விமர்சனம்! விளக்கம்!!
விமர்சனம் : 2022 மார்ச் இதழ் பக். 32ல் நபி வழியிலான சட்டங்களுக்கு எதிராக எந்த ஷஃபிக்ஹ் சட்டங்களையும் காதியானிகள் உருவாக்கவில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளீர்கள்.
ஹகீகத் அடிப்படையில் ஒரு நபி வருவார் என்று நம்புவது மனோ இச்சையா? இல்லையா?
காதியானிகள் மிர்ஸாகுலாமை நபியாகவும் அவரது வாரிசுகளை கலீஃபாவாகவும் ஏற்று கலீஃபாவின் கட்டளைப்படி செயல்படுகின்றனர்.
ஷரீயத்திற்குஒருநபி
ஹகீகத்திற்குஒருநபி
இப்படிஇரட்டைநபியா?
இதற்கான ஆதாரங்கள் குர்ஆன் சுன்னாவிலிருந்துதான் எடுத்தார்களா?
காலஞ்சென்ற ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதிய காதியானிகளின் ஆகாசப்புளுகு என்ற நூல் தாங்கள் படித்ததில்லையா?
M. அபூநபீல், தேங்காய்பட்டணம்
விளக்கம்: வழிகெட்ட ஹனஃபி மதஹபுக்கும் அதே போன்றல்ல அதை விட மோசமான மதமாகிய காதியானி மதத்திற்கும் உள்ள ஒரு ஒப்பீட்டு அடிப்படையில் அவ்வாறு பதிலளித்தோம்.
அதற்காக காதியானி மதத்தை சரிகண்டுள்ளோம் என்று அர்த்தமில்லை.
நபி(ஸல்) அவர்களுடைய தூய மார்க்கத்திற்கெதிராக ஒரு புது மதத்தை உருவாக்கிய காதியானிகள் கூட உருவாக்கத் துணி யாத இமாம் அபூஹனீஃபாவின் பெயரால் ஒரு தனி ஃபிக்ஹ் சட்ட நூலை உருவாக்கி அதனையே தங்களுடைய வாழ்க்கை நடைமுறைச் சட்டமாக்கிக் கொண்டுள்ளனர்.
பெயரளவுக்கு நபி(ஸல்) அவர்களை இறுதி நபி என வாயளவில் ஒப்புக்கொண்டு விட்டு அவர்கள் பின்பற்றுவது ஹனஃபி ஃபிக்ஹ் சட்டத்தையே. இவ்வளவு பெரிய வழிகேட்டுக்குச் சொந்தக்காரர்கள் தான் ஹனஃபி வகுப்பினர்.
ஆனால் காதியானிகள் என்போர் ஹனஃபியாக்களை விட படு மோசமான வழிகேடான புதிய மதத்தினர் ஆவார்கள்.
அல்குர்ஆன் 33:40 மற்றும் 5:3 வசனங் களின்படி ஆலமீன் என்று சொல்லப்படக் கூடிய அகில உலகங்களுக்கும் இறுதி நபியாக விளங்கக் கூடிய நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக உருவான பொய் நபி மிர்ஸா குலாம் என்பவன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை கெடுக்க வந்தவன்.
எனவே எல்லா வகையிலும் வழி கெட்ட ஒரு புதிய மதமே காதியானி மதம் என்பதில் நாங்கள் மிக உறுதியாக உள்ளோம்.