தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்
அமல்களின் சிறப்புகள்….
ஒரு திறனாய்வு!
- அப்துல் ஹமீத்
தொடர் : 63
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும் :
பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.
சென்ற இதழில் ….!
அல்லாஹுதஆலா மலக்குகளிடம், “உங்களுக்குத் தெரியாத ஓர் அமல் நம்மிடம் இருக்கிறது. அதுதான் அந்த மனிதன் செய்து வந்த திக்ரே கஃபீ என்னும் இரகசியமான திக்ராகும்” என்று சொன்னதாக அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகம் பக்கம் 395ல் ஒரு செய்தி இருக்கிறது. அந்த செய்தியை சென்ற இதழில் ஆய்வு செய்ததில், அந்த செய்தியை அல்லாஹ் சொல்லவில்லை. பொய்யன் ஜக்கரிய்யா புனைந்த கடைந்தெடுத்த அப்பட்டமான பச்சைப் பொய் என்பதைக் கண்டறிந்தோம்.
“மனிதர்கள் செய்கிறதை மலக்குகள் அறிகிறார்கள்” (அல்குர்ஆன்: 82:12) என்று அல்லாஹ் எச்சரித்து இருக்கும்போது, அதற்கு எதிராக மலக்குகளுக்குத் தெரியாமலும் மனிதர்கள் அமல்கள்செய்ய முடியும் என்று அல்லாஹ்வே கூறியதாக நெஞ்சழுத்தத்துடன் பொய் சொன்னவர்தான் ஜக்கரிய்யா, இஸ்லாத்தில் இல்லாத கருத்துக்களையும், இஸ்லாத்தில் இருப்பவைகளுக்கு எதிரான கருத்துக்களையும் தேடிக் கண்டுபிடித்து பரப்பும் ஆசாமிதான் இந்த ஜக்கரிய்யா என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் புரிந்து கொண்டு, அந்த நபரின் தவறான கொள்கைகளை ஓரம் கட்ட வேண்டியது ஈமான் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் சுமத்தப்பட்ட முக்கிய பொறுப்பாகும் என்பதை உணர்ந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அசி புத்தகம் கூறும் அடுக்கடுக்கான பொய்கள்:
இந்த இதழில் ஜக்கரியாவின் அடுத்தடுத்த பொய்களை கவனிப்போம். பக்கம் 395ல் திக்ரே கஃபீ என்னும் இரகசியமான திக்ர் என்று பொய் சொன்ன ஜக்கரிய்யா பக்கம் 397ன் முதல் பாராவில் திக்ரே காமில்” என்ற, மார்க்கத்தில் இல்லாத திக்ரை அடுத்து அறிமுகப்படுத்துகிறார். அப்புத்தகத்தில் எழுதியிருப்பதை இப்போது கவனிப்போம்.
ஒரு ஹதீஃதில், “நீங்கள் அல்லாஹ்வை திக்ரே காமில் மூலம் நினைவுகூர்வீர்களாக” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, திக்ரே காமில் என்றால் என்ன? என்பதாக ஒரு ஸஹாபீ கேட்டார். அது திக்ரே மக்பீ எனப்படும் இரகசியமான திக்ராகும் என பதிலளித்தார்கள்.
எமது ஆய்வு :
திக்ரே கஃபீ என்றால் என்ன? அந்த திக்ரில் கூறவேண்டிய சொற்கள் எவை? என்று இதுவரை அசி புத்தகம் கூறியதில்லை. இந்த நிலையில் இப்போது திக்ரே காமில், திக்ரே மக்பீ என்ற இரண்டு திக்ர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். திக்ரே காமில் என்றால் என்ன? அந்த திக்ரில் கூறவேண்டிய சொற்கள் எவை? என்றும், திக்ரே மக்பீ என்றால் என்ன? அந்த திக்ரில் கூறவேண்டிய சொற்கள் எவை? என்றும் இதுவரை அசி புத்தகம் விளக்கவில்லை.
திக்ரே காமில் என்றால் என்ன? என்பதாக ஒரு ஸஹாபி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டும், திக்ரே காமில் என்பதை எப்படி அமல்படுத்த வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறாமல், திக்ரே மக்பீ தான் திக்ரே காமில் என்று கூறியதாக பொய்யன் ஜக்கரியா இந்த பொய்யான விஷயத்தை ஹதீஃத் என்று கூறுகிறார். திக்ரே மக்பீ தான் திக்ரே காமில் என்றால், திக்ரே மக்பீயையாவது விளக்கப்பட்டு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இப்படியாக ஏற்கனவே கூறிய திக்ரே கஃபீ, இப்போது கூறுகின்ற திக்ரே காமில், திக்ரே மக்பீ என்று ஜக்கரிய்யா ஒரு குழப்பு குழப்புகிறார். இப்படியே குழப்பத்தில் விட்டுவிட்டு, அடுத்த தாவு தாவி தயாராக வைத்திருக்கும் தமது உளறல்களை அடுத்த பாராவில் அவிழ்த்து விடுகிறார். அந்த பொன்மொழிகளை(!)ப் பாரீர்!
அசி புத்தகம் பக்கம் 397ல் கடைசி பாராவில் உள்ளவை :
மேற்கூறப்பட்ட அறிவிப்புகளிலிருந்து திக்ரே கஃபீ மிகச் சிறந்தது என்று தெரிய வருகிறது. இதற்கு முன் கூறப்பட்ட அறிவிப்பில் உங்களைப் பைத்தியக்காரர் என்று சொல்லுமளவுக்கு அதிகமாக திக்ர் செய்யுங்கள் என்று கூறப்ட்டுள்ளது. இவை இரண்டும் சந்தர்ப்பங்களைக் கவனித்து மாறுபடக் கூடிய தனித்தனி விஷயங்களாகும். யாருக்கு எந்த நேரத்தில், எந்த திக்ரு பொருத்தமானது என்பதை ஆன்மீக வழிகாட்டியான ஷைகு தீர்மானிப்பார்.
எமது ஆய்வு :
திக்ரே கஃபீ சிறந்தது என்று ஆரம்பித்த ஜக்கரிய்யா, இந்த பொய் போதாதென்று திக்ரே காமில் என்று அடுத்த பொய் திக்ர் ஒன்றை கொண்டு வருகிறார். இதுவும் போதாதென்று திக்ரே மக்பீ என்று அதற்கும் அடுத்த பொய் திக்ர் ஒன்றையும் கொண்டு வருகிறார். இப்போது திக்ரே மக்பீ தான் திக்ரே காமில் என்று வித்தை காட்டுகிறார். திக்ர் விஷயத்தில் இதுதான் இவரது இறுதி தீர்ப்பு என்று நினைக்க வைத்துவிட்டு, திடீரென்று தடாலடி அறிவிப்பு ஒன்றை அடுத்த பாராவில் தெரிவிக்கிறார்.
அந்த அறிவிப்பாவது : “மேற்கூறப்பட்ட அறிவிப்புகளிலிருந்து திக்ரே கஃபீ மிகச் சிறந்தது என்று தெரிய வருகிறது” என்கிறார். அந்த அறிவிப்புகள் என்னவென்று நாம் பார்த்தால் திக்ரே காமில், திக்ரே மக்பீ ஆகியவைகளுக்குத் திரும்ப வந்து விடுகிறார். இப்படியாக கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிவிட்டு, தமது உளறலை ஜக்கரிய்யா மென்மேலும் தொடர்கிறார்.
இதற்கு முன் கூறப்பட்ட அறிவிப்பில் உங்களைப் பையித்தியக்காரர் என்று சொல்லுமளவுக்கு அதிகமாக திக்ர் செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது என்கிறார். அந்தப் பொய்யைக் கூறியவரே இவர்தான்: ஆனால் இதில் தமக்கு ஏதும் சம்பந்தம் இல்லாததைப் போல், கூறப்பட்டுள்ளது என்று கூறி எஸ்கேப் ஆகிறார்.
என்ன? ஏது? எப்படி? என்றெல்லாம் சொல்லாமல் திக்ர் செய்யச் சொல்கிறோமே, அப்படிச் செய்வதால் மக்கள் இவர்களை பைத்தியங்கள் என்று சொல்லுவார்களே என்பதையும், மக்கள் அப்படி சொல்லும்போது தமது பக்தர்களிடம் என்ன விளைவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப பைத்தியக்காரத்தன மாக செயல்படும்படியான திக்ர்களை செய்யச் சொல்லுகிறார் ஜக்கரிய்யா. அப்படியாக திக்ர் செய்வதைப் பார்த்த மக்கள் அவர்களை பைத்தியக்காரர்கள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். அவ்வாறு மக்கள் அவர்களை பைத்தியக்கார பயல்கள் என்று சொல்லும்போது, “மக்கள் நம்மை பைத்தி யக்காரர் என்று சொல்லுவார்கள் என்று ஹஜ்ரத்ஜி அன்றே சொன்னார். அது இன்று நடந்து விட்டது என்று மூளைச்சலவை செய்யப்பட்ட கிறுக்குகள், என்ன ஏது என்று விளங்கி கொள்ளாமல் ஜக்கரியாவின் புகழ்பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
எங்கோ இருக்கும் சுவிட்சை தட்டினால் வேறு எங்கோ இருக்கும் லைட் எரிவது போல, அப்படிச் செய்தால் இந்த கிறுக்குகள் நம் புகழைப் பாடித் தீர்க்கும் என்பதை சர்வ கலா கில்லாடி ஜக்கரியா எதிர்பார்த்து ஒவ்வொன்றையும் வடிவமைத்து இருக்கிறார்.
ஹஜ்ரத்ஜி(?) ஜக்கரியாவின் உளறல்களுக்கு கிரீடமாக, அடுத்த பொன்மொழி களை(?) அவர் உதிர்ப்பதைப் பாருங்கள். “இவை இரண்டும் சந்தர்ப்பங்களைக் கவனித்து மாறுபடக்கூடிய தனித்தனி விஷயங்களாகும். யாருக்கு எந்த நேரத்தில் எந்த திக்ரு பொருத்தமானது என்பதை ஆன்மீக வழிகாட்டியான ஷைகு தீர்மானிப்பாராம்.
இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மட்டுமே இஸ்லாத்தின் வழிகாட்டி என்பதை ஈமான் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து வைத்திருக்கும் நிலையில், கண்ட கண்ட கழிசடைகள் எல்லாம் ஆன்மீக வழிகாட்டி (ஷைகு) என்கிறார். இந்த ஜக்கரிய்யா, ஷைகு-முரீது என்பதெல்லாம் வேறு கலாச்சாரங்களில் காணப்படும் குரு -சிஷ்யன் வழிபாடுகள் ஆகும். ஜக்கரியா காப்பி அடித்த ஷைகு, முரீது கண்டுபிடிப்பு களுக்கும், இஸ்லாத்திற்கும் எள்ளின் முனையளவுகூட சம்பந்தம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டதோடு நிறுத்திக் கொள்வோம். ஏற்கனவே இதுபற்றி நிறைய எழுதி இருப்பதால், அடுத்த செய்திகளை இனி கவனிப்போம்.
சென்ற இதழில் அல்லாஹ்வின் கட்ட ளையை ஏற்று, ஜக்கரிய்யாவை சபித்திருக் கும் ஒவ்வொருவரும் தங்களைத் தளர்த்திக் கொள்ள (யூசிஸிபுயீபுவீணூநுஹி) வேண்டியிருப்ப தால், இப்போது அசி புத்தகத்தில் உள்ள சில காமெடிகளை எமது ஆய்வு இல்லாமல் நீங்களே அவைகளை நேரடியாகப் படித்து, சிரித்து, மகிழ்ந்து உங்களை நீங்களே ரிலேக்ஸ் செய்துகொள்ளும்படி விட்டுவிட முடிவு செய்தோம். ஆனால் ஆய்வு செய்தும், மூளைச் சலவை செய்யப்பட்டவர்களில் பலர் இன்னும் தங்களைத் திருத்திக் கொள்ளாததால் ஆய்வுடன் அவைகளை வெளியிடுவதைத் தொடர்கிறோம். மோடி மஸ்தான் வித்தைக் காட்டுவது போல, பிரமிக்கத்தக்க வகையில் ஆச்சரியப்பட வைக்கும் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்ட கற்பனைக்கதை காமெடிகளை அசி புத்தகத்தில் பிரசுரித்திருப்பதைக் கீழே தந்துள்ளோம்.
அசி புத்தகத்தின் கற்பனைக் கதைகள் பக்கம் 396 முதல் பத்தி :
ஹஜ்ரத் ஜுனைத் பக்தாதி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ஒருநாள் ஷைத்தான் நிர்வாணமாக இருப்பதைக் கண்டார்கள். “மக்களுக்கு மத்தியில் நிர்வாணமாக இருப்பது உமக்கு வெட்கமாக இல்லையா என்று அவனிடம் கேட்டபோது, இவர்கள் என்ன மனிதர்கள்? சோனிஸிய்யாவுடைய மஸ்ஜிதில் அமர்ந்திருக்கிறார்களே அவர்கள் தாம் மனிதர்கள். அவர்கள் தாம் என்னுடைய உடலை மெலியச் செய்து என் ஈரலைக் கருகச் செய்துவிட்டார்கள் என்று கூறினான்.
சோனிஸிசிய்யா மஸ்ஜித் எங்கே இருக்கிறது என்று எமக்குத் தெரியாது. வாசகர் களாகிய உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக ஜக்கரிய்யாவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் எழுதியிருப்பவர் அவர்தானே. ஒருக்கால் இதுவும் அவர் கற்பனையில் உதித்த பொய் என்றால், அந்த மஸ்ஜிதுக்கு சோனிஸிசிய்யா மஸ்ஜித் என்ற அந்த பெயரை ஜக்கரிய்யா எப்படித் தேர்ந் தெடுத்திருப்பார் என்றால், அந்த மஸ்ஜிதில் முராக்கபா என்ற நிலையில் திக்ரில் ஈடுபட்டிருப்பவர்கள் தாம், என்னுடைய உடலை மெலியச் செய்து என் ஈரலைக் கருகச் செய்து விட்டார்கள் என்று ஷைத்தான் கூறியதாக ஜக்கரியா சொல்லி இருக்கிறார் அல்லவா? அதாவது ஷைத்தானின் உடல் மெலிந்து ஈரல் கருகி, ஷைத்தான் அந்த மஸ்ஜிதில் சோனியாக ஆக்கப்பட்டதால், அந்த மஸ்ஜிதுக்கு சோனிஸிய்யா மஸ்ஜித் என்ற பெயரை ஜக்கரிய்யா தேர்ந்தெடுத்து இருப்பாரோ?
எமது இந்த ஆய்வை தொடர்ந்து படித்து வருபவர்களில் சிலர் நாம் இப்படி சிந்தித்திருப்பது போல் சிந்தித்திருக்க வாய்ப்புண்டு. வேறு சிலர், ஆய்வுக்கு சம்பந்தம் இல்லா ததை எழுதி இருக்கிறோம் என்று குற்றம் சாட்டுவது எமக்குத் தெரிகிறது. தெரிந்தும் ஏன் எழுதி இருக்கிறோம் என்றால், அசி புத்தகத்தில் ஜக்கரியாவின் சிந்தனை இந்த அடிப்படையில் வேண்டாத சிந்தனையா கத்தான் இருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
ஸஹீஹுல் புகாரியில் ஹதீஃத் எண். 2311ன் ஹதீஃதின் சுருக்கத்தை பாருங்கள். “அபூஹுரைரா(ரழி) அவர்கள் ரமழானுடைய ஃபித்ரா பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, இரவு நேரங்களில் காவல் காத்துக் கொண்டிருக்கையில், அப்பொருட்களைத் தொடர்ந்தாற்போல் அந்த மூன்று நாட்களின் இரவுகளிலும் திருட வந்த ஒரு மனிதரைக் கையும் களவுமாக தினமும் பிடித்து வினவுகிறார். அவனும் மூன்று தினங்களும் அபூஹுரைரா(ரழி) அவர்களிடம் தாம் ஏழை என பதிலளித்து அவரின் இரக்க குணத்தைக் கொண்டு தப்பித்துக் கொள்கிறான். இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள், அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும், அபூஹுரைராவிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான். மூன்று இரவுகளாக அபூஹுரைரா யாரிடம் பேசி வந்திருக்கிறார் என்றால் ஷைத்தானுடன் தான் என்றும் கூறினார்கள்.
அந்த ஹதீஃதில் ஷைத்தான் மனித உருவில் நிர்வாணமாக வரவில்லையயன்று காட்டப்படுகிறது. ஹஜ்ரத் ஜுனைத் பக்தாதி, மஸுஹி போன்ற தப்லீக் ஜமாஅத் தின் அவுலியாக்கள் மட்டும் ஷைத்தானை ஸ்பெஷலாக பார்க்க முடியும் போல இருக்கிறது. அதுவும் தப்லீக் ஜமாஅத் பெரியார்களுக்கு மட்டும் ஷைத்தான் ஜக்கரியாவின் கோணல் எண்ணங்களின்படி அம்மணமாகத்தான் காட்சி தருவான் போலிருக்கிறது.
இப்போது விஷயத்திற்கு வருவோம். சோனிஸிய்யாவுடைய மஸ்ஜிதைப் பற்றி ஷைத்தான் கூறினான் அல்லவா? தப்லீக் அவுலியா ஹஜ்ரத் ஜுனைத் பக்தாதி விட்டு விடுவாரா? நேராக ஸ்பாட் விசிட் அடிக்கிறார் ஜுனைத். அந்த தமாஷைப் பாரா 2ல் பாருங்கள்.
பக்கம் 396 இரண்டாம் பத்தியில் உள்ளவை:
ஹஜ்ரத் ஜுனைத் பக்தாதி அவர்கள் கூறுகிறார்கள். நான் சோனிஷிய்யா மஸ்ஜிதிற்குச் சென்று பார்த்தபோது, (இதுதான் நேரடியான ஸ்பாட் விசிட்) அங்கு சில பெரியார்கள் தங்களின் தலைகளை முழங்கால்களின் மீது வைத்தவர்களாக முராக்கபாவில் ஈடுபட்டிருந்தார்கள் அவர்கள் என்னைக் கண்டதும், “அந்த தீயவனின் பேச்சைக் கேட்டு ஏமாந்து விடவேண்டாம்” என்று கூறினார்கள்.
எமது ஆய்வு :
பலே! ஷைத்தானின் அடியான் ஜக்கரியா ஷைத்தானின் பேச்சை உண்மையாக்குவதை இப்போதே கண்டுகளியுங்கள். அதாவது ஷைத்தான் கூறியது அங்கே நடக்கிறது. அவனது உடலை மெலியச் செய்து, அவனது ஈரலைக் கருகச் செய்து மனிதர்களை அங்கே காண்கிறாராம் ஜுனைத்! ஜகரிய்யா முன்பு முராக்கபா என்று எழுதி இருந்தாரே அது எப்படி என்று ஜக்கரிய்யா இங்கே விளக்குகிறார். தங்களின் தலைகளை (யோகாசனத்திலுள்ள ஆசனம் போல) முழங்கால்களின் மீது வைத்தவர்களாக முராக்கபாவில் ஈடுபட்டிருந்தவர்களாம். (முராக்கபா என்றால் (கேடுகெட்ட) சிந்தனை என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம்)
அடுத்ததைப் பாருங்கள். ஷைத்தானின் உடலை மெலியச் செய்து, அவனது ஈரலைக் கருகச் செய்த அந்த முராக்கபா செய்து கொண்டிருந்த மனிதர்கள், ஹஜ்ரத் ஜுனைத் பக்தாதி அவர்களைக் கண்டதும் “அந்த தீயவனின் பேச்சைக் கேட்டு ஏமாந்து விடவேண்டாம்” என்று கூறினார்களாம். புல்லரிக்கின்ற இந்த உணர்ச்சி பூர்வமான டயலாக்கைப் படித்தவுடன், தப்லீக் கிறுக்குகள் உண்மையை உணராமல் ஆஹா ஓஹோ என்று ஜக்கரியாவின் புகழ்பாடித் தீர்க்கின்றன.
எப்படி எழுதினாலும் எதை எழுதினாலும் தலையை ஆட்டிக்கொண்டு படிப்பதற்கும், படிப்பதைக் கேட்பதற்கும் ஆட்கள் இருக்கும்போது, தமது இஷ்டம் போல ஜக் கரிய்யா மார்க்கத்தில் புகுந்து விளையாடி எழுதித் தள்ளி கொண்டிருக்கிறார் என்பது எப்போதும் தெளிவானது போல இப்போதும் தெளிவாகி விட்டது. எப்படி என்றால் ஷைத்தானின் பேச்சைக் கேட்டு ஜுனைத் பக்தாதி சோனிஸிய்யா மஸ்ஜிதிற்கு வருகிறார் என்று எழுதிய ஜக்கரிய்யா, அங்கு முராக்கபாவில் ஈடுபட்டிருந்த பெரியார்கள், ஜுனைதிடம் “அந்த தீயவனின் பேச்சைக் கேட்டு ஏமாந்து விடவேண்டாம்’ என்று கூறினார்கள் என்றும் ஜக்கரிய்யா எழுதுகிறார். அப்படி என்றால், சோனிஸிய்யாவுடைய மஸ்ஜிதில் அமர்ந்திருக்கிறார்களே அவர்கள்தாம் மனிதர்கள். அவர்கள் தாம் என்னுடைய உடலை மெலியச் செய்து என் ஈரலைக் கருகச் செய்து விட்டவர்கள்” என்று முராக்காபாவில் ஈடுபட்டிருந்த பெரியார்களைப் பற்றி ஷைத்தான் கூறியது பொய் என்பதற்கு ஜக்கரிய்யா வுக்கு ஜக்கரிய்யாவே முரண்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டதால் அடுத்த பொய்யை இனி ஆய்வு செய்வோம்.
பக்கம் 396 மூன்றாம் பத்தியில் உள்ளவை :
இதேபோன்று மஸூஹீ (ரஹ்மத்துல் லாஹி அலைஹ) என்பவர்களும் ஷைத்தான் நிர்வாணமாக அலைவதைக் கண்டு, மனிதர்களுக்கு மத்தியில் இவ்வாறு நிர்வாணமாக அலைவது உமக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டபோது, அல்லாஹ்வின் மீது ஆணையாக இவர்களெல்லாம் மனிதர்களே அல்லர். இவர்கள் மனிதர்களாக இருந்தால், குழந்தைகள் பந்து விளையாடுவது போல இவர்களை நான் விளையாட முடியாதே. என் உடலை நோயுறச் செய்தவர்கள்தான் மனிதர்கள் என்று கூறிய பின், சூபியாக்களில் ஒரு கூட்டத்தினரை சுட்டிக்காட்டினான். இஸ்லாத்தில் இல்லாததை செயல்படுத்தும் கூட்டம்தான் சூபியாக்கள் என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம். எனவேதான், ஜக்கரிய்யாவின் இஸ்லாம் இப்படி இருக்கிறது.
பக்கம் 396 நான்காம் பத்தியில் உள்ளவை :
அபூ ஸயீத் கஸ்ஸாஸ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள். நான் கனவில் ஷைத்தானைக் கண்டேன். அவன் என்னைத் தாக்கினான். நான் ஒரு தடியால் அவனை அடிக்க ஆரம்பித்தேன். அவன் அதனை சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. அப்பொழுது “இவன் இதனால் எல்லாம் பயப்படமாட்டான். மனதின் ஒளியைக் கொண்டுதான் பயப்படுவான்’ என்று ஒரு அசரீரி கேட்டது. ஆஹா! எவ்வளவு பெரிய கப்சா! ஷைத்தான் தாக்கினான். பெரியார் தடியால் அடித்தாராம். எப்போதாவது எங்காவது இப்படியயல்லாம் மார்க்கத்தில் படித்து இருக்கிறோமா? ஜக்கரியாவின் ஷைத்தானிய வழியில் மட்டுமே மிகமிக சுல பமாக பெரியார்களைக் கொண்டு(?) இது மாதிரியான விஷயங்கள் நடத்தப்படும்.
“அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையை சொல்பவனை விட பெரும் அக்கிரமக்காரன் யார்? அத்தகையோர் மறுமையில் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். “இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி சொல்வோர் கூறுவார்கள், இத்தகைய அநியாயக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” (அல்குர்ஆன்:11:18)
“நிச்சயமாக நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு அளிக்கமாட்டான்: அன்றி அவர்களை நேர்வழியிலும் செலுத்தமாட்டான்”
(அல்குர்ஆன்: 4:168)
“நரகத்தின் வழியைத் தவிர, அதில் அவர் கள் என்றென்றும் தங்கி விடுவார்கள், இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது”. (அல்குர்ஆன்: 4:169)
“அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழியில் நடத்தமாட்டான்” (அல்குர்ஆன்: 9:109) இன்ஷா அல்லாஹ் தொடரும்…