விமர்சனம்! விளக்கம்!!

விமர்சனம் : காட்சியை அடிப்படையாக கொண்டே நோன்பை ஆரம்பிக்கவும், முடித்து கொள்ளவும் ஹதீஃத் ஆதாரம் இருக்கும்போது கணக்கீட்டிற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?  ஹாஸிப் முஹம்மது, சென்னை.

விளக்கம் : நபி(ஸல்) காலத்தில் அனைத்தும் காட்சியை அடிப்படையாக கொண்டுதான் செய்யப்பட்டது. தொழுகை நேரங்கள் சூரியனின் காட்சியை அடிப்படையாக கொண்டு தொழப்பட்டன.

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலைநிறுத்துவீராக! இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக, ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. (அல்குர்ஆன் : 17:78)

அனஸ் இப்னு மாலிக்(ரழி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்தபோது வெளியே வந்து லுஹர் தொழுதார்கள். மிம்பர்(மேடை) மீது ஏறி உலக முடிவு நாள் பற்றியும் குறிப்பிட்டார்கள். புகாரி: 540, அத்தியாயம்:9, தொழுகை நேரங்கள்.

ஆயிஷா(ரழி) அறிவித்தார் :

சூரியன்(ஒளி) என் அறையிலிருந்து விலகாத நிலையில் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். புகாரி: 544, அத்தியாயம்:9, தொழுகை நேரங்கள்.

நோன்பு வைப்பதும், நோன்பு திறப்பதும் நபி(ஸல்) காலத்தில் காட்சியை அடிப்படையாகவே கொண்டு செய்துகாட்டினார்கள்.

ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். (அல்குர்ஆன் : 2:187)

இப்னு அபீ அல்ஃபா(ரழி) அறிவித்தார் :

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், (வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக! என்று கூறினார்கள். அதற்கவர், “இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே!) சூரியன்! என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக! என்றார்கள். அப்போதும் அம்மனிதர், இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே) சூரியன் என்றார். நபி(ஸல்) அவர்கள், “இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக! என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி மாவைக் கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தம் கையால் (கிழக்கே) சுட்டிக் காட்டினார்கள். பிறகு, இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்! என்றார்கள். (புகாரி: 1941, அத்தி. 30, நோன்பு)

அந்த சமுதாயத்தினர் கணக்கீடு பற்றி அறியவில்லை. அனைத்தையும் காட்சி அடிப்படையில்தான் செய்து வந்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாம் உம்மி சமுதாயமாவோம், எழுதி பதிவதையும் அறியமாட்டோம். விண் கலையையும், (கணக்கிடுதலையும்) அறியமாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சில வேலை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்” என இப்னு உமர்(ரழி) அறிவித்தார். புகாரி: 1913, அத்தியாயம் : 30, நோன்பு

ஆனால் இறைவன் தன்ட இறைநூலில் சந்திரனும், சூரியனும் கணக்கின்படி செல்வதாக கூறுகிறான்.

சூரியனும், சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (அல்குர்ஆன் : 55:5)

நவீன காலத்தில் மனிதன் அந்த கணக்கீட்டை இறைவன் தந்த அறிவினால் கணக்கிட்டுவிட்டான். சூரிய சந்திர ஓட்டத்தை கனினியை பயன்படுத்தி தான் நேரத்தையும் (சூரியனையும்), மாதத்தையும் (சந்திரனையும்) கணக்கிடுகிறோம்.

நபி(ஸல்) காலத்தில் அந்த சமுதாயத்தின் கணக்கீடு பற்றி அறியவில்லை. காணும் காட்சி அடிப்படையிலே சந்திரனையும், சூரியனையும் கணித்து செயல்பட்டனர்.

சூரிய கணக்கை தொழுகையில் ஏற்று நேரப்படி கடிகாரம் பார்த்து தொழும்போது உங்களுக்கு நிழலைப் பார்த்து தொழும்போது உங்களுக்கு நிழலைப் பார்த்து தொழ ஹதீஃத் ஆதாரம் இருக்கும்போது ஏன் கணக்கீட்டிற்கும், கடிகாரத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேள்வி கேட்க தோன்றியதா? இல்லையே!

நோன்பு வைக்கும்போதும் திறக்கும்போதும், அதே சூரிய கணக்கீட்டை வைத்து நேரம் குறித்து அந்த நேரத்தில் நோன்பு வைக்கவும் நோன்ப திறக்கவும் செய்கிறீர்களே அப்போது காட்சியை அடிப்படையாக வைத்துதான் நபி(ஸல்) நோன்பு வைத்தார்கள் காட்சியை வைத்து தான் நோன்பு திறந்தார்கள் என்பதும் ஏன்? உங்களுக்கு மறந்து போனது. இதற்கு காட்சியை அடிப்படையாக கொண்டு நோன்பை வைக்கவும் திறக்கவும் ஹதீஃத் ஆதாரம் தெளிவாக இருக்கும்போது ஏன் கணக்கீட்டிற்கு முக்கியத்துவம் என்று உங்களால் கேட்க தோன்றவில்லையே!

ஆனால் சந்திரனை கணக்கிடும்போது மட்டும் இத்தகைய சந்தேகம் வருவதற்கு காரணம் சந்திரன் தேய்ந்து பின் வளர்வது தான். ஆனால் சூரியனில் அப்படி எதுவும் நிகழ்வது இல்லை. கண்ணால்தான் பார்த்து செயல்படவேண்டும் என்பவர்கள் சங்கமம் நிகழ்ந்த பின் நோன்பை ஆரம்பிக்காமல் நாளை கடத்துவதாலும், கணக்கிடுகிறோம் என்று கிளம்பியவர்கள் அவர் தவறாக லண்டனை மையமாக வைத்து கணக்கிட்டு சங்கமம் நடக்கும் முன்பே மாதத்தை முந்தி கொண்டு ஆரம்பிப்பதாலும், நீங்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளீர்கள்.

சரியான இஸ்லாமிய மற்றும் இயற்கையான அடிப்படையில் காபாவை மையமாக வைத்து, கணக்கிடும்போது ஹஜ்ஜத்துல் விதா அரஃபா நாள் உள்பட அனைத்தும் சரியாக வருகிறது. சங்கமம் நிகழும் முன் மாதம் ஆரம்பிக்கும் அவலம் இல்லை.

வெள்ளை நாட்கள் 13,14,15 தேதிகளில் சரியாக வருகிறது என்றும்போதும் கணக்கிடுவதில் எந்த தவறும் இல்லை. அல்லது காட்சியை அடிப்படையாக கொண்டு தான் செயல்பட வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், சந்திரன், சூரியன் இரண்டையும் கணக்கிடுவதை நேர்மையாக விட்டுவிட்டு, காட்சி அடிப்படையிலே தொழுகைகளை தொழவும், காட்சி அடிப்படையிலே ஸகர்  மற்றும் இப்தார் நேரங்களை முடிவு செய்வதையும் இப்படி அனைத்தையும ்மாற்றிக் கொள்ள சொல்வது தான் சற்று நேர்மையன வாதமாக இருக்கும். இந்த நிலைபாடு நபி(ஸல்) காலத்தில் இருந்தபடியே இப்போதும் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உருவானது என்று எண்ணிக் கொள்ளலாம். ஆனால் இதை சரிகண்டால் நபி(ஸல்) காலத்தில் இருந்தபடியேதான் அனைத்தும் என்றால் ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் தான் செல்ல வேண்டியிருக்கும், நவீன அறிவியல் சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் எடுக்க நேரிடும். சிந்தனை செய்யுங்கள்!

இறைவன் சந்திரனும், சூரியனும் கணக்கின்படி உள்ளன என்று கூறும்போது சரியான கணக்கீடு ஒருபோதும் பிழையாகாது.

கண்ணால்தான் பார்க்கவேண்டும் என்பவரக்ள் 1 நாள் பின்னால் தாமதிப்பதையும் லண்டன் மைய கணக்கீட்டாளர்கள் சங்கமத்திற்கு 1 நாளட் முன்பே மாதம் ஆரம்பிப்பதையும்  பார்க்கிறோம். இந்த இரண்டையும் புறக்கணித்து மக்கா மைய கணக்கீட்டின்படி சரியான நாளில் மாதத்தை ஆரம்பிப்போம். இன்ஷா

 அல்லாஹ்! நம் அனைவருக்கும் ஏக இறைவன் சரியான பாதையை காட்டுவானாக.

Previous post:

Next post: