அமல்களின் சிறப்புகள்….

in 2021 செப்டம்பர்

தப்லீக்  ஜமாஅத்தினரின்  தஃலீம்  தொகுப்பு நூல்

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு!

  1. அப்துல் ஹமீத்

தொடர் : 73

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

இந்த இதழில் ….!

அசி புத்தக பக்கம் 410ல் எண் 30வது எண்ணில் தெரிவித்திருக்கும் செய்தி என்ன வென்றால், “திக்ர் செய்வதில் ஈடுபட்டிருப்ப வர்களுக்கு துஆ செய்பவர்களுக்கு கிடைக் கப்பெறும் பாக்கியங்களை விட அதிக மானவை கிடைக்கும். என்னுடைய திக்ரு, துஆச் செய்வதை விட்டு யாரைத் தடுத்து விட்டதோ, துஆ கேட்பவர்களுக்குக் கொடுப்பதை விட சிறந்ததை நான் அவ ருக்கு வழங்குவேன்’ என்று அல்லாஹு தஆலா கூறியதாக ஒரு ஹதீதில் அறிவிக்கப் பட்டுள்ளது என்று எழுதப்பட்டிருக்கிறது.

எமது ஆய்வு :

“ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறி இஸ்லாத்தில் மிகப் பெரிய விசயத்தில் மோசடி செய்திருப்பது மட்டுமில்லாமல், அந்த விசயத்தை ஹதீது என்று கூறி ஏமாற்றுகிறது அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகம். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ஹதீதை அல்லாஹு தஆலா கூறியிருக்கிறானாம்!

ஹதீத் என்றால் செய்தி என்பதுதான் பொருள். உயர்ந்தோன் அல்லாஹ் தமது செய்திகளை “குர்ஆன்’ என்ற புத்தகத்தில் இறக்கி அருள் புரிந்திருக்கிறான் என்பது முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டிய இஸ்லாத்தின் பாலர் பாடமாகும். அந்த குர்ஆன், ஜிப்ரீல்(அலை) என்ற வானவரின் மூலமாக இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீது, உலகத்தாருக்கு எடுத்துச் சொல்வதற் காக, இறைவனால் இறக்கி அருளப்பட்ட ஓர் அருட்கொடையாகும்! ஆக, குர்ஆன் முழுக்க முழுக்க இறைவனின் சொல்லாகும். இவற்றை ஹதீதுகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அதேபோல, இறைவனின் இறுதி தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தெரிவித்த செய்திகளை மட்டுமே ஹதீதுகள் என்று சொல் வது இஸ்லாத்தின் அடுத்த பாலர் பாடம் ஆகும். இந்த நடைமுறை இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே வழக்கிலிருந்து கொண்டிருப்பது ஒன்றே இதற்குப் போதிய சான்றாக அமைந்திருக்கிறது. எனவே, ஹதீத் முழுக்க முழுக்க இறைத் தூதரின் சொல் ஆகும்.

இப்போது குர்ஆனிலுள்ள 2:186வது இறை வசனத்தை கவனியுங்கள்.

“(நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நீர் கூறுவீராக! “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே கேட்கட்டும்; என்னையே நம்பட்டும்; அதனால் அவர்கள் நேர்வழியை அடை வார்கள்’.

மேற்கண்ட 2:186வது இறை வசனத்தை மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். அசி புத்தகம் கூறி இருப்பதையும் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இரண்டையம் இப்போது ஒப்பிட்டுப் பாருங்கள்.

மேலே சொன்ன 2:186வது ஆயத்தில் “அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது நேர்வழி’ என்று உயர்ந்தோன் அல்லாஹ் அறிவித்துத் தந்த பிறகும், “என்னுடைய திக்ரு, துஆச் செய்வதை விட்டு யாரைத் தடுத்து விட்டதோ, துஆ கேட்பவர்களுக்குக் கொடுப்பதை விட சிறந்ததை நான் அவருக்கு வழங்குவேன்’ என்று அல்லாஹ் கூறிய தாகப் பொய் சொல்கிறது அசி புத்தகம்.

இதன்மூலம் எதைத் தெரியப்படுத்து கிறது என்பதை சிந்தியுங்கள். துஆ செய்யாமல் திக்ர் செய்தால் அப்படி திக்ர் செய்பவருக்கு சிறந்தது கிடைக்குமாம். என்ன சொல்கிறது அசி புத்தகம் என்பது இப்போதாவது தெரிகிறதா? துஆ செய்வதை விட்டுவிட்டு திக்ர் மட்டும் செய்ய வேண்டுமாம். பிரார்த் தனை செய்வதை விட்டுவிட்டு சிறந்ததைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாம்.

“அல்லாஹ்விடம் துஆ செய்வது நேர்வழி’ என்று அல்லாஹ் 2:186வது வசனத் தில் கூறும்போது, துஆ செய்வதை விட்டு விடு என்று கூறும் அசி ஆசிரியர் மறுமை நாளில் அல்லாஹ்வின் முன் இஸ்லாத்தி லுள்ள முஸ்லிமாக இருப்பாரா? அல்லது இஸ்லாத்தின் எதிரியாக இழிவுடன் நிற்பாரா? அல்லாஹ்வுக்கு பயந்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல! “திக்ர் செய்வதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு துஆ செய்பவர் களுக்கு கிடைக்கப்பெறும் பாக்கியங்களை விட அதிகமானவை கிடைக்கும்’ என்று ஆணித்தரமாக நெஞ்சழுத்தத்துடன் குர்ஆன் சொல்லாததை துணிந்து கூறுகிறது அசி புத்தகம்.

வேறு மொழியில் எழுதப்பட்ட இந்த குப்பைகளையயல்லாம் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? சிந்தித்துப் பாருங்கள். தாம்தான் அறிஞர்கள் (உலமாக்கள்)(?) என்று கூறிக்கொண்டு, தம்மைத்தாமே மார்க்கத்தின் மேலாதிக்க சக்தியாக தமிழகத்தில் மார்தட்டிக் கொண்டிருக்கும் ஜமாஅத்துல் உலமா சபையினர் தூங்கிக் கொண் டிருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தமாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட சோம்பேறிகள் இருந்து கொண்டிருப்பதால் தான், இஸ்லாத்தை அசைத்துப் பார்க்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளை எல்லாம், அதாவது “துஆ செய்வதை விட்டுவிட்டு வெறுமனே திக்ர் மட்டும் செய்தாலே, துஆ கேட்பவர்களுக்கு கொடுப்பதை விட சிறந் ததை அல்லாஹ் அவர்களுக்கு கொடுப்பான்’ என்று துணிச்சலுடன் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறது அசி புத்தகம்.

இந்த கருத்தை ஏற்று முஸ்லிம்கள் செயல்பட்டால் என்ன விபரீதம் நடக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். முஸ்லிம்கள் துஆ செய்வதை விட்டுவிட ஆரம்பித்து விட்டால், ஒரு காலகட்டத்தில் துஆ செய்யும் முஸ்லிம்கள் இருக்கவே மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டு விடும். இஸ்லாத்தை கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் மனதிலிருந்து விடுபடச் செய்யும் திட்டமிட்ட சதி இது! இந்த திட்டம் இறைவசனங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் இந்த கூட்டம் மூளைச் சலவை செய்யப்பட்ட கூட்டம். இக்கூட்டத்தில் படித்தவர்களும், பாமரர்களும், முதலாளி களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும், உத்தியோகத்திலிருப்பவர்களும், பல்வேறு தொழில் செய்பவர்களும் பங்கேற்றுள்ளனர்.

அமல்களின் சிறப்புகள் ஆய்வுத் தொடரை நாம் எழுத ஆரம்பித்த போது இஸ்லாமிய கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த தப்லீக் ஜமாஅத் பேராசிரியர் ஒருவர். “ஒரு முஃமினை (அதாவது அசி ஆசிரியரை) இழிவுபடுத்துவது கஃபத்துல் லாஹ்வை இடிப்பதற்கு சமம் என்றும், இது நாய் புத்தி, நாய் மலம்தான் தின்னும்’ என்று எம்மை இடித்துரைத்தார். அசி ஆசிரியரை இழிவுபடுத்தினால் அல்லாஹ்வின் வீட்டை இடிப்பதற்கு சமமாம். என்னே அறிவு! என்னே அறிவு! இதுவன்றோ கலப்படமற்ற இணைவைத்தல்.

இப்படிப்பட்ட பேராசிரியர் எப்படிப்பட்ட மாணவர்களை இதுவரை உருவாக்கி இருப்பார் என்று நினைக்கும்போது எமது உள்ளம் பதறுகிறது! ஏனெனில், இஸ்லாம் அல்லாத தப்லீக் ஜமாத்திற்கு ஆள் பிடிக்கும் இவர், இதுவரை எத்தனை மாணவர்களை வழி கெடுத்திருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்.

இஸ்லாமிய கல்லூரிகளின் நிர்வாகிகள் தயவுசெய்து தங்களது கல்லூரிகளில் இந்த ஜமாஅத்தினரை பணி நியமனம் செய்யாதீர்கள்; அல்லது குறைந்தபட்சம் இந்த ஜமாத்தின் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடக்கூடாது என்றாவது உத்தரவிடுங்கள். இல்லையேல் அவர்களுடன் நீங்களும் குற்றவாளியாக மறுமையில் அல்லாஹ்வின் முன் நிற்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

படிக்கப் படிக்க நெஞ்சம் பதறுகிறது. “துஆ செய்வதை விட்டுவிட்டு, வெறுமனே திக்ர் மட்டும் செய்ய வேண்டுமாம்! வெறுமனே திக்ர் மட்டும் செய்தால், துஆ கேட்பவர்களுக்கு கொடுப்பதை விட சிறந்ததை அல்லாஹ் அவர்களுக்கு கொடுப்பானாம்’

அல்லாஹ் கூறும் நேர்வழியை விட்டு விட்டு, இந்த கழிசடைகள் செய்யும் திக்ர்களை மட்டும் செய்ய வேண்டுமாம். அதுவும் எப்படி? காலையிலும், மாலையிலும் திக்ர் செய்யும்படி அல்லாஹ் 7:205, 19:11, 24:36, 40:55, 48:9, 76:25 ஆகிய ஆயத்துக்களில் கட்டளையிட்ட பின்பும், “(நபியே!), நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச் சத்தோடும், உரத்த சப்தமில்லாமல் காலையிலும், மாலையிலும் உம் இறைவனை திக்ர் செய்து கொண்டு இருப்பீராக! மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்’ என்று 7:205 இறை வசனத்தில் திக்ர் செய்வது எப்படி என்று அல்லாஹ் கூறிய பிறகும், திக்ருகளில் என்ன கூறவேண்டும் எத்தனை தடவை கூறவேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் அஸ்தஃபிருல் லாஹ் (3 தடவை), அல்லா ஹும்ம அன்த்தமி ஸலாம், வமின்கலு ஸலாம், தமி பாரக்த ஜலாலி வல் இக்லுராம் (1 தடவை) கூறிய பிறகு சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர் என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்.   (அபூ ஹுரைரா(ரழி), புகாரி எண். 843)

பிறகு, லா இலாஹ இல்லல்லாஹு-வஹ்தஹு-லா­ரி கலஹு-லஹுல்முல்குலு – வலஹுல் ஹம்தும்-வஹு வ அலாகுலுல்லி ஷைஇன் கலுதீர் (1 தடவை) ஆயத்துல் குர்ஸி… சூரா (அத்தியாயம் & ஆயத்து 2:255) (1 தடவை), பிறகு குல் ஹுவல்லாஹு அஹத்… சூரா (அத்தியாயம் 112), குல் அவூது பி ரப்பில் ஃபலக்… சூரா (அத்தியாயம் 113), குல் அவூது பி ரப்பின்னாஸ்… சூரா (அத்தி யாயம் 114), (112, 113, 114) என்று இதே வரிசையில்) (1 தடவை) கூறிய பின்பு (ஃபஜ ருக்கும், அஸருக்கும் மட்டுமே இதே வரிசை யில் 3 தடவைகள் கூறிய பின்பு), ஒவ்வொரு வரும் அவரவருக்குள்ள ஹலாலான தேவை களை இறைவனிடம் துஆ செய்து கொள்ள வேண்டும். இவைகளைத் தவிர ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளுக்குப் பிறகு அதி கப்படியாக லா இலாஹ இல்லல்லாஹு-வஹ்தஹு-லா­ரி கலஹு-லஹுல் முல்குலு-வலஹுல் ஹம்தும்-வஹுவ அலாலு குல்லின் கலுதீம்ர் என்ற வார்த்தைகளை 100 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹி-வ சுப்ஹானல்லாஹி- வ லா இலாஹ இல்லல் லாஹு-வல்லாஹு அக்பர்-வ லா ஹவ்ல வ லா லுகுவ்வத்த இல்லா பில்லாஹில் அளிய் யில் அழீம் என்று 100 தடவைகளும், சுப்ய ஹானல்லாஹி வபியஹம்திம்ஹி சுப்ய ஹானல்லாஹில் அழீம் என்ற சொற்களை 100 தடவை களும், அதன் பிறகு அஸ்தவீ ஃபிய்ருல்லாஹ வ அதூவீபுய இலைஹி என்ற சொற்களை 100 தடவைகளும் கூறவேண் டும். இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். முஸ்லிம்: 837,1044,5221,5225

அல்லாஹ்வுடைய மற்றும் அல்லாஹ்வின் இறுதித் தூதருடைய இந்த அழகிய நேர்வழிகாட்டல்களை எல்லாம் புறக்கணித்து தூர எறிந்து விட்டு, ஊராரும் உற்றாரும் அயர்ந்து தூங்கும் அந்த அர்த்த ராத்திரி வேளையில், அவர்களுக்கு இடைஞ்சலாக, கூட்டமாக உட்கார்ந்து கொண்டு இறைத்தூதர் காட்டித்தராத வார்த்தைகளை காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டு இருப்பது தான் இவர்களின் விந்தையான திக்ர்!

பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை அல்லாஹ் 18:28 இறைவசனத்தில் தெரிவித்திருப்பதை கவனியுங்கள்.

“(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்தித்துக் (துஆ செய்து) கொண்டு இருக்கிறார்களோ, அவர்களிடன் நீரும் பொறுமையை மேற்கொண்டு இருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அவர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும் எவனுடைய இதயத்தை எமது நினைவுகளிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிப்படாதீர்; ஏனெனில் அவன் தன் மன இச்சையைப் பின்பற்றியதனால், அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.

எனவே, தப்லீக் ஜமாஅத் சகோதரர்களே! திக்ரும் செய்ய சொல்கிறது, துஆவும் செய்யச் சொல்கிறது இஸ்லாம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். எதுவுமே ஒன்றிற்கொன்று மேலானதுமில்லை, தாழ்ந்ததுமில்லை, இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, தம்மைத் தாமே நாசப்படுத்தி அழித்துக் கொள்ளும் தப்லீக் ஜமாஅத்திலிருந்து வெளியேறி தூய இஸ்லாத்தில் நுழைந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Previous post:

Next post: