அறிந்துகொள்வோம்!

in 2022 மார்ச்

அறிந்துகொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

1. மனிதன் வளரும்போது ஏற்படும் ஆசைகள் எத்தனை?
1. பொருளாசை, 2. நீண்டநாள் வாழ வேண்டும்.     புகாரி : 6421

2. யார் பூமியில் புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்பவர் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்.     அல்குர்ஆன் 4:100

3. பெண்கள் வி­யத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நல்லவிதமாக நடத்துங்கள்.     புகாரி:3331

4. பெண்களில் கண்ணியமானவர் என அறியக் கூடிய வழி என்ன என அல்லாஹ் கூறுகிறான்?
தலைமுந்தானையை இறக்கிக் கொள்ளக் கூடியவர்கள்.     அல்குர்ஆன் 33:59

5. நண்பனோ, அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரை யாளனோ இல்லாதவன் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
அநீதியிழைத்தவன்.     அல்குர்ஆன் 40:18

6. ……., ……… அது ஒரு கடுகின் அளவு இருந்தாலும் அதற்கு நாளை மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்.
நன்மை, தீமை.     அல்குர்ஆன் 31:16

7. நபி(ஸல்) அவர்கள் எப்போது இஃதிகாஃப் இருப்பார்கள்?
ரமழானின் கடைசிப் பத்து நாட்கள். ஆயிஷா(ரழி) புகாரி : 2026

8. அல்லாஹ்விடம் மிகவும் கோபத்துக்குரிய வன் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்?
பொய்மையை நிலைநாட்ட கடுமையாக சச்சரவு செய்பவன்.     முஸ்லிம்: 5183

9. முஸ்லிமான தனது சகோதரனை அற்பமாக நினைப்பவன் என்ன செய்வான்?
தீமை செய்வான்.     முஸ்லிம் : 5010

10. இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட் டவர்கள் யார்?
நம்பிக்கை கொண்ட ஒழுக்கமுள்ள பெண் கள் மீது அவதூறு கூறுபவர்.     குர்ஆன் 24:23

11. நிர்வாக பொறுப்பில் உள்ளவன் மோசடி செய்த நிலையில் மரணித்தவனின் நிலை என்ன?
சொர்க்கம் தடையாகிவிடும்.     புகாரி: 7151

12. படைப்பினங்கள் எதைக் கொண்டு மீண்டும் படைக்கப்படுவார்கள்?
முதுகுத்தண்டின் வேர் பகுதியின் உள்ள வால் எலும்பின் நுனி.     முஸ்லிம் : 5660

13. ஏழு இரவுகள், எட்டு பகல்கள் தொடர்ந்து வேதனை இறக்கப்பட்ட சமூகம் எது?
ஆத் சமூகம்.     அல்குர்ஆன் 69:6,7

14. தனது செல்வத்தை பாதுகாக்கும் போது கொல்லப்பட்டவரின் நிலை என்ன?
­ஹீத்.     புகாரி: 2480

15. தங்களுக்கு தேவை உள்ளவர்கள், பிறருக்கு முன்னுரிமை தருபவர் யார்?
இறை நம்பிக்கையாளர்.     அல்குர்ஆன் 59:9

16. முத்தகீன் என்றால் என்ன?
பயபக்தியுடையவர்.     அல்குர்ஆன் 2:241

17. அல்லாஹ் ஹலாலாக்கியதை நபி(ஸல்) அவர்கள் ஹராமாக்கிய கொண்டதற்காக இறங்கிய வசனம் எது?
அத்தஹ்ரீம். 66:1

18. நிராகரிப்பாளர்கள் மண்ணறைகளிலிருந்து மறுமை நாளில் எப்படி வெளிப்பாடுவார் கள்?
வெட்டுக்கிளிகளைப் போல.     குர்ஆன் : 54:7

19. அல்குர்ஆனில் எந்த அத்தியாயத்தில் அனைத்து வசனங்களிலும் அல்லாஹ் என்ற வாசகம் வருகிறது?
அல்முஜாதலா : அத்.58

20. வேதனைக்கு மேல் வேதனை செய்யப்படுபவர் யார்?
நிராகரித்துக்கொண்டும், அல்லாஹ்வின் பாதையை தடுத்துக் கொண்டும் பூமியில் குழப்பம் உண்டாக்கியோருக்கும்.     அல்குர்ஆன் 16:88

Previous post:

Next post: