படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை!

in 2021 டிசம்பர்

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை!

 

சரஹ் அலி

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.

படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

படைத்த ஏக இறைவன் பெயரால்….

சோதனையின்றி வாழ்க்கையா?

சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளை பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் நிச்சயமாக உங்களை நாம் சோதிப்போம். (இறைநூல் 2:154)

ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ அல்லது இரு முறையோ அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
இவ்வாறிருந்தும் அவர்கள் பாவமன்னிப்புக் கேட்பதுமில்லை, நல்லுரை பெறுவதுமில்லை. (இறைநூல் : 9:126)

(முஸ்லிம்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் உயிர்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்.

உங்களுக்கு முன்னர் இறைநூல் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை வைப்போரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவியுறுவீர்கள். அப்போது நீங்கள் பொறுமையை மேற்கொண்டு ஏக இறைவனை அஞ்சினால், அதுதான் வளர்ச்சியில் ஆகும்.  (இறைநூல் 3:186)

ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறி ஆகுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இல்லை, மாறாக மனிதன் தன் சமூகத்தார் பிற(சமூகத்தா)ர் மீது கொடுமை செய்ய முயலும்போது அவர்களுக்குத் துணை புரிவதுதான் இனவெறியாகும் என விளக்கம் அளித்தார்கள். நபிவாழ்வியல் தகவலாளர்: அபூ பாஸிலா(ரழி), நபிமொழி ஆய்வாளர்: சுனன் இப்னுமாஜா, நபிமொழி எண். 3949

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் எச்சரிக்கை!

எனது சமுதாயத்தாரிடையே பாவங்கள் செய்வது அதிகரித்து விட்டால் அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் தன்னிடம் இருந்து தண்டனை என்ற வேதனையை அனுப்புவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களிடையே நல்லவர்கள் இருக்க மாட்டார்களா? என்று கேட்டேன். அதற்கு நபிகளார் அவர்கள் “ஆம்! நல்லவர்கள் இருப்பார்கள் என்று சொன்னார்கள். உடனே நான் அந்த நல்லவர்களின் நிலை என்னவாகும் என்று கேட்டேன். அதற்கு நபிகளார் அவர்கள் மற்றவர்களுக்கு ஏற்பட்டது போலவே அவர்களுக்கும் ஏற்படும். பின்னர் அந்த நல்லவர்கள் அல்லாஹ் வின் மன்னிப்புக்கும், உவப்புக்கும் ஆளாகு வார்கள் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: உம்மு சலமா(ரழி), நபிமொழி ஆய்வாளர் முஸ்னத் அஹ்மத், நபிமொழி எண். 8736.

இறுதி இறைநூலின் எச்சரிக்கை :

வேதனை வரக்கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அன்று அந்த அக்கிரமக்காரர்கள் கூறுவார்கள். “எங்கள் இறைவனே! இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்கு அவகாசம் அளிப் பாயாக! அவ்வாறு அளித்தால் உனது அழைப்பினை நாங்கள் விரைந்து ஏற்றுக் கொள்வோம். (இறைநூல் : 14:44)

நிச்சயமாக இது (இறைநூல்) சத்தியத் தையும், அசத்தியத்தையும் பிரித்து அறிவிக் கக்கூடிய வாக்காகும். அன்றியும், இது வீணான செய்திகளைக் கொண்டது அல்ல.
(இறைநூல் 86:13,14)

முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 34:9

Previous post:

Next post: