நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

in 2021 செப்டம்பர்

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

எஸ்.எம்.அமீர்,  நிந்தாவூர்.

        ஆகஸ்ட் மாத தொடர்ச்சி…..

“அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போலாவான்”

யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கி றாரோ அவர் வானத்திலிருந்து கீழே விழுந்தவரைப் போன்றவர் ஆவார். பின்னர் அவரைப் பறவைகள் கொத்தித் தூக்கிச் சென்று விடுகின்றன, அல்லது காற்று அவரைத் தூரமான இடத்திற்கு அடித்துக் கொண்டு போய் வீசிவிடுகின்ற ஒருவனைப் போல் ஆவான். (22:31) அதாவது,

உயிரைக் கைப்பற்றும் வானவர் (ஏக இறையை) மறுக்கும் அடியார் ஒருவரின் உயிரைக் கைப்பற்றியவுடன் மற்ற வானவர்கள் அந்த உயிருடன் மேலே வானத்திற்கு ஏறுவர். அப்போது அவருக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படமாட்டாது. மாறாக அவரது உயிரை அங்கிருந்து வேகமாக வீசி யயறியப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பராஉ பின் ஆசிப்(ரழி) முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் 6:69, 4:965-975)

“மற்றுமோர் சிறந்த உதாரணம் :

மனிதர்களே! உங்களுக்கு ஓர் “ஈ” உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரைப் பாதுகாவலர்களாக ஏற்படுத்திக் கொண்டு அழைக்கிறீர்களோ, அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் அவர்க ளால் ஓர் ஈயைக் கூட ஒருபோதும் படைக்க முடியாது. (அவ்வளவு ஏன்?) ஓர் ஈ அவர்களி டமிருந்து எதையேனும் ஒரு பொருளைப் பறித்துக்கொண்டு சென்றுவிட்டால் அதனிடமிருந்து அதை(க் கூட) அவர்களால் மீட்க முடியாது. (ஏனெனில்) தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாகவே இருக் கிறார்கள். (22:73) என்று, மேலும்,

வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான். எனது படைப்பைப் போன்று படைக்கத் தயாராகிவிட்ட வனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவ்வாறாயின் அவர்கள் ஓர் உயிரணுவைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது ஒரு கோதுமை விதையைப் படைத்துக் காட்டட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரி 5953, 7559, முஸ்லிம் 4292)

அவனது “மற்றுமோர் சிறந்த உதாரணமாக” சிலந்திப் பூச்சி”

அல்லாஹ் அல்லாதவர்களைக் காவலர் களாக ஆக்கிக் கொண்டவர்களின் நிலையானது சிலந்திப் பூச்சியின் நிலையைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. நிச்சயமாக வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (இதை) அவர்கள் அறியக்கூடாதா? (29:41) தன்னையன்றி வேறு கடவுளை ஏற்படுத்திக் கொண்டு அவைகளிடம் உதவியையும் வாழ்வாதாரத்தையும் வேண்டுகின்றனர். இக்கடவுளர்கள் பலமின்மையிலும் பலவீனத்திலும் சிலந்தி வலையை ஒத்திருக்கின்றார்களே? என்பதாக வினா எழுப்புகிறார்கள். மேலும்,

“உங்களிலிருந்தே உங்களுக்கு ஓர் உதாரணம்”:

அல்லாஹ் உங்களிலிருந்தே உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். உங்களுக்கு நாம் வழங்கிய வாழ்வாதாரத்தில் உங்களது அடிமைகள் எவரும் உங்களுக்குப் பங்காளிகளா? அதில் நீங்களும் (அவர்களும்) சமமாக இரு(க்க நீங்கள் சம்மதி)ப்பீர்களா? உங்களுக்கிடையே நீங்கள் அஞ்சுவது போல் அவர்களுக்கு அஞ்சுவீர்களா? விளங்கும் சமுதாயத்துக்கு இவ்வாறே (உதாரணங்கள் மூலமாக) வசனங்களைத் தெளிவுபடுத்துகிறோம். (30:28) இங்கே படைப்பி னங்களையே படைப்பினங்கள் கடவுளர்க ளாக ஏற்படுத்திக் கொள்ளலாமா? என்கின் றான். மேலும் ஓர் உதாரணமாகக் கூறும்போது,

“மணல் வீட்டிற்கு ஒப்பானவன்”

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது அன்பின் மீதும் தனது கட்டிடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது இடிந்து விழக்கூடிய அரிக்கப்பட்ட கரையின் விளிம்பின் மீது தமது கட்டிடத்தை (மணலால்) நிறுவி அதனுடன் (சேர்ந்து) தாமும் நரக நெருப்பில் விழுந்தவர் சிறந்தவரா? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் (ஒருபோதும்) நேர்வழி காட்டமாட்டான். (9:109) என்பது;

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் ஊறு விளைவித்தல், இறை மறுப்பை வளர்த்தல் இறை நம்பிக்கையாளர்களிடையே பிரிவினையை உண்டாக்குதல் ஆகிய தீய நோக் கங்களுக்காகப் பள்ளிவாசல் கட்டிய நயவஞ்சகர்களைக் குறித்து இடித்துரைக்கும் வசனமே மேலுள்ளது. அந்தப் பள்ளிவாசலில் இருந்து பகை வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நான் பார்த்துள்ளேன் என்று ஜாபிர்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் V4 – P405)

“மிதக்கும் நுரைகளைப் போன்று நீர்க் குமிழிக்கு ஒப்பானவன்”

அவன் வானத்திலிருந்து தண்ணீரை இறக்கிவைக்கின்றான். அது ஓடைகளில் அதனதன் (கொள்) அளவுக்கேற்ப வெள்ள மாக ஓடுகிறது. வெள்ளம் (தனக்கு) மேலாக மிதக்கும் நுரைகளைச் சுமக்கிறது. மேலும் அவர்கள் ஆபரணம் அல்லது (வேறு) உப யோகப் பொருள் செய்வதற்காக நெருப்பி லிட்டு (கனிமங்களை) அவர்கள் உருக்கு வதாலும் அதைப் போன்ற நுரை உருவாகி றது. இவ்வாறே சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் உதாரணம் கூறுகின் றான். இறுதியில் நுரையோ காணாமல் போய் விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தருவதோ நிலத்தில் தங்கி விடுகிறது. அல் லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (13:17)

அதாவது சத்தியமும் அசத்தியமும் ஓரிடத்தில் சந்திக்கும்போது அசத்தியம் நிற் காது நிலைக்காது, உருக்குலைந்து போய் விடும். நுரையால் எந்தப் பயனும் இல்லை. வெடித்துச் சிதறிக் காற்றில் கரைந்து விடும். அவ்வாறே பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்பு ஆகியவற்றின் கசடும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விடும். மேலும் அத்தகையவர்களை,

“எதற்கும் இயலாத அடிமைக்கு ஒப்பிடுதல்”

அல்லாஹ் (இருவரை) உவமையாக காட்டுகிறான் (ஒருவன் பிறரால்) உடமை யாக்கப்பட்ட அடிமை, எதையும் (சுயமாகச்) செய்ய அவனால் முடியாது. இன்னொருவன் (யாரெனில்) அவருக்கு நாம் நம்மிடமிருந்து எழிலான வாழ்வாதாரத்தை வழங்கினோம். அவர் அதிலிருந்து மறைமுக மாகவும் வெளிப்படையாகவும் (அறவழியில்) செலவு செய்கிறார். இவ்விருவரும் சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் பெரும்பாலானோர் அறியமாட்டார்கள். (16:75) இது இறைமறுப்பாளனுக்கும் இறை நம்பிக்கை யாளருக்கும் அல்லாஹ் காட்டும் ஓர் உவமை ஆகும் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறே கத்தாதா(ரஹ்) அவர்களும் தெரிவித்துள் ளார்கள். விரிவுரையாளரான இப்னு கஸீர் (ரஹ்) அவர்களும் இதையே தேர்ந்தெடுத் துள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு அபீஹாத் திம், இப்னு கஸீர் V5 – P83,84) அத்துடன் மற்றுமோர் உதாரணமாக,

“பல எஜமானர்களுக்குச் சொந்தமான அடிமை போன்றவன்”

அல்லாஹ் (இரு அடிமை மனிதர்களை) உதாரணமாகக் கூறுகிறான். ஒரு மனிதனுக்கு சண்டைக்காரர்களான (பல உரிமையாளர்களாக) மாறுபட்ட கருத்துடைய பல பங்காளிகள் (எஜமானர்களாக) உள்ளனர். இன்னொரு மனிதன் அவன் ஒரேயயாரு மனிதனுக்கு மட்டுமே உடையவன். இவ்விருவரும் உதாரணத்தால் சமமானவர்களா? எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (39:29)

அதாவது அவர்கள் தமக்கு மத்தியில் கூட்டுடைமையாக உள்ள அந்த அடிமை விசயத்தில் அவன் தனக்கே பணி செய்ய வேண்டும் என்று சொல்லி ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவில் ஈடுபடுகின்ற பல பங்காளிகளின் அடிமை, மற்றவரோ முழுக்க முழுக்க ஒருவனுக்கு மட்டுமே உடைமை யானவன் வேறு யாரும் அந்த அடிமையை உரிமை கொண்டாட முடியாதுள்ளவன். இவ்விருவரும் எடுத்துக்காட்டால் சமமான வர்களா? என்கின்றான். அத்தகையவர்கள்.

“தண்ணீர் தானாகவே வாய்க்குள் செல்ல வேண்டும் என்று நினைப்பவனைப் போல’

உண்மையான பிரார்த்தனை அவ னுக்கே உரியது. அவனையன்றி இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். (இவர்கள்) தண்ணீர் (தானாகத் தமது) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக (வெறுமனே) இரு கைகளையும் தண்ணீரை நோக்கி விரித்து வைத்துக் கொண்டிருப்பவனைப் போன்றவர்களாக அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த் தனை வீணாகவே இருக்கும். (13:14) என்று,

அலீ(ரழி) அவர்கள் கூறியதாவது கிணற்றோரம் நின்றுகொண்டு தனது கரத்தால் தண்ணீரை எடுக்க வேண்டும் என்று எண்ணுகிறவனின் நிலையைப் போன்றதுதான் அவர்களின் நிலையும். (அவன் அப்படியே நின்று கொண்டிருந்தால்) தண்ணீர் அவனது கரத்தைக்கூட ஒருபோதும் எட்டாது. பிறகெப்படி அவனது வாயை எட்டும்? (தஃப்ஸீர் இப்னு கஸீர் V4 – P872,873) இதுபோன்றே,

“மனோ இச்சையைப் பின்பற்றி வாழ்பவனுக்கு உதாரணமாக”

(நபியே! இஸ்ரவேலர்களில்) ஒருவரைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக, நாம் அவருக்கு நமது சான்றுகளை (அருளாக) வழங்கியிருந்தோம். (ஆனால்) அவர் அவற்றிலிருந்து நழுவிக் கொண்டார். ஆகவே அவரை ஷைத்தான் தனது ஆதரவாளராக ஆக்கிக் கொண்டான். (இதையடுத்துத்) தவறான (வழியில் அவர் சிக்கி அழிந்துபோன) வர்களில் ஒருவராக மாறினார்.

நாம் நாடியிருந்தால் அதன்மூலம் அவனை உயர்த்தியிருப்போம், மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சை யைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாயாகும். அதை நீ விரட்டினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும், நாக்கைத் தொங் கவிட்டுக் கொள்கிறது. நமது வசனங்களைப் பொய்யயனக் கருதிய கூட்டத்தின் உதார ணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற்காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக! (7:175,176) என்று நபியவர்களுக்கு ஆணையிடுகின் றான்.

அல்லாஹ்வின் மகத்தான “அல்இஸ் முல் அஃழம்” எனும் பெயரை அறிந்திருந்த, அவர் கேட்டு அல்லாஹ் எதையும் கொடுக்காமல் இருந்ததில்லை. அந்த அளவுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுபவராக, இறைத் தூதராகிய மூசா(அலை) அவர்களது இறுதி காலத்தில் வாழ்ந்து நபிக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் செயல்பட்டு அருட்கொடை பிடுங்கப்பட்டவராக நாக்கு வெளியே இழுபட்டு நெஞ்சு மீது விழுந்து இம்மையையும் மறுமையையும் இழந்த இஸ்ரவேலர்களில் ஒருவராகிய “பல்ஆம் பின் பாஊரா” என்பவர் குறித்தே மேலுள்ள 7:175,176 வசனங்கள் குறிப்பிடுவதாக (இப்னு மஸ்ஊத்(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) மாலிக் பின் தீனார் (ரஹ்) கத்தீ(ரஹ்) ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) இப்னு இஸ்ஹாக் ஆகியோர் குறிப்பிடுகின்றார்கள். தஃப் சீர் தபரீ, முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக், இப்னு கஸீர் V3 – P955,965)

Previous post:

Next post: