படைத்த  இறைவனையே அஞ்சுங்கள்!

in 2021 பிப்ரவரி

படைத்த  இறைவனையே அஞ்சுங்கள்!

ஷரஹ் அலி, உடன்குடி.

இறை நம்பிக்கை கொண்டோரே! (படைத்த இறைவன்) அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (மறுமை) நாளைக்காக ஒவ்வொருவரும் எதைத் தேடி வைத்துள்ளார் என்பதை, அவர் கவனத்தில் கொள்ளட்டும்.

அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்கின்றவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (அல்குர்ஆன் : 57:18)

அவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள் :

எவர்கள் அல்லாஹ்வை மறந்துவிட்டு இருக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.

அதனால், அவர்கள் தங்களையே மறந்து விடும்படி அல்லாஹ் செய்தவிட்டான். அவர்கள்தாம் பாவிகளாவர். (அல்குர்ஆன் : 59:19)

சமமாகமாட்டார்!

நரகவாசிகளும்  சுவர்க்கவாசிகயும், சமமாக மாட்டார்கள். சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையேர். (இறைநூல் : 59:20)

மறுமை நாளில் நபிகளாரை விட்டு மிக தூரத்தில் இருப்போர் :

உங்களில் அதிகம் பேசுபவர்களும், தங்களின் (கவர்ச்சிகரமான பேச்சால் மக்களை வசப்படுத்தி அதை)மக்களிடம் பெருமையடித்துக் கொள்பவர்களும், மறுமை நாளில் உங்களில் என்னை விட்டு மிக தூரத்தில் இருப்போர்களில் அடங்குவர் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஜாபிர்(ரழி), நபிமொழி ஆய்வாளர்கள் :திர்மிதீ, தமிழாக்கம்: நபிமொழி எண் : 631.

பரஸ்பர  அறிவுரை :

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறனர். எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்து கொண்டும்,

ஒருவருக்கு ஒருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும், பொறுமையைக் கடைப்பிடித்தும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர. (இறைநூல் : 103_1-3)

Previous post:

Next post: