நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

in 2022 மே

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

“இப்லீஸின் ஒரு சிறந்த கருத்தை உண்மைப் படுத்தி அதனை மார்க்கமாக்கிய இறை தூதர்(ஸல்) அவர்கள்”

நபி(ஸல்) அவர்கள் ரமழானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட் களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, “உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறினேன். அதற்கவர், “நான் ஓர் ஏழை!’ எனக்குக் குடும் பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கி றது! என்று கூறினார். அவரை நான் விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், “அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள் நான், “இறைத் தூதர் அவர் களே! தாம் கடுமையான வறுமையில் இருப் பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாக வும் அவர் முறையிட்டார். எனவே, இரக் கப்பட்டு அவரை விட்டுவிட்டேன்! என் றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நிச்சய மாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவன் மீண்டும் வரு வான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவரைப் பிடிப்பதற்காகக் காத்திருந்தேன்.

அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். “என்னை விட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனி நான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டு விட் டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்ட வன் என்ன செய்தான்! என்று கேட்டார் கள். நான் “இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும், குடும்பமும் இருப்பதாக முறையிட்டான். எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்! என்றேன். “நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார் கள். மூன்றாம் முறையும் அவனுக்காகக் காத்திருந்தபோது அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான்.

அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிம் கொண்டு செல்லப் போகி றேன். (ஒவ்வொரு முறையும்) “இனிமேல் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக் கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் “என்னை விட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!’ என்றான். அதற்கு நான் “அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட் டேன். “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலி ருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்’ என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். “இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக் குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தை களைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான். அதனால் அவனை விட்டு விட்டேன்! என்றேன்.

அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்)அவர்கள் கேட்டார்கள். “நீர் படுக் கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்.’

ஷைத்தானும் உம்மை நெருங்க மாட் டான் என்று என்னிடம் அவன் கூறினான்’ எனத் தெரிவித்தேன்.

(நபித்தோழர்கள் நன்மையானதைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள்) அப் போது நபி(ஸல்) அவர்கள் “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மி டம் உண்மையைத்தான் சொல்லியிருக் கிறான். மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். “தெரியாது’ என்றேன். “அவன் தான் ஷைத்தான்’ என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரை ரா(ரழி) புகாரி: 2311,3275,5010)

கவிஞர் உமய்யா பின் அபிஸ்ஸல்த் என்பவர் குறித்து பேசுகையில்:

“அவரது கவிதைக்கு இறை நம்பிக்கை உண்டு. அவரது மனமோ இறையை மறுத் தது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சீரா இப்னு கஸீர்: ஹயாத்து முஹம்மது(ஸல்) அக்பாரு மக்கா, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 7:683)

நபித் தோழர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்காக (உமய்யாபின் அபிஸ்ஸல்த் என்பவரின் பாடல்களில்) நூறு பாடல் களைப் பாடிக் காட்டினார்கள். ஒவ்வொரு பாடலுக்குப் பின்னரும் அந்தக் கவிதை களை ரசித்தவர்களாக இன்னும் பாடு என்று நபியவர்கள் கூறினார்கள்.  (­ரீத் பின் சுவைத்(ரழி) முஸ்லிம்: 4540)

நிச்சயமாகச் சில உரைகளில் கவர்ச்சி உண்டு, சில கவிதைகளில் தத்துவம் உண்டு என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) அபூ தாவூத், முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் : 7:683)

மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். கவிஞர் சொன்ன சொற்களி லேயே மிக உண்çமையான சொல், (கவி ஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன (அறிக) அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே! எனும் சொல்தான். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தம் கவிதையின் கருத்துக ளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார் என்று.  (அபூ ஹுரைரா(ரழி), புகாரி: 3841, 6147, 6489)

Previous post:

Next post: