ஆயிஷா(ரழி) அவர்களின் திருமண வயது என்ன?

in 2022 அக்டோபர்

ஆயிஷா(ரழி) அவர்களின் திருமண வயது என்ன? ஆலிம்களே! நபி(ஸல்) மீது அவதூறு பரப்பாதீர்கள்!

அபூ ஹனிபா, புளியங்குடி

 1. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்:

பல ஹதீஸ் புத்தகங்களில் நபி(ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா(ரழி) அவர்களை வயதிற்கு வராத நிலையில் 8 வயதில் திருமணம் முடித்து பின்னர் அவர்களின் 9 வயதில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுத்தினார்கள் என்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான செய்திகளாக பதியப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புகாரி 3894, 5133 போன்ற ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் சில…

ஆயிஷா(ரழி) அறிவித்தார் :

நான் வயதுடையவளாய் இருந்த போது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந் தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங் கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன். புகாரி : 5133.

இவை போன்ற ஹதீஸ்கள் பல ஹதீஸ் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றின் தரத்தையோ அவற்றின் அறிவிப்பாளர்கள் பற்றியோ எந்த ஒரு குற்றச் சாட்டையும் நான் வைக்கவில்லை. காரணம் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தும் எத்தனையோ ஹதீஸ்கள் குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடை முறைக்கு எதிராக இருந்ததாக கூறி நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த ஹதீஸ்களும் குர்ஆனுக்கும் நபி (ஸல்) அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது என்பதை இந்த பதிவில் சுட்டிக்காட்டுகிறேன். இதனை படித்து விட்டு பின்னர் அந்த ஹதீஸ்களை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

 1. நபியை இழிவாக பேசும் பிற மத மக்கள்:

ஆயிஷா(ரழி) அவர்களின் திருமண ஹதீஸ்களை ஆதாரமாக காட்டி காலம் காலமாக இஸ்லாமிய மார்க்கத்தை வெறுக் கும் சிலர் நபி(ஸல்) அவர்களை இழிவாக பேசி வருகிறார்கள். அவர்களின் இழி பேச் சுக்களை பொறுக்க முடியாத முஸ்லிம்கள், அவர்களின் கடவுள்களையும் வலைதளங் களில் கேளியும், கிண்டலும் செய்து பதிவிடு கிறார்கள்.

இதனால் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் போன்ற சம்பவங்களும் நிகழ்ந்தது. அத்துடன் கலவரங்களும் நடந்தன. அதில் பல முஸ்லிம்களும் சில இந்துக்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் போராட்டங்களில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டு, தீக்கிறையாக ஆக்கப்பட்டது. பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு இன்றும் சிறையில் இருக்கிறார்கள். ஆக இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? ஏன் இந்த பிரச்சனை காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏன் நபி(ஸல்) அவர்களை பிற மத மக்கள் இழிவாக பேச வேண்டும்? உண்மையில் நபி(ஸல்) அவர்கள் வயதிற்கு வராத 6 வயது சிறுமியான ஆயிஷா (ரழி) அவர்களை திருமணம் செய்தார்களா? இல்லையா? இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்பதை பற்றிய இன்றைய பதிவில் பார்ப்போம்.

 1. இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் என்ன? என்பதை பார்ப்போம். இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்களின் நபித்துவத்துக்கு பின்னால் உள்ள 23 ஆண்டு கால வாழ்க்கையே இஸ்லாம். இதில் 13 ஆண்டு கால மக்கா வாழ்க்கை. 10 ஆண்டு கால மதீனா வாழ்க்கை. இந்த 23 ஆண்டு கால வாழ்க்கையில் நபி(ஸல்) அவர்கள் எதை எல்லாம் செய்தார்களோ? எதை எல்லாம் செய்ய ஏவினார்களோ? எதை விட்டும் தடுத்தார்களோ அவை அனைத்தும் இஸ்லாமிய மார்க்கமாகும்.

நபி(ஸல்) அவர்கள் சுயமாக செயல்பட மாட்டார்கள்:

“(இறை) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்லன். மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்ய வேண்டும் என்பதை நான் அறியமாட்டேன். எனக்கு என்ன வஹீ அறிவிக் கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை. தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.  (அல்குர்ஆன் 46:9)

இந்த வசனத்தில் நபி(ஸல்) அவர்கள் சுயமாக செயல்படமாட்டார்கள் என்றும் அவர்கள் செயல்படுவது வஹியின் அடிப் படையில் தான் என்றும் அல்லாஹ் குறிப் பிடுகிறான். ஆக இந்த வசனத்தின் மூலமாக நபி(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையாக இருந்தாலும் சரி! மதீனா வாழ்க்கையாக இருந்தாலும் சரி! அவர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அது வஹியாக அறி விக்கப்பட்டதுதான். அவர்கள் சுயமாக செயல்பட மாட்டார்கள் என்பதை விளங் கிக் கொள்ள முடிகிறது.

 1. முன்னர் அனுமதியும் பின்னர் தடை யும் ஏன்?

ஆரம்பத்தில் இஸ்லாத்தில் மது அருந்துவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. பின் னர் அது முற்றிலும் தடை செய்யப்பட்டது. போர் காலங்களில் திருமணம் முடிப்பதும் பின்னர் போர் முடிந்துவிட்டால் தலாக் விட்டுவிடுவதுமான வழக்கம் இஸ்லாம் வந்த பின்னரும் இருந்தது. பின்னர் அது முற்றிலும் தடை செய்யப்பட்டது. அறியாமை காலத்தில் தந்தை திருமணம் முடித்த பெண்களை தந்தையின் இறப்புக்கு பின்னால் மகன்கள் திருமணம் முடிக்கும் வழக்கம் இருந்தது. இஸ்லாம் வந்த பின்னர் அது முற்றிலும் தடுக்கப்பட்டது. வளர்ப்பு மகன் தலாக் விட்ட பெண்களை வளர்ப்பு தந்தை திருமணம் முடிக்க கூடாது. காரணம்! வளர்ப்பு மகன் பெற்ற மகனாகவே அறி யாமை காலத்தில் கருதப்பட்டது. அதை இஸ்லாம் வந்த பின்னர் மாற்றி அமைக்கப்பட்டது. வளர்ப்பு மகன் என்றைக்கும் மகன் ஆகமாட்டான். எனவே வளர்ப்பு மகன் தலாக் விட்ட பெண்களை வளர்ப்பு தந்தை திருமணம் முடிக்கலாம் என்று தெளிவுபடுத் தப்பட்டது. இப்படி எண்ணற்ற செயல்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டும், பின்னர் தடை செய்யப்பட்டும் இருக்கிறது. அதற்கு காரணம் முஸ்லிம்களிடம் ஈமானை பலப்படுத்தி, பின்னர் அறியாமை கால வழக்கங்களையும், தவறான செயல்க ளையும் விட்டு முற்றிலும் தடுத்து விடுவதற்குத்தான்.

 1. சிறுமி திருமணம் முன்னர் அனுமதிக்கப்பட்டு இருந்ததா?

நபி(ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால வாழ்க்கை தான் இஸ்லாமிய மார்க்கம் எனும்போது நபித்துவம் பெற்ற பின்னர் நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களை, அவர்கள் வயதிற்கு வராத நிலையில் 6 வயதில் திருமணம் முடித்தார்கள் என்று சொன்னால் அதுவும் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு செயலாகும், வஹியாகும். இதை யாரும் மறுக்க முடியாது.

எனவே வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிக்க ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இருந்தது என்று சொன்னால் அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு திருமணம் முடித்தார்கள் என்று சொன்னால் அவ்வாறு அனுமதிக் கப்பட்டதற்கான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் இருந்திருக்கும். அப்படி ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அப்படி அனுமதிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களோ, ஹதீஸ்களோ இருக்கிறதா? நாம் தேடிய வரையில் இதுவரைக்கும் கிடைக்கவில்லை.

அதுபோல முதலில் அனுமதிக்கப் பட்டு, பின்னாளில் வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிப்பது தவறு என்ற நிலைப்பாட்டை அல்லாஹ்வும், அவனு டைய தூதரும் எடுத்திருந்தார்கள் என்று சொன்னால், மதுவிற்கு எவ்வாறு முற்றிலும் தடை வந்ததோ, அதுபோல வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிப்பது தவறு என்று அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பகிரங்கமாக அறிவித்து இருப்பார்கள். அப்படி அறிவிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களோ, ஹதீஸ்களோ இருக்கிறதா? என் றால் நாம் தேடிய வரைக்கும் இதுவரை கிடைக்கவில்லை.

ஆக வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிக்க இஸ்லாத்தில் ஆரம்ப கட்டத்திலும் அனுமதி இல்லை. பிற்காலத்தில் தடை செய்யப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் வயதிற்கு வராத சிறுமியை திருமணம் முடித்ததாக சொல்லப்படும் ஹதீஸ் மட்டுமே இருக்கிறது. அதனை உறுதி செய்ய வேறு எந்த ஹதீஸ்களோ, குர்ஆன் வசனங்களோ இதுவரைக்கும் தேடி பார்த்ததில் கிடைக்கவில்லை. இதில் இருந்து நாம் அறிவது என்னவென்றால் இஸ்லாத்தையும், இறைத்தூதரையும் வெறுக்கின்ற சிலர் இஸ்லாத்தின் மீதும், நபியின் மீதும் ஏதாவது ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக சொல்லப்பட்ட செய்தியாகத்தான் இந்த ஹதீஸ் இருப்பதாக தெரிகிறது. காரணம்! நபி(ஸல்) அவர்கள் அறியாமை காலத்தில் கூட எந்த தவறும் செய்தவர்கள் இல்லை. அப்படி இருக்க இஸ்லாத்தை போதிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் வயதிற்கு வராத, அதுவும் 6 வயதே உடைய ஒரு சிறுமியை திருமணம் முடித்தார்கள் என்று சொன்னால் அது நடந்திருக்கக்கூடிய ஒன்றாக இருக்குமா?

மேலும், நபி(ஸல்) அவர்கள் வயதிற்கு வராத ஒரு சிறுமியை திருமணம் முடித்து, வயதிற்கு வராத நிலையிலேயே இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார்கள் என்று நேரடியாக அவதூறு பரப்பியிருந்தார்கள் என்று சொன்னால், சொன்னவர்களின் தலை அன்றைக்கே துண்டிக்கப்பட்டு இருக்கும். கார ணம் வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிக்கும் வழக்கம் அறியாமை காலத்தில் கூட கிடையாது. மேலும் சிறுமிகளுடன் உடலுறவு கொள்ளும் ஈனத்தனமான வழக்கங்களும், அரபியர்களிடம் கிடையாது. எனவேதான் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களை 6 வயதில் திரு மணம் முடித்து பின்னர் 9 வயதில் வயதிற்கு வரும் வரை காத்திருந்தார்கள் என்று அவதூறு பரப்பியிருக்கிறார்கள். மக்களும் நபி(ஸல்) அவர்கள் செய்தால் அது வஹியாக இருக்கும் அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கும் என்று நம்பி இருக்கிறார்கள். உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆயிஷா(ரழி) அவர்கள் மீது எப்படி அவதூறு பரப்பப்பட்டதோ, அதுபோல நபி(ஸல்) அவர்கள் மீது பிற்காலத்தில் பரப்பப்பட்ட அவதூறாக தான் இது இருக்க வேண்டும். காரணம் தொடர்ந்து படியுங்கள்.

 1. நபி(ஸல்) அவர்களுக்கு பிரத்தியேக அனுமதியா?

ஆயிஷா(ரழி) அறிவித்தார் :

“நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத்துண்டு ஒன்றில் கண்டேன்.’ எவரோ, “இது உங்கள் மனைவிதான், நீக்கிப்பாருங்கள்’ என்று கூற, அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், “இது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்’ என்று சொல்லிக் கொண்டேன் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். புகாரி : 3895

இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டி நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் வயதிற்கு வராத சிறுமியான ஆயிஷா(ரழி) அவர்களை திருமணம் முடிக்க பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்று சிலர் வாதிடுகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மை என்றால் நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அனுமதிக்கப்பட்ட தற்கான ஆதாரங்கள் எங்கே? அல்லது நபி (ஸல்) அவர்கள் எனக்கு மட்டும் தனிப்பட்ட அனுமதி இருக்கிறது என்று சொன்னார்களா? எங்கேயுமே இல்லை, மேலும் மேலே குறிப்பிட்ட அந்த ஹதீஸில் கூட அப்படி ஒரு வாக்கியம் இல்லையே அல் லாஹ் நாடினால் திருமணம் நடத்தி வைப்பான் என்று மட்டுமே உள்ளது. அல்லாமல் வயதிற்கு வராத சிறுமியான உன்னை அல்லாஹ் எனக்கு திருமணம் முடித்து வைப்பான் என்று எங்கே இருக்கிறது? அல்லது அல்லாஹ் இது சம்பந்தமாக ஏதாவது குர்ஆனில் அறிவித்து இருக்கின்றானா? எதுவும் கிடையாது. அப்படி இருக்க வயதிற்கு வராத சிறுமியை திருமணம் முடிக்க அல்லாஹ்வின் தூதருக்கு பிரத்தேக அனுமதி என்று இந்த ஹதீஸை எடுத்துக் காட்டினார்கள் என்று சொன்னால் இதை எப்படி ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும்?

 1. அறியாமை கால நடைமுறையை நபி (ஸல்) அவர்கள் பின்பற்றினார்களா?

மவ்லவி பீ.ஜெயினுல்ஆபிதீன் உலவி போன்றவர்கள் நபி(ஸல்) அவர்கள் அறியாமை கால நடைமுறையை இஸ்லாம் வந்த பிறகும் பின்பற்றினார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள். இஸ்லாமிய திருமணச் சட்டம் வருவதற்கு முன்னர் அறியாமை கால திருமண நடைமுறையை பின்பற்றி அன்னை ஆயிஷா(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் திருமணம் முடித் தார்கள் என்று சகோதரர் பீ.ஜை. அவர்கள் புதுவிதமாக விளக்கம் கொடுத்து வருகிறார். அதனால் தான் கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் நபி(ஸல்) அவர்கள் அறியாமை கால நடைமுறையை பின்பற்றினார்கள் என்றும் தான் செய்தது தவறு. இது சரி இல்லை. இனி நீங்கள் யாரும் இதை செய்யக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது போன்றே பேசி இது பற்றி கேள்வி கேட்கும் முஸ்லிம் களையும், பிற மத மக்களையும் சுய விளக்கத்தின் அடிப்படையில் திருப்திப்படுத்தி வருகிறார். நபி(ஸல்) அவர்கள் நான் அறியாமை கால திருமணத்தை செய்துவிட் டேன்.

இது நல்லா இல்லை, இது தவறு, இனி நீங்கள் யாரும் இதுபோன்ற தவறு களை செய்யக்கூடாது என்று சொன்னதாக ஒரே ஒரு ஹதீஸை சகோதரர் பீ.ஜை அவர் கள் ஆதாரமாக தரமுடியுமா? ஒருகாலமும் தரமுடியாது. காரணம் அப்படி ஒரு ஆதாரம் இருந்திருந்தால் எப்போதோ அதனை மக்களுக்கு எடுத்துக்காட்டி விளக்கம் கொடுத்திருப்பார். ஆதாரம் இல்லை என்ற காரணத்தினால் தான் சுயவிளக்கம் என்ற பெயரில் நபி(ஸல்) அவர்கள் சொன்னது போன்று பேசி மக்களை வழிகெடுத்து வருகிறார்கள். பீ.ஜை அவர்கள் அவ்வாறு பேசிய வீடியோ ஆதாரங்கள் நம்மிடம் இருக்கிறது. இந்த பதிவை அவர் படித்தார் என்று சொன் னால் இனியாவது ஆதாரம் தருவாரா? அல்லது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா என்று எதிர்பார்ப்போம்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் சுயமாக செயல்பட மாட்டார்கள் என்று அல்லாஹ் 46:9 வசனத்தில் தெளிவுபடுத்தியிருக்கி றான். எனவே நபி(ஸல்) அவர்கள் வயதிற்கு வராத சிறுமியை திருமணம் முடிந்திருந்தார் கள் என்று சொன்னால் அது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வஹியின் அடிப்படையி லேயே நடந்திருக்க வேண்டும். அது வஹி யின் மூலம் நடந்திருந்தால் அது இஸ்லாத் தின் ஒரு நடைமுறையாக ஆகி இருக்கும். ஆனால் பீ.ஜை. அவர்களோ அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அறியாமை கால திரு மணத்தை நடைமுறைப்படுத்தினார்கள் என்று சொல்லி வருகிறார். அப்படி என்றால் அறியாமையை ஒழிக்க வந்த உத்தமர் அல் லாஹ்வின் அனுமதியோடு அறியாமை கால நடைமுறையை செயல்படுத்தினார்கள் என்று சொன்னால் இது நம்பக்கூடியதாக இருக்கிறதா? அறிவுடைய மக்கள் இதை சிந்திப்பார்கள்.

 1. அறியாமை காலத்தில் வயதிற்கு வராத சிறுமியை திருமணம் முடிக்கும் வழக்கம் இருந்ததா?

பீ.ஜை. அவர்களையும் மற்றும் அவர் போன்றவர்களிடமும் மீண்டும் மீண்டும் நாம் கேட்டு வரும் கேள்விகள் என்னவென்றால்? அறியாமை காலத்தில் அரபிய மக்களிடம் வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிக்கும் வழக்கம் இருந்ததா என்பது தான். நாம் கேட்ட கேள்விக்கு இதுவரைக்கும் எந்த ஒரு அறிஞரும் பதில் தரவில்லை. காரணம் உண்மையில் அப்படி ஒரு வழக்கம் அரபிய மக்களிடம் இருந்தது இல்லை. அப்படி ஒரு வழக்கம் இருந்தது என்று சொன்னால் அந்த ஆதாரத்தை எடுத்து வைத்து இந்த பிரச்சனைகளுக்கு இதற்குள் தீர்வை தேடியிருப்பார்கள். ஆனால் அப்படி ஒரு ஆதாரம் இல்லை என்பதினால் தான் இன்று வரைக்கும் சுயவிளக்கம் கொடுத்து வருகிறார்கள்.

 1. பீ.ஜை. அவர்களின் புதிய கண்டுபிடிப்பு:

மவ்லவி பீ.ஜை. அவர்கள் முஸ்னது அஹ்மத் 25789 ஹதீஸை ஆதாரமாக காட்டி நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களை திருமணம் முடிக்கும் முன்னர் ஆயிஷா(ரழி) அவர்கள் இன் னொருவருக்கு திருமணம் முடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்கள். எனவே சிறுமியை திருமணம் முடிக்கும் வழக்கம் அறியாமை காலத்தில் இருந்தது என்று சமீப காலமாக பேசி வருகிறார். இந்த ஹதீஸை சகோதரர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை படித்து பாருங்கள். திருமணம் செய் வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதே அல்லா மல் வயதிற்கு வந்த அல்லது வராத நிலை யைப் பற்றி சொன்னதாக ஏதாவது வாசகங்கள் இருக்கிறதா? இல்லை. அப்படி இருக்க இந்த ஹதீஸை அறியாமை கால வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிக்கும் வழக்கத்திற்கு ஆதாரமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

பொதுவாக இன்றைக்கு திருமணத்திற்கு ஒப்பந்தம் போடுவார்களே அது போன்ற ஒரு ஒப்பந்தமே அங்கு நடந்துள்ளது. மாப்பிள்ளை வீட்டார் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதினால் நபி (ஸல்) அவர்களுக்கு அன்னை ஆயிஷா (ரழி) அவர்களை திருமணம் முடித்து வைத்திருக்கிறார்கள். இதில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் வயதிற்கு வராத சிறுமி என்றோ அல்லது அறியாமை காலத்தில் வயதிற்கு வராத சிறுமியை திருமணம் முடித்தார்கள் என்றோ எங்காவது சொல்லப்பட்டு இருக்கிறதா? எதைக்கொண்டு வந்து எதை முடித்து போடுகிறார் மவ்லவி பீ.ஜை. என்பதை சிந்தித்துப்பாருங்கள். எந்த ஆதாரமும் இல்லாத ஒன்றை எதைச் சொல்லியாவது ஆதாரமாக ஆக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் மவ்லவி பீ.ஜை. அவரின் இந்த முயற்சி பயனற்றது என்பதை என்றைக்கு உணரப் போகிறார் என்பது தெரியவில்லை.

 1. வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிக்க குர்ஆனில் ஆதாரமா?

இன்னும் சிலர் வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிக்க குர்ஆனில் ஆதாரம் இருக்கிறது என்று சொல்லி வருகிறார்கள் அது என்ன ஆதாரம் என்பதை பார்ப்போம்.

மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாதப் பெண் களுக்கும், “இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா’வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும். மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரி யத்தை அவன் எளிதாக்குகிறான்.  (குர்ஆன் 65:4)

இந்த வசனத்தை ஆதாரமாக காட்டி சிலர் மாதவிடாயே ஏற்படாத பெண்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுவது வயதிற்கு வராமல் திருமணம் ஆன சிறுமிகளைத் தான் குறிப்பிடுகிறது என்று கூறுகிறார்கள். அதாவது வயதிற்கு வராத சிறுமியை ஒருவர் திருமணம் முடித்து பின்னர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல் இறந்துவிட்டார் என்று சொன்னால் அந்த வயதிற்கு வராத சிறுமி கடைபிடிக்க வேண்டிய இத்தாவைத்தான் அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான் என்று சொல்கிறார்கள். உண்மையில் வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடித்து அவர்கள் வயதிற்கு வரும் வரை அவர்களுடன் இல்லற வாழ்க் கையில் ஈடுபடக்கூடாது என்று சொன்னால் அப்படிப்பட்ட சிறுமிகளுக்கு இந்த குர்ஆன் வசனம் பொருந்தாது ஏன் என்றால்? ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே “தலாக்’ செய்து விட்டீர்களானால், அவர்கள் விசயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய (இத்தாத்) தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை. ஆகவே அவர்களுக்குத் (ஏற்றதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49)

இந்த வசனத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆண் திருமணம் முடித்து அவளுடன் இல்லற வாழ்வில் ஈடுபடவில்லை என்று சொன் னால் அவளுக்கு இத்தா என்பது கிடையாது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அப்படி என்றால் ஒரு சிறுமியை திருமணம் முடித்தவர் அவளுடன் இல்லறம் கூடாமல் இறந்து விட்டார் என்று சொன்னால் அந்த சிறுமிக்கு இத்தா என்பது கிடையாது. அப்படி இருக்க 65:4 வசனம் எப்படி வயதிற்கு வராத சிறுமிகளை குறிக்கும்? இதை அவர்கள் ஏன் சிந்திக்கவில்லை. அப்படி என்றால் அல்குர்ஆன் 65:4 வசனம் குறிப்பிடும் மாத விடாயே ஏற்படாத பெண்கள் யார் என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். அதற்கான பதில் இதோ…

 1. மாதவிடாயே ஏற்படாத பெண்கள் யார்?

பொதுவாக அல்லாஹ்வின் படைப்பில் இயற்கையாகவே ஒரு சில பெண்கள் மற்ற பெண்களை போன்று காட்சி அளித் தாலும் அவர்கள் பருவ வயதை அடையாமல் அதாவது மாதவிடாய் ஏற்படாமலும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட பெண்களை திருமணத்தின் மூலம் சரிசெய்து விடலாம் என்ற எண்ணத்தில் பெற்றோர் கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒருசிலர் திருமணத்திற்கு பின்னால் இல்லற வாழ்வில் ஈடுபட்டு மாதவிடாய் ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகி மாதவிடாய் ஏற்படக்கூடியவர்களாக மாறிவிடுகிறார்கள். இன்னும் சிலர் இல்லற வாழ்வில் ஈடு பட்டபோதும் தனது வாழ்நாள் முழுவதும் பருவ வயதை அதாவது மாதவிடாயே ஏற்ப டாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் கணவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சொன்னால் அந்த பெண்கள் இருக்க வேண்டிய இத்தாவைத்தான் அல்குர்ஆன் 65:4 வசனம் குறிப்பிடுகிறது. இதை விளங்கிக் கொள்ளாத சிலர் 65:4 வசனம் வயதிற்கு வராத சிறுமிகளைத்தான் குறிப்பிடுகிறது என்று தவறாக விளக்கம் கொடுக்கிறார்கள். ஆக அவர்களின் தவறான விளக்கத்தின் மூலமாக குர்ஆனிலும் ஆதாரம் இல்லை என்பது தெளிவாகிறது.

 1. உமர்(ரழி) அவர்களின் திருமணம்:

உமர்(ரழி) அவர்கள், அலி மற்றும் பாத்திமா(ரழி) அவர்களின் மகளான உம்மு குல்தும்(ரழி) அவர்களை 13 வயதில் திரு மணம் முடித்ததாக வரலாற்று செய்திகளில் இடம் பெற்றிருக்கின்றன. இதை ஆதார மாக எடுத்துக்கொண்டு சிலர் நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு பின்னால் உமர்(ரழி) அவர்களும் வயதிற்கு வராத சிறுமியான உம்முகுல்தும்(ரழி) அவர்களை திருமணம் முடித்திருக்கிறார்கள். எனவே வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிக்கும் வழக்கம் நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு பின்பும் தொடர்ந்திருக்கிறது என்று வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிப்பதற்கு உமர்(ரழி) அவர்களின் வர லாற்று செய்தியை ஆதாரமாக காட்டுகிறார்கள். உண்மையில் இப்படிப்பட்ட ஆதாரங்களை கொடுப்பவர்கள் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் என்பதே எனது கருத்தாக இருக்கிறது. காரணம் இந்த ஹதீஸில் உமர் (ரழி) அவர்கள் உம்மு குல்தும் (ரழி) அவர்களை தன்னோடு அனுப்புமாறு அலி(ரழி) அவர்களிடம் கேட்கிறார்கள்.

அதற்கு உமர் (ரழி) அவர்கள் நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார்கள். உண்மையில் உம்முகுல்தும்(ரழி) அவர்கள் வயதிற்கு வராத சிறுமியாக இருந்தால் அலி(ரழி) அவர்கள், உமர்(ரழி) அவர்களோடு குடும்பம் நடத்த எப்படி அனுப்பி வைப்பார்கள். அப்படி அனுப்பி வைத்தார் கள் என்றால் அது இயற்கைக்கு மாற்றமான செயலா? இல்லையா? அந்த நடை முறையை இஸ்லாம் அனுமதிக்குமா? அல் லது மனிதர்கள் தான் அனுமதிப்பார்களா? மேலும் நபி(ஸல்) அவர்கள் மீது புனையப் பட்ட ஹதீஸுக்கு இந்த ஹதீஸ் எதிராக அல்லவா இருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் கூட 6 வயதில் திருமணம் முடித்து 9 வயதில் வயதிற்கு வந்த பின்னர் தான் இல்லறம் கூடி னார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் உமர்(ரழி) அவர்கள் பற்றிய செய்தியோ அதை மிஞ்சும் அளவிற்கு அல் லவா இருக்கிறது. ஆக உமர்(ரழி) அவர்கள் சம்பந்தமாக கொடுக்கப்படும் விளக்கம் தவறான விளக்கம் ஆகும். உமர்(ரழி) அவர் கள் வயதிற்கு வந்த பெண்ணைத்தான் திருமணம் முடித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. காரணம் இஸ்லாத்தில் சட்ட திட்டங்களுக்கு எதிராக ஒரு காலமும் உமர்(ரழி)அவர்கள் செயல்படமாட்டார்கள்.

 1. உமர்(ரழி) அவர்களை காரணம் காட்டி வழிகேடு:

உமர்(ரழி) அவர்கள் உம்முகுல்தும் (ரழி) அவர்களை 13 வயதில் திருமணம் முடித்தார்கள் என்ற வரலாற்று செய்தியை ஆதாரமாக காட்டி கடந்த கால் நூற்றாண்டு வரைக்கும் இந்தியாவில் வயதிற்கு வராத சிறுமிகளை திருமணம் முடிக்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் இருந்து வந்திருக்கிறது. இன்றைக்கும் அந்த வரலாற்று செய்தியை காரணம் காட்டி கேரளாவில் வயதிற்கு வராத சிறுமியை திருமணம் செய்து வைத்து விட்டு மாப்பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருந்து வருகின்றது என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறோம்.

அல்லாஹ் 4:21 வசனத்தில் திருமணம் என்பது ஒப்பந்தம் என்று சொல்கிறான். அந்த ஒப்பந்தமானது திருமணம் ஆகப் போகும் ஆணுக்கும், பெண்ணுக்குமானது. அதற்காகத்தான் பெண்ணிடம் சம்மதம் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். பார்க்க. புகாரி: 5136.

மேலும் அந்த திருமணத்திற்கு சாட்சி யாக பெண்ணின் தரப்பில் பெற்றோர் இருப்பார்கள். இப்படி திருமணம் சம்மந்த மாக இஸ்லாம் தெளிவுபடுத்தி இருக்க இஸ் லாத்தின் எந்த வழிமுறையையும் பின்பற்றா மல் வயதிற்கு வராத சிறுமிகளை முஸ்லிம் கள் திருமணம் முடித்திருக்கிறார்கள் என் றால் இவர்களை வழிகெடுத்தவர்கள் யார்? இவர்கள் யாரை நேர்வழி காட்டுவார்கள் என்று நம்பினார்களோ அந்த ஆலிம்கள் தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. காரணம் திருமணத்தை நடத்தி வைப்பதே அவர்கள்தானே.

 1. பாலிய திருமணம் என்பது என்ன?

பாலிய திருமணம் என்பது இதுவரை நாம் அறிந்து வைத்திருப்பது என்னவென் றால் சிலர் சொந்த பந்தங்கள் விட்டு போய் விடக்கூடாது என்பதற்காகவும், சொத்துக் கள் அந்நியர்களுக்கு போய்விடக்கூடாது என்பதற்காகவும் வளர்ந்தால் பிள்ளைகள் பிற்காலத்தில் மனம் மாறி வேறு ஒருவரை திருமணம் செய்து விடுவார்கள் என்ற எண் ணத்திலும் சிறு வயதிலே பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து கணவன் மனைவியாக ஆக்கி விடுவார்கள்.

பின்னர் அவர்கள் வளர்ந்து பருவ வயதை அடைந்த பின்னர் அவர்களை ஒன் றாக இணைத்து விடுவார்கள். இந்த பாலிய திருமணம் ஆனது சிறுவனுக்கும், சிறுமிக் கும் ஆன திருமணம் ஆகும். ஆனால், இன் றைக்கு இஸ்லாம் என்ற பெயரில் 50 வயது ஆணுக்கும், வயதிற்கு வராத 6 வயது சிறுமிக்குமான பாலிய திருமணம் நடந்த தாக ஹதீஸ்கள் சொல்கின்றன. இதை பாலிய திருமணம் என்று எப்படி சொல்ல முடியும். பெண்களை சிறுமி பருவத்தி லேயே அடிமையாக்கினார்கள் என்று தான் சொல்ல முடியும். மேலும் உமர்(ரழி) அவர் களின் திருமண செய்தியை ஆதாரமாக வைத்து இன்றுவரைக்கும் அதுபோன்ற திருமணங்களை செய்கிறார்கள் என்று சொன்னால் இது எப்படிப்பட்ட வழி கேடாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங் கள். இஸ்லாமிய திருமணச் சட்டம் தெளி வாக வகுக்கப்பட்ட பின்னரும் இந்த செயலை செய்கிறார்கள் என்றால் கடந்த கால் நூற்றாண்டு வரை இந்த நடைமுறை இருந்தது என்றால் இவர்கள் யாரை ரப்பாக ஆக்கியிருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

மேலும் பாலிய திருமணம் என்ற பெயரில் இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்த திருமண ஒப்பந்தம் மற்றும் விரும்பிய நபர் களை திருமணம் முடிக்க, விருப்பு, வெறுப்புகளை தெரிவிக்கும் உரிமையை கடந்த கால் நூற்றாண்டு வரைக்கும் பறித் திருக்கிறார்கள். அதற்கு யார் காரணம் மார்க்கத்தை பிழைப்பாக கொண்ட ஆலிம்கள் தான். அவர்கள் இல்லாமல் எந்த அவாமுக்கு இதை செய்ய துணிச்சல் வரும். இந்த சமுதாயம் அல்லாஹ்வின் சாபத்தை பெற முக்கிய காரணமே மார்க்கத்தை பிழைப்பாக கொண்ட இந்த ஆலிம் பெருமக்கள் தான் என்றால் அது மிகையாகுமா?

 1. நபியின் மீது அவதூறு பரப்பும் முஸ்லிம்கள்:

நபி(ஸல்) அவர்கள் வயதிற்கு வராத 6 வயது சிறுமியான ஆயிஷா(ரழி) அவர்களை திருமணம் முடித்தார்கள் என்று வரக்கூடிய ஹதீஸ்கள் ஸஹீஹானது என்ற ஒரே காரணத்திற்காக அந்த ஹதீஸை உண்மை என்று நம்புகிறார்கள் பெரும்பான்மை முஸ்லிம்கள். காரணம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்ததாக சொல்லப் படுவதால் இது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து நடந்ததாக இருக்கும். அல்லாஹ் வின் நாட்டமாக இருக்கும்.

அல்லாஹ்வின் தூதர் செய்தால் அது தவறாக இருக்காது. இது நபிக்கு பிரத்யேக அனுமதி என்று பெரும்பான்மை முஸ்லிம்கள் நம்புகிறார்கள். உண்மையில் வயதிற்கு வராத ஒரு சிறுமியை திருமணம் முடிப்பது அல்லாஹ்வின் நாட்டமாக இருந்திருந்தால் அல்லாஹ் அதனை தெளிவுபடுத்தி இருப்பான். நபிக்கு பிரத்தியேக அனுமதி என்றால் அதனையும் தெளிவுபடுத்தியிருப்பான் அல் லது முதலில் அனுமதித்திருந்து பின்னர் தடை செய்திருந்தால் அதுவும் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கும். அதைவிட்டு பிற மக்கள் இழிவாக பேசும் அளவிற்கு அதனை விட்டிருக்க மாட்டான். இது முஸ்லிம்களாகிய நமக்கான சோதனை. காரணம்! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். நான் செய்ததாக அல்லது கூறியதாக செய்திகள் உங்களிடம் வரும். ஆனால் அந்த செயலை நான் செய்திருக்க மாட்டேன் அல்லது கூறியிருக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் செய்ததாக வரக்கூடிய இந்த ஹதீஸ்கள் அனைத்தும் நபி(ஸல்) அவர் களின் இயல்பான வாழ்க்கை வழிகாட்டலுக்கும், குர்ஆனில் சொல்லப்பட்ட திருமணச் சட்டங்களுக்கும் எதிராக வருகிறது. மேலும் நபி(ஸல்) அவர்களுக்கு பிரத்தியேக அனுமதி என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லப்படவில்லை. எனவே இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்ற அடிப்படையை மட்டும் வைத்துக்கொண்டு இதை ஏற்றுக்கொண்டோம் என்று சொன்னால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை செய்ததாக அவதூறு பரப்பிய குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும். மேலும் பிற மத மக்கள் அல்லாஹ்வின் தூதரை இழிவாக பேசு வதற்கு நாமும் காரணமாக ஆகிவிடுவோம்.

எனவே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வயதிற்கு வராத சிறுமியை திருமணம் செய்யவில்லை. மாறாக மற்ற மனைவியரில் வயது குறைந்த வயதிற்கு வந்த கன்னி பெண்ணைத் தான் திருமணம் முடித்தார்கள் என்ற செய்தியை மற்றவர் களுக்கு எத்திவைக்க வேண்டும். காரணம் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கன்னி பெண் என்று சொல்லக்கூடிய பல ஹதீஸ்கள் காணக்கிடைக்கிறது. எனவே அந்த ஹதீஸ்களை முன்நிறுத்தி மக்களுக்கு பிரச்சாரம் செய்தோம் என்று சொன்னால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டிய இந்த ஹதீஸைக் கொண்டு பிற மக்கள் இஸ்லாத்தையும், நபியையும் இழிவாக பேசப்படுவது தடுக்கப்படும்.

மேலும், முஸ்லிம்களுக்கு அழியாத வடுவாக இருந்த கறை நீங்கிவிடும். இல்லை என்று சொன்னால் இதே ஹதீஸை வைத்து காலம் காலம் பிரச்சனைகள் உருவாகும். அதனால் பாதிக்கப்படப்போவது முஸ்லிம்களாகிய நாம்தான். எனவே குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கும் எதிராக வரக்கூடிய இந்த ஹதீஸ்களை புறக்கணிப்போம். உத்தம நபியின் புகழை ஓங்க செய்வோம். அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக.

——————–

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

 1. இறைவனின் அத்தாட்சிகளை பொய்ப் பிப்போரை என்ன செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?
  அவர்கள் அறியாதவாறு படிப்படியாக பிடிப்பதாக கூறுகிறான். அல்குர்ஆன் 7:182
 2. அல்குர்ஆனின் எந்த அத்தியாயம் மக்கா விலும், மதீனாவிலும் அருளப்பட்டது?
  ஸூரத்துல் நஹ்ல் அத்தியாயம்:16:1-125 மக்காவிலும், 126-128 மதீனாவிலும் அருளப்பட்டது.
 3. நபி(ஸல்) அவர்களின் மனைவியரை எவ்வாறு அழைத்தனர்?
  “உம்முஹாதுல் முஃமினீன்” (முஃமின்க ளின் தாய்மார்கள்) ஆதாரம்: ஜமாஅத் அன் சாரிஸ் சுன்னத்தில் முஹமதியா, ஸ்ரீலங்கா. அல்குர்ஆன்:பக்.1002, 143வது வரிசை எண்.
 4. உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளை களும் நமக்கு எதற்காக ஏற்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான்?
  சோதனைக்காக. அல்குர்ஆன் 64:15
 5. அல்லாஹ் ஏழு வானங்களையும் எவ் வாறு படைத்துள்ளான்?
  அடுக்கடுக்காக படைத்துள்ளான். அல்குர்ஆன் : 67:3
 6. யாருடன் அறப்போர் புரிய நபிக்கு கட்டளையிட்டான்?
  நிராகரிப்பாளர் நயவஞ்சகர்களுடன். அல்குர்ஆன் : 66:9
 7. தகுதியற்றவரிடம் அதிகாரம் ஒப்படைக் கப்பட்டால் எதை எதிர்பாருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  மறுமை நாளை. அபூஹுரைரா(ரழி) புகாரி: 59
 8. நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியா யத்தை ஓதி ஸஜ்தா செய்தபோது அவரு டன் யார் யார் ஸஜ்தா செய்தார்கள்?
  முஸ்லிம்கள், இணை வைப்பவர்கள், ஜின் கள். இப்னுஅப்பாஸ்(ரழி), புகாரி :1071
 9. யாருடைய ஜனாஸாவிற்கு வானவர்கள் தங்கள் இறக்கைகளைக் கொண்டு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தனர்?
  ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழி) அவர்க ளின் தந்தையின் ஜனாஸாவுக்கு. புகாரி:1244
 10. பகடைக்காய் ஆட்டம் (நர்தUர்) விளையா டியவரின் நிலை பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள்?
  பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தமது கையை தோய்த்தவரைப் போன்ற வர். புரைதா(ரழி), முஸ்லிம்: 4549
 11. காலத்தை ஏசுவது யாரை ஏசுவது போலாகும்?
  அல்லாஹ்வை ஏசுவது போலாகும்.  அபூஹுரைரா(ரழி) முஸ்லிம்:4523
 12. லூத்(அலை) அவர்களின் குடும்பத்தில் யாரை தவிர நாம் பாதுகாத்தோம் என அல்லாஹ் கூறுகிறான்?
  லூத்(அலை) அவர்களின் மனைவியை தவிர. அல்குர்ஆன் 27:56
 13. நல்ல காரியத்திற்கு சிபாரிசு செய்பவருக் கும் பங்கு உண்டு என கூறும் வசனம் எது?
  அந்நிஸாவின் 85வது வசனம்.
 14. பயபக்தியாளர்கள் எப்படி இருப்பார்கள்?
  செல்வ நிலையிலும், வறிய நிலையிலும் இறைவனின் பாதையில் நல்லறங்களில் செலவு செய்வார்கள். அல்குர்ஆன் 3:134
 15. யாரை உயர்வானவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?
  நம்பிக்கையாளர்களை. அல்குர்ஆன் 3:139
 16. மனிதன் எந்நிலையில் இருப்பதாக படைக்கப்பட்டான் என அல்லாஹ் கூறுகிறான்?
  பெரும் பதட்டக்காரனாக. அல்குர்ஆன் 70:19
 17. தான் யாருடன் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
  தன்னை அஞ்சி நடப்பவர்கள், நன்மை செய்பவர்களுடன். அல்குர்ஆன் 16:128
 18. அல்லாஹ் தூதர்களை எவ்வாறு தேர்ந் தெடுக்கிறான்?
  வானவர்களிலிருந்தும், மனிதர்களிலிருந் தும். அல்குர்ஆன் 22:75
 19. எந்த தொழுகை சாட்சி கூறத்தக்கதாக இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
  பஜ்ருடைய தொழுகை. அல்குர்ஆன் 17:78
 20. யாரை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
  நம்பிக்கை கொண்டோரை. அல்குர்ஆன் 22:38

Previous post:

Next post: