் இருக் கிறது என்பதை இவரது மாமூலான வழக்கப்படி அதாவது அவரது தொலைநோக்குப் பார்வையில் இப்பொழுதும் தெரிவிக்கவில்லை; தெரிவித்திருந்தால், இந்த பொய்யை தெரிவித்த அன்றைக்கே அண்ணன் வசமாக மாட்டியிருப்பார். அதே தொலைநோக்கு பார்வையில் குர்ஆனை ஓரம் கட்டி வைப்பதற்காக, அசி புத்தகத்தை படிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும்படியான திட்டங்களைத் தீட்டி வைத்துள்ளனர். அதாவது தப்லீக் ஜமாஅத்காரர் குர்ஆனைப் படிக்க நேரம் இல்லாமல் செய்துவிட, அசி புத்த கத்தை மட்டும் எப்போதும் படிக்கும்படியான பணிகளில் வெவ்வேறு விதமாக அவரை மூழ்கடித்து அதன்படி ஆதரவாளர் கள் செயல்படும்படி செய்து விட்டனர். அது எப்படி சாத்தியம் என்று வினவுகிறீர்களா? கேளுங்கள் அந்த சோகக் கதையை.

தினசரி திட்டத்தை கவனியுங்கள்! ஒவ்வொரு பள்ளிவாயிலிலும் தினமும் ஏதாவது ஒரு தொழுகை முடிந்ததும் அசி புத்தகத்தில் உள்ள சிலதை, தொழுதவர்களிடையே படிப்பதை (தஃலீம்) அன்றாட வழக்கமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குர்ஆன் படிக்கப்படாததால், அசி புத்தகத்தில் உள்ளதை மட்டும் கேட்கும்படி செய்வது மட்டுமே இவர்களின் திட்டம்; இதே போல அன்றாட வழக்கமாக தப்லீக் ஜமாஅத்தினரின் வீட்டில் அசி புத்தகத்தில் உள்ள சிலதை குடும்பத்தினரிடையே தினமும் படிப்பது வழக்கமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பத்தாரும் அசி புத்தகததில் உள்ளதை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கை செயலாக்கம் பெறுகின்றன.

வாராந்திர திட்டத்தை கவனியுங்கள்! மஹல்லா பள்ளியில் வாரம் ஒருமுறை சில முஸ்லிம்களின் வீடுகளுக்கு, கஸ்த் (வலம் வருதல்) என்ற பெயரில் சென்று அவர்களை சந்தித்து, அவர்களில் சிலரை பள்ளிக்கு அழைத்து வந்து அசி புத்தகம் படிக்கப்படும். அவர்களுடைய தஃலீமில் அமர வைத்து அசிபுத்தகத்தில் உள்ளதைக் கேட்கச் செய் வது; இப்போது குர்ஆன் படிக்கும்படியான உத்தரவு அவர்களுக்குக் கிடையாது. இதே போல, அடுத்த மஹல்லா பள்ளியில், அந்த மஹல்லாவாசி ஒருவருடன் வாரம் ஒரு முறை சில முஸ்லிம்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்து, அவர்களில் சிலரை பள்ளிக்கு அழைத்து வந்து அசி புத்த கம் படிக்கப்படும் அவர்களுடைய தஃலீ மில் அமர வைத்து அசி புத்தகத்தில் உள்ளதை மட்டும் கேட்கச் செய்வது. இங்கும் குர்ஆன் படிப்பதில்லை என்பதை மனதில் கொள்க.

மாதாந்திர திட்டத்தை கவனியுங்கள்! மாதம் மூன்று நாள் தமது மஹல்லாவிற்கு வரும் தப்லீக் ஜமாஅத்தினரை வரவேற்பது, அவர்கள் பள்ளியில் தங்கி இருக்கும் நாட்க ளெல்லாம் அவர்களது எல்லாத் தேவை களுக்கும் வசதி செய்து கொடுத்து, அத் தனை நாட்களிலும் அவர்களுக்குள்ளா கவே அசி புத்தகத்தை காலையில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம். இப்போதும் குர்ஆன் புறக்கணிக்கப்படுகிறது. இவர்க ளுக்குள்ளாகவே இதனைப் படித்துக் கொள்வதால், அதே பள்ளியில் தினசரி தொழுகைக்குப் பிறகு மஹல்லாவாசிகளி லுள்ள தப்லீக் ஜமாஅத்தினர் படிக்கும் அசி புத்தக தஃலீமையும் விட்டுவிட மாட்டார் கள். தொழுகையை தொழுதவர்களி டையே அசி புத்தகத்தை வழக்கமாக படிப் பது அவர்களின் வாடிக்கை. இந்த பள்ளியில் அசி புத்தக தஃலீம் படிப்பது வழக்கத்தில் இருக்கிறது என்பதை வேறு ஊர்களிலிருந்து

வந்திருக்கும் ஜமாஅத்தினருக்கு இதன் மூல மாக மறைமுகமாகத் தெரிவிக்கும் செயலும் கூட இது.

வருடாந்திர திட்டத்தை கவனியுங்கள்! வருடத்திற்கு ஒருமுறை நாற்பது நாட்கள் ஜமாஅத்தில் செல்லவேண்டும் என்ற எழு தப்படாத விதி ஒன்றும் அவர்களுக்குள்ளாக செயல்பாட்டிலுள்ள திட்டம் இது. இப்படி செல்பவர்களைச் சில்லா ஜமாஅத் என்று அழைப்பர். இந்த நாற்பது நாட்களில் அவர் கள் செல்லும் ஒவ்வொரு பள்ளியில் நடக் கும் தினசரி தஃலீமை தவிர, கூடுதலாக காலையில் நீண்ட நேரம் அசி புத்தகத்தை ஜமாஅத்தில் சென்றவர்களுக்குள்ளாகவே படித்துத் தஃலீம் செய்து கொள்வார்கள்.
இறுதியாக ஆயுள் கால திட்டத்தை கவனியுங்கள். இது மூன்று நாற்பது நாட்கள் அதாவது 3 மு40=120 நாட்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் ஜமாஅத்திற்கு செல்ல வேண்டும். இந்த 120 நாட்களிலும் போகிற பள்ளிவாசல்களில் எல்லாம் அந்தந்த மஹல்லா தப்லீக் ஜமாஅத் நடத்தும் தினசரி தஃலீமை தவிர, கூடுதலாக காலையில் நீண்ட நேரம் அசி புத்தகத்தை ஜமாஅத்தில் சென்றவர்களுக்குள்ளாகவே படித்துத் தஃலீம் செய்து கொள்வார்கள்.

ஆக இப்படியாக எப்போது பார்த்தா லும் அசி புத்தகத்தை படிப்பது, அசி புத்தகத்தை படிப்பது என மீண்டும் மீண்டும் தஃலீம் செய்து கொள்வார்களே ஒழிய, அல்லாஹு சுபஹானஹுவதஆலா இறக்கி அருள் புரிந்த பரிசுத்த குர்ஆனை எடுத்துப் படித்தாக வேண்டும் என்ற எந்த ஒரு ஏவலும் இல்லாத வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு குற்றச்சாட்டு தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கோடு ஜமாஅத்தில் செல்பவர்கள் தங்களுக்குள்ளாக ஹல்க்கா தாலீம் என்ற பெயரில் சிறு சிறு சூராக்களை மனனம் செய்வதில் குறைந்த அளவு நேரத்தை செலவிடுவார்கள். இதுவும் குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்து கொள்கிறோம் என்று சொல்வதற்காகத் தானே தவிர, வேறெதற்கும் அல்ல. தாய் மொழியிலுள்ள குர்ஆனைத் திறந்து படித்து விடக்கூடாது என்ற சொல்லப்படாத மறைமுக ஏவல் தான் இந்த ஹல்க்கா தஃலீமும்.

இப்போது வசயத்திற்கு வருவோம். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தராத அசி புத்தக அமல்களை அறிமுகப்படுத்தி குர்ஆனை ஓரம் கட்டி வைக்கும்படி செய்துவிட்டார்கள். எனவே குர்ஆன் வசனங்கள் இடம்பெற்றுள்ள சூராவையும், ஆயத்து எண்ணையும் தெரிவிக்கவில்லை, தெரிவிக்கவும் மாட்டார்கள், தெரிவித்தி ருந்தால், அந்த இறை வசனத்தில் அசி ஆசிரியர் கூறியது இடம் பெறவில்லை என்பதை யும் அவர் எழுதி இருப்பது அவரது சொந்த சரக்கு என்பதையும் படிப்பவர்கள் அப்பட் டமாகத் தெரிந்து கொள்வார்கள். தெரிந்து கொண்டால், தம்மை நாரடித்து விடுவார்கள் என்பதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கையாக ஆயத்து எண்களைத் தெரிவிக்காமல் விட்டுவிட்டார்.

சரி! இந்த “இன்ன ஃபீ கல்கிஸ் ஸமா வாத்தி” (நிச்சயமாக வானங்களை படைத்திருப்பதிலிருந்து) என்ற ஆயத்து அல்லாஹ் வின் நெறிநூலான புனித குர்ஆனின் 2:164ல் இடம் பெற்றுள்ளதை முதலில் அறிவோம். அந்த வசனத்தை இப்போது கவனிப்போம்.

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும், பகலும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதிலும், மனி தர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவவிட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய் வதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களி லும், சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன”. (அல்குர்ஆன்: 2:164)

“இந்த ஆயத்துக்களை ஓதி, அவற்றின் கருத்துக்களை சிந்தனை செய்யாத மனித னுக்கு நாசம்தான்” என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள் என்று அசி புத்தகம் கூறுகிறது.

அசி புத்தகம் கூறுகின்ற ஹதீஃதை ஏற் கனவே நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம். அந்த ஹதீஃதில் அசி புத்தகம் கூறுவது போல “இன்ன ஃபீ கல்கீஸ் ஸமாவாத்தி என்ற ஆயத்துக்களை ஓதி, அவற்றின் கருத் துக்களை சிந்தனை செய்யாத மனிதனுக்கு நாசம்தான்” என்று நபி(ஸல்) அவர்கள் சபித் ததாக எந்த ஒரு செய்தியும் இடம் பெற வில்லை என்பதை எவரும் அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

இந்த ஆயத்தின் கருத்தை சிந்திக்காத மனிதனுக்கு நாசம்தான் என்று நபி(ஸல்) அவர்கள் சாபம் விட்டதாக கூறியுள்ளது. அந்த ஹதீஃதில் இல்லவே இல்லை என்ப தையும் குர்ஆன், ஹதீஃதுகளுக்கு எதிராக, அசி புத்தகம் இஸ்லாத்தில் இல்லாததைக் கூறி மக்களை வழிகெடுக்கிறது என்பதையும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொண் டோம்.

எனவே முஸ்லிம்களே! தப்லீக் ஜமாஅத்தில் இணைந்து குர்ஆனுக்கும், ஹதீஃதுக் கும் மாற்றமாக செயல்பட்டு மறுமை வாழ்வை நாசமாக்கிக் கொள்ளாதீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறோம்.

அசி புத்தகம் கூறும் பொய்யை உற்று கவனித்தோமேயானால் அடுத்து ஒரு உண்மையும் வெளியே வந்துவிடும். அது என்ன வென்றால், அசி புத்தகம் கூறுகின்றவாறு “இன்ன ஃபீகல்கிஸ் ஸமாவாத்தி” என்ற ஆயத்துக்களை ஓதி, அவற்றின் கருத்துக்களை சிந்தனை செய்யாத மனிதனுக்கு நாசம்தான்” என்றால், குர்ஆனின் மற்ற வச னங்களைப் பற்றி சிந்தனை செய்ய வேண் டாம் என்ற கருத்தும் மறைமுகமாக வலியுறுத்தப்படுவதை அறிய முடிகிறது அல்லவா? அதாவது குர்ஆனைப் படிக்கக்கூடாது என்ற செய்தி ஏறக்குறைய சொல்லாமல் சொல்லப்படுவதை உணர முடிகிறதல்லவா? இந்தக் கருத்து “நீங்கள் சிந்தித்து உணர்வதற்காக அல்லாஹ் தன்னுடைய வச னங்களை உங்களுக்கு இவ்வாறு விளக்கு கிறான்’ என்று திருக்குர்ஆன் 2:266 வசனத்திலும் இன்னும் இதுபோன்ற பல வசனங்களி லம் கூறப்பட்டு இருப்பதற்கு எதிராக இருக்கிறது என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ள இடம் அளிக்கிறது அல்லவா?

நான் கூறாத ஒன்றை கூறினார்கள் என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட் டும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள் என ஸலமா(ரழி) அறிவித்தார். புகாரி:109, அத்தியாயம்:3,கல்வியின்சிறப்பு.

அல்லாஹ் இறக்கி அருளிய குர்ஆன் கூறாததைக் குர்ஆன் கூறியதாகக் கூறுவதைப் பற்றி, குர்ஆன் எச்சரிக்கை செய் வதைப் பார்த்து, இனியாவது தப்லீக் ஜமா அத்தினர் தங்களைத் திருத்திக் கொள்ளு மாறு அன்புடன் அழைக்கின்றோம்.

“அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப் பட்ட வார்த்தையை அவர்களுக்கு சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள். ஆகவே, அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது பாவம் செய்து கொண்டி ருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கி வைத்தோம்.”
அல்குர்ஆன்: 2:59

“எவர், அல்லாஹ் இறை நெறிநூலில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறு களில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை, மறுமை நாளில் அல் லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட் டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன்: 2:

“யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப் பிரமாணங்க ளையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை, அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான், இன்னும் இறுதி நாளில், அவன் அவர்களை பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான், மேலும், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு”. அல்குர்ஆன்: 3

“”அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாகத் தூதர் உண்மையாளர் தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார் களோ, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப் படி நேர்வழி காட்டுவான்? அல்லாஹ் அநி யாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்” அல்குர்ஆன் 3:94

“”இதன் பின்னரும் எவரேனும் ஒருவர், அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால், நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள்”
இன்ஷா அல்லாஹ் இனியும் வரும்….

**********************************************************************************

 நோன்பு காட்டுமிராண்டித்தனமா? காரணங்கள் பொதிந்ததா?

சங்கை சிராஜுத்தீன்

மறு பதிப்பு :

நோன்பு காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றக் காரணம் என்ன? எதையுமே மேலோட்டமாகப் பார்க்கும் நாத்திகப் பார்வையா? நோன்பின் நோக்கத்தைப் பற்றிய அறியாமையா? புரியவில்லை. எந்தக் காரணத்துக்காக இறைவன் இந்தக் கட்டுப்பாட்டு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறானோ அந்த நோக்கம் நம்மில் காணப்படாமல், வெறும் சடங்காக, பட்டினி கிடக்கும் வைபவமாக மாறிவிட்டதே இது போன்ற விமர்சனங்களுக்குக் காரணம்.

எந்த பகுத்தறிவு வாதியும் ஒரு மனிதனுக்குக் கட்டுப்பாட்டுணர்வு தேவை என்பதை மறுக்கமாட்டான். அறிவை இழக்கச் செய்து மனிதனை மிருகமாக்கும் கோபம், காமம், இழிவான சொற்கள் இவை அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை, ஒரு கட்டுக்குள் நிறுத்தப்பட வேண்டியவை என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை.

பயிற்சி ஏதுமின்றி சாதனைகள் புரிவது சாத்தியமா? இந்தத் தீய குணங்கள் வேரறுக்கப்படவேண்டும். ஒழுக்க மாண்புகள் பேணப்பட வேண்டுமெனில் அதற்கு பயிற்சி ஓர் இன்றியமையாத காரணியாக இருக்கிறது. அந்தப் பயிற்சி தான் நோன்பு.

நோன்பின் நோக்கம் தூய்மையான மனிதர்களை ஒழுக்கம் பேணும் மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதை இறை மறையிலிருந்தும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மணி மொழியிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

திருக்குர்ஆன் கூறுகிறது :

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பை கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இத னால்) நீங்கள் தூய்மையுடையோராகலாம். (அல்குர்ஆன்: 2:183)

நபி(ஸல்) கூறுகிறார்கள் :

யார் பொய்யான சொற்கள் பேசுவதை யும், அதன்படி செயல்படுவதையும், அறியாமைத்தனமான செயல் புரிவதையும் விடவில்லையோ அவன் உண்ணாமல், பருகாமல் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. (புகாரி) நோன்பின் நோக்கத்தை புரிந்து கொள்ள இதுவே போதுமானதாகும்.

சில மணி நேரங்கள் கூட தனது ஆசையை உணர்வுகளை ஒரு கட்டுக்குள் வைக்க முடியாத ஒரு சமுதாயம் எதைத் தான் சாதித்து விடமுடியும்? இவ்வுலகின் இறுதி நாள் வரை மனித சமுதாயத்துக்கு நன்மைகளை ஏவிக் கொண்டிருப்பதிலும் தீமைகளை எதிர்த்து போராடிக் கொண்டி ருப்பதிலும் நீதியை நிலைநாட்டுவதிலும் தன் வாழ்நாளைக் கழிக்க வேண்டிய முஸ் லிம் சமுதாயத்துக்கு இந்த பயிற்சி மிகவும் அவசியமானது.

விசுவாசிகளே! உங்களில் ஒரு கூட்டத் தினர் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்துக் கொண்டும், தீமையை விட்டுத் தடுத்துக் கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன்: 3:104)

எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர் கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளிப்படுத்திவை. நீ உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை அளித்தருள். நீ உன் புறத்திலிருந்து உதவி செய்வோரையும் அளித்தருள். என பிரார்த்தனை செய்கின்ற பலவீனமான ஆண்களுக்காகவும், பெண் களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியாதிருக்க உங்களுக்கென்ன நேர்ந்தது? (அல்குர்ஆன்: 4:75)

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியை நிலைநிறுத்துபவர்களாகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி சொல்பவர்களாகவும் இருங்கள். (அல்குர்ஆன்: 5:8)

இத்தகைய மகத்தான பொறுப்புக்களை சுமத்தப்பட்டிருக்கின்ற ஒரு சமுதாயம் பயிற்சி இன்றி களத்தில் இறங்குவது அறிவுடைமையா?

அக்கிரமத்தை அநீதியை எதிர்த்துப் போராடும் பொழுதும், நீதியை நிலைநாட் டப்படும்பொழுதும், எதிர்ப்படுகின்ற இன்னல்கள், துயரங்கள் முதலியவற்றை ஒரு சமுதாயம் தாங்கிக் கொள்ள வேண்டு மெனில் கடுமையான நிர்பந்தங்களின் காரணமாக தீய சக்திகளுக்குத் தலை வணங்கி விடக்கூடாது. எனில் பயிற்சிகள் அதுவும் கடுமையான பயிற்சிகள் இன்றி சாதிக்க முடியுமா?

என்றோ ஒருநாள் நடக்கவிருக்கும், அல்லது நடக்க வாய்ப்பில்லாமலேயே போய் விடக்கூடிய யுத்தங்களுக்காக ஒவ்வொரு நாடும் தன்னுடைய ராணுவ வீரர்களுக்கு தினமும் பயிற்சி அளிக்கின்றதே ஏன்? இதுவும் காட்டுமிராண்டித் தனமானது தானோ? பகுத்தறிவுவாதிகள் அப்படித் தான் சொல்வார்களோ?

எப்பொழுதோ நடைபெறப் போகும் யுத்தங்களுக்காக இத்தகைய ஏற்பாடுகள் தேவை எனில் சத்தியத்தை நிலைநாட்டவும் அசத்தியத்தின் பிடியிலிருந்து மக்களை விடு விக்கவும், நித்தமும் உணர்வால், எழுத்தால், நாவால், உடலால், பொருளால் போராட வேண்டிய பொறுப்பைப் பெற்றிருக்கின்ற இஸ்லாமிய சமுதாயத்திற்கு நோன்பு போன்ற இறை நம்பிக்கையின் மீது அமைக்கப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்தான் என்பதில் சந்தேகம் என்ன இருக்கின்றது?

சுயநலவாதிகளுக்கும் இந்த உலக மக்க ளைப் பற்றிக் கவலையற்றிருக்கும் பொறுப்பற்றவர்களுக்கும் வேண்டுமானால் பட்டினி கிடப்பது காட்டுமிராண்டித்தன ம

(தான் நோன்பாளி என்பதை) மறந்து விட்டு ஒருவர் சாப்பிட்டாலோ, அல்லது குடித்தாலோ (அவரது நோன்பு முறி யாது நினைவு வந்தவுடன் எதையும் சாப் பிடாமல் குடிக்காமல் தன் நோன்பை முழுமைப்படுத்த வேண்டும். அறிவிப் பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்கள்: முஸ்லிம்.

**********************************************************************************

மனிதரில் சிறந்தவர் மனைவியரிடம் சிறந்தவரே!

ரபீக் பானு, திருச்சி

மனிதரில் சிறந்தவர் யார்?

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: திர்மிதி.

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவாராவார் என்ற உயரிய பண்பை நபி(ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.

இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகிவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமை யான முஃமினாக ஆகிவிட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஃத் விளக்குகின்றது.

இன்று நம்மிடம் இதுபோன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும். கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக்கூடாது. ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டு மானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.

உணவு, உடை :

அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்டபோது, நீ சாப்பிடும்போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: முஆவியா பின் ஹைதா(ரழி), நூல்: அபூதாவூத்

நாம் சாப்பிடும்போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். கணவன் சாப்பிட்ட எச்சி லைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள். அத்துடன் மட்டும் நபி(ஸல்) அவர்கள் நிற்க வில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

சுய மரியாதையைப் போற்றுதல் :

மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக்கூடாது என்ற நல்ல பண்பை(ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஃத் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

“நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண் டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ(ரழி), நூல்: புகாரி.

மனைவியை அடித்து விட்டு அவள் பக் கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று இந்த ஹதீஃத் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் தமது மனைவிமார்களை அடித்த தில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும்.

அடுத்ததாக “பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டிவிடாதே” என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள். அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடஙகளில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும்.
உறக்கம் கெடுக்காதே!

மனைவி உறங்கும்போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது. பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும்போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முத லில் எழுப்பிப் பார்ப்பது. அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வசாதாரணமாகத் தொடர்கின்றது. இதோ அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்க ளின் வாழ்க்கையைப் பாருங்கள்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா(ரழி) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ரழி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃக்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா(ரழி) எழுந்து , நபி(ஸல்) அவர்களை பகீஃ வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள். மூச் சிறைப்பின் காரணமாக ஆயிஷா(ரழி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா(ரழி), ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின் றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு உண் மையை அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

உடனே ஆயிஷா(ரழி) நடந்த நிகழ்வைக் கூறுகின்றார்கள். “பகீஃக்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட் டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னி டம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன், அப்போது நீ உறங்குகின்றாய் என் றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன்மூலம் நீ வெறுப் படைவதை அஞ்சினேன்” என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள். ஹதீஃதின் சுருக்கம்: நூல்:முஸ்லிம்: 1619

இங்கு நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும்போதும் எழுப்பவில்லை. அதன் பிறகு வெளியே செல்லும்போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்பதுதான். ஆனால் நம் நாட்டிலோ “பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி” என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல. அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஃத் உணர்த்துகின்றது.

நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓதவேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடு வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: புகாரி.
மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி:

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும், கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவே அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, “நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன், அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) “அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது, “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “அப்படியானால் செல்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி), நூல்: புகாரி.

இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவி எனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம். பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம், இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்

மனைவியின் உணவு, உடை அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விசயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக. மாநபி வழியில் நடைபோடு வோமாக. மனிதரில் சிறந்தவர் மனைவியரிடம் சிறந்தவரே.

**********************************************************************************

அல்லாஹ்வை முழுமையாக நம்புதல்!

இப்னு ஸதக்கத்துல்லாஹ்

கபுரிலுள்ள இறந்தவர்களிடம் கையேந்தி நிற்பதும், போராட்டம், ஆர்ப்பாட்டம், முற்றுகை, ஒத்துழையாமை, சட்டமறுப்பு என்ற பெயரில் ஆட்சியாளர்களிடம் கையேந்தி நிற்பதும் ஒன்றுதான். ஒரே குற்றம்தான். சிர்க்தான் என்பதை பற்றி இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.

அல்குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் “மின்தூனில்லாஹி”, “மின்தூனிஹி” என்று இறைவாக்குகளில் இருப்பதைப் பார்க்கலாம். இச்சொல் ஜின், மனிதன், உயிருள் ளவை, உயிரற்றவை, உயிருள்ளோர், இறந் தோர், வானங்கள், பூமி, அனைத்து நட்சத் திரங்கள், கோள்கள், மரம், செடி, கொடி, கடலில் வாழ்பவை, தரையில் வாழ்பவை, மனோ இச்சை, தட்டு, தகடு, தாயத்து, போராட்டம், ஆர்ப்பாட்டம், முற்றுகை, ஒத்துழையாமை என அல்லாஹ் அல்லாத அனைத்தையும் குறிக்கும் பரந்து விரிந்த பொருள் கொண்ட சொல். இந்த சொல் இடம் பெற்றிருக்கும் வசனங்களையயல்லாம் நடுநிலையோடு கவனமாக படியுங்கள். கபுரிலுள்ளவர்களை யும், தகடு, தட்டு, தாயத்தை நம்புவதும் போராட்டங்களை நம்புவதும் ஒன்றுதான். ஒரே குற்றம்தான், சி´ர்க்தான் என்பது புலப்படும்.

நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ உங்களுக்கு இல்லை என் பதை நீங்கள் அறியவில்லையா? 2:107

அல்லாஹ்வே! ஆட்சியாளர்களுக் கெல்லாம் ஆட்சியாளன். 3:26

மனிதர்களுக்காக எந்த அருளையாவது அல்லாஹ் திறந்துவிட்டால் அதை தடுக்கும் (மேலானவன்) எவனும் இல்லை. அவன் தராததை தரும் (போட்டியாளன்) எவனும் இல்லை. அவன் (தான்) மேலானவன். முழுமையான அறிவுடையவன். 35:2

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் “”நிச்சயமாக நான் அருகிலேயே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு பதில ளிக்கிறேன், (எதைக் கேட்டாலும்) அவர் கள் என்னிடமே கேட்கட்டும். என்னை மட் டுமே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழி அடைவார்கள்” என்று கூறுவீராக.
2:186

அல்லாஹ் தான் உண்மையான ஆட்சி யாளன், சகல அதிகாரங்களும் அவனிடம் தான் இருக்கிறது. இங்கிருப்பதெல்லாம் போலிகள் என்பதை மேற்கூறிய வசனங்கள் விளக்குகின்றன.

போராட்டம் நடத்துபவர்கள், இந்த இறைக் கட்டளைகளையயல்லாம் நிராகரித்து அல்லாஹ்வை நம்பாமல் அரசை நம்புகின்றனர். இது பெரும் குற்றம், இந்த இறைக்கட்டளைப்படி செத்தவர்களிடம் கையேந்துபவர்களும், உயிரோடிருப்பவர்களிடம் கையேந்துபவர்களும் ஒரே குற்றத் தையே செய்கின்றனர். இறைவனுக்கு இணை(´ர்க்) வைக்கின்றனர் என்பதும் தெரியவரும். இப்போது சொல்லுங்கள். போராட்டம், ஆர்ப்பாட்டம், முற்றுகை, ஒத்துழையாமை, சட்டமறுப்பு எனத் தூள் கிளப்புகிறவர்களின் கோரிக்கைகள் இறை வனால் ஏற்கப்படுமா? ஆக கபுரில் கையேந்துபவர்களுக்கும், போராட்டம், ஆர்ப்பாட் டம், முற்றுகை, ஒத்துழையாமை, சட்ட மறுப்பு என்ற பெயரில் அரசிடம் கையேந்து பவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை அல்லவா?

மேலும், இந்த போராட்டங்கள் எதைச் சாதித்து விட்டன? முஸ்லிம்களின் எந்த பிரச்சினையை தீர்த்து வைத்து விட்டது? எந்த உரிமையை மீட்டுத் தந்து விட்டது? என்பதற்காக இப்படி போராட்டங்களை நடத்துகிறார்கள் என்று நமக்கு புரிய வில்லை, பாபர் மசூதிக்காக போராட்டம் நடத்தினார்களே கிடைத்து விட்டதா? இட ஒதுக்கீடுக்காக போராட்டம் நடத்தினார் களே கிடைத்து விட்டதா? க்ஷுலிற்வீற்ணுeலிருந்து வீடியோவை நீக்கச் சொல்லி போராட்டம் நடத்தினார்களே நீக்கி விட்டார்களா? இப்படி கேட்டுக் கொண்டே போகலாம். ஒரு வாதத்துக்காக, பிரச்சினையை தீர்த்து வைக்கிறது. உரிமையை மீட்டுத் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்காக போராட்டம் ஹலாலாகி விடுமா? வியா பாரத்தை போல் வட்டியிலும் வருமானம் வருகிறது என்பதால் வட்டி ஹலாலாகி விடுமா? திருமணத்தை போல் விபச்சாரத்தி லும் உடல் வேட்கை தணிகிறது என்பதற் காக விபச்சாரம் ஹலாலாகி விடுமா? உழைத்து சாப்பிடுவதாலும் பசி தீர்கிறது, திருடிச் சாப்பிடுவதாலும் பசி தீர்கிறது.

அதற்காக திருடுவது ஹலாலாகி விடுமா? இப்படி வட்டி, விபச்சாரம், திருட்டு, போராட்டங்கள் வாயிலாக கிடைக்கும் தீர் வுகளில் அல்லாஹ்வின் அருள் இருக்காது. பரக்கத் இருக்காது, சாபம்தான் இருக்கும். மேலும், இந்த போராட்டங்கள் அசலான வி­யங்களை மறக்கடிக்கின்றன, முஸ்லிம் ஓட்டு வங்கி, இந்து ஓட்டு வங்கி என்று எதிர் மறையான விளைவுகளை உண்டாக்கி முஸ் லிம்களை மேலும் ஆபத்தில் சிக்க வைக்கின்றன. இதையயல்லாம் அவர்கள் சிந்தித்து உணர கடமைப்பட்டிருக்கிறார்கள்.

சரி, ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை கூடாது என்றால் இந்த சிக்கலி லிருந்து மீள்வது எப்படி? என்று கேட்கலாம்.

உங்களில் யார் நம்பிக்கை கொண்டு நற் செயல்கள் செய்கிறார்களோ, அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், மேலும் அவன்பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சய மாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களு டைய அச்சத்தைத் திட்டமாக அமைதி யைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களிக்கிறான். (எனவே) “அவர்கள் என்னோடு (எதையும், எவரை யும்) இணை வைக்காது, என்னை மட்டுமே வணங்கட்டும், இ(வ்வாறு அல்லாஹ் உத்திர வாதம் தந்த)தற்குப் பிறகும் (உங்களில்) யாரெல்லாம்(அல்லாஹ்வோடு, எதையா வது அல்லது யாரையாவது இணை வைத்து அல்லாஹ்வுடைய கட்டளைக்கு) மாறு செய்கிறாரோ அவர்களெல்லாம் பெரும் பாவிகள் தான். 24:55

நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். 3:103

மேலும் அல்லாஹ்வுக்கும், அவனு டைய தூதருக்கும் கீழ்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், (அவ் வாறு கொண்டால் பிரிந்து விடுவீர்கள். பிரிந் தால்) உங்கள் பலம் குறைந்து விடும், கோழைகளாகி விடுவீர்கள், (எனவே, எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு) நீங் கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். 8:46

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும், ஆகவே, இதனையே பின்பற் றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்துவிடும். 6:153

நீங்கள் மனந்தளர்ந்து வீடாதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள், நீங்கள் நம்பிக் கையுடையோராயின், நீங்கள்தான் வெற்றி யடைவீர்கள். 3:139

அறிவும், தெளிவும் தங்களிடம் வந்த பிறகு, தங்களுக்கிடையே இருந்த பொறா மையின் காரணமாகவே அவர்கள் பிரிந்து போனார்கள். 42:14

நிச்சயமாக யாரெல்லாம் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறா கப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. 6:159

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரி வினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ, அவர்களில் ஆகி விடவேண்டாம். 30:32

(இவ்வாறு இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பிறகும், யார் தங்களுக்குள் கருத்து வேறுபட்டு பிரிந்து போனார்களோ, அவர்களைப் போன்று நீங் களும் ஆகிவிடாதீர்கள், அத்தகையோருகக் குக் கடுமையான வேதனை உண்டு. 3:105

நூஹுக்கு எதை அவன் மார்க்கமாக்கி யிருந்தானோ, அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கிறான். ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப் பதும், இப்ராஹீமும், மூஸா, ஈஸா ஆகியோ ருக்கு நாம் உபதேசித்ததும் என்னவென்றால், “நீங்கள் (எல்லோரும்) மார்க்கத்தை நிலைநாட்டுங்கள் (இஸ்லாத்தை, பரப்புங் கள்) அ(ந்த வி­யத்)தில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள்” என்பதுதான். 42:13

மேலே எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வச னங்களை கவனமாக படியுங்கள். முஸ்லிம் சமுதாயம் இப்படி சிக்கியது ஏன்? இந்த சிக் கலிலிருந்து மீள்வது எப்படி? தமது உரிமை களைப் பெறுவது எப்படி? என்ற கேள்விக ளுக்கு ரத்தினச் சுருக்கமாக அல்லாஹ் பதில ளித்திருப்பதை விளங்கிக் கொள்ளலாம்.

மேலும், முஸ்லிம்கள் என்று சொல்லி விட்டாலே அவர்கள் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய தூதருக்கும்தான் (ஸல்) கட்டுப்பட வேண்டும். கட்டுப்பட்டே ஆகவேண்டும், வேறு வழியே கிடையாது. அப்படி கட்டுப்படாமல் வேறு வழிகளை பின்பற்றினால்,எப்போதும் ஒன்றுபோல இருக்காது. இப்படித்தான் ஏதாவது ஒரு கட்டத்தில் வசமாக சிக்கிக் கொண்டு விழிபிதுங்கி நிற்க வேண்டியதிருக்கும். இது அல்லாஹ் உண்டாக்கி வைத்திருக்கும் சிஸ்டம், செட்டப், அமைப்பு. இதை யாராலும் மாற்றியமைக்க முடியாது.

மேலும், இப்படியயாரு சிக்கலை அவன் ஏற்படுத்தியிருப்பதன் காரணம், செய்த குற்றத்துக்கான தண்டனை மற்றும் திருந்துவதற்கான வாய்ப்பு என்பதை விளங் கிக் கொள்ள வேண்டும். எனவே, இப் போதாவது இந்த முஸ்லிம் சமுதாயம் விழித்துக் கொண்டு, அல்லாஹ்வின் பக்கமும், அல்லாஹ்வின் தூதரின் பக்கமும் திரும்ப வேண்டும்.

அல்லாஹ்வை முற்று முழுவதுமாக நம்பி, சுயநலமிக்க மத வியாபாரிகளான மவ்லவிகள், மற்றும் அரசியல் வியாபாரிகளாகிய இந்த இரு இடைத்தரகர்களையும் முற்றிலும் புறக்கணித்து விட்டு 3:103 இறைக் கட்டளைப்படி மத்ஹபு, தரீக்கா, இயக்கம், கழகம் கட்சி, பேரவை எனப் பிரியாமல், ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடிப் போதனைகள்படி நடக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தில் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அக்காரியத்தில் வேறு கருத்து கொள்வதற்கு நம்பிக்கையாளர்களாகிய எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதிகாரமுமில்லை). ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரசூலுக்கும் யாராவது மாறு செய்தால் நிச்சயமாக அவர் கள் தெளிவான வழிகேட்டில்தான் இருககிறார்கள். 33:36

இந்த இறைக் கட்ித்து இப்புரோகிதர்கள் சொல்லும் சுயவிளக்கங்களை ஒருபோதும் நம்பிப் பின்பற்றக் கூடாது. சமுதாயத்தில் இப்படியயாரு நிலை ஏற்பட்டுவிட்டால் முஸ்லிம்கள் அனைவரும் “முஸ்லிம்கள்” என்ற ஒரு பெயரில் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு விடுவார்கள். முஸ்லிம்கள் அனைவரும் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு விட்டால் அவர்கள் விரும்புகிறவர்கள் மட்டுமே ஆட்சியில் அமரமுடியும். ஆட்சியில் அமரும் அவர்கள் முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்க முற்படுவார் களா? 1435 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை எதிர்த்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது போல், ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் காணாமல் போய்விடுவார்களல்லவா? 24:55 இறை வாக்கில் அல்லாஹ் வாக்களித்துள்ளது போல் ஆட்சி அதிகாரத்தையே முஸ்லிம் களுக்கு தந்துவிடுவான். ஆனால் அந்த நிலை ஏற்படுமா?

ஆயினும் 33:36 இறைக் கட்டளையை நிராகரித்து குர்ஆன், ஹதீஃதுக்குச் சுயவிளக்கம் கொடுத்து பெருங்கொண்ட மக்களை வழிகெடுக்கும் இம்மூடர்களின் மூளை வரண்ட செயல்பாடுகளை மக்களுக்கு தெளிவாக விளக்கி அவர்களின் சூன்ய, வசீகர, உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்க ஓயாது உழைப்பது மட்டுமே நம் கடமை. இந்தக் காலக் கட்டத்தில் மீண்டும் இஸ்லாமிய எழுச்சியை அல்லாஹ் நாடி இருந்தால் அது நடக்கும். இல்லை என்றால் இல்லை, ஆயினும் அதற்காக உழைத்தவர் களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது. இம்மையிலும், மறுமையிலும் அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அல்லாஹ்விடம் உண்டு. அதில் சந்தேகமே இல்லை, அல்ஹம்துலில்லாஹ்.

**********************************************************************************

அறிந்து கொள்வோம்…

மர்யம்பீ, குண்டூர்,

 1. தவளையை என்ன செய்யவேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  மருந்திற்காக இருப்பினும் தவளையை கொல்வதை தடை செய்தார்கள். நஸயீ:4280
 2. ஒருவர் உட்கார்ந்துள்ள நிலையில் அவரை எழுப்பிவிட்டு உட்கார நபி(ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
  தடை செய்தார்கள். புகாரி : 911
 3. மனிதர்கள் தமக்கு தாமே அநியாயம் செய்து கொள்வதாக அல்லாஹ் கூறும் வசனம் எது?
  அத்தியாயம் : யூனுஸ் 10:44
 4. ஜும்ஆ தொழுகைக்கு முன்பு எவ்வாறு இருப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?
  வட்டமாக அமர்வதை தடை செய்தார்கள் அபூதாவூது : 911
 5. பள்ளியில் தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவர் என்ன நிலையில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  தொழுது கொண்டிருப்பவர் நிலை. புகாரி:477
 6. ஆதம்(அலை) அவர்கள் எந்த நாளில் மரணித்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள்?
  ஜும்ஆ (வெள்ளிக்கிழமை) அன்று.  அபூ தாவூது: 882
 7. யாருக்கு நற்செய்தி உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்?
  சிர்க்கை விட்டு முற்றிலும் விலகி அல்லாஹ்வின்பால் முன்னோக்கியவர் களுக்கு. 39:17
 8. எந்த செயல் இஸ்லாத்தில் சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  பிறரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பாதுகாப்பு பெற்றதை. புகாரி:11
 9. எதை ஏற்படுத்திக் கொள்வதை அல்லாஹ் கண்டிக்கின்றான்?
  இரண்டு தெய்வங்களை ஏற்படுத்துவதை.  16:51
 10. கடன் பட்டவரிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என அல்லாஹ் கூறு கிறான்?
  வசதியான நிலை வரும் வரை காத்திருக்க வேண்டும். 2:280
 11. நமக்கு எவை எல்லாம் சோதனையாக உள் ளது என அல்லாஹ் கூறுகிறான்?
  செல்வமும், குழந்தைகளும். 8:28
 12. பெருமையடித்துக் கொண்டிருப்பவர் களை அல்லாஹ் என்ன செய்வதாக கூறுகி றான்?
  சிறுமையடைந்த நிலையில் நரகத்தில் நுழைவிப்பான். 40:60
 13. தக்க காரணமின்றி ஜும்ஆ தொழுகையை விட்டவர் என்ன செய்யவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  ஒரு தினார் தங்க காசு அல்லது டி தினார் தங்க  காசு தர்மம் செய்யவும். அபூதாவூது:889
 14. அடையாளத்திற்காக சூடு வைப்பவர்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
  அல்லாஹ் சபிப்பானாக என கூறினார்கள்.  முஸ்லிம் : 4298
 15. காய்ச்சல் எப்படி உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  நரகத்தின் வெப்பத்தால். முஸ்லிம்: 4441
 16. யாருக்கு பயமில்லை என அல்லாஹ் கூறு கிறான்?
  எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என கூறி அதிலேயே நிலைத்து நிற்பவர்களுக்கு.  46:13
 17. கட்டாய ஜகாத் வசூலிப்பவர் வேறொரு வரை அனுப்பி வசூல் செய்வது இஸ்லாத்தில் உண்டா?
  இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். நஸாயீ. 3284
 18. தொற்றுநோய் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
  கிடையாது. முஸ்லிம் : 4469
 19. பள்ளிவாசலுக்குள் நுழைபவர்கள் என்ன செய்ய வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  இரண்டு ரக்அத்கள்(தஹியத்துல் மஸ்ஜித்) தொழுது கொள்ள வேண்டும். முஸ்லிம்:1587
 20. கனவில் ஷைத்தான் விளையாடியதைப் பற்றி என்ன செய்யவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.  முஸ்லிம்: 4564

**********************************************************************************

ஸலவாத்…

முகமது அலி, M.A.

பிப்ரவரி மாத தொடரில் (மறு பதிப்பு 🙂

ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டிட அனுப்பப்பட்ட நபிமார்கள், பல்வேறு சோதனைகளைத் தாங்கி, ஒருசில மக்களை நேர்வழியின்பால் கொண்டு வந்தனர். அவ்வாறு நேர்வழி அடைந்த மக்கள், தாங்கள் நேர்வழி அடையக் காரணமாக இருந்த நபிமார்களின் மீது பேரன்பு கொண்டிருந்தனர்.

அந்த அன்பு நாளடைவில் பக்தியாக உரு மாறியது. தெய்வீகத்தன்மை பொருந்திய வர்களாக அந்த நபிமார்கள் சித்தரிக்கப்பட்டனர். அதன் காரணமாய்த் தங்கள் தேவைகளை அந்தக் காலம் சென்ற நபிமார்களிடமே கேட்கத் தலைப்பட்டனர். சுருங்கச் சொல்வதென்றால் “அந்த நபிமார்கள் எந்த லட்சியத்திற்குப் பாடுபட்டனரோ அந்த இலட்சியத்தை அதே நபிமார்களின் பெயரால் அழித்து விட்டனர்”.

உதாரணத்திற்குக் கிறித்தவர்கள் ஈஸா நபியை வரம்பு மீறி உயர்த்தியதைச் சொல்லலாம், இதைப் பற்றித்தான் நபி(ஸல்) சொன்னார்கள். யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிக்கட்டும்! (ஏனெனில்) அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கு மிடமாக ஆக்கிவிட்டனர். ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, தாரமீ, முஅத்தா, அஹ்மது.

யூத கிறித்தவ சமுதாயம் அடைந்த நிலைகளை தன் சமுதாயம் அடையக் கூடாது என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் தனக் குத் தன் சமுதாயத்தினர், ஸலவாத் கூற வேண்டும் என்று கற்றுத்தந்தனர். மனித இனத்திலேயே மிகவும் உயர்ந்த மதிப்புடைய நபி(ஸல்)அவர்கள் தனக்கு அருள் புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யும் படி, சொல்லிச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் தேவைகளைக் கேட்கும்படியோ, தன் பொருட்டால் கேட்கும் படியோ, சொல்லாமல் தனக்காக அல் லாஹ்விடம் துஆ செய்யும்படி சொல்லி இருக்கிறார்கள் என்றால், நபி(ஸல்) அவர்களை விட மதிப்பில் மிகவும் குறைந்த மற்ற வர்களிடம் நம் தேவையைக் கேட்பது எப் படி நியாயமாகும்?

நபி(ஸல்) அவர்களை விட மற்றவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் நெருங்கியவர்கள் என்று எண்ணுவது இஸ்லாத்தின் அடிப் படைக்கே முரணானது அல்லவா?

தங்களின் துன்ப நேரத்தில் இறந்துவிட்ட வர்களை அழைப்பவர்கள் நபி(ஸல்) அவர் களை விட மற்றவர்களை உயர்வாக மதிக்கி றார்கள் என்றுதானே பொருள்?

இன்றைக்கு நல்லவர்களின் பெயரால் நடந்து கொண்டிருக்கின்ற கொண்டாட் டங்களும், இணைவைத்தலுக்கும் “”ஸல வாத்” என்பதே தக்க மறுப்பாக அமைந்துள் ளது. நபி(ஸல்) அவர்களை மதிக்கும் போதும் அன்பு செலுத்தும்போதும் அவர் களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய் யும்போது மற்றவர்களை மதிப்பதாக எண் ணிக்கொண்டு அவர்களிடம் முறையிடுத லும் தேவைகளைக் கேட்டலும் எப்படி நியாயமாகும் என்று மக்கள் சிந்தித்தாலே போதும். இந்த சமுதாயம் சீர் பெற்று விடும்.

ஸலவாத்தை இந்த அளவு நபி(ஸல்) வலியுறுத்திச் சொன்னதின் நோக்கத்தை இதன் மூலம் உணரலாம். ஏனைய நபிமார்களின் பெயரால் ஏற்பட்ட தவறான உடன்படிக் கைகள் தன் பெயரால் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தன்னை மதிக்கின்ற முறையையும் சொல் லித் தந்தார்கள்.

இதுவரை நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவனால் நமக்கு ஏற்படுகின்ற நன்மைகளையும் அதன் தத்துவங்களையும் கண்டோம்.

“ஸலவாத்’ என்ற பெயரில் புதுப்புது ஸலவாத்துகள் உருவாக்கப்பட்டுள்ளதைப் பற்றி ஆராய்வோம்.

நபி(ஸல்) அவர்களிடம் அருமை ஸஹா பாக்கள் “உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவது’ என்று கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள் “ஸலவாத்’ கூறும் முறை களை நமக்குத் தெளிவாக கற்றுத் தந்துள்ள னர். அவர்கள் எவற்றை “ஸலவாத்’ என்று கற்றுத் தந்தார்களோ அதை விடுத்து, நாமா கப் புதிய “ஸலவாத்’களை உருவாக்கிக் கொண்டால் அது ஸலவாத் ஆக முடியாது. மாறாக “பித்அத்’ ஆக அவை கருதப்படும்.

இதற்கு உதாரணமாக “இப்னு அபீ ஜைது’ என்ற அறிஞர் “வஹ்ரம் முஹம்மதன் வஆல முஹம்மத்’ என்று ஒரு புதிய ஸலவாத்தை அவராக தயாரித்தபோது அன்றைய அறி ஞர் உலகம் அவரை வன்மையாகக் கண்டித்து, “அவர் மார்க்கத்தை அறியாதவர்” என்றும் முடிவு கட்டியது. நபி(ஸல்) அவர் கள் ஸலவாத் எப்படிக் கூறுவது என்று நமக்கு தெளிவாக கூறியிருக்கும்போது “புதிதாக ஒரு ஸலவாத்தை உருவாக்குவது பித்அத் ஆகும்” என்றும் அன்றைய அறிஞர் பெருமக்கள் அவரைக் கண்டித்துள்ளனர். “திர்மிதி’ என்ற ஹதீஃத் நூலுக்கு விரிவுரை எழுதிய இமாம் அபூபக்ரு இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்கள். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்ட பின் “ஸல வாத்துன்னாரிய்யா” என்று நம்மவரிடையே பிரபல்யம் அடைந்துள்ள ஸலவாத்தை அலசுவோம்.

இந்த “ஸலவாத்துன்னாரியா” என்ற ஸலவாத்தை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. அருமை ஸஹாபாக்கள் இதை ஓதியதுமில்லை. நாற்பெரும் இமாம் களின் காலத்திலும் இந்த ஸலவாத் இருந்த தில்லை. மிகமிகப் பிற்காலத்தில் வாழ்ந்தவர் கள் தான் இந்த ஸலவாத்தைத் தயார் செய்த னர். நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ள எண்ணற்ற ஸலவாத்துக்கள் இருக்க, இப்ப டிப் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்ட “”ஸலவாத்துன்னாரிய்யா” மக்களிடம் நன்கு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இதைச் சொல்வதால் ஸலவாத்தின் நன்மை நிச்சயம் கிடைக்காது.

இதன் பின்னணியில் ஏராளமான பித்அத் கள் வேறு நடந்து கொண்டுள்ளன. இதை 4444 தடவை ஓத வேண்டுமாம். இந்த எண் ணிக்கை நிர்ணயம் செய்தவர் யார்? அல் லாஹ்வுக்கும் அவனது தூதர்(ஸல்) அவர் களுக்கும் தவிர இப்படி எண்ணிக்கைகளை நிர்ணயிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.

இந்த “ஸலவாத்’ ஓதுவதால் செல்வம் பெருகும் நோய் நீங்கும் என்ற குருட்டு நம்பிக்கை வேறு!

இந்த “தீனை”வைத்து சம்பாதிப்பவர்கள் தான், திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்பதை சிந்தனை உள்ள எவரும் உணரலாம். 4444 என்று பெரும் எண்ணிக்கைகளைச் சொன்னால் மக்கள் தானாக அவ்வளவு பெரும் எண்ணிக்கையை ஓத இயலாது. அதற்கென்று ஓதத் தெரிந்தவர்கள் அழைப் பார்கள். அதற்கு சில்லரைகள் கிடைக்கும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் எதுவும் இருக்க முடியாது.

“ஸலவாத்துன்னாரிய்யா’ என்றால் நெருப்பு ஸலவாத் என்று பொருள். அந்த ஸலவாத்தில் நார் (நெருப்பு) என்ற சொல் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை. பிறகு ஏன் “நாரிய்யா” என்று பெயர் வைத் தார்கள்? என்று நாம் ஆராயும்போது ஒரு செய்தி நமக்குத் தெரிய வந்தது.

அதாவது மலே´யாவின் சில பகுதிகளில் மிகப்பெரும் நெருப்பு குண்டத்தை வளர்த்து அதைச் சுற்றி இருந்துகொண்டு அதில் நெய்யை ஊற்றிக்கொண்டு ஓதி வருகிறார்களாம். நெருப்பு வளர்த்துக் கொண்டு அது ஓதப்படுவதால்தான் அதற்கு “”நாரிய்யா” என்று பெயர் வந்ததாக ஒரு மலேசியா நண்பர் ஒருவர் நம்மிடம் கூறினார். (மலேசியா நண்பர்கள் இதைப் பற்றிய உண்மை விபரங்கள் எழுதுவதை வரவேற்கிறோம்.

இந்த தகவல் உண்மையாக இருக்குமே யானால், பிற இனத்தவர்கள் அக்னி பூஜை நடத்துவதைப் பார்த்து அதேபோல் இங்கே யும் சிலர் திட்டமிட்டு உருவாக்கி விட்ட னர். மாபெரும் பாதகச் செயலை உரு வாக்கி விட்டனர் என்பது தெளிவாகும்.

ஆக இந்த “ஸவாத்துன்னாரிய்யா’ என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதால் அது முதல் குற்றம். அதற்கு (மிகப்) பெரும் எண் ணிக்கையை நிர்ணயம் செய்தது இரண்டா வது குற்றம் ஆகின்றது. அதற்கு உலக நோக்கம் கற்பிக்கப்பட்டது மூன்றாது குற்றம். அதன் பின்னணியில், நெருப்புக் குண்டம் வார்க்கப்படுவதை ஏற்படுத்தி அதற்கு “நாரிய்யா’ என்று பெயர் சூட்டியது உண் மையானால் அது நான்காவது மாபெரும் குற்றம்.இத்தகைய பித்அத்தான சொற்றொ டர் களைச் சொல்வதால் நன்மை கிடைப் பதற்கு பதிலாக தீமைதான் ஏற்படும். ஏனெ னில் நபி(ஸல்) அவர்கள் எல்லா பித்அத்க ளும் வழிகேடு என்று சொல்லி இருக்கின் றார்கள். (புகாரி)
இவை எல்லாவற்றுக்கும் மேலாக “ஸலவாத்துன்னாரிய்யா”வின் பொருளும் குர்ஆன், ஹதீஃதுகளின் வழிகாட்டுதலுக்கு முரண்படுகின்றது.

இன்ஷா அல்லாஹ் அதை அடுத்த இதழில் அலசுவோம்….

**********************************************************************************

சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

மார்ச் மாத தொடர்ச்சி….

அவர்களிடம் “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) நீங்கள் செய்துகொண்டிருந்த (நற்) கருமங்களுக்காகச் சுவனபதிக்குள் நுழையுங்கள்” என்று அவ்வானவர்கள் சொல்வார்கள். (16:32)

அவர்களிடம் வானவர்கள் ஒவ்வொரு தலைவாசல் வழியாகவும் வந்து உங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக என்று வாழ்த்துக் கூறு வார்கள். (13:23,24)

அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களது முகமன் சலாம் சாந்தி என்பதாகவே இருக்கும். (33:44)

சுவர்க்கத்தில் சலாம், சலாம், சாந்தி, சாந்தி என்ற சொல்லைத் தவிர (வேறெதை யும் அவர்கள் செவியேற்கமாட்டார்கள். (58:26)
கருணை மிக்க இறைவனிடமிருந்து “சலாம், சாந்தி எனும் வாழ்த்துக்கூறப்படும். (36:58)

அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சுவர்க்கத்தினுள் நுழைவார்கள்.

“அத்ன்’ எனும் நிலையான சுவர்க்கச் சோலைகளுக்குள் இவர்களும் இவர்களுடைய பெற்றோர், துணைகள், வழித்தோன்றல்கள் ஆகியோரில் நல்லவர்களும் “நுழை வார்கள்’ அவர்களிடம் வானவர்கள் ஒவ்வொரு தலைவாசல் வழியாகவும் வருவார்கள். அந்த வானவர்கள் “நீங்கள் பொறுமை காத்ததன் பலனாக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக) மறுமையின் முடிவு உங்களுக்கு நல்லதாகிவிட்டது” என்று வாழ்த்துக் க

“அத்ன்”’ என்பது சுவர்க்கத்தில் உள்ள ஒரு நகரமாகும் அதில் இறைத்தூதர்களும் உயிர்த்தியாகிகளும் நல்வழி பெற்ற தலை வர்களும் இருப்பார்கள். அந்த நகரைச் சுற் றிலும் சோலைகள் நிறைந்திருக்கும். (ஸஹ்ஹாக் (ரஹ்) தஃப்சீர் இப்னு கஸீர் 4:886)

நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங் கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும் 43:70)

ஏனென்றால் அவர்கள் சுவர்க்கத்தில் அவர்களின் மனைவிமார்களாவார்கள் என்று ஹுதைபா(ரழி) அவர்கள் தனது மனைவிக்குக் கூறினார்கள்.  (சில்சிலதுல் அஹாதீத்:1281)

சுவர்க்கத்தினுள் முதலாவதாக நுழை பவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே சுவர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது ஆள் நானே ஆவேன் என்று அல் லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள். (அனஸ்(ரழி) முஸ்லிம்:332, முஸ்னத் அஹ்மத்)

நானே சுவர்க்கத்தின் வாசலை முதன் முதலில் தட்டுபவன் ஆவேன் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். (அனஸ்(ரழி) முஸ்லிம்: 331, தஃப்சீர் இப்னு கஸீர்: 7:967)

மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் மறுமை நாளில் சுவர்க்கத்தின் தலைவாசலுக்குச் சென்று அதைத் திறக்குமாறு கோருவேன் அப்போது அதன் காவலர் “”நீங்கள் யார்” என்று கேட்பார் நான்தான் “”முஹம்மத்” என்பேன் அதற்கு அவர் “”உங்களுக்காகவே திறக்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள் ளேன். உங்களுக்கு முன்னர் வேறு யாருக்கா கவும் சுவர்க்கவாசலை நான் திறக்கலாகாது எனப் பணிக்கப்பட்டுள்ளேன் என்று கூறுவார் என்று (அனஸ் பின் மாலிக்(ரழி) முஸ்லிம்: 333, முஸ்னத் அஹ்மத்)

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித் தார்கள். நபி(ஸல்) அவர்கள் (உலகில்) ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, (இறைவனால் எடுத்துக் காட்டப்பட்டு) “சுவர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்து (விட்ட) பிறகு இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூதரின் உயி)ரும் கைப் பற்றப்படுவதில்லை’ என்று கூறுவார்கள்.

பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, தமது தலையை என்னுடைய மடி மீது வைத்திருந்த நிலையில் சிறிது நேரம் மயக்கமுற்றார்கள். பிறகு மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கிய அவர்களின் பார்வை நிலை குத்தி நின்றது. பிறகு “இறைவா! (சுவர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று சொன்னபோது நான் (சுவர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்துவிட்டார்கள்) இனி அவர்கள் நம்முடன் உயிர் வாழ் வதை விரும்பவில்லை. நம்முடன் உலகில் இருப்பதைத் தேர்ந்தெடுக்கவில்லை (மறுமைப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டார்கள்) என்று (மனதுக் குள்) கூறிக்கொண்டேன், (அவர்கள் ஆரோக்கியமாக இருந்தபோது “இறைத் தூதர்கள் இறக்கும் முன் இம்மை அல்லது மறுமை இரண்டிலொன்றைத் தேர்வு செய்துகொள்ள வாய்ப் பளிக்கப்படுவார் கள்’ என்று) நம்மிடம் அவர்கள் கூறிய சொல் இதுதான் என அப்போது நான் அறிந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை “இறைவா! (சுவர்க்கத்தில்) உயர்ந்த தோழர் களுடன் (என்னையும் சேர்த்தருள்)’ என்பதாகவே இருந்தது. (புகாரி: 4348,4347, 4463, 6509)

சுவர்க்கத்தினுள் முதலாவதாக நுழைபவர்களின் அழகு :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சுவர்க்கத்தில் முதாலவதாக நுழையும் அணியினரின் முகங்கள் பெளர்ணமி இரவில் ஒளிரும் பூரண சந்திரனைப் போன்று தோற்றமளிக்கும் என்று (அபூ ஹுரைரா(ரழி), புகாரி: 3245,3246,3254, 3327, முஸ்லிம்: 5450, 5452, திர்மிதி: 2460, தஃப்சீர் இப்னு கஸீர்: 7:968,969)

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திர னைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின் தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக் கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாச மாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர் களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கி டையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் “ஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கை யரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும், சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரி: 3254)

அடுத்து முதன்மையாக நுழைபவர்கள் ஏழை முஹாஜிர்கள் :

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத் தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்தி ரத்தைப் போன்று (பிரகாசமாகவும், அழகாகவும்) இருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா(ரழி), புகாரி: 3245,3246,3254, 3327, முஸ்லிம்:5450, 5452, திர்மிதி:2460, தஃப்சீர் இப்னு கஸீர்: 7:968,969)

சுவர்க்கத்தில் நுழையும் குழுவினரில் முதன்மையானவர்கள் ஏழை முஹாஜிர்கள் ஆவர் அவர்களுக்கு எல்லைகள் மூடப்படும். உலக பிரச்சினைகளில் கேடயமாக்கப்படு வார்கள். அதற்குச் செவிசாய்த்து அடிபணிப வர் உலக ஆசை ஏதேனும் இருந்தால் அதை அவர்கள் மரணிக்கும் வரை நெஞ்சில் புதைத்துக் கொண்டு அவற்றை நிறைவேற்ற இயலாமையே இறந்து போகின்றார். அதற் காக அல்லாஹ் மறுமை நாளில் சுவர்க்கத்தை அழைப்பான் அது தனது முழு அலங் காரத்துடனும் எழிலுடனும் வரும். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ் வானவர் களிடம் எனது இன்ன அடியார்களிடம் நீங்கள் சென்ற முகமன் கூறுங்கள் என்பான். அப்போது வானவர்கள் வந்து அல்லாஹ்வுக்குச் சிரைவணக்கம் செய்து எங்கள் இறைவா! நாங்கள் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டு உனது வானத்தில் வசிப்பவர்கள்.

இரவு பகலாக உன்னையே போற்றிப் புகழ்ந்து துதித்துக் கொண்டும் இருப்பவகள். ஆனாலும் எங்களை விட மேலாக நீ தேர்ந்தெடுத்துள்ள இவர்கள் யார்? என்று கேட்பார்கள். அதற்கு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் “இவர்கள் எனது வழியில் போர் புரிந்து, எனது வழியில் துன்புறுத் தப்பட்டு, எனது வழியில் போராடிய, எனது அடியார்கள் ஆவார் என்று கூறுவான். அப்போது வானவர்கள் ஒவ்வொரு தலைவாசல் வழியாகவும் அவர்களிடம் வந்து “நீங்கள் பொறுமை காத்ததன் பலனாக உங்கள்மீது சாந்தி நிலவட்டுமாக மறுமையின் முடிவு உங்களுக்கு நல்லதாகிவிட்டது” என்று கூறு வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரழி) அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 4:883-889)

சுவர்க்கத்தினுள் அடுத்து நுழைபவர்களின் அழகு :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சுவர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினரின் முகங்கள் பெளர் ணமி இரவில் ஒளிரும் பூரண சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள் பின்னர் அவர்களுக்கு அடுத்து வருவோர் விண்ணில் நன்கு ஒளிரும் முத்துத் தாரகையின் தோற் றத்தில் இருப்பார்கள் என்று (அபூஹுரைரா (ரழி), புகாரி: 3245,3246,3254,3327, முஸ்லிம்: 5450,5452, திர்மிதி:2460, தஃப்சீர் இப்னு கஸீர்: 7:968,969) உள்ளே நுழைந்ததும், அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிடைத்த)பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். (83:24) சில கூட்டத்தினர் சுவர்க்கத் தில் நுழைவார்கள். அவர்களின் இதயங்கள் பறவைகளின் இதயங்கள் போன்று இருக் கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அபூ ஹுரைரா(ரழி) முஸ்லிம், 2840, ரி.ஸா.77)

அவர்கள் சுவர்க்கத்தில் தமது தங்குமிடத் தைத் தெளிவாக அடையாளம் கண்டு கொள்வார்கள் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறை நம்பிக்கையாளர்கள் நரகத்தி(ன் பாலத்தி)லிருந்து தப்பி வரும்போது சொர்க் கத்திற்கும், நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் அங்கு உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காகச் சிலரிட மிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக் கொள்வார் கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகிவிடும்போது சுவர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். “முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்களுக்கு சொர்க்கத்தில் உள்ள தமது வசிப்பிடத்தை, உலகத்திலிருந்த அவர்களின் இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு அவரவர் வசிப்பிடத்தை அடைந்து கொண்டதும் (சிதறிய முத்துக்களைப் போன்ற சுவர்க்கத் துப் பணியாளர்களான) ஒவ்வொரு வாலி பச் சிறுவர்களும் (சுவர்க்கத்தில் நுழையும்) தமக்குரியவரை வரவேற்பார்கள்.

எவ்வாறெனில், நீண்ட காலத்திற்குப் பின்னர் திரும்பி வரும் உற்ற தோழரிடம் குழந்தைகள் நடந்து கொள்வதைப் போன்று அந்தச் சுவர்க்கவாசியை அழைத் துக் கொண்டு சுற்றுவார்கள்.”உமக்கு நற் செய்தி நிச்சயமாக அல்லாஹ் உமக்கு இன்னின்ன மரியாதைகளை ஆயத்தம் செய்துள்ளான் என்று கூறுவார்கள்.

அந்தச் சுவர்க்கவாசிக்குரிய (பணிவிடைச்) சிறுவர்களில் ஒருவர் அந்தச் சுவர்க்கவாசியின்”ஹூருல்ஈன்(என்னும் கண்ணழகுக் கன்னியரான அவரது) மனைவியிடம் சென்று உலகத்தில் இருந்த அவருடைய பெயரைச் சொல்லி “இவர்தான் இன்ன மனிதர்” என்று கூறுவார். உடனே அந்தப் பெண்கள் “”நீ அவரைப் பார்த்தாயா? என்று கேட்பார்கள். அந்தச் சிறுவர் “ஆம்(தேன்) என்று பதிலளிப்பார்.

அப்போது அந்தப் பெண்கள் மகிழ்ச்சியால் நிதானமிழப்பார்கள், எந்த அளவிற் கென்றால் அவர்கள் வாயிற்படிக்கே வந்து விடுவார்கள். அங்கு அந்தச் சுவர்க்கவாசி வருவார். அப்போது அவர் வரிசைப்படுத்தப் பட்டுள்ள (சாய்வுத்) தலையணைகள், (நேர்த்தியாக) வைக்கப்பட்டுள்ள குவளை கள், (அழகாக) விரிக்கப்பட்டுள்ள விரிப்புக் கள் ஆகியவற்றுக்கு அருகில் இருப்பார்.

பின்னர் அவர் அந்தக் கட்டடத்தின் அடித்தளத்தைப் பார்ப்பார். அது சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என எல்லா நிறங்களாலுமான முத்துக் கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர் தமது பார்வையை அதன் மேற்கூரையின் பக்கம் உயர்த்துவார். அல்லாஹ் மாத்திரம் அவருக்கு அந்தப் பார்வை ஆற்றலை வழங்கியிராவிட்டால் நிச்சயமாக அவருடைய கண் பார்வை பறிபோயிருக்கக் கூடும் அந்த அளவிற்குஅது மின்னலைப் போன்று இலங்கும்.

பின்னர் “ஹூருல் ஈன்'(எனும் கண்ணழகுக் கன்னியர்)களிலுள்ள தமது மனைவி யரை அவர் பார்ப்பார். பின்னர் சுவர்க்கத்தின் கட்டில்களில் ஒன்றில் சாய்ந்து கொண்டு, “”நமக்கு இதன்பால் வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்லாஹ் (மாத்திரம்) நமக்கு நல்வழி காட்டி யிராவிட்டால் நாம் நல்வழி அடைந்திருக் கவேமாட்டோம் (7:43) என்று கூறுவார். (தஃப்சீர் இப்னு அபூஹாத்திம், முஸன்னஃப் இப்னு அபீஷைபா, தஃப்சீர் இப்னு கஸீர்: 7:973,974)

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவார்கள்:

தமது இறைவனை அஞ்சியவர்கள் கூட்டம் கூட்டமாகச் சுவர்க்கத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவார்கள். இறுதியில் அவர்கள் அங்கு வந்து சேர்ந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்களிடம் அதன் காவலர்கள் “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) நீங்கள் மன நிறைவு அடைந்தீர்கள் நீங்கள் இதில் நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடுங்கள் என்று வாழ்த்துக் கூறும்போது பூரிப்படைந்த அவர்கள் அல்லாஹ்வுக்கே எல் லாப் புகழும் அவன் தனது வாக்குறுதியை எங்களுக்கு மெய்யாக்கினான். மேலும் இந்தப் பூமியை எங்களுக்கு உரிமையாக்கினான். சுவர்க்கத்தில் நாங்கள் விரும்பும் இடங்களில் தங்கிக் கொள்வோம் என்று கூறுவார்கள். (39:73,74)

மேலும் சுவர்க்கத்தின் அந்த நிறைவான நன்மை மகத்தான கொடை, நிலையான அருள், முடியாத பேரரசாட்சி ஆகியவற்றை நேரில் காணும்போது எங்களை விட்டும் கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் நிச்சயமாக எங்கள் இறைவன் மிகவும் மன்னிப்பவனாகவும் மிகவும் நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான். அவன்தான் தனது அருளால் நிலையான இந்த இல்லத்தில் எங்களைத் தங்கவைத்தான், இங்கே எங்களை எந்தத் தொல்லையும் தொடுவதில்லை, இங்கே எங்களை எந்தக் களைப்பும் அணுகுவ தில்லை என்றும் அவர்கள் கூறுவார்கள். (35:34,35)

**********************************************************************************

 

Previous post:

Next post: