நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

in 2021 நவம்பர்

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

எஸ்.எம்.அமீர்,   நிந்தாவூர்.

அக்டோபர் மாத தொடர்ச்சி…..

அத்தகைய, “நிராகரிப்பாளர்களின் நற்செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிட்டு உதாரணம் கூறுதல்?”

தமது இறைவனை ஏற்க மறுத்தோரின் செயல்களுக்கு உதாரணம் சாம்பலாகும். புயல் வீசும் நாளில் கடுமையான காற்று அதை வீசியடிக்கிறது. அவர்கள் திரட்டிய எதன் மீதும் சக்தி பெறமாட்டார்கள். இதுவே (உண்மையிலிருந்து) தொலைவான வழிகேடாகும். (14:18)

“நிராகரிப்பாளர்களின் நற்செயல்களைக் கானல் நீருக்கு உவமானமாக அல்லாஹ் குறிப்பிடுதல்”

(ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும்போது எதையும் காணமாட்டான். அங்கே (அவன்) அல்லாஹ்வைத்தான் காண்பான். அப்போது அவனது கணக்கை (அல்லாஹ்) நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன். (24:39) என்கின்றான்.

“நிராகரிப்பாளர்களின் நற்செயல்கள் ஆழ் கடலின் ஆழத்தில் உள்ள பல இருள்களுக்கு ஒப்பானது”

அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள் களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! (அதனுள்) அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை(கூட) அவனால் பார்க்க முடியாது. (எனவே) அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை. (24:40)

“இறை நம்பிக்கையில்லாதவர்கள் செய்யும் தர்மங்கள் கடும் குளிர் காற்றினால் அழிக்கப்பட்ட பயிர்களைப் போன்றது”

இவ்வுலக வாழ்க்கையில் அவர்கள் செலவிடுவதற்கு உதாரணம் கடும் குளிர் காற்றாகும். தமக்குத் தாமே தீங்கு இழைத்த கூட்டத்தின் பயிர்களில் அக்காற்று பட்டு அவற்றை அழித்து விடுகிறது. அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்துக்கொண்டார்கள். (3:117)

“இறை திருப்தியை மாத்திரம் நாடி உதவிடு வோரின் உதாரணம் உயரமானதோர் இடத்தில் அமைந்துள்ள தோட்டம் போன்றது”

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறு வதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காகத் தனது உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழா விட்டாலும் தூறல் (போதும்) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (2:265)

“நல்வழியில் செலவிடுவதை ஒன்றுக்கு 700 ஆக முளைக்கச் செய்யும் தானிய நெற் கதிருக்கு ஒப்பிடுதல்”

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக் கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமான வன், அறிந்தவன். (2:261)

அல்லாஹ்வுக்குக் கடனா? “மற்றுமோர் உதாரணம்”

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனி டமே (நீங்கள்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (2:245)

அல்லாஹ்வுக்கு யாரேனும் அழகிய கடன் வழங்கினால் அதை அவருக்கு அவன் பன்மடங்காக வழங்குவான். அவருக்கு மகத்தான கூலியும் உண்டு.  (57:11, 5:12, 64:17,73:20)

“நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், இன்னும், அல்லாஹ் வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும்-அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் அன்றியும், அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான (நற்கூலியும்) இருக்கிறது. (57:18)

“மற்றுமோர் உதாரணம்”

அல்லாஹ்வின் இறைநெறி நூலைப் படித்து தொழுகையை நிலைநாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோர் நஷ்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர். (35:29)

“பிறர் மெச்ச முகஸ்துதிக்காக செலவிடுபவனுக்கு உதாரணம் நெருப்புப் புயல் காற்றால் எரிக்கப்பட்ட தோட்டம் போன்றதாகும்”

பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன. அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன. அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது. அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்று களைத் தெளிவுபடுத்துகிறான். (2:266) மேலும்,

“பிறர் மெச்ச புகழுக்காகச் செலவிடுபவனுக்கு உதாரணம் வழுக்குப் பாறையின் மேல் பெய்த மழை போன்றது”

இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்று மில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (2:264) என்றும்,

“செய்த உதவியைச் சொல்லிக்காட்டுபவனின் நன்மையானதும் வழுக்குப் பாறையின் மேல் படித்துள்ள மண் போன்றது”

நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லி காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெறமாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (2:264)

“சத்தியத்தை ஏற்க மறுப்போரின் நிலையானது கால்நடைகளைப் போன்றதாகும்” எனும் உதாரணம்.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர், இல்லை! அதைவிட வழிகெட்டவர்கள், அவர்களே அலட்சியம் செய்தவர்கள். (7:179)

எனவே,அவர்களில் பெரும்பாலானோர், செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ, நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழி கெட்டவர்கள். (25:44)

மேலும், நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். (ஏக இறைவனை) மறுப்போர் (இவ்வுலகில்) கால்நடைகள் தின்பது போல் தின்று(கொண்டு) அனுபவிக்கிறார்கள். நரகமே அவர்களுக்குத் தங்குமிடமாகும். (47:12)

மேலும் “சத்தியத்தை ஏற்க மறுப்போரை செத்த பிணத்திற்கு ஒப்பிடும் அல்லாஹ்வின் உதாரணம்”

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது. (27:80)

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது. செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. (30:52)

இறந்தவனை உயிர்ப்பித்து, மக்களிடையே நடந்து செல்வதற்காக அவனுக்கு ஒளியையும் ஏற்படுத்தினோமே அவன், இருள்களில் கிடந்து அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளவனைப் போல் ஆவானா? இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன. (6:122)

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். (6:36)

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (35:22)

“வறண்ட பூமியை செத்த மனிதனுக்கு ஒப்பிடுதல்”

அவனே வானத்திலிருந்து அளவுடன் தண்ணீரை இறக்கினான். இறந்த ஊரை அதன் மூலம் உயிர்ப்பிக்கிறோம். இவ் வாறே நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள். (43:11, 2:164, 29:63, 30:24) மேலும்,

“கற்றபடி செயல்படாதவர்களை ஏடுகளைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பிடுதல்”

தவ்ராத்(வேதம்) சுமத்தப்பட்டு பின்னர், அதைச் சுமக்காமல் (அதன்படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய் எனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (62:5)

பயத்தினால் “சத்தியத்தை எடுத்துச் சொல்ல மறுப்பவனை எதற்கும் இயலாத ஊமையான அடிமைக்கு ஒப்பிடுதல்”

இரண்டு மனிதர்களை அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். அவர்களில் ஒருவன் ஊமை, எதற்கும் சக்தி பெறமாட்டான். அவன் தனது எஜமானனுக்குப் பாரமாக இருக்கிறான். எங்கே அவனை அனுப்பினாலும் நன்மையைக் கொண்டுவரமாட்டான். இ(த்தகைய)வனும், நேரான வழியில் இருந்து கொண்டு,நீதியை ஏவுபவனும் சமமாவார்களா? (16:76)

“சத்தியம் செய்துவிட்டு அதை மீறுபவனை உறுதியாக நூல் நூற்று அதை அறுத்தவனுக்கு ஒப்பிடுதல்”

உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவனைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக (அவர்களுக்குச் சாதகமாக) உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! இதன்மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான். நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.  (16:92)

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Previous post:

Next post: