ஐயமும்!  தெளிவும்!!

in 2022 மார்ச்

ஐயமும்தெளிவும்!!

ஐயம் : பிப்ரவரி 2022 இதழ், பக்கம் 32ல், நபி (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்க மறுக்கும் “காதியானிகள்’ நபி(ஸல்) அவர்களின் இறுதி உரை முதல் அத்தனை நபி மொழிகளையும் ஏற்க மறுக்கும் “ஹதீத் மறுப்பாளர்கள்’

மேற்படி இருசாராரும் நபி(ஸல்) அவர்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிலதை ஏற்கிறார்கள் பலதை மறுக்கிறார்கள்.

முழுமையாக ஏற்றுக்கொள்ளாத இவர்களை பின்பற்றி தொழுவதை நியாயப்படுத்திட இவர்களை ஹனபியாக்களோடும் ததஜவினரோடும் ஒப்பிட்டு நியாயப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது.  அபூநபீல், தேங்காய்பட்டணம்.

தெளிவு : நபி(ஸல்) அவர்களை ­ரீயத் சட்டப்படி இறுதி நபியாக காதியானிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்களுக்கென்று மடத்தனமான குருட்டுத்தனமான ஹகீகத் என்ற ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நபி வரமுடியும் என நம்புகின்றனர். மற்றபடி நபி மொழிகளை மறுக்கவில்லை. மாறாக நபி மொழிகளுக்கு தவறான பொருள் வைத்து சுயவிளக்கம் அளித்து வழிகெட்டுப் போயுள்ளனர். ஹனஃபியாக்களை விட காதியானிகள் எவ்வளவோ மேல் என்று சொல்லலாம்.

காரணம் இதுவரை நபிவழியிலான இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக எந்த ஒரு ஃபிக்ஹ் சட்டத்தை இதுவரை காதியானிகள் உருவாக்கவில்லை.

ஆனால் ஹனஃபியாக்கள் அல்குர்ஆன் 5:3 வசனத்திற்கு எதிராக தனியாக ஒரு ஃபிக்ஹ் சட்ட நூல்களை இயற்றி அதன் பிரகாரமே தங்கள் அமல்களை பாகப் பிரிவினைகளை அமைத்துக் கொள்கின்றனர்.

அடுத்து ததஜவினர் காலகாலமாக ஜகாத் ஆண்டுக்கொருமுறை என்பதை ஒரு ஆதாரமும் இல்லாமல் ஆயுளில் ஒருமுறை கொடுத்தால் போதும் என ஆணவமாக சட்டம் இயற்றி ஒரு பொருளாதார சுழற்சியையே நிறுத்திவிட்டனர்.

தனது மனதுக்கு ஒத்துவராத நபிமொழிகளை துணிந்து மறுக்கின்றனர். என்றாலும் அல்குர்ஆன் 49:14 வசனம் மற்றும் புகாரி 391 நபிமொழியின்படி மேற்பண்ட காதியானி ஹனஃபி, ஷாஃபி TNTJ போன்றோர்களை முஸ்லிம் இல்லை எனச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை.

எனவே முஸ்லிம் ஒருவருக்கு உண்டான உரிமைகள் என்னென்ன உள்ளதோ அவ் வுரிமைகள் அனைத்தும் மேற்கண்ட பிரிவினர்களுக்கும் உண்டு. இதனடிப்படையில் இவர்களுக்குப் பின்னால் நின்று தொழுவது கூடும். அடுத்து அஹ்லுல் குர்ஆன் என்போர் கிப்லாவை முன்னோக்கும் கூட்டத்தினர் தான்.

நாம் அறுத்ததை சாப்பிடக் கூடியவர்கள் தான். நமது தொழுகை தொழுபவர்கள் என்பதற்கு நபிவழித் தொழுகையை முற்றிலும் மறுப்பவர்களே. காரணம் எப்படித் தொழுவது என்ற முழு விபரம் ஹதீத்களில்தான் உள்ளது.

அந்த நபிமொழி நூற்களை முற்றிலும் மறுக்கின்றனர் என்பதால் இவர்களின் தொழுகை ஒரு தான்தோன்றித்தனமானதும் வரைமுறையில்லாமல் இருப்பதாலும் இவர்களின் தொழுகை நபிவழித் தொழுகையாக வாய்ப்பில்லை என்பதாலும் இவர்கள் பின்னால் தொழுவது ஏற்புடையது அல்ல.

ஐயம்இணைவைப்பிற்கு எதிரான இறை வசனங்களை எடுத்துவைத்து எச்சரிக்கைச் செய்யும் நவீன இயக்கவாதிகள் 30:32, 6:159 இதுபோன்ற இறைவசனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?  S.M. நாஸர், நாகர்கோவில்

தெளிவுமார்க்கத்தை பல பிரிவுகளாகப் பிரிப்பது இவ்வளவு பெரிய தீமை மட்டுமல்ல. இணைவைப்பும் கூட என்பதை கீழே உள்ள வசனங்களை சற்று கூர்ந்து கவனித் துப் படித்துப் பார்த்தாலே போதும் சாதாரண பாமரர்களுக்கும் தெளிவாகத் தெரிந்து விடும்.

“நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துங்கள்; இன்னும் இணை வைப்போரில் நீங்களும் ஆகிவிடாதீர்கள்.

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகிவிட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.  (அல்குர்ஆன் 30:31,32)

“நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய வியமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிந் தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.’  (அல்குர்ஆன் 6:159)

இத்தகைய பிரிவினைவாதிகளுக்கு நபி(ஸல்) அவர்களுடன் எந்த சம்பந்தமும் இல்லை என்று இயக்கங்களின் ரசிகத் தம்பிகள் விளங்கிக் கொண்டால் அத்தோடு அண்ணன்மார்களின் போலி தவ்ஹீத் வேடம் கலைந்து விடும். பின்னர் தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் செய்யும் பிழைப்பில் மண் விழுந்து விடுமே என்ற அச்சமே காரணம்.

Previous post:

Next post: