சர்வதேச திகதிக்கோடு ஏக இறைவன் இட்ட அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்

Post image for சர்வதேச திகதிக்கோடு ஏக இறைவன் இட்ட அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்

in ஹிஜ்ரி காலண்டர் விமர்சனமும், விளக்கங்களும்

S.M. அமீர், நிந்தாவூர்,இலங்கை

“சர்வதேசத் திகதிக் கோடு” குறித்து; நடுநிலையாளர்கள், சிந்தனையாளர்கள், புத்திஜீவிகள், ஆய்வாளர்கள், அறிவாளர்கள், ஆகியோரின் கவனத்திற்கு;

☪ மக்கள் பெரும்பாண்மையாக வசிக்காத மேற்கத்திய நாடுகளின் முடியும் இறுதிப் பகுதிகளான அமெரிக்கன், சமோவா தீவுகளையும், கிழக்கத்தைய நாடுகளின் ஆரம்பப் பகுதிகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, போன்ற பகுதியை அண்டிய “ஃபிஜி” தீவுகளையும் பிரிக்கும் படியாக; பசிபிக் பெருங்கடலில் இயற்கையாகவே ஏக இறைவனால் போடப்பட்டுள்ள சர்வதேச திகதிக்கோட்டை அண்மைக்காலத்து மனிதன்தான் ஆய்வுகள் பல செய்து கண்டுபிடித்தான். என்பது என்னவோ உன்மைதான்.

என்றாலும் அதற்கும் பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகச் சுற்றுப் பயணம்  மேற்கொண்ட முழு உலகையும் ஆண்ட மன்னர் “துல்கர்னைன் இஸ்க்கந்தர்” சர்வதேசத் திகதிக்கோட்டின் அவ்வழியே சென்றதாக குர்ஆன் கூறுகின்றது. அத்துடன் அங்கு, திகதியும், நாளும், கிழமையும், வாரமும், உலக முஸ்லீம்களின் ஜும்ஆத் தொழுகையும், மாறுவது அல்லாஹ் இந்த மனித சமூகத்திற்கு அளித்துள்ள மாபெரும் அத்தாட்சியுமாகும். இங்கு மன்னர்  “துல்கர்னைன் இஸ்க்கந்தர்” பற்றிக் குர்ஆன் பேசும்போது;

☪ எனவே அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். (18:85) என்பதாக இறைவன் தெரிவிக்கின்றான். இங்கு “வழி” என்பதைக் குறிக்க “சபப்” எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இதனைக்குறித்து;

■ இது (குறிப்பிட்டதொரு) நிலையத்தைக் குறிக்கும் என்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும்.

■ கிழக்கிற்கும், மேற்கிற்கும், இடையிலான (சர்வதேசத் திகதிக் கோட்டுப்) பாதையையும், (அதன்) நிலையத்தையும் குறிக்கும். என்பதாக முஜாஹித் (ரஹ்) அவர்களும்.

■ பூமியிலுள்ள வசிப்பிடங்களையும் (சர்வதேசத் திகதிக் கோட்டின்) அடையாளச் சின்னங்களையும் தேடிச் சென்றார் என்பதாக கத்தாதா (ரஹ்) அவர்களும்.

■ (சர்வதேசத் திகதிக் கோட்டின்) அடையாளம் என்று மய்தர் (ரஹ்) அவர்களும்.

■ முன்பு இருந்த (சர்வதேசத் திகதிக் கோட்டின்) சின்னங்கள் மற்றும் சுவடுகள் என்பதாக சயீத்பின் ஜுபைர் (ரஹ்) அவர்களும், பொருள் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர், 5;510)

ஆக 1440, ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து பரிசுத்தக் குர்ஆன் விரிவுரையில் மகவும் தேர்ச்சி பெற்று “றயீஸுல் முஃபஸ்ஸிரீன்” என்ற சிறப்புப் பெயர் பெற்ற; நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) உட்பட; அவர்களைத் தோழமையாகக்கொண்ட தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள், ஆகிய ஏனைய அறிஞர்களும் தடய விபரமில்லாமல் சர்வதேசத் திகதிக் கோடு குறித்து இவ்வாறு தெளிவாகச் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை.

■ நிச்சயமாக நாம் (துல்கர்னைன் இஸ்க்கந்தராகிய) அவருக்குப் பூமியில் (முழுவதும் ஆட்சி, அதிகாரம், செய்ய) இடம் அளித்தோம். மேலும் அவருக்கு ஒவ்வொரு பொருட்களையும் (அதற்கான இடங்களையும்) அடைவதற்கான வழியை நாம் வழங்கி இருந்தோம். (18:84) அவர் சூரியன் மறையும் இடத்தை அடைந்தபோது அது சேற்று நீரில் மறைந்து கொண்டிருப்பதைக் கண்பார். (18:86) இறுதியில் அவர் சூரியன் உதிக்கும் இடத்தை அடைந்தபோது (வேறு) ஒரு சமூகத்தார் மீது அது உதிப்பதைக் கண்டார். (18:90) ஆக அவர் சூரியன் உதயமாகும் இடங்களையும், அஸ்தமிக்கும் இடங்களையும் சென்றடைந்த காரணத்தினால்தான். “துல்கர்னைன்” (இரு முனைகள் உடையவர். எனும் பெயர் பெற்றார். (தஃப்ஸீர் தபரீ, இஃப்ஸீர் இப்னு கஸீர், 5;507) எனவே;

உலக முஸ்லீம்களுக்கென்று அல்லாஹ் ஏற்படுத்தித்தந்த கிப்லாவிற்கு முன்னர் சூரியன் உதிக்கும் முதல் பகுதியாகவும், கிப்லாவிற்குப் பின்னர் சூரியன் மறையும் இறுதிப் பகுதியாகவும், அவ்விரு பகுதிகளும் சந்திக்கும் சரியான இடமாகவும், இந்த சர்வதேசத் திகதிக் கோட்டுப் பகுதிதான் உள்ளது. என்பது குறிப்பிடத் தக்கதாகும். மேலும் அந்த இடத்தைக் குறிப்பிட்டு உயர்ந்தோன் அல்லாஹ் நெறிநூலான அல்குர்ஆனில்;

☪ இரண்டு கிழக்குகளின், இரண்டு மேற்குகளின், இறைவன் அல்லாஹ்தான். (55:17) என்று குறிப்பிடுகின்றான். மேற்குறிப்பிட்ட இந்த இறை வசனம் எவ்வாறு அந்த சர்வதேசத் திகதிக்கோடு அமைந்துள்ள இடத்திற்குப் பொருந்தும் ?” என்ற கேள்வி எழுவது இயல்பானதே; எனினும்;

பூமியின் நிலவியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு கிழக்கு, ஒரு மேற்கு, என்ற அடிப்டையிலேயே இரு திசைகள் இருப்பதாகத்தான் நாம் படித்துள்ளோம். இருப்பினும்; இரு கிழக்குகளுக்கும், இரு மேற்குகளுக்கும், இறைவன் அல்லாஹ்தான் (ரப்பு, 55:17,) என்று அல் குர்ஆன் கூறுகின்றது. இக்கூற்றானது; பூமியில் ஏதேனும் ஒரு இடத்தில் இரண்டு கிழக்குத் திசைகளும், இரண்டு மேற்குத் திசைகளும், சங்கமித்தால்தான் மேற்படி இறை வசனத்திற்கு நேரடிப் பொருள் இருப்பதாகப் பொருத்தமாக அமையும். இதற்கான தெளிவான விடை குறிப்பாக; இந்த சர்வதேசத் திகதிக் கோட்டுப் பகுதியில் மாத்திரம்தான் உள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால்.

அந்த சர்வதேசத் திகதிக் கோட்டுப் பகுதியின் அருகாமையில் வாழும் மக்களில் ஒரு சாரார் ஒரு கிழமையிலும் மற்றொரு சாரார் வேறொரு கிழமையிலும் இருப்பார்கள். அதாவது ஒரு சாராருக்கு வியாழக் கிழமைக்குரிய சூரியன் அவர்களது கிழக்கில் உதிப்பதையும், மற்றொரு சாராருக்கு வெள்ளிக் கிழமைக்குரிய சூரியன் அவர்களது அதே கிழக்குத் திசையில் உதிப்பதையும் காணலாம். அங்குதான் ஒரு சாராருக்கு வெள்ளிக் கிழமைக்குரிய ஜும்ஆத் தொழுகையும், ஒரு சாராருக்கு வியாழக் கிழமைக்குரிய ளுஹர் தொழுகையும் அருகருகே நடைபெறுகின்றன. இவர்கள் அருகருகே இருந்தாலும் இரு தரப்பாருக்கும் 24, மணி நேரங்கள் வித்தியாசம் உண்டு.

அந்த இரு நாட்டவர்களும் ஒரே சூரியனுக்குக் கீழ் அருகருகே வசித்தாலும் இரண்டு வெவ்வேறு நாட்களுக்குரிய சூரியனின் உதயத்தையும், மறைவையும் அடைந்தவர்களாவர். இதனையே “ரப்புல் மஷ்ரிக்கைனி வரப்புல் மஃரிபைன். (55:17) என்று அல்லாஹ் கிலாகித்துக் கூறுகின்றான். எனவேதான்;

உலக முஸ்லீம்கள் தொழுகைக்காக புனித மக்காவிலுள்ள கஅபாவின் பக்கம் (கிப்லாவிற்காக) முகம் திருப்புங்கள். (2:149, 143, 144, 145, 10:87,) என்ற அல்லாஹ்வின் ஆணைக்கு ஏற்ப மக்காவுக்குக் கிழக்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லீம்கள் தங்களின் தொழுகைக்காக கிப்லாவின் திசையான மேற்கு நோக்கித் தொழுகின்றார்கள். அதேபோல மக்காவிற்கு மேற்கில் அமைந்துள் நாடுகளிலுள்ள முஸ்லீம்கள் தொழுகைக்காகத் தங்களது கிப்லாவின் திசையாகக் கிழக்குத் திசையை நோக்கித் தொழுகின்றார்கள்.

கிப்லாவை இலக்காகக் கொண்டு அதனை மைய்யப்படுத்தி இவ்வாறு முழு உலக முஸ்லீம்களும் அணி அணியாக வரிசையாக நிற்பதை உலகப் படத்தை கவனத்தில் கொண்டால் அவ்வாறு மேற்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப் பகுதியும், கிழக்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப் பகுதியும் சங்கமிக்கும் மிகப் பொருத்தமான இடமாக இந்த உலகத் திகதிக் கோட்டுப் பகுதியே சிறப்பாக அமைந்துள்ளது. தவிர

உலகின் வேறு எப்பாகத்திலும் இவ்வாறு பொருத்தமான இடம் அமையப்பெறவில்லை என்று சொல்லும் அளவிற்கு இவ்விடம் ஏக இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இடமாகத் திகழ்கிறது. இந்த சர்வதேசத் திகதிக் கோட்டை மனிதன் கண்டுபிடிப்பதற்காக;

அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்றாகிய “ஹாதி” வழிகாட்டுபவன், (22:54, 25:31,) என்றும் மற்றும் ஒன்றான; “நஸீர்” உதவுபவன், (2:107, 120, 4:75, 123, 173, 8:40, 9:116, 22:78, 29:22, 33:17, 42:31, 25:31) என்னும் சிறப்புத் திருநாமங்களுக்கு அமைவாகப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து ஏக இறைவன் சர்வதேசத் திகதிக் கோட்டை ஏற்படுத்தினான். அவனது வழிகாட்டல், அகத்தூண்டல், ஆகிய துணைகொண்டு மனிதன் அதனைக் கண்டுபிடித்தான்.

☪ ஒரு நாளின் ஆரம்பப் பகுதியாகவும், முடியும் பகுதியாகவும் இலகுவாக கணக்கிடுவதற்கு ஏதுவாக அந்த இடத்தை மக்கள் பெரும்பாண்மையாக வசிக்காத பெருங் கடல் பகுதியாக அமைத்து இறைவன் நமக்கு இலகுவாக்கியுள்ளான்.

☪ அவ்வாறே அந்த உலகத் திகதிக் கோட்டுப் பகுதியில் சூரியன் அதன் உச்சியில் (அதாவது அங்குள்ளவர்களின் தலைக்கு மேல்) நன்பகல் நேரம் 90 டிகிரி அளவு உச்சியில் வரும்போது நமது கிப்லாவான மக்காவில் உள்ள கஅபாவின் பகுதிகள் அங்குள்ள உள்ளூர் நேரப்படி சுமார் 3.00, AM அதிகாலை நேர அளவில் அதாவது தஹஜ்ஜத் நேரத்தில் இருந்து ஃபஜ்ர் நேரத்தை நெருங்கி இருக்கும், அதன் அன்மையிலுள்ள சஊதி அரேபியாவின் ஏனய நகரங்களான; அல்கோபார், தஹ்ரான், தம்மாம், அல் ஹத்திஃப், ஆகியன – 03:31, AM அல் ஜவ்ஃப், 03:34, AM அல் ஹஃபுஃப், 03:36, AM அல் பத்தின், 03:45, AM அல் ஜுபைல், 03:48, AM ரியாத், 03:49, AM  அல் முஷாஹிமியா, 03:51, AM அரார், 03:54, AM அல் ஹுரய்யாத், 04:08, AM பத்ர், 04:16, AM அல் பஹா, 04:21, AM அல் ஹண்ஃபுதாஹ், 04:24, AM ஜித்தா, 04:27, AM எனும் இடங்களும் அதிகாலை நேரத்தை அடையும் அளவுக்குப் பொருத்தமாகவே இறைவன் அவ்விடத்தை அமைத்துள்ளான்.

☪ எனவே பரிசுத்த குர்ஆனின் போதனைகளின் படியும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படியும் முழு உலக முஸ்லீம் மக்களும் தமது கிப்லாவாகிய கஅபாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது மாத்திரமல்ல; குறிப்பிட்ட அந்த நாளின் ஆரம்பத்தைதையும்  தினமும் மக்காவின் “ஃபஜ்ரில்” இருந்து ஆரம்பித்து குர்ஆன் கூறுவது போன்று “நாம் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், நபி (ஸல்) அவர்கள் நமக்கு சாட்சியாளராகத் திகழ வேண்டும். (2;143) என்பதற்காகவும். நீண்ட ஆய்வுளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஹிஜ்ரிக்கலண்டர் அனுபவ ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும், குழப்பமில்லாது நிறைந்த மனசுக்கு மிகப் பொருத்தமாகவே இருக்கிறது.

☪ இதற்கு மாற்றமாக உருண்டை வடிவிலுள்ள உலகத்தை ஆரஞ்சுப் பழமாகக் கற்பனை செய்துகொண்டு, அதன் காம்புதான் “கஃஅபா” என்பதாகச் சொல்லிக்கொண்டு, அவ்விடத்தில்தான் நாளின், கிழமையின், வாரத்தின், கிப்லாவின், மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அவ்வாறே நாம் செயல்ப்படுத்தப்போனால்;

■ மனிதர்கள் ஏக இறைவனாம்  அல்லாஹ்வைத் தூய்மையாக வணங்கி வழிபாடுகள் செய்வதற்காக உலகின் முதன் முதலாவதாக அமைக்கப்பட்டதும் Bபரக்கத்துப் பொருந்தியதும் பாக்கியம் மிக்கதும் அகில உலக மக்கள் யாவருக்கும் நேர்வழி காட்டியானதாகவும் பேரொளியாவும் உள்ள புனித கஃஅபா ஆலயம் அமைந்துள்ள #இடம்#  (03:96, புகாரி- 104, 1349, 1587, 1832-1834, 2090, 3189, 3366, 3425, 4295, 4313, முஸ்லிம்-903, 904, 2632, 2633, திர்மிதி, இப்னுமாஜா, அபூதாவூத், நஸயி, முஸ்னத் அஹ்மத், )

■ ஆரம்ப நாள் முதலே இறையச்சத்தின் அடிப்படையில் இறைதூதரால்  நிர்மாணிக்கப்பட்ட புனிதமான ஹரம் பள்ளிவாசல் அமைந்துள்ள # இடம் # (09:108, முஸ்லிம்-2701,)

■ முதல் மனிதரும் நபியுமாகிய ஆதம் (அலை) அவர்கள் முதன் முதலாக நிறுவிய புனிதப் பள்ளிவாசல் அமைந்துள்ள # இடம் # (புகாரி 3425,  3366, ஃபத்ஹுல் பாரீ உம்தத்துல் காரீ)

■ வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலே ஏக இறைவனாகிய அல்லாஹ்வால் புனிதப்படுத்தப்பட்ட நகரங்களின் தாயாகிய “ உம்முல் குரா “ எனும் புனித   நகரம் ( 06:92 ) அமைந்துள்ள # இடம் # ( புகாரி-1834, 1349, )

■ ஏக இறைவனாகிய அல்லாஹ் புனிதப் படுத்திய காரணத்தால் மறுமை நாள் வரை அது புனிதமானதாகவே இருக்கும் என்று இறைதூதர் (ஸல்) அவர்களால்  வாக்களிக்கப்பட்ட புனித நகரம் அமையப்பெற்ற # இடம் # ( புகாரி -1834, 1833, )

■ அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கூட அவ்விடத்தில்  ஒரு பகலின் சிறிது நேரமே போர் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதும் அது தவிர அவர்களுக்கு முன்னரோ அவர்களுக்குப் பின்னரோ வேறு  எவருக்குமே போர் செய்வதற்கு அனுமதி வளங்கப்படாத புனித ஹரம் பள்ளிவாசல் அமையப்பெற்ற நகரம் அமைந்துள்ள # இடம் # (புகாரி-1834, 1833, 1349, 2090, 1587, 3189, 4313, முஸ்லிம் , 2632, அபூதாவூத், நஸயி, முஸ்னத் அஹ்மத் )

■ சுவர்க்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புனித “ ஹஜ்ருல் அஸ்வத் “ எனும் கறுப்பு நிறத்திலுள்ள கல் அமையப்பெற்ற புனித கஃபா எனும் ஆலயம் அமையப்பெற்ற # இடம் # ( திர்மிதி, நஸயீ, அஹ்மத், புகாரி-1597, 1603, 1605–1613, )

■ 01- மக்கா, 02- பக்கா, 03 – அல் பைத்துல் அத்தீக் ( தொன்மை ஆலயம் ) 04 – அல் பைத்துல் ஹராம் ( புனித இல்லம் ) 05 – அல் பலதுல் அமீன் ( பாதுகாப்பான நகரம் ) 06 – உம்முல் குரா ( தாய் கிராமம் ) 07 – அல் காதில் ( தூய்மையாக்கக் கூடியது ) ஏனெனில் மக்கா நகரம் பாவங்களிலிருந்து மனிதர்களைத் தூய்மைப் படுத்துகிறது 08 – அல் முகத்தஸா ( தூய்மையாக்கப்பட்டது ) 09 – அல் ஹாத்திமா ( பாவங்களைச் சிதைக்கக் கூடியது ) 10 – அர்ரஅஸ் (தலை) 11 – அல் பல்தா ( ஊர் ) 12 – அல் பின்யா ( கட்டடம் ) 13 – கஅபா ,என பல சிறப்புப் பெயர்கள் அமையப்பெற்ற புனிதஸ்தலம் உள்ள # இடம் # ( தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 02, பக்கம் 162, )

■ முளு உலகிலுமுள்ள நகரங்களில் முதன்மை பொருந்தியதாகவும் மற்றெல்லா நகரங்களுக்கும் தாய் நகரமாகவும் அல்லாஹ் உலகளவில் அந்தஸ்தால் உயர்த்தி உள்ள புனித நகரம் உள்ள # இடம் # ( 42:07, )

■ பொதுவாகவே வணக்க வழிபாட்டுத் தலங்களில் தான் குலம் கோத்திரம் சாதி இனம் பிரதேசம் என முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிற காலகட்டத்தில் அதன் அருகில் வசிப்பவர்களுக்கும் தூரத்தில் வசிப்பவர்களான உலக மக்கள் அனைவருக்கும் அரபி அஜமி என்ற வேறுபாடின்றி சமூக ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும், தகுதி அடிப்படையிலும், அனைவருக்கும்  பொதுவான சம உரிமை வளங்கப்பட்ட புனித ஆலயம் அமையப்பெற்ற # இடம் # (22:25, 02:125)

■ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகின் எப் பகுதியில் இருந்தாலும்  அனைத்துப் பகுதிகளிலுமுள்ள முழு உலக முஸ்லீம் மக்களும் தொழுகையின்போது தமது முகத்தைத் திருப்ப வேண்டிய கிப்லாவாக உருண்டை வடிவான பூமியின் மிகப் பொருத்தமான  மத்திய ரேகைப் பிரதேசத்திலுள்ள மையப் பகுதியின் புனிதப் பள்ளிவாசல் அமைந்துள்ள # இடம் # (02:144,149,150 ,புகாரி- 403, 4490, )

■ கிப்லாவாக இருப்பது போன்றே முழு உலக முஸ்லீம்களும் நாளின் ஆரம்பத்தை மக்காவின் Fபஜ்ர் நேரத்திலிருந்தே ஆரம்பித்து மற்ற மனிதர்களுக்கு சாட்சியாளர்களாகவும்  நபி (ஸல்) அவர்கள் நமக்கு சாட்சியாளராகவும் வரப் பொருத்தமான முறையில் ஏக இறைவனால் இயற்கையாகவே அடையாளமிடப்பட்ட சர்வதேசத் திகதிக்கோட்டை அடிப்படையாகக் கொண்டு அன்றைய சூரியன் 90 டிகிரி  உச்சியில் இருக்கும்போது சர்வதேசத்திகதிக்கோடு அதன் நேரே வரும்போது ஒவ்வொரு நாளின் ஆரம்பமும் முதன் முதலாக மக்காவே Fபஜ்ரை அடையக்கூடியதாகவும் அதன் பிறகே உலகின் மற்றவர்கள் Fபஜ்ரை அடையக்கூடிய  பிரதேசமாகவும் அல்லாஹ் அமைத்துள்ள # இடம் # (02:143,)

■ நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புனித கஅபாவைப் புனர் நிர்மானம் செய்தபோது அவர்கள் ஏறி நின்று கட்டிய உயரமான கல்லில் பதிந்துள்ள அவர்களின் இரு பாதங்களின் காலடித் தடங்களுடன் இன்றும் கஅபாவின் வளாகத்தில் காணப்படும் “மகாமு இப்ராஹீம் “ எனச் சிறப்புப் பெயர் பெற்ற கல் அமைந்துள்ள
# இடம் #  ( 02:125,03:96, 97,  திர்மிதி , இப்னுமாஜா , முஸ்னத் அஹ்மத், பைககீ )

■ நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாரான ஹாஜர் (அலை) அவர்ளின் தியாக வரலாற்றின் நினைவுச் சின்னமாக “ ஸம் “ ஸம் “ என்று அழைக்கக்கூடிய அற்புதமான வற்றாத நீரூற்று அமைந்துள்ள # இடம் # ( புகாரி – 3362, 3364, 3365, 23:68, 1636, )

■ அறியாமைக் காலத்திலிருந்தே ஒருவர் கொலைக் குற்றம் புரிந்துவிட்டுத் தமது கழுத்தில் ஒரு கம்பளித் துணியை வைத்துக் கொண்டு உடனே புனித ஹரமுக்குள் நுழைந்துகொண்டாலும் அவ்விடத்தில் கொலையுண்டவரின் நெருங்கிய உறவினர் களில் எவரேனும் அக் கொலையாளியைக் கண்டுகொண்ட போதிலும் அந்தக் கொலையாளி தாமாகவே ஹரத்திலிருந்து வெளியேறும்வரை அவருக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டார் அந்தளவுக்கு அதில் நுளைந்தவருக்கு “ அபயம் “  அளிக்கும் புனிதஸ்தலமாக அமைந்த # இடம் # ( 02:125, 03:97, 05:97, 14:35, 28:57, 29: 67, 105: 01–05, 106:3, 4, 6, )

■ அதனால்தான் போரிடும் நோக்கத்தில் அவ் எல்லைக்குள் ஆயுதம் கொண்டு செல்ல மனிதர்களில் எவருக்கும் அனுமதி இல்லை என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறிச்சென்ற புனிதமான அபயமளிக்கக் கூடிய பிரதேசம் அமைந்த # இடம் # (முஸ்லிம் – 2636, முஸ்னத் அஹ்மத் )

■ எந்த சமுதாயத்தாரெல்லாம் அழிக்கப்பட்டார்களோ அந்த அந்தச் சமுதாயத்தின் நபிமார்கள் ஒவ்வொருவரும் தமது வசிப்பிடத்தை விட்டும் புறப்பட்டுச் சென்று  அங்கு தங்கியபோது அபயமழிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட புனித பூமியுள்ள # இடம் # ( தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் – 03: பக்கம் 818, முஸ்னத் அஹ்மத் )

■ நபி ஸாலிஹ் ( அலை ) அவர்களின் சமுதாயத்தினருக்குத் தண்டனையும் வேதனையும் வந்தபோது வானத்திலிருந்து அவர்களுக்குக் கல்மாரி பொழிந்தது இடி முழக்கம் மின்னல் தாக்கியது கடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது அதனால் ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டார்கள் அவர்களில் சிறியவரோ பெரியவரோ ஆணோ பெண்ணோ எவருமே தப்பவில்லை

எனினும் அவர்களில் “ அபூ ரிஃகால் “ எனப்படும் ஒருவர் அப்போதைய தண்டனைக்கு ஆளாகாமல் தப்பினார் அது எப்படியெனில் அவர் தமது சமுதாயத்தாருக்குத் தண்டனை இறங்கிக் கொண்டிருந்த வேளையில் மக்காவிலுள்ள அபயமழிக்கப்பட்ட புனித பிரதேசத்தில் தங்கியிருந்தார் அதனால் அவருக்கு அப்போது எதுவும் நேரவில்லை

இருப்பினும் ஒருநாள் அவர் அபயமளிக்கப்பட்ட புனித ஹரம் எல்லையிலிருந்து வெளியேறி சாதாரண பகுதிக்குள் வந்தபோது வானிலிருந்து வந்த ஒரு எரி கல் அவர்மீது விழுந்து அவரது உயிரைப் பறித்த வரலாற்றைக் கொண்ட அபய பூமி அமைந்த # இடம் # (தஃப்சீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் -03: பக்கம்- 816,

■ அபயமளிக்கப்பட்ட அப்பிரதேசங்களின் வாசல்களில் காவலுக்காக வானவர்கள் இருப்பார்கள் அங்கே தஜ்ஜால் கூட நுழைய முடியாது என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அபயமளிக்கப்பட்ட பிரதேசம் உள்ள # இடம் # (புகாரி-1881,)

■ அடக்கு முறையாளர்கள் எவரும் புனித இறையில்லமாம் கஅபாவை
இதுவரை வென்றதில்லை அதனாலேயே அதற்கு “ விடுதலை பெற்ற “ (அல் பைத்துல் அத்தீக் ) என்று இறைவனால் சிறப்புப்  பெயர் சூட்டப்பட்டது என்று அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன் அறிவிப்புச் செய்த புனித பிரதேசம் உள்ள # இடம் # ( ஜாமியுத் திர்மிதி , தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 06: பக்கம் -65,)

■ அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் மீது போர் தொடுப்பதற்காக ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் மக்கா வந்தபோது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் வந்து இப்னு ஸுபைர் அவர்களே ! நீங்கள் புனித ஹரம் எல்லைக்குள் அனியாயமாகக் குற்றம் புரிவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன் ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷ் குலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இந்த ஆலயத்தின் புனிதத்தைக் கெடுத்துக் குற்றம் புரிவார் அவருடைய பாவங்களை ஒட்டுமொத்த மனிதர்கள் ஜின்கள் ஆகியோரின் பாவங்களோடு மதிப்பிட்டால் அவற்றைவிட அவருடைய பாவங்களே எடை கூடியதாக இருக்கும் என்று கூற நான் செவியுற்றுள்ளேன் எனவே நீர் அவராக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வீராக என்று கூறி நபித்தோழர்களால்  எச்சரிக்கப்பட்ட புனித ஆலயம் அமைந்துள்ள # இடம் # ( முஸ்னத் அஹ்மத் தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் -06:பக்கம் -53, )

■ அபயமளிக்கப் பட்ட அந்த புனித பூமியில் வேட்டைப் பிராணிகளை வேட்டையாடக் கூடாது  நிழலில் படுத்திருக்கும் அவற்றை எளுப்பிவிட்டு விரட்டக் கூடாது இரத்தம் சிந்தக் கூடாது என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட புனித பூமி அமைந்த # இடம் # ( புகாரி- 1833, 1349, 2090,புகாரி – பாகம் – 02 பக்கம் 528, பாடம் -10,)

■ அப் புனித பூமியில் உள்ள எல்லைகளுக்குள்  மரக்களை வெட்டக் கூடாது அங்குள்ள முட்களை வெட்டக் கூடாது அங்குள்ள புற் பூண்டுகளைக் கூடக் களையக் கூடாது கீழே வீழ்ந்து கிடக்கும் பொருளை எடுக்கக் கூடாது என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட புனிதப் பிரதேசம் அமைந்த # இடம் # ( புகாரி – 1349, 1833, 1834, 2090, )

■ ஏக இறைவனை தூய்மையாக வழிபடுவதற்காக முதன் முதலில் நிர்மானிக்கப்பட்ட  பரிசுத்தமான ஹரம் எல்லைக்குள் உடலாலும் உள்ளத்தாலும் அசுத்தமான இணைவைப்பாளர்கள் இன்ன ஆண்டிற்குப் பிறகு நுளைய முடியாது என்று அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் கண்டிப்பான உத்தரவிட்டு இன்றுவரை நடைமுறையில் இருத்துவரும் புனித பூமி அமைந்த # இடம் # (09:28, புகாரி – 1369, 1622, 3177, 4363, 4655, 283, 285, மஸ்லிம் 607க்கு முந்தியது தஃப்ஸீர் தபரீ, முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக் , )

■ உலக  மனிதர்களில் மிகவும் சிறந்த புனிதர்களான அதிக  இறைதூதர்களின் பாதங்கள் பட்ட வணக்கங்கள் புரிந்த நடமாடித் திரிந்த புனித பூமி அமையப் பெற்ற # இடம் #

■ இறுதி முத்திரை பதிக்கப்பட்ட இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த சிறப்பு மிக்க பிரதேதசம் உள்ள # இடம் # (திர்மிதி , பைககி , தஃப்ஸிர் தபரீ , முஸன்னஃப் அபீஷைபா , இப்னு ஹிஷாம் , & ரஹீக் அல் மக்தூம் -பக்கம் -79, புகாரி – 3541, 3534, 3535, 04:79, 170, 07:158, 09:33, 10:57, 108, 14:52, 21:107, 22:49, 25:01, 33:40 34:28, 62:03,)

■ “இறைவா ! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி  வைப்பாயாக ! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக “ என்று  இறை தூதர் இப்ராஹீம் ( அலை ) அவர்கள் அருள் வளம் வேண்டிப் பிரார்த்தனை செய்த சுபிட்சம் நிறைந்த பிரதேசமாகவுள்ள # இடம் # (02:126,)

■ அதிக நன்மையை எதிர்பார்துப் புனித பிரயாணம் செல்வதற்குப் பொருத்தமான புண்ணியஸ்தலங்ளில் முதன்மை அந்தஸ்தை அடைந்த ஆலயம் அமையப்பெற்றுள்ள # இடம் # ( புகாரி – 1189, 1197, முஸ்லிம், அபூதாவூத் , )

■ ஒரு தொழுகை தொழுவது மற்றய பள்ளிவாசஸ்களில் ஒரு இலட்சம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறந்தாகும் என்று இறைதூதர் (ஸல்) அவர்களால் வாக்களிக்கப்பட்ட புனிதஸ்தலம் அமைந்துள்ள    #இடம் # (அஹ்மத் , இப்னு ஹிப்பான் )

■ அந்தப் புனிதமான கஅபாவைத் தவாபு செய்வதும் தொழுகையைப் போன்றதே ஆனால் அல்லாஹ் தவாபின் போது பேசுவதை ஆகுமாக்கியுள்ளான் அப்பொழுது பேசுபவர் நல்லதையே பேசுவாராக என்று இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மேன்மைப்படுத்திய ஆலயம் அமைந்துள்ள # இடம் # (திர்மிதி , தாரகுத்னி , )

■ திரும்பத் திரும்ப மக்கள் ஒன்று கூடும் இடமாகவும் காலம் முழுக்கக் கிடந்தாலும் தமது ஆசைகள் நிறைவேறாத நிலையில் மீண்டும் மீண்டும் சென்று மறுபடியும் மறுபடியும் கண்டுவர வேண்டும் என்று ஆசைகொள்ளக் கூடிய # இடம் # ( 02:125, புகாரி பாகம் 05: பக்கம் 111,பாடம் 09, சிறு குறிப்பு 21, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 01: பக்கம் 400, )

■ இறுதியில் அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்ய நாடிச் சென்ற சந்தர்ப்பத்தில் மக்காவின் கடைத்தெருப் பகுதியான “ அல்ஹஸ்வரா “ என்ற இடத்தில் நின்று கொண்டார்கள் பின்பு மக்காவை நோக்கித் திரும்பி நின்றவாறு அல்லாஹ்வின் மீது ஆணையாக

அல்லாஹ் படைத்த பூமியில் நீயே மிகச் சிறந்த பகுதியாகும் அல்லாஹ்வுக்கும் மிகவும் பிடித்தமான பகுதியும் ஆகும் உன்னிலிருந்து நான் மட்டும் பலவந்தமாக வெளியேற்றப் படாதிருந்தால் நான் இங்கிருந்து வெளியேறியிருக்கவே மாட்டேன் என்று கண்கலங்கிக் கூறினார்கள் அப்படிப்பட்ட பிரிய முடியாத புனிதமான ஆலயம் அமைந்த # இடம் # ( 08:05, 30, 09:40, இப்னு அப்பாஸ் (ரலி) ,திர்மிதி , இப்னுமாஜா , முஸ்னத் அஹ்மத் , தாரமி, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம் ,தப்ஸீர் இப்னு கஸீர் பாகம் ,02:166,08;456,)

■ “எஸ்ரிப்” என்று பெயர் கூறப்பட்டு வந்த நகரம் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள்  உள் நுளைந்த நாளிலிருந்து மதீனத்துர் ரஸீல் – இறைதூதரின் பட்டணம் – என்று அழைக்கப்பட்டு அதையே சுருக்கமாக இன்று அல் –  மதீனா “ என்று கூறப்படுகின்ற இடத்தை சென்றடைந்த பின்னர் புனித மக்காவையும் அதன் ரம்மியமான சூழலையும் ஆழ்மனசு எண்ணத்தில் கொண்டு  பிலால் ( ரலி) அவர்கள் மனமுருகி

இத்கிர் எனும் ஒருவகை நறுமணப் புல்லும்
ஜலீல் எனும் ஒருவகைக் கூரைப் புல்லும்
என்னை வளைத்துச் சூழ்ந்திருக்க
அந்தப் புனிதமான மக்காவின் பள்ளத்தாக்கில்
ஒரு இரவுப் பொழுதையேனும்
அங்கே நான் கழிப்பேனா ?

“ மஜின்னா “ எனும்
மக்காவின் இனிப்புச் சுவையின் மதுரமான நீரை
ஒரு நாள் ஒரு பொழுதாவது
நான் பருகுவேனா ?

மக்கமா நகரின் ஷாமா தஃபீல் மலைகள்
இனி எப்போதாவது என் கண்களுக்குத் தென்படுமா ?

என்று கண்கலங்க நின்று  பாடினார்களே அந்தவுக்கு மனசைவிட்டு அகலாத இனிய  நினைவுகளைக் கொண்ட மக்காவின் புனிதஸ்தலம் அமைந்த # இடத்தை # (புகாரி – 3926, 1889, 5654, 5677, 7231, இப்னு ஹிஷாம் , ரஹீக் அல் மக்தூம் – பக்கம் – 216,)

☪ மனித நடமாட்டம் மிகவும் குறைந்த; சர்வதேசத் திகதிக் கோட்டின் இருவேறு துருவங்களாகவுள்ள அமெரிக்கன் “சமோவா” மற்றும் “ஃபீஜி”  தீவுகளின் நிலைப்பாட்டை இவ்விடத்தில் கொண்டுவந்தால்; என்ன நடக்கும் சற்று சிந்தனை செய்து பாருங்கள்.

● புனித மக்கா இரண்டு வேறு வேறு துண்டுகளாக உடைக்கப்பட்டு அந்தத் தாய் நகரத்தின் ஒரு பகுதி ஒரு கிழமையாகவும், அதன் மறு பகுதி வேறு ஒரு கிழமையாகவும், திகதியாகவும்,வாரமாகவும்,  மாறிவிடுமே ?” அது மாத்திரம் அல்ல;

■ “ இறைவா “ நாங்கள் மக்காவை நேசித்தது போல அல்லது அதைவிட அதிகமான அளவு மதீனாவை எங்களது நேசத்திற்குரிய நகரமாக ஆக்குவாயாக என்று அல்லாஹ்வுடைய துதர்(ஸல்) அவர்கள் அருழ் வழத்திற்காகப் பிரார்த்தனை செய்த புனித மதினமா நகரம் அமையப்பெற்ற # இடம் # (புகாரி- 1889, 3926, 5654, 5677, 7231, )

■ நபி(ஸல்) அவர்களின் துஆ வின் பரக்கத்தால் • மதீனமாநகர் துய்மையானது நெருப்பு தங்கம் வெள்ளியின் அழுக்கைப்  போக்குவதைப்போல அது பாவங்களைப் போக்கி விடுகிறது • என்று நபி(ஸல்) அவர்கள் முன்னறிவுப்புச் செய்த புனிதமான மதினமா நகரம் அமைந்துள்ள # இடம் # (புகாரி – 1883, 1884, 1885 , 4050, )

■ ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள்
தொழுவதைவிடச் சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துச் சொல்லிச் சென்ற புனித மஸ்ஜிதுன் நபவிப் பள்ளிவாசல் அமைந்துள்ள # இடம் # (புகாரி, 1190,  அஹ்மத் , இப்னு ஹிப்பான் , )

■ இப்ராஹீம் (அலை) அவர்கள்  மக்கா நகரைப் புனிதமானது என்று அறிவித்ததைப் போலவே மதீனாவின் இரு மலைக்களுக்கிடையே உள்ளவற்றைப் புனிதமானது என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்துச் சென்ற புனித மதினமா நகரம் அமைந்துள்ள # இடம் # ( புகாரி – 3367, 2893, 2889, 1889, )

■ எனது வீட்டிற்கும் எனது மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும் எனது மிம்பர் எனது ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தின் அருகில் உள்ளது என்று அல்லாஹ்வுடைய துதர் (ஸல்) அவர்கள் அருளிச் சென்ற புனித பகுதி அமையப் பெற்ற # இடம் # ( புகாரி – 1195, 1196, )

■ பாம்பு தனது புற்றில் ஓடிச் சென்று தனக்கு அபயம் பெறுவது போல ஈமான் மதீனாவில் சென்று அபயம் பெறும் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்துச் சென்ற மதீனமா நகர் அமைந்துள்ள # இடம் # ( புகாரி – 1876, )

■ மக்காவின் வாசலில் வானவர்கள் இருப்பது போல மதீனாவின் வாசல்களிலும் வானவர்கள் இருப்பார்கள் மதீனாவிற்குள்ளும் பிளேக்
காலரா போன்ற கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுளைய முடியாது மதீனாவில் தஜ்ஜாலைப் பற்றிய அச்சமும் இருக்காது என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்துச் சென்ற அபயமளிக்கும் பிரதேசத்தைக் கொண்ட # இடம் # ( புகாரி பாகம் 02 பக்கம் 560,பாடம் 09 ,& 1879–1882, 7132–7134, 7473, 5731, )

■ மதீனா வாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவது போல கரைந்து போவார்கள் என்று கூறி மதீனா வாசிகளின் பாதுகாப்பை முன்னறிவிப்புடன்  உறுதி செய்த அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களுடைய புனித நகரம் அமையப்பெற்ற # இடம் # ( புகாரி 1877, )

■ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து மதீனாவுக்கு வந்த புதிதில் முதலாவதாக “ குபா “ பள்ளிவாசலைக் கட்டுவதற்கு அடித்தளமிட்ட போது ஜிப்ரீல் (அலை) அவர்களே நபியவர்களுக்குக்  கிப்லா திசையைக் குறித்துக் கொடுத்துக் கட்டப்பட்டு • ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட பள்ளிவாசல் ( 09:108 ) என்று அல்லாஹ்விடமிருந்து சிறப்பு அந்தஸ்த்தைக் கொண்டதும்

அங்கே தொழுவது நன்மையளவில் உம்ராச் செய்வதற்கு நிகரானது என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களால் சொல்லப்பட்டதுமான  “ குபா “ பள்ளிவாசல் நிர்மானிக்கப்பட்டுள்ள புனித மதினமா நகரத்தைக் கொண்ட # இடம் # ( 09:108,திர்மிதி, இப்னுமாஜா, புகாரி – 1194,1192 , 7326, முஸ்லிம் – 2702,தப்ரானி , தப்ஸீர் தபரீ , தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 04: பக்கம் 400–404, இப்னு ஹிஷாம் , ஜாதுல் மஆது , ரஹீக் – 216, )

■ நடுத் தொழுகை ( 02:238 ) என்று சொல்லக் கூடிய அஸர்த் தொழுகையை “ ஈலியா “ என்று சொல்லக் கூடிய “ பைத்துல் முகத்திஸ் “ பள்ளிவாசலை கிப்லாவாக முன்னோக்கி இரண்டு ரக் ஆத்துகள் தொழுதுவிட்ட நிலையில் ஒருவர் வந்து புனித கஅபாவின் பக்கம் கிப்லா மாறிவிட்டது என்று சொன்ன செய்தியைக் கேட்டு மிகுதியிருந்த இரண்டு ரக் அத் களையும் அப்படியே ருகூ உ விலிருந்தவாறு ஒரு வட்டமடித்து புனித கஅபாவை கிப்லாவாக

முன்னோக்கித் தொழுத தனால் “ கிப்லத்தைன் “ இரண்டு கிப்லா வின் பள்ளிவாசல் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற பனூ ஹாரிஸா பள்ளிவாசல் அமைந்துள்ள # இடம் # ( 02:144, 149, 150, & மஸ்னது அபீ அவானா , சுனனுல் பைககீ , சீரத் பின் ஹிஷாம் , அவ்னுல் மஅபூத் , ஷர்ஹு அபீதாவூத் , தஃப்ஸீர் இப்னு மர்தவைஹி , தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 01: பக்கம் -479–483,489-493,)

■  மதீனாவின் மைய்யப் பகுதியில் அமைந்துள்ளதும் ஆரம்ப நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் என்ற அடை மொழிக்கு மிகவும் பொருத்தமானதுமான அதிக நன்மையை நாடி புனித யாத்திரை செய்வதற்கு வாக்களிக்கப்பட்ட புனிதஸ் தலங்களில் இரண்டாவது இடத்திலுமுள்ள மஸ்ஜிதுன் நபவிப் பள்ளிவாசல் அமையப் பெற்ற # இடம் # ( 09:108, புகாரி – 1189, 1197,  முஸ்லிம் – 2701,முஸ்னத் அஹ்மத் திர்மிதி , நஸயீ,)

■ இரண்டாவது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்  இறைவா எனது மரணத்தை உனது தூதருடைய ஊரான மதீனாவில் ஏற்படுத்துவாயாக என்று மரணத்தை  விரும்பிப் பிரார்த்தனை செய்த புனித நகரம் அமையப்பெற்ற # இடம் # (புகாரி பாகம் -03: பக்கம் – 446, பாடம் – 03, & -1890, 1392, 3052, 3700, 4888, 3692, 3162, )

■ இறுதி இறை வேதமாகிய பரிசுத்த குர்ஆன் முழுவதும் படிப்படியாக வஹிமூலம் இறக்கி அருளப்பட்ட பிரதேசங்களைக் கொண்ட # இடம் # ( புகாரி – 02–05, ரஹீக் -89-94 )

■ வஹி வருவதற்குத் தகுதியானவராகவும் இறுதி இறைதூதரின் முத்திரையுடனும்  இரு உலக அருட் கொடையாகவும் வந்த அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய  பெறுமதி மிக்க பொன்னுடல் நல்லடக்கம் செய்யப் பட்டுள்ள புனித மண்ணறை அமைந்துள்ள ( புகாரி – 3541, 3534, 3535, ரஹீக் அல் மக்தூம் – 574 )

இடமான மதீனாவும்; வேறு கிழமையாக, வேறு திகதியாக, வாரமாக, மாறிவிடுமே?”   சஊதி அரேபியாவே இரு கூறாகப் பிரிக்கப்பட்டு இரண்டு கிழமைகளும் இரண்டு திகதிகளுமாக மாறிவிடுமே ?”  இது நன்றாகவா இருக்கிறது. உலக முஸ்லீம்களின் மிக முக்கிய புனிதஸ்தலங்களான மக்காவும், மதீனாவும், இரு கூறாகப் பிரிக்கப்பட்டு வேறு, வேறு, கிழமையாக, வேறு, திகதியாக, மாறுவது நன்றாகவா இருக்கிறது ?”  இல்லை; இல்லை; ஒருபோதும் பொருத்தமானதாக இல்லவேயில்லை.

☪ வானங்களையும், பூமியையும், படைத்த நாளிலிருந்தே ஒரு வருடத்திற்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று இறைவன் பதிவேட்டில் எழுதிவிட்டான். (9:36) அதுவே மிகப் பொருத்தமானது என்பதாக மனிதன் தேர்ந்தெடுததான். அந்தப் பன்னிரண்டு மாதங்களின் நாட்களைக் கணக்கிடுவதற்குப் பொருத்தமான இடத்தில் இறைவன் கீறப்படாத சர்வதேசத் திகதிக் கோடாக அவனது அடையாளச் சின்னங்களைப் பூமியில் வைத்தான். அவ்வழியே அவனது ஒரு அடியார் சென்றதாகவும் அறிவித்தான். ஓரிறைப் பரப்புரை செய்துகொண்டிருந்தபோது  நபி (ஸல்) அவர்களிடம் வந்த மக்கா இறை மறுப்பாளர்களான குறைஷியர்கள்; யூதர்கள் கேட்கச் சொன்ன சில கேள்விகளில்;

கிழக்கு மேற்காக இந்த பூமி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அந்த மனிதர் தொடர்பாக தகவல் என்ன ?” என்று கேள்வி கேட்டபோது அவ்விஷயத்தை இறைவன் வஹியாக அறிவித்தது மாத்திரம் அல்ல; அவ்விஷயத்தை நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்துக் காண்பித்தான். அவ்விடத்தில் நின்றவாறு கிழக்குத்திசை முழுவதையும், மேற்குத்திசை முழுவதையும் நபியவர்கள் பார்த்தார்கள். சர்வதேசத் திகதிக் கோடாகிய அப்பிரதேசத்தில் அவர்கள் நிற்பதாகக் காட்டினால் மாத்திரமே கிழக்குத்திசை முழுவதையும், மேற்குத்திசை முழுவதயும், நபியவர்களால் பார்க்க முடியும்.

☪ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ் பூமி முழுவதையும் எனக்குச் சுருட்டிக் காட்டினான். அப்போது பூமியின் கிழக்குப் பகுதிகளையும், மேற்குப் பகுதிகளையும், நான் பார்த்தேன். எனது அருகே காட்டப்பட்ட பகுதிகள்வரை எனது சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். என்று (ஸவ்பான் (ரலி) முஸ்லிம் 5538, திர்மிதி, அபூதாவூத், முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் 3;472, 4;250, 5;370 – 543)

நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பாகக் குறிப்பிட்டது போன்றே சர்வதேச திகதிக் கோட்டிற்கு மிக அருகாமையிலுள்ள கிரிபாட்டி தீவுகள் சிலவற்றில் இப்போதும் முஸ்லீம்கள் வாழ்கின்றார்கள். என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். ஆக சர்வதேசத் திகதிக்கோடு குறித்து “யஃஜூஜ், “மஃஜூஜ், காலத்தில் நடந்த சம்பவத்தை 1440, ஆண்டுகளுக்கு முன்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அறிவித்தான். மிகப் பொருத்தமான அவ் இடத்தையே சர்வதேசத் திகதிக் கோடாக மனிதன் ஆய்வுகள் செய்து கண்டு பிடித்தான்.

☪ இப்போது இயல்பாக நடைமுறையில் உள்ள சர்வதேசத் திகதிக் கோட்டிற்கு இறைநூலாகிய பரிசுத்தக் குர்ஆன் மூலமாகவும்,  ஹதீஸ்களின் மூலமாகவும், இவ்வளவு ஆணித்தரமான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்ற முஸ்லீம்கள் மாற்றம் செய்யப் போகிறோம்; அதனை மக்காவிற்குக் கொண்டுவரப் போகின்றோம் என்று கிளம்பினால் அது சரியாக வருமா ?” பொருத்தமில்லாதது என அறிந்திருந்தால் அன்றே நபியவர்கள் மாற்றத்தைக் கொண்டுவந்திருப்பார்களே ! ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை ?” நாம் சிந்திக்க வேண்டாமா ?”

☪ இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை அவமதிக்காதீர்கள். (5:2) என்றும்; “இதுதான் (இறைவன் வகுத்தது ஆகும்) எவர் அல்லாஹ்வின் (அடையாளச்) சின்னங்களை மேன்மைப் படுத்துகின்றாரோ! நிச்சயமக அது (அவரது) உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும் (22:32) என்றுதானே கூறுகின்றான்.

 

Previous post:

Next post: