கண்ணீரோடு படைத்த இறைவனிடத்தில் திரும்புவோமா?

in 2022 மே

கண்ணீரோடு படைத்த இறைவனிடத்தில் திரும்புவோமா?

அல்லாஹ்வின் ஏவல், விலக்குகள் வாழ்க் கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண் டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக் கும் உபதேசம் செய்கின்றேன்.

அல்லாஹ் நம்மை ஆரம்பத்தில் எப்படி படைத்தானோ, அதே மாதிரி ஒரு தவறும் ஒரு குற்றமும் செய்யாத முறையில் அல்லாஹ்வை நாம் சந்திக்க வேண்டும்; இது தான் மகத்தான வெற்றி.

பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் சின்னதும், பெரியதுமாக அதிகமான பாவங் களையும், தவறுகளையும் செய்துள்ளோம். இதற்கெல்லாம் நாம் படைத்த இறைவனிடத் தில் கணக்கு தீர்க்க வேண்டி உள்ளது. நாம் ஒவ் வொருவரும் மரணமடைவதற்கு முன்னால் கணக்கு தீர்க்க வேண்டாமா? படைத்த இறை வனிடத்தில் அழுது கொண்டே கண்ணீரோடு கணக்கு தீர்க்க பாவமன்னிப்பு கேட்போமா?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேளுங்கள்; அவன்பால் திரும்புங்கள்; என்னை பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவமன் னிப்பு கோரி இறைஞ்சுகின்றேன்.அறிவிப்பவர்: அகர் பின் யஸார் (ரழி), நூல்: முஸ்லிம்.

ஒரு மனிதர் தலையில் கனமான சுமை ஒன்றை நெடுந்தூரம் கொண்டு செல்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த கனமான சுமையை அந்த மனிதர் கீழிறக்கி வைக்கும் போது அவருக்கு கிடைக்கும் ஆனந்தம், மன சமாதானம், மகிழ்ச்சி இவற்றை வார்த்தைகளால் கூற முடியாது. நம்மைப் படைத்த இறைவனிடத்தில் பாவங்களுக்காக, தவறுகளுக்காகப் பாவ மன்னிப்பு கேட்கும் போது நமக்குக் கிடைக்கும் மன சமாதானம், சந்தோ­ம் இவற்றையும் வார்த்தைகளால் கூறமுடியாது. இவ்வாறிருக்க நாம் பாவங் களுக்காக படைத்த இறைவனிடத்தில் பாவ மன்னிப்புக் கேட்காமல் அலட்சியமாய் இருக் கின்றோம். நம்மை படைத்த அல்லாஹ்விடம் கண்ணீரோடு பாவமன்னிப்பு கேட்க திரும்பு வோமா?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பகலில் ஏதும் பாவம் புரிந்து விட்டி ருந்தால், அவன் இரவில் தன்பால் திரும்பி வரட் டும் என்பதற்காக அல்லாஹ் இரவு நேரங்களில் தன் கரங்களை விரிக்கின்றான். ஒருவன் இரவில் ஏதும் பாவம் புரிந்து விட்டிருந்தால் அவன் பகலில் தன்பால் திரும்பி வரட்டும் என்பதற் காக அல்லாஹ் பகல் நேரத்தில் தன் கரங்களை விரிக்கின்றான். சூரியன் மேற்கில் உதயமாகும் வரை இப்படி செய்து கொண்டே இருப்பான். அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அதி(ரழி), நூல்: முஸ்லிம்.

நம் வாழ்க்கையில் நம் குற்றங்களுக்காக, தவறுகளுக்காக, படைத்த இறைவனிடத்தில் திரும்பி கண்ணீர் விட்டு அடி மனதில் இருந்து எழும் கவலையோடு, படைத்த இறைவனிடத் தில் பாவமன்னிப்புக் கேட்டிருக்கிறோமா? இல்லை. நாளை மறுமை வாழ்க்கையை எண்ணி கண்ணீர் விட்டு குமுறி அழுதிருக்கிறோமா? இல்லை. அந்த கப்ரின் நிலையை எண்ணி கவலைப்பட்டு கண்ணீர் விட்டிருக்கிறோமா? இல்லை.

ஆனால் நாம் கண்ணீர் விட்டது உண் மையாக எதற்கென்றால் நம் குடும்பத்தில் இருந்து யாராவது வெளிநாடு செல்ல வேண் டும். சகோதரரோ, குடும்பத்தினரோ வெளி நாடு செல்லவேண்டும். அப்போது தான் கண் ணீர் விடுவோம். உள்ளம் குமுறுவோம். ஆனால் நம் பாவங்களுக்காக கண்ணீர் விட்டு உள்ளம் குமுறி இருக்கிறோமா? இன்ஷா அல்லாஹ்! இனியாவது கண்ணீர் விட்டுக் கொண்டே பாவமன்னிப்பு கேட்போம்.

வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் எல்லா நிமிடங்களிலும் தவறு செய்பவர்கள் நாம்; நம்மை அறியாமலோ, அறிந்தோ செய்த தவறுக்கு பரிகாரம் என்ன? நம் உடம்பில் தூசியோ, சேறோ ஒட்டிக் கொண்டால் உடன் சுத்தப்படுத்துகிறோமே, அதே மாதிரி எந்த நிமி டம் தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணம் நமக்கு வந்துவிட்டதோ, அந்த நிமிடமே அழுது கொண்டே படைத்த இறைவனிடத்தில் திரும்ப வேண்டும். என்னைப் படைத்த இறைவா! என்னை அறியாமல் இந்த தவறு நிகழ்ந்து விட்டது. இனி ஒருக்காலும் அந்த தவறின் பக்கமே செல்லமாட்டேன் என்று எண்ணி வருந்தி படைத்த இறைவனிடத்தில் கண்ணீர் விட்டுக்கொண்டே பாவ மன்னிப்பு கேட்க திரும்ப வேண்டும்.

ஆதம்(அலை), ஹவ்வா(அலை) பாவ மன் னிப்பு கோரியதை பாருங்கள். அதற்கு அவர்கள் எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன் னித்து கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தோர்களாகி விடுவோம் என்று கூறினார்கள். அல்குர்ஆன் 7:23

நபி ஆதம்(அலை), ஹவ்வா(அலை) பாவ மன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொண்டான். அவர்கள் (அ) அவர்கள் இருவரும் தாம் செய் தது பாவம் என்று தெரிந்ததும், அல்லாஹ் கற் றுத் தந்ததுபடி பாவமன்னிப்பு கோரினார்கள். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தான்.

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளை கற்றுக் கொண்டார். (இன்னும் அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்பு கோரினார்) எனவே இறைவன் அவரை மன் னித்தான். நிச்சயமாக அவன் மிக மன்னிப் போனும், கருணையுடையோனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)

இன்னும் சில மனிதர்கள், நான் இது நாள் வரை தொழாமலும், பாவமன்னிப்பு கேட்கா மலும் இருந்துவிட்டேன். இனி எனக்கு என்ன வேண்டி இருக்கிறது என்றும், இன்றும் நான் இப்படியே இருந்துவிட்டு போகிறேன் என்றும் கூறுவார்கள். படைத்த இறைவனிடத் தில் நம்பிக்கையிழந்து விடுவதையும், பார்க் கின்றோம். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதி லும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை யிழந்து விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சய மாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் என்று நபியே நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 39:53

உங்கள் எண்ணத்தை மாற்றி விடுங்கள். இந்த கணமே படைத்த இறைவனிடத்தில் திரும்பி விடுங்கள். இப்போது தொழுகைக்கு வந்தால் மனிதர்கள் என்ன எண்ணுவார்கள் என்றெல்லாம் எண்ணா தீர்கள். இந்த நிமிடமே இது நாள்வரை செய்த தவறுகளுக்காக கண் ணீர் விட்டுக் கொண்டே படைத்த இறை வனிடத்தில் திரும்பி விடுங்கள்.வல்ல அல்லாஹ் கருணையுள்ளவன் என்பதைப் பாருங்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்; நிச்சயமாக உங்கள் இறைவன் ஜீவனுள்ளவனாகிய, தயாள சிந்தையுடை யோனாவான். தனது அடியான் அவன் பக்கம் தனது கைகளை உயர்த்தி விட்டால் அவற்றை அவன் வெறும் கைகளாக அனுப்ப வெட் கப்படுகிறான். அறிவிப்பவர்: ஸல்மான்(ரழி), நூல்: திர்மிதி, அபூதாவூத், பைஹகி.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவமன்னிப்பு கோருதலை வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), நூல்: திர்மிதி.

ஆனால் ஃபிர்அவ்னின் பாவ மன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை. மூச்சு தடு மாறிய பின்பு பாவ மன்னிப்பு கேட்டான். கடைசியில் கூட ஃபிர்அவ்ன் என் இறைவன் என்று கூறவில்லை. இஸ்ராயிலின் சந்ததியினர், எந்த இறைவன் மீது ஈமான் கொண்டுள்ளார் களோ அந்த இறைவன் என்று கூறினான்.

அவன் மூழ்க ஆரம்பித்ததும், அவன் இஸ்ராயிலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு நாயன் இல்லை என்று நானும் ஈமான் கொள்கிறேன். இன்னும் நான் அவ னுக்கே முற்றும் வழிபடுபவர்களில் ஒருவனாக இருக்கின்றேன் என்று கூறினான். அல்குர்ஆன் 10:90

இந்த நேரத்தில் தானா? சற்று முன் வரை யில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந் தாய்; இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒரு வனாகவும் இருந்தாய். அல்குர்ஆன் 10:91

இதுநாள் வரை பாவம் செய்துவிட் டோம், இனி செய்ய வேண்டாம்; இந்த நிமி டமே அல்லாஹ்விடம் திரும்புவோம். “”அல்லாஹ்வை தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்”. அல்குர்ஆன் 3:135

நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களி டமிருந்து தவ்பாவை-மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங் களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ் பாவை ஏற்று அருள் புரிபவன். அல்குர்ஆன் 9:104

எல்லாம் வல்ல இறைவா! இதுநாள் வரை நாங்கள் செய்த அனைத்து பாவங்களையும் மன் னித்துவிடு; இனி ஒருக்காலும் அதன் பக்கமே எங்களை திருப்பிவிடாதே.

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயி ருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப் பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப் பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக் கப்பாற்பட்ட (எங்க ளால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன் னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபி ரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள் வாயாக! அல்குர்ஆன் 2:286

Previous post:

Next post: