மதரஸாக்களின் கல்விமுறையை மாற்றுவோம்!  அனைவரையும் ஆலிமாக்குவோம்!

in 2023 ஜனவரி

மதரஸாக்களின் கல்விமுறையை மாற்றுவோம்!  அனைவரையும் ஆலிமாக்குவோம்!

ஒவ்வொரு முஸ்லிமும் மார்க்க பணி செய்ய முன்வராமல் தான் உண்டு, தன் தொழில் உண்டு என்று ஒதுங்கியதின் விளைவு தான் இன்றைக்கு மார்க்க பணிக்காக ஒரு கூட்டம் பள்ளிவாசலை நாடியிருக்கிறது ஆலிம்கள் என்ற பெயரால்…

வீட்டுக்கு ஒருவராவது வாருங்கள் என்று கெஞ்சி அழைக்கக்கூடிய நிலைக்கு இன்றைக்கு இந்த மதரஸாக்களின் நிலை தள்ளப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் யார்? மக்களும், மதரஸா கல்வி முறையும் தான்…

இன்றைக்கு மதரஸாக்களில் மார்க்க கல்வியோடு உலக கல்வியான டாக்டர், இன்ஜினியர் போன்ற கல்வியையும் சேர்த்து போதிக்கப்பட்டு இருந்தால் மதரஸாவில் பயிலும் மாணவர்கள் பள்ளிவாசலில் ஏன் காத்துக்கிடக்க போகிறார்கள். தொழ வைப்பதற்காக எதற்காக கூலி வாங்க போகிறார்கள்? இன்றைக்கு மதரஸாவில் மாணவர்களை சேர்க்க ஏன் கெஞ்சி அழைக்க வேண்டும்? அனைத்து முஸ்லிம்களும் மதரஸாக்களில் கல்வி பயில தனது பிள்ளைகளை அனுப்பி விடுவார்களா? இல்லையா?

அனைவரும் ஆலிம்கள், அனைவரும் உலமாக்கள், உலக வாழ்வில் உழைத்து உண்ணக்கூடிய முஸ்லிம் சமுதாயம் உருவாகிவிட்டால், பிறரை ஏமாற்றி, சத்தியத்தை மறைக்கக்கூடிய ஒரு கூட்டம் ஏன் உருவாகப் போகிறது?

புரோகிதர்கள் உருவாகக்கூடாது என்றால், புரோகிதர்களை உருவாக்கும் மதரஸா கல்வி முறையை மாற்ற வேண்டும். மார்க்க கல்வியோடு உலக கல்வியையும் கற்றுக் கொடுத்து ஆலிம் பட்டத்தோடு டாக்டர் பட்டமும், இன்ஜினியர் பட்டமும் பெறவேண்டும். உலக கல்வியின் மூலம் தனது வாழ்க்கையை நடத்தி சத்தியத்தை மக்களிடம் எத்திவைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் மதரஸா கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். அத்தோடு அனைத்து முஸ்லிம்களும் மார்க்க பிரச்சாரத்திற்கு தங்களை உட்படுத்திக் கொள்ளவேண்டும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கக்கூடாது.

கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுதர்(ரழி), நூல்கள்: அபூதாவூத், திர்மிதி.

இறைவா! பயன் இல்லாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதையத்தை விட்டும், போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத பிரார்த் தனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஸைது இப்னு, அர்ஹம்(ரழி), நூல்: முஸ்லிம், திர்மிதி

Previous post:

Next post: