அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
- இப்றாஹிம்(அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களை என்ன செய்வதாக கனவு கண்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?
அறுத்து பலியிடுவதாக. அல்குர்ஆன் 37:102 - மார்க்கத்தில் இல்லாத புதிய வியங்களை உருவாக்கியவனை அல்லாஹ் என்ன செய் வதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சபிப்பதாக. முஸ்லிம் 4002 - யூனுஸ் நபி அவர்கள் மீது நிழல் தர எந்த கொடியை முளைக்கச் செய்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
சுரைக்கொடி. அல்குர்ஆன் 37:146 - சுலைமான் நபி அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட துஆ எது?
எனக்கு பின் எவருக்கும் கிடைக்காத ஒரு ஆட்சி. அல்குர்ஆன் 38:35 - சேவல்கள் யாரை பார்த்தவுடன் கூவுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
வானவரை. புகாரி :3303 - அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான சொற்கள் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர். முஸ்லிம் 4330 - நீதிபதியிடமிருந்து எப்போது அல்லாஹ் விலகி விடுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அநீதி இழைக்கும் போது. திர்மிதி 1251 - மறுமை நிகழும்போது எத்தனை வகையாக மக்கள் பிரிக்கப்படுவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
வலப்புறத்தார், இடப்புறத்தார், ஈமானில் முந்தியவர்கள் என்று மூன்று வகையாக. அல்குர்ஆன் 56:8,9,10 - பொய்ப்பிக்கும் வழிகேடர்களின் உணவு எது என அல்லாஹ் கூறுகிறான்?
ஸக்கூம் மரம். அல்குர்ஆன் 56:51,52 - நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள் ளப்பட்ட ஆண்டில் எதனை அணிந்து கொண்டு மக்காவினுள் நுழைந்தார்கள்?
இரும்பு தொப்பி. புகாரி : 5808 - குற்றவாளி தனது வேதனைக்கு ஈடாக எதை எதையயல்லாம் கொடுக்க பிரியப்படுவான்?
தன் மக்கள், மனைவி, சகோதரன், உற வினர்கள் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும். அல்குர்ஆன் 70:11,12,13,14 - அல்லாஹ்வின் கண்ணியமான எழுத்தாளர் கள் யார் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
கிராமன், காத்திபீன். அல்குர்ஆன் 82:11 - நல்லவர்களின் பதிவேடு எது என்பதை அல்லாஹ் கூறுகிறான்?
இல்லிய்யூன். அல்குர்ஆன் 83:18 - கண்டெடுக்கப்பட்ட பொருளை எத்தனை ஆண்டுகள் கழித்து கண்டெடுத்தவர் உபயோகபடுத்த நபி(ஸல்) அவர்கள் அனுமதி தந்தார்கள்?
3 ஆண்டுகள் அறிவிப்பு செய்ய வேண்டும். புகாரி : 2426 - பனூ நளீர் குலத்தாரின் பேரீச்சத் தோப்புகளின் பெயர் எது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
“அல்புவைரா” புகாரி 2326 - கழுதை யாரைப் பார்த்ததும் கத்துகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஷைத்தானை. புகாரி 3303 - எதனைச் சரியாக கழுவாதவர்களுக்கு நரகம் தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
குதிங்கால்கள். புகாரி : 60 - நபி(ஸல்) அவர்கள் யூதனிடம் எதை அடமானம் வைத்து உணவு தானியத்தை வாங்கினார்கள்?
இரும்பு கவசம். புகாரி : 2386 - ஐம்பது பெண்களுக்கு ஒரேயோர் ஆண் நிர்வாகியாக இருக்கும் காலம் எதற்கு அடையாளம் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மறுமை நாளின் அடையாளம். புகாரி : 5577 - வீட்டில் நாய் வளர்ப்பவர்களின் நற்ச்செயல்கள் ஒவ்வொரு நாளும் எந்த அளவு குறையும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஒரு கீராத் அளவு. புகாரி : 3324