பிட்காயின் வைத்திருந்தால் சிறை தண்டனை…

in 2021 மார்ச்

தலையங்கம்!

பிட்காயின் வைத்திருந்தால் சிறை தண்டனை…

மத்திய அரசு கொண்டு வரப்போகும் புதிய சட்டம்?!

பிட்காயின் என்ற தலைப்பில் அக்டோபர் 2020ல் தலையங்கம் எழுதி இருந்தோம். இந்த வணிகம் முறையற்றது என்றும் இதில் ஈடுபடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லை என்றும் எச்சரித்து இருந்தோம்.

இதில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து “குட்ரிட்டன்ஸ் தமிழ்” வலைதளத்தில் செய்திகள் வெளியிட்டு எச்சரித்துள்ளது. வாசகர்கள் பயன்பெற இந்த செய்தியின் சுருக்கம், இந்த இதழில் எமது தலையங்கத்தில் பிரசுரித்துள்ளோம். வாசகர்கள் படித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
– ஆசிரியர்.

பிட்காயின் வைத்திருந்தால் சிறை தண்டனை:

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோ கரன்சியை ஆதரித்து வரும் நிலையில், உலக நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை எப்படி முறைப்படுத்துவது? எப்படிக் கையாளுவது? என்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றன.

ஆனால் இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்யவும், கிரிப் டோகரன்சி வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்ட விதிகளைக் கொண்ட கிரிப்டோ, கரன்சி மசோதாவை அமலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் தடை :

மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை இந்தியாவில் தடை செய்யவும், ஏற் கனவே இதில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்துள்ளது. இதன்படி கிரிப்டோகரன்சியை முழுமையாகத் தடை விதிக்கும் முன், இதில் ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு இதில் இருந்து வெளியேற ஒரு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அப்படி வெளியேறும் கிரிப்டோ வாடிக்கை யாளர்கள் மீது அபராதமும் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

கிரிப்டோ கரன்சி மசோதா :

கிரிப்டோகரன்சி மசோதா முழுமை யாக முடிவு பெறாத நிலையில், கிரிப்டோ முதலீட்டாளர்கள் தாங்கள் செய்துள்ள முதலீட்டை எப்படி முறையாக விற்பனை செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்பதற்கான வழிமுறை அல்லது சட்ட விதிகள் மசோதாவில் கண்டிப்பாக இடம்பெறும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் கரன்சி:

இதேபோல் ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளபடி, ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதற்கான பிரேம் ஒர்க் இந்த மசோதாவில் கண்டிப்பாக இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் Digital Currency Bill 2021 பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

சிறை, அபராதம், தண்டனை :

இந்தப் புதிய டிஜிட்டல் கரன்சி மசோதாவில் கிரிப்டோகரன்சியை உருவாக்குவது, வைத்திருப்பது, விற்பனை செய்வது, வெளியிடுவது, பரிமாற்றம் செய்வது, பயன்படுத்துவது என அனைத்தும் குற்றச் செயலாக அறிவிக்கப்பட உள்ளதாகவும், இதை மீறுவோருக்கு அதிகப்படியான தொகை அபராதம் அல்லது சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும் கடுமையான சட்டமும் இந்த மசோதாவில் இடம்பெற வாய்ப்பு உள்ளது

நன்றி:

குட்ரிட்டன்ஸ், தமிழ் செய்திகள்.  Feb 13, 2021

Previous post:

Next post: