அமல்களின் சிறப்புகள்….

in 2020 ஆகஸ்ட்

அமல்களின் சிறப்புகள்….

தொடர் : 60

  1. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ­ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

சென்ற இதழில் ஆய்வு செய்தவை :

அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் 394ம் பக்க கடைசி பத்தியில் உள்ளதை ஆய்வு செய்ததில், கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல என்னென்னமோ வெளிவந்து கொண்டிருக்கிறது. அவை முடிந்த பாடில்லை. இந்த இதழிலும் ஆய்வு தொடர்கிறது.

எமது ஆய்வு :

அசி ஆசிரியரது சிந்தனையின் சிறப்பே இஸ்லாத்தில் இல்லாததை சிந்திப்பதுதான் என்பதை காலம் காலமாக பார்த்து நாம் சலிப்படைந்து விட்டோம். ஆனாலும் கூட்டம் கூட்டமாக மக்கள் ஏமாந்து கொண்டிருக்கத் தயாராக இருக்கிறார்களே, என்ன செய்வது?

கொள்ளை நோயைப் போல கொத்து கொத்தாக பல பிரிவுகளாக முஸ்லிம்களைப் பிரித்து, தமது தப்லீக் ஜமாஅத்தில் அத்தனைப் பிரிவுகளையும் ஐக்கியப்படுத்தி விட்டார் அசி ஆசிரியர். குர்ஆன், ஹதீஃது படி வாழ்பவர்களாக ஒவ்வொருவரும் மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பது மட்டுமே ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள ஒற்றுமை. ஆனால், குர்ஆன், ஹதீஃதை உண்மையில் பின்பற்றுகிறார்களா என்றால், அதுதான் இல்லை, வெளியில் சொல்வது மட்டும்தான் அப்படி. ஒவ்வொரு பிரிவின் செயல்பாடுகளும் வெவ்வேறானவை. ஒவ்வொரு செயல்பாடுகளும் கண்டிப்பாக மார்க்கத்தில் இல்லாத புதுமைகள் ஆகும். இஸ்லாம் காட்டித்தராத அமல்களை செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட ஒவ்வொரு பிரிவினரும் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான் அவர்களின் உச்சகட்ட அறியாமை. இதை அறியாமை என்று சொல்வதை விட வேண்டுமென்றே மக்களை இஸ்லாம் அல்லாததில் தப்லீகின் தலைமை திசை திருப்பி விட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் கூட அது மிகையாகாது. இப்படிப்பட்ட செயல்பாடுகள் தப்லீக் ஜமாஅத்தில் மட்டும் இருப்பதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்.

அல்லாஹ் கொடுத்த மார்க்கம் இஸ்லாம் தான் என்பதும் அதைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதும் அல்லாஹ் அறிவித்த பின்னும், மத்ஹபுகள், பிரிவு இயக்கங் களை ஆரம்பித்து, ஏதேதோ பெயர்களை வைத்துக் கொண்டு, இயக்கத் தலைவர்க ளின் கூற்றை அவர் குர்ஆன், ஹதீஃதுகளில் இல்லாததாக இருந்தாலும், அதை பின்பற்றி பல பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். இப்போது எமது ஆய்வு அமல்களின் சிறப்புகள் புத்தகத்தைப் பற்றியதாக மட்டும் இருப்பதால், தப்லீக் ஜமாஅத் அல்லாத வேறெந்த பிரிவுகளையும் ஆய்வு செய்யும் களமாக இதனை இங்கே நாம் அமைத்துக் கொள்ள வில்லை. இருப்பினும், தப்லீக் ஜமாஅத் செயல்களை ஆய்வு செய்யும்போது, பிற பல பிரிவுகளையும் கடந்து செல்ல வேண்டியிருக்கும் போது, அதை லேசாக தொட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இப்போது தப்லீக் ஜமாஅத்தை ஆய்வு செய்வதைத் தொடருவோம்.

தப்லீக் ஜமாஅத்தில், ஒவ்வொரு பிரிவினரும் அவர்களிடமுள்ள அடுத்த பிரிவு களைப் பற்றி சிறிது தெரிந்திருப்பர். ஒரு சிலர் மட்டும் மற்றவற்றிலும் கலந்து கொள்ளவும் செய்வர். ஒரு பிரிவில் உள்ளவர், அடுத்த பிரிவில் உள்ளோரின் குர்ஆன், ஹதீஃதுக்கு மாற்றமானதை எதிர்க்க முன் வரமாட்டார்கள். ஏனென்றால், எல்லா பிரிவுகளின் உண்மைக் கொள்கை குர்ஆன், ஹதீஃதைப் பின்பற்றக் கூடாது என்ற மாஸ்டர் பிளானுக்கு கட்டுப்பட்டு இருப்பதாகும். இதற்கான அஜெண்டா, கொள்கைக் கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் என்று எதுவுமே எழுத்து வடிவில் இவர்களிடம் இருக்காது, சுலபத்தில் கண்டுபிடித்து விட முடியாதவாறு ஆங்காங்கே குர்ஆன், ஹதீஃதை தம் தவறான கருத்துக்களுக் கேற்ப பிறர் அறியாவண்ணம் நேர்த்தியாக வளைத்து விடுவதில் வல்லமை பெற்றவர்கள் இவர்கள். அமல்களின் சிறப்புகள் மற்றும் அது போன்ற இவர்களின் இதர நூல்களை ஆழமாகப் படித்து பார்ப்பவர்கள் மட்டும் இவர்களை மிகத் துல்லியமாக அடையாளம் காண முடியும்.

சதிவலையால் பின்னப்பட்ட இவர்களின் முகத்திரையை அவ்வப்போது கிழித்துக் காட்ட அல்லாஹ் மனிதர்களில் பலருக்கு அருள்புரிந்து இருப்பதால், இவர்களிடம் இதுவரை அகப்பட்டுக் கொள்ளாதவர்கள், அகப்பட்டுக் கொள்ளாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். காரணம் தப்லீக் ஜமாஅத்தினர் எவரும், அவர்களின் கொள்கைகளை எதிர்ப்பவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. கண்டுகொள்ள ஆரம் பித்தால், குர்ஆன், ஹதீஃதை முன்னிறுத்தி அவர்கள் எதிர்ப்பதால் அவர்களின் பக்கம் இருக்கும் நியாயங்கள் மீது, மூளை சலவை செய்யப்பட தமது ஆதரவாளர்களே கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள். அதன் தொடர்ச்சியாக தொய்வின்றி நடந்து கொண்டிருக்கும் அவர்களது குர்ஆன், ஹதீஃது எதிர்ப்பு பணியில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு விடும் என்பதைத் தெளி வாக அறிந்து, தம்மை எதிர்ப்பவர்களைக் கண்டு கொள்ளாமல் நிதானமாக செயல் பட்டு வருகின்றனர்.

தப்லீக் ஜமாஅத்தில் ஆகப் பரிதாபமானவர்கள் முதல் பிரிவினர் அப்பாவிகள். தான் உண்டு, தம் தொழுகை உண்டு, ஜமாஅத்தில் போவதுண்டு, இவர்கள் கடைநிலைத் தொண்டர்கள் போல, இந்த பிரிவினர்தான் அதிகம் அதிகமாக அலங்காரப் பொருளாக தப்லீக் ஜமாஅத்தின் தலைமையால் வெளி உலகிற்கு எடுத்துக் காட்டப்படுகின்றனர். இவர்களை முன்னிறுத்தியே, இவர்களை விட முக்கியஸ்தர்களாகக் காட்டப்பட்டு வரும் கேடுகெட்ட மற்ற பிரிவுகளின் அமல்கள் உள்ளுக்குள்ளே, அவர்களுக்குள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

அடுத்த பிரிவினரைப் பாருங்கள்! மாற்று மதங்களிலுள்ள குரு சிஷ்ய வழிபாட்டைப் போல, ஷைகுமுரீது வழிபாடாக பலதரப் பட்ட தரீக்காக்களின் பெயரால் இஸ்லாத் திற்குள் நுழைந்து அமல்கள் செய்து வருபவர்கள் அடுத்த பிரிவினர், ஆட்டம் பாட்டம் ஆகியவற்றின் மூலம் இவர்களின் வழிபாடுகள் வெளிப்பாடாகும். மெல்லி சையுடன் இருட்டில் திக்ர், வெளி நாடுகளிலும் நம் நாட்டின் வடக்கிலும் இது பிரபல்யம், ahamiyam.blogspot.com என்ற வலை தளத்தில் இதுபற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ளுங்கள்.

மூன்றாவது பிரிவினர் யார் தெரியுமா? மூஸா(அலை) அவர்களுடனும், நபி(ஸல்) அவர்களுடனும் கஸ்ஸாலியின் கனவு உரை யாடல், இஸ்லாம் காட்டித்தராத கஸ்ஸாலி யின் தியான மண்டப தியானங்கள், இவைகளின் பரிணாம வளர்ச்சியாக ஊரெங்கும் இன்றும் பரவி கிடக்கும் திக்ர் மஜ்லிஸ்கள் என்றெல்லாம் குர்ஆன் மற்றும் ஹதீஃதுகள் காட்டித் தராத கஸ்ஸாலியின் சூஃபிஸ கொள்கை, “மஃரிபா” என்றொரு ஞானம், அந்த ஞானத்தில் தன்னை மறந்த போதை, அந்த போதையில் தப்ஸ் அடித்து பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி தங்களுக்கு தொழுகை கிடையாது என்று பிதற்றித் திரியும் தொழுகாத சூஃபிகள், அவுலியா வழிபாடு, இவ் வாறாகவெல்லாம் இஸ்லாத்தில் இல்லாத தைப் பற்றி சிந்திப்பதில் சிறப்பு இருப்பதாக கூறிக் கொள்ளும் மேல்தட்டுப் பிரிவினர்.

மஃரிபா என்றொரு ஞானம் இஸ்லாத்தில் இருக்கிறதா? அதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்களா? அப்படியானால், அதன் ஆதாரத்தை தப்லீக் ஜமாஅத்தினர் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள், அப்படி ஒரு ஆதாரம் இருந்தால்தானே, அவர்களால் தர முடியும்? பாவம்! ஆதாரம் தர அவர்கள் எங்கே போவார்கள்? அசி ஆசிரியர் ஜக்கரியா இல்லாததை இருப்பதாகக் காட்டி, தப்லீக் ஜமாஅத்தினர் அனைவரை யும் ஏமாற்றி, வழிக்கேட்டில் விட்டுச் சென்று விட்டார்.

எப்படி, எப்போது, எவ்வாறு, எந்தெந்த வார்த்தைகளைக் கொண்டு திக்ர் செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டி தந்து விட்ட பிறகு “சிந்திப் பதில் அல்லாஹ்வின் திக்ர் இருக்கிறது” என்ற பொய் சிந்தனையை அசி ஆசிரியர் எதற்காக இஸ்லாத்தில் அறிமுகப்படுத்து கிறார்? அல்லாஹ்வின் திக்ர் சிந்திப்பதில் இருக்கிறது என்று சொன்னால் திக்ர் செய்வதற்கு அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த வார்த்தைகள் அர்த்தமற்றவைகளா? குர்ஆன், ஹதீஃதுகளுக்கு எதிராக சிந்திக்கும் இந்த விசித்திர சிந்தனையாளர்கள், தவறானதை சிந்திக்கிறார்கள் என்பதை சிந்தித் துணர மாட்டார்களா?

அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தராத இந்த “கேடுகெட்ட சிந்தனை” கிறுக்கன்கள், “சாதாரண மக்கள்தான் ஐவேளை தொழவேண்டும் என்றும், (கஞ்சா அடித்து அடித்து, சிந்தனை மேல் சிந்தனை செய்து, கஞ்சா சிந்தனையால்) மேல் நிலைக்கு(?) வந்துவிட்ட ஞானிகளாகத் தங்களைக் கருதிக்கொண்டு, இந்த ஞானத்திற்கு மஃரிபா என்றும், இந்த நிலையை அடைந்துவிட்ட ஞானிகளுக்கு(!) “தொழுகை கிடையாது’ என்று உளறிக் கொண்டு, அவர்களை சூஃபிகள் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள், கஞ்சா போதை தலைக்கேறி விட்டவுடன் இந்த கிறுக்கன்களுக்கு அதாவது சூஃபிகளுக்கு அல்லாஹ்வின் மீது நேசம் பிறந்து விடுகிறதாம். நேசம்! அதற்கு அசி புத்தகம் வைத்தி ருக்கும் பெயர் முராக்கபா!

தவறாக சிந்தனை செய்து இப்படி சீரழிந்து தங்களையே மறந்து விட்ட இந்த நிலைமை, இந்த கிறுக்குகள் தங்களுக்குள் “முராக்கபா” என்று பெயர் சூட்டி, கும்மி அடித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு கலாச்சார சீர்கேடு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, தப்லிக் ஜமாஅத்தின் முதல் பிரிவில் இருக்கும் அமல்களின் பிரியர்களை கேடயமாக முன்னிறுத்தி மற்ற இரு பிரிவினரும் உள்ளுக்குள் அவர்களுக்குள்ளாக மேல்தட்டு வர்க்கத்தினராக வாழ்ந்து வருகின்றனர். இதை முதல் பிரிவினரான அமல்களின் பிரியர்கள் உணர முன் வராமல் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் சுதாரிக்க ஆரம்பித்தால் தான் தப்லீக் ஜமாஅத்தினர் நல்லபிள்ளை வேஷம் போட்டிருப்பது வெளி உலகிற்குத் தெரிய ஆரம்பிக்கும். எனவே, அவர்களுக்கு சுய சிந்தனை வந்துவிடாதவாறு அவ்வப்போது சலவை செய்யப்பட்டு பிரத்தியேகக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

பழக்கத்தில் இருந்து வந்த நல்ல கலாச்சாரங்களை வெறுத்து ஒதுக்கி, சுதந்திரம் என்ற பெயரில் கஞ்சா போதைக்கு அடிமையாகி, தான்தோன்றித்தனமாக நாடோடிகளைப் போல வெளிநாட்டிலிருந்து ஹிப்பிகள் என்ற பெயரில் இந்தியாவிற்குள் வந்து 1960, 70களில் வாழத் தொடங்கினர். தகாத போக்கில் இருந்த இவர்களைக் காவல்துறை கண்காணிக்கவும் செய்தது.

இந்த ஹிப்பிகளை அரசு கண்காணித்து வந்ததை சினிமாக்காரர்கள் அடையாளம் கண்டனர். அவர்களின் தாறுமாறான சிந்தனை செயல்களை, ஒரு பாடல் மூலம் ஒரு ஹிந்தி படத்தில் வெளியிட்டனர். அப்பாடலின் அபத்தமான கருத்தை சுருக்கமாக கீழே தந்துள்ளோம். பாருங்கள்.

                    போதையில் இருந்தால் துக்கம்  போய்விடும்.

                    உலகம் நமக்கு என்ன செய்தது?

                    உலகத்திலிருந்து நாம் எதை எடுத்தோம்

                    மற்றவர்களைப் பற்றி நாம் ஏன்

                    கவலைப்பட  வேண்டும்?

                    மற்றவர்கள் நமக்கென்ன செய்தார்கள்?

                    நாம் வாழ்வதா? சாவதா?

                    யாருக்கும் நாம் பயப்பட வேண்டாம்!

                    உலகம் நம்மை மாற்ற முடியாது!

                    நமக்கு எது தேவையோ அதை செய்வோம்!

தாறுமாறான சிந்தனைகளால் செயல்பட்ட ஹிப்பிகளை சினிமாக்காரர்கள் அடையாளம் கண்டது போல், இஸ்லாத்தில் இல்லாத மஃரிபா, சூஃபிஸம், முராக்கபா என்ற தாறுமாறான சிந்தனைகளை வெளிப்படுத்தும் தப்லீக்காரர்களை முஸ்லிம்கள் ஏன் அடையாளம் காணவில்லை? அடையாளம் காட்டினாலும் ஏற்க மறுப்பதேன்?

கட்டுப்பாடற்ற சமுதாயமாக போதை சிந்தனையை இஸ்லாத்தில் புகுத்தி அதை மார்க்கம் என்று காட்டி அதற்கு “முராக்கபா” என்று பெயர் சூட்டி கொண்டாடிக் கொண்டிருக்கின்றது இந்த அசி புத்தகம். அல்லாஹ்வின் மீது நேசம் கொண்டிருப்பதாக இதனை சிறப்பித்துக் கூறுகிறது. (அசி புத்தகம் பக்கம் 394ன் கடைசி பாராவில், பல தர்காக்களின் சந்தனக் கூடு திருவிழாக்களில் பீர் என்று சொல்லப்படும் நபருக்கு மேடை போட்டுக் கொடுத்து மேடையின் நடுவில் இந்த பீர்களை மணிக்கணக்கில் கஞ்சா போதையுடன் செக்கச் செவேலென்று சிவந்து போன கண்களுடன் வெறுமனே சிந்தனை செய்யும் நபராக உட்கார வைத்து காட்சி தர செய்கிறார்கள் கஸ்ஸாலியின் பக்தர்கள்.         (இன்ஷா அல்லாஹ் தொடரும்….)

 

Previous post:

Next post: