ஒரே சமுதாயம்

in 1990 பிப்ரவரி

சமூகவியல் :20

ஒரே சமுதாயம்

புலவர் செ. ஜஃபர் அலீ, பி. லிட்.,

“உறுதியாக உங்களுடைய இந்தச் சமுதாயம் ஒரே சமுதாயம் தான் நானே உங்களுடைய இறைவன் ஆகவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்.”   (23:52)

இவ்வாறு பேரிறைவன் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்க. ஒன்றைப் பல கூறுகளாக்கிக் குழம்பிக் கொண்டிருக்கின்ற சமுதாயமாக இன்றைய நம் சமுதாயம் ஆகிவட்டது. குழம்பிக் கொண்டிருக்கின்ற “மத்ஹபு’க்காரர்களே ஏகத்துவத்தை எடுத்து இயம்புகின்றவர்களைப் பார்த்து “குழப்பக்காரர்கள்’ என்கின்றனர். மூளைக்கோளாறு உள்ளவன், தான் காணுகின்றவர்களையயல்லாம், “நீ பைத்தியம், உன் தாய் பைத்தியம், உன் தந்தை பைத்தியம்’ என்று சொல்வதைப் போல உள்ளது.

“தங்களுடைய மார்க்க காரியங்களில் பல பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு, ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ள பிரிவைக் கொண்டு சந்தோ­ மடைகின்றனர்.”

“(நபியே!) நீர் ஒரு காலம் வரையில் அவர்களை அவர்களுடைய குழப்பத்தில் (ஆழ்ந்து கிடக்க) விட்டுவிடும்” (23:53, 54)

மத்ஹபுகளுக்கு மட்டும் இவ்வி­யம் உரியதன்று; சமுதாயத்தைப் பல பிரிவினையாக்கிக் கூறு போட்டு ஆதாயம் தேடும் தற்குறிகளும் இவ்விரு வசனங்களின் ஆழ்ந்த கருத்தை உணருவார்களா?

“(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களை தேர்ந்தெடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கின்றான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (இது) உங்கள் தந்தையாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும். அவன்தான் (அல்லாஹ்) இதற்கு முன்னர், உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இதிலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு நம்முடைய) இத்தூதுரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கின்றார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையை கடைபிடித்து ஒழுங்குகள்; ஜக்காத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன் தான் உங்களுடைய ரட்சகன். இரட்சகர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன்; உதவி செய்கின்றவர்களிலும் அவனே மிக்க நல்லவன் ”.   (22:78)

மனித குல ஒற்றுமையில் உயர்வுண்டு; வேற்றுமையில் வீழ்ச்சியே மிஞ்சும். இறையடியார்களாகிய நாம் ஒருவருக்கொருவர் அன்பைப்பாய்ச்சி சகோதரர்களாக வாழ கடமைப்பட்டுள்ளோம்.

“மேலும் நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) விரோதிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில், அவன் உங்கள் இருதயங்களுக்குள் (இஸ்லாத்தின் மூலம்) அன்பையூட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே அவனுடைய அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்குக்கருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை இரட்சித்துக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்.”   (3:103)

” எவர்கள் தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்ததன் பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டுப் பிரிந்து போனார்களோ, அவர்களைப்போல நீங்களும் ஆகிவிட வேண்டாம், இத்தகையோருக்குத்தான் (மறுமையில்) மகத்தான வேதனையுண்டு.”   (3:105)

ஒன்றுபட்ட சமுதாயத்தின் வெற்றி உலகுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழுவது உறுதி! ஒற்றுமை வலுப்பட- வலுப்பட நன்மையின் பால் ஆர்வம் பெருகும்! இறை பேரருளும் கிட்டும்! உறுதியான எஃகினும் வலிமை மிக்கச் சமுதாயமாக உலகின் கண் திகழலாம்.

சரியான-நேரான-முறையான-தெளிவான ஒன்றுபட்ட வழி காட்டியினால் தான், உண்மையான இஸ்லாத்தை-அதன் அடிப்படையான தூய நெறியில், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு உணரத் தலைப்படுவர் அவ்வாறு திரண்டு உணர்கின்ற ஒரே சமுதாயமே உன்னதச் சமுதாயமாகும்.

“விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் (ஒழுங்கையும், சமாதானத்தையும் நிலை நிறுத்தி) சுமூகமாக இருங்கள். (இதில்) அல்லாஹ்வுக்கு அஞ்சி நடவுங்கள் (இதனால்) அவனுடைய பேரருளைப் பெறலாம்.”   (49:10)\

இன்றைய உலகில் அமைதியின்மையும் அட்டூழியங்களும் பெருகிவிட்டன மனிதனை மனிதன் கொன்று பழி தீர்க்க முனைகின்றான் காரணம், மனிதனிடத்தில் இயற்கையாக உள்ள சகிப்புத் தன்மையும் மனிதாபிமானமும்- பற்றும்-பாசமும்-அன்பும் அவனிடத்திலிருந்து எடுபட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன்.\

இதற்கெல்லாம் காரணமென்ன? சாந்தியையும்-சமாதானத்தையும் வலியுறுத்தக் கூடிய ஒரே சமுதாயமான இஸ்லாத்தைப்பற்றி உலகோர் உணராததே!

இறைச்சமும்-இறை நம்பிக்கையும் எம்மனிதனின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றி விடுகின்றதோ, அம்மனிதனால் உலகத்துக்கு-உலக சமுதாயத்துக்கு எந்தக் கேடும் கிடையாது! மாறாக அவனால் உலகம் நலம் பெறவே செய்யும்!

எனவே, உலகமானது உண்மையிலேயே சுபிட்சத்தையும் வளத்தையும்-அமைதியையும்-மனித ஒற்றுமையையும்-கள்ளம் கபடமற்ற தன்மையையும் பெற்று வாழ்வாங்கு வாழ விரும்பினால் இறை நம்பிக்கை யுள்ள ஒரே சமுதாயத்தையே பின்பற்றிச் செல்ல வேண்டும்! அதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை! அல்லாஹ் மிக அறிந்தவன்.

(நிறைவு பெற்றது)

Previous post:

Next post: