மக்களை மயக்கும் ஜனநாயகம்!

in 2021 பிப்ரவரி

மக்களை மயக்கும் ஜனநாயகம்!

அபூ பாத்திமா

ஜனநாயகம்!

மக்களுக்காக மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களே ஆட்சி செய்யும் பெருமை மிக்க ஆட்சி மக்களாட்சி – ஜனநாயக ஆட்சி என பெருமையாகப் பேசப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கும் இதில் பெரியதொரு மயக்கம் இருக்கவே செய்கிறது. மக்கள் சுதந்திரமாகச் செயல்படுத்துவதாகக் கூறிக் கொள்கின்றனர்.

ஆனால் நடப்பதோ வேறு! பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி நடக்கும் ஆட்சி என்று கூறுவது உண்மையில் மிக மிகச் சிறுபான்மையினரின் விருப்பப்படி நடக்கும் ஆட்சியாகவே இருக்கிறது. காரணம் ஜனநாயகம் எனும் பெயரால் இவர்கள் செயல்படுத்தும் போலி ஜனநாயகமாகும். சுதந்திரம் பெற்ற பின்னர் இதுவரை நடைபெற்று முடிந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நோட்டமிட்டுப் பாருங்கள்.

ஒரு தேர்தலில் கூட மொத்த வாக்காளர்களில் 51 சதவிகிதம் வாக்காளர்களின் ஆதரவு பெற்று எந்த அரசும் ஆட்சி அமைந்ததாகச் சொல்ல முடியுமா? பெரும்பாலும் வாக்காளர்களில் பாதிப்பேர் வாக்களிப்பதே இல்லை. வாக்களிக்கப்படும் வாக்குகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிந்து விழும். இறுதியில் 15லிருந்து 20 சதவிகித வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு சட்டசபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் அனமதிக்கப்படுவார்கள். 100 பேரில் 20 பேர் ஆதரவைப் பெற்ற வேட்பாளர் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு அதாவது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் என்று கூறுவது போலி ஜனநாயகம்தானே.

அதிலும் தில்லுமுல்லு!

அது மட்டுமல்ல, அவர் பெற்ற அந்த 20 சதவிகித வாக்குகளும் நேர்மையான முறையில் அவர் பெற்றதுதானா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதில் ஒரு பகுதி அந்த வேட்பாளர் ஏற்கனவே மக்களிடமிருந்து தவறான முறையில் லஞ்சமாக கொள்ளை அடித்த கணிசமான தொகையில் ஒரு பகுதியை வாக்காளர்களுக்கு கையூட்டாகக் கொடுத்து விலைக்கு வாங்கியதாக இருக்கும். அவர் பெற்ற வாக்குகளின் இன்னொரு பகுதி அவர் கூலிக்கு ஆட்களை அமர்த்தி கள்ள வாக்குகளாகப் போட வைத்ததாக இருக்கும். உண்மையிலேயே முறையாக அவர் பெற்ற வாக்குகள் 10 சதவிகிதத்தைத் தாண்டாது. இதுதான் ஜனநாயகமா?

ஜனநாயக ஆட்சி பெரும்பான்மை மக்களுக்கு பலன் தராது!

இது ஜனநாயகத்தைக் கேலி செய்வது ஆகாதா? ஆக பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி நடக்கும் ஆட்சி என்று கோஷமிடுவதெல்லாம் சுத்தப் பேத்தலாகும். படிப்பறிவற்ற அப்பாவழி அறியாமை மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதாகும். மற்றபடி மக்களாட்சழி – ஜனநாயக ஆட்சி என்பதெல்லாம் உண்மையில் பெரும்பான்மை மக்களுக்கு பலன் தரும் ஆட்சியல்ல.

பெரும்பான்மை மக்களுக்கு கேடு விளைவிக்கிறது!

ஆனால் இந்தப் பெரும்பான்மைத் தந்திரம் பெரும்பாலும் பெரும்பான்மை மக்களுக்குப் பெரும் கேட்டை விளைவிப்பதாகவே அமைந்துள்ளது. உதாரணமாக மதுரை கிளை உயர்நீதிமன்றத்திற்கு எதிராக சென்னை வழக்குரைஞர்கள் நடத்தும் போராட்டத்தை எடுத்துக் கொள்ளங்கள். எந்த ஒரு விவகாரத்திலும் பெரும்பான்மை மக்களுக்கும் பலன் அளிக்கும் திட்டங்களை அமுல்படுத்துவதே உண்மை ஜனநாயகமாகும். அந்த அடிப்படையில் ஒரு பகுதி மக்களுக்கு எந்த உயர்நீதிமன்றம் அருகாமையில் இருக்கிறதோ அதை அணுகும் உரிமை அவர்களுக்கு இருக்கவேண்டும். உதாரணமாக திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை மக்களுக்கு, மதுரை சுமார் 150 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. சென்னை அதில் இரண்டு மடங்கு தூரம் சுமார் 300 கி.மீ.க்கும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அருகாமையிலுள்ள மதுரை உயர்நீதிமன்றக் கிளையை சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவேண்டும் என்பது எந்த நீதி தர்மத்தின் அடிப்படையிலானது?

சென்னை வழக்குரைஞர்களின் விருப்பத்திற்கேற்ப ஏன் இப்படிப்பட்ட ஒரு அநீதமான முடிவை ஒன்பது நீதிபதிகள் எடுத்தார்கள். காரணம் சென்னை வழக்குரைஞர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தொடர்ந்து செய்து வந்த – வரும் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் ஆகும். இங்கு வழக்குரைஞர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டு, பெரும்பான்மையினராகப் போராடி அநீதமான, அக்கிரமமான அதே சமயம் அவர்களுக்குச் சாதகமான ஒரு முடிவைப் பெற முடிந்தது. இங்கு ஜனநாயக முறை – பெரும்பான்மை வழக்குரைஞர்களின் விருப்பம். உண்மையிலேயே பெரும்பான்மை மக்களுக்குக் கேடாகவே அமைந்துள்ளது. வழக்குரைஞர்கள் மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுவது போல், நீதிபதிகளும் தங்களின் சொந்த நலனிலே அக்கறை காட்டுகின்றனர். நீதி கெத்து அநீதி ஆட்சி புரிகிறது என்ற நிலையையே பார்க்கிறோம்.

பேருந்து ஓட்டுநர்களின் அராஜகங்கள் :

இன்னும் பாருங்கள் பேருந்து ஓட்டுநர்களின் அக்கிரமங்களை, அவர்களின் மிகப்பெரும்பான்மையினர் சாலை விதிகளை மதிப்பவர்களாக இல்லை. அவற்றைக் காலுக்குக் கீழே போட்டு மிதிப்பவர்களாகவே இருக்கிறார்கள். பேருந்துகளை பேருந்து நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை. அப்படியே நிறுத்தினாலும் பின்னால் வரும் வாகனங்கள் செல்ல வழிவிட்டு ஓரமாக நிறுத்துவதில்லை. அவர்கள் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு வரும்வரை பின்னால் வந்த வாகனங்கள் காத்திருக்க வேண்டும். இது அவர்கள் தலையெழுந்து, அதுமட்டுமல்ல, நிறுத்தம் இல்லாத இடங்களிலும், நான்குவழி சந்திப்புகளிலும், குறுக்கே பேருந்தை நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்வார்கள். சிக்னல்களில் நிறுத்த நேரும்போது, இடது பக்கம் திரும்ப அனுமதி இருக்கும் நிலையில் (FREE LEFT) இடது பக்கம் திரும்பிச் செல்லும் வாகனங்களுக்கு இடம் அளிக்காமல், நேரே செல்லும் பேருந்துகளை இடது பக்கம் திரும்பிச் செல்லும் வழியை அடைத்துக் கொண்டு நிறுத்தி சிக்னலுக்காகக் காத்திருப்பார்கள்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்களும் இதைக் கண்டு கொள்வதில்லை, இது மட்டுமல்ல, இந்த பேருந்து ஓட்டுநல்களில் அராஜகங்கள் எதையுமே காவலர்கள் கண்டு கொள்வதில்லை. காரணம் என்ன? இந்த ஓட்டுநர்கள் அடாது செய்யும் இந்த  அராஜகங்களை தடுத்து நிறுத்த முற்பட்டால், இவற்றைவிட பெருங்கேடுகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு விடும்.

ஒரு ஓட்டுநரின் அடாவடித்தனத்தைத் தட்டிக் கேட்டால், இதுதான் சாக்கு என்று அனைத்து ஓட்டுநர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு பேருந்துகளை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி, பேருந்துகளில் பிரயாணம் செய்யும் பிரயாணிகளுக்கு பெருங்கஷ்டத்தைக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், ஏனைய வாகனங்களில் பிரயாணம் செய்யும் பிரயாணிகளும் தங்கள் பிரயாணத்தைத் தொடரவிடாமல் முட்டுக்கட்டைப் போட்டு விடுவார்கள்.

தவறையே நியாயப்படுத்தும் பெரும்பான்மை!

குறிப்பிட்ட அந்த ஓட்டுனர் செய்த தவறுக்காகத் தானே அந்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நியாய உணர்வை இந்த ஓட்டுநர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அனைவரும் ஒன்றுசேர்ந்துகொண்டு இப்படி அராஜகங்கள் செய்வதால், அதாவருது பெரும்பான்மை என்ற மமதையால் அட்டூழியம் செய்வதை காவலர்களும் தடுக்க முடிவதில்லை. ஏன்? அரசும் தடுக்க முடிவதில்லை.

அரசு ஊழியர்களின் நிலையும் இதுவே!

இதேபோல அரசு மற்றும் வங்கித் துறைகளில் பணிபுரியும் பணியாளர்களும் தங்களுக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு மிரட்டி, போராட்டங்கள்,  வேலை நிறுத்தம் என தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்கின்றனர். அரவு மற்றும் வங்கி ஊழியர்களுக்கு மிதமிஞ்சிய சம்பளமே கிடைக்கிறது. லஞ்சமாக கிம்பளமும் பெற்றுக் கொள்கிறார்கள். மிதமிஞ்சிய வருவாய் காரணமாக வீண் விரயங்கள் செய்து விலைவாசிகளை உயர்த்தி விடுகிறார்கள். கணவன், மனைவி என இருவரும் அரசுப் பணிகளில் இருந்து பெரும் வருவாய் ஈட்டுகின்றனர். தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பணிகளையும் கடமை உணர்வோடு ஒழுங்காக, முறையாக நிறைவேற்றுவதும் இல்லை. பொதுமக்களை அனாவசியமாகக தொடர்ந்து அலையவிடுவது இவர்களின் தலையாய பணி, இவர்களின் வருவாயோடு ஒப்பிடும்போது, அரசுப் பணிகளில் இல்லாமல் சொந்தமாக வியாபாரம், தொழில், தனியார் நிறுவனங்களில் பணிபுரிதல் போன்றவை மூலம் வருவாய் ஈட்டுபவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தங்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கே திண்டாடுகின்றனர். வறுமைப் பிடியில் சிக்கிச் சீரழிகின்றனர்.

இந்த நிலையில் தொழுத்த வருவாயுடைய அரசு, வங்கி பணியாளர்கள், மேலும் மேலும் சம்பளத்தை உயர்த்தித் தரும்படிக் கோரி வேலை நிறுத்தம், போராட்டம், தர்ணா என மக்களின் அன்றாட நியாயமான தேவைகளும் கிடைக்காமல் செய்துவிடுகின்றனர். இவர்களின் பெரும்பான்மை பலத்தைக் கண்டு அரசும் பணியும் நிலையே உருவாகிறது.

இவர்களில் ஒருசிலர் நியாயத்திற்கும், நீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு, பெரும்பான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்டு, செயலாற்ற முன்வந்தாலும் அவர்களிலுள்ள பெரும்பான்மையினர் அவர்களை கேவலப்படுத்தி, இழிவுபடுத்தி, அவமரியாதைக்கு ஆளாக்கி, தங்களின் அராஜகச் செயல்களுக்கு உடன்பட வைத்து விடுகின்றனர்.

அரசுப் பணிகளில் உள்ள மயக்கம்!

இதன் காரணமாகப் படித்த வாலிபர்கள் அரசுப் பணிகளைப் பெறுவதற்காக ஆளாய்ப் பறக்கின்றனர். லஞ்சம் கொடுத்தாவது அரசு உத்தியாகங்கள் பெற துடிக்கின்றனர். கொடுத்த லட்சக்கணக்கான ரூபாய்களை விட அதிக லட்சங்களை அரசுப் பணிகளில் ஈட்ட முடியும் என மனக்கணக்குப் போட்டுச் செயல்படுகின்றனர்.

இப்படிப் பெரும்பான்மை பலம் – ஜனநாயகம் பெரும்பான்மை, குடிமக்களுக்கு பெருங்கேட்டை விளைவிப்பதாக இருக்கிறதே அல்லாமல், பெரும்பான்மை மக்களுக்கு பலன் அளிப்பதாக இல்லை.

மனித அறிவு கொண்ட ஆட்சழி நீதமான ஆட்சியல்ல!

ஆக, மனித அறிவு கொண்டு அமைக்கப்பட்ட ஆட்சி அது ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும், சர்வாதிகார ஆட்சியாக இருந்தாலும், இல்லை, மன்னராட்சழயாக இருந்தாலும் இவை அனைத்தும் பெரும்பான்மை மக்களுக்குக் கேடு விளைவிப்பவனவாகவே இருக்கும். அதிலும் மன்னராட்சியை விட, சரிவாதிகார ஆட்சியைவிட, ஜனநாயக ஆட்சி மக்களுக்குப் பெருங்கேட்டையே விளைவித்து வருவதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

மன்னர்  ஆட்சியில் மன்னன் மட்டுமே கொள்ளை அடிப்பான். அவன் மட்டுமே  அதிகாரம் செலுத்துவான். சர்வாதிகார ஆட்சியிலும் இதே நிலைதான். ஆனால் ஜனநாயக ஆட்சியிலோ பிரதம, முதன் மந்திரிகளிலிருந்து, MP. MLA க்களிலிருந்து மாநகராட்சி, நகராட்சி மேயர், தலைவர் முதல் சாதாரண M.Cக்கள் வரை கொள்ளை அடிக்கவும், திமிராக அதிகாரம் செலுத்தவும் முற்படுகின்றனர். அரசு அதிகாரிகளைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். இப்படி ஜனநாயக ஆட்சிமுறையில் பொதுமக்கள் இன்னல்களுக்கு மேல் இன்னல்களுக்கு ஆளாகிறார்களே அல்லாமல் நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கை வாழ முடிவதில்லை.

இறையாட்சியே நீதமான ஆட்சி!

மக்களுக்காக மக்களால் உண்டாக்கப்படும் ஆட்சி முறைகள் அனைத்தும் மக்களுக்குக் கேடு விளைவிப்பனவே. மக்கள் என்று உண்மையை உணர்ந்து தங்களைப் படைத்துப் பாரிபாலிக்கும் இறைவனை ஒப்புக் கொண்டு, இறையாட்சியை நிலைநாட்ட முன் வருகிறார்களோ அப்போதுதான் நாட்டின் உண்மையான சுபீட்சத்தைப் பார்க்க முடியும். இது வெறும் கற்பனை அல்ல. 1442 ஆண்டுகளுக்கு முன்னர். அந்த ஏகன் இறைவனின் இறுதித்தூதர் இந்தப் பூமியில் இறையாட்சியை நிலைநாட்டிக் காட்டினார்கள். அதன் பின்னரும் நான்கு கலீஃபாக்கள் இறைத்தூதரின் பிரதிநிதிகள் அந்த இறையாட்சியை நிலைநாட்டிக் காட்டினார்கள். அந்தக் காலகட்டத்தில் அவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள், நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள், நாஸ்திகர்கள் என அனைத்துக் கொள்கையுடைய மக்களும் எவ்வித பாரபட்சமும் காட்டப்படாமல், முழு வழிபாட்டுச் சுதந்திரங்களுடன் நிம்மதியாக, சந்தோஷமாக எவ்வித அச்சமும் இல்லாமல் வாழ்ந்ததாக வரலாறு தனது பொன்னெழுத்துக்களால் பதிந்து வைத்துள்ளது.

முஸ்லிம்கள் புரோகித வலையில் சழிக்கியதே பெருங்கேடு!

முஸ்லிம்கள் என்று இறைவனின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனைப் பற்றிப் பிடிப்பதை விட்டு, தங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லாத – கொல்லைப்புற இடுக்கு வழியாக சமுதாயத்தில் சட்டவிரோதமாக நுழைந்து கொண்ட புரோகித முல்லாக்களின் வசீகர வலையில் சிக்கினார்களோ, அவர்களின் கபடப் பேச்சுக்களை இறைநெறிநூலாக எடுத்துச் செயல்பட ஆரம்பித்தார்களோ, அன்றிலிருந்து தங்களிடையே நிம்மதி, சந்தோசம், பயமற்ற நிலை இவை அனைத்தையும் இழந்தார்கள். ஒற்றுமையை இழந்தார்கள். பல பிரிவுகளாகப் பிரிந்தார்கள். அல்லாஹ் இவர்களுக்குக் கொடுத்துச் சிறப்பித்திருந்த இறையாட்சியையும் இழந்தார்கள். பல பிரிவுகளாகப் பிரிந்தார்கள். அல்லாஹ் இவர்களுக்குக் கொடுத்துச் சிறப்பித்திருந்த இறையாட்சியையும் இழந்தார்கள். இன்று வெள்ளையனுக்கும், கொள்ளையனுக்கும் அடிமைப்பட்டு அவல  வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாயிலும் கேடாக சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.

முஷ்லிம்களுக்கு மீட்சி எப்போது?

முஸ்லிம்கள் மீண்டும் தாங்கள் இழந்துவிட்ட பழம் பெருமைகளை அடைய விரும்பினால், முதற்கண் இடைத்தரகர்களான இந்தப் புரோகித முவ்லாப் பண்டாரங்களின் வசீகர வலையிலிருந்து விடுபடவேண்டும். இறைவனின் இறுதி நெறி நூலான அல்குர்ஆனைப் பற்றிப் பிடிக்கவேண்டும். தங்களுக்கு இடையேயுள்ள பிரிவுகளையும், பிளவுகளையும் விட்டொழித்து, ஒரே தலைமையில் ஓரணியில் ஒன்றுபடவேண்டும். மார்க்கத்தில் மனிதக் கற்பனைகள், யூகங்கள் அனைத்தையும் விட்டொழித்து அல்குர்ஆனில், குறிப்பாக அதன் முஹ்க்கமாத் (ஒரே பொருள்) வசனங்களில் கூறப்பட்டிருப்பவற்றை கூட்டாமல், குறைக்காமல், வளைக்காமல், திரிக்காமல், மறைக்காமல் உள்ளது உள்ளபடி எடுத்து நடக்க முன்வரவேண்டும்.

மதங்கள் அனைத்தும் வழிகேடே!

ஹிந்து மதத்தில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்துவது போல், யூத மதத்தில் ரிப்பியூன்கள் ஆதிக்கம் செலுத்துவது போல், புத்த மதத்தில் ஆமுதுருக்கள் ஆதிக்கம் செலுத்துவது போல், கிறித்தவ மதத்தில் பாதிரிகள் ஆதிக்கம் செலுத்துவது போல், முஸ்லிம்களிடையேயும் ஹஜ்ரத்துகள் ஆதிக்கம் செலுத்தினால் அது வழிகேடேயல்லாமல் வேறில்லை.

அது நேர்வழி என்றால் ஹிந்து மதம், யூத மதம், புத்த மதம், கிறித்தவ மதம் ஆக அனைத்து மதங்களும் நேர்வழியைத்தான் போதிக்கின்றன. அவர்களும் சொர்க்கம் செல்வார்கள் என முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவை அனைத்தும் வழிகேடு, ஹஜ்ரத்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் “எங்களின் முஸ்லிம் மதமே” (இஸ்லாமிய மார்க்கம் அல்ல) நேரியவழி என்று கூறுவது அபத்தமான சொல்லாகும். “அவன் போறான் குடிகாரம், எனக்கு இரண்டு மொந்தை கள்ளு ஊற்று” என்று பிதற்றுவது போல் ஆகும்.

மனிதர்களால் குறிப்பாக இடைத்தரகர்களான புரோகிதர்களால் கற்பனையாக உருவாக்கப்பட்ட அனைத்து மதங்களும் வழிகேடுகளே – நரகில் சேர்ப்பவைகளே. புரோகிதமற்ற – ஹஜ்ரத்துகள் ஆதிக்கம் செலுத்தாத ஆலிம் – அவாம் பேதமற்ற சமத்துவ சமுதாயம், இறைவனின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனை நேரடியாகப் பற்றிப்பிடிப்பதே நேர்வழி என்பதை அனைத்துலக மக்களும், குறிப்பாக முஸ்லிம் ஆண், பெண் அனைவரும் ஒப்புக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இறைவன் நாடினால்,

Previous post:

Next post: