எல்லாமே எனக்குத் தெரியும் என வாதாடாதீர்கள்!

in 2022 ஜுன்

எல்லாமே எனக்குத் தெரியும் என வாதாடாதீர்கள்!

ஷரஹ் அலி

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.

(படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும்.

அந்த ஒரே இறைவனின் பெயரால்…

(நபியே!) நீர் எந்த நிலையில் இருந்தாலும், அதில் ஒன்றாக குர்ஆனில் எ(ந்த வசனத்)தை ஓதினாலும், நீங்கள் (அனை வரும்) எந்த செயலைச் செய்தாலும், அதில் நீங்கள் ஈடுபடும்போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை.

பூமியிலோ, வானிலோ ஓர் அணுவளவானாலும் அதைவிட சிறியதோ பெரியதோ எதுவானாலும் உம்முடைய இறைவனை விட்டு மறையாது. (எல்லாம்) தெளிவான பதி வேட்டில் இல்லாமலில்லை. (இறைநூல்: 10:61)

தீர்க்கமான அறிவு இல்லையா தவிர்த்திடுங்கள்!

(நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவு இல்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம். நிச்சயமாக செவி, பார்வை உள்ளம் ஆகிய ஒவ்வொன்று குறித்தும் (இறுதி விசாரணை நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும். (இறைநூல் : 17:36)

\உமக்கு சந்தேகம் தருபவற்றை விட்டு நீர் விலகி விடுவீராக! சந்தேகமற்ற உறுதியான வி­யங்களின் பக்கம் நீர் சென்றுவிடு வீராக! என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். புகாரி: 52

அவர்களுடைய இதயங்கள் சந்தேகத் திலேயே இருக்கின்றன. ஆகவே அவர்கள் தமது சந்தேகங்களினால் இங்கும் அங்குமாக அலைகின்றார்கள். (இறைநூல் : 9:45)
உமக்கு சந்தேகம் ஏற்படுவதை விட்டும் விலகி விடுவீராக! உமக்கு சந்தேகம் ஏற் படாதவைகளின் பக்கம் சென்றுவிடுவீராக.

நிச்சயமாக உண்மையானது அமைதி, பொய்யானது சந்தேகம் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.  திர்மதி : 2518

அனுமதிக்கப்பட்டவை தெளிவாக்கப்பட்டு உள்ளன. தடுக்கப்பட்டவை தெளி வாக்கப்பட்டு உள்ளன. இவை இரண்டிற்கும் இடையே சந்தேகத்திற்கான காரி யங்களும் உள்ளன.

எனவே, எவர் பாவம் என சந்தேகப்படுகின்றவற்றை தவிர்த்து விடுகின்றாரோ அவர் பாவம் என்று, தெளிவாக தெரிவதை நிச்சயம் விட்டுவிடுவார்.

எவர் பாவம் எனச் சந்தேகிக்கப்படுபவற்றைச் செய்யத் துணிகிறாரோ அவர் தெளிவான பாவங்களில் விழுந்து விடக்கூடும்.

பாவங்கள் அல்லாஹ் போட்ட வரம்புகளாகும் யார் அந்த வரம்புகளைச் சுற்றி அலைகிறாரோ அவர் அதற்குள் சென்று விடக்கூடும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். புகாரி : 2051

நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒரு வருக்கொருவர் ஒத்துழையுங்கள். பாவத்திற்கும் எல்லை-வரம்பு மீறுதலுக்கும் துணை போய் விடாதீர்கள். (இறைநூல் 5:2)

தமது சமூகத்திலுள்ள தீமையைத் தடுக்காமல் தன்னளவில் மட்டும் நல்லவர்களாக வாழ்வோர் ஏக இறைவனின் திருப்தியைப் பெற முடியாது. பார்க்க. இறைநூல் : 7:165.

Previous post:

Next post: