நோன்பு ஆரம்பம், பெருநாள் தினம் பற்றிய அறிவிப்பு!

in 2021 ஏப்ரல்

நோன்பு ஆரம்பம், பெருநாள் தினம் பற்றிய அறிவிப்பு!

அன்று தொழுகையின் நேரங்களை சூரியனின் ஓட்டத்தைக் கண்ணால் கண்டே உரிய நேரங்களில் தொழுது வந்தனர் முஸ்லிம்கள். ஆனால் இன்றோ சூரிய ஓட்டத்தை எந்த முஸ்லிமும் கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. இதுபோலவே அன்று தலைப்பிறையைக் கண்ணால் கண்டே நோன்பு நோற்க ஆரம்பித்தது போல், அடுத்த பிறையைக் கண்ணால் கண்டே நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடியது போல், இன்றும் தலைப்பிறையைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் அவசியம் மார்க்கத்தில் இல்லை.

இன்று சூரியன், பூமி, சந்திரன் இவற்றின் ஓட்டத்தைக் கனகச்சிதமாக ஒரு நொடி கூட வித்தியாசம் இல்லாமல் கணக்கிட்டுச் சொல்லும் அளவுக்கு மனிதன் கணக்கில் முன்னேறிவிட்டான். அன்றாவது மேகமூட்டம் காரணமாக உரிய நாளில் நோன்பு நோற்க முடியாமலும், உரிய நாளில் பெருநாள் கொண்டாட முடியாமலும், சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கலாம். சுமார் 10 மைல்கள்ட இடைவெளியிலுள்ள ஊர்களில் கூட ஒரு ஊரில் ஒரு நாளும், மற்ற ஊரில் அடுத்த நாளும் நோன்பு நோற்று இருக்கலாம். பெருநாள் கொண்டாடவும் நேரிட்டிருக்கலாம். அந்தக் காலம் மலையேறிவிட்டது.

அன்றுபோல் இன்று தலைப்பிறையைக் கண்ணால் பார்க்க பெரும் முயற்சிகள் எடுக்க வேண்டிய அவசியமோ, வெளியூர் பிறைச் செய்திக்காக விடிய விடிய காத்துக் கிடக்கும் சங்கடமோ இன்று கடுகளவும் இல்லை.

எதிர்வரும் 100 ஆண்டுகளின் ரமழான்ட பிறை என்று தோன்றும், ஷவ்வால் பிறை என்று தோன்றி பெருநாள் கொண்டாடவேண்டும் என்பதை இன்றே கணக்கிட்டு சொல்லி விடமடியும். ஏக இறைவன் விஞ்ஞான வளர்ச்சி மூலம் மார்க்கத்தை இந்த அளவு எளிமைப்படுத்தித் தந்திருக்கும் நிலையில் பழைய பஞ்சாங்கம் போல், இன்றும் பிறையைக் கண்ணால் கண்டே நோன்பு நோற்க வேண்டும். நோன்பை விட்டு பெருநாள் கொண்டாட வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களையும் இஸ்லாமிய அடிப்படைய இல்லாமல் தவறாக லண்டனை மையமாக வைத்து கணக்கிட்டு சங்கமம் நிகழும் முன்பே மாதத்தை ஆரம்பம் செய்யும் ஹிஜ்ரி கமிட்டியையும் புறக்கணித்து ஏக இறைவன் கருணையுடன் அளித்துள்ள சரியான புரோகிதமற்ற இஸ்லாமிய வாழ்க்கை நெறியைப் பின்பற்றி மறுமையில் வெற்றியடைவோம்.

        1442 வருட ரமழான் நோன்பு :

நோன்பு ஆரம்பம் :   13.04.2021      செவ்வாய்க்கிழமை

நோன்பு முடிவு    :   12.05.2021      புதன்கிழமை

பெருநாள்          :  13.05.2021      வியாழக்கிழமை

சந்திர சுழற்சியின் சரியான கணக்குப்படி 1442-ம் வருட ரமழான் ஏப்ரல் 13ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பித்து மே மாதம் 12ம் தேதி புதன்கிழமை அன்று 30 நோன்புகளுடன் முடிவடைகிறது. மே மாதம் 13ம் தேதி வியாழக்கிழமை அன்று நோன்பு பெருநாள்.

ஜகாத் அறிவிப்பு :

வழக்கம்போல் வருடா வருடம் ஜகாத் வசூல் செய்யப்பட்டு தேவையுடையவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு அதன் கணக்குகள் ஜகாத் அனுப்புவோருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் ஜகாத் அனுப்புவோர் அனுப்பி தாருங்கள்.

Previous post:

Next post: