படைப்பின் பரிணாம வளர்ச்சி!

in 2021 ஆகஸ்ட்

படைப்பின் பரிணாம வளர்ச்சி!

Dr. A. முஹம்மது அலி, Ph.D.,

இந்திரிய துளியின் பரிணாம வளர்ச்சி : விதி எண் 5 :

  1. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்; குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகுத் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.  (அல்குர்ஆன் 88:5-7)
  2. உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கின்றான். (அல்குர்ஆன் 39:6)
  3. அவன் மனிதனை அலக்(நிலையி)லிருந்து படைத்தான். (அல்குர்ஆன் 96:2)
  4. (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத் துளியாக அவன் இருக்கவில்லையா? பின்னர் அவன் “அலக்’ என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உருவாக்கினான்.  (அல்குர்ஆன் 95:37-39)
  5. அவன் தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும்; பின் “அலக்’ என்ற நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களை குழந்தையாக வெளியாக்குகிறான். பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து பின்னர் முதியோராகிறீர்கள். இதற்கு முன்னர் இறந்துவிடுவோரும் உங்களில் இருக்கின்றனர்.  (அல்குர்ஆன் 40:67)

அல்லாஹ் இந்திரியத் துளியின் முழு வளர்ச்சியை விளக்குகிறான்:

  1. மனிதர்களே! (அறிந்து கொள்ளுங்கள்): நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணி லிருந்தும், பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப் படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம், உங்களுக்கு விளக்குவதற்காகவே. மேலும் நாம் நாடியதை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு குழந்தைகளாக உங்களை வெளிப்படுத்துகிறோம்; பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம்.  (அல்குர்ஆன் 22:5)
  2. நிச்சயமாக நாம்(ஆதி) மனிதரைக் களி மண் ணின் சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்தி ரியத் துளியாக்கி வைத்தோம்; பின்னர் அந்த இந்திரியத் துளியை “அலக்’ (என்ற நிலையில்) ஆக்கினோம்; பின்னர் அந்த “அலக்கை’ ஒரு தசை பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாக்கினோம்; பின் அவ் வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்.

(இவ்வாறு படைத்த) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் 23:12-14)

ஆணின் முதுகுத் தண்டிற்கும், விலா எலும்பு களுக்குமிடையிலிருந்து வெளியாகும் இந்திரியத் துளி பெண்ணிடம் பீச்சப்படுகிறது. குழந்தை உருவாக பெண்ணானவள் ஒரே ஒரு அண்ட அணுவை உருவாக்குகிறாள். அது அவளது கர்ப்பப்பையில் பாதுகாப்பாக இருக்கும். ஆணின் விந்திலிலுள்ள பல லட்சக்கணக்கான விந்தணுக்கள் பெண்ணின் ஒரே ஒரு அண்ட அணுவுடன் இணைய வேகமாக நீந்திச் செல்கின்றன. அவை நீந்துவதற்கு தகுந்தபடி ஆணின் விந்தணுக்களுக்கு நீண்ட வால்களும் இருப்பதை நவீன மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. ஆணின் பல லட்சக்கணக்கான விந்தணுக்கள் போட்டியிட்டு விரைந்து சென்றாலும் ஒன்றே ஒன்றுதான் பெண்ணின் அண்ட அணுவுடன் இணைய முடிகிறது. வெற்றிப் பெற்ற அந்த ஒரே ஒரு விந்தணுவைத் தவிர மற்றவை யனைத்தும் அழிந்துவிடுகின்றன. வெற்றிப் பெற்ற ஒரே ஒரு விந்தணு பெண்ணின் அண்ட அணுவுடன் இணைந்து குழந்தையின் முதல் நிலையை அடைகிறது.

தனியாக இருந்தபோது நீந்திச் சென்று போட்டியில் வெற்றிபெறும் சக்திப் பெற்ற ஆணின் விந்தணு பெண்ணின் அண்ட அணு வுடன் இணைந்ததும் தனது அசைவுகளை இழந்து விடுகிறது. தானும் அசைவற்று கர்ப்பப் பையில் ஒட்டிக்கொண்டு தொங்க ஆரம்பிக்கிறது. இதனை “அலக்’ என்ற நிலை என்பர். வண்ணத்துப் பூச்சியின் வளர்ச்சிப் பற்றி படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் ஒட்டித் தொங்கும் லார்வா நிலையை அறிந்திருப்பர். இந்நிலையில் தான் ஆண் விந்தணு, பெண்ணின் அண்ட அணு(லிஸற்ஐ)வுடன் இணைந்து தொங்கும் நிலை (அலக்) அடைகிறது.

பின் “அலக்’ தசை பிண்டமாகிறது. அத்தசை பிண்டம் சிறிது சிறிதாக உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான நிலையாக மாறுகிறது (22:5) உருவாக்கப்பட்ட பாகங்கள் கை, கால்களாகவும், தலையாக மாற்றம் பெறுகிறது. பின் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் மாற்றி, அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அல்லாஹ் அணிவிக்கிறான். அதன் பின் முழு மனித குழந்தை உருவாகிறது. இம்மாற்றங்களை விந்து-அலக்-தசை பிண்டம்-எலும்புகள்-முழு உருவமுள்ள குழந்தை எனலாம்.

இம்மாற்றங்கள் அனைத்தும் 7×40 = 280 நாட்களில் நடைபெறுகின்றன. இப்பெரும் பரிணாம வளர்ச்சி இக்குறுகிய நாட்களில் நிகழ்வது அதிசயமன்றோ? இவையனைத்தும் மிகவும் பாதுகாப்பான கர்ப்பப் பையில்-மூன்று இருள்களுக்குள் (வயிறு-கர்ப்பப்பை-பனிக்குடம்) நிகழ்கிறது. இதனையும் அல்லாஹ் தெளிவாக தனது அருள்மறை குர்ஆனில் கூறியுள்ளான். இன்றைய நவீன விஞ்ஞான யுகமும், மருத்துவ துறையும் அல்லாஹ்வின் ஒவ்வொரு சொல்லையும் உண்மையயன தத்ரூபமாக நிரூபித்துள்ளன.

மனிதனின் குழந்தை பருவ வளர்ச்சியை அறிந்த நாம் அதன் உண்மை குணாதிசயங்களையும் காண்பது அவசியமாகும். மனித னுக்கு மிருகங்களுக்கிருப்பது போல வால் இல்லை என்பதை நாமறிவோம். ஆனால் ஆணின் விந்தணுவில் நீண்ட வால்கள் இருந்ததை நாம் மறந்து விடுகிறோம். பரிணாம வளர்ச்சியில் வால் மறைந்துவிடுவதில்லை. இதைப் பற்றிய விளக்கங்களை வரும் தொடர்களில் காணலாம்.

பெண்ணின் அண்ட அணு(லிஸற்து)வுடன் இணைந்த விந்தணு தனது அசைவை மறந்து தொங்க (அலக்காக) ஆரம்பிக்கிறது. இந்த தொங்கல் கர்ப்பப்பையுடன் மறைந்துவிடுவதில்லை. இப்புவியில் பிறந்தப் பின்னும் பெற்றோர்; தாய், தந்தை, உறவினர்கள் என்ற தொங்கல்கள்; பருவ வயது எய்தும்போது ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் நாடி அவர்களது அன்பு, பாசம் பற்றுக்கு தொங்கி அலைகின்றனர். பணத்தின் மீது தொங்கல், பதவியின் மீது தொங்கல், சாகும்போது கூட இவ்வுலக வாழ்வின் மீது தொங்கல்-கர்ப்பப்பை தொங்கலிலிருந்து உருவானது என்றால் மிகையாகாது! இத்தொங்கலுக்கு காரணமென்ன?

ஆணிடமிருந்து பீச்சப்பட்ட விந்திலுள்ள பல லட்சகணக்கான விந்தணுக்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது இலட்சியமான பெண்ணின் அண்ட அணுவை நாடி நீந்தி செல்கின்றன. அதில் ஏற்படும் கடும் போட்டியில் ஒரே ஒரு அணு மட்டும் வெற்றி பெறுகிறது. அதுவே குழந்தையாக பரிணமித்து வெளியாகிறது. இக்கட்டுரை எழுதுபவரும், இதனைப் படிக்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அவர் எம்மதத்தை, நாட்டை, மொழியை சார்ந்தவரா யினும் இப்பெரும் போட்டியில் வெற்றிப் பெற்று மனிதனாக பிறந்துள்ளனர். இப்போட்டியில் உருவான வளர்ச்சி அவனது இவ்வுலக வாழ்விலும் தொடர்கிறது. வாழ்வு முழுவதும் அவன் ஒவ்வொரு துறையிலும் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டிய நிலையிலிருக்கிறான். இப்போட்டி மனப்பான்மை அவனது ஆரம்ப வளர்ச்சியின் துவக்கமன்றோ அதுவே தொடர்கிறது. இப்போட்டி மனப்பான்மை, தான் நாடும் இலட்சியத்தை அடைவதற்கன்றோ? அந்த லட்சியத்தில் அவனுக்குள்ள தொடர்பும், பற்றும் அதனை கட்டி தொங்கும் நிலையை உருவாக்குகின்றது அல்லவா?

இவ்விதமாக வாழ்வின் பெரும் இலட்சி யங்களையும் அதற்கான போட்டியிடும் மனப் பான்மையையும், அதில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் தத்ரூபமாக நமது பரிணாம வளர்ச்சி உணர்த்துவதைக் காணலாம். இதனடிப்படையில் நமது இலட்சியமும், ஜிஹாதும், அதில் ஏற்படும் கஷ்டநஷ்டங்களும் அல்லாஹ்வின் அருள் கொண்டதாக அமைய நாம் வாழ்வோமாக! ஆமீன்.

Previous post:

Next post: