கூலிக்காக உருவாக்கப்பட்ட தராவீஹ்!

in 2022 மே

கூலிக்காக உருவாக்கப்பட்ட தராவீஹ்!

அஹ்மத் இப்ராஹிம், புளியங்குடி

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் அனைத்தும் நிரம்பி வழியும் மாதம் புனித ரமழான் மாதமாகும். பகல் முழுவதும் நோன்பு வைப்பது இரவில் நின்று வணங் குவது கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்து செய்யவேண்டிய ஓர் அற்புதமான செயல். இதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எப்படிச் செய்ய வேண்டுமென்று நமக்கு கற்றுக் கொடுத்தார் களோ அப்படி அமல் செய்தால்தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான். அதன்படி ரமழானில் இரவுத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் பள்ளிவாசலில் ஜமா அத்தாக தொழ வைத்ததுமில்லை, அதற்காக எந்த ஒரு முன்னேற்பாடுகளும் செய்தது மில்லை. அதற்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்று நாம் சொன்னால் அதற்கு எங்கள் தலைவர்களும் எங்கள் முன்னோர்களும் எப்படி அமல் செய்தார்களோ அப்படித் தான் செய்வோம். அவர்கள் அதாவது சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் தவ்ஹீத் மவ்லவிகளுக்குத் தெரியாத சட்டமா தமிழில் படித்து வைத்திருக்கும் உங்களுக்கு தெரிந்துவிடப் போகிறது என்று ஏளனமாக நம்மைப் புறக்கணித்துவிட்டு அல்குர்ஆன் 33:66,67,68 வசனப்படி அமல் செய்தும் நர கிற்குச் செல்கிறார்களே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்தப் பதிவு.

முதலில் இரவுத் தொழுகை சம்பந்தமான ஆதாரப்பூர்வமான நபிமொழியயான்றை சமர்ப்பிக்கின்றோம். அது வருமாறு :

731, ஸைத் பின் ஸாபித்(ரழி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக் கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப் போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின்பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிந்தபோது (அந்த இடத்திற்கு வராமல் தம் இல்லத்திலேயே) அமர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து “”உங்களது செயல்களை நான் கண்டறிந்தேன். மக் களே! (உபரியானத் தொழுகைகளை) உங் கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங் கள். ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்பட்ட தொழுகை யைத் தவிர” என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பா ளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீத் வந்துள்ளது. புகாரி அத்தியாயம் 10, பாங்கு.

மேற்கண்ட நபிமொழியை நன்றாகப் படியுங்கள். ரமழான் மாதம் துவங்குவதற்கு முன்பே ரமழானில் எவ்வாறு அமல் செய்ய வேண்டும் என்று ஆர்வமூட்டிய நபி(ஸல்) அவர்கள் என்றாவது இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக பள்ளிவாசலில் தொழ வேண் டும் என ஆர்வமூட்டினார்களா? அல்லது தொழ வைத்தார்களா? அல்லது அதற்கு அனுமதி அளித்தார்களா? என்றால் இல்லவே இல்லை.

ரமழானில் இரவுத் தொழுகை தொழும் போது ஆர்வக்கோளாறின் காரணமாக யாரும் தம்மைப் பின்பற்றி தொழுதுவிடக் கூடாது என்பதற்காகவே பாயினால் அறை ஒன்றை ஏற்பாடு செய்து அதையே தடுப் பாகவும் வைத்து நபி(ஸல்) தனியாகத் தொழுகிறார்கள். இவ்வளவையும் மீறி அதே ஆர்வக் கோளாரின் காரணமாக நபித் தோழர்கள் சிலர் தம்மைப் பின் தொடர்ந்து தொழுவதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள் இனிமேல் இரவுத் தொழுகையை அவரவர் வீடுகளிலேயே தொழவேண்டும் என உத்திரவிட்டு அதை அப்படியே அதா வது பள்ளிவாசலில் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதை தடை செய்து விட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமழான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள்:

ரமழானில் நம்பிக்கையுடனும் நன் மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்கு கிறவரின் முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார்.
(ரமழானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர்(ரழி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந் தது! என்று இமாம் இப்னு ´ஹாப் ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார். புகாரி: 2008,2009) அத்தியாயம்: 31, தராவீஹ் தொழுகை.

அதன்பின் நபி(ஸல்) அவர்கள் மரணிக் கும் வரை ரமழான் மாதங்களில் அவர்க ளின் தலைமையில் இரவுத் தொழுகையை மஸ்ஜிதுந் நபவியில் ஜமாஅத்தாக தொழுத தாக, தொழவைத்ததாக ஒரேயயாரு ஆதாரம் கூட கிடையாது. அப்படி ஒரு ஆதாரப்பூர்வமான நபிமொழியை மத்ஹபு மற்றும் தவ்ஹீத் புரோகிதர்களால் ஒரு போதும் தரமுடியாதென்பதுதான் உண்மை யாகும். எனவே பள்ளிகளில் தராவீஹ் என்ற பெயரால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவது நபிவழிக்கு மாறான செயலாகும்.
மேலும் அல்குர்ஆன் 7:55, 7:205 வசனத் திற்கு மாறு செய்யும் குற்றத்திற்கு ஆளாகி அதாவது நடு இரவில் ஸ்பீக்கரில் சப்தமாக தொழ வைப்பது, பயான் செய்வது இவற் றைக் கொண்டு மாற்றுமத சகோதரர்களின் தூக்கத்திற்கும் மற்றும் நோயாளிகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் துன்பம் தருவதாக அமைந்து விடுகிறது. அல்லாஹ்வின் கட்டளையை புறக்கணிப்பதாகவும் ஆகி விடுகிறது.

இது முழுக்க முழுக்க கூலிக்காக ஏற் பாடு செய்யப்பட்ட ஒரு பித்அத்தான செய லாகும். அதிலும் மத்ஹபு வழிகேடர்களை விட தவ்ஹீத் மத்ஹபு வழிகேடு மிக மோசமாக உள்ளது. நடு இரவிலும் இளம் வயதுப் பெண்கள் தன்னந்தனியாக பள்ளி யில் தொழப் போகிறேன் என்று கிளம்பி விடுகிறார்கள். இது பல கேடுகெட்ட செயல்பாடுகளுக்கும், ஆபத்தான காரியங்க ளுக்கும் காரணமாக ஆகிவிடுகிறது. கடமை யான இஷாத் தொழுகையை பெண்கள் பள்ளியில் தொழ வரும்போது அவர்களைத் தடுக்காதீர்கள் என்று சொன்ன நபி(ஸல்) அவர்கள் ஆயினும் இஷாத் தொழுகையை பெண்கள் அவர்களின் வீடுகளில் தொழு வதே சிறப்பாகும் என்றனர். எனவே ஆண் களும், பெண்களும் இரவுத் தொழுகையை தத்தமது இல்லங்களில் தொழுவதே சரியான நபிவழியாகும்.

எனவே இந்த கேடுகெட்ட கூலிக்கு மாரடிக்கும் மத்ஹபு மற்றும் தவ்ஹீத் புரோ கிதர்களை புறக்கணித்து விட்டு நபி(ஸல்) அவர்களை பின்பற்றி இரவுத் தொழு கையை நபிவழிப்படி நமது வீடுகளிலேயே தொழுது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுமாறு தங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

Previous post:

Next post: