நபி(ஸல்) அவர்கள் பிறை பார்த்து மட்டுமே மாதத்தைத் துவங்கக் கட்டளையிட்டார்களா?

in 2012 ஆகஸ்ட்,பிறை

அபூ ஃபாத்திமா

மவ்லவிகளின் வீண் பிடிவாதம்!
பிறையைக் கண்ணால் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று அடம் பிடிக்கும் இந்த மவ்லவிகள், கணக்கீட்டின் மூலம் மாதம் பிறப்பதை உறுதியாக அறிய முடியும். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் பிறை தென்படும் என்று கணக்கீட்டின்படி அறிவித்தால் நிச்சயமாக அந்த நாளில் அந்த நேரத்தில், அந்தப் பகுதியில் பிறை இருக்கும். மேகமூட்டத்தால் மறைக்கப்பட்டாலும் பிறை இருந்தே தீரும் என உறுதியாகச் சொல்கிறார்கள்.

இந்த உண்மையை இந்த மவ்லவிகள் ஏன் ஒப்புக்கொள்கிறார்கள் தெரியுமா? கணக்கீட்டை மறுத்தால் இன்று கணக்கீட்டின் அடிப் படையில் முன்னறிவிப்பாகச் சொல்லப்பட்டு ஒரு வினாடிகூட முன்பின் ஆகாமல் குறித்த நாளில் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் சூரிய, சந்திர கிரகணம் இடம் பெறுவதை மக்கள் தங்களின் சொந்த அனுபவத்தில் பார்த்து வருகிறார்கள். எனவே கணக்கீட்டை மறுத்தால் மக்கள் எளிதாகத் தங்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் இந்த மவ்லவிகளின் பித்த லாட்டத்தை, தில்லுமுல்லுகளை அறிந்து கொள்ள வழி பிறந்துவிடும். எனவே கணக் கீட்டை மறுக்கும் துணிவு மவ்லவிகளுக் கில்லை: ஏற்றுக் கொள்கிறார்கள்.

அதே சமயம் ஷைத்தானின் ஏஜண்டுகளாக, வரம்பு மீறிய தாஃகூத்-மனித ஷைத்தான்களாகச் செயல்பட்டு பெருங்கொண்ட மக்களை நரகில் தள்ளி ஒரு சாண் வயிற்றை ஹராமான வழியில் நிரப்ப முற்படும் இம்மவ்லவிகள், மக்களை வழிகெடுப்பதிலேயே குறியாக இருப்பார்கள். எனவே துல்லியமான கணக்கீட்டை மறுத்தால் மாட்டிக் கொள்வோம் என அஞ்சி ஒரு பெரும் பழியை நபி(ஸல்) அவர்கள் மீதே போடுகிறார்கள். அதாவது நபி(ஸல்) அவர்கள் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மட்டுமே மாதத்தை ஆரம்பிக்கக் கட்டளையிட்டுள்ளார்கள் என்று ஒரு பெரும் பொய்யைச் சொல்லி அவர்களை நம்பியுள்ள பெருங்கொண்ட மக்களை ஏமாற்றி வஞ்சித்து நரகில் தள்ள முற்படுகிறார்கள். பல குர்ஆன் வசனங்கள் சூரியனும் சந்திரனும் துல்லிய கணக்கீட்டின்படி (ஹிசாப்) ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் அவற்றிற்குரிய வட்டவரைகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன என்று கூறும் நிலையில் நபி(ஸல்) அவர்கள் அந்த இறைவாக்குகள் அனைத்தையும் நிராகரித்து விட்டு சந்திரனின் ஓட்டம் மனிதக் கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. சந்திரனின் ரிமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள் என்று சொல்லியிருக்க முடியுமா? என்று அவர்களின் பக்தர்கள் சிந்திக்க மாட்டார் கள் என்ற தைரியமே இதற்குக் காரணம்!
குர்ஆன், ஹதீஃதில் நேரடித் தொடர்பு இல்லாததால் பொதுமக்கள், ஹதீஃதில், பார்த்துச் செயல்படச் சொல்கிறது என்று இந்தச் சுய நல முல்லாக்கள் சொன்னவுடன் அஞ்சிப் பின் வாங்குகின்றனர். 3:13ல் புறக்கண்ணால் பார்ப் பதைக் குறிப்பிட்டுச் சொல்லும் “”ரஃயல் ஐன்” என்ற அரபி பதம் இருப்பது போல் பிறை விவகாரத்திலும் கண்ணைக் குறிப்பிடும் “ஐன்’ என்ற பதம் இடம்பெறும் ஒரேயொரு ஆதாரபூர்வ மான ஹதீஃதையாவது காட்டுங்கள் எனப் பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி ஒரேயொரு ஹதீஃதையும் காட்டத் துப்பில்லாமல் 1433 வருடங்களுக்கு முன்னர் அன்று புறக் கண்ணால் தானே பிறையைப் பார்த்தார்கள் என பல்ட்டி அடிக்கிறார்கள்.

அறிவியல் அன்றும் இன்றும் ஒன்றா?
உண்மைதான்! அன்று பிறையைக் கண்ணால் பார்த்து மதத்தைத் தீர்மானித்தது போல், சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்துத் தானே தொழுகை நேரத்தைத் தீர்மானித்தார்கள். அதே போல் 22:27-ல் அல்லாஹ் நேரடியாகக் கூறி இருப்பது போல் தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகத்தில் தானே ஹஜ்ஜுக்குப் போனார்கள். பிறை விவகாரத்தில் அன்றைய வழக்கப்படி கண்ணால் பார்ப்பதை வலியுறுத்தும் நீங்கள் நபியின் கட்டளையை நிராகரித்து ஏன் கடிகாரம் பார்த்துத் தொழுகிறீர்கள்? 22:27 இறைக் கட்ட ளயைப் புறக்கணித்து ஏன் விமானத்தில் ஹஜ் ஜுக்குச் செல்கிறீர்கள் என்று மடக்கிக் கேட்டால் மூடத்தனமான பதிலையே தருகிறார்கள்.
தஜ்ஜாலின் காலத்தில் நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் சூரியனைப் பார்த்து நேரத்தைத் தீர்மானிப்பதை நிராகரித்து கடிகாரம் பார்த்துத் தீர்மானிக்கலாம். மெலிந்த ஒட்டகத்தில் ஹஜ் ஜுக்கு வருவார்கள் என்றில்லை; உம்மிடம் வருவார்கள் என்றே இருக்கிறது. எனவே ஹஜ் ஜுக்கு விமானத்தில் செல்லலாம் என விதண்டாவாதம் செய்கின்றனர். இன்று அவர்கள் தஜ்ஜாலுடைய காலத்தில் வாழவில்லை என்ப தையும், ஹஜ்ஜுக்காக அழையும் உம்மிடம் வருவார்கள் என்றால் அது ஹஜ்ஜுக்காக வருவார்கள் என்பதையும் அறிய முடியா மூடர்களாக இந்த மவ்லவிகள் இருக்கிறார்கள் என்ப தைச் சுய சிந்தனையாளர்கள் நிச்சயம் அறிவார்கள். சுய சிந்தனை இல்லாமல் இந்த மவ்லவிகளை தக்லீது செய்யும், அவர்களின் வாக்கை வேதவாக்காக ஏற்கும் அறிவீனர்களே இம் மவ்லவிகளின் அபத்தமான விளக்கங்களை ஏற்பார்கள். மோசம் போவார்கள்! நரகில் விழுவார்கள்!

விண்ணியல் கணக்கு அன்று இல்லை!
இப்படியெல்லாம் சுயவிளக்கம் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் இம்மவ்லவிகள், 10:5, 36:38,39,40, 55:5 இறைவாக்குகள் கூறும் “ஹிசாப் என்ற கணக்கையே அன்று “”நமக்கு அந்தக் கணக்குத் தெரியாது அதாவது விண்ணியல் கணக்குத் தெரியாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்க ததஜ மவ்லவி அது சாதாரண கணக்கு; விண்ணியல் கணக்கு அல்ல என்று கூறி அவரின் கண்மூடிப் பக்தர்களை ஏமாற்றுகிறார் என்றால் எந்த அளவு நெஞ்சழுத்தமும் இறையச்சமற்ற நிலையிலும் இருப்பார்? என்பதைச் சுய சிந்தனையாளர்கள் விளங்க முடியும். பின் ஒருகாலம் வரும் தஜ்ஜாலின் காலத்தில் கணக் கிடுவதைச் சரிகண்டு கடிகாரத்தை ஏற்கும் ததஜ நவீன இமாம்(?), இன்றே நடைமுறைக்கு வந்துள்ள கணினி கணக்கீட்டை ஏற்க மறுக்கும் வினோதமான காரணம் புரிகிறதா? சுயநலமே காரணம்!

சந்திரக் கணக்கைச் சரிபார்க்க முடியாதாம்!
இன்னொரு விதண்டாவாதம் என்ன தெரியுமா? சூரிய ஓட்டத்தைக் கடிகாரத்தை வைத்துச் சரிபார்த்துக் கொள்ள முடிகிறதாம். ஆனால் சந்திர ஓட்டத்தை அப்படிச் சரிபார்க்க முடியாதாம். என்னே மடமை வாதம்? ஆம்! யூதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் புகுத்திய மாலையில் நாள் ஆரம்பிக்கிறது. மாலையில்தான் முதல் பிறை பிறக்கிறது என்ற மூட நம்பிக்கையில் 3ம் பிறையை முதல் பிறையாகக் கொண்டு அச்சடிக்கப்பட்ட சிவகாசி காலண்டரில் பிறை 29 என்று போடப் பட்டிருக்கும் மூடத்தனத்தைப் பின்பற்றி காலையில் உதித்து மாலையில் மறையும் பிறையை மட்டும் பார்ப்பவர்களுக்கு துல்லியமான கணினி கணக்கீடு தவறாகத்தான் தெரியும்.

பிறை அல்ல பிறைகள்!
குர்ஆன் 2:189ல் அல்லாஹ் பிறைகளைப் பற்றி மக்கள் கேட்கிறார்கள் என்று வளர்ந்து தேயும் மாதம் முழுக்க உள்ள பிறைகள் பற்றிக் குறிப்பிடுகிறானே அல்லாமல்(அஹில்லா)) மூடத்தனமாக யூதர்களைப் பின்பற்றி அதாவது வழிகேட்டில் இட்டுச் செல்லும் யூதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி மேற்கில் மறையும் (உதிப்பது அல்ல) கடைசிப் பிறையை மட்டும் (ஹிலால்) பார்க்கும்படி அல்லாஹ் கட்டளையிடவில்லை. எனவே துல்லியமான கணக்கீட்டுக்கும், இம்மூட முல்லாக்கள் மாலையில் மறையும் பிறையைப் பார்த்து முதல் பிறை என்பதற்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதற்கு மாறாக அல்லாஹ் 2:189ல் சொல்லியிருப்பது போல் தினசரி வளர்ந்து தேயும் பிறைகளை (அஹில்லா) அவதானித்து வந்தால் துல்லியக் கணினி கணக்கீட்டுக்கும், அவர்களின் அவதானிப்புகளுக்கும் வேறுபாடு இல்லாமல் மிகச் சரியாக ஒத்துப் போவதை அறிய முடியும்.

நியாயமான சந்தேகம்!
இதுவரை இந்த மவ்லவிகளின் விதண்டா வாதங்களையும் அவற்றின் எதார்த்த நிலையையும் பார்த்தோம். இப்போது மனிதர்கள் என்ற நிலையில் மனித பலகீனத்தின் காரணமாக ஏற்படும் ஒரு நியாயமான சந்தேகத்தைப் பார்ப்போம். அன்று சூரிய ஓட்டத்தைப் பார்த்து ஐங்காலத் தொழுகைகளைத் தொழுதிருந்தாலும், தினசரி வைகறையையும் (பஜ்ர்) சூரிய மறைவையும் (மஃறிப்) பார்த்து நோன்பைத் துவங்கி முடித்திருந்தாலும், பிறையைப் பார்த்து வையுங்கள், பிறையைப் பார்த்து விடுங்கள், பிறையைப் பார்க்காமல் ஆரம்பிக்காதீர்கள்; பிறையைப் பார்க்காமல் முடிக்காதீர்கள் என்று பலவாறாக பலமுறை நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பது போல், சூரியனைப் பற்றிப் பலமுறை பல வாறாக எச்சரிக்கவில்லை. அதனால் பிறையைப் பார்த்துச் செயல்படுவது நபி(ஸல்) அவர்களின் கட்டளைதான் என்று அற்ப அறிவு பெற்ற மனிதன் (17:85) எண்ண வாய்ப்பு அதிகம்தான். அதனால்தான் புரோகிதர்களான இந்த மவ்லவிகள் எளிதாக அவர்களை ஏமாற்றி வஞ்சிக்க முடிகிறது. நரகில் தள்ள முடிகிறது.

ஆனால் இந்த மவ்லவிகள் சொல்வது போல் பிறையைக் கண்ணால் பார்த்து ஆரம்பிப்பதை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கவில்லை. மாறாக அன்று சமுதாயத்தில் ஏற்பட்டப் பிளவை நீக்கி ஒற்றுமைப்படுத்த இன்றிருக்கும் கடிகாரம், கணினி போன்றவை அன்று கண்டு பிடிக்கப்படவில்லை. அன்றிருந்த ஒரே வழி பிறையைக் கண்ணால் பார்த்து முடிவு செய்வது மட்டுமே. அதன் மூலம் சமுதாய ஒற்றுமை யைக் கட்டிக்காப்பதே அசலான குறிக்கோள்.

மேலும் இன்று இந்த மூட முல்லாக்கள் யூத மதக் கலாச்சாரத்தைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி காலையில் உதித்து மாலையில் மறை யும் பிறையைப் பார்த்துவிட்டு, பிறை பிறந்து விட்டது; மாதம் துவங்கிவிட்டது என்று கூறும் அறிவீனமான யூத மதக் கலாச்சாரத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. மாத இறுதியில் மேற்கில் முதல் பிறையைப் பார்க்கும் பழக்கம் ஆரம்ப கால முஸ்லிம்களி டம் இருக்கவில்லை. யூதக் கைக்கூலிகளால் மத்ஹபுகளின் பெயரால் “தக்லீத்’ என்ற கண் மூடிப் பின்பற்றல் முஸ்லிம் சமுதாயத்தில் திணிக்கப்பட்ட பின்னரே கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் பிறையை மேற்கில் உதிப்பதாக மூடத்தனமாக நம்பி மாலையில் மேற்கில் பிறை பார்க்கும் மூடப் பழக்கம் யூதர்களால் திணிக்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்களது நபித்துவ காலத்தில் 2:189 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து தினசரி பிறை பார்க்கும் நடைமுறை இருந்தது. எனவே வளர்ந்து தேயும் பிறைகளை(ஹிலால் ஒருமை அல்ல அஹில்லா பன்மை) அன்றாடம் அவதானித்து வந்தார்கள். இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் காரணமாக சந்திரன் பூமியை 29 அல்லது 30 நாட்களில் சுற்றி முடிக்கிறது. எனவே அது ஒரு மாதத்தில் 360நு சுற்றி முடிக்கிறது. எனவே ஒரு நாளின் அதன் வளர்ச்சி 12.4நு அல்லது 12நு என்ற துல்லியமான கணக்கு அன்று அவர்களிடம் இருக்கவில்லை. ஆயினும் அன்றைய மக்கள் தங்கள் கைவிரல்களைக் கொண்டு பிறையின் வளர்ச்சியைத் தோராயமாகக் கணிப்பவர்களாக இருந்தார்கள்.

அப்படி கணிக்கும்போது சிலரின் கணிப்பில் அம்மாதம் 30ல் முடிகிறது என்றும், மேலும் சிலரின் கணிப்பில் அம்மாதம் 29ல் முடிகிறது என்றும் கருத்து வேறுபட்டார்கள். “”நாங்கள் கருத்து வேறுபாட்டுடன் 30ம் நோன்பை நோற்ற வர்களாக காலைப் பொழுதை அடைந்தோம்…” என்ற ஹதீஃத் அன்றைய கருத்து வேறுபாட்டை உறுதிப்படுத்துகிறது. இந்தக் கருத்து வேறுபாட் டைத் தீர்த்து 21:92, 23:52படி சமுதாய ஒற்றுமை காக்க அன்று என்ன வழி இருந்தது? இன்றைய கணினி கணக்கீட்டு முறை இருந்ததா? இல் லையே! பின் எப்படி கருத்து வேறுபாட்டைத் தீர்த்து அத்தியாவசியமான சமுதாய ஒற்றுமையை நிலைநாட்டுவது? அன்றிருந்த ஒரே வழி வேறு வழியே இல்லை. அது பிறையைப் பார்த்து முடிவு செய்வதே. ஆம்! வீணாக 29 என்றும் 30 என்றும் சச்சரவிட்டுக் கொள்ளாதீர்கள், பிளவு படாதீர் கள். பிறையைப் பார்த்து ஆரம்பியுங்கள், பிறை யைப் பார்த்து முடியுங்கள் என்று சச்சரவைத் தீர்க்க நபி(ஸல்) பயன்படுத்திய அன்றைய கண்ணால் பிறை பார்த்தலை இந்த மவ்லவிகள் சுய நலத்துடன் இன்று கட்டாயக் கடமை போல் ஆக்கிவிட்டார்கள்.
அன்றைய நிலையும்! இன்றைய நிலையும்!

அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் சிறிது ஒப்பிட்டுப் பாருங்கள். அன்று தொலை தொடர்பு வசதி இல்லை. ஓர் ஊரில் என்ன நடக்கிறது என்று பக்கத்து ஊருக்கே தெரியாது. அந்த ஊரில் முதல் நாளும், பக்கத்து ஊரில் அடுத்த நாளும் நோன்பு ஆரம்பித்து முடித் திருந்தாலும் அதனால் சமுதாய ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படவில்லை. ஆனால் ஒரே ஊரிலேயே மாதம் 29ல் முடிகிறது என்று ஒரு சாராரும் இல்லை 30ல் முடிகிறது என்று மறுசாராரும் கருத்து வேறுபாடுபட்டு பிளவுபட்டு சமுதாய ஒற்றுமைக் குலையவே அன்றைய நிலை இருந்தது. எனவே சமுதாய ஒற்றுமையைக் கட்டிக் காக்க அன்று நபி(ஸல்) அவர்கள் வீணாக 29 என்றும் 30 என்றும் சச்சரவிட்டுப் பிளவுபடாதீர் கள். பிறையைப் பார்த்து முடிவு செய்யுங்கள் என்று சொன்னதில் பொருள் இருக்கிறது.
ஆனால் அதற்கு மாறாக நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் தொலைத் தொடர்பு வசதியும், கணினி கணக்கீட்டு முறையும் நடை முறைக்கு வந்துள்ள இந்தக் காலத்தில் எப்படிப் பட்ட சண்டை சச்சரவும், பிளவுகளும் ஏற் படச் சாத்தியமான நிலை இருக்கிறது? உலகின் ஒரு மூலையில் பிறை பார்த்த செய்தி தொலைத் தொடர்பு மூலம் உடனடியாக அடுத்த வினாடியே மறு மூலைக்குத் தெரிந்து அதனால் சமூக ஒற்றுமை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. அதற்கு மேலும் துல்லிய கணக் கீட்டின் மூலம் 100 வருடங்களுக்குப் பின் நடக்கப் போகும் சூரிய, சந்திர கிரகணங்களை இன்றே சொல்லும் நிலை ஏற்பட்டுவிட்டதால் சந்திர மாதம் பிறப்பதும், முடிவதும் துல்லிய மாகத் தெரியும் நிலை ஏற்பட்டுவிட்டது.

எனவே நடுநிலையுடன் அற்பமான உலகியல் ஆதாயமோ வேறு சுயநலமோ இல்லாத சமுதாய ஒற்றமையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள், சந்தேகத்திற்குரிய பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதைத் தவிர்த்து, அணுவளவும் சந்தேகமில்லாத மிகத் துல்லிய கணினி கணக்கீட்டை அறிவுக் கண்ணால் பார்த்து மாதத்தை துவங்குவதே குர்ஆன் 10:5, 55:5 இறைக் கட்டளைகளை நிராகரிக்காமல், அவற்றிற்கு முற்றிலும் அடிபணிந்து நடப்பதாகும் என்று முடிவெடுத்தால், இந்த முடிவில் இந்த மூட முல்லாக்கள் என்ன குறை கண்டு ஹதீஃத்களுக்கு மாற்றம், அவற்றை நிராகரிப்பதாகும் என லபோலபோ என வானத்திற்கும் பூமிக்கும் இடையில் குதிக்கிறார்கள்.

மக்களைப் பிளப்பதிலேயே மவ்லவிகளுக்கு ஆதாயம்!
ஆம்! இறைவன் 21:92, 23:52 வசனங்களில் வலியுறுத்திக் கூறும் சமுதாய ஒற்றுமையை நிராகரித்து, பிளவுபடுத்தி அற்ப உலகியல் ஆதா யங்களை அடைந்து வரும் இந்த மூட முல்லாக் கள், சமுதாய ஒற்றுமையால் அந்த அற்ப வாழ் வில் மண் விழுந்து விடும் என்று நடுங்குகிறார் கள். “”ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்” என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள். சமுதாயம் பிளவுபடுவதில் தான் இந்த முஸ்லிம் கூத்தாடிகளான முல்லாக் களுக்கு-மதகுருமார்களுக்குக் கொண்டாட்ட மும் ஆதாயமும் இருக்கிறது.

அன்று பக்கத்துப் பக்கத்து ஊர்களில் கூட வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடப்பட்டது. அதனால் சமுதாயத்தில் பிளவு ஏற்படவில்லை. ஒரே ஊரில் 29 என்றும் 30 என்றும் பிரிவு-பிளவு ஏற்பட்டதைத் தவிர்க்க பார்த்து வையுங்கள்; பார்க்காமல் வைக்காதீர்கள்” என்ற நபியின் வழிகாட்டல் ஒன்றுபட்ட சமுதாயத்தைக் கட்டிக்காத்தது. பிளவுக்கு வழியில்லாமல் போய்விட்டது. அதற்கு மாறாக அறிவியல் முன்னேற்றம் காரணமாக சந்திர மாதம் பிறப்பதைக் கணினி கணக்கீட்டின் மூலம் மிகத் துல்லியமாக அறியும் நிலையில் அறிவுக் கண் கொண்டுப் பார்க்கும்போது திட்டமாகத் தெரியும் நிலையில் சமுதாயம் இம் மூட முல்லாக்களின் தவறான வழிகாட்டலால் ஒரே ஊருக்குள்ளேயே, ஏன்? ஒரே குடும்பத்திற்குள்ளேயே மூன்று பிரிவினர்களாகப் பிளவு பட்டு சமுதாயம் சீரழிய இம் மூட முல்லாக்கள் வழி வகுக்கிறார்கள்.

தத்தம் பகுதியில் தாமே பிறையைப் புறக் கண்ணால் பார்த்தே மாதம் ஆரம்பிப்பதை ஏற்க வேண்டும் என ததஜ மூட தலைமை இமாம்(?) போன்றவர்கள் ஒரு பிரிவு.

தம் பகுதியில் பார்க்க முடியாவிட்டாலும், வேறு பகுதியில் பார்த்தத் தகவலை ஏற்றுச் செயல் படலாம் என ஸலஃபி, முஜாஹித், அஹ்ல ஹதீஃத், ஜாக் மூட முல்லாக்கள் இரண்டாம் பிரிவு,

இன்றைய அதிநவீன அறிவியல் உலகில் 100 வருடங்களுக்குப் பின்னால் இடம்பெற இருக்கும் சூரிய, சந்திர கிரகணங்களை இன்றே கணக்கிட்டுச் சொல்வதும், அவை அணுவளவும் பிசகாமல் இடம் பெறுவதும், சந்திர மாதம் பிறப்பதையும் முடிவதையும் 100% துல்லியமாகக் கணக்கிட முடியும் என்பதை உறுதிப்படுத்துவதால், கண்ணால் பார்ப்பதோ, தகவலைக் கொண்டு பார்ப்பதோ அவசியமே இல்லை. அறிவுக் கண் கொண்டு பார்த்து கணினி கணக்கீட்டின் மூலம் எவ்வித சிரமமும் இல்லாமல், காத்திருந்து வேதனைப் படாமல், முன் கூட்டியே திட்டமாக அறிந்து செயல்பட முடியும் என்று கூறும் மூன்றாம் பிரிவு.

முப்பிரிவில் எப்பிரிவு ஒற்றுமை ஏற்படுத்தும்?
ஆக அன்று அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலத்தில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடியது போய், இன்று அறிவியலில் அதிமுன்னேற்றம் கண்டுள்ள நிலையில் வெவ்வேறு ஊர்களில் அல்ல, ஒரே ஊரில், ஒரே குடும்பத்தில் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து சீரழியும் பரிதாப நிலையைப் பார்க்கிறோம். ஒரே குடும்பத்தில் கண வன் ஒருநாள், மனைவி ஒரு நாள், பிள்ளை ஒரு நாள் எனப் பிரிந்து கொண்டாடும்(ஈத்) அசல் நோக்கத்தையே சிதைத்துச் சீரழிக்கும் அவல நிலையைப் பார்க்கிறோம்.
இந்த மூன்று பிரிவுகளில் எந்தப் பிரிவு மூலம் சமுதாய ஒற்றுமையைக் காக்க முடியும் என முஸ்லிம்கள் சுயமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். மார்க்கத்திற்கு உட்படாத அறிவியல் முன்னேற்றம் இல்லாத அக்காலத்தில் நடைமுறையிலிருந்த அந்தந்தப் பகுதி மக்கள் அங்கங்கே பிறையைக் கண்ணால் பார்த்து செயல்பட்டதை ஏற்று நடப்பது சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்குமா? அல்லது தகவல் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வெளியூர் தகவலை ஏற்றுச் செயல்பட்டதை ஏற்று நடப்பது சமுதாய ஒற்றுமைக்கு வழிவகுக்குமா? அல்லது 22:78 இறைவாக்கில் “”இந்த மார்க்கத்தில் அவன்(அல்லாஹ்) எவ்விதச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை” என்ற அல்லாஹ் வின் வாக்குறுதியை ஏற்று கடைசிவரைக் காத்திருந்து பரிதவிக்காமல், பல வருடங்களுக்கு முன் கூட்டியே திட்டமாக, துல்லியமாக சந்திர மாதங்கள் தொடங்குவதையும், முடிவதையும் ஏற்றுச் செயல்படுவது சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்குமா? சிந்தியுங்கள்.

சமுதாய ஒற்றுமையை விரும்பும் நேர்வழி நடப்பவர்கள் கணினி கணக்கீட்டைக் கண்ணால் பார்த்துச் செயல்படுவதையே சரிகாண்பார்கள். சமுதாயத்தைப் பிளவுபடுத்தி அற்ப உலக ஆதாயம் அடைவதில் குறியாக இருப்பவர்களுக்குக் கணினி கணக்கீட்டு முறை எட்டிக் காயாகக் கசக்கும். அவர்களிலும் போட்டி பொறாமை காரணமாக இரண்டுபட்டு ஒரு முல்லா பிரிவு தகவலைப் பார்த்து ஏற்பதைச் சரிகாண்பார்கள். பிரிதொரு பிரிவு தத்தம் பகுதியில் கண்ணால் பார்த்து ஏற்பதைச் சரிகாண்பார்கள். 2:90, 213, 3:19, 42:14, 45:17 இறை வாக்குகள் கூறி எச்சரிப்பதை நிராகரித்து விட்டு பொறாமை கொண்டே இப்படிச் சுயவிளக்கம் கொடுத்தே பிரிகிறார்கள். 2:39 இறைவாக்கு கூறுவது போல் இறைக்கட்டளைகளுக்குச் சுய விளக்கம் கொடுத்து நிராகரிப்பவர்கள் இறுதி யில் போய்ச் சேர்வது நரகமே! இது 33:36 கூறும் உண்மையாகும்!

இரண்டாம் ஆதாரம் (?)
இந்த முல்லாக்கள் கண்ணால் பார்ப்பதை நியாயப்படுத்தும் இன்னொரு ஆதாரம் இரண்டாம் பிறை மூன்றாம் பிறை எனச் சச்சரவிட்டுக் கொண்டு வந்த இரு பிரிவினர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் முறையிட்டபோது, அவர்களின் சச்சரவைத் தீர்த்து ஒற்றுமைப்படுத்த “”நீங்கள் என்றைய தினம் பார்த்தீர்களோ அன் றைய தினத்தின் பிறை” என்று கூறி பிளவைத் தீர்த்தார்கள். இந்த அஃதர் இந்த முல்லாக்களின் மூடத்தனத்தையே அம்பலப்படுத்துகிறது, மற்றபடி கண்ணால் பார்ப்பதை வலியுறுத்தவில்லை. இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் என்றைய தினம் பார்த்தீர்களோ அன்றைய தினத்தின் பிறை என்றார்களே அல்லாமல், அடுத்த நாளுக்குரிய பிறை என்று கூறவில்லை. இதன் உண்மை நிலையை அறிய முடியாத மூடர்கள் காலையில் உதித்து மாலையில் மறையும் பிறையைப் பார்த்து விட்டு, “”பிறை பிறந்துவிட்டது, அடுத்த நாளுக்குரிய பிறை என மூடத்தனமாக நம்பி அடுத்த நாள் காலையில் நோன்பை ஆரம்பிக்கிறார்கள். நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற யூத மதக் கலாச்சாரத்தை உள்வாங்கி உளறுகிறார்கள். இங்கும் கண்ணால் பார்க்கும் அவர்களின் மடமை வாதம் தவறென்றே உறுதிப்படுகிறது.

மூன்றாம் ஆதாரம்(?)
கண்ணால் பார்க்கும் அவர்களின் சொத்தை வாதத்தை நிலைநாட்ட அவர்கள் எடுத்து வைக்கும் மூன்றாம் ஆதாரம், குரைப் என்ற தாபியீ சிரியாவில் வெள்ளியன்று பிறை பார்த்து நோன்பு வைத்தவர் ரமழான் இறுதியில் (உடன டியாக அல்ல) மதீனா வந்து வெள்ளியன்று பிறை பார்த்தத் தகவலை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் சொன்னபோது தூரத்துச் செய்தியை ஏற்க நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கற்றுத்தரவில்லை என்று இப்னு அப்பாஸ்(ரழி) கூறி மறுத்ததாகப் புருடா விடுகிறார் ததஜ நவீன இமாம்(?)
பிறை பார்த்த உடன் மதினா வந்து சுடச் சுடச் சொல்லி இப்னு அப்பாஸ்(ரழி) அதை மறுத்திருந்தால் இவரின் கூற்றில் ஓரளவாவது உண்மை இருக்க வாய்ப்புண்டு. ரமழான் ஆரம்பத்தில் பார்த்தவர் ரமழான் இறுதியில் ஷவ்வால் பிறை பார்க்க வேண்டிய நிலையில் ரமழான் பிறை பார்த்தத் தகவலைத் தரும் போது அதன் நிலை என்ன? ரமழான் பிறை பார்த்தத் தகவலை வைத்து ஷவ்வால் பிறையை முடிவு செய்ய மார்க்கம் அனுமதிக்கிறதா? இல்லையே! ரமழான் பிறை கண்ட ஆதாரத்தை வைத்து ஷவ்வால் பிறையை முடிவு செய்ய நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தரவில்லை என்ற கருத்தில் இப்னு அப்பாஸ்(ரழி) சொன்னதை திரித்து வளைத்து மறைத்து (2:159-162) தூரத்துச் செய்தியை ஏற்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ்(ரழி) கூறியதற்குச் சுய விளக்கம் கூறுகிறார் மூட நவீன இமாம்(?) P.J.

ஆழ்ந்து சிந்தித்தால் அன்று மதீனாவாசிகளிடம் ஏற்படவிருந்த கருத்து மோதலுக்கு வழி விடாமல் இப்னு அப்பாஸ்(ரழி) தடுத்துள்ளார் கள் என்றே அறியமுடிகிறது. எப்படி என்று பாருங்கள். குரைபின் சிரியா பிறை பார்த்த செய்தியை ஏற்று நோன்பை விடுவதாக இருந்தால் சிரியாவில் 30 நோன்பு என்றிருக்க மதீனாவில் 29 நோன்புகள் என்ற நிலை ஏற்படும். இது மதீனாவாசிகளிடம் எந்த அளவு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும். சிரியாவுக்கு 30, மதீனாவுக்கு 29 நோன்பா? நாங்கள் ஒரு நோன்பை கழா செய்ய வேண்டுமா? இதை எப்படி ஏற்பது என மதீனாவில் குழப்பமும், சச்சரவும், பிளவும் ஏற்பட அது வழிவகுத்திருக்குமா இல்லையா? பிளவைத் தவிர்த்து சமுதாய ஒற்றுமை காக்கவே இப்னு அப்பாஸ் (ரழி) முற்பட்டார்கள். இங்கும் கண்ணால் பார்க்கக் கூறும் ஆதாரம் பொய்யென்றே நிரூபணமாகிறது!

அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலம்!
அன்றைய அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலத்தில் பிறையைக் கண்ணால் கண்டு மட்டும் பிளவைத் தடுக்க, வேறு வழியே இல்லாமல் அந்த ஒரு வழி மட்டுமே இருந்ததால் கண்டு ஆரம்பியுங்கள், கண்டு முடியுங்கள் என்று பிறை பார்த்தலை வலியுறுத்தப்பட்டது. இன்றோ அறிவியல் அதி முன்னேற்றம் காரணமாக முழு உலகமும் விரல் நுனியில் இருப்பதோடு கணினி கணக்கீட்டு முறை 100% மாதம் ஆரம்பிப்பதைத் துல்லியமாகக் கூறும் நிலையில் இதை இந்த மவ்லவிகளும் ஒப்புக் கொள்ளும் நிலையில், அதை அறிவுக் கண்ணால் பார்த்து ஏற்பது கொண்டு சமுதாய ஒற்றுமைக் காப்பதை இம்மவ்லவிகள் ஏன் தடுக்கிறார்கள். தங்கள் கண் மூடி பக்தர்களைத் தூண்டிவிட்டு குழப்பம் ஏற்பட வழி வகுக்கிறார்கள். அவர் களின் அற்ப உலக ஆதாயமே அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது என்பதில் சந்தேக முண்டா?

மார்க்கக் கடமையல்லாத அன்றைய சமுதாய ஒற்றுமைக்கு வழிவகுத்த பிறை பார்த்தலை, இன்று தூக்கிப் பிடிப்பதன் மூலம் ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு குடும்பமும் மூன்று பிரிவின ராகப் பிளவுபட்டு சீரழிய வழி வகுக்கும் கட மையல்லாத பிறை பார்த்தலை மார்க்கக் கடமை போல் வலியுறுத்தி மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்லும் இந்த மவ்லவிகள் குர் ஆனைப் பின்பற்றும் நபியின் வாரிசுகளா? அதற்கு மாறாக ஷைத்தானைப் பின்பற்றி சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி பிளவு பட வைக்கும், வரம்பு மீறி நடக்கும் தாஃகூத்- மனித ஷைத்தான்களா என்பதை இந்த மவ்லவிகள் பின்னால் செல்லும் பக்தர்கள் சிந்தித்து உணர கடமைப்பட்டிருக்கிறார்கள்.

சிந்தித்துத் திருந்தினால் தப்பினார்கள். இல்லை என்றால் நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தியும் சபித்தும் ஒப்பாரி வைப்பதை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இறைவாக்குகளை ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நேரடியாகப் படித்துப் பார்த்து உணர்வு பெற அன்புடன் வேண்டுகிறோம்.

உறுதியாகக் கூறுகிறோம்!
மீண்டும் உறுதியாகக் கூறுகிறோம். அன்று பிறை பார்த்தல் மார்க்கக் கடமை அல்ல. மாதம் பிறப்பதை அறிய அன்றிருந்த குறையுள்ள ஒரே சாதனம். ஆனால் இன்றோ அறிவியல் முன்னேற்றம் காரணமாக எவ்வித குறைபாடும் இல்லாத நிலையில் நூறு சதவிகிதம் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள கணினி கணக்கீட்டின்படி செயல்படுவதை குர்ஆனோ, ஹதீஃதோ தடை செய்ய வில்லை. அதற்கு மாறாக அன்றுபோல் இன்றும் பிறையைக் கண்ணால் பார்த்து செயல்பட்டு முதல் நோன்பையோ, அல்லது முதல் இரண்டு நோன்புகளைத் தவறவிடுகிறவர்கள் பெரும் பாவிகள் என்பதே நிதர்சன உண்மையாகும். ஷவ்வால் முதல் நாள் ஈத் அன்று நோன்பு நோற்பதும் கொடிய பாவச் செயலாகும். எச்சரிக்கை.

Previous post:

Next post: