பிற மத கடவுள்களை திட்டாதீர்கள்!

in 2022 ஜுலை

தலையங்கம்!

பிற மத கடவுள்களை திட்டாதீர்கள்!

பாஜக பெண் நிர்வாகியின் அவதூர் பேட்டி:

\கடந்த சில நாட்களால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை BJP கட்சியை சேர்ந்த நுபுர் ­ஷர்மா என்ற பெண் செய்தி தொடர்பாளர் இழிவாக பேசினார் என்ற காரணத்திற்காக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து இருக்கிறது. குறிப் பாக உலகம் முழுவதும் உள்ள கிட்டத் தட்ட 16 இஸ்லாமிய நாடுகள் இதற்காக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் இந்தியாவின் பொருட்களை புறக்கணிப்போம். இந்துக்களை நாட்டை விட்டு அனுப்புவோம் என்றும் அறிக்கை களையும் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இதுபோன்ற பிரச்சனைகள் இந்தியாவில் ஏன் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது? இதற்கு யார் காரணம்? என்பதைப் பற்றி நாம் விளங்கிக் கொண்டோம் என்று சொன்னால் இதுபோன்ற பிரச்சனைகள் அடுத்து வந்தால் நாம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களை தூண்டிவிடும் பாஜக:

பாஜகவை சார்ந்த பெண் நிர்வாகி அப்படி பேசியதற்கு காரணம் என்ன? என்பதை ஒரு விவாத நிகழ்ச்சியில் பாஜக கட்சியை சார்ந்தவர் ஒருவர் சொல்கிறார் முஸ்லிம் கள் இந்துக்கள் வணங்கக்கூடிய கடவுள்களை இழிவாகவும், கேவலமாகவும் பேசி னார்கள். குறிப்பாக சிவலிங்கத்தை பற்றி இழிவாக பேசினார்கள். அதனால்தான் கோபம் கொண்டு நபியை பற்றி அந்த பெண் நிர்வாகி பேசியிருக்கிறார் என்று தனது கருத்தை பதிவிடுகிறார்.

அவர் சொல்வதும் உண்மைதான் கடந்த சில மாதங்களாக பேஸ்புக், வாட்ஸ்அப் தளங்களில் சிவலிங்கத்தை பற்றி முஸ்லிம்கள் கேலி செய்தார்கள். ஏன் கேலி செய்தார்கள்?

அப்படி கேலியும், கிண்டலும் செய்ய வைப்பதற்காகத் தான் பள்ளிவாசலில் சிவ லிங்கம் இருப்பதாக ஒரு புரளியை கிளப்பி நீதிமன்றத்தை நாடினார்கள் பாஜகவினர். BJP தேவை இல்லாமல் புதிய பிரச்சனையை உருவாக்கிய காரணத்தால் கோபம் கொண்ட முஸ்லிம்கள் சிவலிங்கத்தை கேலி செய்து பல பதிவுகளை பதிவிட்டார்கள்.

அதை பயன்படுத்தி நபியை கேலி செய்து உலக அளவில் முஸ்லிம் நாடுகளை எதிர்ப்பு தெரிவிக்க வைத்து இந்துக்களின் ஆதரவை பெறுவார்கள் பாஜகவினர்.

பாஜக ஏன் முஸ்லிம்களை மதத்தின் பெயரால் தூண்டிவிடவேண்டும்?

பாஜகவின் கையாலாகாத நிர்வாக சீர் கேட்டு காரணமாக இன்றைக்கு விலை வாசி விண்ணைத் தொடுகிறது. பெட்ரோல் விலையேற்றம் ஸிணூளீயை மொத்தமாக காலி பண்ணிவிட்டார்கள். பணவீக்கம், இப்படி எண்ணற்ற பிரச்சனை உருவாகி இருக்கிறது. சாதாரண இந்துக்கள் கூட இன்றைக்கு பாஜகவை கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். இதை எல்லாம் மறைத்து பெரும்பான்மை இந்துக்களின் அனுதாபத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது தான் நபியை பற்றி இழிவக பேசிய விவகாரம். முஸ்லிம் நாடுகள் நபியை பற்றி பேசிய ஒரே காரணத்திற்காக தங்கள் நாடுகளில் உள்ள இந்துக்களை வெளியேற்ற பார்க்கிறார்கள் என்றால் இன் றைக்கு இந்து தெய்வங்களை கேலி செய்யக் கூடிய இந்திய முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டுமா? இல்லையா? என்று அப்பாவி இந்துக்களை காவியாக மாற்றி அடுத்து 2024ல் வர இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த நபியைப் பற்றிய அவதூர் பிரச்சாரம். இதுபோன்ற பிரச்சனைகள் அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடப்பது உறுதி.

பாஜக வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்கு:

அதாவது இன்றைக்கு இந்த பிரச்சனை களுக்கு எல்லாம் காரணம் இந்து மதவாத சக்தி மற்றும் அல்ல முஸ்லிம்களும். இதற்கு உடந்தை என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம்! இரண்டு மதவாத அமைப்புகள் தான் இதற்கு காரணம்.

  1. RSS BJP இந்துத்துவா அமைப்புகள்
  2. முஸ்லிம் பிரிவினை இயக்கவாதிகள்.

ஆகிய இந்த இரண்டு மதவாத அமைப்புகள் தான் இன்றைக்கு இந்த இந்தியாவில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கும் காரணம். என்ன முஸ்லிம்கள் மதவாதிகளா? என்று நீங்கள் கேட்கலாம். மதம் என்பதற்கு வெறி என்பது பொருள். யானைக்கு வெறிப்பிடித் திருப்பதை மதம் பிடித்திருக்கிறது என்று சொல்வார்கள். இன்றைக்கு பெரும் பான்மை முஸ்லிம்களுக்கு இயக்கம் என்ற மதம் பிடித்திருக்கிறது. அந்த இயக்கம் என்ற மதவெறியின் காரணமாக இந்த முஸ்லிம் சமுதாயத்தை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய இயக்க மதத்தை வளர்ப்பதற்கு பிற மத கடவுளை திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் இரண்டு மதவாத அமைப்புகளால் இந்த பிரச்சனை என்று சொன்னேன்.

அதாவது RSS BJP இந்து மதவெறியர்கள், இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமிரின் காரணமாக வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். அப்பாவி முஸ்லிம்களை மாடுகளின் பெயராலும், கடவுளின் பெயராலும் அடித்து கொலை செய்கிறார்கள். முஸ்லிம்களை ஏதாவது காரணத்தை சொல்லி சீண் டிக்கொண்டே இருக்கிறார்கள்.

தங்களுடைய ஆட்சிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது இந்து மக்கள் தங்கள் ஆட்சிக்கு எதிராக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டாலோ உடனே அவர்கள் கையில் எடுப்பது மதத்தைத்தான்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல், அல்கொய்தா தீவிரவாதிகள் ஊடுருவல், மாட்டு இறைச்சி வைத்திருந்ததால் பசு காவ லர்களால் முஸ்லிம்கள் அடித்து கொலை என்று எப்போது எல்லாம் அவர்களுக்கு பிரச்சனைகள் வருகிறதோ அப்போது எல்லாம் தீவிரவாதிகள் இந்தியாவை தாக்கு வார்கள். முஸ்லிம்கள் மாட்டு இறைச்சியை சாப்பிடுவார்கள். இன்னும் நாம் பார்த் திராத கேட்டிராத பிரச்சனைகளை எல்லாம் உருவாகும்.

இப்படி பிரச்சனைகளை உருவாக்கி பெற்றது அதிகாரம் தான் இன்றைய ஆட்சியும் அதிகாரமும்.

1980களில் வெறும் 3 எம்.பி. சீட்டு இருந்தவர்கள் இன்றைக்கு 305 எம்.பி. சீட்டுக்கும் அதிகமாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட் சியை பிடித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் என்ன? மதம் தான்.

பாபர், ராமர் கோவிலை இடித்து, பள்ளிவாசல் கட்டினார் என்ற ஒரு குண்டை தூக்கி போட்டார்கள். அதை வைத்து சிறுக சிறுக பல தொகுதிகளை கைப் பற்றி இன்றைக்கு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு மேடை பேச்சிலும் இராமர் கோவிலை கட்டியே தீருவோம். முஸ்லிம்களை நாட்டை விட்டு விரட்டியே தீருவோம் என்று பகிரங்கமாக பேசி வந்தார்கள். அதனாலேயே இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்தை பெற்றுவிட்டார்கள். வரக் கூடிய 2024ல் தேர்தலிலும் வெற்றி பெற முயற்சிப்பார்கள்.

இதற்கு எல்லாம் காரணம். யூறீறீ, யமூP காரர்கள் மட்டும் இல்லை, முஸ்லிம் இயக்கவாதிகளும் தான் காரணம். ஏன் என்றால்? பாபர் மஸ்ஜித்தை திட்டமிட்டு இடித்து முஸ்லிம்களை சண்டைக்கு தூண்டினார்கள். RSS BJP இந்து வெறியர்கள். அந்த நேரத்தில் முஸ்லிம்கள் நான்கு மத்ஹபுக்களாகவும், பல இயக்கவாதிகளாக, அரசியல் கட்சிகளாக பிரிந்து கிடந்தார்கள். உண்மையில் இந்த பிரச்சனையின் போது முஸ்லிம்கள் என்ன செய்திருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய பள்ளிவாசலுக் காக ஒன்றிணைந்திருக்க வேண்டும் அவ்வாறு செய்தார்களா? செய்யவில்லை. ஆனால் இந்துக்கள் செய்தார்கள். சாதி வெறியால், உயர் சாதி, கீழ்சாதி என்று தனித் தனியாக பிரிந்து கிடந்த இந்துக்கள் இராமர் கோவிலுக்காக, இராமருக்காக ஒன்றி ணைந்தார்கள். முஸ்லிம்களை பழி வாங்க வேண்டும். எங்கள் கடவுளுக்கு நாங்கள் உதவி செய்ய வேண்டும் என்ற ஒன்றி ணைந்தார்கள்.

ஆனால் உண்மையான கடவுளான அல்லாஹ் ஒருவனுக்காக ஒன்றிணைய வேண்டிய முஸ்லிம்கள் ஒன்றிணைந்தார் களா? இல்லையே! தங்களுக்குள் உண்டான போட்டி, பொறாமையின் காரணமாக பல இயக்கங்களாக, அரசியல் கட்சிகளாக பிரிந்து சென்றார்கள். அல்லாஹ்வின் பள் ளிக்காக ஒன்றிணையாத இவர்கள் எதற் காக தான் ஒன்றிணையப் போகிறார்கள்?

உண்மையில் இவர்கள் இஸ்லாத்தை பின்பற்றி இருந்தார்கள் என்று சொன்னால் பிரிந்து சென்றிருப்பார்களா? அல்லாஹ் சொல்கிறான்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித் தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப் பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும், நாம் உபதேசித்ததும் என்ன வென்றால், நீங்கள் (அனைவரும்) சன் மார்க்கத்தை (தீனை) நிலைநிறுத்துங்கள். நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்! என்பதே. இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது. தான் நாடி யவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந் தெடுத்துக் கொள்கிறான். (அவனை) முன் னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (அல்குர்ஆன் 42:13)

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமு மில்லை. அவர்களுடைய வி­யமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடி வில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் : 6:159)

உண்மையில் இவர்கள் இஸ்லாத்தை பின்பற்றி இருந்தார்கள் என்று சொன்னால் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று ஒரு அணியில் ஒன்றிணைந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் இஸ்லாத்தை பின்பற்ற வில்லை மாறாக தங்களுடைய மனோ இச் சையான ஷைத்தானை பின்பற்றினார்கள். அதனால் தான் பல பிரிவுகளாக பிரிந்து சென்றார்கள்.

அல்லாஹ்வின் பள்ளிவாசலை காட்டி வசூல்:

அது மட்டுமல்ல அல்லாஹ்விற்காக கட்டப்பட்ட பள்ளிவாசலான பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதை தங்களுடைய வளர்ச் சிக்காக சாதகமாக பயன்படுத்தி கொண் டார்கள். டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் என்று சொல்லிக் கொண்டு ஆளா னுக்கு வசூல் செய்ய ஆரம்பித்தார்கள். இவர்களை நம்பி அப்பாவி முஸ்லிம்களும் தங்களுடைய பணத்தை வாரி வழங்கினார் கள். போராட்டங்களிலும் கலந்து கொண் டார்கள். தனித்தனி இயக்கமாக, அரசியல் கட்சியாக ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் என இஸ்லாம் காட்டித் தராத வழிமுறைகளை பின்பற்ற ஆரம்பித் தார்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் போன்றவை முஸ்லிம்கள் செய்ய ஆரம்பித்ததே பாபர் மஸ்ஜித் பிரச் சனைக்கு பின்புதான்.

அதுமட்டும் அல்ல முஸ்லிம் சமுதாயத் திற்காக நாங்கள்தான் போராடுகிறோம் என்று மற்றவர்களுக்கு காட்டுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு போராட்ட கலத்தில் இராமர் பிறப்பு சம்பந்தமாக இழி வாக பேசுவதும், திட்டுவதும் முஸ்லிம் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றி விடக் கூடிய செயல்களையும் செய்தார்கள். அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக யூறீறீ, யமூP கூட்டம் அப்பாவி இந்துக்களிடம் இவர் களின் பேச்சுக்களின் ஆடியோக்களை போட்டுக்காட்டி அப்பாவி இந்துக்களை வெறியேற்றினார்கள். அதனால் பல கலவரங்கள் இந்தியா முழுவதும் நடந்தது. இதில் முஸ்லிம் இயக்கவாதிகள் தங்களை முஸ்லிம்களின் பாதுகாவலர்களாக காட்டிக் கொண்டார்கள். இந்து வெறியர் கள் இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று தங்களை காட்டிக் கொண்டார்கள். இடையில் இருந்த அப்பாவி இந்துக்களும், முஸ்லிம் களும் அன்றைக்கு கலவரத்தில் கொல்லப் பட்டார்கள்.

இன்றைக்கும் அதே செயல்களைத்தான் இருவரும் செய்கிறார்கள். இந்து வெறியர்கள் இஸ்லாத்தையும், நபியையும் கேவல மாக பேசுவதும், அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இயக்க வெறிபிடித்த முஸ்லிம் தலைவர்களும் தங்கள் இயக்கங்களையும் இயக்கத்தில் உள்ள இளைஞர்களையும் தங்கள் இயக்கத்தில் தற்காத்துக்கொள்ள பிற மதக்கடவுளை திட்டுவதும், பதிலுக்கு பதில் கொச்சையாக பேசுவதுமாக முஸ்லிம் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றுகிறார்கள்.

மாட்டு மூத்திரத்தை குடிப்பவர்களுக்கு என்ன அறிவு இருக்கும் என்று பச்சையாக பேசுகிறார்கள். இராமர்க்கு யார் தகப்பன் என்று கேட்கிறார்கள். மோடியை கேவல மாக என்று பீஜை ஒரு போராட்டத்தில் பேசுகிறார். இப்படியாக போராட்டம் என்ற பெயரால் பிற மத கடவுள்களை திட்டக்கூடிய இவர்களால் எற்பட்ட விளைவு இன்றைக்கு இந்தியா முழுவதும் நடத்தப்படக்கூடிய போராட்டங்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பள்ளிவாசலில் சிவலிங்கம் இருப்பதாக செய்தியை பரப்பி அது சம்பந்தமாக நீதிமன் றத்தை நாடினார்கள். இந்து வெறியர்கள். அது சம்பந்தமாக சமூக வளைதலங்களில் சிவலிங்கத்தை பற்றி கேவலமாக, கொச்சையாக பல முஸ்லிம்கள் பதிவிடத் தொடங் கினர். இதை சாதகமாக பயன்படுத்தி விவாத நிகழ்ச்சியில் நபி(ஸல்) அவர்களை பற்றி இழிவாக பேசி திட்டியிருக்கிறார்கள் பாஜக பெண் செய்தி தொடர்பாளர்.

இந்தியா முழுவதும் இதனால் போராட் டம் உருவாகிறது. அப்பாவி முஸ்லிம்கள் போலிஸாரால் அடித்து விரட்டப்படுகிறார்கள். பலரும் கொல்லப்பட்டார்கள். இப்படி பிற மத கடவுள்களை திட்டுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா?

அல்லாஹ் அல்லாதவற்றை திட்டாதீர்கள்:

அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல் லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல் லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:108)

நீங்கள் திட்டினால் அவர்கள் அறிவு இல்லாமல் வரம்பை மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள் என்று சொல்கிறான். அவர் கள் தான் முதலில் திட்டினார்கள். பதிலுக் குத்தான் நாங்கள் திட்டினோம் என்று சொன்னால் அவர்கள் திட்டத்தான் செய் வார்கள். இஸ்லாத்தை பின்பற்றும் நாம் தான் பொறுமையாக போகவேண்டும். ஏன் என்றால் அல்லாஹ் சொல்கிறான்.

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலா கும். (அல்குர்ஆன் 3:186)

உங்கள் பொருட்களிலும், உங்கள் உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். முன் வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் இருந்தும், இணை வைத்து வணங்குபவர்களிடம் இருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவி மடுப்பீர்கள். (கேவலமாக திட்டுவார்கள்) என்று அல்லாஹ் சொல்கிறான்.

அப்படி என்றால் நாம் பொறுமையாக போய்கிட்டே இருக்க முடியுமா? என்று சிலர் கேட்கலாம். இப்போதைக்கு பொறு மையாகத்தான் போகவேண்டும் ஏன் என் றால் இன்றைக்கு அல்லாஹ்வின் சொல்லுக்கு மாற்றமாக முஸ்லிம்கள் பல பிரிவு களாக பிரிந்து கிடக்கிறார்கள். அப்படி பிரிந்து கிடப்பதே அல்லாஹ்விற்கு இணை வைக்கக்கூடிய செயல் தான் அப்படி இருக் கையில் அல்லாஹ்வின் உதவி எப்படி நமக்கு கிடைக்கும்?

உங்களில் எவர் ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை அவர்களுக்கு முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும் இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களு டைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அவர்கள் என்னோடு இணைவைக்காது அவர்கள் என் னையே வணங்குவார்கள். இதன் பின்னர் எவர் மாறு செய்கிறாரோ அவர்கள் பாவி கள்தாம். (அல்குர்ஆன் 24:55)

அல்லாஹ் நமக்கு ஆட்சி அதிகாரத்தை தருகிறேன் என்று சொல்கிறான். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? அல்லாஹ் விற்கு இணை வைக்கக்கூடாது. அவனுடைய சொல்லைத் தவிர யாருடைய சொல்லையும் கேட்கக்கூடாது ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் நிச்சயமாக ஆட்சி அதிகாரம் நமக்கு கிடைக்கும். இல்லை என்று சொன்னால் கடந்த காலங்களில் குறைந்தபட்ச ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்ட நாம் இன் றைக்கு எந்த நிலையில் இருக்கிறோம் என் பதை கவனியுங்கள். கடந்த காலங்களில் பல முஸ்லிம் எம்.பி.க்கள் இந்தியாவில் இருந் தார்கள். இன்றைக்கு எத்தனை எம்.பிக்கள் இருக்கிறார்கள்? இனி வரக்கூடிய காலங் களில் என்ன நிலை ஏற்படும்?

இன்றைக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நாடாளுமன் றத்தில் குரல் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்க முஸ்லிம் எம்பிக்கள் எத்தனை பேர் இருக் கிறார்கள். இதை எல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு சிலர் அல்லாஹ் வையும் அவனுடைய தூதரையும் திட்டி னார்கள் என்ற காரணத்திற்காக எந்த தவ றும் செய்யாத பெரும்பான்மை இந்துக்கள் கடவுளாக நம்பக்கூடியவர்களை நாம் திட்டினால் அது வரம்பு மீறிய செயல். மேலும் 6:108 வசனத்திற்கு மாறு செய்யக்கூடிய செயல்.

எனவே சகோதரர்களே! அல்லாஹ்வின் சொல்லுக்கு கட்டுப்படுங்கள். உங்கள் தலைவர்களின் பேச்சை கேட்டு பிற மத கடவுள்களை திட்டாதீர்கள். அல்லாஹ் வின் சொல்லுக்கு மாறு செய்யாதீர்கள். அப்படி செய்தீர்கள் என்று சொன்னால் அவனுடைய சாபத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும். எனவே உங்கள் தலைவர்களை புறக்கணியுங்கள். இந்த சமுதாயத்திற்கு நீங்கள் நன்மையை தேடித்தர விரும்பினால் எந்த இயக்க பெயர்களும் இல்லாமல் முஸ்லிம்களாக ஒன்றுபடுங்கள். அல்லாஹ் நமக்கு ஏற்படும் இன்னல்களை அதன்மூலம் அகற்றிவிடுவான். இன்ஷா அல்லாஹ். ஒன்றுபட்ட முஸ்லிம்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.

Previous post:

Next post: