இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?
அபூ அப்துல்லாஹ்
தொடர் – 8
மறு பதிப்பு :
இஸ்லாமிய நிறைவு பெற்று, உலகம் அழியும் வரை இஸ்லாம் மார்க்கமாக்கப்பட்டு, இறுதி நெறிநூல் அல்குர்ஆன் ஒரு புள்ளி கூட மாற்றப்பட முடியாத நிலையில் இறைவனால் பாதுகாக்கப்பட்டிருந்துநம், மார்க்கத்தை மதமாக்கி, அதைத் தொழிலாக்கிப் பிழைப்பு நடத்தும் புரோகிதர்கள், இஸ்லாத்திற்குள்ளும் சட்டவிரோதமாக கொல்லைப்புற இடுக்கு வழியாகப் புகுந்து கொண்டு, செய்து வரும் தில்லுமுல்லுகளையும், அட்டூழியங்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
அவர்களில், பிணத்தை மக்கள் நடமாடும் சாலைகளில் போட்டுவைத்துக் கொண்டு, பிழைப்பு நடத்தும் எத்தர்களைப் போல், இறந்தவர்கள் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், அவற்றின் மேல் இறைவனதும், அவனது தூதரதும் போதனைக்கு மாற்றமாக, “தர்கா” என்ற பெயராலட் கட்டிடங்கள் கட்டி, அவற்றில் உண்டியல் வைத்துப் பிழைப்பு நடத்தும் எத்தர்களான “தர்கா” முகல்லிது மவ்லவிகள் பற்றியும், அவர்களின் மாய்மாலங்களையும், தில்லுமுல்லுகளையும், அவை கொண்டு அப்பாவி சிந்தனையற்ற பெரும்பான்மை முஸ்லிம்களை வஞ்சித்து வயிறு வளர்க்கும் கொடூரங்கள் பற்றியும், அதற்காக இறுதி நெறிநூல் அல்குர்ஆனின் சில வசனங்களைத் திரித்து, வளைத்து, மறைத்துத் தங்களுக்குத் தோதுவாக விளக்கங்கள் கொடுப்பது பற்றியும் சென்ற தொடர்களில் விரிவாகப் பார்த்தோம்.
அடுத்து, சமாதிச் சடங்குகளிலிருந்து விடுபட்டிருந்தாலும், தக்லிதிலிருந்து விடுபடாத பெரியார்களைக் கண்மூடிப் போற்றும் தப்லீக், முகல்லிது மவ்லவிகள் எப்படி எல்லாம் குறிப்பான ஒரே பொருள்களைத் தரும் அல்குர்ஆனட் வசனங்களை திரித்து, வளைத்து, மறைத்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதை வரும் தொடர்களில் விரிவாகப் பார்ப்போம்.
அதற்கு முன்னர், புரோகிதர்களான இந்த மவ்லவழி வர்க்கத்திலும் அவர்கள் வழிகேட்டையே மக்களுக்குப் போதிக்கும் ஒரே குறிக்கோளைக் கொண்டவர்களாக இருந்தாலும், எப்படி பல பிரிவினர்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள் என்ற இரகசியத்தைப் பார்த்து விடுவோம். இந்தப் புரோகிதர்கள் இறைவன் கொடுத்தருளிய வாழ்க்கை நெறியான தூய மார்க்கத்தை மதமாக்கி அதைக்கொண்டு பிழைப்பு நடத்துவதால், இதர ஆகுமான தொழில்களைச் செய்யும் மக்களிடையே ஏற்படும் போட்டி பொறாமை இந்தப் புரோகிதர்களிடமும் தொழில் ரீதியாக ஏற்பட்டு விடுகிறது. அதே தொழிழலைச் செய்யும் இரண்டு போட்டியாளர்கள், வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுப்பதற்காக, மற்ற போட்டியாளர் செய்து வரும் சில தில்லுமுல்லுகளை விட்டு விடுபடுவதோடு அந்த தில்லுமுல்லுகளை மக்களிடம் பிரமாதமாக அம்பலப்படுத்துவார். இந்த அவரது செயல் மக்களை அவர்களுக்கு ஏற்படும். நஷ்டத்திலிருந்து காப்பாற்றும் நன்நோக்குடன்ட செய்யப்படுவது அல்ல. மாறாக மக்களை தனது போட்டியாளரிடமிருந்து விடுவித்து தனது வலையில் சிக்கி வைக்கவே.
அதேபோல் பெரியார்களைக் கண்மூடிப் போற்றும் தப்லீஃ தக்லீத் புரோகித மவ்லவிகள், சமாதிச் சடங்கு புரோகித மவ்லவிகள் செய்து வரும் சில தில்லுமுல்லுகளை விட்டும் விடுபடுவதோடு, அந்த தில்லுமுல்லுகளைக் கடுமையாக விமர்சித்து, மக்களை சமாதிச் சடங்கு புரோகித மவ்லவிகளின் வசீகர வலையிலிருந்து விடுவித்து தங்களின் வசீகர வலையில் சிக்கவைக்கப் பெரிதும் பாடுபடுவார்கள்.
இந்த உண்மையை மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ள 15.10.1985 (அந்நஜாத் ஆரம்பிக்கும் முன்னர்) காயல்பட்டினத்தின் மிகப் பிரபல்யமான மவ்லவி, காலஞ் சென்ற எஸ்.எம்.ஜதுரூஸ் அவர்களுக்கு, நாம் எழுதியிருந்த கடிதத்தின் ஒரு பகுதியை இங்கு எடுத்து எழுதியுள்ளோம்.
“அந்தப் பேச்சில் (ஐதுரூஸ் மவ்லவியின் பேச்சு) கபுரு சம்பந்தப்பட்ட அனைத்து அனாச்சாரங்களையும் மிக வன்மையாகவும், அழகாகவும், பண்பாகவும், தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள். உங்கள் பேச்சு நிச்சயமாக சிந்திப்பவர்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் தக்லீது, தஸவ்வுஃப் இவை பற்றி நீங்கள் பேசும்போது, கபுரு வணக்கக் கூட்டத்தார் கடைபிடிக்கும் அதே முறையைத்தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள். இது எனக்கு ஆச்சரியத்தைத் தருகின்றது. மார்க்கம் அல்லாஹ்(ஜல்)வுக்கு மட்டுமே சொந்தம். மார்க்க சட்டதிட்டங்கள், அல்லாஹ்வின் உத்திரவுப்படி நபி(ஸல்) அவர்களால் மிக அழகாகத் தெளிவுபடுத்தப்பட்டு விட்டன என்பதே ஒரு முஸ்லிமின்ட உறுதியான நம்பிக்கையாகும். அந்தக் கூட்டத்தார் (சமாதிச் சடங்கு மவ்லவிகள்) கபுரு வணக்கத்திற்கு ஆதாரமாக அந்தப் பெரியார் சொன்னார். இந்தப் பெரியார் எழுதி வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் நிராகரித்து விட்டு, தக்லீத், தஸவ்வுஃப் விஷயத்தில், அந்தப் பெரியார் சொல்லியுள்ளார். இந்தப் பெரியார் எழுதி வைத்துள்ளார் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்? பெரியார்கள் சொல்வதை எல்லாம் மார்க்கமாக்கினால், இன்று உலகில் இருக்கும் எந்த மதத்தையும், நிராகரிக்க முடியாதே? மார்க்கத்தை விளக்க நபிமார்களை அனுப்பி அவர்களுக்கு வஹி அனுப்பும் தேவையும் அல்லாஹ்(ஜல்)வுக்கு ஏற்பட்டிராதே? தயவு செய்து விளக்குவீர்களா? என்று கேட்டிருந்தோம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு புரோகித மவ்லவி கூட்டம், இன்னொரு புரோகித மவ்லவி கூட்டத்தின் வசீகரப் பிடியிலிருந்து விடுவித்து, தங்களின் வசீகரப் பிடியில் சிக்க வைக்கும் கெட்ட நோக்கத்துடன், அந்தப் புரோகித மவ்லவிகளின் சில தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்துகிறார்எளே அல்லாமல், மக்களை அல்லாஹ் காட்டியுள்ள நேரான வழியில் செலுத்தவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடுன் அல்ல. இதையே இறைவன் தனது இறுதி நெறிநூலின் 2:213ல் தெளிவுபடுத்தியுள்ளான். அதாவது மார்க்கத்தை மதமாக்டகி அதைப் பிழைப்பாக்கி தொழில் நடத்தும் புரோகித வர்க்கம், தங்களுக்கிடையே ஏற்படும் போட்டி பொறாமை காரணமாக, மற்ற புரோகிதர்களை இழிவாகவும், கேவலமாகவும் விமர்சித்து, தங்களை மேலானவர்களாகவும், நேர்வழி காட்டிகளாகவும் மக்களை நம்பவைத்து, அதன்மூலம் மக்களை தங்களின் வசீகரப் பிடியில் சிக்க வைக்கவே பெரும்பாடுபட்டு வருகிறார்கள்.
இதே அடிப்படையில்தான் சமாதிச் சடங்கு மவ்லவி புரோகிதர்களை, பெரியார் தப்லீஃ தக்லீத், தஸவ்வுஃப் மவ்லவழி புரோகிதர்கள் விமர்சித்து வருகிறார்கள். பெரியார் தப்லீஃ, தக்லீத், தஸவ்வுஃப் மவ்லவி புரோகிதர்களை தஸவ்வுஃபிலிருந்து விடுபட்டு தக்லீதில் சிக்கியுள்ள மவ்லவிழ புரோகிதர்கள் விமர்சிக்கிறார்கள். தக்லீதிலிருந்தும், தஸவ்வுஃபிலிருந்தும் விடுபட்டு விட்டதாகக் கூறிக்கொள்ளும், செமி தக்லீத் தவ்ஹீத் புரோகிதர்கள் (அதாவது தங்களைத் தக்லீத் செய்யவைத்துள்ள தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்களை விமர்சிக்ககிறார்கள். சலஃபிகளான பின்னோர்களை தக்லீத் செய்வதை விட்டும் விடுபட்டு, ஸலஃபிகளான முன்னோர்களை தக்லீத் செய்யும், தங்களை ஸலஃபிகள் என்று கூறிக்கொள்ளும் மவ்லவி புரோகிதர்கள், கலஃபிகளான மவ்லவி புரோகிதர்களை விமர்சிக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு புரோகித வர்க்கமும், தங்களுக்குக் கீழிருக்கும் புரோகித வர்க்கங்களை விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி புரோகித பிழைப்பில் மக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டி பொறாமை, காரணமாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, அப்பாவி சிந்தனையற்ற மக்களை தங்களின் வசீகர மாய வலையில் சிக்க வைக்க ஒவ்வொரு மவ்லவி புரோகித வர்க்கமும் அயராது பாடுபட்டு வருகிறார்களே அல்லாமல், இந்த மவ்லவிழ புரோகித வர்க்கத்தில் எந்தப் புரோகித வர்க்கமும், பாமர மக்களுக்கும், அவர்கள் தன்னம்பிக்கையுடன், சுய சிந்தனையுடன் இறைவனின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனில் மாறுபட்டால், விளங்க முயற்சித்தால், அவர்களுக்கும் அது விளங்கும் என்று நம்பிக்கையூட்டி, அவர்களை அல்குர்ஆனை நேரடியாக நெருங்கச் செய்து, இடைத்தரகர்களான இந்தப் புரோகிதப் பண்டாரங்களை விட்டும் விடுபடச் செய்யப் பாடுபடுவதாக இல்லை.
காரணம் அப்படி மக்களை நேரடியாக அல்குர்ஆனை நெருங்கச் செய்துவிட்டால், அவர்களின் பிழைப்பில் மண் விழுந்து விடும். இந்தப் புரோகிதர்கள் பசி பட்டினியால் சாக நேரிடும். எனவே புரோகிதத் தொழிலை விட்டு விடுபட அவர்கள் ஒருபோதும் முன்வரமாட்டார்கள். ஆனால் முழு சமுதாயத்தில் 3 சகவீகிதமும் தேராத இந்தப் புரோகிதர்களின் அற்பமான இவ்வுலக வாழ்க்கை வசதிக்காக, 97 சதவிகித பெருங்கொண்ட மக்களின் அழியாத மறு உலக வாழ்க்கையைப் பாழ்படுத்தி அவர்களை நரகில் கொண்டு போய் தள்ள முடியுமா? ஒருபோதும் முடியாது.
அதனால்தான்ட இந்தப் புரோகிதர்களின், அதாவது குருட்டுப் பக்தர்களின் மிகமிகக் கடுமையான ஏச்சுப் பேச்சுக்களையும், கண்டனக் கனைகளையும். அப்பட்டமான அவதூறுகளையும், பழிபாவங்களையும் வெற்றி வேட்டான சாபங்களையும் அணுவளவும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து அவர்களைத் தோலுரித்து அடையாளம் காட்டி மக்களை விழிப்படையச் செய்து வருகிறோம். நிச்சயமாக இந்த எமது முயற்சி அல்லாஹ் அவனது இறுதி நெறிநூல் அல்குர்ஆன் 51:55 இறைவாக்கில் கூறி இருப்பது போல் யாருடைய உள்ளத்தில் ஈமான் (இறை விசுவாசம்) இருக்கிறதோ அவர்களுக்குப் பலன் அளிக்கத்தான் செய்யும். ஆயினும் அவர்கள் கடலிலிருந்து முத்துக் குளிக்கப்பட்டு அம்பாரமாக குவித்து வைக்கப்பட்ட லட்சக்கணக்கான சிப்பிகளில் ஒருசில சிப்பிகளில் மட்டுமே நன்மதிப்புடைய முத்துக்கள் இருப்பது போல் மிகமிகச் சொற்பமாகவே இருப்பார்கள். அவர்களே சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். முத்தில்லாத வெற்றுச் சிப்பிகள் நெருப்பிலிட்டுப் பொசுக்கப்படுவது போல், எஞ்சிய பெரும்பான்மை மக்கள் நரக நெருப்புக்குரியவர்களே. இந்த இறைவனின் தீர்ப்பை யாராலும் மாற்றமுடியாது. இது நிச்சயத்திலும் நிச்சயம்.
எனவே மறுமையில் இறைவனின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் அடைய விரும்புகிறவர்கள். நாளை மறுமையில் இறைவனைப் பார்க்க விரும:புகிறவர்கள், இடைத்தரகர்களான இந்த மவ்லவி புரோகிதர்களிடமிருந்து விடுபட்டு, தன்னம்பிக்கையுடன், சுய சிந்தனையுடன் தங்களுக்குத் தெரிந்த மொழியிலுள்ள இறைவைனின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனின் மொழி பெயர்ப்பைப் பார்த்து படித்து சிந்தித்து, ஆராய்ந்து, விளங்கி இறைவன் அல்குர்ஆன் 7:3ல் சுறியிருப்பது போல் அவனால் இறக்கப்பட்டதையே பின்பற்ற முன்வருவார்களாக, நாம் உடபட எந்த அறிஞரையும் தங்களின் பாதுகாவலராக நம்பிப் பின்பற்றுவதை விட்டும் பாவமன்னிப்புக் கேட்டு மீள்வார்களாக, அதுவே அவர்களுக்கு மறுமை வெற்றியைப் பெற்றுத் தரும்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)