பிறைக்கணக்கின்படி நமது வயது கொஞ்சம் கூடுதல்தான்!

in 2022 செப்டம்பர்

பிறைக்கணக்கின்படி நமது வயது கொஞ்சம் கூடுதல்தான்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை

அவர்கள் முன்னூறு ஆண்டுகள் தமது குகையில் தங்கியிருந்தார்கள்: மேலும் ஒன் பது ஆண்டுகள் கூடுதலாக இருந்தார்கள். (அல்குர்ஆன் 18:25)

என்பதானது; குகைவாசிகள் எவ்வளவு காலம் குகையில் தங்கியிருந்தார்கள் என் பதை உயர்ந்தோன் அல்லாஹ் தனது தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு விவரிக்கின்றான். அதாவது அவர்கள் குகையில் துயில் கொள் ளத் தொடங்கியதில் இருந்து அவர்களை அல்லாஹ் துயிலெழுப்பி அக்கால மக்களுக்குக் காண்பித்துக் கொடுத்தது வரை உள்ள கால அளவு சூரிய ஆண்டுப்படி முன்னூறு ஆண்டுகள் சந்திர ஆண்டுப்படி முன்னூற்றி ஒன்பது ஆண்டு காலங்கள் தங்கினார்கள் என்பதாகும். எவ்வாறெனில்,

சூரிய ஆண்டுக் கணக்குப்படி இது முந் நூறு ஆண்டுகளாகும். சந்திர ஆண்டில் ஒன் பது ஆண்டுகள் கூடுதலாகச் சேர்த்து முந் நூற்று ஒன்பது ஆண்டுகள் அவர்கள் குகை யில் தங்கியிருந்தார்கள். எவ்வாறெனில்,

ஒவ்வொரு நூறு சந்திர ஆண்டுக்கும் சூரிய ஆண்டுக்கும் மூன்று ஆண்டுகள் வித் தியாசம் உண்டு. அதாவது நூறு சூரிய ஆண்டு நூற்று மூன்று சந்திர ஆண்டுகளா கும். இதனால்தான் முந்நூறு ஆண்டுகள் எனக் கூறிய பின்னர் மேலும் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக இருந்தார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஏனெனில்,

சூரிய ஆண்டு 365,25 நாட்களைக் கொண்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு 366 நாட்களைக் கொண்டதாகும். நூறு ஆண்டுகளுக்கு 36.525 (365.25ஷி100) நாட்களாகின்றன. சந்திர ஆண்டு சரியாக 354.25 நாட்களைக் கொண்டதாகும். அதாவது சூரிய ஆண்டை விட 11, நாட்கள் குறைவு. இதன்படி நூறு ஆண்டுகளுக்கு 35,425 (354.25ஷி100=) நாட் களாகிறன. மொத்தம் 1100 (36525-35425=) என நாட்கள் குறைவதைக் காணலாம். இந்த 1100 நாட்கள் என்பது சந்திர ஆண்டில் (1100பி354.25=) 3 ஆண்டுகள் 10 நாட்களா கும். எனவே 100 சூரிய ஆண்டுகள் 309 சந்திர ஆண்டுகளாகும். (தஃப்சீர் இப்னு கஸீர் 5:417-420)

ஆக குகைவாசிகள் தமது குகையில் முந்நூற்று ஒன்பது ஆண்டுகள் தங்கினர் என் பது அல்லாஹ்வே அறிவிக்கும் செய்தியா கும் என்பதே விரிவுரையாளர்கள் பலரும் தெரிவிக்கின்ற கருத்தாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் உள்ளிட்ட முற்கால மற்றும் பிற்கால அறிஞர்கள் பலரும் இவ்வாறே விளக்கமளிக்கின்றனர்.

ஆனால் கத்தாதா(ரஹ்) அவர்கள் முந்நூற்று ஒன்பது ஆண்டுகள் தங்கினர் என்று வேதக்காரர்கள் கூறுவதாகவே இங்கு அல்லாஹ் தெரிவிக்கின்றான் எனக் கூறுகின் றார்கள். அதனால்தான் அடுத்த வசனத்தில் “அவர்கள் தங்கியிருந்ததை அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ எனக் குறிப்பிட்டு வேதக் காரர்களின் இக்கூற்றை அல்லாஹ் மறுக் கின்றான் என்றும் கத்தாதா(ரஹ்) அவர்கள் விவரிக்கின்றார்கள். இவ்வாறே வேறு சில ரும் கூறுகினறனர்.

அத்துடன் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர் கள் இந்த வசனத்தில் “வ காலூ’ என்பதைச் சேர்த்து ஓதியுள்ளார்கள். இதன்படி முன் னூற்று ஒன்பது ஆண்டுகள் தங்கினார்கள் என்று அவர்கள் கூறினர் எனப் பொருள் அமையும்.

ஆனாலும், இப்னு மஸ்ஊத்(ரழி) அவர் களின் இந்த ஓதல் முறை பெரும்பான்மை யினரின் ஓதல் முறைக்கு மாற்றமானதும், தனியானதும் ஆகும். தவிரவும் அந்த அறி விப்பு முன்கத்திஉ வகையைச் சேர்ந்ததுமா கும். அவ்வாறே கத்தாதா(ரஹ்) அவர்களின் கருத்தும் விவாதத்துக்குரியதாகும். ஏனெ னில் வேதக்காரர்களின் ஏடுகளில் வெறும் முந்நூறு ஆண்டுகள் என்றே காணப்படு கின்றது. அதாவது சூரிய ஆண்டு கணக் கையே அவர்களின் கரத்திலுள்ள குறிப்பு கள் காட்டுகின்றன. வேதக்காரர்களின் சொல்லைத்தான் இங்கு அல்லாஹ் தெரிவிக் கின்றான் என்றிருந்தால் “ஒன்பது ஆண்டு கள் கூடுதலாக இருந்தார்கள்’ என அல்லாஹ் குறிப்பிட்டிருக்க மாட்டான்.

ஆகவே இது அல்லாஹ்வின் குறிப்பே தவிர வேதக்காரர்களின் சொல் குறித்த அறி விப்பு அல்ல என்பதே சரியான கருத்தாகும். இதுவே விரிவுரையாளர் இப்னு ஜரீர்(ரஹ்) அவர்களின் தேர்வாகும். (18:25, தஃப்சீர் இப்னு கஸீர் 5:417-420) இதன் அடிப்படை யில் நம்மில் பெரும்பாலானவர்கள் வய தைக் கணக்கிடுவதற்காக சூரிய கணக்கையே கருத்தில் கொள்வதால்; அன்னளவாக,

v சூரிய கணக்கின்படி, 100 வயதை அடைந்த ஒருவருக்கு சந்திர கணக்கின்படி 103 வயதாகின்றது.
v சூரிய கணக்கின்படி, 50 வயதை அடைந்த ஒருவருக்கு சந்திர கணக்கின்படி 51டி வயதாகின்றது.
v சூரிய கணக்கின்படி, 33 வயதை அடைந்த ஒருவருக்கு சந்திர கணக்கின்படி 34 வயதாகின்றது.
v சூரிய கணக்கின்படி, 66 வயதை அடைந்த ஒருவருக்கு சந்திர கணக்கின்படி 68 வயதாகின்றது.

——————

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

அவர்கள் முன்னூறு ஆண்டுகள் தமது குகையில் தங்கியிருந்தார்கள்: மேலும் ஒன் பது ஆண்டுகள் கூடுதலாக இருந்தார்கள். (அல்குர்ஆன் 18:25)

1. நிச்சயமாக வானங்களும், பூமியும் பிரிப் பதற்கு முன் எவ்வாறு இருந்தன?
இணைந்திருந்தன. அல்குர்ஆன் 21:30

2. வானம் எந்த நிலையில் இருக்கும்போது இறைவன் படைக்க விரும்பினான்?
புகையாக இருக்கும் நிலையில். 44:10

3. வானத்தின் வாசல்களை எதைக் கொண்டு திறந்துவிட்டதாக இறைவன் கூறுகிறான்?
கொட்டும் நீரால். அல்குர்ஆன் 54:11

4. இப்ராஹிம்(அலை) அவர்கள் நிச்சய மாக நான் நீங்கள் வணங்குபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன் என யாரிடம்கூறினார்கள்?
தன் தந்தை, தனது சமூகத்தாரிடம். அல்குர்ஆன் : 43:26,27

5. குதித்துப் பாயும் நீர் எங்கிருந்து வெளிப் படுகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்?
ஆணின் முதுகந்தண்டிற்கும், பெண் ணின் நெஞ்சுக் குழிக்கும் இடையே உள்பகுதி. அல்குர்ஆன் 86:6,7

6. ஹுருல் ஈன்(எனும் கண்ணழகி)கள் எந்த வார்த்தைகளை மட்டும் செவி யேற்பார்கள்.
ஸலாம் என்ற வார்த்தை. குர்ஆன் 56:22-26

7. நாம் அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுத்தால் அதனை அல்லாஹ் எவ்வாறு ஆக்குவதாக கூறினான்?
பன்மடங்காக ஆக்குவான். குர்ஆன் 64:17

8. மனிதனை சோதிப்பதற்காக எதிலிருந்து படைத்தான்?
கலப்பு இந்திரியத்திலிருந்து. குர்ஆன் 76:2

9. நிராகரிப்பாளர்களுக்கு எதை தயார் செய்து வைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
சங்கிலிகள், விலங்குகள் மற்றும் நரகம். அல்குர்ஆன் 76:4

10. நேரான வழியில் இருப்பவர் யார் என் பதை யார் அறிய முடியும்?
அந்த இறைவனே. அல்குர்ஆன் 17:84

11. இப்ராஹிம்(அலை) அவர்களை அவரது தந்தை எதைக் கொண்டு கொல்வேன் என்று கூறினார்?
கல்லெறிந்து. அல்குர்ஆன் 19:46

12. சிஃரா என்றால் என்ன?
வணங்கப்பட்டு வந்த நட்சத்திரம். அல்குர்ஆன் 53:49

13. மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது எதற்கு சமம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மாதம் முழுவதும் நோன்பு நோற்பதற்கு. புகாரி : 6134

14. ஹஜ்ஜு கடமையுள்ள தந்தைக்கு பதிலாக மகள் ஹஜ் செய்யலாமா?
ஹஜ் செய்யலாம். புகாரி : 1855

15. குதிங்கால்களை சரியாக கழுவாதவர் கள் மறுமையில் எங்கு இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்ய
நரகத்தில் இருப்பார்கள். புகாரி : 60

16. எந்த பிரார்த்தனையின்போது நபி(ஸல்) அவர்கள் தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்?
மழைக்காக வேண்டும்போது. புகாரி 1011

17. இரவுகளின் எந்தத் தொழுகை கடைசி தொழுகை?
வித்ர் தொழுகை. இப்னு உமர்(ரழி) புகாரி 998

18. கிரகணங்களை கண்டால் என்ன செய்ய வேண்டும் என நபி(ஸல்) கூறினார்கள்?
தொழச் சொன்னார்கள். அபூமஸ்வூத் (ரழி) புகாரி : 1041

19. நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது மக்கா வெற்றிக்குப் பின் மக்காவில் எத்தனை நாட்கள் தங்கினார்கள்?
19 நாட்கள். ஆதாரம். அர்ரஹீகுல் மக்தூம் பக்கம் 501

20. பத்ருப் போரின்போது யாருடைய உரு வத்தில் இப்லீஸ் வந்திருந்தான்?
சுராகா இப்னு மாலிக்கின் உருவத்தில். ஆதாரம் : அர்ரஹுகுல் மக்தூம். பக்கம் 274

 

Previous post:

Next post: