ஒன்றுபட்ட சமுதாயத்தின் இன்றைய நிலை!

in 2022 மே

ஒன்றுபட்ட சமுதாயத்தின் இன்றைய நிலை!

ஒன்றுபட்டிருந்த மனித சமுதாயம் ஷைத்தானின் மேலாதிக்கத்தால், பகைமை மோலோங்கி, மூடச் சடங்குகளில் மூழ்கி, நரக நெருப்புக்குழியின் விளிம்பை நெருங் கியபோதெல்லாம், வல்ல அல்லாஹ் தனது அளப்பெரும் கருணையால் நபிமார்களை அனுப்பினான். நேர்வழிகாட்டுதலை அந் நபிமார்கள் மூலம் சிதறுண்ட மக்களுக்கு அவ்வப்போது வேதங்களாக அருளி சகோதரர்களாக்கினான்.

இவ்வாறு அருளப்பட்ட அனைத்து முந்திய வேதங்களையும் உள்ளடக்கியதே அல்குர்ஆன். இறுதி மறையாம் இக் குர்ஆனில் முந்திய காலங்களில் நடந்த அனைத்து நல்லது கெட்டதுகளையும், மிகத் தெளிவாக விளக்கி எச்சரித்து, மக்களைப் பண்பட்ட மக்களாக இறை நெருக்கமுள்ள வர்களாக வாழ வகை செய்துள்ளான் வல்ல அல்லாஹ். இவ்வளவு தெளிவான இறுதி வேதமுள்ள நிலையிலும் உலக மக்களும், குறிப்பாக இதைப் பின்பற்றுகிறோம் என்று வானளாவப் பீற்றிக் கொள்ளும் முஸ்லிம் களும், இறைவழி காட்டுதலுக்கொப்ப வாழ்கிறார்களா? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

முந்தைய ஒன்றுபட்ட சமுதாயத்தைக் கூறு போட்டுச் சிதைத்து, மக்களைச் சுரண்டி, தங்களின் வயிறுகளை நிரப்புவ தோடு, மறுமையில் மிகப்பெரும் நஷ் டத்தை ஏற்படுத்தியவர்கள் புரோகிதப் பூசாரிகள் என்பதை இறைவன் தனது திரு மறையில், மிகத் தெளிவாகப் படம் பிடித் துக் காட்டுகிறான். எனினும் நாம் எவ்விதப் படிப்பினையும் பெறாதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதெற் கெல்லாம் அடிப்படைக் காரணம் குர்ஆனை ஒப்புக் கொண்டபடி முறையாக நாம் அதனை விளங்கவில்லை. மேலும் நாம் உயிரினும் மேலாகப் போற்றும் நபி(ஸல்) வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிப்பதுமில்லை.

அன்றைய, இன்றைய யூத, கிறிஸ்தவ சமுதாயங்கள் எப்படி புரோகித குருமார் களை சுய சிந்தனையற்று, குருட்டுத்தன மாக நம்பி மோசம் போயினவோ, இப் போதும் போய்க் கொண்டிருக்கின்றனவோ, அதே வழியில் இறுதி வேதம் கொடுக்கப் பட்ட நாமும் மோசம் போய்க் கொண்டி ருக்கிறோம். வல்ல அல்லாஹ் தனது இறுதி மறையில் “நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து அல்லாஹ்வை திடமாக நம்பும் இந்த உம்மத்தில் உள்ளவர்களைப் பார்த்து மேன்மைமிக்க சமுதாயம் என்கிறான். (3:110) மற்ற சமுதாயத்திலுள்ள மக்களுக்கு நம்மை சாட்சியாளர்களாக ஆக்கி நம்மை “”நடுநிலைச் சமுதாயம்” (2:143) என்று புக ழாரம் வேறு சூட்டுகிறான். உண்மையில் நாம் மேன்மை மிக்க சமுதாயமா? சுயசிந் தனையற்ற ஆடு, மாடுகளைப் போல் புரோகித முல்லாக்களுக்கு வெண் சாமரம் வீசிக் கொண்டு குர்ஆன் -நபிவழிக்கு மாற்ற மாக நடந்து கொண்டிருக்கும் நாம் நடுநிலைச் சமுதாயமா? சிந்தியுங்கள்! நம் நிலையைச் சீர்தூக்கிப் பாருங்கள்.

“புரோகித முல்லாப் பூசாரிகளை நம்பியது போதும்; புறப்படுங்கள் உண்மை மார்க்கம் அறிய”

அன்றைய புரோகிதப் பூசாரிகளால் பிரித்து சின்னா பின்னாப்படுத்தப்பட்டுச் சிதறிய சமுதாயத்தை வல்ல அல்லாஹ் ஒன்றுபடுத்தி, இனி பிரியக் கூடாது என பலமுறை இறுதி நெறிநூலில் எச்சரித்த பின்பும், மத்ஹபுகள் பேராலும், தரீக்காக் கள் பேராலும், “தவ்ஹீத்’ என்று சொல்லிக் கொண்டு பல்வேறு இயக்கங்கள், கழகங் கள், குழுக்கள் பேராலும் எங்ஙனம் பிரிந் தோம்? உலகெங்கும் முஸ்லிம்களே முஸ்லிம்களை அடித்துக் கொண்டு சாகும் நிலை ஏற்பட்டது எங்ஙனம்? பாகிஸ்தானில் இறையில்லத்தில், அனைவரும் ஒரே இறை வனை, கிப்லாவை நோக்கி தொழுது கொண்டிருக்கும் பொழுது, கை கலப்புகள் துப்பாக்கிச் சண்டைகள், ஏராளமான சாவு கள், முஸ்லிம்கள் என்று சொல்ல நமக்கு வெட்கம் வரவில்லையா?

இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டப் போகிறோம் என்று மார்தட்டிக் கொண்டு அந்நியர்களை ஆப்கானிஸ்தானை விட்டு ஓடோட விரட்டிய இஸ்லாமிய இயக்கங் களுக்கு அங்கு இஸ்லாமிய ஆட்சி அமைக்க முடிந்ததா? சாந்தியை நிலைநாட்ட முடிந் ததா? ஏன் முடியவில்லை? முஸ்லிம்களே, முஸ்லிம்களை குண்டுக்கு இரையாக்கும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண் டிருக்கிறதே ஏன்? முஸ்லிம்கள் பாடம் பெற வேண்டாமா? முஸ்லிம் என்ற அல்லாஹ் இட்ட பெயரில் ஒரே இயக்கமாக ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இயங்கக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம் பிரிந்து பல இயக்கங்களாகவும், கழகங்களாகவும், குழுக்களாகவும் பல தலைமைகளின் கீழ் செயல்படுவதால்தான், பதவி ஆசையால் தான் இந்த அலங்கோலம் என்பதை யாரால் மறுக்க முடியும்? பிரிந்து நிற்கும் முஸ்லிம் கள் பாபரி மஸ்ஜிதை காப்பாற்றியே தீரு வோம் என்று காட்டுக்கத்தாக கோரஸ் பாடினார்களே முடிந்ததா? முஸ்லிம்க ளுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்று பந்த், பேரணி, சாலை மறியல், உண்ணாவிரதம் என்று சுய புத்தி யில் செயல்படுகிறவர்களால் சாதிக்க முடிந் ததா? எனவே ஒன்றுபட்ட சமுதாயத்தைப் பிளந்து சுய ஆதாயம் தேடும் மதப் புரோகி தர்களையும், அற்ப உலக ஆதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள அரசியல் வாதிகளான இயக்கங்களையும், கழகங் களையும் புறக்கணிப்போம்.

மக்களை மடையர்களாக்கி, பிரித்து சின்னாபின்னப்படுத்தி, சிதைத்து வழி நடத் திக் கொண்டிருக்கும் முஸ்லிம் முல்லாப் பூசாரிகளே! அரசியல்வாதிகளே! அவர் களைக் கண்மூடி பின்பற்றும் எனதருமை சமுதாயத்தவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்திருக்கிறீர்களா? அல்லது இற்றுப்போன கந்தல் கயிறுகளைப் பற்றிப் பிடித்திருக்கிறீர்களா? சிந்திப்போம். நமது நிலைகளை ஒரு கணம் எண்ணிப் பார்ப்போம். சீர்திருந்துவோம். முஸ்லிம் களாக ஒரே தலைமையில் ஓரணியில் ஒன்று படுவோம், அணி திரள்வோம். வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழி நடத்தாட்டுவானாக.

Previous post:

Next post: