சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும்

in 2022 அக்டோபர்

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும்

அபூ அஸீம், இலங்கை

மேலும் சோதனைகளின்போது பொறுமை யும், உறுதியும் வேண்டும்:

(நபியே!) உமது குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! நீர் பொறுமையும், உறுதியையும் கொண்டிருப் பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்க வில்லை,

ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம், இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத்தான். (20:132)

சோதனைகளின்போது அழகிய பொறுமை வேண்டும்:

எனவே நீர் அழகிய பொறுமையுடன் (மேலும்) பொறுப்பீராக. (70:5)

இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) வி­யத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன. ஆயினும், அழகான “பொறுமையே’ (எனக்கு உகந்ததாகும்), அல்லாஹ் அவர்களனைவ ரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன், நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவ னாகவும் இருக்கின்றான் என்று கூறினார். (12:83)

(மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தை(த் தடவி)க்கொண்டு வந்திருந் தார்கள்; “இல்லை உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது. எனவே (எனக்கு இந்நிலை யில்) அழகிய பொறுமையை மேற்கொள் வதே (நலமாக இருக்கும்). மேலும், நீங்கள் வர்ணிக்கின்றவற்றின் மீது அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன் என்று கூறினார்.  (பார்க்க : அல்குர்ஆன் 12:18)

இதுபோன்றே “அழகும், அந்தஸ்தும் உள்ள பெண் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு அழைத்த போதிலும் அல்லாஹ் வுக்காகக் கொண்ட பொறுமை “அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர் மீது விருப்பங் கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தனது விருப் பத்திற்கு இணங்குமாறு) வாரும் என்று அழைத்தாள். (அதற்கு அவர் மறுத்து) அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக. நிச்சயமாக (உனது கண வராகிய) எனது எஜமானர், எனது இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கின்றார். (பொறுமையை இழந்து) அநியா யம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள் என்று சொன்னார். (12:23)

இறைத்தூதர் யூசுஃப்(அலை) அவர்க ளின் அழகையும், எழிலையும் கண்டு அவர் மீது அளவு கடந்த மோகம் கொண்ட எகிப்து நாட்டின் அமைச்சர் அஸீஸின் மனைவி கணவர் இல்லாத சந்தர்ப்பத்தில் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு வீட்டு வாயில்களைச் சாத்திவிட்டுத் தன்னி டம் வருமாறு அழைத்தாள். ஆனால் யூசுஃப் (அலை) அவர்கள் அதனை வன்மையாக மறுத்துப் (பொறுமை கொண்டவராக) அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் (உனது கணவரான) அவர் எனது உரிமையாளர் ஆவார். என்னை நல்ல முறையில் தங்கவைத்து உபசரித்துள்ளார். அவருடைய குடும்பத்தாரிடம் தவறாக நடந்து அவருக்குத் துரோகம் இழைக்கமாட்டேன். இவ்வாறு அநீதி இழைப்பவர் ஒருபோதும் உருப்படமாட்டார் என்று யூசுஃப்(அலை) அவர் கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஜாஹித் (ரஹ்) தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 745-747)

யோசேப்பு அழகான ரூபமும் செளந்தரிய முகமும் உள்ளவராயிருந்தார். சில நாள் சென்ற பின் அவருடைய எஜமான னின் மனைவி, யோசேப்பின் மேல் கண் போட்டு என்னோடே சயனி என்றாள் அவரோ தமது எஜமானுடைய மனைவி யின் சொல்லுக்கு இணங்கவில்லை. (விவிலியம் பழைய ஏற்பாடு ஆதியாகமம்: 39:6-8)

அவதூறாகப் பழி சொல்லும் போதும் அழகிய பொறுமை வேண்டும்:

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களும் கலந்துகொண்ட பனூ முஸ்தலிக் போர் முடிந்து மதீனாவுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது மதீனாவுக்கு அருகில் உள்ள “பைதா’ அல்லது “மாஅத்துல் ஜைஷ்’ எனுமிடத்தில் ஏற்பட்ட கசப்பான அசம்பா விதத்தின் காரணமாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் மீது நயவஞ்சகர்களின் தலை வன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் மற்றும் முஸ்லிம்களில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரழி), மிஸ்தஹ் பின் உஸாஸா (ரழி), ஹம்னா பின்த் ஜஹ்ல்(ரழி), ஹம்னா (ரழி) ஆகியோர் அன்னை ஆயிஷா அவர் கள் மீது திட்டமிட்டபடி அவதூறு பரப்பிய தனால் மதீனாவுக்கு வந்தடைந்ததும் ஒரு மாத காலமாக நோயுற்றார்கள்.

நோய்வாய்ப்பட்டிருந்த போது நோயுறும் காலத்தில் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களிடம் இருந்து காணமுடியவில்லை. அத னால், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது போக்கில் சந்தேகம் ஏற்பட்டது. ஒரு மாதத்திற்கும் பிறகுதான் மிஸ்தஹ்(ரழி) அவர்களின் தாயாரன உம்மு மிஸ்தஹ்(ரழி) அபாண்டம் குறித்து சொன்ன தகவலறிந்து மேலும் நோய் அதிகரித்துவிட்டது.

தாய் வீட்டுக்குச் சென்று தன்னைக் குறித்த அவதூறு வதந்தி பற்றி அறிந்துவர அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் அனுமதி கோரினார்கள்.

தாயிடம் செய்தி அறிந்து இரவு பக லாக தாய்வீட்டில் இருந்தவாறே அழுதார் கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தன்னை பிரித்து விடுவது குறித்து அலீ பின் அபீதாலிப்(ரழி), உஸாமா பின் ஸைத்(ரழி) அவர்களிடம் ஆலோசனை கேட்கின் றார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பணிப் பெண்ணான பரீரா(ரழி) அவர்களையும் அழைத்து அன்னை ஆயிஷா(ரழி) குறித்து விசாரிக்கின்றார்கள்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு அழகிலும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அன்பிலும் என்றும் போட்டியாக இருந்துகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மற்றுமொரு மனைவியரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரழி) அவர்களிடமும் அன்னை ஆயிஷா(ரழி) அவர்க ளுடைய கற்பொழுக்கம் குறித்து விசாரிக் கின்றார்கள்.
தமது சகோதரி ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களுக்காக அவர்களின் சகோதரி ஹம்னா(ரழி), அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு எதிராக அவதூறு பேசிக் கொண்டு அன்னை ஆயிஷா(ரழி) அவர்களு டன் போரிடலானார்.

இஸ்லாத்தை ஏற்ற பின்னர் ஒற்றுமையாக இருந்த அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் இது விசயத்தில் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து சண்டையிடத் தயாராகி விட்டார்கள்.

தாய் வீட்டில் இரண்டு நாட்களாக உறக்கமும் வரவில்லை, கண்ணீரும் நிற்க வில்லை, ஈரல் பிளந்துவிடுமோ என்றெண் ணும் அளவிற்கு அழுதுகொண்டே இருந் தார்கள்.

தாய் வீட்டிற்கு வந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு பலவாறாக எனக்குச் செய்திகள் வந்துள்ளது. நீ நிர பராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்பிவிடு என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதற்கு தனது சார்பாகப் பதில் கூறுங்கள் என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் வேண்டிக் கொண்டபோது அதற்காகத் தந்தை அபூபக்கர்(ரழி) அவர்களும் பதில் கூறத் தயாராகவில்லை.

தாயார் உம்மு ரூமானும் பதில் கூறத் தயாராகவில்லை. அந்நேரம் அவர்களின் தாயார் சொன்ன வார்த்தைகள், அல்லாஹ் வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்றார்கள்.

உண்மையைத் தீர அறிந்து கொள்வதற் கான வஹியும் நின்றுபோன காலமாக அது இருந்தது. சாட்சியங்கள் ஏதுமில்லாத தனது விசயம் குறித்து வானத்திலிருந்து வஹி வரும் என்ற நம்பிக்கையும் அற்றுப்போய் பேசா மடந்தையானார்கள். ஆனாலும், அப் போது அவர்கள் சொன்ன வார்த்தைகள்.

நானோ வயது குறைந்த இளம்பெண் ஆவேன். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியா தவளும் ஆவேன். இந்நிலையில் அல்லாஹ்வின் மீது ஆணையாக! மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள். அது உங்கள் மனதில் பதிந்து போய் அதை உண்மை யயன்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே நான் குற்றமற்றவள் என்று உங்களிடம் என்ன சொன்னா லும் நீங்கள் அதை நம்பப்போவதில்லை. நான் குற்றம் ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால் நான் சொல்வதை அப்படியே உண்மையயன்று ஏற்று என்னை நம்பிவிடுவீர்கள். ஆனாலும் நான் குற்றமற்ற வள் என்பது அல்லாஹ்வுக்கு தெரியும்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கும் நபி யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையான நபி யஃஅகூப்(அலை) அவர் களையே உவமையாகக் கருதுகிறேன். அவர் களைப் போன்றே நானும் இதை “அழகிய முறையில்’ சகித்துக் கொள்வதே நல்லது. நீங்கள் புனைந்து சொல்லும் வி­யத்தில் அல்லாஹ்விடமே தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும் என்றார்கள்.  (பார்க்க : அல்குர்ஆன் 12:18)

அப்போது தான் ஏழு வானங்களையும் கடந்து, ஆயிஷாவின் மீது அவதூறு கற்பித் தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான் என்று தொடங்கும் (24:11-20) வரையான பத்து வசனங்களை அருளினான். இதன் மூலம் “பலவீனமான’ பேதைப் பெண்ணின் களங்கத்தை ஏக இறைவன் ஏழு வானங் களையும் கடந்து துடைத்தெறிந்தான். அழியாத ஏட்டிலும் எழுதச் செய்தான். (அன்னை ஆயிஷா(ரழி) இப்னு ஷாஹிப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்), உர்வா பின் ஸுபைர்(ரஹ்), சயீத்பின் முஸய்யப் (ரஹ்) அல்கமா பின் வக்காஸ்(ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) புகாரி: 4141-4146, 4607,4608,, 4691, 4749-4657, 5164, 5882, 334, 336, 3388, 3672, 3773, 2661, 4025, 2879, 6662, 6679, 6844, 4845, 7500, 7545, 4583, 7369, 7370)

மேலும், அதுபோன்றே தன்னைக் கடவுள் என்று வாதிட்ட சர்வாதிகாரியான ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் முஸ் லிம்களுக்கு பொறுமைக்கு எடுத்துக்காட்டாகப் போற்றுகின்றான். (28:38,79:24, 10:83, 28:4, 43:51,44:31) அல்லாஹ் கூறுகின் றான். அல்லாஹ் ஃபிர்அவ்னுடைய மனை வியை இறை நம்பிக்கையாளர்களுக்கான (சிறந்த உதாரணமாகக் கூறுகின்றான். ஒரு முறை அவர் (ஃபிர்அவ்னின் அடியாட் களால் கொடுமைப்படுத்தப்பட்ட போது) “எனது அதிபதியே! எனக்குரிய (கூலியாக) உன்னிடம் சுவர்க்கத்தில் ஓர் இல்லத்தை அமைத்துக் கொடுப்பாயாக! ஃபிர்அவ்னிட மிருந்தும் அவனது (தீய சோதனைகளிலிருந் தும்) செயலிலிருந்தும் என்னைக் காப்பாற்று வாயாக! அக்கிரமம் புரியும் சமுதாயத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! (எனக்கு அழகிய பொறுமையைத் தருவா யாக) என்று அவர் பிரார்த்தித்தார். (66:11) என்பதாக அடக்குமுறையாளர்களுக்கிடையில் ஏக இறைவனை ஏற்றுக் கொண்டவர் கள் எவ்வாறு “பொறுமையுடன்’ நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகின்றான். காரணம்  இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Previous post:

Next post: