இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளில் முஸ்லிம்கள் அங்கத்தினர்களாக இருக்கலாமா?

in 2021 பிப்ரவரி

இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளில் முஸ்லிம்கள் அங்கத்தினர்களாக இருக்கலாமா?

அபூ தஸ்னீம், குவைத்

இன்றைய நவநாகரீக உலகில் அரசியல்வாதிகளுக்கு உள்ள அடையாளம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற சிறப்பு அம்சங்கள்தான் தகுதியாக கருதப்படுகிறது. இவை மூன்றும் இல்லையென்றால் அரசியல் உலகிலேயே அரசியல்வாதிகள் ஆச்சரிய கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள். நேர்மை என்ற வார்த்தைக்கு இன்றைய அரசியலில் இடம் கிடையாது. நேர்மையானவர்கள் அரசயிலில் புகுந்தால் பிறகு நாட்கள் செல்லச் செல்ல பன்றியோட சேர்ந்த கன்றுகளாகத்தான்ட இருக்க நேரிடும். ஒவ்வொரு வழிமுறைக்கும் சாக்கடை என்ற புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

இப்போது நாம் இந்திய ஜனநாயக அரசயில் கட்சிகளையும், தலைவர்களையும் உற்றுநோக்கவேண்டும். இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்ப காலத்திலேயே அரசியல் அமைப்பாக தோன்றியதாக சரித்திரம் கிடையாது. அவர்கள் ஆரம்ப காலத்தில் அதாவது முதலில் பொதுநலத் தொண்டு நிறுவனம் அல்லது அமைப்பு என்றுதான் ஆரம்பிப்பார்கள். காரணம் ஆரம்ப காலத்திலேயே அரசயில் அமைப்பு என்று ஏற்படுத்திவிட்டால் மக்களிடம் செல்வாக்கு இருக்காது என்று நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

பொதுநலத் தொண்டு அமைப்பு ஏற்படுத்தியவுடன் தலைவர் முதலில் மைக்கை பிடித்து என்ன சொல்லி ஆரம்பிப்பார் என்றால், எங்கள் அமைப்பு மக்களுக்கு பொதுநல சேவை செய்வதற்கே ஆரம்பித்துள்ளோம். ஆனால் ஒருபோதும் அரசியல் அமைப்பாக மாற்றிக் கொள்ளமாட்டோம் என்று தேன் சுவை இனிப்பான பசப்பு வார்த்தைகள் சொல்லி கக்குவார்கள். ஒருசில நல்ல காரியங்களை பொதுப்படையாக செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்குவார்கள். அப்போது அவர்கள் அமைப்புக்கு உறுப்பினர்கள் நிறைய பேர் சேர ஆரம்பித்து விடுவார்கள். அந்த மாதிரி காலகட்டத்தில் தான் இவர்களின் சூழ்ச்சியை அறியாத அப்பாவி்முஸ்லிம்களும் உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டிருப்பார்கள். இந்த ஒரு வழிமுறையில் தான் எல்லா அரசியல் கட்சிகளிலும் முஸ்லிம்கள் சேர்ந்ததாகவே இருக்கிறது.

தேர்தல் நேரம் வருவது மாதிரி தெரிந்தால் இவர்களின் பொதுநலச் சேவை அமைப்பானது அரசயில் கட்சி அமைப்பாக தோற்றுவிக்கப்படும். அப்போதுதான் இவர்களின் அரசயில் கட்சி அமைப்பால் குடுமிப்பிடி சண்டைகள் ஆரம்பமாகும். பதவிக்காகவும், பணத்திற்காகவும், உலக சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கும், அந்த நேரங்களில் இவர்களின் செயல் பிடிக்காதவர்கள் வேறொரு கட்சியில் அடைக்கலமாகி விடுவார்கள். இப்படி எல்லா கட்சிகளிலும் குரங்கு மாதிரி தாவிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால் ஒரு மனிதன் அரசயில் கட்சியில் சேருகிறான் என்றால், சேர்ந்தபிறகு அவனுக்கு ஒருவேளை அந்த கட்சி பிடிக்கவில்லையென்றால் வேறொரு கட்சியில் சேருவானே தவிர அரசியல் என்ற சாக்கடையிலிருந்து விடுபடமாட்டான். அது அவனுக்கு இரத்தத்தோடு கலந்த வியாதியாக இருக்கிறது. அந்த ஒரு வழியில்தான் நம் முஸ்லிம் சகோதரர்களும் விடுபட முடியாமல் இந்திய ஜனநாயக அரசயில் கட்சிகளில் சாக்கடை வாழ்க்கை அல்லது அடிமை அரசியல் வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான்ட என்னவோ அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். அது போலவே அரசியல் கட்சிகளில் உள்ள முஸ்லிம்களுக்கு இஸ்லாம் என்ற கொள்கை அடையாளத்தை பார்ப்பது குதிரை கொம்பாகவே பார்க்க நேரிடுகிறது.

இதனுடைய விளைவு என்னவென்றால் இந்தியாவில் மதக் கலவரங்களை ஆரம்பித்து, இறையில்லங்களை இடித்து முஸ்லிம்களை கொன்றொழித்து சொத்து சுகங்களை சூரையாடி முஸ்லிம்களை கசக்கிப் பிழிந்து அரசியல் என்ற அராஜக வாழ்க்கையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள், இப்படிப்பட்ட கட்சித் தலைவர்களுக்கு அக்கட்சியில் உள்ள முஸ்லிம்களே தோளோடு தோள் சேர்ந்து உறுதுணையாக இருக்கிறார்கள்.

ஆகையால் இனி நாம் அரசியல் கட்சியில் உள்ள முஸ்லிம்களிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அவர்களை அக்கட்சியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டியது ஒவ்வொரு மூஃமினான முஸ்லிமின் கடமையாக இருக்கிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனிழ கொள்கைகள் உண்டு. அதிலேயும் இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகள் சமய சார்பற்றது என்ற கொள்கையுடைய கட்சியாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் அக்கொள்கையை உற்றுநோக்கும்போது இந்தியாவில் பெரும்பான்மையினராக வாழக்கூடிய இந்து மதத்தவர்களுக்கு சாதகமான கொள்கையாகவே அதிகம் இடம் பிடித்திருக்கும். அதன் வழிமுறையிலேயே கட்சிகளையும் வழிநடத்திச் செல்வார்கள். இஸ்லாமிய கொள்கை சம்பந்தமாக ஏதோ பெயரளவுக்கு சில அம்சங்கள்தான் இருக்கும். அதனால் கட்சியில் இருக்கக்கூடிய முஸ்லிம்கள் இந்து மதத்தவர்களின் வழிமுறையிலேயே செல்ல நேரிடுகிறது.

எடுத்துக்காட்டாக சிலை வைப்பது, பிறகு அதை வணங்குவது, பிறகு அதற்கு கோயில் கட்டுவது பிறகு அந்த கோயிலில் திருவிழாக்கள் எடுப்பது இவை போன்ற அம்சங்கள் நிறைய அமைந்திருக்கிறது. இவை அனைத்திலேயும் கட்சியில் இருக்கக்கூடிய முஸ்லிம்கள் தாங்கள் கட்சிக்காக பேரும் புகழும் கிடைப்பதற்காக பங்கெடுத்து கொள்கிறார்கள். அதேபோல பங்கெடுத்து கொள்கிறார்கள். அதேபோல தர்ஹா வழிபாடுடைய முஸ்லிம்கள் எடுக்கக்கூடிய விழாக்களிலும் அதாவது கந்தூரி, உரூஸ், சந்தனக்கூடு போன்றவற்றிலும் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கெடுத்துக்கொண்டு சிந்தனையற்ற முஸ்லிம்களின் பெருமதிப்பைப் பெறுவார்கள்.

இப்படியாப்பட்ட முஸ்லிம் அரசயில்வாதிகள் நடைமுறை இஸ்லாத்தை பற்றிப்பிடித்து விடுகிறார்கள். கொள்கை ரீதியான இஸ்லாத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதனால்தான் என்னவோ 99 சதவீதம் முஸ்லிம் அரசியல்வாதிகள் தொழுவது கிடையாது. தாடி வைப்பது கிடையாது, குர்ஆனை விளங்குவது கிடையாது. இதனால்தான் இவர்கள் அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு எந்த மாற்றுமத சித்தாந்தத்தில் வந்து விடுகிறார்கள். இவர்களின் செயல்கள் அதிகமாக இணைவைக்கும் செயலிலேயே தங்களின் வாழ்நாளை கழிக்கிறார்கள்.

நிச்சயமாக அல்லா் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். ( அல்குர்ஆன் : 4:48)

ஆகையால் இஸ்லாம் அல்லாத வழிமுறைகள் எல்லாம் வழிகேடே, அதேபோல இந்திய ஜனநாயக அரசியல் கட்சியில் உள்ள முஸ்லிம்கள் ஒரு வெகுதூரமான வழிகேட்டில்தான் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று நாம் எண்ணவேண்டியுள்ளது. ஆகையால் இவர்களுக்கு இஸ்லாம் என்பது ஒரு எட்டாக்கனிதான்.

அடுத்து முஸ்லிம்களுக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது. அதுதான் இஸ்லாம். இந்த இஸ்லாத்தை பற்றிப் பிடிக்க முஸ்லிம்கள் கடமைப்பட்டுள்ளார்கள். ஆனால் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளோ தங்கள் கட்சியின் கொள்கையினைத்தான் பற்றிப் பிடிக்கிறார்கள். இவர்களின் பேச்சு எப்போதுமே எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையின் ரீதியில் தான் ஓடிக்கொண்டிருக்கும். பிறகு காலச்சக்கரம் சுழலும்போது திடீரென்று நாத்தீகவாதிகளாகவும் மாறிவிடுவார்கள். எல்லாம் காலத்தின் கொலமாகவே இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் காட்சியளிப்பார்கள்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் பலம் தான் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் இவர்கள் எல்லாம் இந்து என்ற மத அடிப்படையில் பிராமணர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் காஞ்சி காமக்கோடி மடாதிபதியின் காலடியிலும் வீழ்ந்து கிடக்கிறார்க். ஆனால் நம் முஸ்லிம் அரசியல்வாதிகள் நிலைமையோ வேறுவிதமாகத்தான் இருக்கிறது. அதாவது இவர்கள் பள்ளிவாசல் பக்கம் எட்டிப் பார்ப்பதும் கிடையாது. மேலும் இஸ்லாமிய (குர்ஆன், ஹதீத்) கருத்துக்களை கேட்பதும் கிடையாது.

திராவிட கட்சிகள் இந்து என்ற அடிப்படையில் பிராமணர்களோடு ஒன்றாக ஐக்கியமாகி விடுகிறார்கள். ஆனால் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளோ இஸ்லாமியர்களோடு ஒன்றுசேர்வது கிடையாது. அதனால்தான் திராவிட கட்சிகள் மாறி மாறி ஹிந்துத்துவா கொள்கையுடைய பா.ஜ.க.வை ஆதரித்தபோதிலும் பாபரீ மஸ்ஜித் இடித்து தகர்க்கப்பட்ட பிறகும் இன்றும் ஜனநாயக அரசயில் கட்சிகளுக்கு நம் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊன்று கோலாக இருக்கிறார்கள். ஆக பாபரீ மஸ்ஜித் பிரச்சனையின் மூலம் நடந்துக் கொண்டிருக்கிற கலவரங்களுக்கு பெட்ரோல் ஊற்றுவதே இந்த முஸ்லிம் அரசயில்வாதிகள்தான். நம் இஸ்லாத்தைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ, கொஞ்சம்கூட கவலைப்படாமலும், சிந்திக்காமலும் கட்சியை கட்டிக்காப்பதில்லையே உறுதியாக இருக்கிறார்கள். காலங்கள் மாறும்போது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைப்பதும் அவரவர்களின் கட்சியே. இந்த செயலை ஆரம்பிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இப்போதே விழித்துக் கொண்டால் நல்லது. இல்லையென்றால் அது மரண துக்கத்தில்தான் போய் முடிவடையும்.

ஒரு முஸ்லிம், இஸ்லாமிய கொள்கையை நிலைநிறுத்தி ஆட்சி அமைப்பது தான் இறுதி சட்ட இலட்சியமாக இருக்க வேண்டும். ஆனால் நம் முஸ்லிம் அரசயில்வாதிகளோ சமய சார்பற்ற கொள்கை என்ற போர்வையில் இந்து மத கொள்கைகளை, நாத்தீக் கொள்கைகளை  அமைப்பதற்கு தோளோடு தோள் சேர்ந்து அஸ்திவாரம் போட்டுக் கொடுக்கிறார்கள்.

மது, மாது, சூது, சினிமா போன்ற எல்லா ஷைத்தானிய வழிமுறைகளையும் அரசியல் கட்சிகள் அரசாங்க வருமானத்திற்காக அனுமதி அளித்த நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிற கலாச்சார சீரழிவுகளுக்கு  நம் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பக்கபலமாக இருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் என்பவர்கள் அயோக்கியத்தனத்திற்கும், அராஜகத்திற்கும், ஆணவத்திற்கும், அனாச்சாரத்திற்கும் பெயர் போனவர்கள், ஆகையால் ஒரு முஸ்லிம், இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளில் அங்கத்தினர்களாக இருப்பதற்கு அல்லது அந்தக் கட்சி தலைவர்களை ஏற்றுக் கொண்டிருப்பதற்கு கொஞ்சம் கூட ஒரு துளி அளவும் தகுதி கிடையாது.

காரணம் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் என்ற கொள்கையை நிறுவிவிட்டு சொன்றிருக்கிற முஹம்மது(ஸல்) அவர்கள்தான் முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர், அவருடைய வழிமுறையில் அரசியலை மேற்கொள்வது தான் ஒவ்வொரு முஸ்லிமின் அடித்தளமாக இருக்கிறது. அப்போதுதான் நாட்டிலேயோ அல்லது உலகத்திலோ இறையாட்சியை நிலைநிறுத்த முடியும்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாமிய கொள்கையை நிலைநிறுத்துவதை விட்டுவிட்டு ஜனநாயக அரசியல் கட்சிகளின் கொள்கையை தேர்ந்தெடுப்பது தன்னையும், தன் சமுதாயத்தையும் அழிப்பதற்கு உண்டான செயலாகவே இருக்கிறது. அப்படித்தான் இன்று உலகில் முஸ்லிம்கள் அழிந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளை விட்டு முஸ்லிம்களே விலகுங்கள். பெயர்தாங்கி முஸ்லிம்களாக இருக்க விரும்பாதீர்கள். இப்படி இருப்பது இம்மையில் அற்ப சொகுசு வாழ்க்கையாகவும், மறுமையில் அற்ப சொகுசு வாழ்க்கையாகவும், மறுமையில் மிகக் கொடிய வேதனை வாழ்க்கையாகவும் இருக்கும். ஆக முஃமினான முஸ்லிமாக இருப்பதற்கு இறை ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு நபி(ஸல்) அவர்கள் போதித்தபடி அல்லாஹ்வின் கயிறான அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்தபடி, முஸ்லிம்கள் என்ற நிலையில் ஓரணியில் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு இறையாட்சி இத்தரணியில் நிலைநாட்டப்பட முஸ்லிம்கள் அனைவரும் பாடுபட முன்வாருங்கள். அல்லாஹ் நேர்வழிகாட்ட போதுமானவன்.

Previous post:

Next post: