வரும் பொல்லாங்கு எல்லோர்க்கும்தான்

in 2022 மார்ச்

வரும்பொல்லாங்குஎல்லோர்க்கும்தான்!

அந்த ஒரே இறைவனின் பெயரால்…

வரும்பொல்லாங்குஎல்லோர்க்கும்தான்:

நீங்கள் ஒரு சோதனை, வேதனையைப் பற்றி அஞ்சுங்கள். அது உங்களில் யார் அநீதி இழைத்தார்களோ அவர்களை மட்டுமே தாக்காது. மற்றவர்களையும் தாக்கும்… (இறைநூல் : 8:25)

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களின்எச்சரிக்கை :

c எனது சமுதாயத்தாரிடையே பாவங்கள் மலிந்துவிட்டால் அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் தன்னிடம் இருந்து வேதனையை அனுப்புவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

c அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களிடையே நல்லவர்கள் இருக்கமாட்டார்களா? என்று கேட்டேன். அதற்கு நபிகளார் அவர்கள் “ஆம்!’ நல்லவர்கள் இருப்பார்கள் என்று சொன்னார்கள்.

c உடனே நான் அந்த நல்லவர்களின் நிலை என்னவாகும் என்று கேட்டேன். அதற்கு நபிகளார் அவர்கள் மற்றவர்களுக்கு ஏற்பட்டது போலவே அவர்களுக்கும் ஏற்படும்.

c பின்னர் அந்த அவர்கள் (நல்லவர் கள்) அல்லாஹ்வின் மன்னிப்புக்கும், உவப்புக்கும் ஆளானார்கள் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர் : அன்னை உம்மு சலமா(ரழி), முஸ்னத் அஹ்மத் : 8736.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் :

ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதி லுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தமது செயல்களுக்கு ஏற்ப மறுமையில் எழுப்பப்படுவார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி), புகாரி : 7108.

சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் நிச்சயமாக உங்களை நாம் சோதிப்போம். (இறைநூல் 2:154)

ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ அல்லது இரு முறையோ அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவமன்னிப்புக் கேட்பதுமில்லை, நல்லுரை பெறுவதுமில்லை.  (இறைநூல் 9:126)

Previous post:

Next post: