அறிந்து கொள்வோம்!

in 2022 மே

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

 1. வணங்கப்பட தகுதியானவன், நீயே தூய்மையானவன், நான் அநியாயக் காரர்களில் ஒருவன் என பிரர்த்தனை செய்த நபி யார்?
  யூனூஸ் நபி. அல்குர்ஆன் 21:87
 2. துன்பம் என்னைப் பீடித்துக் கொண்டது கருணையாளர்களில் நீயே மிக்க கருணையாளன் என பிரார்த்தனை செய்த நபி யார்?
  அய்யூப் நபி. அல்குர்ஆன் 21:83
 3. தனித்தவனாக என்னை நீ விட்டு விடாதே! நீயே வாரிசு அளிப்போரில் மிகச் சிறந்தவன் என பிரார்த்தனை செய்த நபி யார்?
  ஸகரிய்யா நபி. அல்குர்ஆன் 21:89
 4. எங்களிடமிருந்து இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக என பிரார்த்தனை செய்த நபிகள் யார்?
  இப்றாஹிம் நபி, இஸ்மாயில் நபி. 2:127
 5. உங்கள் வீடுகளையே நீங்கள் கிப்லா வாக ஆக்கி தொழுகையை நிலைநாட் டுங்கள் என்று யாருக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்?
  மூஸா நபி, ஹாருன் நபி. குர்ஆன் 10:87
 6. இவ்வுலகிலும், மறுமையிலும் நற்பாக்கி யங்களை தருவாயாக என்று கேட்ட நபி யார்?
  இப்றாஹிம் நபி. அல்குர்ஆன் 2:201
 7. பொறுமையையும், காஃபிர்கள் மீது வெற்றியடைய உதவி செய்வாயாக என கேட்டவர் யார்?
  தாலூத். அல்குர்ஆன் 2:250
 8. நீ இறக்கியதை நம்பிக்கை கொண்டு தூதரை பின்பற்றினோம் என கூறியவர் கள் யார்?
  ஹவாரியூன்கள். அல்குர்ஆன் 3:53
 9. எங்களுக்கு நாங்களே அநியாயம் செய்து கொண்டோம். நீ மன்னிக்கா விட்டால் நஷ்டமடைந்தவர்களாக ஆகி விடுவோம் என கேட்டவர்கள் யார்?
  ஆதம்(அலை), ஹவ்வா(அலை). (7:23)
 10. எமக்கும் எமது சமூகத்திற்கும் இடையில் நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக என கேட்ட நபி யார்?
  ஷிஐப்(அலை). அல்குர்ஆன் 7:89
 11. முஸ்லிம்களாகவே எங்கள் ஆத்மாக்க ளைக் கைப்பற்றுவாயாக என பிரார்த் தனை செய்தவர்கள் யார்?
  மூஸாவின் சந்ததியினர். குர்ஆன் 7:126
 12. இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே என்று கூறிய நபி யார்?
  நூஹ் நபி. அல்குர்ஆன் 11:41
 13. நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்ப் பாயாக என கேட்ட நபி யார்?
  யூஸுப் நபி. அல்குர்ஆன் 12:101
 14. தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்ததிகளை யும் ஆக்குவாயாக என கேட்ட நபி யார்?
  இப்றாஹிம் நபி. அல்குர்ஆன் 14:40
 15. உனது அருளை எமக்கு வழங்கி எமது காரியத்தில் நேர்வழியை தருவாயாக என கேட்டவர்கள் யார்?
  குகைவாசிகள். அல்குர்ஆன் 18:10
 16. என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக என கேட்ட நபி யார்?
  மூஸா நபி. அல்குர்ஆன் 20:27
 17. என் சமுதாயத்தினர் என்னை பொய்ப் பித்தத்தின் காரணமாக எனக்கு உதவி செய்வாயாக என கேட்ட நபி யார்?
  நூஹ் நபி. அல்குர்ஆன் 23:26
 18. என்னையும், என் குடும்பத்தையும் இவர்கள் செய்பவற்றை விட்டும் காப்பாயாக என கேட்ட நபி யார்?
  லூத் நபி. அல்குர்ஆன் 26:169
 19. என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ அரு ளிய அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்த அருள்புரிவாயாக என கேட்ட நபி யார்?
  ஸுலைமான் நபி. அல்குர்ஆன்: 27:19
 20. எனக்காக உன்னிடத்தில் சுவர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டித் தருவாயாக என கேட்டவர் யார்?
  பிர்அவ்னின் மனைவி. குர்ஆன் : 66:11

Previous post:

Next post: