படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை!

in 2021 ஏப்ரல்

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை!

ஷரஹ் அலி, உடன்குடி

நிம்மதியாக இருக்கிறார்களா?

சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராது என்று அல்லது அவர்களே உணராத வகையில் யுக முடிவு நாள் திடீரென வராது என்று அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா? (அல்குர்ஆன் : 12:107)

நீங்கள் ஒரு சோதனையைப் பற்றி அஞ்சுங்கள். அது உங்களில் யார் அநீதி இழைத்தார்களோ அவர்களை மட்டுமே தாக்காது. (மற்றவர்களையும் தாக்கும்) நிச்சயமாக அல்லலாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் ஆவான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 8:25)

தற்காலத்தில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கான காரணங்கள் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அந்த சபையில் இருந்த முஹாஜிரீன்களை நோக்கி சொன்னார்கள்.

முஹாஜிரீன்களே! ஐந்து விஷயங்களை கொண்டு சோதிக்கப்படுவீர்கள். அதிலிருந்து உங்களை காப்பாற்ற அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

  1. எந்த ஒரு சமூகத்திலே மானக்கேடான விஷயங்களை மக்கள் வெளிப்படையாக செய்ய ஆரம்பிக்கிறார்களோ, அல்லாஹ் அந்த சமூகத்திலே பரவக்கூடிய கொள்ளை நோய்களை ஏற்படுத்துவான். இதற்கு முன் கேள்விப்படாத நோய்களை எல்லாம் அந்த சமூகம் கேள்விப்படும்.
  2. எந்த ஒரு சமூகம் அளவு நிறுவையில் மோசடி செய்யுமோ, தொழில் மோசடி செய்யுமோ அல்லாஹ் அந்த சமுதாயத்தின் மீது பஞ்சத்தை ஏற்படுத்துவான். மேலும், மிருக பலம் உள்ள அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்களை அவர்கள் மீது அடக்குமுறை செய்ய சாட்டிவிடுவான். இதனால் அவர்கள் கடுமையான (விலைவாசி உயர்வு போன்ற) பேரழிவுகளை சந்திப்பார்கள்.
  3. எந்த ஒரு சமூகம் ஜகாத் கொடுப்பதை விட்டு விலகுமோ, அல்லாஹ் வானத்திலிருந்து மழையை விறுத்திவிடுவான். கால்நடைகள் மட்டும் அங்கு இல்லையென்றால் அந்த சமூகத்திற்கு அறவே மழையை நிறுத்திவிடுவான்.
  4. எந்த ஒரு சமூகம் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கொடுத்த வாக்குறுதியை மீறுமோ அதாவது மார்க்கத்தை புறக்கணித்து தம் மன இச்சைப்படி வாழுமோ, அல்லாஹ் அந்த சமூகத்தின் மீது எதிரிகளை சாட்டிவிடுவான். அவர்கள், அந்த சமூகத்திடம் இருக்கும் கொஞ்சநஞ்சத்தையும் எடுத்துக் கொள்வார்கள்.
  5. எந்த ஒரு சமூகம் அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, எந்த சமூகத்தின் தலைவர்கள் அல்லாஹ்வின் வார்த்தையை மாற்றி தீர்ப்பளித்தார்களோ, அல்லாஹ் அவர்களுக்குள்ளேயே பகைமையை உண்டாக்கி சண்டையை ஏற்படுத்தி விடுவான். (நபிமொழி தகவலாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி), நபிமொழி ஆய்வாளர்: இப்னு மாஜா, நபிமொழி எண். 4019.

பெருமையடிப்பவர்கள் நல்வழியை விட்டு திசை திருப்பப்படுவவர்:

நியாயமின்றி, பூமியில் பெருமையடிப்பவர்களை என் வசனங்களை விட்டும் திருப்பி விடுவேன். அவர்கள் ஒவ்வொரு இறைவசனத்தையும் தெளிவாக கண்டாலும் அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால், அதை ஏற்கமாட்டார்கள், தவறான வழிகேட்டைக் கண்டாலே, அதையே தங்களுக்குரிய நேர்வழியாய் ஏற்பார்கள்.

ஏனெனில், நம் வசனங்களை அவர்கள் பொய்பித்து, அவற்றைப் புறக்கணித்தும் வருகின்றனர். (அல்குர்ஆன்: 7:146)

Previous post:

Next post: