அமல்களின் சிறப்புகள்….

in 2021 மே

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு!

M. அப்துல் ஹமீத்

தொடர் : 69

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

இந்த இதழில் ….!

பிரசித்தி பெற்ற இமாம் இப்னுல் கய்யிம்(ரஹ்) அவர்கள், அல் வாபிலுஸ் ஸய்யிப் என்ற நூலை எழுதினாராம். அந்த நூல் திக்ரின் சிறப்புகள் பற்றி விரிவான நூல் என்றும், திக்ரு செய்வதால் நூற்றுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைப்பதாக இமாம் இப்னுல் கய்யிம்(ரஹ்) அவர்கள் எழுதி இருப்பதாகக் கூறிவிட்டு, அவற்றில் 79 சிறப்புகளை மட்டும் அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகம் தெரிவித்திருக்கிறது.

நூறில் 79ஐ மட்டும் எழுதி இருக்கிறார்களே! மீதி 21 சிறப்புகள் என்னவாயிற்று என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அப்படியானால் வாசகர்களாகிய நீங்கள் சிந்தனை செய்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால், காலம் காலமாக இதை அசி புத்தகத்தில் படித்துக் கொண்டிருக்கும் தப்லீக் ஜமாத்தினர் இந்த கேள்வியை இதுவரைக் கேட்டதில்லையே! அது ஏன்?

சரி! இன்ஷா அல்லாஹ் இப்போது எழுதியிருப்பதில் ஆய்வு செய்வோம். பக்கம் 407, எண். 7ல் அசி புத்தகம் தெரிவிப்பதைப் பாருங்கள்.

“உணவை இழுத்துக்கொண்டு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எமது ஆய்வு!

ஒருவர் செய்யக்கூடிய திக்ரானது, உணவை இழுத்துக்கொண்டு வருகிறதாம்! திக்ர் செய்பவரின் திக்ர், எங்கிருந்து யாரு டைய உணவை, யாருக்காக இழுத்துக் கொண்டு வருகிறது என்று அசி புத்தகம் குறிப்பிடவில்லை. பிறருடைய உணவை இழுத்துக் கொண்டு வந்தால், அது குற்றமாயிற்றே! இவர்கள் செய்கின்ற திக்ர் இது போன்ற தப்புதண்டாக்களை செய்வதற்கு உதவி செய்வதாகத்தான் இருக்குமோ? இப்படிப்பட்ட ஆராய்ச்சி எமக்குத் தேவையில்லை.

எனவே, திக்ர் செய்பவரின் உணவு எங்கு தயாரிக்கப்பட்டிருக்கிறதோ அங்கிருந்து, அவரது திக்ர், அவருக்காக அந்த உணவை இழுத்துக் கொண்டு வருவதாக நல்லெண்ணம் கொள்வோம். அதாவது அவரது உணவு அவரது வீட்டில் இருக்கலாம் அல்லது உணவு கடைகளில் இருக்கலாம். அல்லது உலகில் எந்த மூலையிலும் இருக்கலாம். எங்கே இருந்தாலும், திக்ர் செய்பவர் தனக் கென்று ஒரு லஞ்ச் டைம் ஒதுக்கி அவரது வீட்டுக்கோ அல்லது அவரது உணவு இருக்கும் இடத்துக்கோ சென்று சாப்பிடுவதற்காகப் பயணிக்க வேண்டிய அவசியம் கிஞ்சிற்றும் இல்லாமல், அவருடைய உணவு எங்கிருக்கிறதோ அந்த இடத்துக்கு அவர் செய்யும் திக்ர் போய் அவரது உணவை இழுத்துக்கொண்டு திக்ர் செய்பவரிடம் வந்துவிடுமாம். வாவ்! எவ்வளவு பெரிய பாக்கியம் பெற்றவராக திக்ர் செய்யும் தப்லிக் ஜமாஅத்தினர் இருக்கிறார்கள்.

ஜமாஅத்தில் செல்வதே இப்படி சாப்பிடுவதற்காகத்தானோ என்ற நினைப்பு இப்போது வருகிறதல்லவா? அப்படி என்றால், “திக்ர் உணவை இழுத்துக் கொண்டு வருகிறது’ என்று அசி புத்தகம் எழுதியிருப்பதற்கு பதிலாக, “உணவு இவர்களை ஜமாஅத்துக்கு இழுத்துக் கொண்டு வருகிறது’ என்றல்லவா அசி புத்தகம் எழுதியிருக்க வேண்டும். நமக்கேன் இந்த ஆராய்ச்சி? “உணவை(திக்ர்) இழுத்துக் கொண்டு வருகிறது’ என்று எழுதியிருப்பதை மட்டும் ஆய்வு செய்வோம்.

ஒருவர் செய்கின்ற திக்ர் அவருடைய உணவை அவருக்கு இழுத்துக்கொண்டு வரமுடியுமா? முதலில் இந்த வினாவுக்கு விடை காண்போம். இதுபோன்ற சம்பவம் உலகில் எந்த திக்ர் மஸ்லிஸில் உள்ளவர்களுக்கு நடந்திருந்தாலும், அந்த சம்பவம் பிரபல்யமாகி சரித்திரத்தில் இடம் பெற்றிருக்குமே, சரித்திரம் இப்படியான ஒரு செய்தியை உலகத்திற்குத் தந்ததில்லையே! இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் இந்நேரம், உலமாக்களும் உலகைச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிற தப்லீக்காரர்களும் ஜமாஅத்துக்குப் போகும் ஊர்களிலெல்லாம் இந்த சம்பவத்தை தண்டோரா போட்டிருப்பார்களே. இந்த இரு சாராரும் ஏன் இதை விளம்பரப் படுத்தவில்லை? தப்லீக் ஜமாத்காரர்களே இதை விளம்பரப்படுத்தாதால், அசி புத்தகம் கூறும் இந்தக் கூற்று வழக்கமான புருடாவா? என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. எனவே எமது ஆய்வை ஒருசவால் (ளீஜுழியியிeஐஆe) மூலமாக இன்னும் துரிதப்படுத்துவோம்.

1. இந்த சவால், சவால் விடும் அந்நஜாத் பத்திரிக்கை ஆசிரியருக்கும், சவால் விடப்பட்ட அசி புத்தகம் எழுதியவரின் தப்லீக்மர்கஸின் தலைமைக்கும் இடையேயானது.

2. சவாலின் பொருள்: தப்லீக் ஜமாஅத்தின் அமல்களின் சிறப்புகள் புத்தகத்திலுள்ள குர்ஆன் ஹதீஃதுகளுக்கு முரணாக உள்ள செய்திகளை ஒவ்வொரு மாதமும் எமது அந்நஜாத் பத்திரிகையில் தொடராக ஆய்வு செய்து வருகிறோம். ஒவ்வொரு தொடரின் ஆரம்பத்திலும், இந்த தொடரிலும் கூட, அமல்களின் சிறப்புகள் புத்தகத் தின் எந்த பதிப்பை ஆய்வு செய்கிறோம் என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறோம். இப்படியாக நாம் குறிப்பிட்டு வரும் பதிப்பில் பக்கம் 407ல் வரிசை எண் 7ல், திக்ர் செய்தால் 79 சிறப்புகள் இருப்பதாகவும், மேலும் அந்த திக்ர் “உணவை இழுத்துக்கொண்டு வருகிறது’ என்றும் எழுதி இருப்பதைக் காண்கிறோம். இந்த விஷயத்தை எமது இந்த 69வது தொடரில் ஆய்வு செய்யும் பொழுது, திக்ர் செய்பவரின் திக்ர் அவரது உணவை இழுத்துக் கொண்டு வருகிறது என்பது சாத்தியமற்றது என்பதாகக் கருதுகிறோம். சாத்தியமற்ற விஷயத்தை இஸ்லாம் ஒருபோதும் கூறுவதில்லை. எனவே சாத்திய மற்ற விஷயத்தை இஸ்லாத்தின் பெயரால் எழுதி இருப்பதை தப்லீக் மர்கஸ் நிரூபிக்க வேண்டும் என்பதே எமது சவாலின் பொருளாகும்.

3. சவால் விடுபவரான அந்நஜாத் பத்திரிகை ஆசிரியர், நிகழ்வு நடைபெறும் தேதி, நேரம், இடம், நிபந்தனைகள் ஆகியவற்றை அந்நஜாத் மே 2021 இதழில் பிரசுரித்து, அந்த இதழை தப்லீக் மர்கஸின் தலைமைக்கு பதிவுத் தபால் (RPAD) மூலமாக அனுப்பி வைப்பார்.

அந்த விபரங்களை இப்போது கீழே தந்துள்ளோம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் : அந்நஜாத் அலுவலகம், 16,பாபு ரோடு, திருச்சி-620002. தமிழ்நாடு.

நாள் : 30:6:2021 வியாழக்கிழமை

நேரம் : காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை

4. தப்லீக் ஜமாஅத் மர்கஸ் எமது சவாலை நிருபிக்க முன்வர விரும்பினால், அதற்குரிய ஒப்புதல் கடிதத்தை அதன் தலைமை 25.5.2021க்குள் அந்நஜாத் ஆசிரியருக்கு பதிவுத் தபால் (RPAD) மூலமாக மேலே நிகழ்ச்சி நடைபெறும் இடமாகக் கூறப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அக்கடிதத்துடன், இந்த நிகழ்ச்சிக்கு தப்லீக் ஜமாஅத் மர்கஸ் சார்பாக கலந்து கொள்ள வருபவர் மற்றும் திக்ர் செய்ய வருபவர் ஆகிய இருவரின் பெயர், முகவரி, புகைப்படம் ஆகியவைகளை தப்லீக் ஜமாஅத் மர்கஸின் அமீர் வழங்கிய (தலைமையிடமிருந்து) அங்கீகாரக் கடிதம் (AUTHORIZATION LETTER) ஒன்றையும் இணைந்திருக்க வேண்டும்.

இந்த இருவர் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். கலந்து கொள்ள விரும்பாவிட்டால் அந்நஜாத் முகவரிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தவும்.

5. திக்ர் செய்ய முன்வரும் நபர் நிகழ்ச்சி நாளன்று வர இயலாமல் போய்விடுமேயா னால், மாற்று நபர் (SUBSTITUTE) திக்ர் செய்ய அனுமதிக்கப்படுவார். மாற்று நப ருக்கான அங்கீகாரக் கடிதமும் ஏற்கனவே வரிசை எண் 4ல் கூறியவாறு முன்னரே அனுப்பியிருக்க வேண்டும்.

6. திக்ர் செய்பவர் காலை உணவை முடித்துவிட்டு வந்து திக்ர் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

7. தப்லீக்காரர்களில் யாருடைய திக்ர், உணவை இழுத்துக் கொண்டு வரும் என்று ஊர்ஜிதமாக நம்புகிறார்களோ அப்படிப்பட்ட நபரை மட்டுமே திக்ர் செய்ய அழைத்து வரவேண்டும்.

8. நிகழ்ச்சி நாளில் மதியம் 1 மணிக்குள், திக்ர் செய்தவரின் உணவு இழுத்துக் கொண்டு வரப்படுவதை கண்கூடாக காண் பித்து நிரூபிக்க வேண்டும். காண்பித்தாலும், காண்பிக்கவில்லை என்றாலும் அந்த உண் மையை ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) மதிப்புள்ள முத்திரைத்தாளில் எழுதி தப்லீக் ஜமாஅத் மர்கஸ் சார்பாக வருபவர், திக்ர் செய்தவர் மற்றும் எமது இரு சாட்சிகளு டன் கலந்துகொண்ட அனைவரும் கையய ழுத்திட்டு, அந்நஜாத் ஆசிரியரிடம் ஒரிஜி னலை ஒப்படைத்து அதன் நகலை தப்லீக் ஜமாஅத் மர்கஸ் சார்பாக வருபவர் பெற்றுக் கொண்டு நிகழ்வை முடித்துக் கொள்ளலாம்.

9. நிகழ்வில் கலந்து கொள்பவர்கள்:

அந்நஜாத் சார்பாக :

1. M. சாகுல் ஹமீது. பிளாட் எண் 3, 9வது கிராஸ், கைலாஸ் நகர், திருச்சி-16.

2. S.H. அப்துர் ரஹ்மான். 16 பாபு ரோடு, திருச்சி-2.

தப்லீக் ஜமாஅத் மர்கஸ் சார்பாக :

1. நிகழ்ச்சிக்கு வருகை தருபவர் பெயர், முகவரி (தப்லீக் மர்கஸின் தலைமை வழங்கிய அங்கீகாரக் கடிதம்)
2. திக்ர் செய்பவர்

சாட்சிகள் :

1. A. நாசர், அரியமங்கலம், திருச்சி-10.

2. A. அப்துல்லாஹ். அரியமங்கலம், திருச்சி-10.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்….)

Previous post:

Next post: